சனி, 17 ஆகஸ்ட், 2019

கணக்கு வழக்கில்லாத அளவுல குழந்தைங்க... - இரவல் தர விரும்பாத இயற்கை


1)  குஜராத்தில், வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில், 1.5 கி.மீ., நடந்து சென்று காப்பாற்றிய போலீஸ்காரர்






2)  கடையத்தில், பண்ணை வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் இருவரை, அங்கிருந்த, வயதான தம்பதி, சேர்களை துாக்கிய அடித்து விரட்டினார்கள். கொள்ளையருக்கு எதிராக வீரமுடன் போராடிய முதிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.





3)  'ஒண்ணோ, ரெண்டோ குழந்தைங்க பெத்துக்கிட்டா, அதுகளுக்கு மட்டும்தான் நாம தாயி, தகப்பன். இப்போ நம்ம கடைக்குச் சாப்புட வர்ற பிள்ளைங்களெல்லாம் நமக்கு குழந்தைங்கதான்'னு நாங்க ரெண்டு பேரும் மனசை தேத்திக்கிட்டோம். இப்போ எங்களுக்குக் கணக்கு வழக்கில்லாத அளவுல குழந்தைங்க இருக்காங்க" என்று சொல்லும் பாண்டித்தேவர், ஆறுமுகத்தம்மாள் தம்பதி உதிர்த்த வார்த்தைகளின் அடியில் உறைந்திருக்கிறது அன்பு.  (நன்றி ஏகாந்தன் ஸார்)




4)  சர்வதேச பாஸிட்டிவ்....    விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி டாமிர் யுசுபோவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரை, அந்நாட்டு மீடியாக்கள் 'ஹீரோ' எனவும், இன்ஜீன் செயலிழந்த நிலையில், தரையிறக்கும் கியர் இல்லாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 233 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டார் என புகழ்ந்துள்ளன.




==================================================================================================


--------------------------------------------------------------------------------------------------------------------------

சென்ற வார எங்கள் பிளாக் பதிவுகளின் விமர்சனம் 10-8-19முதல் 16-8-19 வரை...

- திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் -
--------------------------------------------------------------------------------------------------------------------------


சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகள்:

இந்த வாரம் ஏனோ பாசிட்டிவ் செய்திகள் இரண்டு மட்டுமே. 

தன் வீட்டு கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றி, தண்ணீர் கஷ்டத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கும் கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரமணி மற்றும் ஐந்து ஆண்டுகளில் பன்னிரெண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்கும் ஓய்வு பெற்ற வன அலுவலர் மணி என்ற இரண்டு பேர்களின் செயல்களும் இடம் பெற்றிருக்கின்றன. 

இதுவரை பாசிட்டிவ் செய்திகளில் மழை நீர் சேகரிப்பு, குளம், குட்டைகளை தூர் வாருதல் போன்ற செயல்களை பற்றி செய்திகள் இடம் பெற்றால் அது சிறு நகரங்கள், அல்லது கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் செய்வதாகத்தான் இருக்கிறது. நகரவாசிகளுக்கு இம்மாதிரி செயல்களில் எந்தவித ஈடுபாடும் இல்லை. சென்னையில் தண்ணீர் கஷ்டம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், "எங்கள் காலனியில் தண்ணீர் லாரியில் வாங்கி ஊற்றுகிறார்கள், தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, எங்களுக்கு கவலை இல்லை" என்றுதான் பலரும் சொன்னார்கள். அவர்கள் வீட்டு பாத்ரூமில் தண்ணீர் வரவில்லையென்றால்தான் வெளியே வருவார்கள் போலிருக்கிறது. 
"நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு"

ஐநூறு வீடுகள், ஆயிரம் வீடுகள் என்று தொகுப்பு வீடுகளை கொண்டிருக்கும் காலனிகள் எல்லாம் மழைநீரை சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும், தண்ணீர் கஷ்டம் தீரும். அரசாங்கமும் இதில் இன்னும் கொஞ்சம் அக்கறையும், கண்டிப்பும் காட்ட வேண்டியது அவசியம். 

இந்த வாரம் விமர்சனம் செய்ய யாரும் முன்வராததாலோ என்னவோ, வாராந்திர விமர்சனம் இடம்பெறவில்லை. விமர்சனம் இல்லாதது பலருக்கு குறையாக இருந்திருக்கிறது. ஜி.வி. சார் விமர்சனத்தை விடாமல் தொடர்வதற்கு யோசனைகளும் சொல்லியிருக்கிறார். விமர்சனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் கை தூக்குங்கள் என்று ஸ்ரீராம் கேட்டும் யாரும் பெயர் கொடுக்கவில்லை. 

ஞாயிறு புகைப்படங்கள்: இந்த வாரமும் ஷில்லாங் பயணத்தின் படங்கள்தான்.  படங்கள் மட்டுமல்ல அந்த இடங்களைப்பற்றிய குறிப்புகளும் சிறப்பாக இருக்கின்றன.   

'காலை எழுந்தவுடன் காஃபி என்று பழகியவர்களுக்கு மீன் சமைக்கும் வாசனை வரவேற்கிறது'.

மூன்றாவது மாடியில் இருக்கும் விளம்பரங்களை படிக்க வேண்டுமென்றால், எதிரே இருக்கும் விடுதியில் ரூம் எடுத்து தங்க வேண்டுமாக்கும்' என்று புன்னகைக்க வைக்கும் கேப்ஷன்களை ஆசிரியர் கொடுத்தால், வாசகர்கள் சோடை போவார்களா? 

"பனோரமாங்கிறது யாரு? மனோரமாவிற்கு உறவினரா?" என்று துரை செல்வராஜ் சார் அப்பாவி போல் கேட்டு வாய் விட்டு சிரிக்க வைக்கிறார். 
ஜி.வி.சாரோ, false இல்லாத நிஜ fallsகள் அருமை என்று வார்த்தையில் விளையாடுகிறார். 

யானையின் வீழ்ச்சியைப் பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும். 

திங்கற கிழமையில் நான் செய்து அனுப்பிய மன்னிக்கவும் எழுதி அனுப்பிய பால் கொழுக்கட்டை ரெசிபி. சென்ற முறை நான் விமர்சனம் எழுதிய பொழுது நேர்ந்த அதே அசந்தர்ப்பம். இதற்கு மற்றவர்கள் எழுதிய பின்னூட்டங்களை படித்துக் கொள்ளுங்கள். 

எனக்கு மிகவும் பிடித்தது டி.டி. அவர்களின் பின்னூட்டம். நான் சொல்லியிருந்த முறைப்படி அவர்கள் வீட்டில் செய்தார்களாம், மிருதுவாக, நன்றாக இருக்கிறது என்று கூறி விட்டார். அவர் மனைவி தொலைபேசியில் அழைத்து, பாராட்டி, நன்றி கூறினார். ஆஹா! "இது போதும் எனக்கு, இது போதுமே, வேறென்ன வேண்டும்? நீ போதுமே.." டி.டி. என்றவுடன் பாட்டு வருகிறது பாருங்கள். 

ஜி.வி.சார், தேங்காய் பால் கொலஸ்ட்ராலை அதிகமாக்கும் என்று கூறியிருக்கிறார். கொலஸ்ட்ராலைக்கண்டு நம் பயப்படுவதற்கு காரணம் மாரடைப்பு வருவதற்கு கொலஸ்ட்ரால்தான் காரணம் என்னும் நினைப்புதான் ஆனால் சமீபத்திய ஆய்வுகள் கொலஸ்ட்ராலக்கும் மாரடைப்பு வருவதற்கும் சம்பந்தம் கிடையாது என்கின்றன. மேலும் கடுகு என்னை, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் அறவே கொலஸ்ட்ரால் கிடையாதாம். அப்புறம் என்ன? 'கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம், இந்த கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும்.."

செவ்வாய் கேட்டு வாங்கி போட்ட கதையில் ஜி.வி.சாரின் 'தெளிவு'  என்னும் கதை இடம் பெற்றிருக்கிறது. தாயில்லாத, உடன்பிறந்தவர்களும் இல்லாத வெகுளிப் பெண் ஒருத்தி தன் கணவனை சகோதரனாக நினைத்து பழகுவதை தவறாக புரிந்து கொள்ளும் இளம் மனைவி, பின் தெளிந்து அந்தப் பெண்ணை தன்  சகோதரியாக ஏற்றுக் கொள்வதாக முடியும் கதை.  உரையாடல்கள், ராஜியின்(கதாநாயகி) எண்ண ஓட்டங்கள் எல்லாம் இயல்பாக இருந்தாலும், கண்டெம்ப்ரரியாக( contemporary)இல்லாதது ஒரு குறையாாக எனக்கு தோன்றியது.  

"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக, இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவருக்காக.." என்பது போல தொடங்கிய கதையை, "கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே, நான் அதில் பார்த்தால் உன் முகம் காட்டும் தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு.." என்று முடித்து விட்டார். முடிவில் ஒரு அவசரம் தெரிந்தது.

சிறுகதையாகத்தான் எழுத வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாமல் அதன் போக்கில் கொஞ்சம் நீட்டியிருந்தால் டி.டிக்கு வந்த சந்தேகம் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

இதற்கு வந்த பின்னூட்டங்களில் கீதா அக்கா கூறியிருக்கும் கருத்துக்கள் அக்மார்க் ரகம். அதிலும் இந்தக்கால திருமணங்கள் குறித்து அவர் கூறியிருக்கும் விஷயங்கள் அசைக்க முடியாத உண்மை. 

//எல்லாம் இப்போவும் இருக்கு ஜீவி சார். ஆனால் மணமகள் தலை கவிழ்ப்பு? மணமகனின் ஓரப்பார்வை? சுத்தம், அப்படி எல்லாம் நடக்கிறதா என்ன?  மேடையிலேயே கணவனைப் பெயர் சொல்லியோ அல்லது, "என்னடா இது?" என்றோ கேட்கும் மணமகளைப் பார்த்ததில்லை போலும்!// 

நான் பார்த்திருக்கிறேன். குருவாயூரில் ஒரு திருமணத்தில் மணமகனை,"என்ன, கல்யாணம் என்றதும் டென்ஷனாகி விட்டாயா?" என்று நிஜமாகவே உலுக்கிய மணப்பெண்ணைப் பார்த்து மிரண்டு போனேன். 

பின்னூட்டங்களோடு ஒட்டாத ஆறாவது விரலாக டி.டி., ஸ்ரீராமுக்கு இடையே இணைய பிரச்சனை குறித்து உரையாடல். 

எப்போதும் விரிவான பின்னூட்டம் அளிக்கும் கோமதி அரசு இன்று சுருக்கமாக முடித்து விட்டாரோ என்று தோன்றியது. விரிவாகத்தான் எழுதியிருக்கிறார் பிரித்து எழுதியிருப்பதால் அப்படி தோன்றியிருக்கிறது.

கடைசியாக வந்து சுருக்கமாக சொன்னாலும் சரியாக சொல்லியிருக்கிறார் ஜி.எம்.பி. ஐயா அவர்கள்.

புதன் கேள்வி பதில்கள் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. யார் கண் பட்டதோ?கேள்வியின் நாயகி மிகவும் பிசியாகி விட்டார். நெல்லையும் பயணத்தில். நான் மட்டும் நாலு கேள்விகள் கேட்டிருக்கிறேன். இத்தனை வாரங்களாக வந்து கொண்டிருந்த PACயும் இந்த வாரம் இடம்பெறவில்லை.எனவே, ஆசிரியர் களுள் ஒருவர் குண்டூரிலிருந்தும், ஒல்லியூரிலிருந்தும் முகமூடிகளை வரவழைக்க வேண்டியதாகி விட்டது.

இந்த பகுதியை ஸ்வாரஸ்யமாக்க மெனக்கெடும் ஆசிரியர்களுக்கு ஒரு 'ஓ' போடுவோம். கூடவே கேள்விகளும் கேட்போம் தோழர்களே. 

"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை"

வியாழன் ஶ்ரீராமின் பேட்டை. காசி பயணக் கட்டுரை முடிந்து விட்டது. 
மழை விட்டும் தூவானம் விடாதது போல் இன்றும் ஒரு கோவில்(குபேரன் கோவில்) விசிட் பற்றி எழுதியிருக்கிறார். அதில் பார்வதி தேவியின் அழகைக்கண்டு பிரமித்துப்போய் கண்ணை அசைத்ததாகவும், அதனால் கோபம் கொண்ட பார்வதி அவனை சபித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கதை அப்படி அல்ல. என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நவ திருப்பதிகளுள் ஒன்றான திருக்கோளூர் (வைத்த மாநிதி பெருமாள்) தல புராணம் படித்து தெரிந்து கொள்ளலாம்.

"கடவுளே வா, வந்தென்னை ஒரு தரம் சந்தி.." என்னும் ஶ்ரீராமின் கவிதை கொஞ்சம் புலம்பல் ரகம். இதைப்போன்ற நல்ல கவிதைகளை வரவழைக்கவே கடவுள் சோதனைகளை கொடுக்கிறார் போலிருக்கிறது. கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல்கள் அவருடைய சோதனை காலங்களில் எழுதப்பட்டவைதான் என்று அவரே கூறியுள்ளார். பாரதியின் சக்தி வேட்டல் கவிதைகள் வெறும் புலம்பல்கள் என்பார் சிலர். 

எனக்கு எப்போதோ படித்த சவீதாவின் , 
இயற்கையை வெறுக்கிறேன்
தொட்டபெட்டாவுக்கு மேல்
பரவிக்கிடக்கும் மேகத்துணுக்குகளில் ஒன்றை
சஹாராவுக்கு இரவல் தர விரும்பாத
இயற்கையை வெறுக்கிறேன்
கடவுள் என்பவன் கண் முன்னால்
வந்தால்
காலரைப் பிடித்து நீதி கேட்பேன்'
என்னும் புதுக்கவிதை நினைவுக்கு வந்தது.

"கடவுள் இருக்கிறானா? மனிதன் கேட்கிறான், அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?"

திறந்திருக்கும் முதலையின் வாயில் சிறுநீர் அடிக்கும் சிறுவனின் இணயத்தில் பேட்ச் பண்ணப்பட்ட புகைப்படம் வெளியிட்டு அதைப்பற்றி இரண்டு வரி கவிதை அல்லது வாசகம் எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு நெல்லை தமிழன்," "ஆணின்றி அமையாது உலகு" என்று கூறி தான் ஒரு மேல் ஷாவனிஸ்ட் என்பதை ஸ்தாபித்திருக்கிறார். கமலா ஹரிஹரன் அருமையான கவிதை தந்துள்ளார்.

அக்கால இந்தியர்களின் உடை பற்றி பாபர் கூறியுள்ளவற்றிர்க்கு காட்டமாகவும் கரெக்டாகவும் கருத்து கூறியிருக்கிறார் ஏகாந்தன் சார்.

வெள்ளி வீடியோவில் சிங்கார வேலன் படத்தில் இடம்பெற்ற "இன்னும் என்னை  என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே..." பாடல் மட்டும் இடம் பெற்றுள்ளது. 

சில பல வருடங்களுக்கு முன்பு மியூசிக் அப்ரிசேஷன் வகுப்புகள் நடத்துவதன் மூலம் இளைய தலைமுறையிடம் கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வரச்செய்யலாம் என்று சங்கீத வித்வத் சபையில் யாரோ பேச, "இசை ஆர்வம் என்பது இயல்பாக வர வேண்டும். அதை எப்படி பாடம் நடத்துவதன் மூலம் போதிக்க முடியும்?" என்று ஆனந்த விகடனில் எழுதியிருந்தார்கள்.  ஶ்ரீராம் மாதிரி ஒருவர் மியூசிக் அப்ரிசேஷன் வகுப்பு எடுக்கலாம். மனிதர் என்னமா ரசிக்கிறார்!!  

//இங்கு ஒரு வளைவு, அங்கு ஒரு நெளிவு, இங்கே கூடுதலாக ஒரு நெளிவு// (பாடியிருக்கும் விதத்தைதான் வர்ணிக்கிறார், நீங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளாதீர்கள்) என்றெல்லாம் இவர் எழுதியிருப்பதை படித்து விட்டு பாடலை கேளுங்கள், முன்பு தெரியாத விஷயங்கள் தெரியும். பக்க வாத்தியமாக கீதா ரங்கன் வேறு, என்ன ராகம்? என்ன தாளம்? என்று விவரிக்க. சரியான ஜுகல் பந்திதான்.

"நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்."

அடடா! நீ....ண்....ட.... நாட்களுக்கு ப்பிறகு அதிரா விஜயம். வருக வருக என வரவேற்கிறேன். இனி கச்சேரி களை கட்டும். 

விமர்சிக்க மீண்டும் வாய்ப்பளித்த எ.பி.க்கு நன்றி.

53 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிட் நைட் குதிக்க நினைச்சேன்.. ஆனா ரிவியூ இன்னும் தொடருது என்பது தெரியாததால் வழமையான சனிக்கிழமைதானே என விட்டிட்டேன்ன்ன்ன்ன்.. துரை அண்ணன் முந்திட்டார்ர்:))

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரைக்கும், தி/கீதாவுக்கும் திருமணநாள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும் ஸ்ரீராமுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. /// திருமண நாள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும்...///


      ஆகா...

      பல்லாண்டு பல்லாண்டு
      நலங்கொண்டு வாழ்க...
      நீர் கொண்ட நிலம் போல
      வளங்கொண்டு வாழ்க...

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆஆஆஆ என்னாது திருமண நாளோ? ஸ்ரீராமுக்கோ? இது எத்தனையாவதோ? அதுதான் ஹனிமூன் ட்ரிப்பில் இருப்பதால் மிட்நைட்டில ஜம்ப் பண்ண முடிஞ்சது என கில்லர்ஜிக்குச் சொன்னதை நான் ஒட்டுக் கேட்டேன்ன்:))..

      ஆவ்வ்வ்வ்
      கஜூனா பீஜ் இன்
      கடற்கரை மணல்போல்
      பல்லாண்டு காலம் நீடூழி
      வாழ வாழ்த்துகிறோம்..
      இங்ஙனம் பிரித்தானிய தலைமை அலுவலகம்.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் பயணத்தில் இருக்கும் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்

    பானுக்கா விமர்சனமா ஆஹா காலை வணக்கம்..

    ஸ்ரீராம் மற்றும் பாஸ் உங்கள் இருவருக்கும் எங்களின் இதய பூர்வமான மண நாள் வாழ்த்துகள்.

    பிரார்த்தனைகளும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எல்லோரது வாழ்க்கையும் எப்போதும் இனிமையாக மணம் வீசிக் கொண்டிருக்க பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகள் ஸ்ரீராம் அண்ட் சுஜா

      கீதா

      நீக்கு
  4. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராமுக்கும் அவரோட பாஸுக்கும். என்றென்றும் இதே அன்புடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழவும் நல்லதொரு பெண் மருமகளாக வரவும் வாழ்த்துகள்.

    எக்ஸ்க்ளூசிவ் பிரார்த்தனை, இந்த வருஷமாவது ஸ்ரீராம் போகும் கோயில்களில் ஏதேனும் ஒன்றில் புளியோதரைப் பிரசாதம் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா கீதாக்கா எக்ஸ்க்ளூசிவை ரசித்தேன்...

      நானும் புளியோதரை வாழ்த்து வாழ்த்த் நினைத்து வந்தா, தமிழழகி திடீரென்று காச்சா பீச்சா என்று ஹிந்தியில் அடிக்க ஆரம்பித்துவிட்டாள் ஹா ஹா ஹா...மீண்டும் அதை சரிசெய்து வரதுக்குள் புளியோதரை வாழ்த்து வந்துவிட்டது...கீதாக்காவிடமிருந்து!!!

      கீதா

      நீக்கு
    2. சிறப்புப் பிரார்த்தனைனு தான் எழுதினேன். ஆனால் காப்பி, பேஸ்ட் பண்ணுகையில் ஆங்கில வார்த்தையிலேயே வந்துவிட்டது.

      நீக்கு
    3. /திருமணநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராமுக்கும் அவரோட பாஸுக்கும்// - நானும் சொல்லிக்கறேன்.

      ஆபீஸ்ல வேலை பார்த்து வேலை பார்த்து, செக்ரட்டரி வேலையை நல்லா கீசா மேடம் செய்யறாங்க (வாழ்த்துகள்லாம் பரிமாறிக்கறதுல).

      புளியோதரை - ம்... எல்லாக் கோவில்களிலுமா நல்லாப் பண்ணறாங்க.... அவர் நேரத்துக்கு அப்படி நல்லாப் பண்ணாத கோவில்ல புளியோதரை பிரசாதம் கிடைத்து உங்க மேல கோபப்படும்படியா ஆகிடப்போகுது. (சமீபத்தில் உறையூரில் கிடைத்த சர்க்கரை-ஜீனி-பொங்கல் வெகு வெகு சுமார். கோவில் நினைத்தே பார்த்திராத அளவு பிரம்மாமாமாமாண்டம். அவ்வளவு பெரிய கோவிலுக்கு இருக்கவேண்டிய ஜனக்கூட்டம் அங்க மிஸ்ஸிங். காட்டுமன்னார் கோயிலிலும் பிரசாதம் சுமார். அதுனால பிரசாதம் வாங்கவே நான் ரொம்பவும் யோசிப்பேன் - ஒரு ஸ்பூன் கொடுத்தா பரவாயில்லை. அவங்க கை நிறைய கொடுத்தா?)

      நீக்கு
  5. பூக்களின் மீது தேன் மழை போல்
    இனிதாய் அழகிய விமர்சனம்....
    பொருள் கொண்ட சொல் கொண்டு
    எங்கள் பிளாக் மீது ஒரு கரிசனம்...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  6. முதல் மூன்றும் படித்தவை. கடைசியும் அரைகுறையாகக் கேட்ட நினைவு. பானுமதியின் விமரிசனம் வழக்கம் போல் சுருக், நறுக் ஆனால் என்பதற்கு சமகாலம் எனக் குறிப்பிட்டிருக்கலாமோ? இது என் தனிப்பட்ட கருத்துத் தான்.

    பதிலளிநீக்கு
  7. முதல் செய்தி வாவ் போட வைத்தது. மனித நேயமுள்ள போலீஸ்காரர்...

    கடையம் செய்தி முதலில் அந்த வீடியோவை நம்ப முடியவில்லை அப்புறம் கீதாக்கா அதை உறுதிப்படுத்தியதும் தான் நம்பினேன். நெல்லையும் அது செய்தியில் வந்ததாகச் சொன்னதும் கூட முதலில் இருக்குமோ என்று தோன்றி இறுதியில் நம்பினேன்..இப்போதெல்லாம் எந்த வீடியோ, ஃபோட்டோ உண்மை, பொய் புனையப்பட்டது என்று என் சிற்றறிவிற்கு எட்டுவதில்லை. டெக்னாலஜியின் தாக்கம்.

    அந்த வீர தம்பதியர்க்கும் பாராட்டுகள். நல்ல தைரியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பாண்டித்தேவர், ஆறுமுகத்தம்மாள் இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள். அன்பு என்பதுதான் என்ன ஒரு சக்தி வாய்ந்த ஒன்று!

    ஹீரோ டாமிட்யூசுபோவிற்கு பாரார்ட்டுகள் எத்தனை சொன்னாலும் தகும்! எத்தனை உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்! சோள வயலில் எப்படி இறக்க முடிந்தது வாவ்! ரன் வே இல்லாமால் சிறிது தூரம் ஓடி நிறுத்தப்பட்டதோ இல்லை எமெர்ஜென்சி லேண்டிங்க் என்று குலுங்கி எந்தச் சேதமும் இல்லாமல் இறக்கும் வகையில் இருக்கும் போல...நிஜமாகவே அந்தத் தருணங்களை பயணிகளின் கோணத்தில் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அவர்கள் மனம் அப்போது எப்படித் தவித்திருக்கும்...

    நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஹோரோவிற்கு மீண்டும் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பானுக்கா விமர்சனம் அருமை. தகவல்களுடன், பாடல்களுடன் என்று அசத்திவிட்டீங்கள்.

    ஜீவி அண்ணாவின் கதை கடைசியில் கொஞ்சம் அவசரமாக முடிந்தது போல் எனக்கும் தோன்றியதுதான் அக்கா. ஆனால் நான் கருத்தில் சொல்லவில்லை. அண்ணா எல்லாம் தேர்ந்த எழுத்தாளர். என்பதால் எனக்குச் சொல்லத் தயக்கமாகவும் இருந்தது. என்னவோ எனக்கு அப்படி ஒரு எண்ணம். எல்லோரும் கதைகளை எவ்வளவு அழகாக எழுதறாங்க...அனுபவம் மற்றும் அழகான நடையில்..நமக்கெல்லாம் அப்படி எழுத வரவில்லையே என்பதால் டக்கென்றுச் சொல்ல வருவதில்லை. தோன்றினாலும் சொல்லத் தயக்கம் வந்துவிடுகிறது. விமர்சனமும் எழுத வராது என்பது அடுத்தது. ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஆனால் , எனக்கென்னவோ ஜீவி அண்ணா அக்கதையை கறுப்பு வெள்ளை படக் காலத்துக் கதையாக எழுதியிருந்தது போலத் தோன்றியது. அவரது விவரணமும் அப்படி இருந்ததால், கொஞ்சம் முந்தைய காலகட்டத்துக் கதையாகவே அப்போது நடப்பதாகவே எனக்குப் பார்க்க முடிந்தது. சமகாலத்துக் கதையாகப் பார்க்க முடியலை. அதனால் நீங்களும், கீதாக்காவும் சொல்லியிருக்கும் கருத்துகளைப் போல் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றவில்லை. நான் இக்கதை அக்காலகட்டத்தில் நடப்பது போலவே கொண்டேன். ஏனென்றால், கணவனுக்கு இரவு வெத்தலை மடித்துக் கொடுத்தல் எல்லாம் அந்தக் காலத்து விவரணம். அது போலத்தான் கல்யாணம் பற்றிச் சொன்னதும். அதனால் அக்காலகட்டமாகவே பார்க்க முடிந்தது. ஆனால் எக்காலகட்டமாக இருந்தாலும் ஒரு சில வரிகளில் டக்கென்று இப்படித் தெளிவு வருவதைச் சொன்னதற்குப் பதிலாக இன்னும் ஓரிரு சம்பவங்களை உறுதிப்படுத்தச் சேர்த்திருக்கலாம் என்று தோன்றியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமகாலக்கதையே அல்ல. இந்தக் காலத்தில் ஆண்களுக்குப் பல பெண் நண்பர்கள். எல்லாம் தோளில், முதுகில் அடித்துத் தட்டி உலுக்கிச் சொந்தம் கொண்டாடும் வகை! ஆகவே இந்தக் காலப் பெண்ணெல்லாம் இல்லை.சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய கதையாகக் கொள்ளலாம். ஆனால் என்னதான் வெகுளி என்றாலும் இப்படிப் பேசி இருப்பாளா சந்தேகமே! நெருங்கிப் பழகலாம். ஆனால் நண்பரின் மனைவியுடன் பேசும்போது கொஞ்சமாவது ஜாக்கிரதை உணர்வு இருக்காதா?

      நீக்கு
  11. ஜூகல் பந்தி//

    ஹா ஹா ஹா பானுக்கா நான் இம்முறை கூட ஸ்ரீராமிடம் கேட்டுக் கொண்டேன். நான் ராகம் பற்றிச் சொல்வது பிரச்சனை ஆகாதுதானே என்று.

    அதுக்குச் சொன்ன பாட்டா அது!??!!!!!!!!!!!!!!!!!!!!! ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    மிக்க நன்றி பானுக்கா.

    ஆமாம் அதிரடி வந்தாச்சு என்பதால் இனி மழை பொழியும் என்று சொல்லலாம். ஹா ஹா ஹா..

    எனக்குத்தான் தொடர்ந்து வர முடியவில்லை. ஒன்று பணி, வீட்டு வேலைகள், மற்றொன்று இணையப் படுத்தல். நிறைய நேரம் எடுப்பதால்...மற்ற வேலைகள் அப்படியே இழுத்துவிடுகிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
      இன்றைய பாசிடிவ் செய்திகள் மனதுக்கு இதம். இந்த குஜராத் போலீஸ்காரர்
      முகத்தில் தான் எத்தனை கவலை.
      என்றும் நலமாக இருக்க வேண்டும்.
      இரண்டாவதாகத் துணிவோடு கொள்ளைக்காரர்களை விரட்டி அடித்த
      முதிய தம்பதியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்,
      மக்கள் இல்லாத குறையை,
      கடைக்கு வரும் அத்தனை பேருக்கும் உணவளித்து
      மனம் நிறையும் ஆறுமுகத்தேவருக்கும் பாண்டித்தேவருக்கும்
      அமோகமான வாழ்த்துகள். அவர்கள் உணவு விடுத்தி நன்றே வளரட்டும்.

      விமானம் நடுவானில் பாதிக்கப்பட்டால் பயணிகளின் கதி என்ன.
      துணிந்து நெஞ்சுரத்தோடு செயல பட்ட அந்த விமானிக்கு
      எட்தனை பாராட்டுகள் வழங்கினாலும் தகும். அவரும் அவர் பரம்பரையும் நீண்டு வாழட்டும்.

      நீக்கு
    2. பானு மாவின் விமர்சனம் நச்.
      இனி புதன் கேள்விகளில் கலந்து கொள்கிறேன்.

      பாட்டு, படம் என்று கலக்கி விட்டீர்கள்.
      வாழ்த்துகள் மா.Will come back in the morning with Gods grace.

      நீக்கு
    3. ///ஆமாம் அதிரடி வந்தாச்சு என்பதால் இனி மழை பொழியும் என்று சொல்லலாம். ஹா ஹா ஹா..
      ///

      மழை பொழியலாம் ..பொழியாமலும் போகலாம் என இருக்கு கீதா:)) வானிலை அறிக்கைபோல:)).. ஏனெனில் திங்கட்கிழமை ஸ்கூல் ஆரம்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  12. குழந்தைகளை காப்பாற்றிய போலீஸ்காரர்.

    வயதான தம்பதியினரின் துணிவு.

    உணவளிக்கும் தம்பதிகள்

    போற்றப்படக்கூடியவர்களே...

    விமர்சனம் ஸூப்பர மேடம்.

    பதிலளிநீக்கு
  13. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் ஸ்ரீராம் சார்...

    பானுமதி அம்மாவிற்கு நன்றி...

    மூன்றாவது செய்தி அறியாதது... அன்புள்ளம் கொண்ட ஆறுமுகத்தம்மாள் தம்பதியாருக்கு எத்தனை பாராட்டு சொன்னாலும் தகும்...

    அளவான அழகான விமர்சனம்...

    சகோதரி அதிரா வலைத்தளம் என்னவாயிற்று...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிரா வலைத்தளம் என்னவாயிற்று...?// - அவருக்கு இன்றைய பாசிடிவ் செய்தில உள்ள மாதிரி, கடையம் தம்பதியினரைப்போல தைரியம் இல்லாததால், வலைத்தளத்தை இழுத்து மூடி 2 மாசமாச்சு. இனிமேல்தான் ஒட்டடை அடித்துத் திறப்பார் (ஏஞ்சலின் இதற்கு, தேவையில்லாத மெயில்லாம் வெள்ளம்போல் வருவதால் தளத்தை மூடிட்டாங்க என்று சொல்லியிருந்தார்)

      நீக்கு
    2. @ டிடி
      //சகோதரி அதிரா வலைத்தளம் என்னவாயிற்று...?//
      அது டிடி இழுத்த்த்து மூடிட்டேன்ன்ன்ன் நான் இதுவரை இப்படி மூடியதில்லை ஆனா இந்த அஞ்சு அடிக்கடி மூடுறாவாக்கும் அதைப்பார்த்து எனக்கும் தொத்திட்டுதோ என்னமோ ஹா ஹா ஹா:)).. இனித்தான் கற்பூரம் ஏற்றி சாம்பிராணி காட்டித் திறக்கோணும்:)).. திறப்பு விழாவுக்கு அழையா விருந்தாளியக எல்லோரும் வந்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
    3. @ நெல்லை டமிலன்:))
      ///வலைத்தளத்தை இழுத்து மூடி 2 மாசமாச்சு. இனிமேல்தான் ஒட்டடை அடித்துத் திறப்பார் (ஏஞ்சலின் இதற்கு, தேவையில்லாத மெயில்லாம் வெள்ளம்போல் வருவதால் தளத்தை மூடிட்டாங்க என்று சொல்லியிருந்தார்)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. என்னாது மெயிலெல்லாம் வெள்ளம்போல வருதாமா?:)).. அஞ்சுவைக்கோர்த்து விட்டு, கூட்டி வர வைக்கும் பிளான் போல:)) ஆனா அவவுக்கு இப்போதைக்கு வரும் எண்ணத்தைக் காணம்:).. பார்க்கலாம் வந்திடுவா...

      நீக்கு
  14. பானுமதியின் கணவர் விரைவில் உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வருவதற்கு எங்கள் பிரார்த்தனைகள். சற்று முன்னர் பானுமதியோடு பேசினேன். விபரங்கள் சொன்னார். நல்லபடியாகவும் விரைவாகவும் திரு வெங்கடேஸ்வரன் குணமடையப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமேஸ்வரம் யாத்ரைல இருக்காங்க. விவரம் சொல்லாம 'பானுமதி அவர்களின் கணவர் உடல் நலம் சரியாகணும்'னு சொல்றீங்களே... என்ன ஆச்சு? அனைத்தும் நலமாகவே நடக்கும். காசி கயா யாத்திரையின் ஆரம்பம் கொஞ்சம் தடுமாற்றம் காண்பிக்கும். அவ்வளவுதான். ப்ரார்த்திக்கிறோம்.

      நீக்கு
    2. ராமேஸ்வரம் யாத்திரை ரத்து ஆகி விட்டது! :(

      நீக்கு
    3. கொமெண்ட்ஸ் மூலம்தான் நிறைய விசயங்கள் தெரிய வருது... இத்தனை காலமும் என்ன நடந்தது என எதுவுமே தெரியாது...

      பானுமதி அக்காவின் மாமாவின் நலனுக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    4. இறைவன் அருளால் திரு. வெங்கடேஸ்வரன் விரைவில் உடல்நலம் பெறட்டும்.

      நீக்கு
  15. குழந்தைகளைக் காப்பாற்றிய போலீஸ்காரரும், உணவூட்டும் தம்பதியினரும் மனதைக் கவர்ந்தனர்.

    விமர்சனம்..... ஒருவேளை சென்ற வாரம் நான் முழுமையாகப் படிக்கவில்லை என்பதால் ரொம்பவும் ரசிக்கவில்லையோ? விமர்சனம் எழுதிய சின்சியாரிட்டியைப் பாராட்டறேன். பால் கொழுக்கட்டை நானும் செய்ய நினைத்திருக்கிறேன். (பஹ்ரைன்ல 60 ரூபாய் கொடுத்து 6 பீஸ் உள்ள தட்டில் பால் கொழுக்கட்டை சாப்பிடும்போது நினைத்துக்கொள்வேன், வீட்ல இந்தப் பணத்துக்கு பாத்திரம் நிறைய பண்ணிடலாமே என்று)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெ.ட
      ///பால் கொழுக்கட்டை நானும் செய்ய நினைத்திருக்கிறேன். ///

      ஹையோ வைரவா என்னைக் காப்பாத்துங்கோ.. வந்ததும் வராததுமா நான் ஜெயிலுக்குப் போக வேண்டி வந்திடப்போகுதே:)) எனக்கு நெஞ்சு பொறுக்குதில்லை.. இமைகள் துடிக்கவில்லை.. இதயம் புஸுக்குப் புஸுக்கு என அடிக்குது... நெல்லைத்தமிழன் சமையல் குறிப்பு செய்ய நினைக்கிறாராம் என்பதைக் கேட்க:))..

      என் குழைஜாதம் இனியும் செய்யாவிட்டால்:), நான் யூ ரியூப் சனல் ஓபின் பண்ணி வீடியோப் போடுவேன்ன்ன்ன்:).. அதைப் பார்க்கும் தெகிறியம்:)) இருந்தால் செய்யாமல் இருங்கோ:)) என இங்கின போனவாரம் பானுமதி அக்கா செய்ததாக பேசப்படும் மில்க் கொழுக்கட்டை:) மீது ஜத்தியம் செய்து என் உரையை முடிக்கிறேன்:)).

      நீக்கு
    2. @அதிரா - நிஜமாத்தான் இதனைச் செய்யணும்னு நினைத்திருக்கிறேன். பிரச்சனை என்னன்னா.... நான் இனிப்பு சாப்பிடாமல், மத்தவங்களுக்குப் பண்ணுவதை அவங்க விரும்புறதில்லை. இப்போ ஒரு மாதத்துக்கு மேல (ஒரு தடவை தவிர) இனிப்பு சாப்பிடாமலேயே இருந்துவிட்டேன். ஆனா இந்தச் சமயத்துல பாதுஷா, ஜாமூன், பாயசம், சர்க்கரைப் பொங்கல் என்றெல்லாம் நிறைய செய்தேன்.

      உங்க குழைசாதம் - செய்ய வாய்ப்பு கம்மி. சாம்பார் சாதம் சாப்பிடும் ஆடியன்ஸ் இல்லையே. எல்லாரும் ஒரு வாய் சாதம் போட்டாலே, போதும் போதும் என்று சொல்லிடறாங்க.

      நீக்கு
    3. @ நெ.த...
      //நிஜமாத்தான் இதனைச் செய்யணும்னு நினைத்திருக்கிறேன்//

      https://i.pinimg.com/736x/2e/fe/20/2efe2030e23d220c852202bc1e3327df.jpg

      நீக்கு
  16. பாண்டித்தேவர் தம்பதியினர் செய்தி தவிர மற்றவற்றை படித்துவிட்டேன். தெரிவு செய்து பகிரும் விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  17. இப்போதான் விமர்சனத்துக்கே வருகிறேன்ன்..

    //யானையின் வீழ்ச்சியைப் பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும். ///
    ஏதோ நடக்கிறதூஊஊஊஊஊஊஊஊ....... புதிராய் இருக்கிறதூஊஊஊ....

    //எனக்கு மிகவும் பிடித்தது டி.டி. அ///

    இங்கின டிடி க்குப் பின்னால குத்து வச்சு என்னைக் கொன்பியூஸ்ட் ஆக்கிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதுவும் டிடியை எப்படி ஒருமையில் “பிடித்தது” எனச் சொல்லிட்டா... பிடித்தவர் எனவெல்லோ சொல்லோணும் என என் டமில் டி ரேஞ்சில நினைச்சுப் பதறிட்டேனா:)).. பின்பு பார்த்தால் குத்து வச்சாலும் வசனம் தொடருது:)).. இது டமிலில் டி என்பதால எனக்குப் புரியுது ஆனா இங்கின ஆருக்கும் டி இல்ல அப்போ கஸ்டப்பட்டிருப்பினம் எல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  18. /// மேலும் கடுகு என்னை,///

    கமான் பானுமதி அக்கா கமான்ன்ன்ன்.. கடுகு உங்களை என்ன பண்ணிச்சு?:) ஹா ஹா ஹா ஹையோ எனக்கு என்னமோ ஆகுதே....:))

    பதிலளிநீக்கு
  19. //ராஜியின்(கதாநாயகி) எண்ண ஓட்டங்கள் எல்லாம் இயல்பாக இருந்தாலும்,//
    ஆப்பாடா பிரக்கெட் போட்டிருக்காட்டில் நான் எங்கட கனவு ராஜியோ எனப் பயந்திட்டேன்ன்ன்:))..

    //முடிவில் ஒரு அவசரம் தெரிந்தது.//
    ஜீவி ஐயாவுக்கு எப்பவும் அவசரம்தேன்.. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  20. //எப்போதும் விரிவான பின்னூட்டம் அளிக்கும் கோமதி அரசு இன்று சுருக்கமாக முடித்து விட்டாரோ என்று தோன்றியது. விரிவாகத்தான் எழுதியிருக்கிறார் பிரித்து எழுதியிருப்பதால் அப்படி தோன்றியிருக்கிறது.//

    கோமதி அக்காவைக் காணம்.. அதிரா லாண்ட் ஆனது தெரியாது போலும்.... கோமதி அக்காஆஆஆஆஆஆஆ கேக்குதோஓஓஓஓஓஓஓ.... சே சே எல்லோர் புளொக்குக்கும் போகோணும் நான் வந்துட்டேன் திரும்ப வந்துட்டேன் என பிக்பொஸ்ஸ்ஸ் வனிதாவைப்போல ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேக்குது கேக்குது அதிரா! அன்பு தங்கையே!
      நலம். நலமறிய ஆவல். இரண்டு நாள் உறவினர் வருகையால் வலை பக்கம் வரவில்லை.
      அதிரா வரவுக்கு மகிழ்ச்சி.

      நீக்கு
  21. //வியாழன் ஶ்ரீராமின் பேட்டை. காசி பயணக் கட்டுரை முடிந்து விட்டது. //

    என்னாது காசிப்பயணம் கட்டுரை இப்போதான் முடிஞ்சதோ? நான் இருக்கும்போதே முடிஞ்சுது என்றிட்டாரெ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பின்பும் தொடர்ந்ததோ...

    ஆஆஆஆஆஆஆஆஆ அதிரா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா மீண்டும் ஜந்திப்போம்.. ஞாயிற்றுக்கிழமை 2 வது ஆசிரியரின் பயணப் படம் முடிஞ்சுதோ இல்லையோ என இனித்தான் செக் பண்ணொணும்:))..

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீமதி பானுமதி யின் கணவர் உடல் நலம் தேறி
    நல்ல குணம் பெற்று சுகமாக வீடு திரும்பப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  23. ஸ்ரீராம், திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    இப்போதுதான் இன்றைய வலைத்தள விஜயம். விபரங்கள் அறிந்து கொண்டேன்.

    தங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அனைத்துப் பாஸிடிவ் செய்திகளும் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் விமர்சனம் அதைவிட அருமை. சுருக்கமாக மிக அழகாக இருந்தது சகோதரி. என்னையும் அதில் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி

    சகோதரி அதிரா அவர்களின் வரவு கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராகுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  27. பாஸிடிவ் செய்திகள் பரிவு, தைரியம், அன்பை வெளிபடுத்தும் செய்திகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    பானுமதி வெங்க்டேஸ்வரன் அவர்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  28. இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை. ஒன்றிரண்டு செய்திகள் முன்னரே படித்தேன்.

    விமர்சனம் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!