இந்தாங்க நுரை பொங்க தஞ்சாவூர் மாவட்ட டிகிரி காஃபி.. குடிச்சுட்டு மற்ற படங்களை பார்க்கப் போகலாம்! என்ன ஆச்சுன்னா.. நேற்று மெயின்டெனன்ஸ் என்கிற பெயரில் காலை ஆறுமுதல் மாலை ஆறேகால் வரை பவர்கட். பின்னர் பவர் வந்தபோதோ பயங்கர லோ வோல்டேஜ்.... இன்று காலை ஆறுமணிக்குதான் சரியானது! அதுதான் லேட்..
சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்!
பாண்டிச்சேரியைத் தாண்டிச் சென்றோம் என்பதற்குச் சான்று!
முன்னர் காட்டிய அதே இடம், அந்த ஆஞ்சிக்குப் பக்கத்து 'ஷெட்'டில் இந்த ஆஞ்சி... ஏனோ பக்கத்துப் பக்கத்தில் இரண்டு ஆஞ்சிகள்!
அந்த இடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் ஒரு வியாபாரி வந்தார். ஏதேதோ பொருட்களுடன் இந்தக் கடிகாரம், கண்ணாடி எல்லாம் கட்டப்பட்டிருந்த அவர் வண்டியில். உள்ளே நின்ற எங்கள் உறவினரை இந்தக் கண்ணாடி வாயிலாக படம் எடுத்தேன்!
"இளமை நினைவை இசைக்கும் இலைகள்.." சிறுவயதில் வளர்ந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில் பஸ்சிலிருந்தே வழியில் சாலையோரம் தெரிந்த பூவரச இலையைப் பிடித்துப் பறித்து "பீப்பீ செய்து ஊதி இளமைக்குச் செல்லும் உறவினர்...
சென்ற வாரம் சொல்லி இருந்தேனே... இரண்டு கோவில்கள்.. ஒன்று பெருமாள் கோவில், இரண்டாவது சிவன் கோவில்.. இரண்டுக்கும் இடைப்பட்ட வழி...
காட்டாமணக்கு செடி...
இங்கு ஒரு அய்யனார் கோவில் இருக்கிறது.. அது செல்லும் வழியில்... அதோ... அந்த இடைப்பட்ட வழியே நுழைந்து சென்றால் குறுக்கு வழி!
விளம்பரங்களை பற்றி பேசும்போது சென்ற வாரம் (?) ஒரு புடைவைக்கடை விளம்பரம் என்று சொன்னேன்... இல்லை, அது நகைக்கடை விளம்பரம். இதோ சாம்பிள். சில வாரங்கள் வெவ்வேறு வகைத் திருமணங்கள் பற்றி இப்படி வந்தது... கலெக்ட் செய்து வைத்திருக்கிறேனாக்கும்! படிக்க முடிகிறதா பாருங்கள். சுவாரஸ்யமானது.
தொடர்ந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பூனைக்குட்டிக்கு பொட்டு வைத்து அழகு பார்க்கிறார் பாஸ் என்று சொன்னேன். அதைப் படம் பிடித்துப் போடச்சொன்னார் அதிரா.. இதோ போட்டிருக்கிறேன்.. என்ன, அதிராவைதான் காணோம்... அப்புறம் வந்தாலும் பழைய பதிவுகளை பார்க்க மாட்டாரே...!
இதோ இந்த போஸிலேயே பத்து நிமிடங்களுக்கு மேலாகத் தூங்கி இருக்கிறாள் இந்தச் சுட்டிப்பூனை. தலைக்கு சப்போர்ட் இல்லாமல் எப்படித்தான் தூங்க முடிகிறதோ...
இதுவும் தூக்கம்தான்! முதல் படத்துக்கு நேர்மாறாக.. முகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?
காலை வணக்கம். படங்கள் நல்லா இருக்கு. பூனைப் படங்கள் வேறு எழுத்துருவில்
பதிலளிநீக்கு@ஸ்ரீராம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஉலக அதிசயமாக நான் முதலில் வந்திருக்கிறேன். 'வணக்கம்' வேறு போட்டிருக்கிறேன். அதைக் கவனித்து பதில் எழுதாமல் வேறு என்ன முக்கியமான வேலை? ஹா ஹா ஹா.
காலை வணக்கம் நெல்லை!
நீக்குகாஃபிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதனால் நோ கமென்ட்ஸ்
பதிலளிநீக்குஎப்பவுமே குடித்ததில்லையா?
நீக்குஇல்லை கேஜிஜி சார் (ஓரிரு முறை வேறு வழியில்லாமல் குடித்திருக்கிறேன். சூடாக என்று ஒரு முறை குடித்திருக்கிறேன். பிறகு, இந்தக் கசப்புச் 'சனியனை' ஏன் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று பலர்-உறவினர்களில், சொல்கிறார்கள், இல்லைனா தலைவலிக்கும் என்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
நீக்குஇன்றைக்கு யாரையும் காணோமே
பதிலளிநீக்குகாபி மணக்கிறது
பதிலளிநீக்குபித்தளை டம்பளர் காபிக்கு ஓர் ஈர்ப்பு எப்பவும் இருக்குதான்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎல்லா படங்களும் நன்றாக இருக்கிறது.
இளமைகாலத்தை நினைவுபடுத்தும் "பீப்பீ அருமை.( சத்தம் வந்ததா?)
திருமண சடங்க்கு அறிந்து கொண்டேன்.
பூனையார் படம் அழகு. பூனையின் காது தெரிகிறதே!
அதிரா ஊருக்கு போய்விட்டார் போல விடுமுறைக்கு.
சத்தம் பிரமாதமாக வந்ததாக சகோதரர்கள் கூறுகிறார்கள்!
நீக்குஓ! மகிழ்ச்சி
நீக்குஅருமை அருமை...!
பதிலளிநீக்குபூனைப்படம் அழகு...!
காலை வணக்கம்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு.
இரண்டாவது பூனை படத்தில் காது தெரிகிறது! அதனால் தலை எங்கே என கண்டு பிடிக்க முடிகிறது.
படங்கள் அனைத்தும் அழகு.
காலையில் சுடச் சுட காப்பி. வாவ்....
//'மாற்றுக்களை பட்ட உடன் விடாமல் அழுத்த இந்தச் சுட்டிக் குழந்தை இந்த இடத்தில் உட்காரவைத்த உடன் சிரித்தால் எப்படிச் சிரிப்பாள்// - புரியலை
பதிலளிநீக்குசமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்! (ஸ்ரீராம் கூறிய திருத்தம்)
நீக்குஇந்றைக்கு ஏனிந்த தாமதமோ!?...
பதிலளிநீக்குசுடச்சுட காஃபி அருமை...
பதிலளிநீக்குகோணலாக வைக்கப்பட்ட பொட்டு. கண்ணை மூடிக்கொண்டால் எல்லாம் நேராகிவிடும் என்பது பூனையின் சிந்தனையோ?
பதிலளிநீக்குகாட்டாமணக்கு செடியை மீண்டும் பார்க்க நேர்ந்ததில் காலை மகிழ்ச்சி.
டவரா செட் காஃபி ஆஹா பேஸ், பேஸ் பழைய நினைவுகளை மீட்டியது.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தொகுப்பு.
பதிலளிநீக்குகாபி, பீப்பீயை அதிகம் ரசித்தேன்.
பதிலளிநீக்கு/
பதிலளிநீக்குசமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்களை பட்ட உடன் விடாமல் அழுத்த இந்தச் சுட்டிக் குழந்தை இந்த இடத்தில் உட்காரவைத்த உடன் சிரித்தால் எப்படிச் சிரிப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்!அபுரி
தென்னை ஓலையில் பீப்பிசெய்து ஊதின கால நினைவுகள் வந்தது டவரா செட்டில் காஃபி தந்து கும்பகோணம் டிகிரி காஃபி என்று ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்
சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்! (ஸ்ரீராம் கூறிய திருத்தம்)
நீக்குகண்ணாடியில் உங்க முகம் தெரிகிறதோ?!
பதிலளிநீக்குஎனக்கு காஃபி டபுள் ஸ்ட்ராங்கா, சர்க்கரை தூக்கலா வேணும்..
பொட்டு வைத்த பூனை சூப்பர். சின்ன வயசில எங்க வீட்டில் ஒரு பூனை இருந்துச்சு., அது நாலு காலையும் தூக்கிட்டு, மல்லாந்து படுத்துக்கிட்டுதான் தூங்கும்.
என் முகம் இல்லை. உறவினர் இருவரது முகங்கள்...!
நீக்குரசிக்க வைத்த படங்கள்...
பதிலளிநீக்கு//மாற்றுக்களை பட்ட உடன் விடாமல் அழுத்த இந்தச் சுட்டிக் குழந்தை இந்த இடத்தில் உட்காரவைத்த உடன் சிரித்தால் எப்படிச் சிரிப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்!அபுரி//
பதிலளிநீக்குநான் கேட்க நினைச்சேன். எல்லோரும் கேட்டிருக்காங்க! இது என்னனு ஒண்ணுமே புரியலை! :))))
சமீபத்தில் நடந்த இல்ல விழா ஒன்றில் 'மாற்றுக்கை பட்ட உடன் விடாமல் அழுத இந்தச் சுட்டிக் குழந்தை, இந்த இடத்தில் உட்காரவைத்த உடன், தான் சிரித்தால் எப்படி இருப்பாள் என்று சாம்பிள் காட்டினாள்! (ஸ்ரீராம் கூறிய திருத்தம்)
நீக்குகாஃபி பார்த்தால் சிகரி போட்டிருப்பாங்க போல் தெரியுதே! எனக்கு வேண்டாம்! :)))))) இம்ம்மாதிரிப் பீப்பீப் பீப்பீ செய்து நிறைய ஊதி இருக்கோம். :))))
பதிலளிநீக்குஇன்னிக்கும் பவர்கட்டா? உங்களுக்குத் தான் பவர் கட்டுன்னா மத்தவங்க என்ன ஆனாங்க! ஏன் யாரையுமே காணோம்?
பதிலளிநீக்குநான் இருக்கேன்.
நீக்குஉங்களைப் பார்த்து அவங்கல்லாம் பயந்துட்டுப் போயிட்டாங்களோ?
நீக்குஆ"சிறி"யர் கையிலிருந்து ஆ"சிரி"யர் கைக்குப் போயிருக்கா எ.பி?
நீக்குஐவரும் ஐந்து இடங்களில் இருக்காங்க! எனக்கு வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்பிகிட்டு இருக்காங்க!
நீக்குநமது ஆசாமிகள் எதையும் ஒழுங்காகச் செய்யமாட்டார்கள் என்பதற்கு ஆஞ்சனேயருக்கு அவர்கள் போட்டிருக்கும் கொட்டகையே உதாரணம்.
பதிலளிநீக்குஆரம்ப நிலையில் கட்டுமானப்பணிகளோ என்னவோ!
நீக்குபூனையார் சூப்பர். அவர் பெயர் அழகியோ.
பதிலளிநீக்குமுதலியார் திருமண நிகழ்ச்சிகளின் விவரம்
அருமை.
நம் சம்பரதாயம் போல் தான் இருக்கிறது. இரண்டு
பக்கம் மாலையைப் போடுவதைத் தவிர.
ஆஞ்சனேயர் அசோகவனம் இருக்கிறாரோ.
காப்பி பார்க்க நன்றாக இருக்கிறது. அழகு காப்பிக் கலர் மிஸ்ஸிங்க்.
பீப்பி சத்தம் வந்ததா.
அந்தக் கல்யாண ஸம்ப்ரதாயத்தைப் படித்த முதல் ஆள் நீங்கள்தான் என்று நினைக்கிறேன்மா....!!
நீக்குநன்றி.
நான் படித்து கருத்து சொல்லி இருக்கிறேன் ஸ்ரீராம்
நீக்குஆமாம்.. ஆமாம்... மன்னிசுக்குங்க அக்கா!
நீக்குஆவ் !! எனக்கு வேணும் டிகிரி காஃபி .என் மகளுக்கும் இந்த டபராவில் குடிக்க ரொம்ப பிடிக்கும் :) சரவணா பவனில் முதல்முதலா குடிச்சப்போ அந்த டபரா மாதிரி விளையாட வேணும்னு கேட்டா :)
பதிலளிநீக்குமாற்றுக்கை // வேறொருவரிடம் குழந்தை கைக்கு போனதும் அழுததா ?
chweet புன்னகை
நாங்க கல்யாண முருங்கையில் இப்படி செஞ்சி பீப்பீ விளையாடுவோம் .
நெய்வேலி ..காட்டாமணக்கு ?? ஊதா மலர்கள் வளரும் இல்லியா ?
என் ப்ரண்ட் ஒருத்தி இருந்த தொண்டைமண்டல என்று சொல்வா :)
இத்தனை பிரிவுகள் இருக்கா !
எத்தனை வித திருமண சம்பிரதாயங்கள் .சவுத் சைட் க்ரிஸ்டியன்ஸ் குறுக்குமாலை போடுவோம் இப்படி நிறைய இருக்கு ,
ஹாஹாஹா :) மியாவ் செல்லம் ஸ்வீட்ட்டா இருக்கு காது வச்சி கண்டுபிடிச்சேன் தலைப்பக்கத்தை :)
பொட்டு வச்ச குட்டி மியாவ் .
எங்க பொண்ணுங்க காத்து கண்ணை டைட்டா கையால் மூடி தூங்குங்க .இதில் ஜெசிக்கு என் பழைய காட்டன் நைட்டி அப்புறம் சல்வார் துப்பட்டா கண்டிப்பா வேணும் தாச்சிக்க :)
வாங்க ஏஞ்சல்.. எங்கள் வீட்டில் பாலும், ஒரு வாய் தயிர் சாதமும் சாப்பிடுகிறது பூனை. பால் அது வந்து கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறது!
நீக்குபூனைக்குட்டி உட்கார்ந்திருப்பது என் மடி!
படங்களைப் பார்த்தேன். விவரங்களை வாசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குநேத்தைய இந்தப் பதிவையே இன்னும் முழுசாப் படிக்கலை. இனிமேல் தான் படிக்கணும். அதுக்குள்ளே இன்னிக்குப் போட்டாச்சு! :)
பதிலளிநீக்குஇதுல படிக்க என்ன இருக்கு அக்கா? வெறும் படங்கள்தானே? அதற்குச் சிறு விளக்கங்கள்...
நீக்குவட்டாவும் டம்ளரும் பார்த்தவுடன் டிகிரி காபி சாப்பிட தோன்றுகிறது பாராட்டுகள் மழலையின் சிரிப்பு அற்புதம்
பதிலளிநீக்குபூவரசம் இலையில பீப்பீ செய்து
பதிலளிநீக்குஊதிய எனது பள்ளிப் பயணத்தை
மீட்டுப் பார்க்க முடிந்தது, மகிழ்ச்சி!
அருமையான படங்களும் நினைவூட்டல் வரிகளும்