ஞாயிறு, 14 அக்டோபர், 2018

ஞாயிறு 181014 : "அடை சாப்பிட்டுட்டுப் போங்க"


முதல் இரண்டு படங்களும் நம் தளத்தில் அவ்வப்போது பின்னூட்டமிடும் ஸ்ரீகாந்த் இல்ல கொலு.  வருடா வருடம் கண்ணனின் காஸ்டியூம் மாறும்!



வந்திருக்கும் விருந்தினர்கள் மேல் இடிக்காமல், அவர்களில் பாடுவோர் கவனத்தைச் சிதறடிக்காமல் அவர்கள் படத்தில் வராதவாறு பார்த்துப் பார்த்துக் காத்திருந்து...  இங்கு கிடைத்தது அருமையான நிலக்கடலைச் சுண்டல் மற்றும் அப்பம்.    பின்னிணைப்பு "அடை சாப்பிட்டுட்டுப் போங்க" 


இது இரண்டாவது இடம்!  கள்ளழகர் பவனி. 


"அந்த இரண்டு படிகளிலும் இருப்பது இராமாயண செட்...   அப்படியே பத்தாயிரம் ரூபாய் ஸார்...  பார்த்தீர்களா?"


மூன்றாம் இடம்.  விளக்குக்கு வித்தியாச காஸ்டியூம்!



நவநரசிம்மர்.


காளிங்கநர்த்தனம்.



ஆகமொத்தம்...



இரண்டாம் இடத்தின் மொத்த கொலு.  இந்த வீட்டின் குட்டிச்சுட்டிப்பெண் பொதிகை தொலைக்காட்சிப் பாடல் போட்டி நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார்.  வருபவர்களுக்கு யூ டியூபிலிருந்து அந்த விடியோவை பெருமையாகப் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள் அந்தக் குட்டிப்பெண்.


கீதோபதேசம்..


கள்ளழகர் முழு செட்.



கடைகள் மூடும் நேரம்...   ஆயினும் சளைக்காது தொடரும் சுண்டல் வேட்டை..


எளிமையாய் ஒரு கொலு.  "முடியலைதான்...   முடக்க வேண்டாமேன்னு.."  


நேற்று சனிக்கிழமை தொடர்ந்த கொலுப் பயணம்...  ராம இலக்குமணனைத் தோளில் சுமந்து ஆஞ்சநேயர்...




34 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    இவ்வளவு கொலு வரிசையை இப்போதுதான் பார்க்கிறேன் ஸ்ரீராம். சின்ன கொலுவிலிருந்து பெரிய கொலு வரை அத்தனையும் அழகு. எல்லோரும் சேர்ந்து பாடு பட்டால தான்
    அழகு. ராமாயணம் செட் 10000 ஆ.
    இங்க 150 டாலர். சீ சீ இந்தப் பழம் புளிக்கும்னு வந்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... இதே செட்டா? 150 டாலரா? அடேங்கப்பா...!

      நீக்கு
  3. அழகு... அருமை...

    விளக்கு காஸ்டியூம் ஆகா...!

    பதிலளிநீக்கு
  4. கொலுப் படங்கள் குளுகுளு! சின்னக்கொலுவானாலும் அதனை சிங்காரக் கொலுவாக்குவது பெண்களின் கைத்திறன். சேர்ந்து உழைத்ததாகக் காண்பிக்கச் சுற்றி சுற்றிவந்த ஆண்பிள்ளைகளையும் கொஞ்சம் நினைத்துக்கொள்ளலாம்.

    கொலுக்களில் உட்கார்ந்து ரீங்கரித்து மாலை நேரங்களை ரம்யமாக்கும் நமது சிறுமிகளை, மாமிகளை இந்த நேரத்தில் குறிப்பிடாவிட்டால், நவராத்திரி கொலுபற்றிப் பேசிப் புண்ணியமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார். கைவண்ணம் (கலைவண்ணம், சுவைவண்ணம்) எல்லாம் கலந்த விழா. ஆனால் இங்கெல்லாம் உடன்போய் அமர்வது சற்றே... என்ன, எனக்கும் ஒரு டப்பர்வேர் பாட்டில், பிளாஸ்டிக் டப்பா, காசு எல்லாம் வரவு!!

      நீக்கு
  5. அணைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
    கொலு படங்கள் மிக அழகு.
    ஒவ்வொரு வீட்டுக் கொலுவும் ஓவ்வொரு அழகு.
    நவராத்திரி விழா குடும்பத்தினரின் கூட்டு உழைப்பு, அனைவரும் பங்கு பெறுவதால் மனதுக்கு மகிழ்ச்சி.
    ஒவ்வொருவர் திறமையை வெளிக் கொணரும் பண்டிகை .
    பாட்டு, நடனம், கோலம், விளக்கை, வீட்டை அலங்கரித்தல் எத்தனை எத்தனை திறமைகள் .
    அம்மன் எல்லோருக்கும் மனதைரியம், உடல் , மன பலத்தை கொடுக்க வேண்டும். முடியவில்லை என்றாலும் எளிமையாக வைத்த கொலு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா.

      வகைவகையாய் செய்யும் சமையலை விட ஒருநாள் எளிமையாய்ச் செய்யும் துவையலும் பச்சை மோர்க்குழம்பும் இதயங்களை வென்று விடும்.. அதுபோல!

      நீக்கு
  6. அனைத்தையும் இரசித்தேன்.

    ராம இலக்குமணனைத் தோளில் சுமந்து ஆஞ்சநேயர்... கள்ளழகர் முழு செட்.. கீதோபதேசம்.. இராமாயண செட் அழகு.

    எளிமையான கொலுவும் அழகு!

    பதிலளிநீக்கு
  7. அழகான கொலு. விதவிதமாக. அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. அழகான கொலு காட்சிகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. முதன் முதலில் நாங்கள் சென்னை குறளகத்தில் பொம்மைகள் வாங்கி திருச்சிக்கு கொண்டு போன நினைவு

    பதிலளிநீக்கு
  10. ///அடை சாப்பிட்டுட்டுப் போங்க"//
    அடையா எங்கே எங்கே... இது நெ.தமிழனின் ஸ்டைலா? இல்ல பானுமதி அக்கா ஸ்டைலோ?:) ஹா ஹா ஹா அவர்கள் இருவரும்தான் இங்கு அடை போட்ட நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... அடை சாப்பிட்டுப் போங்க என்று அவர்கள் வீட்டில் சொன்னார்கள். உறவினர் ஒருவர் செவசெவ என்று அடையை சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார். மற்ற வீடுகளில் சாப்பிட வேண்டியவைகளை மனதில் வைத்து, அதைத் தவிர்த்துவிட்டு சென்றோம்!

      நீக்கு
  11. எல்லாக் கொலுவும் இருக்கு ஆனா ஒரு பூஸ்குட்டிக் கொலு இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ராமாயணம் இருக்கு.. பாரதக் கொலு எங்கே? பாரத நாட்டிலே ஏன் பாரதக்கொலு இல்லை?:).. இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈ:).

    இந்தவாரம் எங்கும் கொலு வாரம்போல... கலர்ஃபுல்லா மனதுக்கு மகிழ்வா இருக்கு.. அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூஸ்குட்டி காணோம்னுதான். நாய்ச் செல்லம் கண்ணில் பட்டது. டைனோஸர் கூட இருந்தது! கொலு படங்கள் போட்டு போரடித்து விட்டேனோ என்று நினைத்தேன். நன்றி.

      நீக்கு
  12. //எளிமையாய் ஒரு கொலு. "முடியலைதான்... முடக்க வேண்டாமேன்னு.." //

    எங்கேயோ தனியே இருக்கும் பாட்டி தாத்தா வைத்த கொலுவோ? இதுதான் என் மனதை அதிகம் கவர்ந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  13. கொலுப்படங்கள் அழகுதான். கலக்‌ஷன் என்றாலும், ஒவ்வொரு வீட்டிற்கும் மெனக்கெட்டு போகணுமே.... அது ஒரு பெரிய வேலைதான்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!