Wednesday, May 11, 2016

பாட்டும் நானே... (P)பாவமும் நானே...! அசடு வழிந்தேனே...     ஒரு சம்பவம்..  ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு தடவை நானும் காதுல இயர் ஃபோன் மாட்டி பாட்டு கேட்க முயற்சித்தேன். 'நானும்' என்று ஏன் சொல்கிறேன் என்றால் அப்போ அது புதுசு.

     இந்தக் கால ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு யுவன்களும், யுவதிகளும் பேசிக்கொண்டு, செல்லில் விரலால் இடைவிடா திரை நடனம் (டைப்பிங்) செய்து கொண்டு இருப்பதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.  நானும் பார்த்திருக்கிறேன்.

     நிறையப்பேர்கள் காதில் ஒரு வொயரைச் சொருகி கண்கள் மூடி இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.  ஹிஹிஹி... நானும் பார்த்திருக்கிறேன்.

     எனக்கும் அந்த ஆசை வந்தது ஒரு நேரம்.  அது ஸ்மார்ட் ஃபோன் வராத காலம்.  ஆனால் மெமரி கார்ட் போட்டு, அதில் பாட்டுகள் நிரப்பி வழிய வழிய கேட்க முடியும்!

     ஃபோனை கம்யூனிகேஷனுக்கு மட்டுமே நான் பயன்படுத்தி வந்த காலம் அது.

     அது ஒரு மறக்க முடியாத சம்பவம். 
 

Image result for patients sitting in a clinic clip art images

     (துர்)அதிருஷ்டவசமாக அது ஒரு தனியார் கிளினிக்கில் நிகழ்ந்தது.  ஒரு உறவினருடன், (அவர்) டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த நேரம்.  காதுல ஃபோனை மாட்டி பாட்டுக் கேட்கும் ஆசை அங்கு எனக்கு வந்தது. ஏனென்றால் அன்று என் கையில் ஒரு இயர் ஃபோன் வசமாகச் சிக்கி இருந்தது.  என்னிடம் வெட்டியாய்ப் போக்க நேரமும் இருந்தது.

     இது மாதிரி காதில் இயர் ஃபோன் மாட்டி பாட்டு கேட்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்.  தனி உலக சஞ்சாரம் அது.  ஏகாந்த ரசனை!   அந்த உலகத்துக்குள் நானும் நுழைய ஆசைப் பட்டேன்.  அதுவரை நேரமும் இடமும் அமையாமல் இருந்தது.  இப்போது வசமாய் அமைந்திருக்கிறது.
 
 

Image result for cell phone with earpiece images


     செல்போனை எடுத்தேன்.  காதில் மாட்ட வேண்டிய வொயர் பீஸை எடுத்து முடிச்சவிழ்த்து, சிக்கு நீக்கி, நீட்டி, அளவுகளைச் சமமாக்கிச் சரிபார்த்துக் காதில் சொருகினேன்.  செல்ஃபோனில் காலரி சென்று பாடல்கள் லிஸ்ட் தெரிவு செய்து கிஷோர்க் குமார் பாடல் லிஸ்ட்டிலிருந்து சில பாடல்களைத் தெரிவு செய்து வைத்துக் கொண்டேன். ஓகே.  காதில் வொயரை ஒருமுறை அழுத்தி விட்டுக் கொண்டு ப்ளே பட்டனை ஆன் செய்தேன்.

     கண்களை மூடிக் கொண்டேன்.  இலேசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.  பாடலுக்கு ஏற்றவாறு என்னை அறியாமல் என் கால்கள் மெள்ள ஆடித் தாளமிட்டன.  முகத்தை சுளுக்கினால் அவதிப் படுபவன் போல இசகு பிசகாகத் திருப்பி பாடலின் வளைவு நெளிவான டியூனை ரசித்தேன்.  அவ்வப்போது பாடலின் வரிகளை மெதுவாக (என்று எனக்குள் நினைத்து) முணுமுணுத்தேன்.  வலது கை, காற்றில் உயர்ந்து டிஸைன் போட (ரசிக்கிறேனாம்), மெல்லப் பாடலை மனதுக்குள் இறக்கி ஆழ்ந்த ரசனையுடன் ரசித்துக்கொண்டிருந்தேன்.
 

Image result for patients sitting in a clinic clip art images

     பக்கத்திலிருந்தவர் என் தோள் தொட, கண் திறந்து பார்த்தேன்.  சுற்றி இருப்பவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  காரணம் அறிய இன்னமும் என் கண்களை அகலத் திறந்து உயர்த்தினேன்.மூன்று வரிசைக்கு அப்பால் இருந்த ரிசப்ஷனிஸ்ட் என்னைப் பார்த்து ஏதோ சொல்ல முயன்றாள்.  

     டாக்டர் எங்களை அழைக்கிறார் போலும்.  எங்கள் 'டர்ன்' வந்து விட்டது என்று நினைத்தேன். 


Image result for patients sitting in a clinic clip art images
     
     ரிசப்ஷனிஸ்ட் கையைக் கையை ஆட்டி, இன்னமும் என்னமோ ஜாடை காட்ட, நான் "பேஷன்ட் நானில்லை...  அவர்..." என்று சொல்லி, பேஷன்ட் பக்கம் திரும்பி, "டாக்டர் கூப்பிடறாங்க போல... அவங்க கூப்பிடறாங்க பாருங்க.." என்றேன் ரிசப்ஷனிஸ்ட்டைக் காட்டி...  காதில் பாட்டு கேக்கறவங்க எந்த வால்யூமில் பேசுவாங்கன்னு தெரியும்தானே...
 
     அருகில் இருந்தவர்கள் ரிசப்ஷனிஸ்ட்டைப் பார்க்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     இதெல்லாம் ஏன் என்று என் மரமண்டைக்கு புரியறத்துக்குள்ள ரிசப்ஷனிஸ்ட் என் பக்கத்துல வந்து "ஸார்...  பாட்டை ஆஃப் பண்ணுங்க... காதுல கேக்கறதா நினைச்சு லவுட்ஸ்பீக்கர்ல போட்டிருக்கீங்க" என்ற போது நான் வழிந்த அசடு..
 
 

                          Image result for patients sitting in a clinic clip art images        Image result for patients sitting in a clinic clip art images Image result for patients sitting in a clinic clip art images
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
படங்களை வழங்கியதற்கு நன்றி என் கூகிள்...   என் அன்பு இணையமே....

53 comments:

middleclassmadhavi said...

Miguntha varuththathilum mana ulaichalilum irunndha ennai sirikka vaitheergal...nanri!!

G.M Balasubramaniam said...

காதில் இயர் ஃபோன் மாட்டிக் கொண்டு பாட்டை லௌட்ஸ்பீக்கரில் கேட்டால் காது சவ்வு கிழியாதோ. எனக்குத் தெரியாமல்தான் கேட்கிறேன் அது ஒரு தனி உலகம் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே

கோமதி அரசு said...

ஸ்பீக்கரில் போட்டது கூட தெரியாமல் பாடலில் மெய்மறந்து அதுவும் அமைதிகாக்க வேண்டிய மருத்துவமனையில்! நல்ல வேடிக்கை.

KILLERGEE Devakottai said...

பொருத்தமான தலைப்பு ஐயோ பாவம் நீங்கள்.

Nandhini Gunasekaran said...

நீங்கள் பாட்டை மெய் மறந்து ரசித்து கொண்டிருந்தீர் போல் இருக்கு.அதற்கு மேல் பாட்டு கேட்கும் ஆசை இருந்ததா?? உங்களுக்கு??

புலவர் இராமாநுசம் said...

சிரித்தேன்!

Avargal Unmaigal said...


உங்களை சுற்றியுள்ளவர்கள் மற்றும் அந்த ரிசப்ஷனிஸ்ட் எல்லோரும் ரசனை இல்லாதவர்கள் போல

வல்லிசிம்ஹன் said...

HA HA HA. Sriram.காதில இதை மாட்டிக் கொண்டால் மற்றவர்கள் செவிடாகிவிடுவார்கள். நாம் பேச்சாளர்கள் ஆகிவிடுவோம். ரசித்து சிரித்தேன். கற்பனையில் அந்தக் காட்சி. நல்ல ரைட் அப்.

jk22384 said...

Headphone போட்டால் ஸ்பீக்கர் off ஆகிடுமே. jack சரியாக மாட்டவில்லையோ?

--
Jayakumar

ஸ்ரீராம். said...

வருகைக்கு நன்றி மிடில்கிளாஸ்மாதவி.. நன்றி. என்ன வருத்தம், மன உளைச்சல் என்று சொன்னால் உங்கள் பாரமும் குறையுமே.. எதுவாயிருந்தாலும் அதிலிருந்து விரைவாக மீள பிரார்த்தனைகள்.

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்... அப்படித்தான் ஜவ்வு கிழியற மாதிரி இருக்கும் என்று தோன்றியது. அது எனக்கு முதல் தடவை பாருங்கள்...!

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அரசு மேடம்... வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றிகள்.

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி. வருகைக்கும் பரிதாபப் பட்டதற்கும் நன்றிகள்.

ஸ்ரீராம். said...

வாங்க நந்தினி குணசேகரன்... முதல் வருகையா? வாங்க! வாங்க! உங்களுக்கு 'எங்களி'ன் வரவேற்புகள். அப்புறம் ரொம்பக் காலத்துக்கு பாட்டு கேட்கும் ஆசையே வரவில்லை.

ஸ்ரீராம். said...

வாங்க புலவர் ஐயா... வருகைக்கும் ரசித்துச் சிரித்ததற்கும் நன்றிகள்.

ஸ்ரீராம். said...

வாங்க மதுரைத் தமிழன்.. சரியாச் சொன்னீங்க. நன்றிகள்.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிமா.... நன்றி, ரசித்துச் சிரித்ததற்கு.

ஸ்ரீராம். said...

வாங்க ஜேகே ஸார்... அப்படியா... நினைவில்லை. ஆனால் அசடு வழிந்தது நிஜம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

ஜீவி said...

டைம் பாஸ் பதிவிலும் சொலறதுக்கு ஏதாவது கிடைக்கிறது தான் ஆச்சரியம்.

பாட்டும் நானே (P) பாவமும் நானே என்பதில் 'பா'வை மட்டும் கொட்டை எழுத்தில் போட்டு விட்டால், பாவம் என்ற வடமொழிச் சொல்லின் எஃபெக்ட் கிடைத்து விடும்.

Dr B Jambulingam said...

ஓகோ அதுதான் காரணமா? மற்றவர்கள் தெளிவாக இருக்க தங்களின் இப்பதிவு உதவும்.

Angelin said...

ஹா ஹா :) இந்த மாதிரி வெரைட்டி பல்ப் வாங்கறதெல்லாம் எனக்கு சர்வசாதாரணம் :) ஆனா எனக்கும் இந்த இயர் போன்க்கும் ரொம்ப தூரம் காதில் பூச்சி மாட்டிக்கிட்ட மாதிரி இருக்குமா ஆதனால் ஆல்வேஸ் ஸ்பீக்கர்தான் என் சாய்ஸ்...ஆமா என்ன பாட்டு கேட்டீங்க :)

Ranjani Narayanan said...

நான் கூட சிலசமயம் கணனியில் பாட்டு கேட்கும் ஆர்வத்தில் காதில் ear போனை மாட்டிக் கொண்டுவிடுவேன். அதன் அடுத்த முனையை கணனியில் செருக மறந்து விடுவேன். பாட்டை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கும் போது ரங்க்ஸ் முறைப்பார். அப்போதுதான் என் தப்பு புரியும்.
என்னவோ போங்க, நாம என்னிக்கு டெக்னாலஜியை கற்றுக்கொள்ளப் போகிறோம்?
ஆனாலும் ஆஸ்பத்திரியில்....ஹா....ஹா......ஹா.....!

Ajai Sunilkar Joseph said...

செவிட்டு மெஷின்ல பாட்டு கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை

வலிப்போக்கன் - said...

நானும் பார்த்திருக்கிறேன்....

வலிப்போக்கன் - said...

நானும் பார்த்திருக்கிறேன்....

மனோ சாமிநாதன் said...

பேரனுக்கு உடல்நலம் சரியில்லாத கவலையில் இருந்தேன். புன்னகைக்க வைத்து விட்டீர்கள்!

Geetha Sambasivam said...

காது ஜவ்வு கிழிஞ்சிருக்காதோ! எனக்கு என்னமோ காதில் குளிருக்காகப் பஞ்சு வைச்சுக்கறதே அலர்ஜி! இதில் இயர் ஃபோன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்கறதாவது! விமானப் பயணத்தில் கொடுப்பாங்க தான். வாங்கி எதிரே இருக்கும் பையில் போட்டுட்டு நிம்மதியா இருப்பேன். :)

Geetha Sambasivam said...

அது சரி, பாட்டும் நானே, பாவமும் நானேக்கு (Pa)வம்னு போட்டால் அர்த்தமே மாறிடுமே! அது (Ba)வம் இல்லையா? எனக்கு என்னமோ Baவம் தான் சரினு தோணுது! ஆனால் இங்கே லிட்டர் லிட்டரா அசடு வழிஞ்ச நீங்க தானே பாவம்! அந்த மாதிரி எடுத்துண்டால் தலைப்பு ஓகே தான்! :)

Bagawanjee KA said...

அசடு வழிந்த காரணம் ,முதலில் ஓவரா ஆக்ட் கொடுத்ததுதான்னு நினைக்கிறேன் :)

mageswari balachandran said...

அய்யோ,, நல்லா அசடுவழிஞ்சிங்க போல,,, இதற்கு தான் ஓவர் பில்டப் கூடாது,,

அடுத்தவருக்கு பயன்னுள்ள பகிர்வு.....

Nagendra Bharathi said...

ஹா ஹா நல்ல அனுபவம்

Nagendra Bharathi said...

ஹா ஹா நல்ல அனுபவம்

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹாஹா... செம அனுபவம்!

‘தளிர்’ சுரேஷ் said...

செல் போன் வந்த புதிதில் இப்படி நிறைய! இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா! என்று கவுண்டமணி ஸ்டைலில் சொல்லிக்க வேண்டியதுதான்

ஸ்ரீராம். said...

வாங்க ஜீவி ஸார்... ஒரிஜினல் பாட்டில்தான் Bhaa வரவேண்டும். இங்கு நான் பரிதாபம் - பாவம் என்னும் அர்த்தத்தில் சொல்லியிருப்பதால் P தான். இரண்டாவது இந்த Bold letterஸை டைட்டிலில் வர வைக்க முடியாது! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின்.. எங்கள் பக்கம் உங்களை ஆளையே காணோமே என்று முக நூலில் கேட்டவுடன் விறுவிறு என்று எங்கள் பதிவுகளில் பின்னூடங்கள் போட்டு அசத்தி விட்டீர்கள். நன்றி சகோதரி. என்ன பாடல் கேட்டேன் என்று பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே... கிஷோர்க் குமார் குரலில் ஹிந்திப் பாடல்கள்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க ரஞ்சனி மேடம்... ஏனோ, அப்புறம் இன்றுவரை எனக்கு காதில் பாட்டுக் கேட்கும் ஆசையே வரவில்லை! என்னையே பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் அப்போது என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று இப்போது நினைத்தாலும் நடுமுதுகில் குறுகுறு என்கிறது! வருகைக்கும்,

ஸ்ரீராம். said...

கருத்துக்கும் நன்றி. (ஹிஹிஹி... வரிகள் கட் ஆகி விட்டது)

ஸ்ரீராம். said...

வருகைக்கும் கருத்துக்கும்நன்றி நண்ப, அஜய்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்ப வலிப்போக்கன்.

ஸ்ரீராம். said...

வருகைக்கும் கருத்துக்கும் மனோ சாமிநாதன் மேடம். உங்கள் வருத்தத்தை நொடிநேரம் விலக்கி வைத்ததற்கு சந்தோஷப் படுகிறேன்.

ஸ்ரீராம். said...

வாங்க கீதா அக்கா! ஜீவி ஸாருக்கு சொல்லியிருக்கும் பதிலைப் படிச்சிருப்பீங்க... நானும் இப்போதெல்லாம் காதில் வைத்துப் பாட்டுக் கேட்பதில்லை. சமீப காலங்களில் பாட்டே கேட்கவில்லை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

ரொம்ப பில்டப் கொடுத்துட்டேன் என்கிறீர்களா பகவான்ஜி? இருக்கலாமோ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். அனைவருக்கும் பயனுள்ள பகிர்வா? எப்படி? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி நண்ப நாகேந்திர பாரதி.

ஸ்ரீராம். said...

நன்றி வெங்கட்.

ஸ்ரீராம். said...

அப்படித்தான் சமாளிக்க வேண்டியிருக்கு 'தளிர்' சுரேஷ்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

தனிமரம் said...

ஸ்ப்பீக்கரில் பாட்டு பாட்டுக்கேட்டாள் வெளியில் நடப்பது தெரியாதே ஸார்))) ரசித்துப்படித்தேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல நகைச்சுவையான அனுபவம்தான். கடைசி வரியப் படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை நீங்கள் எழுதிய விதம் சூப்பர்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த்.ம.பட்டை காணவில்லையே

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. பிரகாசமான பல்புதான் :-))

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹஹ் இப்படி எல்லாம் நானும் Paவம் ஆகியிருக்கேனாக்கும் ஸ்ரீராம்....ஆனால் ஆஸ்பத்திரியில் பாட்டு நல்லதுதானே! ரிலாக்ஸாக்குமே....ஹிஹிஹி அவங்களுக்குப் பாட்டின் மகத்துவம் ரசிக்கத் தெரியலை போங்க....நான் அப்படித்தான் நினைத்துக் கொள்வேன் உங்களைப் போல அசடு வழியும் நேரத்திலும்....ஹிஹிஹி

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!