சென்ற வாரக் கேள்விக்கு யார் யார் என்னென்ன பதில்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று படித்தேன்.
வித்தியாசமான கோணங்களில் நிறைய பேர் எழுதியிருக்கிறீர்கள்!
வெரி குட்.
முதல் பதில் எழுதிய பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு முதல் பாராட்டுகள்.
A யும் / B யும் :
அயர்ன் செய்யக் கொடுத்தவர்/அயர்ன் செய்பவர்,
பட்சணம் சுவைப்பவர்/பட்சணம் செய்பவர்,
மசாஜ் செய்துகொள்ளச் சென்றவர்/மசாஜ் செய்பவர்.
இதில் பட்சணம் என்னும் கருத்து சரியில்லை. பட்சணம் தீய்ந்துவிட்டால், பட்சணம் செய்பவரை முன்பதத்தில் பட்சணத்தை, எண்ணெய் சட்டியிலிருந்து எடுக்கச்சொல்வார்கள். சூட்டைக் குறைப்பதால் பட்சணம் சரியான பதத்தை அடையாது.
நெல்லைத்தமிழன் :
அரசியல் தலைவர் / பேச்சாளர்
கோமதி அரசு :
மதுரை மக்கள் / சூரியன் (ஹ ஹ ! இதெல்லாம் நடக்கின்ற விஷயமா!)
கீதா ரெங்கன் :
மனைவி / கணவன் மற்றும் சப்பாத்தி ?
சமையல் தெரிந்தவர் அல்லது கற்றுக்கொடுப்பவர் / கற்றுக்கொள்பவர்
குழுத் தலைவர் / விவாத உறுப்பினர்.
அயர்ன் செய்யச்சொல்பவர் / அயர்ன் செய்பவர்
குளிர் பிரதேசத்தில் வார்மர் பயனாளி / இயக்குபவர்
குடிக்கும் காபி அ குளிக்கும் வெந்நீர் பயனாளி / ஆக்குபவர்
ஏஞ்சல் :
கணவன் பேப்பர் ரோஸ்ட் செய்ய மனைவி சூட்டைக் குறைக்கச் சொல்கிறார்.
வீட்டு ஓனர் , ரேடியேட்டர்/தெர்மோஸ்டாட் சம்பந்தமாக டெக்னீசியனிடம்
A குற்றங்குறைகளை குணமா சொல்லுபவர் :)
B எவ்வித ரெஸ்பான்ஸையும் பொறுமையா ஏற்றுக்கொள்ளும் மனபக்குவமுள்ளவர்
அதிரா :
A B இருவருமே நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் , தலைக்கனம் இல்லாதவர்கள், மரியாதையைக் கடைபிடிப்பவர்கள். A கொஞ்சம் கோபக்காரர்.
(அட வைரவா ! இதை எல்லாம் நான் கேட்டேனா! நகைச்சுவை உணர்வும் கோபமும் எங்காவது ஒன்றாக ஒரு இடத்தில் குடியிருக்குமா! கொடுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு உரையாடலில் நகைச்சுவை உணர்வு, கோபம் எல்லாம் எங்கேயிருந்து உங்க கண்ணுக்குப் பட்டது!)
===================================
A & B உரையாடலை நிதானமாக, ஆழ்ந்து படித்துப் பார்த்தால், B என்பவர், A யின் மரியாதைக்கு உரியவர். NOTE: "ங்க"
" இன்னும் கொஞ்சம் சூட்டைக் குறைச்சீங்க என்றால் நல்லா இருக்கும்."
B, என்பவர், A யின் வேண்டுகோளை, ஏற்கவோ அல்லது மறுக்கவோ செய்யக்கூடிய நிலையில் இருப்பவர்.
சூட்டைக் குறைப்பது, A யின் கட்டுப்பாட்டில் இல்லை, அல்லது A யால் செய்ய இயலாது.
அதிக எண்ணிக்கையில் யோசித்து யூகங்களை பட்டியல் இட்ட கீதா ரெங்கனுக்கு இந்த வாரப் பரிசு அளிக்கப்படுகிறது.
=============================
நெல்லைத்தமிழன் :
(REF:
உப்பு மாவுமட்டு முப்புமா வாகிடுமோ
தப்பு தான்செய்வீரோ தகையீர் - உப்பிட்ட
மிளகாய் பெருங்காயம் மணக்கத் தாளிக்க
அழகாய் இருக்கு மது.)
கவிதைல (வெண்பா) தவறு இருக்கிறதா என்று பார்த்தேன். பொருட்குற்றம். உப்புமா முன்னப் பின்ன செய்திருக்கிறாரா இல்லை ருசியாகச் செய்ததில்லையா?
அழகா யிருக்கு மது. என்ற ஈற்றடிக்குப் பதில் சுவையா யிருக்கு மது
என்று எழுதாத்தனால் வந்த சந்தேகம். கேஜிஒய் சார்...
அழகா யிருக்கு மது. என்ற ஈற்றடிக்குப் பதில் சுவையா யிருக்கு மது
என்று எழுதாத்தனால் வந்த சந்தேகம். கேஜிஒய் சார்...
மிளகா அழகா மாட்சிங்.. (அதாவது யமுனை என்கிறீர்களா? யதுகை/மோனை)
அப்றம் .....
உப்மா பற்றி உணர்வது சொலப் போக
தப்மா கப்மா சிப்மா என்பதோ
தேமா புளிமா தெரியாது நமக்கு
ஆமா காமா சோமா கவி.
ஏகாந்தன் :
உப்புமாவைப்பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்து, மது அழகாய் இருக்கு என்கிறாரே? மது நன்றாக இருந்ததா அல்லது மதுக்கோப்பை அழகாக இருந்ததா?
காலையில் காப்பிக்கு பதிலாக மதுவைக் கையிலெடுத்த அந்த போதைக் கவிஞர் யார்?
காலையில் காப்பிக்கு பதிலாக மதுவைக் கையிலெடுத்த அந்த போதைக் கவிஞர் யார்?
நிச்சயம் கவியரசில்லை.
ஏஞ்சல் :
நீங்கதான் பிரச்சினையை க்ராஸ் செக் மூலம் முடித்து வைத்தீர்கள் என்பது அந்த பெண் வீட்டாருக்கு தெரியுமா ?
ப: தெரிஞ்சிருந்தா அப்பவே ஆட்டோ அனுப்பியிருப்பாங்க! பிரச்சினையின் தீர்வு, கிராஸ் செக் மட்டும் அல்ல - அதை மாமா பெயருக்கு எழுதி, அப்பா விலாசத்திற்கு அனுப்பியதுதான்.
1,எனக்கு இந்த பாட்டு என்ன மொழி என்று தெரியணும் ?
//பல்டி பாக்குற டர்ல
வுடனும் பல்தே//
அத்துடன் இந்த வரிக்கு விளக்கமும் வேணும் ?
அப்புறம் சிம்டங்காரன் அப்படினா என்ன ?
//பல்டி பாக்குற டர்ல
வுடனும் பல்தே//
அத்துடன் இந்த வரிக்கு விளக்கமும் வேணும் ?
அப்புறம் சிம்டங்காரன் அப்படினா என்ன ?
ஹி ஹி இதெல்லாம் தமிழ்ப் பாட்டுச் சொற்களா? ஆனால் ....
இதை ஆழ்ந்து படித்துப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன.
'பல்டி' என்பது அந்தக் காலத்தில், சர்க்கஸ் கோமாளிகள் செய்து, பார்வையாளர்களைக் கவர்ந்த யுக்தி. இந்நாளில், பல்டி என்பது அரசியலிலும், சினிமாவிலும் அதிகம் காண முடிகிறது. டர்ல என்றால், ஆடையை, 'டர்'ரென்று கிழித்துக்கொள்ளும் பைத்தியக்காரன். ஆகவே, முதல் வரிக்கு அர்த்தம், 'சினிமா பார்க்கும் ரசிகன், அரசியல்வாதியை ஆராதிக்கும் தொண்டன், எல்லோரும் துணியைக் கிழித்துக் கொண்டு அல்லாடும் பைத்தியங்கள்; அவர்கள் பல் தேய்க்காதவர்கள்' என்பதாகும்.
சிம்டங்காரன் என்பது தரைமட்டமாக, போட்டி நடிகரைத் தாக்கி எழுதப்பட்ட வார்த்தைகள். விஜய டி ஆர் சமீபத்தில் என்ன சொன்னார்? 'விஜய்க்கு அடுத்து சிம்பு' என்று சொன்னார் அல்லவா? அதனால், விஜய் தன் படப்பாடலில், 'சிம்பு கடங்காரன்' என்பதை, சுருக்கி 'சிம்டங்காரன்' என்று பாடி, ஆடி இருக்கிறார்!
இதை ஆழ்ந்து படித்துப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன.
'பல்டி' என்பது அந்தக் காலத்தில், சர்க்கஸ் கோமாளிகள் செய்து, பார்வையாளர்களைக் கவர்ந்த யுக்தி. இந்நாளில், பல்டி என்பது அரசியலிலும், சினிமாவிலும் அதிகம் காண முடிகிறது. டர்ல என்றால், ஆடையை, 'டர்'ரென்று கிழித்துக்கொள்ளும் பைத்தியக்காரன். ஆகவே, முதல் வரிக்கு அர்த்தம், 'சினிமா பார்க்கும் ரசிகன், அரசியல்வாதியை ஆராதிக்கும் தொண்டன், எல்லோரும் துணியைக் கிழித்துக் கொண்டு அல்லாடும் பைத்தியங்கள்; அவர்கள் பல் தேய்க்காதவர்கள்' என்பதாகும்.
சிம்டங்காரன் என்பது தரைமட்டமாக, போட்டி நடிகரைத் தாக்கி எழுதப்பட்ட வார்த்தைகள். விஜய டி ஆர் சமீபத்தில் என்ன சொன்னார்? 'விஜய்க்கு அடுத்து சிம்பு' என்று சொன்னார் அல்லவா? அதனால், விஜய் தன் படப்பாடலில், 'சிம்பு கடங்காரன்' என்பதை, சுருக்கி 'சிம்டங்காரன்' என்று பாடி, ஆடி இருக்கிறார்!
2,பிஸிபேளா பாத், சாம்பார் சாதம் ..இவை இரண்டில் எது உங்கள் சாய்ஸ் ?
ப: பிஸிபேளா பெயர் மட்டும்தான் கவர்ச்சி. செய்முறை கடினம். சுவையில் அப்படி ஒன்றும் சுகம் இல்லை. இந்த இரண்டில் சா சாதத்திற்கு ஆதரவாகத்தான் என் வோட்டு. பி பா வுக்கு நாட்டு.
3,கனவுகள் பின்னால் வரப்போவதை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கின்றனவா ?
கனவுகள் முன்பதிவுகளின் தாக்கம் என்கிறார்கள்.
4,SELFIE கலாச்சாரம் அவசியமா ?
சில சமயம் செல்ஃபி ஒரு சந்தோஷம்தான்.
5, ராஜிவ் அவர்களின் மகள் பெயர் ப்ரியங்கா அப்புறம் சுஜாதா அவர்களின் பிரிவோம் சந்திப்போம் கேரக்டர் மதுமிதா போன்ற பெயர்களை தாக்கம் மற்றும் செலிப்ரிட்டி காரணங்களால் அந்தந்த காலத்தில் மக்கள் வைச்சாங்க இப்போ அந்த மாதிரி சமீபத்தில் அதிகமாக வைக்கும் பெயர்கள் என்ன ?
ராஜீவ் அவர்களின் மகன் பெயர், மகள் பெயர் எல்லாம் ராஜீவின் காலத்திற்குப் பிறகுதான் பிரபலமாயின. ஆனால் பிரியங்கா என்ற பெயர் அதற்கு பல வருடங்களுக்கு முன்பே வைக்கப்பட்டது உண்டு. பிரியங்காவுக்குக் கூட பூர்வாசிரமப் பெயர் பியங்கா என்று எங்கோ படித்த ஞாபகம்.
அது போலத்தான் மதுமிதா என்ற பெயரும். மதுமிதா, மதுபாலா போன்ற பெயர்கள் ஆந்திராவிலும், வடநாட்டிலும் அதிகம். அவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் தமிழ் நாவல்கள் படித்தவர்களாக இருக்கமுடியாது!
6, அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கும் முக்கிய காரணி எது ?
சுய பரிசோதனை.
7, அறிவு ,ஞானம் இரண்டும் ஒன்றா வெவ்வேறா ?
அறிவு பயன் படுவது ஞானம் அமைதி தருவது.
8,ஒருவரின் குணம் சார்ந்த இயல்பு அல்லது வளர்ப்பு இதில் எது முக்கியப்பங்கு வகிக்கிறது ?
பிறக்கும்போது பிளாங்கா பிறக்கிறோம் வளர்ப்புதான் நம்மை செதுக்குகிறது என்பது உண்மையா ?
கற்பதில் திறன் ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்தால் டிசைனிலும் சூட்சுமம் இருப்பதாகத் தோன்றுகிறது.
9,ocd ,aat டிஸ்லெக்சிக் போன்றவைப்பற்றி சமீப வருடங்களாக நம் நாட்டில் அதிகம் பேசுகிறார்களே இது வெளிநாட்டு /சோஷியல் மீடியாக்கள் தாக்கமா ? அல்லது உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஏற்பட்ட மாற்றமா ?
ஹி ஹி! எனக்கு DOG டாக், CAT கேட் தான் தெரியும்! OCD AAT எல்லாம் தெரியாது!
10, குடும்பம் ,உறவினர்கள் இவற்றுக்கு வித்தியாசம் என்ன ?
அன்றாடம் குடும்பம் ஆபத்துக்கு உறவினர்.
அதிரா :
யாரையாவது நேரில் சந்திக்கோணும் எனும் பேராசை உண்டோ? அல்லது அப்படி பைத்தியமாக இருந்து அவர்களை சந்திக்க முன் அவர்கள் போய் விட்டால்கூட சொல்லலாமே.. உதாரணம் எங்கட கண்ணதாசன் அங்கிளும் நானும்போல:)
தி ஜானகிராமனை சந்திக்கத் தவறியது பெருங்குறையாக உணர்ந்ததுண்டு.
“திருவாரூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்.. ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன் முக்கால் இருப்பதைப் பாருங்கள்”..
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?
இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்?
எண்டே குருவாயூரப்பா! ஈ பெண்குட்டி ஞின்னே சடனாயிட்டு திருவாரூருக்கு டிரான்ஸ்ஃபர் செஞ்ஞு! ஞான் எந்தா பரஞு ... !
கால்நடைகள் எனச் சொன்னால் மிருகங்களைப் பற்றியே நினைக்கிறோமே? ஏன் மனிசர்களும் காலாலதானே நடக்கிறோம்ம்?
நாலு கால்களால் ஒரு மிருகம் நடக்கிறது. அதனால் 1/4 நடை. One walks with 4 legs. நாம் இரண்டு கால்களால் நடக்கிறோம். அதனால் 1/2 நடை. நாம் எல்லோரும் கால்நடை இல்லை அரை மனிதர்கள். ஆடை அணிந்திருப்பதால், முழு மனிதர்கள். (ஆடை இல்லாதவன் அரைமனிதன்.) மிருகங்கள் ஆடை அணிந்தால், அரை(நடை) மிருகம் ஆகிவிடும்!
வளவளவெனப் பேசுவோரில் விசயமில்லை.. வெள்ளாந்திகள், ஆனா மெளனமாக இருப்போர் விசயகாரர் என ஒரு பொதுக் கருத்துண்டு.. இது எவ்ளோ தூரம் உண்மை? அனுபவத்தில சொல்லுங்கோ.
இருப்பின்றி அதிகம் பேசுவோர் மிகப் பலர்.
ரேவதி நரசிம்ஹன் :
வாழ்க்கையில் இக்கட்டான சூழ்னிலையில் இருக்கும் போது,
இதுவும் கடக்கும் என்பதை எத்தனை நாள் நம்புவது?
இதுவும் கடக்கும் என்பதை எத்தனை நாள் நம்புவது?
கஷ்டம்தான். என்றாலும் கடந்த கால பெரும் பிரச்சினைகள் காலக் கிரமத்தில் நீர்த்துப் போன உண்மை சிறு ஆறுதல் தரக்கூடும்.
கீதா ரெங்கன் :
எனக்குத் தெரிந்தவரை அதாவது சிறு வயது முதல் வளர்ந்த வரை கோயில்களில் பிரசாதம் என்பது கோயில் மடப்பள்ளியில் செய்து அதை இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதுதான். எங்கள் ஊரில் கோயிலில் வீட்டிலிருந்து அரிசி வெல்லம் நெய் எல்லாம் கொடுத்து அரவணை செய்து ஊருக்கே விநியோகம் செய்வதுண்டு முன்பு. அப்படிச் சாப்பிட்ட நினைவுகள். ஆனால் இப்போது அப்ப்டி ஃப்ரீயாக இறைவனுக்குப் படைக்கப்படும் மடப்பள்ளி பிரசாதம் வினியோகிப்பதாகத் தெரியவில்லை. ஸ்டால்கள் போட்டுவிட்டார்கள்.ஸ்டால்களில் விற்கப்படும் பிரசாதம் எனப்படுவது இறைவனுக்குப் படைக்கப்பட்டு விற்கப்படுகிறதா? அதுவும் தோசை வித் மிளகாய்ப்பொடி என்று ஹோட்டல் போல விதம் விதமாக!..
ஆம். கோயில்கள் வர்த்தகஸ்தலங்கள் ஆனது, வருத்தத்துக்குரிய நிலைதான்.
பிரசாத விற்பனைக் கூடம் ஒரு சுமாருக்கும் கீழான பட்சணக் கடையாகவே பெரும்பாலும் இருக்கிறது.
ஆம். கோயில்கள் வர்த்தகஸ்தலங்கள் ஆனது, வருத்தத்துக்குரிய நிலைதான்.
இந்தவாரக் கேள்வி :
ஒரு நண்பரைச் சந்திக்க, வெளியூர் செல்கிறீர்கள். அந்த நண்பர் உங்களை வரவேற்றுவிட்டு, சற்றுநேரம் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். பிறகு, தான் ஒரு டின்னர் பார்ட்டிக்கு செல்வதாகவும், நண்பர்களை உடன் அழைத்துவர டின்னர் பார்ட்டி கொடுப்பவர் ஓ கே சொல்லிவிட்டதால், உங்களையும் அழைத்துச் செல்கிறார். அந்த ஊரில், உங்களுக்கு, அவரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. வேறு வழியில்லை, நீங்கள் அவரோடு சென்றுதான் ஆகவேண்டும் என்னும் சூழ்நிலை.
டின்னர் பார்ட்டி ஹால்.
உங்களுக்கு, உங்கள் நண்பரைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
நீங்கள்,
1) நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீங்களும் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஒன்றும் பேசாமல் அல்லது ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவீர்களா?
2) ஏதேனும் ஒரு மூலையில் நின்றுகொண்டு, நடக்கின்ற நிகழ்வுகளை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பீர்களா?
3) கலகலப்பாக, எல்லோரிடமும் சிரித்த முகத்துடன், வலியச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு கலந்து பேசுவீர்களா?
4) மேலும் நிறைய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி, நண்பர்கள் பட்டியலை விரிவுப் படுத்துவீர்களா?
5) கூட்டத்தில் உங்களைப் போன்று தனியாக நிற்கும் ஏதேனும் ஒருவரைக் கண்டுபிடித்து, அவரோடு மட்டும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருப்பீர்களா?
6) பார்ட்டி ஹாலில் ஒவ்வொருவரும் ஒரு ஜோக் அல்லது பாட்டுப்பாட வேண்டும் என்று டின்னர் விருந்து அளிப்பவர் கூறினால், அதை ஏற்று, உங்கள் முறை வரும்பொழுது, ஜோக் / பாட்டு அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் சுவையான சம்பவம் பற்றிப் பேசுவீர்களா?
அல்லது யார் கண்ணிலும் அகப்படாமல், நழுவிவிடுவீர்களா?
7) இவற்றை எல்லாம் தவிர, வேறு ஏதாவது செய்வீர்களா?
(பி கு 1: தேவையான இடங்களில், வாசகிகள், நண்பி, நண்பியின் நண்பி கொடுக்கும் பார்ட்டி என்று கொள்க! வாசகர்கள் செல்லும் பார்ட்டி ஆண்களுக்கான பார்ட்டி என்றும், வாசகிகள் செல்லும் பார்ட்டி, பெண்களுக்கு மட்டுமான பார்ட்டி என்றும் வைத்துக்கொள்வோம்.
பி கு 2: நண்பர்கள் / நண்பிகள் கிடையாது, நண்பரோடு / நண்பியோடு பார்ட்டிக்கெல்லாம் போகமாட்டேன் என்பது போன்ற பதில்கள் வேண்டாம். போயாச்சு. அப்புறம் என்ன? என்பதுதான் கேள்வி! )
==============================
அனுஷ்கா உடல் இளைப்பு பயிற்சிக்காக ஆஸ்திரியா நாட்டுக்குச் சென்றுள்ளதால், இந்தவாரமும் இங்கு ஆப்சென்ட். ஒரு நாளைக்கு பயிற்சிக்கு ஒரு லட்ச ரூபாயாம்! பதினைந்து நாளுக்கு பதினைந்து லட்சம் + பயண செலவு எல்லாம் செய்வதைவிட. பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம் என்று சொல்லி, பட்டினி கிடந்தாலே பாதி தமன்னா ஆகியிருக்கலாமே!
ஹூம்! எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் !
================================
டின்னர் பார்ட்டி ஹால்.
உங்களுக்கு, உங்கள் நண்பரைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
நீங்கள்,
1) நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீங்களும் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஒன்றும் பேசாமல் அல்லது ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவீர்களா?
2) ஏதேனும் ஒரு மூலையில் நின்றுகொண்டு, நடக்கின்ற நிகழ்வுகளை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பீர்களா?
3) கலகலப்பாக, எல்லோரிடமும் சிரித்த முகத்துடன், வலியச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு கலந்து பேசுவீர்களா?
4) மேலும் நிறைய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி, நண்பர்கள் பட்டியலை விரிவுப் படுத்துவீர்களா?
5) கூட்டத்தில் உங்களைப் போன்று தனியாக நிற்கும் ஏதேனும் ஒருவரைக் கண்டுபிடித்து, அவரோடு மட்டும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருப்பீர்களா?
6) பார்ட்டி ஹாலில் ஒவ்வொருவரும் ஒரு ஜோக் அல்லது பாட்டுப்பாட வேண்டும் என்று டின்னர் விருந்து அளிப்பவர் கூறினால், அதை ஏற்று, உங்கள் முறை வரும்பொழுது, ஜோக் / பாட்டு அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் சுவையான சம்பவம் பற்றிப் பேசுவீர்களா?
அல்லது யார் கண்ணிலும் அகப்படாமல், நழுவிவிடுவீர்களா?
7) இவற்றை எல்லாம் தவிர, வேறு ஏதாவது செய்வீர்களா?
(பி கு 1: தேவையான இடங்களில், வாசகிகள், நண்பி, நண்பியின் நண்பி கொடுக்கும் பார்ட்டி என்று கொள்க! வாசகர்கள் செல்லும் பார்ட்டி ஆண்களுக்கான பார்ட்டி என்றும், வாசகிகள் செல்லும் பார்ட்டி, பெண்களுக்கு மட்டுமான பார்ட்டி என்றும் வைத்துக்கொள்வோம்.
பி கு 2: நண்பர்கள் / நண்பிகள் கிடையாது, நண்பரோடு / நண்பியோடு பார்ட்டிக்கெல்லாம் போகமாட்டேன் என்பது போன்ற பதில்கள் வேண்டாம். போயாச்சு. அப்புறம் என்ன? என்பதுதான் கேள்வி! )
==============================
அனுஷ்கா உடல் இளைப்பு பயிற்சிக்காக ஆஸ்திரியா நாட்டுக்குச் சென்றுள்ளதால், இந்தவாரமும் இங்கு ஆப்சென்ட். ஒரு நாளைக்கு பயிற்சிக்கு ஒரு லட்ச ரூபாயாம்! பதினைந்து நாளுக்கு பதினைந்து லட்சம் + பயண செலவு எல்லாம் செய்வதைவிட. பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம் என்று சொல்லி, பட்டினி கிடந்தாலே பாதி தமன்னா ஆகியிருக்கலாமே!
ஹூம்! எனக்கெதுக்கு ஊர் வம்ஸ் !
================================
வாழ்க வளமுடன்...
பதிலளிநீக்குஅன்பின் Kgg, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஎல்லாமே நன்றாக இருக்கின்றன. நான் இப்படி அழையா விருந்தாளியாகச் சில இடங்களுக்குப் போய் அவமானம் அடைந்ததும் உண்டு. நல்ல வரவேற்புப் பெற்றதும் உண்டு. அது விருந்து கொடுப்பவரின் சுபாவத்தைப் பொறுத்து. இங்கே விருந்து கொடுப்பவர் நண்பர்கள் அறியாதவராய் இருந்தாலும் அழைத்து வரலாம் எனச் சொல்லி இருப்பதால் கூடியவரை நல்ல வரவேற்பே கிட்டி இருக்கும். பல புதிய அறிமுகங்களையும் பெற்றிருக்கலாம். புது இடத்துக்கு வந்திருக்கும் உணர்வு இல்லாமல் போயிருக்கவும் வாய்ப்பு உண்டு. என்னைப் பொறுத்தவரை இம்மாதிரிப் போனால் அங்கே நிலவும் சூழ்நிலையைப் பார்த்து அதற்கேற்றாற்போல் நடந்துப்பேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இன்று வருவது கடினம்.
பதிலளிநீக்குமனிதன் எண்ணத்தினால் செலுத்தப்படுகிறான். விலங்குகள் தம் கால் போன போக்கில் செல்கின்றன. இங்கு போகலாம் இங்கு போக்க்கூடாது என்ற மனக்கட்டுப்பாடு இல்லை. கட்டுப்பாடு இல்லாத்தால் அவை கால்நடைகள்.
நெல்லை... என்ன இது? தத்துவ மழை!
நீக்குநெ.த.அவர்களின் த.மழை ஸூப்பர்.
நீக்குஆஆஆஆஆ இதைத்தான் பதில் தெரியும் என நெல்லைத்தமிழன் அன்றே சொன்னாரோ?:) அவ்வ்வ்வ்:).. நன்றி நன்றி.
நீக்குஎன்னைப்பொறுத்து புதன் கிழமைக் கிழவி பதில் சே..சே.. கேள்வி பதில் என்பது சீரியசாக இருக்காமல் சரியோ தப்போ நகைச்சுவை கலந்திருந்தால் மகிழ்ச்சியே... அந்த வகையில் குடுக்கப்படும் அனைத்துப் பதில்களும் நம்மைச் சிரிக்க வைக்கும் வண்ணம் இருப்பதையே மீ விரும்புவேன்..
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்கு//அனுஷ்கா உடல் இளைப்பு பயிற்சிக்காக // ரொம்ப முக்கியம்! :P :P :P
பதிலளிநீக்குஅதிராவின் அங்கிள்வேறு ‘கண்போன போக்கிலே..கால்போன போக்கிலே..’ என்றெல்லாம் பாடியிருக்கிறார்! இருந்தும், கால்நடை விஷயத்தில் அதிராவின் கேள்விக்கு கணிதநடையில் இப்படியா அசடு வழிவது?
பதிலளிநீக்குமேலே, நெ.த.வின் பதில் 'on the dot’ -ஆக இருப்பதை கவனித்தீரா, இல்லையா?
தமிழ்பாட்டின் விளக்கம் படித்து சிலிர்த்து விட்டது.
பதிலளிநீக்கு"அனுஷ்கா உடல்பயிற்சிக்கு வெளிநாடு"
இந்த வாழ்க்கையை கொடுத்தது கஞ்சிக்கு வழியில்லாத ஜென்மங்கள். தியேட்டரில் போய் பணத்தை கொட்டுவதால்தான்.
//கஞ்சிக்கு வழியில்லாத ஜென்மங்கள். தியேட்டரில் போய் பணத்தை கொட்டுவதால்தான்.///
நீக்குஹா ஹா ஹா உண்மைதான், ஏன் அவர்களுக்கு எந்த சிந்தனையுமே வரமாட்டேன் என்கிறதேஎ.. சில குடும்பங்களில் வீட்டில் சமைக்கவே பணமிருக்காதாம், ஆனா தங்கள் அபிமான நடிகர் என பணம் கொடுத்து படம் பார்ப்பார்களாம்.. இவர்களுக்கு அறிவு எங்கே போயிட்டுது எனத்தான் நானும் நினைப்பேன்...
பல்டி, சிம்டங்காரன் போன்ற அழகுதமிழ் வார்த்தைகளுக்கு உங்களது விளக்கம் இருக்கிறதே - அடடா! உங்களை எங்கேயோ கொண்டுபோய் உட்காரவைத்துவிட்டதே! அடுத்த ’கலைமாமணி’ பட்டம் உங்களுக்கேதானோ?
பதிலளிநீக்குசிம்பு + கடன்காரன் = சிம்டங்காரன் செம.
பதிலளிநீக்குபகிர்வு அருமை
நானெல்லாம் ஓரமாய் நின்னு வேடிக்கை பார்ப்பவன்தான்.
கை தட்டினால் போதும்!
நீக்குகீதா ரங்கன் - 'ஹோட்டல் போல் வித விதமாக' - இப்படி நினைக்கத் தேவையில்லை. பதில்ல சொல்லியிருக்கிற, 'வியாபாரத் தலமாகிவிட்டது' என்றும் சொல்லத் தேவையில்லை. கோவிலுக்கு என்று வருமானம் அவசியம். அதை இந்த மாதிரி பிரசாதக் கடைகளுக்கு விடுவதன்மூலம் கொஞ்சம் பணம் திரட்டுகிறார்கள். கோவிலுக்குப் போகிறவர்களுக்கு அங்கு கிடைக்கும் உணவு கொஞ்சம் ஆத்ம திருப்தியைத் தரலாம்.
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன்பு, வெளிப்பிரகாரத்தில் திருப்பதியில், பிரசாதம் சில சமயங்களில் அர்ச்சகர்கள் விற்பார்கள் (2 ரூபாய்க்கு தோசை, வெண்பொங்கல் என்பதுபோல). பிறகு இதை நாயுடு முதலமைச்சராக இருக்கும்போது மாற்றிவிட்டார்.
ஒரு கோவிலில் ஆகம ரீதியான வேலைகளை (தினமும்) செய்ய நிறைய பணியாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான நிதி ஆதாரம்தான் பிரசாத ஸ்டால்கள் போன்றவை என்று நான் நினைத்துக்கொள்வேன்.
இன்னும் சப்பாத்தி குருமா போன்றவை வரவில்லை என்பது உண்மைதான். அது நம் பாரம்பர்யம் இல்லையே. துபாயில் சிவன் கோவிலில் ரொட்டி சென்னா சாப்பிட்டிருக்கிறேன். (வெள்ளிக்கிழமை மாலை கிடைக்கும்)
ஆஆஆஆஆஆஆ மீ வந்திட்டேன்ன் என் பரிசெங்கே? என் பரிசெங்கே?.. என்னாதூஊஊஊஊஊ பரிசு அதிராவுக்கு இல்லையோ?:) ஆசை தோசை அப்பளம் வடை என்றெல்லாம் சொன்னாரே கெள அண்ணன்:) மொத்தமாக ஏமாத்திப் போட்டாரோ?:)).. இருப்பினும் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாமல் விழும் ஜாதியாக்கும் எங்க ஜாதி:) அதாவது லேடீஸ் ஜாதியைச் சொன்னேன்:))..
பதிலளிநீக்குஇம்முறை பரிசு எம்பாலாருக்கே என்பதில் மிகவும் புழகாங்கிதம்:)).. ஆவ்வ்வ் எப்பூடி என் டமில்?:) இது அஞ்சுவுக்குப் புரியாதாக்கும் பிக்கோஸ் அவோக்கு டமில்ல டி இல்லை:)) ஹா ஹா ஹா... கீதாவுக்கு வாழ்த்துக்கள்.. என்ன பரிசெனச் சொல்லவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்:)).
//ழகாங்கிதம்:)).. ஆவ்வ்வ் எப்பூடி என் டமில்?:) இது அஞ்சுவுக்குப் புரியாதாக்கும் //
நீக்குஹலோ கம்ப பாரதி :) அது புளகாங்கிதம் ..முதல்ல ழ ள படிங்க ..தமிழில் டீ குடித்த ஞானியே
சே..சே.. இந்த ழ/ள எப்பவுமே என் இமேஜ் ஐ டமேஜ் ஆக்கிடுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மோடி அங்கிளிடம் மனுக்குடுக்கச் சொல்லியும் கீசாக்கா குடுக்கல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
நீக்குhttps://tse1.mm.bing.net/th?id=OIP.PleTBCEjSTfH-ol1XPZlAQHaEu&pid=15.1&P=0&w=262&h=168
//நகைச்சுவை உணர்வும் கோபமும் எங்காவது ஒன்றாக ஒரு இடத்தில் குடியிருக்குமா!// என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட பலர் ஷார்ட் டெம்பர்ட் ஆக இருப்பார்கள். அவர்கள் கோபத்தை கூட நகைச்சுவையாக வெளிப்படுத்துவார்கள். அதற்காக கோபக்காரர்கள் எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. குழப்பி விட்டேனோ?
பதிலளிநீக்கு///உங்களுக்கு, அவரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. வேறு வழியில்லை, நீங்கள் அவரோடு சென்றுதான் ஆகவேண்டும் என்னும் சூழ்நிலை.
பதிலளிநீக்கு//
இது கரெக்ட்டா எனக்கு அமைஞ்ச சந்தர்ப்பம் ஆகவே இருக்கு. போன தடவை கனடா போனபோது என் அண்ணியின் பழைய மாணவர் கெட்டுக்கெதர் நடந்தது பெரிசா ஒரு ஹோலில்.. அப்போ என்னையும் வரச் சொன்னா.. எனக்கு யாரையும் தெரியாது, ஆனா அண்ணி பேசும்போது சொன்னதிலிருந்து, சில நண்பிகளைத் தெரியும் அவ்ளோதான்.. நானும் அதுக்குப் போயிருந்தேன்... இதன் பதிலை உங்கள் கேள்வி பதில்லேயே சொல்கிறேன்.
//உங்களுக்கு, உங்கள் நண்பரைத் தவிர வேறு யாரையும் தெரியாது.
பதிலளிநீக்குநீங்கள்,
1) நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீங்களும் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஒன்றும் பேசாமல் அல்லது ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவீர்களா?///
சத்தியமாக இல்லை, அங்கு போனதும் வட்டம் வட்டமாக எங்கும் மேசை கதிரை போடப்பட்டிருக்கும்தானே, அப்போ அண்ணியின் நெருங்கிய நண்பிகள் ஒரு கூட்டம் வந்து இருப்பார்கள்.. அவர்களே என்னை கதை கேட்பார்கள்.. என்னோடு வந்து பேசுவோரோடு மட்டும் நன்கு ஸ்மைல் பண்ணி பதில் சொல்லுவேன் அவ்ளோதான்.. எழும்பி நடக்க மாட்டேன் சான்ஸ்சே இல்லை:))
//2) ஏதேனும் ஒரு மூலையில் நின்றுகொண்டு, நடக்கின்ற நிகழ்வுகளை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பீர்களா?//
பதிலளிநீக்குஅப்படி இல்லை, என்னைப்பொறுத்து மேக்கப் பண்ணி வெளிக்கிட்டாலே ஒரு புது நம்பிக்கை தைரியம் வந்ததுபோல உணர்வேன், அதனால மூலையில் எல்லாம் ஒதுங்க மாட்டேன்ன்.. எனக்கென இடம் பிடித்த கதிரையில் இருந்து ரசிப்பேன்... தைரியமாக உசாராக இருப்பேன்.
https://i.ytimg.com/vi/M7PVxWtPtNw/hqdefault.jpg
நீக்குungalukku make up podumpothu eduthathu :)
//3) கலகலப்பாக, எல்லோரிடமும் சிரித்த முகத்துடன், வலியச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு கலந்து பேசுவீர்களா?//
பதிலளிநீக்குநான் என் வாழ்க்கையில் யாரோடுமே வலியச் சென்று பேசியதே கிடையாது ஹா ஹா ஹா ஏதோ பயம் கூச்சம் என்னமோ தெரியாது.. ஆனா என்னைப்பார்ப்போரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பேன், அதனாலேயே பலர் எழும்பி வந்து கதை கேட்பினம் ஹா ஹா ஹா.
//3) வலியச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு கலந்து பேசுவீர்களா?//
பதிலளிநீக்குசத்தியமாக இதுக்குச் சான்ஸ்சே இல்லை:))
//5) கூட்டத்தில் உங்களைப் போன்று தனியாக நிற்கும் ஏதேனும் ஒருவரைக் கண்டுபிடித்து, அவரோடு மட்டும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருப்பீர்களா?//
பதிலளிநீக்குசே..சே.. இது என்ன கேள்வி.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா.
//6) பார்ட்டி ஹாலில் ஒவ்வொருவரும் ஒரு ஜோக் அல்லது பாட்டுப்பாட வேண்டும் என்று டின்னர் விருந்து அளிப்பவர் கூறினால், அதை ஏற்று, உங்கள் முறை வரும்பொழுது, ஜோக் / பாட்டு அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் சுவையான சம்பவம் பற்றிப் பேசுவீர்களா? //
பதிலளிநீக்குஇல்ல மீ ரொம்ப ஷை ஆக்கும்:)).. ஆகவும் அழைத்தால் ஏதும் கூட்டமாக விழையாடும் விழையாட்டுக்கு ஒருவேளை போவேனே தவிர மற்றும்படி நோ சான்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா.
//7) இவற்றை எல்லாம் தவிர, வேறு ஏதாவது செய்வீர்களா? //
பதிலளிநீக்குஎன் நண்பியை படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.. அவவுக்கு காட்ட.. அவ பேசுவோரோடெல்லாம் அப்படியே படமெடுத்துக் காட்டுவேன், அங்கு நடக்கும் புரோகிராம்ஸ் ஐ, எழும்பி போய் நின்று படமெடுப்பேன் அதுக்கெல்லாம் கூச்சப்பட மாட்டேன்...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆஅ பதில் சொல்லிட்டேன்ன் டக்கெனப் பரிசைத்தாங்கோ:))
//அனுஷ்கா உடல் இளைப்பு பயிற்சிக்காக ஆஸ்திரியா நாட்டுக்குச் சென்றுள்ளதால்//
பதிலளிநீக்குமெலிஞ்சு போய் சென்னை திரும்பியபின்.. ஸ்ரீராமைப் பார்த்து “அண்ணாஆஆஆஆஆ” என அழைச்சாலும் அழைக்க வாய்ப்பிருக்கு:)) ஹா ஹா ஹா எதுக்கும் வெயிட் அண்ட் சீ:))
அமெரிக்கன் நிஞ்சா வாரியர் ப்ரோக்ராமில் எல்லாவற்றையும் கடந்து, கடைசியில் நேரத்துக்குள் பஸ்ஸரை அழுத்த மறந்த கேன்டிடேட் போல ஆகிட்டீங்களே அதிரா. ஶ்ரீராமை அவர் அண்ணா என்று அழைப்பார் என்று சொன்னதன்மூலம் பரிசு உங்களுக்குக் கிட்டாதபடி செஞ்சுட்டீங்களே.
நீக்கு//ஶ்ரீராமை அவர் அண்ணா என்று அழைப்பார் என்று சொன்னதன்மூலம் பரிசு உங்களுக்குக் கிட்டாதபடி செஞ்சுட்டீங்களே.///
நீக்குஹையோ ஆண்டவா இப்பூடியும் ஒன்று உள்ளுக்குள்ள இருப்பது தெரியாமல் போச்சே:)) ஹையொ இனி வாபஸ் வாங்கவும் முடியாதே:)).. சரி நெல்லைத்தமிழன் எனக்குப் பரிசு கிடைக்காட்டிலும் பறவாயில்லை:) மனசைக் கல்லாக்கிடுறேன்:))..
ஆனா அனுக்கா வந்து...., அண்ணா எனக் கூப்பிட வைக்கோணும்:)) ஹா ஹா ஹா..
அதனால் என்ன... அழைச்சுட்டுப் போகட்டுமே... நம்ம அனுஷ்கா சர்மா தானே?
நீக்கு///நம்ம அனுஷ்கா சர்மா தானே?///
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது என் பக்கத்தில் போகும்.. ராகுல் - சோனியா கதையைப்போல மாத்திப்போட்டீங்களே:))
ஷ்ஹ்ஹ் :) அண்ணா இல்லை அங்கிள்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்னு நினைச்சி பார்த்தேன் :)
நீக்குநோஓஓஓஓஓஒ அஞ்சு வாணாம் வாணாம்ம்ம் அங்கிள் எண்டால் டமில்ல மாமா எல்லோ ஹா ஹா ஹா:)
நீக்குஇல்லை அங்கிள்னா தமிழில் பெரியப்பா :)
நீக்குஎன் கேள்விக்குப் பதில் சொன்னதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.
இங்கே தெரியாதவர்கள் வீட்டுக்குப் போகும் சந்தர்ப்பம் அதிகம்.
அனைவருமே நட்புடன் பழகுவதால் நமக்கும் சுலபம்.
அழையா விருந்தாளி என்று தெரிந்ததும் வயதுக்கு மரியாதை கொடுப்பார்கள். நாமும் சிரித்த முகமாக இருந்தால்
நேரம் சுலபமாகச் செல்லும்.
பாடும் வாய்ப்பு அனேகமாக எல்லா இடங்களிலும் உண்டு.
இள வயதில் அதெல்லாம் சிரமமாக இருந்த காலமும் உண்டு.
அனைத்தும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமுன்னே பின்னே தெரியாதவர் வீட்டுக்கு போக நேர்ந்தாலும் எப்படியாவது பேச ஆள் கிடைத்துவிடும்.அவர்கள் குழந்தைகள். குழந்தைகள் வேற்று முகம் பார்க்காமல் நம்முடன் விளையாடும். அப்புறம் குழந்தையின் அம்மா பேசுவார் அப்படியே நிறைய பேர் பேசிவிடுவார்கள்.
நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவேன். அவர்களும் நன்றாகப் பேசுகிறார்கள் என்றால், நண்பரை விட்டுவிட வேண்டியதுதான். புதிய நண்பர்கள் ஏற்படுத்த ஒரு வாய்ப்பாகவே பார்ப்பேன். குழந்தைகள் இருந்தால் அவர்களுடனும் பேசுவேன். தனியாக நிற்பவரைப் பார்த்தால், அட நம்மைப் போல என்று எண்ணிப் பேச முயல்வேன். அவர்கள் வரவேற்பினைப் பொறுத்து உரையாடல் தொடர்வது. பாட மாட்டேன், ஜோக் சொல்லலாம்...வேறேதும் விளையாட்டுகள் இருந்தால் பங்கெடுப்பேன். வயதானவர்களிடமும் விசாரித்துப் பேசுவேன். பேச ஒன்றும் இல்லை என்று சொல்லமுடியாது, மழையா? வெயிலா? என்று பேசலாம்..
பதிலளிநீக்குநல்ல முயற்சி ஸ்ரீராம். காலையில் பார்த்ததும் பங்கெடுக்க ஆசை, உடனே எழுத முடியாமல் மீண்டும் இப்பொழுது வந்தேன்.
பதிலளிநீக்குநண்பர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று வாசிப்பதும் நன்றாக இருக்கிறது. நன்றி
1,காரணமேயில்லாம ஒருவர் மீது அல்லது எதோ ஒன்றின் மீது வெறுப்பு வருவதன் காரணம் என்ன ? அப்படி சமீபத்தில் உங்களை வெறுப்படைய வைத்தது என்ன ?
பதிலளிநீக்கு2,அட இவருக்குள்ளும் இப்படி புன்னகைக்கவைக்கும் நகைச்சுவை உணர்வா ? நற்குணங்களா என்று ஆச்சர்யப்படுத்தியவர்கள் உண்டா ?அது யார் ?
3,பப்புவுக்கு எப்போ கல்யாணம் :) ?
எந்த பப்புன்னு கேள்வி கேக்க கூடாது ..
4, சிலருடைய கருத்துக்கள் biased /ஒருபக்க சார்புடையதாக இருக்கும்போது உங்கள் மனநிலை என்ன ?
5,அந்த காலத்து ராஜா ராணிங்க காலை காப்பிக்குப்பதில் என்ன குடிச்சிருப்பாங்க ?
6,அப்பாடா தப்பிச்சோம்னு நினைச்ச சம்பவம் எது ?
7,அன்புமணி /லவ்பெல் , பனிவீடு குமார் /ஐஸ்ஹவுஸ் குமார் ,இப்படி யாருக்காவது அடைமொழி வச்சிருக்கீங்களா ?
யாராவது உங்களுக்கு அப்படி அடைமொழி வைச்சிருக்காங்களா ?
8,சிம்டங்காரனுக்கு மிக அருமையாக விளக்கம் அளித்ததால் இன்னும் எனக்கு புரியாத வார்த்தைகளுக்கு கோனார் நோட்ஸ் மீனிங் /விளக்கவுரை வேண்டுகிறேன் :) ??
லொள்ளு ??
அல்லு ?
அசால்ட்டு ?
கேப்மாரி ?
சோப்லாங்கி ?
தற்சமயம் நினைவுக்கு வந்தவை இவை ..டவுட்ஸ் தொடரும் :)
9, 96 பார்த்தாச்சா எப்போ ரீ யூனியன் ?
10, அரை டிக்கட் வாண்டுகளிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் கேள்விகளுக்கு திணறியதுண்டா ?
அப்படி உங்களை அசர அலற வைத்த வாண்டின் கேள்வி என்ன ?
11,நம்மை சுற்றி எப்போதும் இவர்கள் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைத்ததுண்டா ?
அப்படி நினைக்க வைத்தவர்கள் யார் ???
12, உங்களுக்கு மிகவும் பிடித்த quote என்ன ? அதற்கு காரணம் ?
13, பயத்துக்கும் பலவீனத்துக்கும் தீனி போட்டு வளர்ப்பவர் அல்லது நம்பிக்கைக்கும் கனவுகளையும் வளர்ப்பவர் இவற்றில் நீங்கள் யார் ?
14, மனசுக்கு நிம்மதியும் அமைதியும் தந்தது /தருவது எது ?
15, அட இது சூப்பர் ஐடியானு நீங்களே உங்கள் கண்டுபிடிப்பை பற்றி வியந்திருக்கிறீர்களா ?
அந்த ஐடியா எது ?
16, அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன ?
நீக்கு//லொள்ளு ??
நீக்குஅல்லு ?
அசால்ட்டு ?
கேப்மாரி ?
சோப்லாங்கி ?//
ஓ மை கடவுளே.. வரும் புதன் கிழமை எங்கள் புளொக்குக்கு விடுமுறை பிக்கோஸ் கெள அண்ணனுக்குக் காச்சல் வரும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன:).
//9, 96 பார்த்தாச்சா எப்போ ரீ யூனியன் ?//
நீக்குஹா ஹா ஹா அவர் டமில்ப்படமே பார்க்கிறதில்லையாம்:)) இதில நைன்ரி சிக்ஸ் ஆஆஆஆஆஅ ஹா ஹா ஹா :)) ஸ்ரீராமுக்கே ஹெட் சுத்தப்போகுது:)
அவர் லீவ் போட்டா அடுத்த வாரம் 20 கேள்விகள் கேட்பேன் அதுவுஅத்தனையும் சென்னப்பட்டணத்து இலக்கிய மொழி பற்றி
நீக்குஎனது தத்து பித்து அச்சு பிச்சு கேள்விகளுக்கெல்லாம் அழகான பதில் அளித்தமைக்கு நன்றி :)
பதிலளிநீக்குஅதுவும் சிம்டங்கரனுக்கான விளக்கத்தை படிச்சு மைக்ரேன் மைக்ரேட் ஆகிடுச்சின்னா பார்த்துக்கோங்க :)
அந்த உத்வேகத்தில் இன்னிக்கு 15 கேள்விகளை தொடுத்தாச்சு :)
/1) நண்பரோடு சேர்ந்து, பார்ட்டி ஹாலில் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் நீங்களும் சென்று, அவர் யாரோடெல்லாம் பேசுகிறாரோ அவர்களோடு ஒன்றும் பேசாமல் அல்லது ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவீர்களா?//
பதிலளிநீக்குநண்பரே பிசியா இருப்பார் அதனால் அவர் பின்னால் பூனைகுட்டிபோல் செல்லமாட்டேன்
6) பார்ட்டி ஹாலில் ஒவ்வொருவரும் ஒரு ஜோக் அல்லது பாட்டுப்பாட வேண்டும் என்று டின்னர் விருந்து அளிப்பவர் கூறினால், அதை ஏற்று, உங்கள் முறை வரும்பொழுது, ஜோக் / பாட்டு அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் சுவையான சம்பவம் பற்றிப் பேசுவீர்களா? //
பதிலளிநீக்குஅடடா இரண்டிலும் நான் வீக்காச்சே :) ஜோக் னு சொன்னா கம்பபாரதி ஜோக்கை எடுத்து விடுவேன் அதோட அதிரடி miyaaw கபால்னு விழுந்த நொந்த பல்ப் வாங்கிய சம்பவங்கள் பல எனக்கு தெரியும் அதெல்லாம் அங்கே ரிலீஸ் பண்ணிடுவேன் :)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
நீக்குபொதுவாவே நான் ரிசெர்வ்ட் டைப் :) இருக்கிற இடமே தெரியாதுன்னா பார்த்துக்கோங்க :) ஆனா கூட்டு சேர்க்கை யால் பிரபலமாகிடுவேன் மியாவ் கூடவே சுத்தறதால் வெளிச்சத்துக்கு வந்தேன் மற்றபடி மீ ஒரு அப்பாவி :)
பதிலளிநீக்குஇதோ இந்த படத்தில் இருக்கும் அதே நிலைதான் எனக்கு தனியா மாட்டிக்கிட்டா
https://i.dailymail.co.uk/i/pix/2016/05/20/10/346A03A000000578-3600536-image-a-3_1463738360034.jpg
அல்லோ மிஸ்டர் உப்பூடி எல்லாம் சொல்லி அழுதெல்லாம் காட்டினா மட்டும் டபக்கென பரிசைத்தூக்கித் தந்திடுவாரோ கெள அண்ணன்?:) அது பரிசு அதிராவுக்குப் பக்கிங் நடக்குதாம்:)) ஹா ஹா ஹா..
நீக்குநீங்க சொன்னமாதிரி தனியா மாட்டிக்கிட்டா திருதிருன்னு முழிக்கிறதை பார்த்து யாரவது பரிதாபப்பட்டு வருவாங்க அவங்ககிட்ட பேசி நேரத்தை கடத்திடுவேன் .
பதிலளிநீக்கு