செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - மதிப்பீடுகள் - ஜீவி

மதிப்பீடுகள் 
ஜீவி 


பார்ப்பதற்கு வெகு இளைஞனாக இருந்தான்.  பெயர் பஸவராஜ் என்றான்.

"கர்நாடகமா?" என்றார் சுந்தரமூர்த்தி.   மாநிலம் கேட்டு,  ஊர் விசாரித்து,  அந்த ஊரைப் பற்றி  விசேஷ இரண்டொன்று விஷயங்கள் சொல்லிச்  சிரித்து யாரிடமும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்  கொள்வது அவரது வழக்கம்.  'ஆரம்பித்து விட்டீர்களா?' என்று மனைவி  ஆரம்பித்து விடுவாள் என்று  அதோடு  அடக்கிக் கொண்டார்.

 அவர் மனைவிக்கோ எதையும் தன் வழியில் டீல் பண்ணினால் தான் திருப்தியே.  "சின்ன வேலைதாம்பா.." என்று காரியார்த்தமாக அவர் மனைவி ஆரம்பித்தாள்.  "காத்து வேகமாக அடிக்கறச்சே 'டபார், டபார்'ன்னு சாத்திக்கறது..  அதனாலே  இந்த நாலு கதவுக்கும் டோர் ஸ்டாப்பர் போடணும்..  அவ்வளவு தான் வேலை.    நீ ஏதோ பெரிய வேலைன்னு நெனைச்சிக்காதே,  ஆமாம்..."

"செஞ்சிடலாங்க..."  கதவின் கீழ்ப்பக்கம்  கைவைத்து,  "இங்கே பிக்ஸ் பண்ணிட்டா தரையோட  நன்னா அழுத்திப் பிடிச்சிக்கும்.  என்ன காத்துக்கும் அசையாது.." என்றான் பஸவராஜ்.

"அந்த மாதிரி வேண்டாம்.  நாளாவட்டத்தில் புஷ் தேய்ந்து போனால்,  போட்டதே வேஸ்ட்.." என்று அனுபவ அறிவோடு மறுத்தாள்.  "நீ என்ன  செய்யறேன்னா,  கதவும் நிலையும் சேர்ற இடத்திலே  தடுக்கற மாதிரி இந்த ப்ரேமில் சின்ன கட்டை போட்டு பிக்ஸ் பண்ணிக் கொடுத்திடு.. அது போதும்.."

"சரிங்க.." என்றான் பஸவராஜ்.

"அப்போ எப்போ வர்றே?" என்றார் சுந்தரமூர்த்தி.

"நாளைக்கு ஒங்களுக்குத்  தோதுப்படுமா?" என்று பஸவராஜ் சுந்தரமூர்த்தியைப் பார்த்துக் கேட்டான்.

"நாளைக்குன்னா  எப்போ?"

"மதியம் ரெண்டு மணிக்கு வந்திர்றேன்.. எல்லாம் ரெடி  செய்துகிட்டு வந்தேன்னா, அரை அவர்லே செஞ்சுக் கொடுத்திடறேன்.."

அவளுக்கும் இந்த ஏற்பாடு சரிதானா என்று நிச்சயித்துக் கொள்ளட்டும் என்று,   மனைவியைப் பார்த்தவாறே, "சரி.." என்றார் சுந்தரமூர்த்தி.

"எல்லாம் ரெடி செஞ்சிகிட்டு வந்தேன்னா, அரை அவர்லே செஞ்சுக் கொடுத்திடறேன் .."

அதற்குள்  சுந்தரமூர்த்தியின் மனைவி உள்பக்கம் சென்று  மழமழவென்று ஒரு நீளக் கட்டையை எடுத்து வந்தாள்.  "இதோ பாரு.. நல்ல பர்மா தேக்கு. கட்டில் வேலை செஞ்சப்போ மீந்தது..  இதை அளவு பார்த்து நாலு  டோருக்கும் சின்னச் சின்ன கட்டையா அறுத்துக்கறையா..?"   என்றாள்.

"இது எதுக்கும்மா?.." என்றான் பஸவராஜ்.  "இந்த சின்ன வேலைக்கு படாக் போதும்மா.. நான் வாங்கி அறுத்துக்கறென்.. இது வேறே எதுனாச்சும் பெரிய வேலைக்கு உபயோகப்படும்.." என்று  மறுத்து விட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் சுந்தரமூர்த்திக்கு  அப்பாடா என்றிருந்தது.

"சாமான்லாம் வாங்கணும்.   கட்டைய அளவா மிஷின் கட்டிங் செய்யணும்..  அதுக்கு கதவு நெறத்துக்கு வார்னிஷ்  பூசணும்.  கீல், ஸ்க்ரூ என்று வாங்கணும்..   நான் எல்லாம் ரெடியாக்கிக்கிட்டு வந்திடறேன்.   இப்போ செலவுக்கு  குடுங்க.." என்றான் பஸவராஜ்.

உள்ளே போய் உத்தேசமாக நூறு ரூபாய்  கொண்டு வந்து கொடுத்தார் சுந்தரமூர்த்தி.

"கீலுங்களும் வார்னிஷூமே நூத்தி அம்பது ஆகும்.  இருநூறு கொடுங்க.." என்றான் பஸவராஜ்,  ஒரு தீர்மானக் குரலுடன். 

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு உள்ளே போய் இன்னொரு நூறு ரூபாய்  எடுத்து வந்து கொடுத்தார் சுந்தரமூர்த்தி.   

செய்து கொடுப்பதற்கான கூலி லேபர் சார்ஜ் என்று இருநூற்று ஐம்பது  சொல்லி, இருநூறு தருவதாக தீர்மானமாயிற்று.

"அப்போ நாளைக்கு  மதியம் வந்திடறேன்.." என்று பஸவராஜ் கிளம்பினான்.  

"எனக்கு நாளைய விட்டா அப்புறம் நிறைய வேலை இருக்கு.  கரெக்டா வந்திடுப்பா.." என்றார் சுந்தரமூர்த்தி.

"சரி  சார்.." பஸவராஜ் தலையாட்டினான்.

அவன்  போனதும்,  "என்னங்க, இது?.. குட்டியூண்டு நாலு  கட்டை பொருத்தித்  தர்றதுக்கு நானூறு ரூபாவா?..  ஒண்ணுக்கு நூறு ரூபாவா?..  பகல் கொள்ளையானா இருக்கு?.. " என்று  முகத்தில் கைவைத்து ஆச்சரியப்பட்டாள்  சு.மூர்த்தியின் மனைவி.

"கார்ப்பெண்டர்லாம் இப்போ எங்கே கிடைக்கறாங்க?..  ஏதோ நம்ம நல்ல காலம்.. இவன் தற்செயலாக்  கிடைச்சான்.  ஒண்ணும் பேசப்படாது..  வேலை முடிஞ்சதா, சரின்னு போ..  சக்தியில்லையா,  ஒண்ணும் செய்யாது இருங்கற  காலம் இது.." என்று இப்போதைக்குச் சொல்லி வைத்தார்,  பின்னால் தான் படப்போகிற அவஸ்தைகளை அறியாது..

அடுத்த நாள் மதியம் மணி இரண்டாச்சு.. இரண்டரையுமாச்சு..  பஸவராஜைக் காணோம்.

சுந்தரமூர்த்தியின் மனைவி கணவனை வண்டாகத் துளைக்க ஆரம்பித்து விட்டாள்.  "முன் பின் தெரியாதவனிடம் முழுசா இருநூறு ரூபா தூக்கிக் கொடுத்திட்டீங்க..  இனி அவன்  வந்தப்பலேதான்.  இப்படியும் ஒரு மனுஷன் அப்பாவியா இருப்பீங்களா?..  அவன் அட்ரஸாவது வாங்கி வைச்சிக்கிட்டிருக்கீங்களா? அதுவும் இல்லியா?" 

அதான்  செல் நம்பர் கொடுத்திருக்கானே?" என்று  எழுந்து  தொலைபேச முயன்றார் சுந்தரமூர்த்தி.  அழைக்கப்பட்ட நபர்  தொடர்பு  எல்லையைத் தாண்டி இருப்பதால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக செல் தெரிவித்தது.  

சுந்தரமூர்த்திக்கு எரிச்சலாக வந்தது.  'தொடர்பு எல்லையைத் தாண்டியா?.. அப்படி எங்கே போயிருப்பான்?' என்ற யோசனையில் இதை மனைவியிடம் சொன்னால் இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று பேசாமல் இருந்து விட்டார்.

கைவேலையாக சமையலறைப்  பக்கம் போய் வந்த மனைவி, "என்ன ஆச்சுங்க?.. அந்தப் பாவி கிடைச்சானா?" என்றாள்.

"கிடைக்கலை.  இப்போ டிரை பண்ணிப்  பாக்கறேன்.." என்று பஸவராஜின் செல் எண்ணை விரலால் ஒத்தி எடுத்தார்.  ரிங் போவது தெரிந்தது.. இரண்டு வினாடிக்கு அப்புறம்   'நீங்கள் அழைத்தவர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை' என்று முகத்தில் அடித்த மாதிரி செல் வார்த்தைகளை உமிழ்ந்தது.  

"என்னாச்சுங்க?.."

சுந்தரமூர்த்தி விஷயத்தைச் சொன்னார். 

"அவன் ஏன் எடுக்கறான்?.." என்று எகத்தாளமாக  மனைவி பக்கமிருந்து நையாண்டி.  "காசு--பணம்ன்னா அக்கறை வேணுங்க.. இப்படியா சுளையா இரண்டு நூறு ரூபா நோட்டு..   இந்தாப்பா.. வைச்சிக்கன்னு எடுத்துக் கொடுப்பாங்க?.. அண்டை அசல்லே விஷயத்தைச் சொன்னாக் கூட வழிச்சிண்டு சிரிப்பாங்களே!  உலக விஷயம் பூரா வக்கணையா பேசுறீங்க.. உள் வீட்டு விஷயம்ன்னா அது எப்படி இப்படி ஒரு அசட்டுத்தனம் வருமோ  தெரிலே!..."

"................................'   சுந்தரமூர்த்திக்கு இறுக்கமாக இருந்தது.  வீட்டை விட்டு வெளியே போய் விட்டு  கொஞ்ச நேரம் கழிச்சு வரலாமான்னு கூடத் தோன்றியது.

ஆத்திரத்துடன்.."கொஞ்சம் பேசாம இருக்க மாட்டே?.. இருநூறு ரூபா! ஒரு மனுஷன் அந்தக் காசுக்குக் கூட பொறாதவனா போயிட்டானா உனக்கு?.. நீ பாட்டுக்க பேசிண்டு போறியே!.. " என்று எரிந்து விழுந்தார்..

"இந்த ஆர்ப்பட்டத்திற்கு ஒண்ணும் குறைச்சல் காணோம்.." அவர் மனைவி கன்னத்தை தோளில் இடித்துக் கொண்டதைப் பார்த்து சுந்தரமூர்த்திக்கு பிபி எகிறியது.

அந்த சமயத்தில் தான் அவர் செல் பாடியது. 'சுந்தரன் ஞானும்,  சுந்தரி நீயும்...' 

முதல் வேலையா இந்த ரிங் டோன் பாட்டை எடுத்தாகணும் என்று நினைத்தவராய், செல்லை எடுத்துப் பார்த்தார்.

பஸவராஜ் தான்.  

"என்னப்பா?.." என்றார் எரிச்சலுடன். "என்ன ஆச்சு?.."

"உங்க வேலை தான்  நடந்துக்கிட்டிருக்கு..   வார்னிஷ்  போட்டுக் கிட்டிருக்கேன்.. நாலு  மணிக்குள்ளாற வந்திடறேன்..

அப்பாடா.. நல்ல வேளை, பேசித் தொலைத்தான் என்றிருந்தாலும் கித்தாப்பாக, "ரெண்டு மணி நாலாயிடுத்தா?.. எனக்கு வெளிவேலை இருக்கு.. சீக்கிரம் வாப்பா.." என்றார்.

"சரி  சார்."

"வேலை முடிஞ்ச மாதிரி தான்.  இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடறதா சொன்னான்.." என்று  சுந்தரமூர்த்தி மனைவியை சமாதானப் படுத்துகிற தோரணையில் வெற்று வெளியைப் பார்த்துச் சொன்ன போது,   "இன்னுமா நம்பறீங்க?.." என்று தோளில் இடித்துக் கொண்டாள் அவர் மனைவி.

நாலு மணியும் ஆயிற்று.   ஆளைக் காணோம்.

ஒரு எளிய மனிதன் மேல்  கொள்ளும் நம்பிக்கையும்,  அவன் மனுஷத்தன்மையும்  வெறும்  இருநூறு ருபாய்க்குப் பலியாகப் போய்விடும் என்று சுந்தரமூர்த்தி நம்பவில்லை.  எப்படியோ அவன் வந்து விடுவான் என்று  உறுதியாக நம்பினார் அவர்.  அவர் மனைவி அவரை எகத்தாளமாகப் பார்த்து, முகத்தைச் சுளித்த பொழுது, "நிச்சயம் வந்திடுவான், பாரேன்.."  என்றார். 

"நீங்க சொல்றதை சின்னக் குழந்தை கேட்டாக் கூடச் சிரிக்கும்.  இருநூறு ருபாய்!  அவன் கேட்டானாம்!  இவர் கொடுத்தாராம்! காசோட அருமை தெரிஞ்சா ஒவ்வொரு காரியமும் செய்யறீங்க?" என்று அவர் மனைவி கடுகடுத்தாள்.

'நிச்சயம் அவன் வந்திடுவான், பாரேன்.." என்று சுந்தரமூர்த்தி சொல்லி வாய் மூடவில்லை,  வாசல் காலிங்பெல் கணகணத்தது.

கதவு திறந்தார்.  பஸவராஜ் தான்.   சிரித்துக் கொண்டே, "வரலாமா, 
சார்?"  என்றான்.

"என்னப்பா இப்படி லேட் பண்ணிட்டே?" என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.  மனசுக்குள் சந்தோஷம்.  தான் நினைத்தபடியே  இருநூறு ரூபாய்க்கு இரையாகாமல் மனுஷத்தன்மையைக் காப்பாற்றி விட்டானே என்று.

வந்தவன்,  விடுவிடுவென்று  அழகாக வேலையை முடித்துக் கொடுத்தான்.     கேட்ட கூலியை வாங்கிக் கொண்டு கிளம்பியதும், சுந்தரமூர்த்தி கதவு சாத்தி  மனைவியைப் பார்த்தார்.  அவர் முகத்தில் முறுவல்.

"பல் சுளுக்கிக்கப் போறது.." என்று மனைவி கிண்டலடித்தாள்.  ஏமாந்து போகவில்லை  என்று ஆனதும்  இப்பொழுது தான் அவள் முகத்தில் லேசான மலர்ச்சி.  "அதுசரி, எப்படியும் வருவான் என்று எப்படி அவ்வளவு நிச்சயமா சொன்னீங்க?"

"வெரி ஈஸி.."  என்றார் சுந்தரமூர்த்தி.  "அந்தத் தேக்குக் கட்டையையே
அவனுக்குக் கொடுக்கறதா இருந்தியே?.. அதோட விலை என்ன இருக்கும், தெரியுமா?..  தாராளமா ஆயிரத்துக்கு  மேலே தேறும்.
நம்மை விட அந்தத்  தொழில்லேயே இருக்கற அவனுக்கு அதோட மதிப்பு நன்னாத்  தெரியும்.   அப்போத்தான் நான் பயந்தேன்.  எங்கே, அதை வாங்கிண்டு  போயிடப் போறானோன்னு.   எப்போ அது 
வேண்டாம்ன்னு வெறும் இருநூறு கேட்டானோ, அப்பவே அவன் நேர்மையைக்  காட்டிட்டான்.  அதான் நிச்சயம் அவன் வந்திடுவான்னு நம்பினேன்.."

"இதை அப்பவே எங்கிட்டே சொல்லி,  என்னையும் கவலைப்படாம செய்திருக்கலாமிலே?"  என்று அவர் மனைவி குறைப்பட்டுக் கொண்டாள்.

"நீ காசுக்காக கவலைப்படலேன்னு எனக்குத் தெரியும்.  அவ்வளவு  சுளுவா ஒருத்தன் கிட்டே நாம ஏமாந்திட்டோமோங்கறதுக்காகத் தான் கவலைப் பட்டுருக்கே!   அது அவன் திரும்பி வந்தாத்தான் தெளியும்..  நான் சொல்ற நம்பிக்கை வார்த்தையாலே தெளியாது."

"கரெக்ட்.. நன்னாத்தான் மனுஷாளை ஆராய்ச்சி பண்றீங்க.."

"அதுவும் தவிர அவன் திரும்பி வருவாங்கற என் யூகம் சரியான்னு தெரிஞ்சிக்க நானும்தான் காத்திருந்தேனே".. ஏதோ  சரியாயிடுத்து. அவன் வரலேன்னு  வைச்சுக்கோ,  அதுக்கும் சேர்த்து நான் உங்கிட்டே வாங்கிக் கட்டிக்கணும்..  இந்த ஆம்பளைங்களுக்கு எந்தப் பக்கமும் 
மத்தளம் போல இடி தான்.."  என்றார் சுந்தரமூர்த்தி.

"ஓகோன்னானாம்..  சொல்ல மாட்டீங்களா, பின்னே?"   என்றதோடு அவர் மனைவி நிறுத்திக் கொண்டாள்.

இது  தான் பஸவராஜ் சுந்தரமூர்த்தி குடும்பத்தின்  ஆஸ்தான  கார்ப்பெண்ட்டரான  ஆரம்பக் கதை.

இப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

63 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்...
    கீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களையும் வரவேற்று, நீங்கள் சொல்வதையும் வழிமொழிகிறேன்.

      நீக்கு
    2. அன்பின் துரை, ஸ்ரீராம், ஜீவீ சார், கீதா மா, கீதா ரங்கன் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். இன்னாள் நன்னாளாகட்டும்.
      ஜீவி சாரின் பாசிடிவ் கதை ஆஹான்னு இருக்கு.உண்மைதான் பணம் போனாலும் பரவாயில்லை. நம்பிக்கைத் துரோகம் மிக வலிக்கும்.
      அழகான உதாரணத்துக்குத் தேக்கு கட்டையைச் சொன்னது மிக யதார்த்தம்.
      மனதுக்கு இனிமையான கதை.
      கணவன் மனைவி என்றால் இப்படித்தான் சம்பாஷணை இருக்கும்.

      தோளில் இடித்துக் கொள்ளும் பெண்டாட்டிகள் இருக்கிறார்களா.
      கூடவே நான் பொண் பொறந்தாப்பிலன்னு சொல்லலியா சார்.
      நன்றியும் வாழ்த்துகளும்.

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க.. வாங்க...

      நீக்கு
    4. வரவேற்ற அனைவருக்கும் நன்றி. பானுமதியின் கணவர் ஐசியூவில் இருந்து பொதுவான வார்டுக்கு வந்து விட்டார் என அவரிடமிருந்து வாட்சப் செய்தி வந்தது. தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
    5. வல்லிம்மா நீங்கள் சொல்கிற மாதிரி நாம் பிறரை நம்பி செயல்படும் பொழுது அவர் நம்பிக்கைக்கு உலை வைத்து விட்டார் என்றால் சொரேர் என்று தான் இருக்கும்.

      கணவன் மனைவி சம்பாஷணைக்கு டிக் அடித்தது சந்தோஷத்தைக் கொடுத்தது. கதையை நகர்த்துவதற்கு இப்படியான உரையாடல்கள் தான் கைகொடுக்கிறது.

      என்னைக் கேட்டால் இறைவன் பெண்களுக்கு தோளைப் படைத்ததே அப்படி இடித்துக் கொள்வதற்குத் தானா என்று கூட நினைத்திருக்கிறேன். 'நான் பொண்ணாப் பொறந்தாப்பலே'-- என்று சொல்வார்கள் தான். பொண்ணாப் பிறப்பத்தில் பெண்களுக்கு அந்நாட்களில் நிறைய குறை இருந்த்திருக்கிறது என்று தெரிகிறது. இப்போ அப்படியில்லை என்று கொள்ளலாமா?.. எது எப்படியிருந்தாலும் எந்நாட்களிலும் பெண்கள் தங்களை வைத்துத் தான் எதையும் தீர்மானிக்கிறார்கள் என்பது மட்டும் அக்மார்க் உண்மை. யார் சந்தோஷப்பட்டு எனக்கென்ன என்ற நிலை தான். இல்லையா?..

      நீக்கு
    6. கீதாம்மா, பானுமதி மேடம் கணவர் பொது வார்டுக்கு வந்து விட்டார் என்று நல்ல செய்தியைச் சொன்னமைக்கு நன்றி.

      நீக்கு
    7. என்னைக் கேட்டால் இறைவன் பெண்களுக்கு தோளைப் படைத்ததே அப்படி இடித்துக் கொள்வதற்குத் தானா என்று கூட நினைத்திருக்கிறேன். 'நான் பொண்ணாப் பொறந்தாப்பலே'-- என்று சொல்வார்கள் தான். பொண்ணாப் பிறப்பத்தில் பெண்களுக்கு அந்நாட்களில் நிறைய குறை//ஹாஹாஹா. ஜீவி சார். உண்மைதான். இது எங்கள் வீட்டிலும் நடந்திருக்கிறது. என் மாமியார் அடிக்கடி செய்வார்.சொல்லியும் காண்பிப்பார்.
      என் கணவர் நம்பி ஏமாறுவார்.எனக்கும் கோபம் வரும்.
      ஏற்கனவே நடந்து மீண்டும் ஏமாறாமல் இருக்கணுமே
      என்று ஆதங்கம் தோன்றும்.
      உங்கள் சுந்தரமூர்த்திக்கும்,அவர் மனைவிக்கும் ,பசவராஜுக்கும் வாழ்த்துகள்.
      The world will be a better place if everyone is honest.
      மிகவும் நன்றி மா.

      நீக்கு
    8. மறுபடியும் வந்து வாசித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, வல்லிம்மா.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அகற்றப்படாத கருத்து பின்னால் வரும் என்று நினைக்கிறேன், துரை சார்.

      நீக்கு
  4. அதில் உண்மை ஊமையானது. இதில் குவைத் ஊனமானது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமான நிலையத்தில் கூட பரிதாபமான இணையம்..

      என்னத்தச் சொல்றது?...

      நீக்கு
  5. ///உண்மைகள் உறங்குவதில்லை!..///

    குவைத் விமான நிலையத்தில் இருந்து!..

    பதிலளிநீக்கு
  6. இணையம் ஜங்..ஜங்.. என்று குதிக்கிறது..

    பதிலளிநீக்கு
  7. ஆஸ்தான காண்ட்ராக்டர் ஆவதற்குள் என்னென்ன நினைவுகள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Dr. B. Jambulingam

      இந்த அனுபவங்களையெல்லாம் இவர்கள் படவில்லை என்றால் ஆஸ்தான கார்ப்பெண்டர் அந்தஸ்து கிடைத்திருக்காது தான்.
      அந்த கோணத்தில் நீங்கள் சொல்வது சரியே.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கஜீவி சார் கதை மிகவும் அருமை.
    கண்வன், மனைவி உரைடாடல் மிகவும் யதார்த்தம். பல வீடுகளில் நடப்பது.
    கண்வனின் நம்பிக்கைக்கு காரணம் சரியானது.

    //இப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.//

    பஸவராஜ் வேலை திறமையும் கண்வனின் நம்பிக்கையை காப்பாற்றியதால் ஆஸ்தான கார்ப்பெண்ட்டராகி விட்டார்.

    மதிப்பீடுகள் கதை தலைப்பு பொருத்தம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிம்மா, வழக்கம் போல பாஸிட்டிவான பார்வை உங்களுக்கு.

      இதே கதையை நெகட்டிவாக (பஸவராஜ் போனவன் போனவதான் தான்) எழுதினால், வேறே என்ன செய்யப் போகிறோம்? பஸவராஜ் இன்னொருவரிடம் ஏமாறுகிற மாதிரி காட்டப் போகிறோம். அவ்வளவு தான். 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்று நீதி வேறே பேசுவோம்.

      மொத்தத்தில் வாழ்க்கையில் நடக்கிறதோ என்னவோ வாசிப்பவர்களுக்கு 'நல்ல முடிவுப்பா' என்று ஒரு திருப்தி ஏற்பட வேண்டுமல்லவா?.. அதற்காகத் தான் இந்த இட்டுக் கட்டல் வேலை எல்லாம்.

      வாழ்க்கையில் நடப்பதை ஒட்டி எழுதினாலும், 'இவர் என்ன புதுசா சொல்ல வந்திட்டார்? எல்லாம் நடப்பது தானே?' என்று சகஜமாகப் போய் விடும்.

      இரண்டுக்கும் நடுவே மத்யமாக எழுதுவதும் ஒரு வித்தை தான்.

      (ஆனா கதைப் போக்குல, இவருக்கே அவன் மேல சந்தேகம் வருவதாகக் காட்டியிருக்கீங்களே. முழு நம்பிக்கைல இருந்த மாதிரி தெரியலையே'.. என்று நெல்லைத் தமிழன் பின்னாடி சுதாரித்துக் கொண்டு கேட்கிறார் பாருங்கள்..)

      நீக்கு
  10. வெகு இயல்பான கதை. இது அநேகமா எல்லா வீடுகள்லயும் நிகழ்ந்திருக்கும்.

    எளிய மனிதர்கள் மேல நாம வைக்கும் நம்பிக்கை 90% சரியா இருக்கும். நமக்கு பொறுமையும் நம்பிக்கையும் வேணும்.

    மிக நிறைவான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எளிய மனிதர்கள் மேல நாம வைக்கும் நம்பிக்கை 90% சரியா இருக்கும்.//

      பின்னாடி கீதாம்மாவின் அனுபவத்தைப் பாருங்கள், நெல்லை!

      நீக்கு
  11. எங்கள் பிளாக்கின் இனிய வாசகர்களுக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. இது வரை வந்து மதிப்பீடு செய்தோருக்கும் இனி வந்து மதிப்பீடு செய்ய இருப்போருக்கும் அன்பான நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //உலக விஷயம் பூரா வக்கணையா பேசுறீங்க.. உள் வீட்டு விஷயம்ன்னா அது எப்படி இப்படி ஒரு அசட்டுத்தனம் வருமோ தெரிலே//

    எல்லா வீட்டிலும் இந்த வசனம் வந்துரும் போல...

    இறுதியில் சொன்ன வார்த்தை அருமை சார் அவர்களது வீட்டின் முழுவேலையும் நேர்மைக்கு கிடைத்த பரிசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா வீட்டிலும் இந்த வசனம் வந்துரும் போல...//

      அப்பாடி! தேவகோட்டையாரே! சிலவற்றை ஒத்துக்கொள்வதிலும் ரசித்து ஒத்துக் கொள்கிறோம் பாருங்கள்!..

      //இறுதியில் சொன்ன வார்த்தை அருமை சார் அவர்களது வீட்டின் முழுவேலையும் நேர்மைக்கு கிடைத்த பரிசு.//

      உண்மையிலேயே உணர்ந்து சொன்ன வரிகள்.. நன்றி.

      நீக்கு
  14. நிறைவான கதை.

    நம்பிக்கை - அதானே வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை -- அதானே வாழ்க்கை!

      எவ்வளவு உணர்ந்து உணர்வு பூர்வமாகச் சொல்கிறீர்கள், வெங்கட்!

      நீக்கு
  15. /ப்போ அது வேண்டாம்ன்னு வெறும் இருநூறு கேட்டானோ, அப்பவே அவன் நேர்மையைக் காட்டிட்டான். அதான் நிச்சயம் அவன் வந்திடுவான்னு நம்பினேன்.."// - ஆனா கதைப் போக்குல, இவருக்கே அவன் மேல சந்தேகம் வருவதாகக் காட்டியிருக்கீங்களே. முழு நம்பிக்கைல இருந்த மாதிரி தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்.. நெல்லை.. நீங்கள் சொல்வது சரிதான்.

      கதை எழுதுகிறவன் கையில் கிடைத்த மரப்பாச்சி பொம்மைகள் தான் கதா பாத்திரங்கள்.

      பாத்திரங்கள் இப்படியும் அப்படியும் பொம்மலாட்டம் ஆடினால் தான் வாசகர்களுக்கும் என்ன ஆகப் போகிறதோ என்ற த்ரில் இருக்கும்.

      ஒரு பக்கமே சாய்ந்து விட்டால் இதான் முடிவு என்று தெரிந்து விடும் இல்லையா?.. அதற்காகத் தான்.

      இன்னொன்று. சுந்தர மூர்த்தி அவன் ஏமாற்ற மாட்டான் என்று
      தேக்குக் கட்டையை விட்டு விட்டுப் போனதினால் எதிர்பார்க்கிறார். இது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே என்று வாசகர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அவன் வரவில்லை என்றால் தன் எதிர்பார்ப்பும் பணாலாகி விடும் என்று அவரே உள் மனசில் உணந்திருப்பதாகக் காட்ட வேண்டும். அதற்காகத் தான் சுந்தர மூர்த்தி பாத்திரத்தையும் அங்கங்கே அசைத்துப் பார்த்ததற்கு காரணம்.

      நீக்கு
  16. யதார்த்தமான கதை. நம் வீட்டில் நடப்பதையே நாம் பங்கு கொள்ளுவது போலச் சம்பவங்கள். ஆனால் இந்தத் தச்சர் நல்லவராக இருந்திருக்கிறார். எங்களைப் பொறுத்த மட்டில் ஏமாந்திருக்கோம். வீடு கட்டும்போது தச்சரிடம் மொத்தமாகப் பேசி முன் பணம் கொடுத்து! பின்னர் பாதியில் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் போய் விட்டார். பின்னர் வேறொரு தச்சரைப் பார்த்து வேலையை முடிக்க ஆறுமாதம் ஆனது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மையே.
      நிஜ வாழ்க்கைப் பாடம் வேறே. நிஜ வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டினால் சுவாரஸ்யப்படாது. அது எதிர்மறையாய்
      கதை சொல்லலில் தான் கொண்டு போய் விடும்.
      எதார்த்தமாக எழுதி எதார்தமின்மையை உபதேசமாகவும், அறச் செயலாகவும் வாசிப்பவர் மனத்தில் பதிய வைப்பதே கதை எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஒரு சாபக்கேடாக மாறிப் போயிருப்பது நமக்கான பலவீனமே.

      நீக்கு
    2. வாழ்க்கையில் இல்லாத நேர்மையை, தியாகத்தை, சத்தியத்தை, அறச்சீற்றத்தை இருப்பதாகக் காட்டி ஒரு பொய்மையான மயக்கத்தில் ஆழ்வது தான் கதைகளோ?..

      நீக்கு
  17. என்னைப் பொறுத்தவரை நான் இதில் எல்லாம் அவ்வளவாத் தலையிடுவது இல்லை. ஆனால் ஏமாற்றுகிறார் எனத் தெரிந்தால் அப்போது உதவிக்குப் போயிடுவேன். அப்படித் தான் ஒரு எலக்ட்ரிஷியனிடமிருந்து இரண்டாயிரம் ரூபாயைக் காப்பாற்ற வேண்டி வந்தது.

    பதிலளிநீக்கு
  18. கதை படிச்சபின் கொமெண்ட் போடுவேன்... இப்போ நேரம் போதவில்லை...

    பதிலளிநீக்கு
  19. கதை நன்றாக இருக்கிறது. யதார்த்தம்...

    நாங்கள் எல்லாம் ஏமாந்தவர்கள். குறிப்பா இந்த மர வேலை செய்பவரிடம். இன்னும் நிறைய சொல்லலாம். எங்கள் வீட்டில் முடிவு எல்லாமே நம் கையில் இல்லை. எங்குமே எதிலுமே...ஸோ ஏமாற்றல்கள் தொடரும். தொடர்ந்து கொண்டிருக்கும்...ஹா ஹா ஹா

    முடிஞ்சா அந்த பசவராஜ் கிட்ட சொல்லி வையுங்க...எபில வீடு கட்டறவங்க எல்லாருக்கும் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம் ஹா ஹா ஹா....

    ..இப்படியா நேர்மையானவர் எல்லாம் பார்ப்பது கொஞ்சம் அரிதுதான்.

    ரசித்தேன் கதையை

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பொதுவாகவே ப்ளம்பர், எலக்ட்ரீசியன் போன்றவர்கள் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு வராமல் போனால் ஒன்று ஏமாற்றி விட்டாரோ என்று தோன்றுவது இயல்புதான். அல்லது வாங்கின காசுக்கு சரியா பண்ணாமல் போவதும் நடக்கும். மீண்டும் அதைச் சரி செய்யக் கூப்பிட்டால் இதோ அதோ என்று இழுத்தடிப்பார்கள். பிஸியாக இருப்பது போலவும் காட்டிக் கொள்வார்கள்.

    ஆனாலை சென்னையில் கடைசியில் நாங்கள் இருந்த வீட்டில் அத்தெருவில் இருந்த ப்ளம்பர் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்பவர் இருவருமே மிக மிக நம்பிக்கையானவர்களாக இருந்தார்கள். இதோ வரேன் அதோ வரேன் என்று சொன்னாலும் அதிகமாக வாங்காமல், நம் கூடவே வந்து அல்லது நம்மையே பொருட்களையும் வாங்கித் தரச் சொல்லி பணிக்கான காசு மட்டும் வாங்கிக் கொண்டு செல்வர். ஏதோ நம்ம வீட்டவர்கள் போல நட்புடனும் இருந்தார்கள். ஆனால் அதற்கு முன்பு வரை ஏமாந்தது நிறைய.

    இது போன்ற ஆட்கள் அனைவரும் என் அப்பாவின் நண்பர்களாக அப்பாவிடம் இருந்த தோழமையால் எனக்கும் நட்புடன் செய்து தந்தார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. மிக மிக யதார்த்தமான உரையாடல்கள். ஏதோ நம் வீட்டில் நடப்பது போன்ற ஓர் உணர்வு.

    அருமையான எழுத்து நடை. கண் முன்னே நடப்பது போன்ற விவரிப்பு என்று கதை அருமை ஐயா.

    எங்களுக்கு நம்பகமான ஆட்கள் உள்ளதால் சந்தேகம் வந்ததில்லை. நானும் மனைவியுமே ஆசிரியர்கள் என்பதால் அறிந்தவர்கள் என்பதால் நம்பி பணிக்கு விட்டுவிடலாம்.

    ஆனால் வேறு சில பணிகளில் ஆட்களை ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் இது போன்ற நம்பிக்கையின்மை வரும் தான். நாம் நினைப்பது நடக்காத போது அல்லது எதிர்பார்த்து நடக்காத போது நம் மனம் எப்படி எல்லாம் சிந்திக்கிறது என்று பல வரிகள், வசனங்கள் பளிச்சென்று உரைக்கின்றன.

    நல்ல கதை ஐயா.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. பல நாட்கள் ஆயிற்று தளங்கள் வந்து. எல்லோரும் நலம்தனே?

    இரண்டாவது மகனுக்கும் மருத்துவப்படிப்பிற்கான இடம் திருவனந்தபுரத்தில் காஞ்சிகாமகோடி ட்ரஸ்ட் தனியார் கல்லூரியில் கிடைத்துச் சேர்த்தாயிற்று. அதனாலும் பல பணிகளாலும் வர இயலாமல் போனது.

    நாங்கள் இருக்கும் பகுதி மலை சார்ந்த பகுதி என்பதால் இடையில் கனமழையால் நாங்கள் இருக்கும் பகுதியில் சேதம் இல்லை என்றாலும் அருகில் இருக்கும் மலைப்பகுதிகளில் மண் சரிவு வெள்ளம் என்று பல சேதங்கள் உயிரிழப்புகள்.

    எங்கள் பகுதியில் அருகில் பல வீடுகள் அப்படியே மண்ணில் புதைந்து குழந்தைகள் உட்பட புதைந்து போனது கோரச்சம்பவம். பல நாட்களாக மின்சாரம் இருக்கவில்லை.

    இப்போது நாங்கள் பொருட்கள் பல திரட்டி நாங்கள் பணி புரியும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்து வருகிறோம். நேரில் பார்க்கும் போதுதான் பாதிப்பு மனதை வேதனை அடையச் செய்கிறது.

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
  23. துளசிதரன்,
    உங்கள் செய்தி உருக்கமாக இருந்தது. மழை, வெள்ள பாதிப்பில் மாட்டிக் கொண்டு எளிய மக்கள் என்ன பாடு பட்டார்களோ என்று நினைக்கையிலேயே மனம் பதைபதைக்கிறது. நீங்கள் நிலம்பூருக்கு அருகில் இருப்பதாக அறிந்தேன்.

    தங்கள் இரண்டாவது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  24. தி. கீதா,
    நெல்லைலக்கான எனது மறுமொழியைப் பார்க்கவும்.
    நிஜத்திற்கு எஅஆம்திராகத் தான் நாம் புனைவுகளை புனைவுகளைப் புனைகி
    றோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. வீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்ழவை வைத்தே ஒரு அழகிய கதையாக வடிச்சிட்டீங்க.. மிக அருமையாக இருக்கு. எங்கள் அப்பா அம்மாவுக்குள்ளும் இப்படி குட்டிக் குட்டி விசயம் நிறைய நடந்திருக்கு.. அவை நினைவுக்கு வந்தன. ஆனா பஸவராஜ் வராமல் போவதற்கும் வாய்ப்பிருக்கு, இது ஏதோ வந்திட்டார் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  26. ஐயா ஜீவி அவர்களே! நான் எழுதப்போகும் கதையை முன்னாலேயே ஊகித்து நீங்கள் எழுதிவிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ஆனால் என்னுடைய கதையில் வருவது கார்ப்பெண்ட்டர் அல்ல, பர்னிச்சர் விற்கும் பெரிய கடை! இன்னும் இரண்டு மாதம் கழித்து எழுதினால் தான் போணி ஆகும் என்று நினைக்கிறேன்.அதற்குள் மக்கள் உங்கள் கதையை மறந்து விடுவார்கள் அல்லவா?

    பதிலளிநீக்கு
  27. அதிரா.. ஏற்கனவே எங்கள் பிளாக்கில் சமகால சமூகக் கதைகள் அல்லாதவற்றின் மேலான சர்ச்சை இருக்கிறது. நீங்கள் வேறு எங்கள் பெற்றோர் கூட... என்று குறிப்பிட்டு விட்டீர்களா?
    ஹஹ்ஹஹா..

    பதிலளிநீக்கு
  28. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. வீட்டுக்கு வீடு அன்றாடம் நடக்கும் அழகான சம்பவங்கள் அற்புதமான எழுத்தில் .... அருமை.

    நேற்று என் வீட்டில் நடந்துள்ள விஷயங்கள் இங்கு எழுத்தினில் அப்படியே வடிக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்க மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

    ஒரு குறிப்பிட்ட பெரிய ஜன்னலின் மேல் பக்க WOODEN FRAME சற்றே உடைந்துள்ளது. சரிவர சுலபமாக சாத்தவோ திறக்கவோ இயலவில்லை. அதுபோக, பாத் ரூம் டாய்லெட் சுவற்றில் ஒருசில உடைந்துபோன டைல்ஸ் மாற்றப்பட வேண்டியுள்ளது. ஆங்காங்கே சுவற்றில் கொஞ்சம் பெயிண்டிங் டச் அப் வேலைகளும் கூட செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் ஒரே நாளில், ஒருசில மணி நேரங்களில் செய்து முடித்துவிடக்கூடிய சில்லறை வேலைகள்தான்.

    MATERIALS & LABOUR COST என மொத்தமாக ரூ. 4000 என முடிவாகி நேற்று, செவ்வாய்க்கிழமை அட்வான்ஸ் கொடுத்துள்ளேன்.

    நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, ஆட்களுடன் வந்து, வேலைகளை ஆரம்பித்து முடித்துத்தருவதாகச் சொல்லிப் போய் இருக்கிறார், ஒரு முரட்டு BUILDING CONTRACTOR.

    என்ன நடக்குமோ .... பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது ! :)

    பதிலளிநீக்கு
  30. இரண்டு மரியாதைக்குரிய பெரியவர்கள் வந்து கருத்து சொல்லியிருக்கிறார்கள். ஐயா இராய. செல்லப்பாவும் ஐயா வை.கோ. அவர்களும்.
    சமீபகாலமாக பதிவுலகிலிருந்து சற்றே விலகியிருந்த நகைச்சுவை எழுத்திற்கு கியாதி பெற்ற கோபு சாரை இங்கு பார்த்ததில் தலைகால் புரியாத சந்தோஷம்.
    பசி ஆற்றிவிட்டு விரைவில் வந்து மறுமொழி அளிக்கிறேன். பெரியவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நகைச்சுவை எழுத்திற்கு கியாதி ///

      ஐயோ...!

      இன்னுமா பசி ஆறவில்லை...?

      நீக்கு
  31. செல்லப்பா ஸார்.. அதுக்கெதுக்கு ரெண்டு மாசம்?.. இப்போதே எங்கள் பிளாக்குக்கு உங்கள் கதையை அனுப்பி விடுங்கள். க்யூ ஸிஸ்டத்தில் எப்போ பிரசுரமானாலும் சரி தான்.

    நீங்கள் கடை பரப்பப் போகிற பர்னிச்சர் மார்ட்டை கண்ணாறக் கண்டு களிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  32. // இது தான் பஸவராஜ் சுந்தரமூர்த்தி குடும்பத்தின் ஆஸ்தான கார்ப்பெண்ட்டரான ஆரம்பக் கதை... இப்பொழுது அண்ணா நகரில் அவர் கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் முழு மரவேலையையும் அவன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்... //

    1) நல்லவேளை இதை சொன்னீர்கள் ஐயா... இல்லையென்றால் ஒரு கதைக்கு கூட கதை என்று சொல்ல லாயக்கில்லை இந்தப் பதிவு... இது ஒரு நிகழ்வு என்று வேண்டுமானாலும் சொல்லலாம்...!

    2) ஒரு அடிமையை உருவாக்கி விட்டான் அந்த சு.மூர்த்தி...

    3) பஸவராஜ்.போன்ற ஆட்கள் சுந்தரமூர்த்தி.போன்ற வஸ்துக்களை ஏமாற்றுவது தான் சரி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைன்னா கதை! நிகழ்வுன்னா நிகழ்வு!

      கதை போலவான நிகழ்வு!// நிகழ்வு போலவான கதை!

      தமிழ் எழுதத் தெரிஞ்சவனுக்கு யார் எப்படி கொண்டால் தான் என்ன?..

      நீக்கு
  33. மற்றபடி மற்ற கருத்துரையாளர்கள் வாசிக்கும் போது....

    "ஜிங்க்..ங்க்...ங்க்ங்க்...ங்க்ங்க்ங்க்.... போன்று கோவிலில் மணி போல் அடித்தால் அனைவருக்குள்ளும் இருக்கும் உண்மை வெளிப்படும்...!

    ஆனால், சில கருத்துரையாளர்கள் கருத்துரை வாசிக்கும் போது, அவர்கள் எழுப்பும் ஓசையை விட, ஆமா, ஆமா, ஆமா, என்று தான் கேட்கிறது ஐயா....

    அந்த ஓசை எழுத்து வடிவில்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.டி.

      கோயில் மணியோசை கேட்டதாரோ?.. கேட்டதில்லையோ?..

      அந்த ஓசை டணார்.. டணார்.. என்று தான் இருக்கும்!

      'ஜ்ங்க்.. ங்க்.. ங்க்ங்க்.. எல்லாம் மார்கழி விடியலில் தான்!

      நீக்கு
    2. டணார்.. டணார்.. ஓசை மட்டுமல்ல, எனக்கு எதுவுமே தெரியாது - காரணம்...

      பிணம் போல...!

      கடவுள் முன்...?

      காத்திருக்கவும்...

      மார்கழி விடியலில் பிறந்தவன் அடியேன்...

      கடவுள் முன்...? பிணம் போல...!

      நீக்கு
  34. கோபு சார்!

    சென்னையில் எழுதுவது திருச்சியில் நிகழ்வாகிறது, பாருங்கள்! இதான் டிஜிட்டல் லோகம் என்பதா சார்?.. தெரியலே..

    கவலையே இல்லை! நிச்சயம் காண்ட்ராக்டர் அருள் கூர்ந்து வந்து எல்லாவற்றையும் முடித்துத் தருவார்! நீங்கள் தந்திருக்கிற அட்வான்ஸ் அவருக்கு கொசுறுத் தொகை. முழுத் தொகையைக் கைப்பற்றினால் தான் கொழுத்த லாபமாக இருக்கும்.

    ஒரு சில மணி நேர வேலை என்றாலும் ஒரு நாள் கூலி வாங்குவது தான் இவர்கள் வழக்கம். ஆள்- அம்பு எல்லாத்தையும் உங்களை நம்பி கூட்டி வந்திட்டேன் என்று ஒரு பாட்டம் பரிதாபத்தை இரக்கமாகச் சொல்லி--

    சிமிண்ட், பெயிண்ட், கொல்லுறு,திருப்புளி, ரசமட்டம், மணல் என்று சகல பரிவாரங்களோடு வருபவர் கையோட இன்னும் கொஞ்சம் காசு பார்த்து விடலாம் என்று சொன்ன வேலைய செய்து கொண்டே (இங்கே பாருங்க சார், காரை பேந்திருக்கு.. அங்கே பாருங்க சார்.. என்று வேறு சில குறைகளையும் சுட்டிக் காட்டி) ஒரு நாள் கூலியிலேயே அத்தனையையும் செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி இரண்டு நாட்களுக்கு இழுத்தடிக்கலாம்.

    வழக்கமான 'முரட்டு' புன்முறுவல் பூக்க வைத்தது.

    ஜாலியா அடிக்கடி வாருங்கள், சார்!

    பதிலளிநீக்கு
  35. // தமிழ் எழுதத் தெரிஞ்சவனுக்கு யார் எப்படி கொண்டால் தான் என்ன...? //

    அதானே...! எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும் கொண்டாடுவோம்... ஜீவி சார் பெயரை சொல்லி...! நல்லோர்கள் வாழ்வை எண்ணி...! கதை என்றால் ஜீவி சார்... கதையே ஜீவி சார்... நன்றி சகோதரி கீதா அவர்களே... உங்களின் ஞாபகம் வந்ததால் இந்த கருத்துரை... நன்றி...

    ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்... ஜிங்க் சக்...

    // 'ஜ்ங்க்.. ங்க்.. ங்க்ங்க்.. எல்லாம் மார்கழி விடியலில் தான்! //

    இதற்கு தான் அதிக சக்தி உள்ளது என்பதை எப்போது அறிவீர்கள்...? அதை அறிந்தால்...

    அவை...

    நல்லதிற்கும்... (-)
    கெட்டதிற்கும்... (+)

    என்பதை எப்போது அறிவீர்கள்...?

    (-) ஒன்றை மட்டும் தான் உங்களால் அறிந்து கொள்ள முடியும்...

    (+) மற்றதை என்னால் அறிந்து, தெரிந்து புரிந்து கொள்ளவும் முடியும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  36. உங்கள் சிறுகதை எங்கள் பிளாக்கில் எப்போ, டி.டி?

    பதிலளிநீக்கு
  37. //சிமிண்ட், பெயிண்ட், கொல்லுறு, திருப்புளி, ரசமட்டம், மணல் என்று சகல பரிவாரங்களோடு வருபவர் கையோட இன்னும் கொஞ்சம் காசு பார்த்து விடலாம் என்று சொன்ன வேலைய செய்து கொண்டே (இங்கே பாருங்க சார், காரை பேந்திருக்கு.. அங்கே பாருங்க சார்.. என்று வேறு சில குறைகளையும் சுட்டிக் காட்டி) ஒரு நாள் கூலியிலேயே அத்தனையையும் செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி இரண்டு நாட்களுக்கு இழுத்தடிக்கலாம்.//

    மிகவும் அனுபவ பூர்வமாகச் சொல்லியுள்ளீர்கள். அதே அதே ..... ரூ. 4000 க்கு பேசிய வேலை, தொட்டுத்தொட்டு ரூ.5500 இல் போய் நின்றுள்ளது. மாற்றப்பட்ட ஜன்னலின் ஒரு சட்டத்திற்கு மட்டும் பெயிண்டிங் வேலை இன்னும் பாக்கியுள்ளது. எப்படியோ அவசர அவசிய ஒருசில வேலைகளோடு மட்டும் நிறுத்துக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிட்டேன்.

    முழு வீட்டையும் சுத்தமாக பெயிண்ட் செய்து புத்தம் புதிதாக மாற்றித்தருவதாகவும், தன்னிடம் அதற்கான பெயிண்டர், கார்ப்பெண்டர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கொத்தனார், சித்தாள் எல்லோரும் சப்ஜாடாக கைவசம் உள்ளனர் என்றும் அந்த முரட்டு காண்ட்ராக்டர் சொல்லிச் சென்றுள்ளார்.

    இந்த சுண்டைக்காய் வேலைகளுக்கே, கிட்டத்தட்ட மற்ற ஓவர் ஹெட் செலவுகளையும் சேர்த்து ரூ. 6000 வரை ஆகியிருக்கும் போது, முழு வீடுமான சுமார் 1000 சதுர அடிகளுக்கு, சுமார் ஒரு லக்ஷமோ அல்லது ஒன்றரை லக்ஷமோ கேட்கக்கூடும் என எனக்குள் நான் நினைத்துக் கணக்குப் போட்டுக் கொண்டேன்.

    அதற்கான பணத்தைச் சேர்த்துக்கொண்டு, பிறகு அழைப்பதாகச் சொல்லி இப்போதைக்கு அவரிடமிருந்து தப்பித்துக்கொண்டுள்ளேன்.

    வேலை செய்ததோ அவர்கள் மொத்தம் நால்வர். 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடையிடையே காஃபி, சாப்பாடு, ரெஸ்ட், பொருட்கள் வாங்கி வரச் சென்றது என 4 மணி நேரம் போக மீதி 4 மணி நேரம் மட்டுமே வேலை நடந்தது. சும்மா இருந்து வேடிக்கை பார்த்த எனக்கு, நானே அனைத்து வேலைகளையும் செய்தது போல சர்வாங்கமும் ரத்தக்கட்டு கட்டினால் போல ஒரே வலியாக உள்ளது. ஆயிண்மெண்ட் எடுத்து அப்பிக்கொண்டு படுத்துள்ளேன். :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!