சனி, 2 ஜூன், 2018

நான் என் கடமையைத்தானே செய்தேன்?





1)  இவர்தான் போலீஸ்.  இல்லை, இல்லை, மனிதநேயம் மிக்க மனிதர்.


நேற்றைய செய்தியில் இவர், "நான் என் கடமையைத்தானே செய்தேன்?  எதற்குப் பாராட்டு?" என்று கேட்டிருக்கிறார்.


2) அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த சிறுவனை, 'ஸ்பைடர்மேன்' போல செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்.  பாரிஸ் பாஸிட்டிவ்.





3)  இவரைப்பற்றி கேள்விப்பட்ட நாகலாந்து கவர்னர் அரசு விருந்தினராக வந்து பறவைவிருத்தி பற்றி பயிற்சி வகுப்பு நடத்தும்படி கேட்டிருக்கிறார் கவர்னர் அழைப்பு என்றால் அடித்துபிடித்து யாராக இருந்தாலும் பறந்திருப்பர் ஆனால் இவரோ கிளிகளை பிரிந்து இருக்கவேண்டுமே என்பதற்காக பயணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டேவருகிறார்.  நோய்வாய்ப்பட்ட சில கிளிகளையும் மருந்து மாத்திரை உணவு கொடுத்து பராமரித்துவருகிறார்.இவைகள் குணமாகி இறக்கை வளர்ந்து பறக்கும் நிலைக்கு வந்ததும் சுதந்திரமாக பறக்கவிடுகிறார்.  (ஏற்கெனவே விகடன் மூலமாக படித்திருக்கிறோம்)







28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

    கீதா
    .

    பதிலளிநீக்கு
  2. கீதாக்காவும் இன்று போட்டிக்கு இல்லை...துரை அண்ணா மட்டும்தான் என்று நினைக்கிறேன்....போட்டி குலாப்ஜாமூன் விளம்பரம் போல இருக்கு போர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. வாங்க துரை அண்ணா இன்று நம்மோடு ஓட யாரும் இல்லை...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கிளிகள் படம் கண்ணைப் பறிக்குதே வரேன் வாசிக்க

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நல்ல மனிதர்கள்..
    நலமெலாம் பெற்று வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. கிளிகளைக் கண்டாலே மகிழ்ச்சி தான்...

    நான் இந்தக் கிளிகளைத் தான் சொன்னேன்..

    யாரும் வேறு கற்பனைகளுக்குள் மூழ்கி விடாதிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  8. கிழே ரோட்டில் ஏதாவது வாகனங்கள் சத்தமாக ஹாரான் ஒலி எழுப்பும் போது மட்டும் அதிர்ச்சியுடன் அங்கு இருந்து பறந்து களைவதும் பின் திரும்பவந்து சாப்பிடுவதுமாக இருக்கின்றன.இருட்டும் வரை நடக்கும் இந்த விருந்தி்ல் இப்போது புறாக்களும் கலந்து கொள்கின்றன.//

    கிளிகளின் இடத்தை அல்லவா நாம் ஆக்ரமித்திருக்கிறோம் அப்போ கிளிகள் பயப்படாமல் என்ன செய்யும் என்றாலும் அவையும் பழகிக் கொன்ண்டுவிட்டன பாருங்க....கிளிகள் ரொம்ப சென்ஸிட்டிவ்....இப்போது புறாக்களும் சேர்ந்திருப்பது மனதிற்கு இதமாய் இருக்கிறது

    சேகர் கிளிகளின் மனதை மட்டுமல்ல நம் மனதையும் தொட்டுவிட்டார்....வாழ்க சேகர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நான் இந்தக் கிளிகளைத் தான் சொன்னேன்..

    யாரும் வேறு கற்பனைகளுக்குள் மூழ்கி விடாதிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...//

    ஹா ஹா ஹா ஹா ஹா அப்பன் குதிருக்குள் இல்லை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. துரை அண்ணா செமையா கலக்கறார்!!! சிரிக்க வைத்து!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணா இன்று ஜல் ஜல்லிடம் மாட்டிக் கொண்டார் ஒந்த ஒரு வரிக்காகவே!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராமின் வீட்டு நெட் எதிர்க்கட்சி சதியினால் துண்டிக்கப்பட்டுள்ளதால் காணலை போலும் !!

    நாங்க கோஷம் போடறோம் ஸ்ரீராம் நெட் வரவழைக்க உண்ணாவிரதம் இருக்கோம்..தேம்ஸ் பூஸாரை மோடி அங்கிளிடம் போய்ச் சண்டை போட்டு நெட் வரவழைப்பார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ககன்தீப் சிங் விந்தை மனிதரே பாராட்டுவோம்.

    கிளிகள் படம் அழகு

    பதிலளிநீக்கு
  15. இனிய காலை வணக்கம். அனைவருக்கும்.
    ககன்சிங் உண்மையான மனிதர்.
    இந்தப் பெருமை யாருக்குக் கிடைக்கும். அவ்வளவு ஆக்ரோஷமான மனிதர்களிடமிருந்து அந்த இளைஞரைக் காப்பாற்றியவர் என்றும் நலமாக இருக்க வேண்டும்.

    அதே போல அந்த இளைஞர் பாரீஸ். மெய் சிலிர்க்கும் ஜாலம்.
    கிளி மனிதரைப் பற்றிப் புதிய செய்தி அருமை.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. மூன்று செய்திகளும் அருமையானவை. கடமையைச் செய்வதே அபூர்வமாகிவிட்ட காலம் இது. கிளிகள் பற்றிய செய்தியும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. பாரிஸ் இளைஞர் வாழ்க. வீடியோ பார்த்தேன் ...நல்ல தைரியம்...உடனே செயல்பட்டதும் சிறப்பு.

    ககன் தீப் சிங்க் வாழ்க!!! இருவருக்கும் பாராட்டுகள்! பொக்கே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. மூன்று செய்திகளும் மிக அருமை.
    மூன்றும் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன்.
    நல்ல மனிதர்கலை பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. கிளி செய்தி வாட்ஸப்பில் வந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. தன் காரியத்தை ஓடிவந்து செய்த போலீஸ், இன்னலில் இருந்தவரைக் காப்பாற்றி அவர்மீது விழுந்திருக்கவேண்டிய அடியைத் தானே வாங்கிக்கொண்டதோடு, பாராட்டெதற்கு, கடமைதானே இது என்றது. கடமை என்று ஒன்றும் இல்லாத, நாட்டில் அட்ரஸ்கூட இல்லாத அகதி, பாய்ந்தார் உயர்ந்து நிற்கும் கட்டிடத்தின் மேலே, ராட்சதப் பல்லியைப்போலே. அம்போ என்று தொங்கிய குழந்தையை தாங்கினார் கைகளில். தன் சேவைக்காகக் கௌரவிக்கக் காத்திருக்கும் கவர்னரிடம் போகத் தயங்குகிறார்-அந்த நாட்களில் கிளிகளுக்கு யார் சாப்பாடு போடுவது, பசியோடு வந்து உட்காருமே என்று..
    நன்றாகத்தான் இருக்கிறது இவ்வுலகம். கவலைப்பட ஏதுமில்லை..

    பதிலளிநீக்கு
  21. இராணுவ வீரர் போன்று குழந்தையைக் காப்பாற்றிய அந்த பாரிஸ் இளைஞர், மற்றும் ககந்தீப் சிங்க் இருவருக்கும் பாராட்டுகள்.

    கிளியைப் போற்றிப் பாதுகாக்கும் கிளிமனிதருக்கும் வாழ்த்துகள்! கிளிகள் அழகாக இருக்கின்ற்ன..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    ஒரு உயிரை, அவர் மேல் அடி விழாமல் காப்பாற்றிய சீக்கிய போலீஸ் அதிகாரியும், குழந்தையின் உயிரை காப்பாற்ற தன உயிரை பணயம் வைத்து மாடி ஒவ்வொன்றிலும் விரைந்தேறி அக் குழந்தையை காப்பாற்றிய கசாமா எனற இளைஞரும் பாராட்டி போற்றப்படக் கூடியவர்கள்.

    கிளிகளுக்காக தன் இருப்பிடத்தை மாற்ற இயலாமல் தவிக்கும் மாமனிதர் வணக்கத்துகுரியவர். அவரின் பரிதவிப்பை வீட்டு உரிமையாளர் புரிந்து கொள்ள வேண்டும். படிக்கும் போதே மனதுக்கு கஸ்டமாயிருந்தது.

    கிளிகள் படங்கள் மிகவும் அழகாயிருந்தது.
    மூன்று செய்திகளுமே மிகவும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல கனம் கொண்டவர்கள்..... வாழ்த்துகள். முதல் இரண்டு செய்திகள் எனக்கும் வந்தன.

    பதிலளிநீக்கு
  24. ஒருவர் மனிதநேயர். மற்றவர் ஜீவகாருண்யர். எல்லாரும் அப்படிதான் இருக்கவேண்டும். அனால் அது ஒரு அரிய பண்பு ஆகிவிட்டதால், தென்படும் ஒரு சிலரை பாராட்டி கொண்டாடவேண்டிய நிலையில் சமூகம் உள்ளது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!