திங்கள், 23 மே, 2016

'திங்க'க்கிழமை 20160523 :: திடீரடை (சோம்பேறிப் பிழைப்பு!)

                   


    
அரைக்கிலோ (உலர்) மாவு  எழுபது ரூபாய் என்று வாங்கிவந்தேன். 

அவர்கள் (செய்யச்) சொல்லியதை செய்தேன். 

அவை யாவை? 

மாவை கொஞ்சம் கொஞ்சமாக நீரூற்றி, முதலில் பேஸ்ட் பதம். பிறகு இன்னும் கொஞ்சம் நீரூற்றி. கெட்டியான (அடை) மாவு பதம். 

ஒருமணி நேரம் ஊறவைத்தேன். 

சொல்லாததையும்  செய்தேன். 

அவை யாவை ? 

சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்தேன். 

தேவைக்கேற்ப உப்பு சேர்த்தேன். 

கொஞ்சம் பெருங்காயப்பொடி சேர்த்தேன். 

கறிவேப்பிலை அரை கைப்பிடி அளவுக்கு எடுத்துக் கழுவி, கிள்ளிப்போட்டேன். 

இந்த மாவில் செய்த அடை எனக்குப் பிடித்திருந்தது.

உங்கள் ஊரில் கிடைத்தால் செய்து, சாப்பிட்டுப்  பாருங்கள். 

19 கருத்துகள்:

 1. கொஞ்சம் நேரம் முன்பு தான் அடை சாப்பிட்டேன். திடீர் அல்ல. அரிசி பருப்பு ஊறவைத்து அரைத்து வார்த்தது.திடீர் இட்லி திடீர் தோசை எல்லாம் wet paste. ஆனால் இது மட்டும் வித்தியாசம்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. ம்ஹூம், வேண்டாம் ஊட்டியில் இருந்தப்போ ஒரே ஒரு முறை மிக்சி சரியாக இல்லைனு மல்லிகா பத்ரிநாத்தின் அடை மாவுப் பாக்கெட் வாங்கிப் போய்ப்பண்ணினேன். ஏன் பண்ணினோம்னு ஆயிடுத்து! அதுக்கப்புறமா, இந்த திடீர் திடீர் மாவு வகைகளுக்கெல்லாம் போறதே இல்லை! நம் கையே நமக்கு உதவி!

  பதிலளிநீக்கு
 3. நானும் ஒரே ஒரு முறை மல்லிகா பத்ரிநாத்தின் அடை பௌடர் வாங்கி நீங்கள் சொல்லியிருப்பது போலவும் செய்து பார்த்து வீட்டில் மகனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதிலிருந்து எந்த ப்ராண்டும் வாங்குவதில்லை...மகனுமே நன்றாக அடை செய்கிறான் இப்போது...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. சூப்பர் குறிப்பா இருக்கே:)!

  ரெடிமேட் மாவு எனக்கு ஒத்து வருவதில்லை.

  பதிலளிநீக்கு
 5. அட அடை எனக்கு பிடிக்குமே...?

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் குறிப்பா இருக்கே:)!

  ரெடிமேட் மாவு எனக்கு ஒத்து வருவதில்லை.

  பதிலளிநீக்கு
 7. இங்கே ரவா உப்புமா ரெடி மேட் கிடைக்கிறது. ருசியாகவும் இருக்கு. அடை
  சூப்பர்.

  பதிலளிநீக்கு
 8. இதெல்லாம் நானும் வாங்கிப் பண்ணியுள்ளேன். என்னைப் பொருத்தவரையில், இதெல்லாம் வேஸ்ட். இதுக்கு, அரிசி உப்புமா மிக்ஸ், போனாப் போகுது, ரவா இட்லி அல்லது ரவா தோசை மிக்ஸ் சேர்த்துக்கலாம். அடைக்கு மாவு அரைப்பது, ரொம்ப சுலபம். இது மாதிரிதான், இங்கெல்லாம் தோசை, ஆப்பம், இட்லி மாவெல்லாம் கிடைக்கிறது. எனெக்கென்னமோ இதிலெல்லாம் ஏதேனும் சேர்க்கிறான் என்றுதான் எண்ணம். 5 நாள் ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்தாலும் ஒரு ஸ்மெல் வரும் ('நன்றாக இருக்க சோடா உப்போ, தேங்காய்த் தண்ணீரோ ஏதோ சேர்க்கிறானோ?).

  அடைக்கு ஏற்ற சைட் டிஷ் கீதா அவர்கள் சொல்லலாம். எனக்கு இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து அலுத்துவிட்டது. அவியல் பண்ணும் பொறுமையோ நேரமோ கிடையாது.

  பதிலளிநீக்கு
 9. நானும் நானும் இந்த அடை மாவு
  வாங்கி வச்சிருக்கேன்.

  ஆனா செய்யலாமா வேண்டாமா அப்படின்னு
  ஒரு மாசமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.

  எக்ஸ்பைரி 3 மாசம்.

  யாராச்சும் பண்ணி சாப்பிட்டு நல்லபடி நாலு நாலு நாள்
  இருந்தாங்கன்னா அதுக்கப்பறம் ட்ரை பண்ணலாம்
  அப்படின்னு இருக்கேன்.

  இப்ப அடை மாவு, ரவா தோசை மாவு, உப்புமா, பிசி பேலா ஹூலி எல்லாமே பாக்கெட் லே.

  சாப்பிட்டுட்டு வயிறு ரிபேர் ஆயிடுச்சுன்னா பக்கத்திலேயே விஜயா ஆஸ்பிடல் இருக்கு.

  காஷ்லெஸ்ஸ் இன்சூரன்ஸ் இருக்கு.

  இருந்தாலும் பயமா இருக்கு.

  இந்த பருப்பு வகை எதைச் சாப்பிட்டாலும் அடுத்த நாலு
  நாளைக்கு
  டபார் டபார் . அனலைஸ் பண்ணி
  நைட்ரஜன், சல்பூரிக் ஆசிட், கார்பன் மானொக்சைட்
  தனித்தனியா வெளியே போங்களே ...
  சேந்து கலவையா வாயு ரூபத்திலே போனா
  பக்கத்திலே இருக்கறவங்க ஒடராங்கா.

  இருந்தாலும் அந்த காலத்துலே எங்க அம்மா தங்க அம்மா செல்ல அம்மா எனக்கு தேங்காய் அடை அதுக்கு கொத்தமல்லி சட்னி, இட்லி மிளகாய் போடி, அவியல் எல்லாம் பண்ணி

  சாப்பிடட்ட அந்தக் காலம் ....

  யாத் ந ஜாயே பீதே தினோன் கி.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 10. எனக்கு எதுக்கு இந்த வம்பு..... செய்முறை பற்றி

  பதிலளிநீக்கு
 11. எனக்கு எதுக்கு இந்த வம்பு..... செய்முறை பற்றி

  பதிலளிநீக்கு
 12. அடையைப்பற்றிய பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் ரொம்பவே சுவாரஸ்யம்! நான் ரெடிமேட் அடை பக்கம் போவதில்லை. மற்ற அடைகளுடன் சகோதரர் வை.கோ அவர்களின் அடை குறிப்பின் படி அடிக்கடி செய்வேன். அத்தனை சுவை!

  பதிலளிநீக்கு
 13. செய்முறை அருமை நண்பரே...
  செய்து பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 14. @நெல்லைத் தமிழன், என் பிறந்த வீட்டைப் பொறுத்தவரை அடைக்கு சரியான துணை வற்றல் குழம்பு அல்லது ஏதேனும் காய்கள் போட்ட வெறும் குழம்பு. முருங்கைக்காய், சின்ன வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், மி.வத்தல் கடுகு, உப, கப, துப. வெந்தயம், கருகப்பிலை தாளித்துக் குழம்பு பண்ணினாலும் அடைக்கு நன்றாக இருக்கும். ஒரு சிலர் அடையோடு வெல்லம் தொட்டுப்பாங்க. அதையும் முயற்சித்துப் பாருங்க!

  பதிலளிநீக்கு
 15. இங்கும் கிடைக்கிறது. சுய உதவிகுழுவினர் தயார் செய்யும் அடைமாவு, இடியாப்பம் மாவு, கொழுக்கட்டை மாவு எல்லாம் கிடைக்கிறது. அடை நீங்கள் சொல்வது போல் சின்னவெங்காயம், தேவையான உப்பு, கருவேப்பிலை, தேங்காய் துறுவல் எல்லாம் கலந்து 60 நிமிடம் கழித்து செய்தேன் நன்றாக இருந்தது. அவசரத்திற்கு கை கொடுக்கும்.
  என் அம்மா அடை மாவு திரித்து வைத்து இருப்பார்கள். அரிசி உப்புமாவிற்கு மிஷினில் உடைத்து வரும் போது அடைமாவும் அரைத்து வந்து இருக்கிறோம் சிறு வயதில்.

  பதிலளிநீக்கு
 16. நானே சூப்பரா செய்வேன். தங்கள் குறிப்பும் அருமை,,பகிர்வுக்கு நன்றி,,

  பதிலளிநீக்கு
 17. கல்லுரலில் கையால் அறைத்துப் பண்ணும் அடைக்கு ஈடு எதுவும் கிடையாது. அவஸரத்துக்கு எதுவும் நல்லதே. அன்புடன்

  பதிலளிநீக்கு
 18. கடையில் வாங்கும் இட்லி -தோசை மாவே நம் ருசிக்கு சரியாக இருப்பதில்லை! அடை மாவு எல்லாம் அரைத்து வார்த்து சாப்பிட்டால்தான் சரியாக வரும்.

  பதிலளிநீக்கு
 19. இந்த அடை மாவு இங்கே கிடைப்பதில்லை. நானே அரைத்துக் கொள்வது வழக்கம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!