புதன், 22 ஜனவரி, 2020

புதன் 200122 : அந்தக் கால சினிமா இதழ்கள் சில ....



ஏஞ்சல் :

1, மன்னித்தல் ,மறத்தல் , இவ்விரண்டில் எது சிறந்தது ?




# மறத்தல் நம் கையில் இல்லை. மன்னிப்பது எனும் அளவுக்கு நாம் மேன்மக்கள் இல்லை. பொருட்படுத்தாது இருப்பது சாத்தியம் சிரேஷ்டம்.

முதலில் மன்னித்துவிட்டால், காலப்போக்கில் மறந்துவிடும். 
முதலில் மறந்துவிட்டால் மன்னிக்கவேண்டிய அவசியமே இல்லை. 

பிறர் தவறுகளை, மன்னிக்கலாம், மறக்கலாம். ஆனால் அதிலிருந்து நாம் கற்ற பாடத்தை மறக்ககூடாது. 


2, பிறரை திருப்திப்படுத்துவதற்காக நினைத்து பெரும் சங்கடத்தில் ,பிரச்சினையில் மாட்டிக்கொண்ட  அனுபவம் உண்டா ?

# உபகாரம் என்றெண்ணிச் செய்யப்போய் தவறாகப் புரிந்துகொண்ட மூன்றாம் நபரால் அலட்சியப்படுத்தப் பட்டதுண்டு. 

& பிரச்னை வரும் என்று தோன்றுகின்ற விஷயங்களில் தலையிடமாட்டேன். 

3, வாராவாரம் நாங்கள் உங்களை கேள்வி கேட்கிறோம் அப்படி நீங்கள் எங்களிடம் குறைந்தது ஆளுக்கொரு கேள்வி கேட்கணும்னா என்ன கேட்பீர்கள் ?

# அடுத்தவர் அபிப்பிராயத்துக்கு விசேஷமான மதிப்புக் கொடுக்கப் படுவது எப்போது ? ஏன் ?

& எப்படி இவ்வளவு வித்தியாசமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்? 

4, கோபம் என்பது உள்ளிருந்து வருவது அதை எதற்கு மூக்கு மேல் கோபம் என்று சொல்றாங்க ?

# கோபம் வாயை அடைவதே விபரீதம் அதையும் தாண்டினால் அபாயம் என்று உணர்த்துவதற்காக இருக்கும். அடிதடி அளவுக்குப் போகுமல்லவா?

& மூக்குதானே நம் உள்ளே இருக்கின்ற மூச்சுக்காற்றை உஷ்ணக்காற்றாக வெளியே விடும் வேலையையும், பிறகு கூல் காற்றை உள்ளே இழுக்கின்ற வேலையையும் செய்கிறது. அதனால உள்ளிருந்து வருகின்ற கோபமும் மூக்கு வழியாகத்தான் சூடாக வெளியே வரும் போலிருக்கு. 

5, அண்டங்காக்கா கொண்டைக்காரி ..இந்த பாட்டின்படி பார்த்தா அண்டங்காக்காவுக்கு கொண்டை  இருக்கணும் ஆனா அதுக்கு கொண்டையில்லையே ? விளக்கம் ப்ளீஸ் ??

# அவள் கொண்டையைப் பாருங்கள். காக்கைச் சிறகின் கரிய நிறம் தோன்றும்.

& அண்டங்காக்கா போன்றத் தோற்றமுடைய கொண்டையைக் கொண்ட பெண் என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிருக்கிறார்கள் (என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!) 



இந்தப் பாடலை கொஞ்சம் மாற்றி  ... ... 

அண்டங்காக்கா தொண்டக்காரி ....
அச்சுவெல்லக் கொண்டக்காரி ...
ஐ ஆர் எட்டு கண்ணுக்காரி ....
அயிரைமீனு பல்லுக்காரி .... 

என்று பாடினால் தோன்றும் உருவம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்! 


6, ஆலுமா டோலுமா போன்ற அரிய தத்துவார்த்தமான பாடல்களை கேட்கும்போது என்ன தோன்றும் ???

# "இந்த மாதிரிப் பாட்டு 'உண்டாக்கினவனை' ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டு, போக வர நாலு அறை வைத்து "பாட்டாடா இது ? " என்று கேட்கவேணுமென என் சகா ஒருவர் சொல்வார்.

7,போனில் மெசேஜ் அனுப்பும்போது ஒருவருக்கு அனுப்பவேண்டியதை மாற்றி இன்னொருவருக்கு அனுப்பியிருக்கிறீர்களா ?

# இல்லை. காரணம் மெசேஜ் அனுப்புவது மிகச்சில சமயங்களில்தான்.

& எப்போதாவது அப்படி அனுப்பியது உண்டு. தவறாக அனுப்பிவிட்டேன் என்று தெரிந்த உடனேயே அந்த நபருக்கு, சாரி wrong number என்று உடனடியாக ஒரு மெசேஜ் அனுப்பிவிடுவேன். 

8, குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள் பிறகு தெய்வம் நின்று கொல்லும் என்றும் சொல்கிறார்கள் ஒரே குழப்பமா இருக்கே ????

# அழுது அடம்பிடித்துக் கொல்லும் என்று சொல்லியிருக்கலாம். 

& குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,
    குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று 
என்றுதானே அந்தக் காலத்துப் பாட்டு! பிறர் செய்யும் குற்றங்களை மட்டும்தான் குழந்தையும் தெய்வமும் மறக்கும். ஆனால் தப்பு செய்பவர்களை தெய்வம் நின்று கொல்லும். 


9, நாம் நாமாயிருத்தல் நல்லதா இல்லை பிறருக்காக சற்றே வளைந்து இயல்பை மாற்றியிருப்பது நல்லதா ?

# நல்லியல்பல்லாததை மாற்றிக் கொள்வது போல் நடிப்பதும் கூட நல்லதுதான்.

& நாம் நாமாகவே இருப்பது நல்லது. 

10,பிறர் மனதில் நினைப்பது உங்களுக்கு அப்படியே தெரிகிறது என்று வரம் உங்களுக்கு கிடைச்சா அதை எந்த நல்ல விஷயத்துக்கு பயன்படுத்துவீர்கள் ?

# ரகசியக் காப்பு நல்ல விஷயம்தானே. 

& நல்ல எண்ணங்கள் கொண்டவர்களைப்பற்றி நாலு பேருக்கு நல்ல விதமாக எடுத்துச் சொல்லி, அவர்களைப்போல இருக்கவேண்டும் என்று அறிவுரை தருவேன். 

பானுமதி வெங்கடேஸ்வரன் :
                
விடை என்பதற்கும், பதில் என்பதற்கும் என்ன வேறுபாடு?

# செந்தமிழ், சற்றே மாநிறத்தமிழ் ?

& விடை என்பது கொஞ்சமாவது யோசனை செய்து, விடுவிக்க வேண்டியது. கணக்கு கொடுத்தால், அதை step by step செய்து இறுதியாக வருவது விடை. விடை என்பது யார் சொன்னாலும் ஒன்றாக இருக்கும். உதாரணமாக 5 + 3 = ?  what is (A + B)**2 போன்ற வினாக்களுக்கு யார் சொன்னாலும் ஒரே விடைதான். 

ஆனால், பதில் என்பது அப்படி இல்லை. ஒரே கேள்விக்கு ஒவ்வொருவர் சொல்லும் பதிலும் வெவ்வேறாக இருக்கும். " உங்கள் பெயர் என்ன? உங்களுக்குப் பிடித்த நிறம் எது? என்பது போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் வேறு பதில்கள்தானே அளிக்க இயலும்? 

நாங்களும் இங்கே ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்தானே எழுதுகிறோம். 
     
இலையுதிர் காலம் என்றால் யாரோ ஆணையிட்டது போல மரங்கள் இலையை உதிர்க்ககின்றன. வசந்த காலத்தில் பூக்கின்றன. டாணென்று வெய்யில் தொடங்கி விடுகிறது. மழை மட்டும் ஏன் பொய்க்கிறது?

# பூமி மனம் போனபடி சுற்றாமல் சீராகச் சுற்றுவதால் எல்லாம் நல்லபடிதான் நடக்க வேண்டும். ஆனால் பொறுப்புணர்வற்ற மனிதர் பிழையால் மழை பொய்க்கிறது. பூமியின் அயனவழியை மனிதரால் பாழ்படுத்த (இதுவரை) இயலவில்லை. 

& மழை மட்டும் கடவுளின் குறும்புக் குழந்தை. சொன்ன பேச்சைக் கேட்காது! 
   
பெரிய நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள்,முதல் காட்சிக்குச் சென்று மற்றவர்களை அவஸ்தை படுத்தியதுண்டா? அல்லது அவஸ்தைப்பட்டதுண்டா?

# மு நா மு கா எனக்குப் பரிச்சயமில்லை.

& எனக்குக் கூட்டத்தில் இடிபடுவது, அவஸ்தைப்படுவது எல்லாம் அலர்ஜி. ஆனால், முதல் நாள், முதல் காட்சி போய் வந்தவர்களின் அனுபவங்களைக் கேட்டு இரசிப்பேன். 

ஜீவி : 

அக்காலத்திய சினிமா இதழ்களின் சிலவற்றின் பெயர்களைச் சொல்லுங்களேன்.

$ பேசும் படம், குண்டூசி, (கலர்ப்படங்கள் நிறைந்த சினிமாப் பத்திரிகைகள்) தமிழ் சினிமா. தவிர பல தினசரி பேப்பர்களுடன் சினிமா மலர்கள் வார இணைப்பாக வெளிவரும். 




* பொம்மை,

அந்த இரண்டு மூன்று தான் எனக்கும் தெரியும்.

எங்கள் குடும்ப 'சினிமா டயரி' ( K G Visuweswaran) அளித்த விவரங்கள் : 


    

பொம்மை, பேசும் படம் தான் ஞாபகம் வருகிறது. சிவாஜி ரசிகன் , எம்.ஜி.ஆர் ரசிகன் என்ற பெயரில் பத்திரிகைகள் அப்போது வரும்.

பிலிம் நியூஸ் (ஆனந்தன்)

தமிழ் சினிமா, சினி நியூஸ், Filmfare

தினமணி பிரசுரம் கூட ஒரு பத்திரிகை வந்தது...ஸ்ரீ ராம்க்கு தெரியும்.

பிலிமாலயா.

கரீம் என்று ஒருவர் (ஸ்ரீராமின் அப்பாவுக்கு நண்பர்) ஒரு சினிமாப் பத்திரிகை நடத்தினார். பத்திரிகை பெயர் நினைவில் இல்லை. 
........ 

 & 'அந்தக் காலத்து' என்று கேட்டதால் எனக்குத் தெரிந்த சில பழைய சினிமாப் பத்திரிக்கைகளை (நான் ஒருதடவையாவது பார்த்தது) சொல்கிறேன் : 

பேசும்படம் 
பொம்மை (பொம்மை பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர் விஸ்வநாத ரெட்டி ) 
சினிமா எக்ஸ்ப்ரெஸ் 
சித்ராலயா 
மதி ஒளி
ஜெமினி சினிமா 

==========================================

நான் என்னதான் கொக்கி போட்டு இழுத்தாலும், கரடியாகக் கத்தினாலும், நம்ம ஏரியாவுக்கு வந்து கதை படிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் என்பதால், இன்றைக்கு இங்கே நான் 



===========================================

மீண்டும் சந்திப்போம்! 

===========================================

103 கருத்துகள்:

  1. ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று....... ஆவ்வ்வ்வ்வ்வ்வ் துரை அண்ணனுக்குக் கோபம் வரப்போகுதூஊஊஊ மீ ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா....
    அனைவருக்கும் இனிய நாளாகவும் சந்தோசமாக சிரிப்பொலியோடு இருக்கோணுமென வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா... உங்களுக்கும் இந்த நாளும் எல்லா நாளும் இனிமை சேர்க்கட்டும்.

      நீக்கு
    2. ஆஆஆ ஶ்ரீராமின் ஹெட்டூஊஊ தெரியுதே......

      நீக்கு
  4. வழக்கம் போல் கூரான கேள்விகளுக்கு குறிப்பான விடைகள்/ பதில்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, நன்றி! (மொபைல் மூலமாக இதற்கு காலையில் உள்ளிட்ட இந்த பதில் எங்கே சென்றது என்று தெரியவில்லை!)

      நீக்கு
  5. ////நான் என்னதான் கொக்கி போட்டு இழுத்தாலும், கரடியாகக் கத்தினாலும், நம்ம ஏரியாவுக்கு வந்து கதை படிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் என்பதால், இன்றைக்கு இங்கே நான் ///

    ஹா ஹா ஹா ஜி என் பி ஐயா ஓடிவாங்கோ:)( அவர்தான் இதுக்குச் சரியான பதில் சொல்லுவார்ர்):).

    பதிலளிநீக்கு
  6. பல்லெல்லாம் அயிரை மீனு மாதிரி இருந்தா...
    மன்மதனே தலை தெறிக்க ஓடிப் போய்டுவான்...

    இருந்தாலும் அதைப் பற்றியும் ஏதாவது எழுதி வைப்பார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்நிலையில் மன்மதனும் மாறுவேஷத்தில் வருவான்!

      நீக்கு
    2. ரண்டக்க ரண்டக்க ---- ரவுண்டாக ரவுண்டக்க!

      நீக்கு
  7. வேப்பெண்ணெயைப் பூசிக்கிட்டு
    வெறுங்கையால சீவிக்கிட்டு
    வேடு கட்டும் கூந்தலிலே செங்கமலம்
    காக்கா கூடு கட்டப் பாக்குதடி ருக்குமணி...

    பழைய பாட்டு ஒன்றின் வரிகள் இவை...
    யாருக்கெல்லாம் நினைவு இருக்கின்றது என்று பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாகப்பிரிவினை பாடப்பாடல்

      நீக்கு
    2. ஸூப்பர்! 

      //யாருக்கெல்லாம் நினைவு இருக்கின்றது என்று பார்க்கலாம்.//

      யார்கிட்ட? இதோ வந்துடுச்சு இல்ல பதில்...  (ஹிஹிஹி..  நான் கூகுள் செய்து ஏமாந்ததை வெளியில் சொல்லக்கூடாது!)

      நீக்கு
    3. பிள்ளையாரு கோவிலுக்கு என்று ஆரம்ப வரிகளை போட்டு பாருங்கள் ஸ்ரீராம்.
      மாட்டுப்பொங்கல் அன்று தொலைக்காட்சியில் போட்டார்கள். பொங்கல் பண்டிகை கடைசியாக வரும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

      நீக்கு
    4. https://www.youtube.com/watch?v=juVSazxOH8c
      பாடல் கேட்க ஸ்ரீராம்

      நீக்கு
    5. ஓ...   பார்க்கிறேன் அக்கா.  நன்றி.

      நீக்கு
    6. யாருக்கெல்லாம் நினிவிருக்கின்றது என்றது சும்மா ஒரு லுலுலுவா தான்...

      எனக்குத் தெரியாதா இது ஜாம்பவான்களின் தளம் என்று...

      நீக்கு
    7. சரியான பதில் வந்திருக்கவில்லை என்றால், 'கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப்பூ .... ' என்னும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்தான் ஆரம்பவரிகள் என்று சொல்லியிருப்பேன் (கூகிள் பார்க்காமல் சொல்லியிருந்தால் ..)

      நீக்கு
    8. கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதடி என் மனசு//
      இந்தப் பதிவுக்கு பொருத்தமான வரி.
      அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். கேள்விகள் கூரானால்
      வரும்பதில்களும் இசைவாகின்றன. இன்றைய கேள்விகள்
      அருமை. தெளிவான பதில்களும் அருமை.

      மிக மிக மகிழ்ச்சி.
      நல்ல குடும்ப அங்கத்தினர்கள் நடத்தும் கௌரமான பத்திரிகை
      எங்கள் ப்ளாக்.

      நீக்கு
    9. மன்னித்தல் மறத்தல் சில நிகழ்வுகளுக்கு மட்டுமே முடியும்.

      மறந்து கூட விடலாம். மன்னித்தால் நம் மனதுக்கும் உடலுக்கும் நல்லது.
      மனப்பொருமல் வயிற்றுப் பொருமலாகி உடலைக் கெடுக்கும்..

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. கேள்விகளும், பதில்களும் அருமை.

    //பிறர் தவறுகளை, மன்னிக்கலாம், மறக்கலாம். ஆனால் அதிலிருந்து நாம் கற்ற பாடத்தை மறக்ககூடாது.//

    ஆமாம், உண்மை.

    //மூக்குதானே நம் உள்ளே இருக்கின்ற மூச்சுக்காற்றை உஷ்ணக்காற்றாக வெளியே விடும் வேலையையும், பிறகு கூல் காற்றை உள்ளே இழுக்கின்ற வேலையையும் செய்கிறது. அதனால உள்ளிருந்து வருகின்ற கோபமும் மூக்கு வழியாகத்தான் சூடாக வெளியே வரும் போலிருக்கு.//

    நல்ல விளக்கம்.


    //பூமி மனம் போனபடி சுற்றாமல் சீராகச் சுற்றுவதால் எல்லாம் நல்லபடிதான் நடக்க வேண்டும். ஆனால் பொறுப்புணர்வற்ற மனிதர் பிழையால் மழை பொய்க்கிறது. பூமியின் அயனவழியை மனிதரால் பாழ்படுத்த (இதுவரை) இயலவில்லை.

    & மழை மட்டும் கடவுளின் குறும்புக் குழந்தை. சொன்ன பேச்சைக் கேட்காது! //

    அருமை.

    பேசும்படம்
    பொம்மை
    சினிமா எக்ஸ்ப்ரெஸ்
    சித்ராலயா
    மதி ஒளி
    ஜெமினி சினிமா

    எல்லாம் சர்க்குலேஷன் புத்தகம் போடும் காலத்தில் படித்து இருக்கிறேன்.
    பேசுபடம் மட்டும் வீட்டில் எப்போதாவது வாங்குவார்கள். அதில் ஒரு சினிமா கதை முழுவதுமாய் வரும்.
    ஒரு புத்தகம் வீட்டில் இருக்கிறது, அதை எடுத்துப் பார்க்க வேண்டும் அதில் அந்த மாதம் என்ன சினிமா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உண்மைதான். சில சினிமாக்கள் கதை வசனத்துடன் பழைய பேசும்படம் இதழ்களில் படித்த ஞாபகம். (பாட்டாளியின் சபதம்? )

      நீக்கு
  10. //இந்தப் பாடலை கொஞ்சம் மாற்றி ...
    அண்டங்காக்கா தொண்டக்காரி
    அச்சுவெல்லக் கொண்டக்காரி
    ஐ ஆர் எட்டு கண்ணுக்காரி
    அயிரைமீனு பல்லுக்காரி .. என்று பாடினால் ..//

    சினிமாக்காரனுங்க இன்னுமா ஒங்கள கவனிக்காம இருக்கானுங்க ..!

    பதிலளிநீக்கு
  11. நான் மன்னித்தலைவிட, மறத்தலை நேசிக்கிறேன்.

    எனது வாழ்வில் எனக்கு துரோகம் செய்தவரை மறந்து விடுவேன்.

    எப்படி ?

    இவன் எனது வாழ்வில் வந்ததில்லை, இனியும் வருவதில்லை இறுதிவரை...

    கடைசிவரை அவரு(னு, ளு)டன் பேசவே மாட்டேன்.

    இப்படி என்னிடம் சிக்கி இறுதிவரை நான் பேசாமல் மயானம் சென்றவர்களும் உண்டு

    என்னைப் புரிந்து கொண்டவர்கள் எனக்கு துரோகம் செய்யமாட்டார்கள்

    மன்னித்தால் அவனைக் காணும்போது மீண்டும் நினைவுகள் வரலாம்.

    பதிலளிநீக்கு
  12. நின்று Xகொல்லும் ?X தொடர்ந்து வருத்தும்...!

    எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென்று அடும் (207)

    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...?

    பதிலளிநீக்கு
  13. கோபம் வந்தாலே கண்ணில் தெரியும். மூக்குக்கு மேல் கண்தானே. அதனால் அப்படிச் சொல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  14. மன்னித்தல் :-

    இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர் நாண
    நன்னயம் செய்து விடல் (314)

    மறத்தல் :-

    பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று (152)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் வரிகளை சொல்ல மறந்து விட்டேன்...

      மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா... இதை மறந்தவன் வாழ்வு, தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா... விளக்கேற்றியவள் | 1965 | ஆலங்குடி சோமு

      நீக்கு
  15. மெசேஜ் அனுப்புவது தவறானவருக்கு - எங்கள் கம்பெனியில் ஒரு சம்பவம் நடந்தது. கம்பெனி சேரிட்டி ஈவன்ட் நடத்தியது. அதற்கு 10-15 லட்சம் செலவழியும். துபாயில் இருந்த சீனியர் மேனேஜர், கம்பெனி financial issues ல இருக்கும்போது இந்த வெட்டிச் செலவு என்னத்துக்கு என்று நண்பனுக்கு வாட்சப் பண்ணுவதற்குப் பதில் அவன் டிவிஷன் மேனேஜ்மென்ட் க்ரூப்புக்கு தவறுதலா அனுப்பி அடுத்த நிமிடமே கம்பெனியில் இருந்து டிஸ்மிஸ் பண்ணினாங்க.

    சிங்கப்பூர்ல நடந்த விஷயம் தெரியும்னு நினைக்கறேன்

    பதிலளிநீக்கு
  16. அண்டங்காக்கா கொண்டக்காரி
    ஐ ஆர் எட்டு பல்லுக்காரி
    ரண்டக்க ரண்டக்க ரண்டக்க

    அண்டங்காக்கா – அண்டங்களை காக்கின்ற...
    கொண்டக்காரி – கொண்டையை அடையாளமாக கொண்ட மதுரை மீனாட்சி...

    ஐ – ஐந்தெழுத்து மந்திரம் – நமசிவாய...
    ஆர் – ஆறேழுத்து மந்திரம் – சரவணபவ...
    எட்டு – எட்டெழுத்து மந்திரம் – ஓம் நமோ நாராயணாய...
    பல்லுக்காரி – பற்கள் இருக்கும் வாய்வழியாக உச்சரிப்பவளே...

    ரண்டக்க – சிவன் வீட்டில் ரெண்டக்கா (இரண்டு அக்காகள்)
    ரண்டக்க – பெருமாள் வீட்டில் ரெண்டக்கா (இரண்டு அக்காகள்)
    ரண்டக்க – முருகன் வீட்டில் ரெண்டக்கா (இரண்டு அக்காகள்)

    அண்டங்களை காக்கின்ற, கொண்டைகளை அடையாளமாக கொண்ட மதுரை மீனாட்சியே, ஐந்தெழுத்து மந்திரத்தையும், ஆறெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும், பற்கள் இருக்கும் வாய்வழியாக உச்சரிக்கும், சிவன் வீட்டில் இரண்டு அக்காகளையும், பெருமாள் வீட்டில் இரண்டு அக்காகளையும், முருகன் வீட்டில் இரண்டு அக்காகளையும், என அனைவரையும் வணங்குகிறோம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விளக்கம். ஆனால் நிச்சயம் வைரமுத்து இப்படி நினைத்து எழுதியிருக்கமாட்டார்.

      நீக்கு
    2. இந்த குறுக்கு சால் விளக்கம் லியோனியின் பட்டி மன்றத்தில் அடிக்கப்பட்ட கூத்து...

      பின் வரும் சந்ததியர் ஒருக்கால் தமிழறிந்திருந்தால் இதன உண்மையென நம்பி விடக்கூடும்...

      நீக்கு
  17. ஆலுமா டோலுமா...
    ஈசாலங்கடி மாலுமா...
    பேச்சு கலீஜ்னு...
    கிராக்கிவுட்டா சாலுமா...

    ஆல் - ஆல மரம்.
    டோல் - டோலக்கு செய்ய உதவும் கடம்பு மரம்.
    ஈஸாலங்கடி - ஈ = இந்த + சால் = சாலை + அங்காடி = கடை
    மாலுமா - திருமால்... திருமால் = பெருமாள்
    பேச்சு கலீஜ்னு - கடைக்கு கொள்முதல் செய்ய வரும் நபர், பொருளின் விலையை ரொம்ப குறைச்சு கேட்டு கன்றாவியா பேசுவது...
    கிராக்கிவுட்டா - அப்படிப்பட்ட நுகர்வோரை
    சாலுமா - தவிர்த்து விடு...

    ஆலமரமும், கடம்பு மரமும் இருக்கும் இந்த சாலையில் அங்காடி வைத்திருக்கும் பெருமாள் என்ற வியாபாரியே... உன் கடைக்கு பொருள் வாங்க வரும் நுகர்வோர், உனக்கு கட்டுப்படியாகாத விலைக்கு பொருளை கேட்டால், அவரிடம் நீ வியாபாரம் செய்யாமலிருப்பதே சிறந்த செயல்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விளக்கங்கள் மறைந்துவிட்ட கிருபானந்தவாரியார் சுவாமிகள் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

      நீக்கு
    2. சால் என்றால் சாலையா?..

      கூல் என்றால் கூழ் என்றாக்கி விட்ட தமிழ்ச் சமுதாயத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்...

      நல்லவேளை... இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்பார்கள் என்று தான் அவர் அப்போதே புறப்பட்டுப் போய் விட்டார்..

      வாரியார் ஸ்வாமிகள் மீதும் வன்முறை நடத்திய மண் அல்லவா இது!...

      நீக்கு
    3. ஆம். வேதனையான உண்மை. எம் எம் ஏ சின்னப்பத்தேவரின் சமயோஜித நடவடிக்கையால் வாரியார் வன்முறைகளிலிருந்து தப்பித்தார்.

      நீக்கு
    4. வேதனையான உண்மைகள் பல உண்டு தமிழ்நாட்டில். இன்னும் தொடரும் அவலமிது.

      நீக்கு
  18. ☝☝ ☝☝ மேலுள்ள விளக்கம் இணையத்தில்...

    சிரிப்பதா...? அழுவதா...?

    வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்து கிடக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிக்கலாம் தனபாலன். அதைத்தானே வள்ளுவர் சொல்கிறார்.
      எதிலுமே நன்மை காணலாம் என்று விளக்குகிறதோ இணையம்.

      நீக்கு
    2. கேள்விகேட்ட ஏஞ்சலுக்கும் பானுவுக்கும் நன்றி.
      நல்ல பதில் சொன்ன ஸ்ரீராம்,மற்றவர்களுக்கும் நன்றி.
      இன்றைய பதிவை மிக ரசித்தேன்.

      நீக்கு
    3. //நல்ல பதில் சொன்ன ஸ்ரீராம்//

      நானா?  நான் எங்கே?....

      நீக்கு
    4. ஹி ஹி புகழ்ந்தால் மெளனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் !

      நீக்கு
    5. ஹா. ஹா. ஹா. என் கருத்து நேற்று அப்படித்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

      நீக்கு
  19. தமிழ் இவ்வாறு சிரிப்பு என்ற பேரில் அவமதிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாகிற கால கட்டம் இது...

    பதிலளிநீக்கு
  20. 'அண்டங்காக்கா கொண்டைக்காரி .. ' பாடலுக்கான விளக்கம் அதிர வைத்தது.  பதில்கள் சுவை. 

    பதிலளிநீக்கு
  21. அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலில் கதாநாயகியின் கொண்டையில் அண்டங்காக்கை இருக்குமே,ஏன்ஜெல் பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை பானுக்கா .நான் படத்தையே கொஞ்சம் தான் பார்த்தேன் .எப்போ சிடியில் எந்த படம்னாலும் பாட்டு ffwd தான் :)

      நீக்கு
    2. நானும் வாடகை சி டி / வீடியோ காசெட் எடுத்துப் பார்த்த நாட்களில் பாடல் காட்சிகளை FFWD செய்துதான் பார்ப்பேன்.

      நீக்கு
    3. பாலச்சந்தர் படங்களுக்குக் கூட அப்படிச் சொல்வார்கள்.

      நீக்கு
  22. பேசும் படம் சினிமா இதழ் கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதன் ஆசிரியர் டி.வி. ராம்நாத் அவர்கள்.

    அடுத்தது குண்டூசி. கோபால் என்பவரை ஆசிரியராகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில் இந்த குண்டூசி, ஆன்மிக இதழாக மாற்றம் கொண்டது இன்னொரு ஆச்சரியம்.

    இந்த இரண்டு பிரபல சினிமா இதழ்கள் குமுதம் அளவில் வெளிவந்தன. அடுத்து வெளிவந்த பிரபல பேனர் சினிமா இதழான 'பொம்மை' இன்றைய ஆனந்த விகடன் சைஸில் வெளிவந்தது.
    பொம்மையின் ஆசிரியர் விஸ்வநாத ரெட்டி.

    மேற்கண்ட மூன்று பத்திரிகைகளும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் சினி பத்திரிகை உலகை கலக்குகிற மாதிரி வெளிவந்த
    'கலை' என்ற சினிமா இதழ் மறக்க முடியாத ஒன்று. பாலு பிரதர்ஸ் என்று ஓவியம் வரைகிற இரட்டையர்கள் இருந்தார்கள்
    இவர்களின் வெளியீடு தான் கலை. மற்ற மூன்று பத்திரிகைக்கும் இல்லாத சிறப்பாய் ஆர்ட் பேப்பரில் வரைந்த ஓவியங்களாய் தமிழ் சினிமா ஒளிர்ந்த பொழுது அதுவே ஒரு புரட்சியைப் போல இருந்தது.
    குறைந்த காலத்திலேயே இந்தப் பத்திரிகை நின்று போனாலும் பாலு பிரதர்ஸ் சினிமா பத்திரிகை உலகில் ஒரு சாதனையை நிகழ்த்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

    இவை எல்லாமே மாத இதழ்கள். அந்நாளாய 'கலை' பத்திரிகை மாதிரி இன்று வரை எந்த சினிமா ஏடும் வெளிவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

    கரீம் அவர்களின் பத்திரிகையின் பெயர் நினைவில் இல்லை என்ற குறிப்பைப் பார்த்தேன்.. இவர் நடத்திய பத்திரிகை தான் தமிழ் சினிமா. அந்நாளைய தினமணி சுடர் சைஸில் இருக்கும். இந்தப் பத்திரிகையில் 'கவிஞர் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டாரா?' என்ற தொடர் பகுதி ஒன்று உண்டு. கவியரசர் கண்ணதாசனின் கவிதை வரிகள் எந்த இலக்கியத்திலிருந்து சுடப்பட்டது என்று ஒவ்வொரு இதழிலும் கவியரசரின் ஒரு பாடல் இடம் பெறும். (எந்த இலக்கிய வரியின் பாதிப்பில் அந்த கவிதை வரி உருவானது என்று நாம் சொல்வது தான்)

    உதாரணம்: 'ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்..' திருப்பாவை பாடல் எல்ளோருக்கும் தெரியும். இதே வரிச் சாயலில் கவியரசர்
    'ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்; உருவில் அழகாய் வளர்ந்தவராம்' என்ற பாடலை தாய் சொல்லைத் தட்டாதே படத்திற்கு எழுதியிருப்பார். இந்த மாதிரி மாலையிட்ட மங்கை படப் பாடலான செந்தமிழ் தேன் மொழியாள் பாட்டிற்கு தொகையறா வரிகளாக வரும் 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே' வரியும் குறிப்பிடப்பட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

    தினமணி பிரசுரம் (இந்தியம் எக்ஸ்பிரஸ் குழும) சினிமா இதழ் தான்
    சினிமா எக்ஸ்பிரஸ்.

    எம்.ஜி.வல்லபனை ஆசிரியராகக் கொண்ட பிலிமாலயா பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அளவுக்கு தமிழ் சினிமா உலகைப் பற்றிய திரட்சியான விவரங்கள் கொண்ட பத்திரிகையாக அது இருந்தது.

    மற்றபடி நிறைய சினிமா ஏடுகள். சிலுக்கு சினிமா என்று கூட ஒரு பத்திரிகை இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஐயா அவர்களது விவரமான கருத்துரை பழைய நினைவுகளை மீட்டுத் தந்தது...

      இலக்கிய வரிகளை எடுத்தாண்டு
      திரைப் பாடலைச் செம்மையாக்கியதற்கே அத்தனை பெரிய வசவு எனில்...

      ரண்டக்க.. ரண்டக்க..
      டோலு டப்பி..

      இன்ன பிற வார்த்தைகளுக்கு என்ன சொல்வது!...

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      வழக்கம் போல் கேள்விகளும் பதில்களும் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

      எப்படித்தான் இவ்வளவு கேள்விகளை வளைத்து வளைத்து கேட்கிறார்கள் என நானும் ஆச்சரிப்படுகிறேன். உங்கள் பதில்களும் அதே ஆச்சரியத்தை மறுபடி தோற்றுவிக்கின்றன.

      சினிமா பத்திரிக்கைகள் எத்தனையோ இருந்தாலும் அப்போது வீட்டில் வாங்குவதில்லை என்பதால், நீங்கள் குறிப்பிட்ட பத்திரிக்கைகளை கேள்விபட்டதோடு சரி..! பார்த்ததோ, படித்ததோ இல்லை. (அவ்வளவு நல்ல பிள்ளையா.. என ஜிப்லாக் செய்த வாய்க்குள்ளிருந்து முணுமுணுப்பது கேட்கிறது. ஹா ஹா ஹா.) இன்றைய எல்லா பகுதிகளையும் ரசித்தேன். நம்ம ஏரியா தற்போதைய கதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி, நன்றி, ஜீவி சார். விவரமான பின்னூட்டத்திற்கு.
      ஜிப்லாக் வாய் ! ஹா ஹா சிரித்தேன்!!

      நீக்கு
  23. கேள்வி பதில் சினிமா ரசனை.

    பதிலளிநீக்கு
  24. நான் என்னதான் கொக்கி போட்டு இழுத்தாலும், கரடியாகக் கத்தினாலும், நம்ம ஏரியாவுக்கு வந்து கதை படிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் என்பதால், இன்றைக்கு இங்கே நான்v வலை உலகில்கொள்வாரில்லையோ என்று என்னதான் கத்தினாலும் இருக்கும் சரக்கு தான்விலைபோகும் இது நானறிந்த உண்மை


    பதிலளிநீக்கு
  25. அண்டங்காக்கா போன்றத் தோற்றமுடைய கொண்டையைக் கொண்ட பெண் என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிருக்கிறார்கள் (என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!) //

    பட விளக்கம் பார்த்தே தெரிஞ்சுக்கிட்டேன் :))))))))))))))))

    பதிலளிநீக்கு
  26. //அயிரைமீனு பல்லுக்காரி ....

    என்று பாடினால் தோன்றும் உருவம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்!//
    ஆத்தி !!!!  பேய் பேஈஈ  

    பதிலளிநீக்கு
  27. அம்மாடி !!! @டிடி சகோ !!!   இணைய விளக்கங்களை படிச்சேன் உண்மையில் சிரிப்பே வருது இப்படியெல்லாம் யோசிக்கிறவங்க இன்னும் நல்ல விஷயங்களுக்கு யோசிச்சா நம்ம நாடு எங்கேயோ போயிருக்கும் !!!  

    பதிலளிநீக்கு
  28. ஈவ்னிங் கேள்விகளுடன் வருகிறேன் சார் :)

    பதிலளிநீக்கு
  29. விரிவான கருத்துச் சொல்லணும்னு நேத்து நினைச்சிருந்தேன். ஆனால் அப்புறமா வர முடியலை. அநேகமாக எல்லோரும் நான் சொல்ல நினைத்த கருத்துக்களைப் பகிர்ந்திருக்காங்க. அனைத்துக் கேள்விகளுக்கும் நல்லதொரு பதிலைத் தந்த ஆ"சிரி"யர் குழுவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. 1.பொதுவாகத் தாய்மாருக்கு முதல் பிள்ளை தான் ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க. அதே போல் மூத்த மருமகளைப் படாத பாடு படுத்தும் மாமியார்கள் அதையே 2 ஆம் , மூன்றாம் மருமகள்களிடம் காட்டுவதில்லை/அல்லது காட்ட முடிவதில்லை! ஏன்? (இஃகி.இஃகி, இஃகி)

    2. தன் பெண், மாப்பிள்ளை ஜோடியாக வெளியே சென்றால் ரசிக்கும் பெற்றோர்கள், முக்கியமாகத் தாய் மனம் அதே மருமகள் தன் மகனோடு செல்வதை ரசிக்காமல் கரித்துக் கொட்டுவது ஏன்? பல மாமியார்கள் மருமகளும் மகனும் ஜோடியாக வெளியே சென்றால் மருமகளைக் குற்றம் சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். "அவளுக்கு அவனோடு ஜோடி போட்டுக்கொண்டு சுத்தணும்!" என்பார்கள். இது ஏன்?

    3. நேற்றைய கே.வா.போ.கதையில் கருத்துச் சொன்ன ஜீவி சார் தாய்க்குத் தன் மூத்த மகனிடம் அதிக நெருக்கம் இருக்கும் என்றும் அதனாலேயே அவனை இன்னொருவரிடம் விட்டுக்கொடுக்காத உன்னதமான மனம் என்றும் சொன்னார். அங்கேயே பதில் சொல்லிட்டேன். ஆனாலும் இதை என் மனம் ஏற்க மறுக்கிறது. இதில் சுயநலமே இருப்பதாக என் கருத்து. வந்த மருமகளும் தன்னைப் போல் வாழணும், தன் பிள்ளையும் மருமகளும் சந்தோஷமாக இருக்கணும் என அந்தத் தாய் நினைத்தால் அது அதி உன்னதம்! இல்லையா? இதற்கு உங்கள் பதில் என்ன?

    4. கணவன் சம்பாதித்துக் கையில் கொண்டு வந்து கொடுத்து அதில் நன்றாக ஆண்டு அனுபவித்தாலும் மகன் சம்பாதிக்கும் ஒற்றை ரூபாய் பெரிசாகப் பல தாய்மாருக்குத் தெரிவது ஏன்?

    5. இப்போது கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்பில் சமமாகப் பங்கேற்றாலும் முக்கியமாகத் தாய் வளர்ப்பதில் தான் குழந்தையின் குணாதிசயங்கள் அமைகிறது என்பது என் கருத்து! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

    6. இப்போதைய குழந்தைகளுக்குக் கிட்டத்தட்டப் பிறந்ததில் இருந்தே ஐபாட், செல்ஃபோன் ஆகியவற்றைப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். அல்லவு வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியில் சிறுவர்களுக்கான கார்ட்டூனைப் பர்க்கும்படி விட்டு விடுகிறார்கள். குழந்தையும் அதைக் கண்டு கொண்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டு பார்க்கிறது. இது சரியா? இம்மாதிரிப் பார்க்கும் குழந்தைகளை "ரொம்ப ஸ்மார்ட்" எனப் புகழ்பவர்களைப் பார்க்கிறேன்.

    7. குழந்தையோடு சேர்ந்து பெற்றோரும் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் பார்ப்பது நல்லதா? இப்போதைய குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்துவிடுவதாக என் கருத்து.

    பதிலளிநீக்கு
  31. 1, உங்களுக்கு பிடித்த பாடம் கணிதமா அல்லது  வரலாறா ? ஏன் என்ன காரணம் ?
    2, தர்பார் என்பது தமிழ் வார்த்தையா ??       ஹீ ஹீ இது வம்புக்குன்னே கேட்கப்பட்ட கேள்வி :))
    3, 2020 யிலும் இன்னமும் நம் நாட்டில்  பட்டுப்புடவை சேல்ஸ் அமோகமா இருக்கா ?
    4, இரசிக்கும் இசையினை வைத்து ஒருவரின் மன இயல்பை கணிக்க முடியுமா ?
    5,மனிதர் பற்றி பேசும்போது எதற்கு //குரங்கு கையில் கிடைத்த பூமாலை ,முதலைக்கண்ணீர் ,கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை //போன்ற விலங்குகளை வைத்து சொல்லும் பழமொழிகளை சொல்கிறார்கள் ?
    கீதாக்கா ஏற்கனவே நிறைய கேள்வி கேட்டதால் நான் 5 மட்டும் கேட்கிறேன் :))))

    பதிலளிநீக்கு
  32. 8.குழந்தைகளுக்கு ரசம் சாதம், இட்லி, பருப்பு சாதம் எனக் கொடுத்துக் கொண்டிருந்தது காணாமல் போய் பிட்சா, பர்கர், சமோசா, ஐஸ்க்ரீம், கேக் என மாறி வருவது ஏற்கக் கூடியதா?

    9.குழந்தைகள் தொலைக்காட்சிக் கார்ட்டூன்கள் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் சில இளம் தாய்மார்கள் செல்ஃபோன், ஐ பாட் போன்றவற்றைக் குழந்தைகளின் பயன்பாட்டுக்குக் கொடுத்துவிட்டு ரசிக்கிறார்கள். இது சரியா? சின்னக் குழந்தை வீசித் தூக்கி எறிவதைப் பார்த்திருக்கேன். என் மனம் பதறும்!

    10.ஒரே குழந்தை போதும் என்னும் இக்காலப் பெற்றோரின் மனப்பான்மை சரியா? மறைந்து வரும் உறவுமுறைகள் மீட்டெடுக்க வாய்ப்பு உண்டா?

    பதிலளிநீக்கு
  33. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.....

    விடை - பதில் - நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!