1) கவிபாரதியின் சேவை. சிறு வயது, பெரிய மனம்.
3) "....இங்குள்ள டாக்டர்கள் மருந்து துணியையும் மருந்துகளையும் துாக்கி எறிந்தது பற்றி சொன்னபோது உண்மையிலேயே கண்கலங்கிவிட்டேன்.
நான் வேலை பார்த்த காலத்தில் தினமும் ரயில் நிலையத்தின் வாசலில் சில தொழுநோயாளிகளை பார்ப்பேன், உணவிற்கும் தண்ணீருக்கும் அவர்கள் படும் வேதனையை அறிந்தேன்,இவர்களை வீடும் நாடும் புறக்கணிப்பதை உணர்ந்தேன், நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி ஒய்வு பெற்றதும் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தை திறந்தேன்.நல்ல உள்ளம் கொண்டவர்கள் இல்லத்திற்கு உதவினர்..." ஆந்திராமாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த
சத்தியநாராயணா.
நான் வேலை பார்த்த காலத்தில் தினமும் ரயில் நிலையத்தின் வாசலில் சில தொழுநோயாளிகளை பார்ப்பேன், உணவிற்கும் தண்ணீருக்கும் அவர்கள் படும் வேதனையை அறிந்தேன்,இவர்களை வீடும் நாடும் புறக்கணிப்பதை உணர்ந்தேன், நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி ஒய்வு பெற்றதும் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தை திறந்தேன்.நல்ல உள்ளம் கொண்டவர்கள் இல்லத்திற்கு உதவினர்..." ஆந்திராமாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த
சத்தியநாராயணா.
4) அட்சயத்திருதியச் சேவை. ஆனால், ஒரு நாள் மட்டுமல்ல.
5) கான்ஸ்டபிள் தரம்வீர்சிங்.
6) கடவுளின் பதில்.
7) ஹேமந்த் படேல். இவர் போல நம் தமிழ்நாட்டிலும் ஓரிருவர் சேவை செய்கிறார்கள். நமது 'பாஸிட்டிவ் செய்திகள்' பகுதியிலும் பகிர்ந்திருக்கிறோம்.
8) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்... தங்கள் பெற்றோர்களை மகிழ்வித்த குல்தீப், அன்சர் அஹமத்.
9) டாக்டர் ராஜகோபாலின் உன்னதமான மருத்துவச் சேவை.
10) திருச்சி வருமானவரி துறையின் இணை இயக்குனராக வருவதற்கு முன் பார்த்த பல்வேறு பொறுப்பான பணிகளில் டில்லி பிரதமர் அலுவலக உதவியாளராக இருந்ததும் ஒன்று. சரியாக எழுத வராது என்று பள்ளியால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமார் எழுதி கொடுத்ததைத்தான் பிரதமரும், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பேசினார்கள்.
டிஸ்லெக்சியாவை வென்று சாதனை படைத்திட்ட இவரது தன்னம்பிக்கையை பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இதற்காக இவருக்கு சென்னையில் உயிர் அறக்கட்டளை அமைப்பினர் பாராட்டுவிழா நடத்தினர்.
நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை சொல்லலாம், கடந்த காலங்களில் லட்சத்திற்கு மேற்பட்ட நிராகரிக்கப்பட்ட மாணவர்களை அதாவது சமூகத்தின் பார்வையில் சுமாரான மாணவர்களாக கருதப்படுபவர்கள் மத்தியில் பேசி அவர்களை முன்னேற்ற, அவர்களை உயர்த்த, அவர்களது திறமையை அவர்களுக்கே உணர்த்த பேசிவருகிறேன், அதற்கான பலன் முழுமையாக கிடைக்கும் போது நான் டாக்டர் நந்தகுமாராக வலம்வருவேன், அதுவரை நான் நந்தகுமார் ஐஆர்எஸ் மட்டுமே என்றார்.
நந்தகுமார் என்னும் அற்புத மனிதர்.
11) திருச்செல்வத்துக்குப் பாராட்டுகள்.
====================================================
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக
யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...
மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....
பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.
என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.
இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.
செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.
கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?
*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.
*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.
* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.
* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.
* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
தொடர்புக்கு : 97903 95796
www. chepparaivalaboomigreenworld. com
www.
நன்றி:சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)
திரு. சத்தியநாராயணா மிகவும் உயர்வான மனிதர் அவரையும் மற்ற அனைவரையும் போற்றுவோம்.
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகளில் தண்டனையாக 5000 மரங்கள் நட வேண்டும் என்ற தீர்ப்பு மிகவும் வரவேற்கக் கூடியது. 90 நாட்களில் மரம் வளர்க்கும் செய்தியும் பலருக்கும் பயன்படக்கூடியது.
பதிலளிநீக்குமரங்கள் இலவசமாக கொடுக்கும் சேவை புனிதமானது...
பதிலளிநீக்குஅதை போற்றும் விதத்தில் வாங்கி நடுவது
அதை விட புனிதமானது...
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
யாவும் பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்து செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குசெப்பறை வளமான பூமிதான் செப்பறை கோவில் சென்ற போது காற்றில் மரங்களின் சல சலப்பை வீடியோ எடுத்தேன். அருமையான இயறகை காட்சிகள் நிறைந்த ஊர்.
அனைத்தும் அருமையான செய்திகள்...... சாதனையாளர்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅந்தக் குழந்தை கவிபாரதி வாழ்க! அர்ஜுனன் ஐடியா வாவ்!!! தண்டனை அட போட வைத்தது. எல்லாமே அருமை..
பதிலளிநீக்குகீதா: அனைத்தும் அருமை. மேலே சொன்னவற்றுடன் செய்திகளில் பள்ளிகளால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமார் அவர்கள் எனது மகனை நினைவுப்படுத்துகிறார். ஒவ்வொரு வருடமும் பள்ளியில் கெஞ்சிக் கூத்தாடி, அவனை ஒவ்வொரு வகுப்பாகக் கடக்க வைத்து....கல்லூரி வரும் வரை பல கடுமையான தருணங்கள். அவன் படித்த பள்ளியிலேயே அந்தப் பள்ளி 11 ஆம் வகுப்புச் சேரும் போது 10 வகுப்பி அரையாண்டு மார்க்கை வைத்துப் பயலாஜி கொடுக்க முடியாது என்று அடம்பிடிக்க நாங்கள் அவன் பொதுத்தேர்வில் நீங்கள் சொல்லும் 90% க்கு மேல் வாங்கினால் தருவீர்களா என்று கேட்க தருவோம் என்று சொன்னவர்கள் அவன் கணக்கும் அறிவியலும் சேர்ந்து 92% ம் மொத்தம் 87% வாங்கியும் பொதுத்தேர்விற்குப் பின்னும் அவனால் 11, 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடங்கள் கடினம் என்று சொல்லி பயாலஜி சீர் தராமல், நாங்கள் சண்டை போட்டு அவனது கனவை 11 ஆம் வகுப்பிலேயே கிள்ளி எறிந்து விடாதீர்கள். 12 ஆம் வகுப்பிற்குப் பிறகு அவன் விரும்பிய கால்நடைத்துறை கிடைக்கவில்லை என்றால் ஓகே ஆனால் அதற்கு அப்ளை கூட செய்ய முடியாத அளவிற்கு நீங்கள் 11 ஆம் வகுப்பிலேயே செய்வது தவறு, எங்களுக்கு எங்கள் மகன் மீது நம்பிக்கை உள்ளது....உங்கள் பள்ளிகளில் எந்த ஆசிரியரும் அவனது குறைப்பாட்டைக் கண்டுபிடிக்கவில்லை, உதவ வில்லை மாறாக அவன் லாயக்கில்லாதவன், அவனால் படிக்க இயலாது, புத்திசாலி இல்லை என்ற ஸ்டாம்ப் குத்தப்பட்டதைத் தவிர. என்று சொல்லி வழக்கு மன்றம் செல்வோம் என்று சொல்லிப் போராடி சீட் வாங்கினோம். இதோ இன்று அவன் கால்நடை மருத்துவன்.
எனக்கு அதே பள்ளியில் சென்று அவன் எல்லா மாணவர்கள்ம் பெற்றோர்கள்ம் ஆசிரியர்கள் எல்லோருக்கும் உரையாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. நான் சந்திக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பலரிடமும் பேசிவருகின்றேன். நான் எங்கள் தளத்தில் எழுதிய பதிவை வாசித்த கோயம்புத்தூரில் பழ வியாபாரியாக இருக்கும் ஒருவர் எங்களுக்கு மெயில் அனுப்பி அவரது மகனைக் குறித்துக் கேட்க அவருக்கு நான் விளக்க, இப்போது அந்தக் குழந்தை அங்கிருக்கும் ஸபெஷல் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான்.
நந்தகுமார் அவர்கள் செய்துவரும் பணி மிகவும் அருமை. தன்னம்பிக்கையை ஊட்டும் ஒன்று! வாழ்க வளர்க அவரது சேவை!!!