Thursday, May 19, 2016

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி          இளமையின் நினைவுகள் எத்தனையோ வகைகளில் நினைவு கூரப்படும்! இதோ அதில் ஒரு வகை! ஒரு தினமணி ஞாயிறு மலரில் இந்தப் பாடலை பார்த்ததும் அடுத்தடுத்த வரிகள் மனதில் தோன்ற, இது அந்தக் காலத்தில் "மனப்பாடப் பாட்டு" என்பது நினைவுக்கு வந்தது. 


           இதே போல முன்னர் "கையில் ஊமன் கண்ணில் காக்கும்" பாடலும் இளமை நினைவை இசைத்தது நினைவுக்கு வருகிறது!


Image result for karikala cholan images


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.

- வெண்ணிக்குயத்தியார்.
 ====================================================================மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.


எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’


விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’


ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.


ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’.


சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’.
தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.


இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.


இந்து(தமிழ்)விலிருந்து திருடியது!

======================================================================


Sriram Balasubramaniam's photo.

 
எல்லோரும் சொல்வதுதான்
அதை நீ
காதல் என்கிறாய்..
நான்
கவிதை என்கிறேன்..
பொய்யை
எந்தப் பெயரில்
அழைத்தாலென்ன!
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
பொய் அழகுதான்!


Sriram Balasubramaniam's photo.
 


‪#‎மீள்‬

15 comments:

வல்லிசிம்ஹன் said...

எனக்கு நடிகர் எம்.ஜி ஆர் மிகப் பிடிக்கும். சோகம் இருக்காது. ஒரு அழுகை அம்மா சீன் உறுதி. மற்றதெல்லாம் பாடல்கள் தான். நன்றி ஸ்ரீராம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்பார்த்தபடியே, இன்று (19.05.2016) தமிழகத்தில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தியிருக்கும் வேளையில், இந்தப்பதிவினை இங்கு பார்க்க மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. :)

ஜீவி said...

//காதலுக்கும் பொய் அழகு தான்..//

அது சார் சொன்னது?.. காதலிக்க நேரமில்லாத ஆசாமியா?..

ஜோடி விரல் சேர்த்து இதயச் சின்னம் தான் காதல் என்று என்ன அழகாய் பொய் சொல்கிறார்கள, பாருங்கள்!..

KILLERGEE Devakottai said...

கவிதையை ரசித்தேன் நண்பரே

பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் said...

காதல் என்கிறாய்..

கவிதை என்கிறேன்..

எந்தப் பெயரில்
அழைத்தாலென்ன!

காதலுக்கும்
பொய் அழகுதான்!வரிகள் அழகு நண்பரே...

Bagawanjee KA said...

செய்யுளின் அர்த்தம் நினைவுக்கு வரவில்லையா ,ஜி :)

மனோ சாமிநாதன் said...

வெண்ணிக்குயத்தியார் பாடலை நானும் இளம் வயதில் படித்திருக்கிறேன். இங்கே பதிவில் எழுதி ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாடப் புத்தகத்தில் வெண்ணிக் குயத்தியார் இயற்றிய சங்கப் பாடலை படித்த நினைவு இருக்கிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

வெண்ணிக்குயத்தியார் சிறுவயதில் பாடநூலில் படித்த நினைவுகள்
நன்றி நண்பரே
தம +1

ஜீவி said...

இப்பொழுது தான் பார்த்தேன்.

'அது சார் சொன்னது?' என்பதை 'அது யார் சொன்னது?' என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

கோமதி அரசு said...

கவிதை, புரட்சி தலைவர் செய்திகள் எல்லாம் அருமை.

‘தளிர்’ சுரேஷ் said...

வண்ணமிகு தகவல்களும் சங்க இலக்கியமும் ரசிக்க வைத்தன!

G.M Balasubramaniam said...

எந்தக் கவிதையும் படித்த நினைவில்லை. பழைய பாடல்களைப் பதிவிடும் போதுபதவுரை பொழிப்புரையும் தர வேண்டும் வாசகர்கள் பலருக்கும் என்னைப்போல் எழுதப்படிக்க மட்டுமே தெரியும்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான தகவல்
சிறந்த பதிவு

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!