ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

மூடிக்கொண்ட வானம்




யானை அருவி என்ற பெயர்க் காரணம் எப்படியோ அருவியின் மேற்புறத்தை மேய்ந்தால் இடது புறம் யானைத்தலையும் வலதுபுறம் நிற்கும் பாகனும் போல


கொஞ்சம் அருவியின் வழியிலேயே


"தம்பி...   அருவி எங்கேயிருக்கு?" 


எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத அருவி


அருவியின் வலது புறத்திலிருந்து


சற்று மேலே


அருவியை வளைத்து வளைத்து 



எல்லா இடங்களிலும் கைவினைப் பொருள் விற்பனை


வாங்குவோரை விட பார்ப்போர் அதிகம்





இன்னும்  3 ஜி  தான்


போகுமிடம் எது என்று தெரியவில்லை


இந்த மேகம் வேறு அவ்வப்போது


வந்து வந்து சூழ்ந்து கொள்கிறது


காலையிலிருந்து ஒரு காஃபிக் கடை  கூட தென்படவில்லை


மூடிக்கொண்ட வானம் 


இவங்க பழம் மட்டும் விற்பார்களாம்


காஃபிக்கு அலைபவர்கள் நாம் மட்டும்தான்


மலையை மறைக்கும் மேகம்


ஒரு காஃபிக் கடை மாதிரி ஏதோ தெரிந்த மாதிரி இருந்தது


"மேகத்தைத் தூது விட்டா...."


தூது சொல்ல அப்போவாவது  மேகங்கள் நகர்ந்தால் பின்னணியில்தெரியும் காட்சிகளை ரசிக்கலாம்!

31 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை. ஶ்ரீராம். மற்றும் வரும் அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும், வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும். ஶ்ரீராம் பயணம் சிறப்பாக நடந்ததா?

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா... வணக்கமும், நல்வரவும்...

      //ஶ்ரீராம் பயணம் சிறப்பாக நடந்ததா?//

      கடவுள் அருளால் வெகு சிறப்பாக....! ஒப்பிலியை இப்படி அருகில் ஏகாந்தமாக - அதுவும் சனிக்கிழமையில் - தரிசிக்க முடியும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை...

      நீக்கு
  2. கவிதைத் தூறலாக
    கார்மேகச் சாரல்....

    மேகம் பொழிந்திட
    வெட்கம் எதற்கு?..
    மழை பெய்து விட்டால்
    அழகு பக்கம் இருக்கு!..

    பதிலளிநீக்கு
  3. இது மழைதரும்
    கார்மேகக் கூட்டம் அல்ல!.

    ஆனாலும் கவிதரும்
    பனிச்சாரல் கூட்டம்!..

    பதிலளிநீக்கு
  4. மேகம் நாடுது
    வானம் மூடுது
    நாக்கு தேடுது
    காப்பி எங்கே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி எல்லாம் குடிச்சாச்சு. இங்கேயும் இரண்டு, மூன்று நாட்களாக மேக மூட்டம், சோம்பல் முறிக்கும் சூரியன், அடக்கி வாசிக்கும் வாயு, அவ்வப்போது நீர்த்துளிகளின் மூலம் எட்டிப் பார்க்கும் வருணன்!

      நீக்கு
    2. //காப்பி எங்கே !//

      அந்த மெதுபக்கோடா எங்கே?!!!

      நீக்கு
  5. அருவிப் படங்களும் எல்லாவற்றிற்கும் கொடுத்திருக்கும் வர்ணனையான தலைப்புக்களும் வழக்கம்போல் அருமை! சிறப்பான படங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறது. கடைசிப்படம் மேகமூட்டம் நன்றாக இருக்கிறது. இம்மாதிரி மலைப்பிரதேசங்களில் மேகங்கள் நம்மையும் வந்து மூடும்போது அடையும் ஆனந்தம்! ஆஹா!

    பதிலளிநீக்கு
  6. அருவியின் புகைப்படங்கள் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாலசந்தர் பாடத்தில் வருகின்ற அருவியை நினைவூட்டின. மேகத்தைத் தூதுவிட்டா திசை மாறிப்போகுமோண்ணு தண்ணியை நான் தூதுவிட்டேன்..நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்... அதை நினைவு படுத்தும் வகையில்தான் ஒரு வரி சேர்த்திருந்தேன்!

      நீக்கு
  7. படங்கள் எல்லாமே அசத்தல் எடுத்த விதமும் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  8. படங்கள் ரிபீட் ஆகிறது. அருவி மற்றும் மேகங்கள் - இந்த இரண்டு படங்கள் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகம் மறைத்ததில் தெரியவில்லை என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  9. மேகங்கள் கொடைக்கானலை ஞாபகப்படுத்தியது...

    பதிலளிநீக்கு
  10. இந்த மாதிரி மேகக் கூட்டம் சூழ்ந்த சூழ்நிலையில் காரில் செல்வது உல்லாச உணர்வை மனசில் தேக்கும். அதை விட்டு விட்டு----

    அது என்ன 'காப்பிக் கடை' 'காப்பிக்கடை' என்று படம் விட்டு படம் ஸ்மரணை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உல்லாச உணர்வை "தையடா தையடா தையடா" என்று கொண்டாடினாலும் நாக்கு காஃபி சுவைக்கு ஏங்குகிறதே...

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. அருவி படங்களும், பனிமூடிய படங்களும் மிக அருமை.
    சட்டென்று பனி மூடும் வெண்மேகம் மலைகளை மூடும், சட்டென்று மழைத்துறல் போடும்.
    இதமான குளிரை அனுபவிக்கும் போது இனிமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ரசிக்கக் கூடிய வானிலை. இதை எங்கள் நேற்றைய பயணத்திலும் அனுபவித்தோம் கோமதி அக்கா.

      நீக்கு
  13. சாம்பல்நிற மேகங்கள் கவிந்துவிட்டால் மனதின் கதையே அலாதிதான். மேகப்படங்களில் ஒரு அழகு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய மாலை வணக்கம் ஶ்ரீராம் மேகமும் அருவியும் தாளம் போடப் படங்கள். அற்புதம். அதற்குள் திரும்பியாச்சா. அப்பன் கருணையே. கருணை.சென்னையிலும் மழை என்று கேள்விப் பட்டேன்.

      நீக்கு
    2. நன்றி ஏகாந்தன் ஸார்.

      நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  14. இப்பகுதிகளில் காஃபி/தேநீர் கடைகள் கிடையாது. வழியில் ஒன்றிரண்டு கடைகள் உண்டு - அங்கே கட்டஞ்சாய்/ப்ளாக் டீ குடிப்பது நல்லது! பால் விட்ட டீ என்றால் மில்க்மெய்ட் கலந்து கொடுப்பார்கள் - அந்த அவஸ்தையை அனுபவித்து இருக்கிறேன்!

    படங்கள் அனைத்தும் சிறப்பு. மேகமூட்டத்தில் எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு சிறப்பாக வருவதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!