நெல்லை அருள்மணி எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைக்க, P சுசீலா குரலில் ஒரு தேனிசைப் பாடல்...
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
14.6.24
7.6.24
கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காரணம் கூறுவதோ
உடுமலைப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு டி பி ராமச்சந்திரன் இசை அமைக்க சீர்காழி கோவிந்தரராஜன் பாடிய பாடல்.
10.5.24
தாமரை அவளிருக்க... இங்கே சூரியன் நானிருக்க
லலிதா சங்கரன் அல்லது லலிதாவும் சங்கரனும் எழுதிய பாடலுக்கு
2.2.24
வெள்ளி வீடியோ : எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும் எனக்கது போதும் வேறென்ன வேண்டும்
இன்றைய தனிப்பாடல் சூலமங்கலம் சகோதரிகள் பாடியது..
25.8.23
வெள்ளி வீடியோ : திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான்
TMS குரலில் இன்றைய தனிப்பாடல்..
20.1.23
வெள்ளி வீடியோ : அழுதவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுததும் விதி வழி வந்ததில்லை ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா பாடல் போலவே அமைந்துள்ள இன்னொரு பாடல் இந்த கந்தன் திருநீறணிந்தால் பாடல்.
12.8.22
வெள்ளி வீடியோ : வானில் தோன்றும் மாலை சிவப்பு.. விழிகளில் பாதி விரல்களில் பாதி..
எழுதியவர் யார்? தெரியாது! இசையமைத்தவர் யார்? தெரியாது. ஒருவேளை புகழேந்தியாய் இருக்கலாம். பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
29.7.22
வெள்ளி வீடியோ : இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே - இதய போர்வையில் மறைத்தானே
தென்கச்சி பாரதிசாமி என்பவர் எழுதிய பாடலை இசையமைத்து சகோதரி ஜெயலக்ஷ்மியுடன் இணைந்து பாடியிருக்கிறார் ராஜலக்ஷ்மி.
25.3.22
வெள்ளி வீடியோ : வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை- இது நான்குமறை தீர்ப்பு,.
இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தப் பதிவை எழுதி வைத்திருந்தேன்.
10.12.21
வெள்ளி வீடியோ : மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் நாணமாம் துணை இருந்தால் போதுமே
ஜோதிலக்ஷ்மியின் முதல் தமிழ்ப்படத்திலிருந்து ஒரு பாடல் இன்று பகிரப்போகிறேன் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆனால் உண்மையைத்தான் சொல்கிறேன்.
24.9.21
வெள்ளி வீடியோ : உன் பாடல் கேட்டு.. தென்றல் இளங்காற்று.. உரசும்.. தழுவும்.. தினந்தோறும்..
இன்றைய மூன்று பாடல்களில் விழி பிரதானம்!
2.7.21
வெள்ளி வீடியோ : நேயர் விருப்பம் எங்கள் பிளாக் வலைவரிசை!
இன்று மூன்று நேயர் விருப்பப் பாடல்கள்.
18.9.20
வெள்ளி வீடியோ : இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம்...
27.3.20
22.3.19
வெள்ளி வீடியோ : நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்...
20.9.18
தப்பைத் தப்புத் தப்பா செய்யணுமா? சரியாச் செய்யணுமா?
23.6.17
13.11.13
சினிமா பாட்டுப் புத்தகமும் சுராங்கனி பாடலும்
ரோடில் நடக்கும்போது பளபளன்னு பிரிண்டட் பேப்பர் இருந்தாலே எடுத்துப் பார்க்கத் தோன்றும். வண்ணமயமாக ஒரு புத்தகமே கிடந்தால்? அப்படி நடந்து கொண்டிருக்கும்போது ரோடில் பளபளவென்று கிடந்தது அந்தப் புத்தகம்.
வசந்த மாளிகை, நீதி, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் என்று படங்கள் பார்த்து விட்டு வரும்போதே வழியில் பாட்டுப் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். 10 பைசா, அப்புறம் 15 பைசா!
"இளநீரைச் சுமந்துவரும் தென்னைமரம் அல்ல,
இங்கும் அங்கும் மீன் பாயும்
"மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே..."
"வானமழைத் துளி யாவும் முத்தாக மாறாது... வண்ணமிகு மலர் யாவும் உன் போலச் சிரிக்காது... தேடிவைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது...திருவிளக்கின் ஒளியாவும் உன்னழகைக் காட்டாது..."
இப்படியெல்லாம் பாடல் வரிகளை ரசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் இசையை விட பாடலின் வரிகள்தான் மேலோங்கித் தெரியும்.
இப்போதோ?
"என்ன ஓக்கே வா ஏய் கையத் தொட்டு முத்தமிட்டா
ஏ அண்டர்வேரு கோடு தெரிய லுங்கி கட்டுவேன்
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்
ஓ.... ரிங்கா ரிங்கா ஜம் மழைக்கால கேங்கா..
ஓ....பிங்கா பிங்கா ஹிட் பாப்புலர் சாங்கா...
-----------------------
-------------------------
ஊவென்ன ஊவென்ன ஒன்னானா
கூட்டமும் ஆட்டமும் இனிதானா
அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
எனை ரம்மு பீரு போடு
இனி காமினி காமினி காமினி
செம்மாங்கனி மாங்கனி மாங்கனி..
ராங்கனி ராங்கனி என்று படித்ததும் உடனே நினைவுக்கு வந்த அந்தக்கால சுராங்கனி பாடல்... அதில் வரும் இளமையான
மலேஷியா வாசு தேவனைப் பாருங்கள்! முகநூலில் இந்தப் பாடல் வரிகள் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றின் சுட்டியைத் தந்திருந்தார் ஹாரி.
அப்போதும் இதுமாதிரி சில அர்த்தமற்ற வரிகளைக் கொண்ட பாடல்கள் வந்ததுண்டு. ஆனால் அவை அளவில் ரொம்பக் கொஞ்சம்.
இப்போதும் நல்ல வரிகளைக் கொண்ட பாடல்கள் வருகின்றன. அவையும் அளவில் ரொம்ப ரொம்பக் கொஞ்சம்!
8.7.13
தியேட்டர் நினைவுகள்
எம் ஜி ஆர் படம் ஒன்று வெளியாகியிருந்தது.
நண்பருடன் படத்துக்குச் சென்றேன். டிக்கெட் வாங்குமிடத்தில் கூட்டமான கூட்டம்.
அடிதடிக் களேபரத்தில் வேஷ்டி உருவப்பட்ட நண்பர், அதை வெளியில் வந்ததுமே கவனிக்க, வெறியாகி மறுபடிக் கூட்டத்துக்குள் நுழைந்தவர், வேஷ்டியுடன் வெளி வந்தார்.
"எப்படி உடனே உன் வேஷ்டியைக் கண்டு பிடிச்சே?" என்று கேட்டேன்.
"என் வேஷ்டியா? அது எங்கே இருக்கோ... இது யார் வேஷ்டின்னே தெரியாது. என் வேஷ்டியை உருவினாங்க இல்லே... நானும் அதே வழியைத்தான் பின்பற்றினேன்" என்று அந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வர, உள்ளே சென்றோம்!
நண்பர் சிவாஜி ரசிகர். எனக்கு இருவரையும் பிடிக்கும். படம் ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே நண்பர் ஒவ்வொரு காட்சியிலும், 'இது நடிப்பா' 'இது அழுகையா' என்றெல்லாம் கமெண்ட் அடித்த படியே இருந்தார். பின்னாலிருந்து முணுமுணுப்புகளும் "உச்" ஒலிகளும் எழுந்த அதே சமயம் இரண்டு மூன்று சீட் தள்ளியிருந்த ஒருநபர் உயர்த்திக் கட்டிய கைலியுடன் வேகமாக அருகில் வந்து நண்பர் சட்டையைப் பிடித்தார்.
"இதோ பார்... எங்களுக்கு இதுதான் நடிப்பு... மேல பேசினே..வெட்டிடுவேன்! ஒண்ணு அமைதியாப் படத்தப் பாரு... இல்ல...?" என்று தொடங்கியவர் சட்டென இன்னும் கோபமாகி "எவ்வளவுடா டிக்கெட்டுக்குக் கொடுத்தே? ரெண்டார்ரூவா தானே... இந்தா... இதுல நாலு ரூவா இருக்கு... எடுத்துட்டு வெளியே ஓடிடு"
அப்போது முதல் வகுப்பு 2.50 தான். அப்புறம் நண்பர் பேசவே இல்லை. நானும் நண்பர் பக்கமும் திரும்பவில்லை, இந்தப் பக்கமும் திரும்பவில்லை.
இடைவேளையில் விளக்குகள் எரிந்தபோதும் அந்தப் பக்கம் நான் பார்க்கவே இல்லை. அங்கிருந்து எழுந்துவந்த அந்த நபர் "ஸார்! நீங்களா?" என்றபோதுதான் அவர் எங்கள் ஆபீஸ் பியூன் என்று தெரிந்தது. அப்புறம் அருகிலிருப்பவர் என் நண்பர்தான் என்று சொன்னதும் அவர் பேசாமல் போய்விட, இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் நிம்மதியாய்ப் படத்தைத் தொடர்ந்து பார்த்தாலும், நண்பர் அப்புறம் பேசவில்லை!
==============================
இன்னொரு சமயம் சிவாஜியின் ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்று வெளியான சமயம். முதல்நாள் (படம் வெளியான முதல் நாள் அல்ல!) டிக்கெட் கிடைக்காத வெறுப்பில் மறுநாள் எங்கள் ஏரியா ரிக்ஷாக்காரரிடம் பணம் தந்து நான்கு முதல் வகுப்பு டிக்கெட்டுகள் எடுக்கச் சொல்லி முன்னதாகவே அனுப்பி விட்டு, நாங்கள் அப்புறம் தியேட்டர் சென்று காத்திருந்த ரிக்ஷாக்காரரிடம் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம்.
முதல் வகுப்பில் டிக்கெட்டைக் கிழிப்பவர் கையில் கொடுத்ததும் அவர் எங்களை வெறுப்புடன் பார்த்து விட்டு கீழ் திசையில் கைகாட்டினார். பார்த்தால் அங்கு காணப்பட்ட போர்ட் "தரை டிக்கெட்டுக்குச் செல்லும் வழி" என்றிருந்தது. குழம்பிப் போய் கையிலிருந்த டிக்கெட்டைப் பார்த்தால் அத்தனையும் 50 காசு டிக்கெட்டுகள்.
ரிக்ஷாக்காரர் தன் இயல்பில் வாங்கினாரோ, கமிஷன் அடிக்க வாங்கினாரோ.... அன்று தரையில் அமர்ந்துதான் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. மாறுபட்ட அபிப்ராயங்களால், 'அப்
==============================
'அக்னி நட்சத்திரம்' வெளியான சமயம்.
மதுரை சினிப்ரியா தியேட்டர்.
நண்பர் சுகுமார், அவர் நண்பர் பாலன் மூலம் முதல் காட்சிக்கு (6.00 மணி ஆட்டம்!) டிக்கெட் ரிசர்வ் செய்யச் சொல்லி அனுப்பி டிக்கெட்டை வாங்கி வைத்து விட்டார். என்னையும் என் நண்பனையும் அங்கு வரச் சொல்லி விட்டார்.
பணி முடிந்து நாங்களும் அங்கு சென்றோம். டிக்கெட் கவுண்டரில் திமிறிக் கொண்டிருந்த கூட்டத்தை நக்கலாகப் பார்த்தபடி உள்ளே சென்றோம்.
(முன்னர் ஒருநாள், அற்றைத் திங்கள் அந்நாளில் இதே தியேட்டரில் காந்தி படம் பார்க்க இதே போலக் கூட்டத்தில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த சாதுவான என்னை இந்தத் தியேட்டர் ஊழியர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறேன் என்று சவுக்குக் கட்டையால் அடித்து காலை வீங்க வைத்திருந்தார்கள்! அந்த வெறுப்பில் இன்றுவரை நான் காந்தி படம் பார்க்கவில்லை! 'காந்தி படமும் டெண்டுக் கொட்டாயும்' என்ற எங்கள் பழைய பதிவில் ஏற்கெனவே இதைப் புலம்பியிருக்கிறேன்!)
டிக்கெட்டைக் கிழித்து எங்களை உள்ளே அனுமதித்தார் ஊழியர். சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். படம் இன்னும் தொடங்கவில்லை. சும்மா அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். படம் தொடங்கும் மணி அடித்தது. விளக்கை அணைத்துப் படம் தொடங்கும் சமயம் தியேட்டர் ஊழியர் 'டார்ச் லைட்'டுடன் நான்கு பேர்களை அழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். "உங்கள் டிக்கெட்டுகளைக் காட்டுங்கள் ஸார்..." என்றா.
அவர்களிடமும் எங்கள் இருக்கைக்குரிய எண்களைக் கொண்ட டிக்கெட்டுகள். கொஞ்ச நேர கோப, தாப, சர்ச்சைகளுக்குப் பின் நாங்கள் வெளியேற்றப் பட்டோம்!!
என்ன காரணம் தெரியுமா? எங்கள் கையிலிருந்தது, அதே தினத்துக்கான 'மேட்னி' ஷோவுக்கான டிக்கெட்டுகள். நண்பரின் நண்பர் பாலன் கைங்கர்யம். மாலைக் காட்சிக்குத்தானே நாம் சொல்லியிருந்தோம் என்று நாங்களும் அதைச் சரிபார்க்கவில்லை!
வெளியில் வந்த அவமானத்தில் சுகுமார் சற்றும் எதிர்பாராத ஒரு காரியம் ஒன்றை நாங்கள் மறுக்க மறுக்கச் செய்தார்.
சுகப்ரியாவில் ஓடிக் கொண்டிருந்த 'குரு-சிஷ்யனு'க்கு டிக்கெட் எடுத்துக் கொண்டுவந்து உள்ளே அழைத்துச் சென்று விட்டார்.
அந்தக் கொடுமையை என்ன சொல்ல!
