செவ்வாய், 9 ஜூலை, 2019

​கேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா? - முதல் பகுதி - நெல்லைத்தமிழன்

அவன் அறிவானா? 
நெல்லைத்தமிழன்
முதல் பகுதி 




அம்மா….நல்லாருக்கயா?” போனில் பரத்தின் குரலைக் கேட்ட உடனேயே ஆனந்திக்கு அவன் என்னவோ சொல்ல வருவதாகத் தோன்றியது. குரலில் கொஞ்சம் நடுக்கமோ தயக்கமோ இருப்பதாகப் பட்டது. சட் என்று தொலைபேசித் தொடர்பு அறுந்தது.

நான்கு மாதங்களுக்குப் பிறகு போன் செய்கிறான். அடுத்த மூன்று மாதங்கள் கடுமையான வேலைகள் இருக்கு, போன் பேசுவது சந்தேகம் என்று சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தான். என்ன சொல்லவந்திருப்பான்? பரத்தின் குரல் அவளது நினைவுகளை வெகு வேகமாக பின்னோக்கி இழுத்துப்போயிற்று.

**


  
“ஏம்மா தினம் தினம் மொட்ட மாடீல கிண்ணத்துல தண்ணி வைக்கற? நீயோ கஷ்டப்பட்டு தண்ணிய குளத்துலேர்ந்து சுமந்துக்கிட்டு வர்ற. இதுல ரெண்டு சொம்புத் தண்ணியை வீட்டு வாசல்லயும் மாடிலயும் கொண்டுபோய் கிண்ணத்துல வைக்கறயே”  குழந்தை பரத், அம்மாவிடம் கேட்டான்.

“அன்னைக்கு உனக்கு ஒரு கதை சொன்னேனே…ஒருத்தர் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது, அவங்க பசங்களையோ பேரன்களையோ பார்க்கணும்னு உம்மாச்சிக்கிட்ட கேட்டாங்கன்னா, அவர், வரம் கேட்கிறவரை பறவையாவோ வீட்டு விலங்காவோ படைச்சிருவாரு.  அந்தப் பறவையோ விலங்கோ, அவங்க வீட்டுக்கு வரும். அதுனால, நாம அதுங்களுக்கு தண்ணியோ, உணவோ கொடுக்கணும். அதான் மாடு, நாய் இல்லை வேற விலங்குக்கோ வாசல்ல கொஞ்சம் கழனித்தண்ணியை வைக்கிறேன்,  பறவைகளுக்கு மாடீல கொஞ்சம் தண்ணி கொண்டுபோய் வைக்கிறேன்”

“அதே பறவையா தினம் தினம் வரும்?”

“நமக்குத் தெரியாதுடா.. எந்த எந்த முன்னோர்கள் வர்றாங்கன்னு நமக்கு எப்படி தெரியும்? வெயில் காலத்துல தண்ணி தேடி அவங்களோ, அவங்க நண்பர்களோ வரலாம்… வாயில்லா ஜீவனுக்கு தண்ணி கொடுக்கறதைப் போல நல்ல செயல் கிடையாதுடா”

“அப்போ நாளைலேர்ந்து நானே கொண்டுபோய் வைக்கவா?”

சரி… நாளைலேர்ந்து நீயே மாடீல தண்ணீர் கொண்டுபோய் வை. இப்போ தாத்தாவும் பாட்டியும் சாப்டாச்சான்னு பாரு.  நானே தட்டை எடுத்துடறேன்னு சொல்லு”

**


“ஏன் எப்போப் பாத்தாலும் மோருஞ்சாதம்…. ஸ்கூலுக்கு இட்லி கொடுக்கக்கூடாதா? என்னோட கிளாசுல என் ஃப்ரெண்ட்ஸ் என்னை ‘தயிர்சாத தத்தி’ன்னு சொல்றாங்க” …. இரவு, சாப்பாடான கஞ்சியும் நார்த்தங்காயும்  கிண்ணத்தில் இருக்க, கோபமாகப் பார்க்கும் பரத்தைப் பார்த்த ஆனந்திக்குச் சிரிப்பு வந்தது.

“இட்லி கொடுக்கலாம்டா….ஆனா தயிர்சாதம்தான் படிக்கிற பசங்களுக்கு நல்ல உணவு. உனக்குத் தெரியுமோ? ரெண்டு நாள் முன்னால கணித மேதை ராமானுஜன்னு ஒரு பாடம் படிச்சயே. அந்த ராமானுஜம், எப்போதும் மோர் சாதம்தான் சாப்பிடுவாராம். அதுனாலதான் கணக்கில் அவர் புலியாம்”

“அப்படீயாம்மா?” கண்ணை அகல விரித்துக்கேட்டான் பரத்.

“ஆமாண்டா… கிளாசுல மத்த பசங்க என்ன சொன்னா என்ன..உம்மேல உங்க ஸ்கூல் டீச்சருக்கெல்லாம் எவ்வளவு பிரியம்… நீ முதல் மார்க் எடுக்கற….அதிலேயும் கணக்குல எப்போதும் நூத்துக்கு நூறு எடுக்கற.…கணக்குப் பரீட்சைல, சாய்ஸ்ல விடற கேள்விகளுக்கும் பதில் எழுதிடுவையாம். ரெண்டு நாள் முன்னால உன்னோட தமிழ் டீச்சர் சரஸ்வதி சொன்னாங்க. இப்போ எட்டாப்புல படிக்கற மாதிரியே தொடர்ந்து படிப்புல கவனம் செலுத்தினனா, மாவட்டத்துலயே முதல் மாணவனா நீ வருவியாம்…. எனக்கு ரொம்ப பெருமையா இருந்ததுடா.” 

“இன்னைக்கு பாடம்லாம் படிச்சுட்டேன்.  இன்னும் ஒரு மணி நேரத்துல நாளைக்கு நடத்தப் போகும் பாடங்களையும் ஒரு தடவை பார்த்துடுவேன். தூங்கப் போறதுக்கு முன்னால ‘பொன்னியின் செல்வன்’ கதையைச் சொல்றயா? ரெண்டு நாளா ரொம்பப் படிக்க வேண்டியிருந்ததால கதை கேட்க முடீல”

“ம்..சரி… ஆனா கதை ஆரம்பிக்கறதுக்கு முன்னால, எதுல விட்டேன்னு நீ சொல்லணும். ஓகேவா?”

“எனக்கு மறக்காதும்மா…”….. பாடங்களில் மூழ்கினான் பரத்.

“பரத்.. நாளைக்கு உனக்குப் பிடித்த அப்பளாத்துருண்டை சாயந்திரம் ரெண்டு தர்றேன். சரியா..” அடுக்களையைச் சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினாள் ஆனந்தி.


**

“அம்மா… பத்தாப்பு ரிசல்ட் வந்துடுச்சு” பரத் துள்ளிக்குதித்து ஓடி வந்தான்.

“ஸ்கூல் ஃபர்ஸ்டா? நல்ல மார்க்காடா? காலைல போனவன் இவ்வளவு நேரமா வரலையேன்னு பார்த்தேன்”  ஆனந்தி மகனைப் பார்த்தாள்.

“ஸ்டேட் பர்ஸ்டும்மா... ஹெட்மாஸ்டர் சாரங்கபாணி சார் யார் யாருக்கெல்லாமோ போன் பண்ணி மார்க்கை கன்ஃபர்ம் பண்ணப்பறம்தான் வெளில யார்கிட்டயும் சொல்லணும்னு அங்கேயே உட்காரச் சொல்லிட்டார்.. அப்புறம் மத்த டீச்சர்ஸுக்கெல்லாம் அவரே சொல்லி, ஸ்கூல்ல நோட்டீஸ் போர்டுல என் படத்தையும் மார்க்கையும் போட்டுட்டுத்தான் விட்டாங்க”

சந்தோஷத்தில் மகனைக் கட்டிக்கொண்டாள் ஆனந்தி.

“ஒனக்கும் சேர்த்து ஒம் பையன் படிப்பாம்மா” அப்பாவின் அசரீரி ஆனந்தியின் காதுகளில் ஒலித்தது.

“மார்க் குறைச்சலா வாங்கின யார்கிட்டயும் மனசு வருத்தப்படும்படியா பேசிடாத கண்ணு…எப்போவும் பாசிடிவாகவே பேசு.. ஹம்பிளா இருக்கறதுதான் மத்தவங்களோட”

“நல்லெண்ணத்தை நமக்குக் கொண்டுவந்து தரும்” வாக்கியத்தை முடித்து கன்னத்தில் குழி விழுமாறு சிரித்தான் பரத்.

**

“ஆனந்தீ…அவன் இந்த ஸ்கூல்லயே +2 படிக்க வேண்டாம்னு சொல்ல மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு. நிச்சயம் நல்ல ரேங்க் வாங்கி இப்போ பெருமை சேர்த்தமாதிரி அப்போவும் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பான். ஆனா நான் சுயநலமா இருக்க விரும்பலை. நாமக்கல் ஸ்கூல்ல +2க்கு இடமும் தந்து, ஹாஸ்டல்லயும் சேர்த்துக்கறேன்னு அவங்க சொல்ற வாய்ப்பை மறுத்துடாதே. +2 படிப்பு முழுசும் அவங்கதான் செலவழிப்பாங்க…உனக்கு ஒரு செலவும் இல்லை. அந்த ஸ்கூல்ல அவன் படிப்புக்கு அவ்வளவு உதவி செய்வாங்க. ஒத்தப் பையனை அவ்வளவு தூரம் அனுப்பணுமான்னு விசாரப்பட்டுடாதே.  இவனுக்கு கற்பூர புத்தி. +2ல நல்ல மார்க் இங்க இருந்தாலும் வாங்குவான். ஆனா அங்க இருந்தால் வெளி உலகமும் அவனுக்குத் தெரியும். அப்புறம் எஞ்சினீயரிங்லாம் படிக்கணும்னா எப்படியும் உன்னை விட்டுட்டுத்தானே போகணும்”  ஹெட்மாஸ்டர் சாரங்கபாணி, ஆனந்தியிடம் வாஞ்சையாகச் சொன்னார்.

அப்போ ஆரம்பித்த பரத்தின் பயணம் தொடர்ந்தது.  படிப்பில் எப்போதும்போல் மிகக் கவனமாக இருந்தான்.

“எஸ்.எஸ்.எல்.சில மாநிலத்தின் முதல் மாணவனாக வந்து, +2லயும் மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தது பரத் மட்டும்தான் தெரியுமோ?.. படிப்பில் முழுசா கவனம் செலுத்தினதுனாலதான் இதை அவன் சாதிக்கமுடிந்தது. மத்த பேர்கள்னா, சட்டுனு, ஹாஸ்டல், நல்ல உணவுன்னு படிப்புல கவனம் கொறஞ்சிருக்கும். நான் சொன்ன மாதிரி அந்த நாமக்கல் ஸ்கூல்ல அவனை நல்லா கோச் பண்ணியிருக்காங்க” சாரங்கபாணி சார் ரொம்பப் பெருமையுடன் சொன்னார்.

“எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்களோட ஆசிதான் சார் காரணம். அவன் எவ்வளவு உயர்ந்தாலும் நம்ம ஸ்கூல்தானே சார் அவனுடைய படிப்புக்கு உரம் போட்டது.”

சின்னப் பையனாகத் தன்னிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தவன், உலக அறிவைப் பெற்று பெரியவனாக ஆவதை அவள் கவனித்துவந்தாள்.  மகனைப் பிரிந்த வருத்தம், +2,  சென்னை ஐஐடியின் எஞ்சினீயரிங், அகமதாபாத்தில் எம்.பி.ஏ என்று தொடர்ந்தது. எங்குமே அவனுக்கு கல்விக்கட்டணமில்லை. அவனுடைய ஹெட்மாஸ்டர் சாரங்கபாணி சார்தான் என்னென்னவோ அறக்கட்டளைகளுக்கு எழுதி தேவையான செலவுகளுக்கும் பணம் பெற்றுத்தந்தார். அவனுடைய  சொந்தச் செலவுக்கு என்று ஆனந்திதான் வற்புறுத்தி கொஞ்சம் பணம் அனுப்புவாள்.

கல்லூரிப் படிப்பின் ஒவ்வொரு வருட முடிவிலும் ஒரு சில வாரங்களாவது அவளுடன் இருப்பான். அவளுக்குத்தான் அவனைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். ஏதோ பரம்பரைப் பணக்கார வீட்டில் பிறந்தவன் மாதிரியான களை, தன் அழகு முழுவதும் அவனுக்கே போனதுபோல…ஆனால் எளிய உடை..   வீட்டுக்குள் வந்துவிட்டால், அதே பரத். கொஞ்சம்கூட மாற்றம் இல்லாத நல்ல குணம், நிரம்பி வழிந்த அன்பு.

**

“என்னடா..ஹாஸ்டல்ல நீ ஆசைப்பட்ட மாதிரியே வித விதமா பண்ணிப் போடறாங்களா? நல்லா சாப்பிடறயா?  ஒடம்பு மாத்திரம் ஒல்லிக்குச்சியா இருக்கயே”

“போம்மா…சும்மா கலாட்டா பண்ணாதே.. என்னதான் சாப்பிட்டாலும்… நீ பண்ணிப்போடற மோருஞ்சாதமும் வெந்தயக் குழம்பும் எங்கயும் கிடைக்காதும்மா”

“போடா போடா… சும்மாச் சொல்லாதே.. அப்போல்லாம், ‘என்னது இது… எப்போவும் வெந்தயக் குழம்பு இல்லைனா கீரைக் குழம்புதானா.. இட்லி தோசைலாம் கிடையாதா… பூரி மசால்லாம் கிடையாதா’ன்னு சிணுங்கினவந்தானே நீ”

“அது சின்ன வயசும்மா… பையன் பெரிய படிப்பு படிக்கணும்னா நிறையச் செலவாகுமே.. காசை செலவழிக்காம செட்டா இருந்தாத்தான் தேவையானபோது இருக்கும்”னு நீ கண்டிப்பா இருந்தது எனக்கு இன்னமுமா புரியாம இருக்கும்?  உண்மையைச் சொன்னா… நான் விதவிதமா எத்தனையோ ஹாஸ்டல்கள்ல சாப்பிட்டிருக்கேன். ஆனா ஒங்கையால சாப்பிடற மோர்சாதம், நீ ஸ்பெஷலா எப்பவாச்சும் கொடுக்கற அப்பளாத்துருண்டை…இதெல்லாம் என் மனசுலயே இருக்கும்மா..அது எங்கயும் எனக்குக் கிடைக்கும்னு தோணலை”

“டே… இப்போ சொல்றதோட நிறுத்திக்கோ… நாளைக்கு உனக்குன்னு பொண்டாட்டி வந்துட்டா, அவள்டயும் அம்மா புராணம் பாடக்கூடாது சொல்லிட்டேன்.  உங்கப்பா ஏழு வருஷம்தாண்டா என்னோட இருந்தார். அவர் என்னை ஒரு ஆயுட்கால அளவு தாங்கினார். அதுதாண்டா இப்போ வரைல எனக்கு சக்தி கொடுத்துருக்கு. நீயும் அப்படித்தாண்டா இருக்கணும்”

“அப்போ ஒன்னை யாரு பாத்துப்பா”

“போடா போடா… நீ அவளைத் தாங்கு.  அதுவே அவளை என்னைத் தாங்க வைக்கும்.  அதுக்காக, நானும் ஒங்களோடயே பெட்டி படுக்கையைத் தூக்கிக்கிட்டு வந்து உட்கார்ந்துடுவேன்னு நினைக்காதே. நீ மேல மேல வாழ்க்கைல முன்னேறி வரணும்டா. அதுதான் எனக்குத் திருப்தி”



**

“என்னடா… திடுதிப்புனு வந்திருக்க.. போன் பண்ணிக்கூடச் சொல்லலையே. சாப்டயா?  போ..குளிச்சுட்டு வா. அதுக்குள்ள சூடா சாதம் குழம்பு பண்ணி வைக்கிறேன். இன்னைக்குத்தான் கொல்லைல வாழக்காய் பறிச்சேன்”

“அம்மா… ஒங்கிட்ட ஒண்ணு கேட்கணும்”

“என்னடா தயங்குற? எதுனாலும் எங்கிட்ட சொல்லு”

“பம்பாய்லயே எனக்கு வேலை கிடைச்சிருக்கும்மா. பெரிய சம்பளம்தான். ஆனா, ஸ்காலர்ஷிப்ல அமெரிக்காவுல ஆராய்ச்சிக்கு வாய்ப்பு வந்திருக்கும்மா. அதுக்கு அப்புறம் அங்கயே பெரிய வேலை கிடைச்சு செட்டிலாயிடலாம்மா. உன்னோட கருத்தைக் கேட்கணும்னு எனக்குத் தோணித்து. அதான் சட்னு கிளம்பி வந்துட்டேன்”

“முதல்ல குளிச்சுட்டு சாப்பிடவா. நான் அப்புறம் சொல்றேன்”

அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசியறியாத பரத், துண்டை எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்றான்…

“செல்லம்… எனக்கு முந்தின தலைமுறை இங்கேயே கஷ்டப்பட்டது… எங்கப்பாவோட கஷ்டத்தைப் பார்த்து, நான் நிறைய படிக்கணும், நல்ல சம்பாதிக்கிற வேலைக்குப் போகணும், அவருக்கு ஏதாவது செளகர்யம் பண்ணிக்கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால் என் வாழ்க்கை திசை திரும்பிடுச்சு. பூர்வ ஜென்ம புண்ணியம், முன்னோர்களின் ஆசி… உனக்கு சரஸ்வதி கடாட்சம் நிரம்பி இருக்கு. குல தனமா நல்ல ஒழுக்கம் அமைஞ்சிருக்கு.  காசு செலவில்லாம அமெரிக்காவுல படிக்க வாய்ப்பு வந்திருக்குன்னா, அதை ஏன் ஒதுக்கணும். தைரியமாப் போ, படி, இன்னும் பெரிய நிலைக்கு வா. எனக்கு அதுதான் சந்தோஷம்”, 

“முத முதல்ல கிடைக்கற வேலையாச்சே.. அதைவிட்டுட்டுப் படிக்கப் போகணுமான்னு தயங்காதே. படிக்க முடியும்போது படிச்சுடணும். அப்புறம் கல்யாணம் காட்சின்னு வந்தா, நல்ல குடும்பத் தலைவனா ஆகி வாழ்க்கையை எஞ்சாய் பண்ணணும். மனசுல கவலைப்படாம அமெரிக்கா போய்ப் படி.  பணம் தேவைன்னா சொல்லு..… நீ மாசா மாசம் அனுப்பின ரூபாயைச் சேத்துவச்சிருக்கேன். பத்தாததுக்கு இந்த வீட்டை வித்துடலாம். இந்த ஒண்டிக்கட்டைக்கு என்னடா தேவை…ஒரு ரூம் போதும். மோர் சாதம், நார்த்தங்காய் ஊறுகாய் யதேஷ்டம்”

சட்டென்று பரத்துக்கு கண்ணில் நீர் துளிர்த்தது. அம்மா அறியாது கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“அம்மா… இப்போ பம்பாய்ல வேலையை ஒத்துக்கிட்டேன்னா, நீ என்னோடயே வந்து இருந்துடலாம். படிப்பு படிப்புன்னு நிறைய வருஷம் நான் தனியாக உன்னைவிட்டுப் பிரிந்தே இருந்துட்டேன். அமெரிக்கா போனால், இன்னும் மூணு வருடம் அங்க இங்கன்னு நான் நகர முடியாது.”

“நாந்தான் சொல்லிட்டேனே… நீ அமெரிக்கா போ. படி.. நல்ல வேலையை தேடிக்கோ. எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். நீ பெரிய லெவல்ல வந்துட்ட என்பதே எனக்குப் போறும்”

சாப்பாட்டில் கடைசியாக மோர் சாதத்தை அவன் கையில் எடுத்துக்கொண்டு குழித்ததும், அதில் வாழைக்காய் தானைப் போட்டுக்கொண்டே ஆனந்தி மகனிடம் சொன்னாள்.

“எங்கப்பா சொல்லியிருக்கார்டா…நீ ரொம்ப நல்லா முன்னுக்கு வருவன்னு.  அதுக்கான தூண்டுகோலாத்தான் நான் இருக்கணும்னு ஆசைப்படறேன். அதுதான் உங்கப்பாவுக்கும், தாத்தா பாட்டிகளுக்கும் திருப்தியைத் தரும். விசாரமில்லாம போய்ட்டுவா. போறதுக்கு முன்னால நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டுவருவோம்”

**

குலதெய்வம்” என்ற வார்த்தை மனதில் உதித்ததும் ஆனந்தியின் மனது இன்னும் பழைய நினைவுக்குப் போயிற்று.

**


சந்தோஷ், ஆனந்தி – பெயர்ப்பொருத்தம் அமோகம், இரண்டும் பாசிடிவ் வைப்ரேஷன் தெரியுமோன்னோ.?  பேங்குல உத்தியோகம் பார்க்கிற பிள்ளை. கொஞ்சம் கருப்புன்னு நினைச்சுடாதீங்கோ… கறுப்பொரு நிறமோ காந்தல் ஒரு சுவையோன்னு கேட்டதில்லையா? நீங்க நிறைய  செய்யமுடியாதுன்னு அவாளுக்குத் தெரியும். ‘பண்ணிவைக்கிற வாத்தியாருக்கு என்ன கெடச்சுடும்னு அவாளுக்குத் தெரியாதா? உங்க பொண் அழகும் நிறமும்தான் அவாளுக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சு. ஆனந்தி ரொம்ப சூட்டிகையான பொண்ணு, சந்தோஷுக்கு சூது வாது எதுவும் தெரியாது, குடும்பத்தை கட்டி ஆள ஆனந்தி மாதிரி மருமகள்தான் எங்களுக்கு வேணும்னு அவா சொல்றா. நீங்க என்ன சொல்றேள்?  கல்யாண தரகர் ரங்கன், ஆனந்தியின் அப்பாவைக் கேட்டார்.

“நான் என்ன சொல்லப்போறேன். குழந்தை 12ஆவது இப்போதான் எழுதப்போறா. ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு பார்க்கறேன்”  சதாசிவம் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

“காலம் கலிகாலம்னு சும்மாவா சொல்றா… நம்ம காலத்துல பொண்ணை பெரியவளா ஆறதுக்கு முன்னாலேயே கல்யாணம் பண்ணி புக்காத்துல கொண்டுபோய் விட்டுடுவா. இப்போ, பொண்ணுக்கு 18 வயசாகட்டும், 21 வயசாகட்டும்னு எல்லாரும் பினாத்திண்டிருக்கா. நல்ல இடத்திலேர்ந்து பொண்ணைக் கேட்கறா.  எதுவும் எதிர்பார்க்கலை.  உங்களுக்கும் வாய்க்கும் கைக்குமான வாழ்க்கை. சட்டுனு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேள்னா உங்க கடமை முடிஞ்சுடும் இல்லையா? நீங்களும் மாமி இல்லாம எத்தனை வருஷங்கள்தான் கொழந்தையைப் பார்த்துண்டிருப்பீங்க? உங்களுக்கும் வயசாயிண்டே போறது. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆறதுக்கு முன்னால சட்டுனு பொண்ணை இன்னொருத்தன் கையில் ஒப்படைச்சுடலாம் இல்லையா?”

ரங்கனின் பேச்சில் இருந்த உண்மை அவருக்கு உறுத்திற்று. அவளை பன்னிரண்டாம் வகுப்பு படிக்க வைக்கவே ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டார் சதாசிவம். 

காலேஜ்லாம் போகணும்னா பஸ்ல ஏறி ரொம்பத் தூரம் போகணும். அதுக்கு எவ்வளவு ஆகுமோ.. நல்லாப் படிக்கற பொண்ணு, ஆனா பகவான் நமக்கு ஒண்ணுமே கொடுக்கலையே.  கைக்கும் வாய்க்குமான்னா காலம் ஓடுது. ஏதோ…நம்ம குல தர்மத்தை எல்லாரும் கடைபிடிக்க உதவியா இருக்கோம்கற திருப்திதான் பெருசா இருக்கு. மனதில் ஓடிய எண்ணங்களை புறம் தள்ளிவிட்டு, ரங்கனைப் பார்த்தார்.

“ஒரு வாரம் டயம் கொடுங்கோ. யோசிச்சுச் சொல்றேன். அவள்டயும் ஒரு வார்த்தை கேட்கணுமில்லையா?”

**
“அம்மா..கொழந்தே.. என்னைத் தவறா நினைக்காதே.. உனக்கொரு வரன் வந்திருக்கும்மா. மாப்பிள்ளைப் பையன் பேங்குல உத்யோகம். ஒரே பிள்ளை. அப்பா அம்மாவோட இருக்கார். அவாளை நான் பார்த்திருக்கேன். நம்மைவிட கொஞ்சம் வசதியானவா.  உன்னை எங்கயோ அவா பார்த்திருக்காளாம். பொண் கேட்டு வந்திருக்கா.  உனக்கு இன்னும் படிக்கணும்னு ஆசை இருக்குங்கறது எனக்குத் தெரியும்.  நல்ல வரனாச்சே என்று யோசிக்கிறேன். நீயும் உன்னோட எண்ணத்தை யோசிச்சு சொல்லும்மா” சதாசிவம், இரவு உணவுக்குப் பிறகு ஆனந்தியிடம் மெதுவாகச் சொன்னார்.

அன்று இரவு படுக்கையில் படுத்தபோது ஆனந்திக்கு அவளை அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது.

ஆனந்தி, அப்பாவின் கஷ்டங்களை அறியாதவளா?  . அவர் மனசில் ஓடும் இயலாமையும்,  கடமையை முடிக்கணும் என்ற எண்ணமும் அவளுக்குத் தெரியாதா? அம்மா இல்லாமல், சிறு வயதிலிருந்தே தன்னை எவ்வளவு அன்போடும் வாஞ்சையோடும் வளர்த்தார் என்பதெல்லாம் அவள் மனதில் தோன்றியது. படிக்கணும் என்ற ஆசை, அது நடப்பது கடினம் என்ற நிலை அவள் மனதை வருத்தியது… ஆசைப்பட்டதெல்லாம் எல்லோருக்கும் நடந்துடுதா?  அப்பாவோட சந்தோஷம் முக்கியம்.  நமக்கு பகவான் விட்ட வழி.  ஆனந்தி ஒரு முடிவுக்கு வந்தாள்.

**


“ஆனந்தி… நீ ‘சரி’ன்னு சொன்னது எனக்கு மனசுல திருப்தி உண்டாக்கிடுத்தும்மா.  பேங்குல வேலை பார்க்கிறவன். பென்ஷனும் வரும். காலா காலத்துக்கு உனக்கு சாப்பாட்டுக் கஷ்டம் வரவே வராதும்மா. உன்னை நிறைய படிக்கவைக்கலையே, அதுக்கு முன்னால இந்தப் பிராமணன் உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டானே என்று  நினைக்காதம்மா.  உனக்கும் சேர்த்து உன் பையன் நிறையப் படிப்பான்மா. அவன் நல்ல உயர்ந்த நிலைல இருக்கறதை நீ பார்ப்பம்மா.. பகவான் கைங்கர்யம் பண்ணற வாயால நான் சொல்றேம்மா. நிச்சயமா நடக்கும்மா”  சதாசிவம் முழுத் திருப்தியோடு மகளை ஆசீர்வதித்தார்.


அதன் பிறகு அவள் வாழ்க்கையில்  எல்லாம் சட் சட் என்று நடந்துவிட்டன.  மகளுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்துவிட்டோம் என்ற திருப்தியில், பேரனைக் பார்க்கக்கூட காத்திருக்காமல் திருமணம் செய்துகொடுத்த நான்கு மாதங்களில் அப்பா மறைந்தது நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுக்கு வந்த முதல் அதிர்ச்சி.,    சந்தோஷமாக ஏழு வருடங்கள் தன்னை வைத்துக்கொண்ட கணவர், பையனின் ஆயுஷ்ஹோமம் நடந்து  சில மாதங்களில்  எதிர்பாராத விபத்தில் இறந்தது அவளுக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. திடுமென அனாதை ஆகிவிட்டதைப்போன்ற உணர்வைக் கொடுத்தது. கணவனின் பெற்றோரும் தங்கள் மகனின் எதிர்பாராத மரணம் கண்டு மனமுடைந்தனர்.  ஆனால் ஒரு சில தினங்களில்ஆனந்தி அந்தத் துக்கத்திலிருந்து மீண்டுவிட்டாள். 

“அம்மா… நீங்களும் அப்பாவும் வருத்தப்படறதை விட்டுடுங்கோ… இது ப்ராப்தம்னுதான் நினைச்சுக்கணும். நம்ம குடும்பத்துக்கு வாரிசா பரத் இருக்கான்.  அவனை நல்லபடியா வளர்க்கணும் இல்லையா? எல்லோரும் மனமுடைஞ்சா குழந்தை என்ன பண்ணும்? நம்ம கையில இல்லாத விதியை நினைச்சு நாம வருத்தப்படறதுல என்ன இருக்கு?”

“ஆறு வருஷம் கழிச்சுப் பிறந்த குழந்தையோட தீர்க்காயுசா இருக்க அவனுக்குக் கொடுத்துவைக்கலையே. எங்க ஆயுளை அவனுக்கு இந்தக் கடவுள் கொடுத்திருக்கக்கூடாதா?”  சந்தோஷின் அம்மா புலம்பினாள்.

“என்னம்மா இப்படிப் பேசறேள்….பிறப்பும் இறப்பும் நம்ம கையில இல்லைன்னு எத்தனை முறை நாம கேட்டிருப்போம். எங்க வாழ்க்கையிலேயே நீங்க அதைப் பார்த்துட்டேள்.  எதைத் தடுத்திருக்க முடியாதோ, நடத்தியிருக்க முடியாதோ, அது அவனுடைய செயல்னுதானே நாம நினைக்கணும்.  இப்படித்தான் நடக்கணும்கறது கர்மா. அதை எண்ணி வருத்தப்படுவதில் என்ன புண்ணியம்?”

ஆனந்தியின் மனோதைரியமும், ஆறுதல் பேச்சும், அன்பும் அவர்களை அந்தத் துயரத்திலிருந்து  மெதுவாக வெளிவரச் செய்தது.

பரத்தின் 8 வயதுவரை அவர்கள் இருந்தனர். ஆனந்தி, அவர்களை மகன் மறைந்த துக்கம் தெரியாமல் மிகுந்த சந்தோஷமாக வைத்திருந்தாள். பேரனின் மூலம் அவர்கள் சந்தோஷையே பார்த்தனர்.  கணவனுக்கான பி.எஃப் மற்றும் கொஞ்சம் பணம் வந்தது. அதை வைத்து ஆனந்தி குடும்பத்தை ஓட்டினாள்..  ஒரு குறையுமில்லாமல் ஆனந்தி கணவனின் பெற்றோர்களைப் பார்த்துக்கொண்டதில் அவர்களுக்கு மிகுந்த திருப்தி. 

வாழ்க்கை என்பது பாலைவனத்தைப் போன்றதுதானே… அதில் சோலை அபூர்வமாகவும், பாலை அதிகமாகவும்தானே பெரும்பாலானவர்களுக்கு அமைந்துவிடுகிறது.  ஆனந்தி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? சொந்தப் பெற்றோரைப் போல அவள் நேசித்தவர்கள் ஒரு வார இடைவெளியில் மறைந்து அவள் வாழ்க்கையில் வெறுமையை மீண்டும் கொண்டுவந்தனர்.  வீடும், பேரனின் பெயரில் அவர்கள் போட்டிருந்த 2 லட்சமும், மற்றபடி கணவன் மூலமாக வந்த பணத்தின் வட்டியும்தான் அவளுக்கு இருந்தது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த 2 லட்சத்தை தொடக்கூடாது, அது பரத்தின் உயர் கல்விக்குத்தான் என்பதில் ஆனந்தி உறுதியாக இருந்தாள்.  அந்தப் பணத்தை பரத்தின் கல்விக்காக எடுக்கும் வாய்ப்பே அவளுக்கு வரவில்லை.

**

திரும்பவும் பரத்திடமிருந்து போன் வந்தது… போனின் ரிங்டோன், அவளது நினைவுகளை நனவுலகத்துக்குக் கொண்டுவந்தது.

“லேப்ல இருந்து அர்ஜண்ட் கால் வந்ததும்மா. அதான் போனை கட் பண்ணிட்டேன்.  நீ நல்லாருக்கயா? ஒங்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும்.  ஒண்ணைத் தயங்காமச் சொல்லிடுவேன்…இன்னொண்ணு தயக்கமா இருக்கு”  பரத், அம்மாவிடம் தொலைபேசியில் பீடிகை போட்டான்.



அடுத்த வாரம் முடியும்

119 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஸ்ரீராம் - கதையை வெளியிட்டமைக்கு நன்றி. முதன் முதலில் செவ்வாய்க் கிழமை கே.வா.போ. இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகிறது என்று நினைக்கிறேன்.

      கதையைச் சுருக்க மனதில்லை. சம்பவங்கள் இல்லாமல் கதை எழுதுவது எனக்குக் கஷ்டம். ஓரிரண்டு சம்பவங்களிலேயே ஒவ்வொருவர் குணாதிசயங்களைச் சொல்வதும் எனக்கு சிரமம். இன்னும் கதை எழுதும் திறமை வசப்பட்டால் அப்போது சாத்தியமாகலாம்.

      இருந்தாலும் டிஸ்கரேஜ் செய்யாமல் இரண்டு பகுதிகளாக வெளியிட ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
    2. அக்காவுக்கு ஏத்த தம்பினு ஒத்துக் கொள்கிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நீங்க என் தம்பியேதான்..ஹா ஹா ஹா ஹா ஹா...

      இங்க நீங்க சொல்லிருக்கற கருத்துக்குத்தான் சொல்லறேன்...எனக்கும் சில சமயம் கதையைச் சுருக்க மனம் இருக்காது. சுருக்கினால் அதன் ஜீவன் போய்விடுமோ என்று எண்ணுவேன். எனக்கு இன்னும் அப்படிக் கதை எழுதும் திறன் வசப்படவில்லை என்றே சொல்லுவேன்.

      // முதன் முதலில் செவ்வாய்க் கிழமை கே.வா.போ. இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகிறது என்று நினைக்கிறேன்.//

      இல்லை என்றே தோன்றுகிறது நெல்லை. இதற்கு முன்பு ஓரிரு கதைகள் இரு பகுதிகளாக வெளிவந்துள்ளது என்பது என் நினைவு.

      ஸ்ரீராம் டிஸ்கரேஜ் செய்யவே மாட்டார் என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன் நெல்லை.

      கீதா


      நீக்கு
    3. ஆமாம் கீதா ரங்கன். எனக்கு 'வள வள' என்று எழுதப் பிடித்திருக்கிறது. அதில்தான் கதையின் ஜீவன் இருக்கு என்று நம்புகிறேன். பலவற்றை நமது யூகத்துக்கு விடுவதும் ஒருவித எழுத்துத் திறமை. ஆனால் அதில் வாசகனுக்கு எவ்வளவு தூரம் திருப்தி இருக்கும் என்பது என் சந்தேகம். வாசகன், கதை மாந்தர்களின் முழு குணாதிசயத்தையும் அறிந்து கொள்ள நினைக்கிறான். அவன்/அவள் நல்லவனா கெட்டவனா என்பதை தெளிவாக கதை சொல்லலைனா, ஒருவித அதிருப்தி இருக்கும்னு நினைக்கிறேன் (கிளைமாக்ஸ் பக்கத்தை கிழித்துவிடுவது போல).

      இதற்கு முன் கே.வா.போ. வில் இரண்டு வாரங்களாக வந்திருக்கா? பார்க்கணும்.

      ஸ்ரீராம் - அவரே எல்லா செவ்வாய்க்கும் கதை எழுதும் திறமை படைத்தவர். ஆனா மத்தவங்களையும் எழுத வைக்கணும் என்பதனால் அவர் மெனெக்கெடுகிறார் என்பது தெரியும்.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இந்த வர இருக்கும் அனைத்து நட்புகளுக்கும் நல்வரவும், வணக்கமும் துரை ஸார்.

      நீக்கு
    2. அவன் அறிவானா. இந்தத் தலைப்பில் என்ன சொல்ல வருகிறார்.

      படங்களையும் அவரே வரைந்திருக்கிறாரா. மிகவும் அருமையாக இருக்கிறது.
      அம்மா, மகன் ,கணினி
      எல்லாமே கதைக்கு அழகான லிங்க் கொடுக்கிறது.

      நீக்கு
    3. காலை வணக்கம் துரை செல்வராஜு சார், ஸ்ரீராம், வல்லிம்மா, பானுமதி வெங்கடேச்வரன் மேடம், கோமதி அரசு மேடம், 'தனியா வர பயப்படும்' கீதா சாம்பசிவம் மேடம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.

      நீக்கு
    4. @ வல்லி சிம்ஹன் - //இந்தத் தலைப்பில் என்ன சொல்ல வருகிறார்.// - இந்தக் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியை உண்டாக்கியது. என்ன சொல்ல வருகிறார் என்பது முதல் பாகத்திலேயே தெரிந்துவிட்டால் அப்புறம் சுவாரஸ்யமோ எதிர்பார்ப்போ ஏது?

      நீக்கு
    5. வரவேற்ற துரைக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
    6. //தனியா வர பயப்படும்' கீதா சாம்பசிவம் மேடம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.// "நட்பேய்" இருந்தால் கொஞ்சம் தைரியமா இருக்கும்! :)

      நீக்கு
    7. "நட்பேய்" - இது வரணும்னா அன்றைக்கு புதன் கிழமையாக இருக்கணும். மற்ற நாட்களில் எட்டிப்பார்க்காது. இந்த நட்பேய்க்கு, புதன் கிழமைதான் 'அதன் அமாவாசை'. அதைவிட்டா, ஸ்ரீராம் எழுத்துக்கான அன்று, ஸ்ரீராம் ரொம்ப பிஸின்னா, அவர் சார்புல நட்பேய் வரும்.

      நீக்கு
    8. நெல்லை என்னையும் தலைப்பு யோசிக்க வைத்தது! தலைப்பு சொல்வது ஏதோ சஸ்பென்ஸ். இன்னும் பல யூகங்கள் ....அடுத்த பகுதி வரட்டும் வெயிட்டிங்க்..ஒட்டு மொத்தமா கதைய போஸ்ட்மார்ட்டம் பண்ணிப்புடுவோம்!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    9. //மொத்தமா கதைய போஸ்ட்மார்ட்டம் // - பண்ணிடுங்க. உங்களுக்குத் தோன்றிய எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். முடிந்த வரை, கதை எதை நோக்கிப் போகிறது என்பதை சட் என்று தெரிந்துகொள்ளாமல் செய்திருக்கிறேன்.

      நீக்கு
  3. இன்றைக்கு
    அன்பின் திரு.நெல்லை அவர்களது கைவண்ணமா!....

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. அன்பு பானுமாவுக்கும் இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    3. படங்களும் கதையும் அருமை.

      ஆகா! தொடரும்...

      நீக்கு
    4. @மாதவி - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      நீக்கு
  5. கதையை நன்றாகக் கொண்டு செல்கிறார்..

    இதுவரைக்கும் கதையின் சம்பவங்களில் வெகு சுலபமாக ஆழ்ந்து போகிறது...

    அடுத்த பகுதியில் என்ன திருப்பம் வரப்போகிறதோ!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்.... சிலர் விக்ரமன் பாணியில் கதை எழுதுவார்கள்..சிலர் பாலசந்தர் பாணியில் (அதாவது 'துக்கம்', 'அபூர்வமாக நடக்கும் சம்பவங்களை மிகைப்படுத்துவது', கருத்தினால் பார்க்கிறவர்களுக்கு நல்லது ஏற்படுமா இல்லை தவறான பக்கங்களைப் புரட்டுகிறோமா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்வது என்று).. இன்னும் ஒரு வாரம்தானே.... எந்தப் பாணி என்று புரிந்துவிடும். நன்றி

      நீக்கு
  6. சின்னப்பையனாக கதை கேட்டு குழந்தைத்தனத்துடன் இருந்தவன் கண்ணெதிரே வாலிபனாக, தன்னை விட உலக அறிவு அதிகம் உடையவனாக மாறும் இயற்கை மாற்றம் .. அது தாயிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது ஆறுதல்.

    இந்த இடத்தில இயற்கையாக எதிர்பார்க்கும் மாற்றம் மகனிடம் மாற்றம்.. தாயிடம் லேசான அலட்சியம் காட்டத் தொடங்குவானோ என்கிற சங்கடஎதிர்பார்ப்பு... அது பொய்த்துப் போவதில் சிறு மகிழ்ச்சி.

    தனது அறிவை தாயிடம் காட்டாமல் பாசம் மட்டுமே காட்டும் மகன்..

    படைப்பாளி விஸ்ராந்தியான மனநிலையில் ஆன்மீக வழக்கங்களுடன் இருக்கும் நிலையில் படைக்கப்படும் படைப்புகளில் அனாவசிய பதற்றம் இருக்காது போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். நிறைவா நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.

      துக்கங்களையும், ஏழ்மையையும் பார்த்த, அறிவுள்ள தாய். அது அவளை ஓரளவு ஸ்திதப் ப்ரக்ஞனாக ஆக்கிவிட்டிருக்கிறது.

      ஆனால் அந்த மாதிரி உயர்ந்த எண்ணம் மகனிடமும் இருந்திருக்குமா? பணத்தையும் அந்தஸ்தையும் கண்டு, போக பூமியில் வாழ்க்கையை ஆரம்பித்தவனுக்கு யோக பூமியின், கர்ம பூமியின் நல்லெண்ணங்கள், அலட்சியத்தை உண்டாக்குமா?

      தன் அறிவைத் தாயிடம் காட்டி அலட்டிக்கொள்ளவில்லை. அது, அவளது நல்ல குணங்களும் சிறு வயதிலிருந்தே அவனை வளர்த்த விதமும் அவனிடம் ஒட்டிக்கொண்டுள்ளது என்பதைத்தான் காட்டுகிறதா?

      பார்ப்போம்.

      நீக்கு
    2. //படைப்பாளி விஸ்ராந்தியான மனநிலையில் ஆன்மீக வழக்கங்களுடன் இருக்கும் நிலையில் படைக்கப்படும் படைப்புகளில் அனாவசிய பதற்றம் இருக்காது போலும்..//// mmmmmmm?

      நீக்கு
    3. சின்னப்பையனாக கதை கேட்டு குழந்தைத்தனத்துடன் இருந்தவன் கண்ணெதிரே வாலிபனாக, தன்னை விட உலக அறிவு அதிகம் உடையவனாக மாறும் இயற்கை மாற்றம் .. அது தாயிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது ஆறுதல்.

      இந்த இடத்தில இயற்கையாக எதிர்பார்க்கும் மாற்றம் மகனிடம் மாற்றம்.. தாயிடம் லேசான அலட்சியம் காட்டத் தொடங்குவானோ என்கிற சங்கடஎதிர்பார்ப்பு... அது பொய்த்துப் போவதில் சிறு மகிழ்ச்சி.

      தனது அறிவை தாயிடம் காட்டாமல் பாசம் மட்டுமே காட்டும் மகன்..//

      டிட்டோ டிட்டோ வழி மொழிகிறேன்...ஸ்ரீராம்.

      இது இங்கும் பொருந்தும்....என்பதாலோ என்னவோ புரிந்து கொள்ள முடிந்தது.

      // யோக பூமியின், கர்ம பூமியின் நல்லெண்ணங்கள்,//

      நெல்லை எல்லா பூமியிலும் நல்லெண்ணம் கொண்டவர்கள் பிறந்திருக்கிறார்கள். எல்லா பூமியுமெ யோக பூமிதான். பூமி என்பது பொதுதானே? அது இயற்கை எனும் இறைவனால் படைக்கப்பட்டதுதானே! அப்படி இருக்கும் போது எல்லா பூமியுமே புண்ணிய பூமிதான். இங்கு சொல்லப்படுவது போல் ஒவ்வொரு பூமியிலும் ப்ரொஃபெட் என்று பிறந்துதானே இருக்கிறார்கள். நம் பார்வையில்தான் இருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து இது, நெல்லை. என்னைப் பொருத்தவரை கங்கை எப்படிப் புனிதமானது என்று சொல்லப்படுகிறதோ அது போல் தான் நைல் நதியும், ரெட் சீயும், பூமி முழுவதுமே நல்ல எண்ணங்கள் நிறைந்துதான் இருக்கிறது. எங்கு சென்றாலும் நாம் நல்லெண்ணத்துடன் வாழ முடியும். நமக்குள் இருப்பதை வெளியில் தேடும் போதுதான் பல குழப்பங்கள், பிரச்சனைகள்...ஒரு மகன் பிறந்த இடத்தை விட்டு வெளி ஊரில் வாழ்கிறான் என்பது பணம், அந்தஸ்து சார்ந்தது மட்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்?

      ஒவ்வொரு ஊரிலும், பூமியிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டே... இங்குள்ளவர்களையே எடுத்துக் கொண்டாலும் கூட தாய்/தந்தை கிராமத்திலும் குழந்தைகள் வடக்கிலுமாக வாழ்வதில்லையா? அல்லது தங்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று முதியோர் இல்லத்தில் விடுவதில்லையா? கூட இருந்து கொண்டே கொடுமைப்படுத்துவதில்லையா? அப்போ இந்த பூமி என்ன பூமி?!! எண்ணங்கள் என்ன எண்ணங்கள்?

      கீதா

      நீக்கு
    4. @ கீதா ரங்கன் - //அலட்சியம் காட்டத் தொடங்குவானோ // - காட்டுபவர்களும் நிறைய இருக்கிறார்கள். 'அப்பா அம்மா'வுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்களே. அதிலும் பதின்ம வயதில் இந்த எண்ணம் மிக அதிகம்.

      கர்ம பூமி/போக பூமி - இது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகிறது. இருந்தாலும், நீங்க யோசித்துப் பார்த்தால், 'கோவில் இல்லா ஊர்' நம்மிடம் இல்லை. இவை, குறைந்த பட்சம் 500லிருந்து 1000+ ஆண்டுகளுக்கு முந்தியே இதுபோன்ற நிலைமை. ஏகப்பட்ட பக்தி இலக்கியங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தியை வளர்த்திருக்கிறார்கள். சமூகத்தில் பக்தி என்பதும், பேராசை பெருமளவு இல்லாததும் நம்ம நாட்டின் சிறப்புதானே.

      நீங்கள் சொல்லியிருக்கும் மாற்றங்கள் வெகு சமீப காலத்தவை. காரணம், நாமும் 'போகம்' நோக்கிப் போய் பல வருடங்கள் ஆகின்றன. எங்கு ஆசையும், நாம் நன்றாக இருக்கணும் என்ற சுயநலமும் இருக்கிறதோ அது 'போக பூமி'யாக இருப்பதில் வியப்பென்ன?

      நீக்கு
  7. அன்பின் துரை, அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம். இன்னும் வரப் போகிறவர்களுக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
    நெல்லைத்தமிழனின் கற்பனையில் ஒரு தாயின் தியாகமும் கட்டுப்பாடும்
    மகனின் கடமை உணர்வும் வெளிப்படுகிறது.
    வெகு இயல்பாகக் கதையைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் முரளி.
    நல்லதே நடக்கட்டும் என்று மனது வேண்டுகிறது.
    அந்தத் தாயும் மகனும் வரப் போகும் மருமகளும் நலமே வாழ பிரார்த்தனைகள்.
    வாழ்த்துகள் ஸ்ரீராம். வாழ்த்துகள் முரளிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா.

      தன் லட்சியம், ஆசை நிறைவேறாமல்போன ஏழைத்தாய், தன் மகனின் உயர்ந்த நிலையைப் பார்ப்பாளா?

      அவனுக்குத் திருமணமா? வரப்போகும் மருமகள் என்று கோடிகாண்பித்துவிட்டீர்களே... வாழ்க்கையையே கதை சொல்லப்போகிறது என்று முடிவுகட்டிவிட்டீர்களா?

      எல்லோரும் இன்புற்றிருக்க நினைக்கும் உங்கள் மனம் வாழ்க.

      நீக்கு
    3. அன்பு முரளிமா,
      பேரனிடம் அவன் விடுமுறை ஆரம்பித்த நாளிலிருந்து
      மஹாபாரத,பாகவதக் கதைகளைச் சொல்லி வருகிறேன்.

      இப்போது அவனே கேட்கிறான். என்ன மாரல் இன்னிக்கு பாட்டி,
      பக்தியா, உண்மை பேசுவதா, பகவான் அருளா, வீரமா என்று.

      அதுபோல உங்கள் கதையிலும் திருப்பம் இருக்கலாம்.
      நன்மையோ ,அல்லதோ அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
      அம்மாவுக்கு உண்டு என்று தெரிந்த மகன் அவன். இருவருக்கும் நன்மை
      வேண்டும். அதான் அப்படி சொன்னேன்.

      நீக்கு
    4. பேரன்கள் பொதுவா பாட்டி தாத்தாட்டதான் (அதிலும் பாட்டியிடம்தான்) ரொம்ப அன்பா இருப்பாங்க. சுதந்திரமாகவும் இருப்பாங்க. நீங்க அவனுக்கு கதைகள்லாம் சொல்வதைக் கேட்க சந்தோஷமாத்தான் இருக்கு. உங்களுக்கும் அவங்களோட பேசுவதுதான் மனசுக்கு ரிலாக்ஸ்டாக (தளர்வாக?) இருக்கும்.

      எல்லோருக்கும் நன்மையையே ஒரு கதை தரும். அது அனுபவம் தந்த பாடம், அல்லது நல்ல நீதி உடையதாகவே இருக்கும்.

      நன்றி...

      நீக்கு
    5. வல்லிம்மா எனக்கு என் அப்பாவழி தாத்தா பாட்டி நினைவுக்கு வந்தார்கள்.

      நெல்லை நான் பாட்டி தாத்தா இருவரிடமுமே ரொம்ப க்ளோஸ். தாத்தாவுக்கு நான் ரொம்பவே பெட். அவர் மடியில் அமர்த்திக் கொண்டு துருவ நட்சத்திரம் கதை எல்லாம் சொன்னது இன்னும் பசுமையாக நினைவில். நான் பிறந்த நேரம் அவர் கீதை வாசித்துக் கொண்டிருந்தாராம் அதனால் தான் எனக்கு கீதா என்றே பெயர் வைத்தாராம்.

      பாட்டியும் எனக்குப் பல நீதிக் கதைகள், திருப்பாவை என்றும் அத்தைகள் எனக்குப் பாட்டு, நடனம் என்று பலதும் கற்றுக் கொடுத்தார்கள்.

      வல்லிம்மா அண்ட் நெல்லை ரொம்ப நன்றி...

      கீதா

      நீக்கு
    6. @கீதா ரங்கன் - நம் சிறு வயது நினைவுகள் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவன.

      பசுமை நிறைந்த நினைவுகளே
      பாடித் திரியும் பறவைகளே
      பழகிக் களித்த தோழர்களே
      பறந்து செல்கின்றோம்........ என்று கேட்ட பாடல் நினைவுக்கு வருகிறது..

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. //வாயில்லா ஜீவனுக்கு தண்ணி கொடுக்கறதைப் போல நல்ல செயல் கிடையாதுடா”//

    கோடை காலத்துக்கு ஏற்ற வரிகள். இப்படியாவது வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணி கொடுக்கட்டும்.
    ஆரம்பத்திலும் பரத் ஏதோ சொல்ல வருகிறார், அந்த தயக்கம் என்னவாக இருக்கும் என்று நினைக்க வைத்தார்.

    //ஒண்ணைத் தயங்காமச் சொல்லிடுவேன்…இன்னொண்ணு தயக்கமா இருக்கு”//
    என்னவாக இருக்கும் என்று நினைக்க வைத்து தொடரும் என்று போட்டு விட்டார்

    நான் நினைத்த விஷயம் தானா என்பதை அடுத்த பதிவில் பார்க்கவா? அல்லது என் நினைப்பை சொல்லலாமா தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்...

      கோடையோ, குளிரோ....

      உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
      தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்
      வயிரம் உடைய நெஞ்சு வேண்டும்
      இது வாழும் முறைமையடி பாப்பா

      என்பது எப்போதும் பசங்களுக்குச் சொல்லி வளர்க்கவேண்டிய போதனைகள் அல்லவா?

      இரண்டு பகுதியாக வெளிவந்தால் ஏதேனும் ஒரு சரியான இடத்தில்தானே 'தொடரும்' போடவேண்டும்.

      உங்கள் நினைப்பைச் சொல்வதில் என்ன தயக்கம்? அது கதை எழுதுபவனின் திறமையையோ அல்லது இன்னும் அதிக திறமை வேண்டும் என்பதையோ காண்பிக்கும் அல்லவா?

      நீக்கு
  10. இப்படியாக இருக்கலாம்... என்ற வழக்கமான முடிவு ஒன்று முன் நிற்கிறது...

    ஆனாலும் அதுவல்ல... வேறொன்று.. என்று உள்மனம் சொல்கிறது....

    பார்க்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்...

      வழக்கமான முடிவு, உள்மனம் சொல்லிய முடிவு - இதனை அடுத்த பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

      நீக்கு
  11. சிறு வயதில் குழந்தைகள் அம்மாவிடம், அப்பாவிடம் நிறைய கேள்விகள் கேட்பார்கள், அது இயல்பு .
    அதை அழகாய் காட்சி படுத்தி இருக்கிறார்.

    //“அப்போ நாளைலேர்ந்து நானே கொண்டுபோய் வைக்கவா?”//

    அம்மாவின் பேச்சை கேட்டு புள்ளினங்களுக்கு தண்ணீர் தானே தண்ணீர் வைப்பதாக நல்ல பழக்கம் ஆரம்பிக்கிறது.

    //“சரி… நாளைலேர்ந்து நீயே மாடீல தண்ணீர் கொண்டுபோய் வை. இப்போ தாத்தாவும் பாட்டியும் சாப்டாச்சான்னு பாரு. நானே தட்டை எடுத்துடறேன்னு சொல்லு”//

    அப்படியே தாத்தா, பாட்டியை கவனித்துக் கொள்ளும் கடமையும் கற்றுக் கொடுக்க படுகிறது.

    தனி மனிஷியாக வளர்த்த குழந்தை பொறுப்புணர்ந்து அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்காமல் நன்கு படித்துவிட்டர்.

    //வாழ்க்கை என்பது பாலைவனத்தைப் போன்றதுதானே… அதில் சோலை அபூர்வமாகவும், பாலை அதிகமாகவும்தானே பெரும்பாலானவர்களுக்கு அமைந்துவிடுகிறது. //

    இடையே ஒரு கருத்து சொல்கிறார் அதுதான் பயமாய் இருக்கு.
    ஆனந்தி வாழ்க்கையை சோலைவனமாய் மாற்றி ஆனந்தம் அளிப்பாரா பரத்? அல்லது பாலைவனமாய் மாற்றுவாரா?
    அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்..உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

      தனி மனுஷி, தன் வாழ்வில் நிறைந்த துக்கம் ஏமாற்றம் இவற்றைத் தாங்கிக்கொண்டு, தன் மகனை நல்லவிதமாக வளர்ப்பது ஒன்றே தன் தலையாய கடமை என்று நினைத்துவிட்டாரென்றால், குழந்தை வளர்ப்பில் குறை ஏது?

      விதை ஒன்று போட்டால், சுரை ஒன்று முளைக்குமா?

      இந்தப் பழமொழியைப் பொய்யாக்குவாரா மகன், இல்லை, தாய் போன்ற மனதுடன் இருப்பாரா? சாதாரண நிலையிலிருந்து, பெரிய நிலைக்கு தன் முயற்சியாலும் பிறர் உதவியாலும் வந்தவர், வாழ்க்கையின் செளகரியமான நிலைக்கு நுழைந்தவுடன், பழசை மறந்து, புதுச் சுகத்தில் அமிழ்ந்துவிடுவாரா? அமெரிக்கா, பெரும்பாலானவர்களை மாற்றுவதுபோல் அவரையும் அப்படி மாற்றிவிட்டிருக்குமா? துக்கங்களைக் கண்டு மனதளவில் அவைகள் தன்னைப் பாதிக்காமல் வைத்துக்கொண்ட தாய், அதே மாதிரியே எதையும் ஏற்றுக்கொள்ளும், புறக்கணிப்பையும் புரிந்துகொள்ளும் மனத் திண்மையோடுதான் இருப்பாரா?

      அடுத்த வாரம் தெரிந்துவிடாதா?

      நீக்கு
  12. அருமையாக செல்கிறது கதை.

    சரியான இடங்களில் பொருத்தமான படங்களும்...

    //வாழ்க்கை என்பது பாலைவனத்தைப் போன்றதுதானே… அதில் சோலை அபூர்வமாகவும், பாலை அதிகமாகவும்தானே பெரும்பாலானவர்களுக்கு அமைந்து விடுகிறது//

    அற்புதமான வார்த்தை.

    பரத் காதலில் விழுந்து விட்டானோ...
    இதையும் ஆனந்தி ஏற்றுக் கொள்வாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... கதைப்பகுதி உங்களைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

      அனேகமாக எல்லோருக்கும் வாழ்க்கை என்பது பாலைவனம் தானே...அதில் எப்போதாவதுதானே சோலை தென்படுகிறது. எத்தனைபேரால் அந்தப் பாலைவனத்தை ரொம்ப சேதம் இல்லாமல் கடக்க முடிகிறது?

      வாழ்க்கையின் இறுதிப்பக்கத்துக்கு வரும்போது, 'வாழ்க்கையை ஓரளவு சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறோம். பெரும்பாலும் சரியான முடிவுகளை எடுக்க இறையருள் துணை புரிந்திருக்கிறது, கஷ்டங்களையெல்லாம் இறைவன் அருளால் ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருக்கிறோம்' என்ற திருப்தியை நம் மனம் வெளிப்படுத்துமானால் அதைவிட நிறைவான வாழ்க்கை ஏது?

      அதற்குள் காதல் வயப்படுவானா? வயப்பட்டால், அவன் தாய் அதனை ஏற்றுக்கொள்வாளா? தன் கடமையை, மகன் எடுத்துக்கொண்டானே என்று ஏமாற்றமடையமாட்டாளா? இல்லை பரத், திருமணமே எனக்கு வேண்டாம், நீ என்னுடன் கடைசி காலம் வரை இருந்தாலே போதும் என்று சொல்லிவிடுவானா?

      அடுத்த வாரம்தானே தெரியும்?

      நீக்கு
  13. //“போடா போடா… நீ அவளைத் தாங்கு. அதுவே அவளை என்னைத் தாங்க வைக்கும். அதுக்காக, நானும் ஒங்களோடயே பெட்டி படுக்கையைத் தூக்கிக்கிட்டு வந்து உட்கார்ந்துடுவேன்னு நினைக்காதே. நீ மேல மேல வாழ்க்கைல முன்னேறி வரணும்டா. அதுதான் எனக்குத் திருப்தி”///

    எவ்வளவு அழகாய் தாய் சொல்லி விட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம்...இப்படித்தானே பெரும்பாலான தாய், தந்தையர் நினைப்பர். நீங்களும் அப்படித்தானே நினைப்பீர்கள்? எனக்கு இங்குள்ள என்னைவிடப் பெரிய அனுபவசாலிகள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தேன். அதற்குப் பதிலாக வந்ததை எழுதியிருக்கேன்.

      தாய்...எப்போதும் சுயநலமாக (பெரும்பாலும்) இருக்கமாட்டார்.. அவர்கள் நினைப்பது,

      எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
      நல்ல வளத்துடன் வாழ்க உன் மனமும் நிறைவுடன் வாழ்க
      வாழ்க வாழ்க

      என்றுதானே

      நீக்கு
    2. //தாய்...எப்போதும் சுயநலமாக (பெரும்பாலும்) இருக்கமாட்டார்.. அவர்கள் நினைப்பது,//
      சுயநலமுள்ள தாய்களைப் பார்த்ததில்லை போல! நான் ஏதாவது சொன்னால் அது மாறுபட்ட் சிந்தனையாகிவிடும். ஆகவே பொறுத்திருக்கேன் அடுத்தவாரம் வரை! என்னைப் பொறுத்தவரை இன்பம்/துன்பம், பகல்/இரவு, இருட்டு/வெளிச்சம், என எல்லாத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு.

      நீக்கு
    3. @கீசா மேடம் - அடுத்த வாரம் சொல்லுங்க. ஆனா பொதுவா எக்செப்ஷன்ஸை (இதுக்கு தமிழ் தெரியலை) நாம சொல்லக்கூடாது. பொதுவா தாய் என்பவள் சுயநலவாதி அல்ல. (நானும் ஒருவருக்கு வயதாகிவிட்டால் சுயநலவாதிகளா ஆவதைப் பார்த்திருக்கேன். கொஞ்சம் எரிச்சலா இருக்கும்...என்ன இப்படி சுயநலமா யோசிக்கறாங்களேன்னு. இதுல ஆண் பெண் பேதம் கிடையாது)

      நீக்கு
    4. எக்செப்ஷன்ஸை = விதிவிலக்கு!

      நீக்கு
    5. தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் விட்டால், அது சட் என நினைவுக்கு வருவதில்லை ஸ்ரீராம். அதற்காகவேணும் அதிகமாக தமிழில் எழுதணும் என நினைக்கிறேன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வாங்க ராமலக்‌ஷ்மி மேடம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  15. முதலில் மகன்-- அம்மாவின் கான்வர்ஷேஷன், இரண்டாவதில் அம்மாவின் கதை --- இந்த இரண்டையும் வாசகர்களுக்கு நேரேட் பண்ணுவது யார்? கதாசிரியரே!

    உரையாடலில் கதையை நகர்த்திய வெற்றி கதாசிரியர் கதையைச் சொல்லிக்கொண்டு வருகிறார் என்ற உணர்வை வாசிக்கிறவர்களுக்கு
    ஏற்படுத்தாமல் இருப்பதில் வெற்றி பெறவில்லை.

    சுஜாதாவின் கதைகளில் நீங்கள் பார்க்கலாம்.

    ஒரு கதையைப் படிக்கிறோம் என்று படிப்பவர் கொஞ்சம் கூட உணர முடியாதவாறு கதை நடக்கும் நட்ட நடு ஸ்பாட்டில் அவர்களைக் கொண்டு போய் இறக்கிவிடுவது அவர் பாணி. கண்ணுக்கு முன்னாடி
    நடக்கும் அத்தனையிலும் நாமும் பங்கு கொள்கிற மாதிரி அல்லது நேரடியாக நடப்பது அத்தனையையும் நாம் பார்க்கிற மாதிரி எத்தனை விதம் உண்டோ அத்தனை வித சொக்குப் பொடிகளையும் தூவி விட்டு தான் தேமெனென்று இருப்பது தெரியாது அப்ஸ்காண்ட் ஆகிவிடுவார்.
    நடக்கும் நிகழ்ச்சிகள், நாம்-- என்று எல்லாமே நேரடி பரிச்சயத்தில் அவரவர் கொள்ளும் உணர்விற்கேற்ப அவரவர் வாசித்ததின் அனுபவத்தைக் கொள்ள வேண்டியதாகி விடும்.

    கதை எழுதுவதில் மிக வெற்றிகரமான பாணி இது.

    சுஜாதாவையும் என்னையும் ஒருசேர நிறுத்தியா என்று எண்ண வேண்டாம்.

    சொல்லப் போனால் சிறுகதை எழுதுவதில் இதெல்லாம் குறையே இல்லை. கதை எழுதுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி
    கதை எழுதும் ஆயிரம் பேர் க்யூவில் நீங்களும் ஒருவராக நிற்கலாம்.
    அதுவல்ல ஆகச்சிறப்பது. ஆனால் அந்த க்யூவைத் தாண்டி வெளிப்படுவது தான் ஆயிரத்தில் ஒருவராக்கும்.

    ஒரு சிறுகதைக்கான கரு ரொம்ப பிரமாதமாக உங்களிடம் சிக்குகிறது. வெட்ட வேண்டியதை வெட்டி, நறுக்குத் தெரித்தாற் கதையை தூக்கி நிறுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டு விட்டால் மிகச் சிறந்த கதாசிரியராக நீங்கள் திகழ்வீர்கள் என்ற ஆசையினால் இதைச் சொலவதாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.

    அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்... உங்கள் நெடிய விமர்சனம் படித்து மகிழ்ச்சி.

      நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எந்த இடத்தில் இந்தத் தவறு நேர்கிறது என்று பார்க்கிறேன்.

      நீங்கள் சொல்லியபடி, சரியான கரு சிக்கும்போதுதான், கதை எழுதும் எண்ணமே வரும். எதை வெட்டவேண்டும், எது எடுத்துக்கொண்ட கருவுக்குத் தேவையில்லை என்பது போகப் போகத்தான் புரியும் என நினைக்கிறேன்.

      எனக்கு கதையை அனுப்பியபிறகு ஒரு எண்ணம். நன்றாக சிறகை கட் செய்து, ரொம்பவும் நேர்த்தியாக்கி கல்கி சிறுகதைப் போட்டிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம். 'கரு' அதற்கேற்றதுதான் என்றும் மனதில் தோன்றியது. பிறகு, 'சிட்டுக் குருவி' 'பருந்துகள் விளையாடும் இடத்திற்கு'ப் பறந்துபோக ஆசைப்படலாமா என்று தோன்றி அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

      உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. அடுத்த பகுதியில் உங்கள் முழுமையான விமர்சனம் (மொத்தக் கதைக்கும்) எதிர்பார்த்திருப்பேன்.

      நீக்கு
    2. இப்பொழுதும் அந்தக் காரியத்தைச் செய்யலாம். கதைக் கருவை வைத்துக் கொண்டு வேறு கோணத்தில் புதுசாய் எழுதிப் பாருங்கள்.

      பொதுவாக போட்டிகளில் பருந்துகளின் தொல்லை அவ்வளவாக இருக்காது. ஒதுங்கிப் போகாமல் அனுப்பி பங்கு கொண்டால் தான் அதுவும் ஒரு அனுபவமாகி பத்திரிகைக்காரர்களின் பல கல்யாண குணங்கள் நமக்கும் தெரிய வரும். பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் பத்திரிகை போட்டிகளைப் பற்றி அனுபவமுள்ளவர். குறிப்பாக மங்கையர் மலர்.

      நீக்கு
    3. ஜீவி சார்... என் தனிப்பட்ட அனுபவம்... 'கதை', 'சரி..இன்னைக்கு உட்கார்ந்து இந்தக் கருவை வைத்து எழுதுவோம்' என்று வருவதல்ல. ஏதேனும் ஒன்று மனதில் இருக்கணும், மெதுவாக யோசிக்கணும், அதில் நமக்கு ஆர்வம் இருக்கணும், மெதுவாக எழுதணும், அதற்கு சில நேரங்களில் மாதங்கள் ஆகிவிடும்...இப்படித்தான் எனக்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு சில சமயங்களில் கதையின் கிளைமாக்ஸ், முழுக் கதையையும் ஓரளவு விரைவாக எழுத வைக்கும்.

      கதாசிரியர்களுக்கு ஒருவேளை தொடர்ந்து நிறைய கதைகள் எழுதமுடியும் என்று நினைக்கிறேன். என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு அப்படி எழுத முடியாது.

      உங்கள் ஊக்கத்துக்கு நன்றி.

      இதை எழுதும்போது முதலில் என்கரேஜ்மெண்ட் என்றுதான் எழுதினேன். சரியான தமிழ் வார்த்தை நினைவுக்கு வரவில்லை. கூகிளிட்டுப் பிடித்தேன்.

      நீக்கு
    4. கதையோட்டம் நன்றாகத்தான் இருக்கிறது நெல்லைத்தமிழன்! சுஜாதா மாதிரி நறுக் சுருக் ஆக எழுதுவது ஒரு விதம்! அதையே நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. அந்தநாளைய ஜெயகாந்தன் கதைகளை, அதுவும் ஆனந்தவிகடனில் வந்த முத்திரைக்கதைகளில் பார்த்தீர்களானால், இது சிறுகதையா குறுங்கதையா என்ற சந்தேகம் கூட வரும். சிறுகதை என்பது சம்பவங்களுடைய கோர்வையல்ல என்றொரு கருத்தாக்கமும் உண்டு பளீரென்று வெட்டும் மின்னல்கீற்று மாதிரி கதைக்கருவை சுருங்கச் சொல்வதுதான் சிறுகதைக்கு அழகு

      உதாரணத்துக்கு ஜெயகாந்தனுடைய புதுச்செருப்பு கடிக்கும் சிறுகதை. அதன் நாயகி கடைசியில் கேட்கிற ஒற்றை வாக்கியம்தான் ஒட்டுமொத்தக் கதையின் சாரமே! "புதுச்செருப்பு கடிக்கும்தான். அதுக்காக யாராச்சும் பழஞ்செருப்பு வாங்குவாங்களாங்கோ?"

      நீக்கு
    5. கிருஷ்ணமூர்த்தி சார்...உங்கள் கருத்தில் அர்த்தம் இருக்கு.

      இப்போ ஒருபக்கக் கதைனா, எதுனாலும் சம்பவம் எழுதி, கடைசி ஓரிரு வரிகளில் ட்விஸ்ட் வைக்கலாம். மற்றபடி சம்பவங்களைக் கோர்வையாக்கி கதை எழுதினா, அது பெரிசா வருது. உங்க கருத்தைப் பார்த்தபின்பு எனக்கு, இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் சொன்ன (?) செய்தி நினைவுக்கு வருது. 1 மணி நேரம் பேசணும்னா, 2 மணி நேரம் பேச்சு தயார் செய்யணும், அதுவே 10 நிமிஷம் பேச்சுன்னா, 5 மணி நேரம் தயார் செய்யணும் என்பதுபோல.

      சுருக்கமா எழுதுவதற்கு மிகுந்த திறமை வேண்டும். அது இப்போது என்னிடம் இல்லை. ஒருவேளை எழுத்தே தொழிலா வச்சுக்கிட்டு எழுதி எழுதிப் பழகினா வருமோ என்னவோ.

      விகடன் முத்திரைக் கதைகள் கொஞ்சம் நெடுங்கதை போலத்தான் இருக்கும். குறிப்பிடத் தக்க கதைகள் ஆனா அதை எழுதுறவங்க எழுத்துத் திறமையின் ஜாம்பான்கள். ஹா ஹா.

      நன்றி..

      நீக்கு
  16. பெண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோ, அவர்களின் அப்பா... அதே போல் ஆண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோயின், அவர்களின் அம்மா...

    வரவு - அம்மாவாக தொடருமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன்.

      எந்த மாதிரி கதை செல்லப்போகிறது என்று நானும் யோசிக்கிறேன்.

      ஆண்களுக்கு முதல் ஹீரோயின் அம்மாவா? அப்படி எனக்குத் தோன்றுவதில்லை. ஆனால் ஆண் ஒருவன், தன் குழந்தைத் தனத்தோடு வெட்கப்படாமல் பேசுவது, சிணுங்குவது, கோபப்படுவது, அன்பு காட்டுவது எல்லாமே தன் அம்மாவிடம் மட்டும்தான் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். தாய் மட்டும்தான் மகனின் உள்ளும் புறமும் அறிந்தவள் மட்டுமல்ல, மன்னிக்கும் இயல்பும் உடையவள்.

      நீக்கு
    2. பதிவின் தலைப்பு (அவன் அறிவானா...?) வைத்து, கதை இப்பிடித்தான் இருக்கும் (ஓரளவு) என்று கணிக்க முடிகிறது...

      (ஓரளவு) = அவன்

      அவன் சந்தோஷ்-ஷா...?
      அவன் சாம்பசிவமா...?
      அவன் பிரம்மனா...? (ஆசிரியை சரஸ்வதி என்பதால்)

      இவை (அவன்கள்) இல்லாத முடிவை எதிர்நோக்கி... ஆவலுடன்... (!)

      நீக்கு
    3. காத்திருங்கள் தனபாலன். 'அவன்' இவர்கள் யாருமே இல்லாதிருந்தால்? அல்லது புது விதமான பிரச்சனையைத் தன் தாய்க்குக் கொண்டுவருபவனாக இருந்தால்? இல்லை..தன் பிறப்பை அறியாதவனாக இருந்திருந்தால்? மிக்க நன்றி.

      நீக்கு
    4. மாற்றுங்கள் உங்கள் 'கதை' தானே...?

      நீக்கு
    5. //மாற்றுங்கள்// - ஹா..ஹா.. முழுக் கதையையும் அனுப்பாமல், பகுதி படித்துப் பார்த்து, ஓகே..வெளியிட்டுடலாம் என்று ஸ்ரீராம் சொல்லுவதற்கு நான் என்ன 'திறமை மிகு எழுத்தாளனா'? முழுக்கதையும் அனுப்பிய பிறகும் அவருக்கு எந்த இடம் சரியாகப் படலையோ அதனைச் சொல்லி, சரி செய்து அனுப்பச் சொல்லுவார். 'கதை' வடிவத்தில் வராத 'கதைகளையும்' நான் அனுப்பி ஸ்ரீராம், இது கதை மாதிரி வரலை, வெறும் சம்பவங்களின் டைரிக் குறிப்பா இருக்குன்னு திருப்பி அனுப்பியதும் நடந்திருக்கிறது.

      நீக்கு
    6. // அவருக்கு எந்த இடம் சரியாகப் படலையோ அதனைச் சொல்லி, சரி செய்து அனுப்பச் சொல்லுவார். //

      இப்படி ஒரு கோல்மால் இருப்பது எனக்கு இன்று தான் தெரியும்...! Pigboss விட இது கேவலமாக இருக்கு...!

      பிஃபாஸ் by (உபயம்) : தி கிரேட் கௌ அண்ணா அவர்கள் in FB

      நன்றி...

      நீக்கு
    7. இல்லை தி.தனபாலன். கிளைமாக்ஸில் நான் சில வரிகள் எழுதி (எல்லோருக்கும் கதை புரியணும் என்று) இருந்தால், அது அவசியமா, கதையைப் படிக்கும்போதே புரிகிறது என்று சொல்வார். எடுத்துவிடுங்கள் என்று சொன்னதில்லை. ஆனால் 'கதை' என்று நினைத்து நான் சம்பவங்களின் கோர்வையை அனுப்பியபோது, இது கதை வடிவத்தில் இல்லை என்று திருப்பி அனுப்பியிருக்கார்.

      அதில் நான் தவறொன்றும் காணவில்லை. அந்த மாதிரி professionalஆக இருப்பதால்தான் நிறையபேர் இந்தத் தளத்துக்கு எழுதி அனுப்பறாங்கன்னு நான் நினைக்கிறேன்.

      நீக்கு
  17. அடுத்த பகுதியையும் வாசித்தபின் கருத்துப் பகிர்தல் நல்லது என்பதால்....
    வாசிப்புடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பரிவை குமார்... வாசித்ததற்கு நன்றி. அடுத்த பகுதியில் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  18. முழு கதையையும் படித்து விட்டு கருத்து கூறுவதுதான் சரியாக இருக்கும் இல்லையா? So let me reserve my comments till next week.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... முழுக்கதை, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் சரியா வந்திருக்கா என்ற கருத்தைச் சொல்லவோ, விமர்சிக்கவோ தேவை. ஆனால் முதல் பகுதியிலேயே அதன் நிறை குறைகளைச் சொல்லியிருக்கலாமே.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. // படைப்பாளி விஸ்ராந்தியான மனநிலையில் ஆன்மீக வழக்கங்களுடன் இருக்கும் நிலையில் படைக்கப்படும் படைப்புகளில் அனாவசிய பதற்றம் இருக்காது போலும்... //

    ஸ்ரீராம் சார், இதே தான் நானும் நினைத்தேன்... எனது பாணியில்...

    ஒரு Modern தாய் சொல்கிறார்கள் :

    என் குழந்தை ரொம்ப சமர்த்து... நாங்கள் எதிர்பார்த்தது போலவே... சொன்னதை கேட்பான்... சுவற்றில் கிறுக்க கூட எங்களை பார்ப்பான்... இன்னும் பல இருக்குங்க...

    குழந்தையா அது...?

    இது தான் இந்த கதையின் முதல் பாகம்... ஷங்கர் படத்தின் சிறு காட்சியைப் போல...(!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தி.தனபாலன்.

      //என் குழந்தை ரொம்ப சமர்த்து... நாங்கள் எதிர்பார்த்தது போலவே...// - ஆஹா... ஆர்டர் கொடுத்துச் செய்த ரோபாவா அது?

      குழந்தை என்பது ஒரு உயிர். அது தவறுகள் செய்து மெதுவாக உலகத்தைப் புரிந்துகொள்ளும், அனுபவப்படும். அந்த சின்ன உயிர், பெரிய தவறுகளையோ, சக உயிர்களை மதிக்காமல் ஆணவத்தோடு வளர்வதையோதான் தங்கள் கண்காணிப்பு, அறிவுறுத்தல், தாங்கள் அவனிடம்/அவளிடம் எதிர்பார்ப்பதற்கு மேலாக நன்றாக நடந்துகொள்ளுதல் மூலம்தான் கல்வியளிக்க இயலும்.

      இது வாழ்க்கையில் தடங்கல்கள் வந்த ஒரு குடும்பத்தின் கதை. ஆனால் கதையின் கரு, அந்தத் தடங்கல்கள் பற்றி அல்ல. அதனால்தான் கதை ஸ்மூத்தாக போவதுபோலத் தோன்றுகிறது.

      படிப்பு லட்சியம், பெரிய ஆளாகணும் என்ற எண்ணம் உள்ள பெண், திருமணம் என்ற பந்தத்தில் தள்ளப்படுகிறாள். ஏற்கனவே அவளுக்கு அம்மா வளர்ப்பே இல்லை. திருமணம் ஆன உடனேயே தன்னை தாய்க்கும் மேலாக வளர்த்த தந்தை இறந்துவிடுகிறாள். இன்னும் கஷ்டங்கள். பிறகு ஒரு நல்லது நடக்கும்போது, சிறிது காலத்திலேயே கணவனும் மறைகிறாள்...தொடர்ந்து கணவனின் பெற்றோர்களும் மறைகின்றனர். ஆதரவே இல்லாமல், தடங்கல்களே வாழ்க்கையாக அந்தத் தாய் இருக்கிறாள் என்பது இதுவரை வந்த கதை.

      நீக்கு
    2. //ஆஹா... ஆர்டர் கொடுத்துச் செய்த ரோபாவா அது?//

      அதையே தான் நானும் கேட்கிறேன்...

      தயிர் சாதம் போல் ஸ்மூத்தாக கதையில் கூட நடக்க வாய்ப்புள்ளதா என்ன...?

      நீக்கு
    3. இங்கு வலைத்தளத்தில் நாம் பார்த்த சிலரே அவ்வாறு சாதாரண நிலையிலிருந்து பின்னர் அமெரிக்காவுக்கு சர்வசாதாரணமாகச் செல்லும் வாய்ப்பு, அங்கேயே வாழும் வாய்ப்பு பெற்றவர்கள். ஓகே..அப்போ அவங்க வாழ்க்கை அதற்குப் பிறகு ஆஹா ஓஹோ என்று இருக்கிறதா என்றால், எல்லோருக்கும் அப்படி இருக்காது. எந்த வாழ்க்கையும் ஸ்மூத்தாக இருக்காது. தடங்கல் இல்லாத வாழ்க்கையே இருக்காது.

      அனைத்தையும் பெற்றவர்கள், அந்த ஆண்டவனின் அவதாரங்களுமே இல்லை என்னும்போது, சாதாரணவர்களுக்கு வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்ததுதானே.

      இந்தப் பையனையே எடுத்துக்கொள்ளுங்கள். நமக்கு ஸ்மூத்தான வாழ்க்கை என்று தோன்றுகிறது. சிறு வயதில் அப்பாவை இழந்தவன், நினைத்தவாறு சாப்பிடும் சந்தோஷம் இல்லாதவன், படிப்புக்காக அம்மாவையும் பிரிந்து ஹாஸ்டலில் இருந்தவன்.. இவையெல்லாம் தடங்கல்கள் இல்லையா?

      நீக்கு
    4. ஆமாம். சிறு வயதில் சந்திக்கும் துன்பங்கள்
      வளரும் குழந்தைகளின் மனதைப் பாதிக்கும்.
      பொருளாதாரக் கஷ்டம் மிகவே சோதிக்கும்.

      பெற்றோர் ஆதரவு கட்டாயம் இருக்க வேண்டும்.
      அதையும் மீறி அவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் காலம் வரும்போது
      நாம் தலையிடுவதில் அர்த்தமே இல்லை.
      திருமண விஷயங்களிலும் சுதந்திரம் கொடுக்கத்தான் வேண்டும்.
      அது பையன் பெண் திருமணமாக இருந்துவிட்டால் நல்லது.
      எங்கள் தெருவில் பெண் இன்னோரு பெண்ணைத் திருமணம் செய்து பெற்றோருடனே வசித்து வருகிறாள்.

      நீக்கு
    5. @வல்லி சிம்ஹன் - //திருமண விஷயங்களிலும் சுதந்திரம் கொடுக்கத்தான் வேண்டும்.// எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுக்கணும் என்பதில் ஒரு அளவு இருக்கு இல்லையா?

      //இன்னொரு பெண்ணைத் திருமணம்// - ஹா ஹா. பாவம்..கோடி கோடியாகச் சேர்த்த இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் அவர்கள் பையனும் இதுபோலத்தான். என்ன செய்வது? நல்ல வேளை..இவற்றை ஏற்றுக்கொள்ளும் காலமாக தற்காலம் இருக்கிறது. ரொம்ப வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் புரோகிதரை வைத்து கேரள நம்பூதிரி பையனும் இன்னொரு பையனும் தங்கள் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட காணொளி வந்தது.... காலம், அதன் ரசனை அப்படி மாறியிருக்கிறது.

      நீக்கு
  20. காலம்பரயே கருத்துச் சொல்லணும்னு நினைச்சால் இன்னிக்குனு வர முடியலை. அப்புறமா கணினியைத் திறந்தால் இன்னிக்கு மாதாந்திர மின்வெட்டு. இப்போத் தான் வந்திருக்கு! இன்னிக்குச் சீக்கிரமாவே வந்திருக்கு. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்...காலையிலேயே எனக்குத் தோன்றியது, மின்வெட்டுப் பிரச்சனை அல்லது கணிணி பிரச்சனை இருக்கும்னு (ஏன்னா சமீபத்தில்தான் உடல் நிலைப் பிரச்சனையிலிருந்து மீண்டீர்கள்).

      அப்புறம் மாலை 4 மணிக்குத்தான் நீங்கள் படிப்பீர்கள் என்று நினைத்தேன்.

      நீக்கு
  21. தந்தை வங்கிப் பணியில் இருந்தப்போ இறந்திருக்கிறார் என்பதால் தாய்க்கு வேலை கொடுத்திருக்க வேண்டாமோ? (compassionate grounds) அதிலும் +2 படிச்சிருப்பதால் க்ளாஸ் 4 (Class IV) வேலையானும் கொடுத்துப் பின்னால் தேர்வுகள் எழுத வைத்து முன்னேற வழி செய்திருக்கலாமோ? இறந்ததும் கிடைத்த பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தினார் என்றால்? இது பற்றி அதிகம் தெரியாது இருந்து விட்டாரோ? என்றாலும் நண்பர்கள் சொல்லி இருக்கலாம்.

    எல்லோரும் ஒரு மாதிரி ஜிந்திச்சால் நாங்க வேறே மாதிரி ஜிந்திப்போமே! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தந்தை அரசாங்க வங்கியில் பணி புரிகிறார் என்ற த்வனியிலா நான் எழுதியிருக்கிறேன் கீதா சாம்பசிவம் மேடம்? அவன் சுமார், விவரம் அறியாதவன் என்று இருப்பதால்தானே சூட்டிகையான ஆனந்தியை மணமுடித்துவைக்கிறார்கள். அப்போ அது சாதாரண தனியார் வங்கி அல்லது சிட் ஃபண்ட் போன்றதுபோல் இருக்கக்கூடாதா?

      நிச்சயம் நான் இதனை யோசித்துத்தான் எழுதினேன்.

      நீங்க தடுக்குல பாய்ந்தால் நாங்கள் கோலத்தில் பாய்வோம் இல்ல.

      நீக்கு
    2. அரசாங்க வங்கியாக இருக்கணும்னு எல்லாம் இல்லை. தனியார் வங்கி, தனியார் கம்பெனிகள் எல்லாவற்றிலும் இம்மாதிரியான குடும்பத்தில் தலைவன் இறந்தால் அடுத்து இருப்பவர்களில் தகுதியான நபருக்கு வேலை கொடுப்பார்கள்.

      நீக்கு
  22. பரத்தின் திருமணத்தில் தாய்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என நினைக்கிறேன். திருமணம் செய்து கொள்ளத் தயார் என்பதைத் தயங்காமல் சொல்ல முடியும்! எந்தப் பெண் என்பதைச் சொல்கையில் தயக்கம், கலக்கம் ஏற்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி கீசா மேடம்.. அந்த சப்ஜெக்ட் தொடாமல் செல்கிறேன்.

      'திருமணம் செய்துகொள்ளத் தயார்' என்று பையன்கள் சாதாரணமாகச் சொல்லும் நிலை 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததா? எனக்கு 26-27க்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளணும் என்று ஆசை. ஆனால் அதை நான் சொன்னதில்லை. 30 ஆரம்பத்தில் பயந்துவிட்டேன். அந்தக் கதையும் வித்தியாசமான அனுபவம்தான்.

      காதலிப்பவன் மட்டும்தான் அனேகமா தைரியமாச் சொல்லுவான். 'எனக்குத் திருமணம் செய்து வைத்துவிடுங்கள்' என்பதைவிட, 'இந்த வருஷம் உனக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கப்போகிறோம்' என்பதுதான் சாதாரணமாக நடப்பது.

      நீக்கு
    2. //எந்தப் பெண் என்பதைச் சொல்கையில் தயக்கம், கலக்கம் ஏற்படும்.// - எனக்கு இந்தப் பகுதியை எழுதும்போது காமாட்சி அம்மா, அவர்களின் சில இடுகைகளில் படித்ததுதான் நினைவுக்கு வந்தது. இது அடுத்த பகுதியில் புரியும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. பெரிய குடும்பங்களில் மூத்த பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைக்கப் பெற்றோர் தயங்குவார்கள். கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தைகளைப் பெற்றால் பின்னால் குடும்பத்தைக் கவனிக்க மாட்டான் எனப் பெரிய பிள்ளையின் கல்யாணத்தைக் கூடியவரை தள்ளிப் போடும் பெற்றோர் உண்டு. சில பெற்றோர்கள் தவிர்க்க முடியாமல் கல்யாணம் ஆனதும் அந்த மருமகளைப் பாடாய்ப் படுத்தியதும் உண்டு. இங்கேயோ ஆனந்தி மென்மையான சுபாவம் படைத்தவள். தன்னைப் பற்றிப் பிள்ளை தன் மனைவியிடம் உயர்த்தியாய்ச் சொல்லக் கூடாது என்பதை உணர்ந்தவள். ஏனெனில் பெரும்பாலான குடும்பச் சண்டைகள், மாமியார்-மருமகள் தகராறுகள் இதில் தான் ஆரம்பிக்கின்றன.

      நீக்கு
    4. கீசா மேடம்... நீங்கள் எழுதியுள்ளதைப் புரிந்துகொள்கிறேன். மூத்தவனுக்கு(ளுக்கு-வேலைக்குப் போனால்) திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தும் பெற்றோரை நான் பார்த்ததில்லை. (அந்த அனுபவமோ அல்லது சூழ்நிலையோ நான் அறிந்திராதது).

      ஆனால் அனேகமாக எல்லாப் பெண்களும் செய்யும் தவறு, மருமகளை டாமினேட் செய்வது, தன் மகனிடம் தனக்குத்தான் உரிமை என்று காட்டிக்கொள்ள முற்படுவது, தேவையில்லாமல் இடையில் நுழைவது, தன் மேல்தான் மகனின் அன்பு, கவனம் இருக்கும் என்று மருமகளுக்குக் காட்ட முற்படுவது போன்ற தவறுகள்தாம். இதை அனேகமாக எல்லார் வீட்டிலும் நான் பார்த்திருக்கிறேன்.

      திருமணம் ஆகிவிட்டால், அவன் தனிக் குடும்பம். அவனது முதல் அன்பு, அவனது மனைவிக்குத்தான் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாததால் ஏற்படும் விபரீதம் இது.

      இன்னொன்று, தான் அந்தக் காலத்தில் மாமியாரிடம் அடங்கிக்கிடந்தோம், இப்போ நம் முறை, வரும் மருமகளை அடக்கும்வோம் என்று நினைப்பது. காலமாற்றத்தை உணராத விபரீதம் இது.

      மருமகள் இன்னொரு வீட்டிலிருந்து வந்தவள் என்பதை அறிந்து, அவளுக்கு நல் ஆசானாகவும் நட்பாகவும் இருந்தால்தான் அவர்களும் நம்மிடம் நட்பாக இருப்பார்கள் என்பது யதார்த்தம்.

      நீக்கு
  23. // வாயில்லா ஜீவனுக்கு தண்ணி கொடுக்கறதைப் போல நல்ல செயல் கிடையாதுடா //

    அடுத்த பாகத்தில் இது பிரதிபலிக்குமா...?

    // அந்த ராமானுஜம், எப்போதும் மோர் சாதம்தான் சாப்பிடுவாராம். அதுனாலதான் கணக்கில் அவர் புலியாம் //

    ஐயோ... இது நாள் வரைக்கும் இது தெரியாமத் போச்சே...!

    // அந்த நாமக்கல் ஸ்கூல்ல அவனை நல்லா கோச் பண்ணியிருக்காங்க //

    கோழிப்பண்ணை என்று எல்லோரும் சொல்றாங்க-ன்னு... சொல்ல வரலை... செம பண்ணை-எங்களது குடும்பத்தில் நடந்த உண்மை... பாத்துங்குங்கோ...! ஐயோ... அய்யய்யோ...! அத்தி வரதரே... காப்பாத்துப்பா...!

    ஒரே பாடலில் (பரத்து) ஜீரோ to ஹீரோ = முதல் பாகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ராமானுஜம்....// - இது மாதிரி ஏழைத்தாய் நேர்மறையான எண்ணங்களைச் சிறு குழந்தைகளுக்குச் சொல்வது நான் அனுபவித்தது, பார்த்தது. அந்த தலைமுறையில் இந்த மாதிரியான நல்வழிப்படுத்தும், நல்ல முறையில் சமாளிக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தமும் இருந்தது, சிறுவர்களும் கேட்டுக்கொள்வார்கள். சின்ன வயசுல எங்கம்மா என்னிடம், 'பொம்பளப் பசங்களைத் தொட்டுப் பேசக்கூடாது, காது அறுந்துவிடும்' என்று சொல்லுவார். இன்னும் பலர் வீட்டில், இதைச் செய்தால் சாமி கண்ணைக் குத்திவிடும் என்பார்கள்.

      இந்தக் காலத்துல அதெல்லாம் சின்னவங்கள்ட சொன்னா, வேலைக்காகாது. சின்னவங்க, பெரியவங்கள்ட நிறைய கேள்வி கேட்டுத் திணறடிச்சுடுவாங்க.

      //நாமக்கல் ஸ்கூல்// - இது ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட பெயர்தான். கதை நடக்கும் காலம் 15-20
      வருடங்களுக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டாலும், அந்தப் பள்ளிகள் ஆரம்பித்தபோது அவைகளுக்கு ஒரு நெறிமுறை இருந்தது. பிறகு அதில் வரும் காசு அவர்கள் கண்ணை மறைத்தது. நிறைய பெற்றோர், +1, +2 இரண்டு வருடங்கள்தானே கஷ்டப்படுவான், நாமும் 2-3 லட்சம் கொடுக்கிறோம், பிறகு நல்ல மதிப்பெண் வந்துவிட்டால், பொறியியல் போன்ற நல்ல படிப்புகளுக்குக் கொடுக்கப்போகும் 10-15 லட்சம் லாபம்தானே என்று தம் தம் குழந்தைகளைச் சேர்த்தனர், இல்லைனா, அங்கேயே 2 வருடம் கணவரைப் பிரிந்து தங்கி, அந்தப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தனர். இது ஒரு பெரிய சப்ஜெக்ட்.

      நான் கல்லூரியில் முதுநிலை படித்தபோது, ஒரு சில கல்லூரிகளிலும் அந்த மாதிரி வழக்கம் இருந்தது. நன்றாகப் படிப்பவர்களில் (ஒவ்வொரு பிரிவிலும், அதாவது MA Historyல இருவர், M.Scல இருவர் என்பது போல, எல்லா பட்டப்படிப்புகளிலும்) இரண்டு மூன்றுபேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைக் கண்காணித்து, படிப்பைத் தவிர வேறு விதங்களில் நேரத்தைச் செலவழிக்காமல் பார்த்து, அவங்க கேரியரை முன்னெடுத்து, அதன் மூலம் பல்கலைக்கழக ரேங்க் தங்கள் கல்லூரிக்கு வருமாறு பார்த்துக்கொள்வார்கள். இப்போவும் அந்த முறை இருக்கிறதா, பல்கலைக்கழக ரேங்குகளுக்கு மதிப்பு இருக்கான்னு தெரியலை.

      சமீப காலங்கள்ல கூட, இவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தால், எங்கள் கல்லூரியில் பொறியியல் படிப்பு, ஹாஸ்டல் எல்லாம் இலவசம் என்று விளம்பரப்படுத்தும் கல்லூரிகள் அனேகம். வி.ஐ.டி போன்றவை உள்பட.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. இந்தக்கால குழந்தைகளிடம் நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்...

      அந்த கல்லூரி எப்போ வந்தது, எப்படி என்பது இங்கு முக்கியமல்ல... கதையில் கூட நாமக்கல் கல்லூரி வரக்கூடாது என்பதே எனது சிறிய எண்ணம்... எங்களுக்கு கிடைத்த "அடி" அப்படி...!

      நீக்கு
    3. //இந்தக்கால குழந்தைகளிடம் நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்// - இது உண்மைதான். எந்த டெக்னிகல் சமாச்சாரமும் அவர்களுக்கு நம்மைவிட மிக அதிகமாகத் தெரியும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் நல்வழி, நற்சிந்தனை, நல்லொழுக்கம் இவைகளை பெரியவர்களிடமிருந்து அல்லது ஆசிரியர்களிடமிருந்துதான் அவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

      //கதையில் கூட நாமக்கல் கல்லூரி வரக்கூடாது // - இது ஒரு பெரிய சப்ஜெக்ட். கதை இதைத் தொடவில்லை. இதைப் பற்றி நீங்கள் ஒரு இடுகை எழுதினால் என் கருத்தை எழுதுவேன். என் தனிப்பட்ட எண்ணம், எப்போ கல்வி ஒரு தொழிலாக, பணம் புரட்டும் தொழிலாகப் பார்க்கப்பட்டு அரசியல்வாதிகள், கல்விக்குச் சம்பந்தமில்லாத பெருந்தனக்காரர்கள் வசம் சென்றதோ, அப்போதே அங்கு அறம் தொலைந்துபோகின்றது.

      கல்வி என்பது நெறியுடன் கூடியது. அங்கு 'பணம்'தான் பிரதானம் என்று வந்துவிட்டால், ஏமாற்றுதல், நல்ல அறிவார்ந்த ஆசிரியர்களிடம் இன்வெஸ்ட் செய்யாமல், குறைந்த காசுக்கு ஆசிரியர்களைப் பிடிப்பது, கோழிப்பண்ணைகளைப் போல, 'மார்க் அதிகமாக வாங்கும்' மாணவர்களைத் தயாரிப்பது என்று தொழிற்சாலைபோல் ஆகிவிடும். ஆனால் இங்கு, மாணவர்களைத் தயார் செய்வது கடினம். அதனால்.............

      நான் சொல்லியிருப்பது எந்த வியாபாரத்துக்கும் பொருந்தும். நெறிமுறை இல்லாத வியாபாரம், தவறு செய்யத்தான் இட்டுச்செல்லும்.

      நீக்கு
  24. // தாய் மட்டும்தான் மகனின் உள்ளும் புறமும் அறிந்தவள் மட்டுமல்ல, //

    உண்மை தான்...

    // மன்னிக்கும் இயல்பும் உடையவள்...//

    இப்படி சொல்லி குடும்பத்தை கருவறுக்கும் ஆண்களை மனைவி செருப்படி கொடுத்திருந்தால்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி சொல்லி குடும்பத்தை கருவறுக்கும் ஆண்களை// - இது எனக்குப் புரியவில்லை. நான் புரிந்துகொண்டது, இப்படி மனதில் நினைத்து, தாயைப் புறக்கணிப்பவர்களைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      தாயைப் புறக்கணிப்பவர்கள், மனைவியையும் புறக்கணிக்கத்தான் செய்வார்கள்.

      அவர்களை, அவர்களது குழந்தைகளும் புறக்கணிக்கும்.

      இதையும் மீறி, சூழ்நிலையினால் தாய்க்குக் கடமையைச் செய்ய முடியாதவனை, அந்தத் தாய் புரிந்துகொண்டு மன்னிப்பாள் என்றே நம்புகிறேன்.

      நீக்கு
    2. தாயைப் புறக்கணிப்பவர்கள், மனைவியையும் புறக்கணிக்கத்தான் செய்வார்கள்//

      நெல்லை என்ன நெல்லை நீங்க இத்தனை அப்பாவியா?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தாயைக் கூடப் புறக்கணிப்பார்கள்....புறக்கணிப்பவர்கள் இருக்கிறார்கள்.

      கீதா


      நீக்கு
    3. எனக்கு அனுபவமில்லை கீதா ரங்கன். நீங்கள் நிறைய கேட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். மொத்தத்தில் சுயநலமாக வாழ்ந்து மடிவதில் என்ன பிரயோசனம்?

      நீக்கு
    4. கவனிக்க :- நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்காது... ஆனால், நீங்கள் எழுதிய கதையை மாற்றுவீர்கள் என்பது மட்டும் தெரிகிறது...! அதற்கு நீங்கள் நம்பும்... (?)

      அடுத்த வாரம் பார்ப்போம்...!@

      நீக்கு
  25. தாய் மகனை உள்ளும், புறமும் அறிந்திருப்பாள் எனச் சொல்ல முடியாது! ஏனெனில் ஒரு வயதுக்கு மேல் பிள்ளை தாயை ஓர் மாணவியாக, ஏதும் அறியாத அப்பாவியாகவே பார்க்க ஆரம்பிக்கிறான். இங்கே இந்தப் பையர் தன் தாயை அப்படி நினைக்காமல் இருக்கலாம். பொதுவாக அம்மா என்பவள் ஓர் அப்பாவி, ஏதும் தெரியாது என்றே பல பிள்ளைகள் நினைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீசா மேடம். சிலரைத் தவிர பொதுவாக எல்லோரும் தாய் என்பவள் 'அப்பாவி, ஒன்றும் தெரியாது' என்றே நினைப்பார்கள். அதிலும் அந்தத் தாய், வேலைக்குச் செல்லாது, வீட்டை மட்டும் கவனிப்பவளாக இருந்திருந்தால்.

      அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ளும் வேகம் பெரிது. அதுவும்தவிர, வாழ்க்கையில் மறை பக்கங்களை, தீயனவற்றை அவர்கள் அறிந்துவிடுகிறார்கள். ஆனால் தாய் ஒருபோதும் அவற்றைப் பற்றி அவர்களிடம் பேசுவதில்லை. அதனால் தங்கள் தாய் இவற்றை அறியாதவள், அப்பாவி என்று நம்புகின்றனர்.

      தாய்க்கு நிச்சயமாக மகனைப் பற்றி ஓரளவு புரிதல் இருக்கும். அவன் குணமும் அவளுக்குத் தெரிந்துதான் இருக்கும்.

      நன்றி கீசா மேடம்.

      நீக்கு
    2. // தாய்க்கு நிச்சயமாக மகனைப் பற்றி ஓரளவு புரிதல் இருக்கும். அவன் குணமும் அவளுக்குத் தெரிந்துதான் இருக்கும். //

      ஓரளவு புரிதல் என்றால், தறுதலையைப் பற்றி கூட புரிந்து வைத்திருப்பார்கள்...!

      அந்த தறுதலை யார்...?

      அடுத்த பதிவைப் பொறுத்து... பொறித்து(ம்) கூட...

      நன்றி...

      நீக்கு
  26. நட்புகள் அனைவருக்கும் வணக்கம். இன்று கதை டே இங்கு என்பதால் ஜம்பிவிட்டேன்...

    கதையை இப்போதுதான் வாசித்தேன்.

    நெல்லை கதை நன்றாகப் போகிறது. அம்மா பையன் பாசம் ஒரு சில எனக்கும் என் மகனுக்கும் இடையே போன்ற நினைவுகள் வந்தது.

    இறுதியில் மகன் ஏதோ சொல்ல வருகிறான். ஆனால் இது வேறு வகை என்று மட்டும் யூகிக்க வைக்கிறது. அத்தனை பாசமாக, மகன் நன்றாகப் படித்து மேல் நிலையில் வர வேண்டும் என்று எண்ணும் தாய் அவன் திருமண ஆசையையோ அல்லது காதல் கல்யாணத்தையோ கண்டிப்பாக மறுப்பார் உணர்ச்சிவசப்படுவார் என்று கதையில் இடம் பெற சான்ஸ் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் பக்குவப்பட்ட, கொஞ்சம் தத்துவம் சார்ந்த தாயாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளதால் என் மனம் அப்படி எண்ணுகிறது. என்னவாக இருக்கும் என்று ஒரு சில யூகங்கள் இருக்கு. என் கெஸ் சரியில்லை என்றாலும் கண்டிப்பாகச் சொல்வேன் நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். உங்களை ரொம்ப நாட்கள் காண முடியலை.

      அம்மா பையன் பாசம் இல்லாவிட்டால் ஒற்றை வாரிசை வளர்த்து ஆளாக்க முடியுமா?

      பையன் சொல்ல நினைப்பது திருமண ஆசையா? அல்லது காதல் திருமணமா? இப்படி நான் யோசிக்கவில்லையே. ஏன், பையன், அங்கேயே இருக்கப்போகிறேன், நீ என்னுடன் வந்துவிடு என்று சொல்வதாக இருக்கக்கூடாதா? அம்மாவை, அவள் ஊரை விட்டு தன்னுடன் வரச்சொல்கிறோமே என்பதனால் அந்தத் தயக்கம் வரக்கூடாதா?

      உங்கள் அனுமானங்கள் என்னவென்று தெரிந்துகொள்ள ஆசைதான்.

      நீக்கு
    2. ஏன், பையன், அங்கேயே இருக்கப்போகிறேன், நீ என்னுடன் வந்துவிடு என்று சொல்வதாக இருக்கக்கூடாதா?//

      இந்த ஊகம் இருந்தது. இருக்கிறது...இது என்றால்...இந்தத் தாய் என்ன சொல்லப் போகிறார் என்று அறிய ஆவல்.

      கீதா

      நீக்கு
    3. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். உங்கள் ஊகத்தையும் சொல்லியிருக்கலாமே.....

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    அருமையான உணர்வு பூர்வமான கதை. தங்கள் அருமையான எழுத்து நடையில், ஒரு மகனின் நல்வாழ்வை மட்டும் எதிர்பார்க்கும் தாயன்பை வெளிப்படுத்தி மிகவும் சிறந்த முறையில் கதையை எழுதியுள்ளீர்கள். கதையின் எதிர்பாராத தருணத்தில் தொடரும் போட்டு எங்களின் ஊகங்களை நிறைய வளரவும் வைத்திருக்கிறீர்கள்.ஆயிரம் ஊகங்கள் மனதுள் வந்து,வந்து போகின்றன. அதில் தவறான ஊகங்கள் தலைகாட்டாமல் போக வேண்டுமென வேண்டுகிறேன்.

    /வாழ்க்கை என்பது பாலைவனத்தைப் போன்றதுதானே… அதில் சோலை அபூர்வமாகவும், பாலை அதிகமாகவும்தானே பெரும்பாலானவர்களுக்கு அமைந்துவிடுகிறது. ஆனந்தி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? /

    இந்த வரிகள் படிக்கும் போது இயல்பாகவே மனம் கனத்தது. ஆனந்தியின் வாழ்வில் ஆபுர்வமாக இடையிடையே வந்த சோலை, இனி பாலையையே வரவொட்டாமல் செய்து விட வேண்டுமென என் தாயுள்ளமும் தவிக்கிறது.

    அன்பை, கருணையை, கவனிப்பை குழைத்து ஊட்டி வளர்த்த மகன் தாயின் மனம் புண்படும்படி ஏதும் செய்து விடுவானென்று தோணவில்லை. பொதுவாக கதையில், (கதைதானே என்று) எவ்வளவு திருப்பங்கள் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். ஆனால் இதை கதையாக மனம் நினைக்கவில்லை. (நிஜ வாழ்விலும் திருப்பங்கள் நம் எண்ணப்படியும் எப்போதும் நடப்பதில்லை.. அது வேறு விஷயம்..அது நம் ஊழ்வினையின் பயன்கள். ) இதன் அடுத்த பகுதியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி. உங்கள் ஊகங்களையும் இங்கு எழுதியிருக்கலாமே.

      'பாலையே வராத வாழ்க்கை' - நல்லாக் கொடுப்பாரே கடவுள். பொதுவா சாண் ஏறினா முழம் சறுக்குவதுதான் வாழ்க்கை. ஹா ஹா.

      தாயின் மனம் புண்படிச் செய்துவிடுவானோ? இல்லை வேறு விதத்தில் வருத்தமோ சங்கடமோ கொண்டுவருவானோ? ஊழ்வினையின் பயன்கள் என்று இயல்பாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா?

      மகனோ அல்லது மற்றவர்களோ வெற்றி பெற்றால் மட்டும், அது ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொண்டு தருமா இல்லை தனக்கு அதனால் பயன் இருந்தால்தான் அது சந்தோஷத்தைத் தருமா?

      மகன் நல்ல நிலைக்கு வந்தால், நம் மகன் நன்றாக இருக்கிறான் என்பது சந்தோஷம் தருமா இல்லை, நல்லவேளை..அவன் ஆளாகிட்டான், இன்னமும் நம்மையே எதிர்பார்த்து, நம் வாழ்க்கைக்குக் குந்தகமில்லாமல் என்பதுபோன்ற எண்ணம் வருமா?

      மனித மனம் எப்படி எண்ணும் என்று யாருக்குத் தெரியும்?

      நீக்கு
  28. கேட்டு வாங்கிப்போடும் கதைகளில் முதன்முதலாக இதுதான் தொடரும்...போலுள்ளது. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன். ஆசிரியருக்கு வாழ்த்துகள், பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் சார்... வருகைக்கு நன்றி.

      எனக்குத் தெரிந்து இதுதான் கே.வா.போ. கதைகளில் 'தொடரும்' போட்ட கதை. ஆனால் சிலர் இதற்கு முன்பே அப்படி வந்திருக்கிறது என்கிறார்கள்.

      நீக்கு
    2. ஐயோ... அய்யய்(யா)யோ... இந்த தற்பெருமை வேறு தங்களுக்கு வேண்டுமா ஐயா...? இருந்தாலும் வாழ்த்துகள் ஐயா... வாழ்க நாடு... வாழ்க பாரதம்...!

      இதோ இன்று அற்புதமான பேய் பதிவுக்கு, வழக்கம் போல் நான்கு பேய்கள் கருத்து அளித்துக் கொண்டு உள்ளார்கள்...! அதில் போய் பேயாய் சென்று பதில் சொல்லுங்க ஐயா... அய்அய்யா...!

      நன்றிகள் பல...

      நீக்கு
    3. தி.த.... ஒரு கதை அல்லது இடுகை எழுதி அதனால் தற்பெருமை அடையணும்னா நான் "புளிச்ச மாவு புகழ்" ஜெயமோகனா இருக்கணும் இல்லை உங்களை மாதிரி இலக்கிய வல்லுனரா இருக்கணும். எனக்கு இவை எதுவும் தெரியாது. அதனால் தற்பெருமை அடைவதில்லை.

      பொதுவா எனக்கு தொடர்கதை பிடிக்காது. அடுத்த வாரம் வரை காத்திருக்க பொறுமை கிடையாது. அதனால்தான் அத்தகையவற்றை, மொத்தக் கதை முடிந்தபிறகுதான் ஒழுங்கா திரும்பப் படிப்பேன். இந்தத் தடவை கதை ரொம்பவும் நீளமாக ஆனதால் ஸ்ரீராமிடம் இவ்வளவு நீளமாக இருந்தால் சரிப்படுமா, நீங்கள் இரண்டு வாரங்களாக வெளியிட மாட்டீர்களே என்று கேட்டேன். அவ்வளவுதான்.

      நீக்கு
    4. அப்படியானால் மகிழ்ச்சி...

      அப்புறம் அடியேன் வல்லுனர் எல்லாம் கிடையாது... என் மனதை வெல்ல முயலும் பாமரன்...

      நீக்கு
  29. ஒண்ணைத் தயங்காமச் சொல்லிடுவேன்…இன்னொண்ணு தயக்கமா இருக்கு”//

    அருமை
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... இந்த வாரம் தாமதமா வந்துவிட்டீர்களே...

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  30. /ருத்தர் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது, அவங்க பசங்களையோ பேரன்களையோ பார்க்கணும்னு உம்மாச்சிக்கிட்ட கேட்டாங்கன்னா, அவர், வரம் கேட்கிறவரை பறவையாவோ வீட்டு விலங்காவோ படைச்சிருவாரு. .//

    தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ நான் தண்ணீர் உணவு எப்பவும் வைப்பதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற வரிதான் என் நினைவில் வருகிறது.

      நான் நடக்கும்போதும் கீழே பார்த்துக்கொண்டே நடப்பேன், எங்கே சாரி சாரியாகச் செல்லும் எறும்புகள் மீது காலை வைத்துவிடுவோமோ என்று.

      நீக்கு
  31. /அப்பளாத்துருண்டை// அப்படின்னா என்ன ??

    //மார்க் குறைச்சலா வாங்கின யார்கிட்டயும் மனசு வருத்தப்படும்படியா பேசிடாத கண்ணு…எப்போவும் பாசிடிவாகவே பேசு.. ஹம்பிளா இருக்கறதுதான் மத்தவங்களோட” //
    இப்படிப்பட்ட அம்மா வளர்ப்பு நிச்சயம் அருமையாகவே இருக்கும் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பளாம் இடுவதற்கு உளுந்து மாவு இதெல்லாம் சேர்த்து சப்பாத்தி மாதிரி பிசைந்துவைப்பார்கள் (சீரகம், உப்பு, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து). அதில் சிறிது எடுத்து இட்டு, அப்பளாம் செய்து, நிழலில் உலரவைத்து பிறகு அடுக்கி வைப்பார்கள். அந்த மாவு வெறும்ன சாப்பிடுவதற்கு ரொம்ப நல்லா இருக்கும்.

      பழைய காலத்தில் நிறைய வயதானவர்கள் ஒன்றுகூடி அப்பளாம் இடுவார்கள். அப்போ, மாவை, சிறிது சிறிதாகக் கிள்ளி நிறைய உருண்டைகள் செய்துவைப்பாங்க. அதிலிருந்து ஒவ்வொருவரா, ஒவ்வொரு உருண்டையை எடுத்து அப்பளாம் இடுவார்கள்.

      இந்த உருண்டை அப்பளாத்துருண்டை.. யம்மியாக இருக்கும்.

      நீக்கு
  32. சரியா பிளாஷ்பேக்கில் ///உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டானே என்று நினைக்காதம்மா. உனக்கும் சேர்த்து உன் பையன் நிறையப் படிப்பான்மா. /// கொண்டு வந்து இணைச்சிருக்கீங்க

    // ஒண்ணைத் தயங்காமச் சொல்லிடுவேன்…இன்னொண்ணு தயக்கமா இருக்கு” பரத், அம்மாவிடம் தொலைபேசியில் பீடிகை போட்டான்.//

    அஆவ் நிச்சயம் நல்லதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த பகுதிக்கு தாவுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி ஏஞ்சலின்.

      இந்த அதிரடி எந்தக் காலத்தில் வந்து..அதற்குள் எத்தனையோ இடுகைகளை படிக்காமல் விட்டிருப்பாங்க. போதாததற்கு அவங்க வரும்போது குளிர்காலம் ஆரம்பிக்கும். அப்புறம் குவில்டுக்குள்ள இருந்து தூங்கத்தான் நேரம் சரியா இருக்கும் அவருக்கு.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!