திங்கள், 20 ஜனவரி, 2020

திங்கக்கிழமை  :  வெஜிடபில் குருமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

வெஜிடபில் குருமா 


தேவையான பொருள்கள்:
உருளைக் கிழங்கு
மீடியம் சைஸ் என்றால்   - 2
பேபி பொடேடோ என்றால் – 6
கேரட்                     - 1
காலி ஃப்ளவர்              - ½ கப்
பட்டாணி                  - ¼ கப்
பீன்ஸ்                     - 4
உப்பு                       - 1½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி              - 1 டீ ஸ்பூன்

அரைத்து விட:
பொட்டு கடலை           - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல்         - 4 டேபிள் ஸ்பூன்
ப.மிளகாய்                 -  4
பெரிய வெங்காயம்         -  2
தக்காளி                    - 3
பூண்டு                      - 4 பல்

செய்முறை:
மேலே குறிப்பிட்டிருக்கும் காய்களை சற்று பெரியதாக (காலி ஃப்ளவரின் பூ அளவிற்கு இருக்கலாம்) நறுக்கிக் கொண்டு, கழுவி, காய்கள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, வேக வைக்கவும்.


வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் இவைகளை வாணலியில் குறைவாக எண்ணெய் விட்டு, வதக்கிக் கொள்ளவும். வதங்கியவுடன் அதோடு பொட்டுக் கடலை, தேங்காய் துருவல், சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்து, 



அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காயோடு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். சேர்ந்தார் போல் வந்ததும் அதில் ஜீரகம் தாளித்து, கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி விடவும்.


இதை நான் வெஜிடபில் குருமா என்று குறிப்பிட்டாலும் சிலர் இதை வெஜிடபில் ஜால்ஃப்ரைஸ் என்றும் கூறுவார்கள்.


பின் குறிப்பு:
பீட்ரூட் பிடிக்கும் என்றால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் தேங்காய்க்குப் பதிலாக தேங்காய் பாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
நான் தால் பாலக் அனுப்பிய பொழுது,"அழகான தமிழ் பெயர் இருக்க ஏன் ஹிந்தி பெயர்? இது ஒரு ஃபேஷன்" என்று ஒருவர் எள்ளினார். கல்கண்டு பாத் போட்ட பொழுது, "அது என்ன கல்கண்டு பாத்? கல்கண்டு சாதம் என்று  சொல்லக் கூடாதா என்று"ஒருவர் அதட்டினார். ஜால்ஃப்ரைஸ் என்னும் வெஜிடபில் குருமாவிற்கு என்ன சொல்லப் போகிறார்களோ? கடவுளே என்னை காப்பாற்று.

61 கருத்துகள்:

  1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்து எனினும் வேண்டற்பாற்றன்று..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வெஜிடபுள் குருமாவா பானுமதியின் கைவண்ணத்தில்? கர்நாடகத்தில் இதை சாகு என்பார்கள்னு நினைக்கிறேன். உருளைக்கிழங்குக்கு முதன்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம். அந்த சாகுவை நினைவுபடுத்தாதீர்கள். ஏற்கனவே தமிழக உணவு போயிடுச்சேன்னு வெறுப்பில் இருக்கேன். பூரி மசால், நம்மூர் சாதா தோசை சாம்பார்....ம்ஹும்

      நீக்கு
    2. //ஏற்கனவே தமிழக உணவு போயிடுச்சேன்னு வெறுப்பில் இருக்கேன்.// அதேதான், ஹோட்டலுக்குப் போனால் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் தயாரிப்பான வெஜிடபுள் குருமா செய்முறை படங்களுடன் அருமை. மிக நன்றாக செய்துள்ளீர்கள். செய்து சாப்பிடும் ஆவல் தோன்றுகிறது. இது போல் விரைவில் செய்து பார்க்கிறேன்.

      சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள். சொல்கிற மாதிரி மு. பாவும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் என கணவருக்கு இந்த மசாலா அயிட்டங்கள் அவ்வளவாக பிடிக்காது என்பதினால், இந்த குருமா வழிக்கே நான் அவ்வளவாக சென்றதில்லை. என் குழந்தைகளுக்காக எப்பவாவது செய்வேன்.(எனக்கும், குழந்தைகளுக்கு மட்டும் என) மற்றும் தாங்கள் கூறுவது உண்மைதான்.. இங்கு வந்து "சாகுவை" சாப்பிட்ட பிறகு குருமா வழியே சுத்தமாக மறந்து விட்டது. ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. இது கை வந்த கலை ஆயிற்றே...

    கேரட் போட மாட்டேன்... தக்காளி குறைத்துக் கொள்வேன்...

    அப்போது தான் கரம் மசாலா குருமாவுடன் கூடி இருக்கும்...

    பனீர் வதக்கி சேர்த்து விட்டால்
    ஓஹோ!... தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரட் சேர்த்தால் தித்திப்பு வந்துடுதுனு நம்மவரும் சொல்லுவார். சில சமயம் நானும் போட மாட்டேன். உருளைக்கிழங்கு, தக்காளி கொஞ்சமாய்த் தான்சேர்க்கணும். ஆனால்பெரும்பாலும் நான் உருளைக்கிழங்கை இந்தக் குருமாவோடு சேர்ப்பதில்லை.

      நீக்கு
    2. அதே.. அதே...

      ஆனாலும்
      உருளைக் கிழங்கு இல்லாத குருமாவா!...

      நீக்கு
    3. போனால் போகுதேனு ஒண்ணே ஒண்ணு போட்டுக்கலாம். ஆனால் இங்கே ஒரு உ.கி. அரைக்கிலோவுக்குக் குறையாது! ஆகவே இங்கே நோ உருளை! :))))))நேத்திக்குக் கூட விருந்தினருக்கு என வெஜிடபுள் பிரியாணி பாரம்பரிய முறையில் செய்தேன். "தம்"கட்டவில்லை. இப்போல்லாம் அது முடியறதில்லை. ஆனாலும் பிரியாணி நல்லாவே வந்திருந்தது. அதிலும் உ.கி. போடலை. மற்றக் காய்கள் எல்லாம் உண்டு.

      நீக்கு
    4. உ.கியை பழிக்க வேண்டாம். அதைப்போல அவசரத்துக்கு எனக்கு கைகொடுப்பது வேற கிடையாது. தயிர் சாதம் உருளை கார கரேமது எனக்கு எதேஷ்டம்

      நீக்கு
  5. நெய்ச்சோறு ஆக்கினால் அதற்கு சரியான ஜோடி இந்த வெஜ்.. குருமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இந்த காம்பினேஷன் பிடிப்பதில்லை. சாத்த்துக்கு குருமாவா?

      நீக்கு
    2. துரை நீங்க நெல்லைகாரரா? அங்கேதான் நெய்சாதத்திற்கு இந்த குருமாவை பயன்படுத்துவார்கள் கடந்த வாரம் எங்கள் வீட்டில் நடந்த வீருந்தில் செய்த பலவகை உணவில் இந்த நெய்சாதம் குருமாவும் இடம் பெற்று இருந்தது

      நீக்கு
    3. நான் தஞ்சாவூர்க்காரன்...

      தஞ்சை மாநகரில் பிறந்தவன்...
      பூர்வீகம் (200 ஆண்டுகளுக்கு முன் ) நெல்லை...

      நீக்கு
    4. @Ne.tha. வட மாநிலங்களில் ஜீரா ரைஸுக்கும், பட்டாணி மட்டுமே போட்டுச் செய்யும் மடர் புலவுக்கும் இம்மாதிரிக் காய்கள் கலந்த குருமா, ராஜ்மா, சனா அல்லது தால் மக்கனி தான் தொட்டுக்கப் பண்ணுவாங்க. நாங்களும் பண்ணுவோம்/பண்ணி இருக்கோம்.

      நீக்கு
    5. கீசா மேடம்.. புராவ் மற்றும் ஜீரா ரைஸ்ல பட்டைலாம் சேர்ப்பதுனால, சப்பாத்திக்கு உள்ள சைட் டிஷ் மடர்பனீர், குருமா, ராஜ்மா போன்று.. நல்லாவே இருக்கும். வெறும் நெய் சாத்த்துக்கு எப்படி?

      எப்போ அரங்கம் வர்றீங்க? சமையல் பதிவுலாம் எழுதலாமே.. ஒரு மாறுதலுக்கு இனிப்பு செய்முறை எழுதுங்க.. அருமையான குஞ்சாலாடு சாப்பிட்டு ரொம்ப நாளாயிடுத்து.

      தி பதிவுல உங்க வேரியேஷன்கள்லாம் படிப்பேன். தொடர்ந்து பின்னூட்களில் தி பதிவுல உங்களோடது adds lit of value. Thanks

      நீக்கு
    6. நெல்லைப்பக்கம் நெய் சாதத்துக்கு எல்லாக் காய்களும் போட்டுப் பண்ணுவது தேங்காய்ப் பால் ஊற்றிய சொதினு நினைக்கிறேன். குருமாவுக்கும் அதற்கும் வித்தியாசம் நிறையவே உண்டு. எதுக்கும் கோமதி அரசு சொல்லட்டும்.

      நீக்கு
  6. இன்று யானை கட்டிப் போரடிக்கலாம்....

    பதிலளிநீக்கு
  7. பொருத்தமான குறளை துரை அளித்திருக்கிறார். வெஜிடபுள் குருமா என்னோட முறையில் கொஞ்சம் மாறுபடும். இத்தனை உ.கி. போடமாட்டேன் என்பதோடு அநேகமாக உ.கி.யே இருக்காது. காலிஃப்ளவர், காரட், பீன்ஸ், சௌசௌ அல்லது நூல்கோல், பட்டாணி, தக்காளி போன்ற காய்கள் சேர்ப்பேன். பச்சைமிளகாய், இஞ்சி, (நோ பூண்டு. பிடிச்சால் போட்டுக்கலாம்.)வெங்காயம் நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு, கசகசா, ஏலக்காய்(கறுப்புக்கு முதல் இடம், இல்லைனால் சின்ன ஏலக்காய் 2) கிராம்பு 2 போட்டுக் கொண்டு நன்கு அரைத்துக்கொள்வேன். தேவையானால் முந்திரிப்பருப்பைத் தனியாக விழுதாக அரைத்துக் கொள்வேன். காய்கள் கொஞ்சமாக இருக்கும் பக்ஷத்தில் மேலே சொன்ன சாமான்களோடு ஒன்றிரண்டு மு.ப. வைத்து அரைத்துக் கொண்டு, வெண்ணெயில் சர்க்கரை சேர்த்துக்கொண்டு வெங்காயம், தக்காளி வதக்கிக்கொண்டு காய்களையும் வதக்கி அரைத்த விழுதைப் போட்டுப் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டு அரை டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு டீஸ்பூன் கொத்துமல்லிப் பொடி, (சிலர் கொத்துமல்லி விதையை வைத்து அரைப்பார்கள். அது நிறைய விழுதாக ஆகிப் போகிறது என்பதால் நான் அரைப்பதில்லை.)கரம் மசாலா கால் டீஸ்பூன் போட்டுக் கிளறித் தேவையான ஜலம் சேர்த்துக் கொதிக்கவிட்டால் குருமா தயார். தயிர் தேவையானல் சேர்க்கலாம். அல்லது புதிய க்ரீம் சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்காவின் கை வண்ணம் அருமை...

      இன்று என்ன ஒன்றுக்கு ஒன்று சமையல் பதிவு கூடுதல் இணைப்பா!...

      நீக்கு
    2. முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் தனியாக ஒரு பதிவாக படங்களோடு அனுப்புங்கள் கீதா அக்கா.

      நீக்கு
    3. அநேகமாக இது அடிக்கடி பண்ணுவேன் பானுமதி. முடிஞ்சப்போ நினைவும் இருந்தால் படம் எடுத்துப் பகிர்கிறேன். :))))))

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. இன்று அருமையான ரெசிப்பி. என்னைச் செய்யத் தூண்டுகிறது. புது வீட்டில் புகுந்த வாரத்தில் செய்துபார்த்துவிடுகிறேன்.

    எனக்கு என் மனைவி தயிர் சேர்த்துச் செய்யும் குருமா பிடிக்கும். எனக்கு சப்பாத்தி சரியாக பண்ண வராது. அதனால் சில வருடங்களுக்கு முன் ஓரிரு ரெசிப்பி செய்துபார்த்ததோடு சரி.

    பாராட்டுகள் பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.

    பீட்ரூட் சேர்த்தால் குருமா நிறம்மாறிடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பீட்ரூட் சேர்த்தால் குருமா நிறம்மாறிடாதா?// அதனால்தான் பிடித்திருந்தால் என்று ஒரு வார்த்தை சேர்த்திருந்தேன். 

      நீக்கு
    2. //பாராட்டுகள் பானுமதி வெங்கடேச்வரன் மேடம்.// நம்ப முடியவில்லை. தலை சுழல்கிறது. நெ.த. என்றால் விமர்சனம், இப்படி தடாலென்று பாராட்டி விட்டால்..? நெல்லைதானா என்று சந்தேகம் வருகிறது. 

      நீக்கு
    3. அதானே, இது நெ.த.வே இல்லை, நம்ப முடியவில்லை, ம்ப முடியவில்லை, ப முடியவில்லை, முடியவில்லை, டியவில்லை, யவில்லை, வில்லை, ல்லை, லை, ஐ, ஐ ....... (எதிரொலி)

      நீக்கு
    4. கீசா மேடம், பா.வெ மேடம் - என் மைன்ட் செட்தான் பாராட்டுகள்னு வெளிப்படையா எழுதாத்துக்குக் காரணம். இது என்னில் உள்ள குறைதான். சில சமயம் வெறும்ன உதட்டளவுல சொல்றோமோன்னும் தோணும். தொடர்ந்து மாற்றிக்க முயல்கிறேன்

      நீக்கு
  10. வெஜிடபிள் இல்லையோ? பில் னு வந்திருக்கு.

    குருமா என்பதற்கு காய்கறி அளிசல் என்று தமிழ்ப்படுத்தினால் நல்லாவா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வெஜிடபிள் என்றுதான் எழுதினேன். பிறகு வெஜிடபிளா? வெஜிடபிலா என்று சந்தேகம் வந்தது. உச்சரித்துப் பார்த்ததில் 'ல்'விகுதிதான் சரி என்று தோன்றியது. அதனால் வெஜிடபில் என்று மாற்றி விட்டேன். 

      நீக்கு
    2. Vegetable..

      வெஜிடபிள்!..
      வெஜிடபில்!..
      வெஜிடேபிள்(ல்)!...

      !?..

      நீக்கு
    3. காய்கறி அளிசல்!..

      அளிய... அளிதல் - கனிந்த , பழுத்தல் .. என்று பொருள்படும்...

      தலை சுற்றுகிறது...

      நீக்கு
    4. சாதம் அளிந்துவிட்டது- சாதம் குழைந்துவிட்டது, அதிகமாக வெந்துவிட்டது.. இந்த வார்த்தையை நாங்கள் உபயோகிப்போம்.

      அளிசல்னா கனிந்த என்றால், வழிசல்னா என்ன பொருள் துரை செல்வராஜு சார்?

      நீக்கு
    5. அது தவறு பா.வெ. மேடம்... ill - இது ல் என்று வரும். le - இது ள் என்று வரும். CABLE - கேபிள் TABLE - டேபிள். DOUBLE - டபிள்
      visil - விசில்

      நீக்கு
    6. இவ்ளோ தூரம் சிரத்தையா செஞ்சதுக்கு அப்புறம் அடுக்களை அரசிகளை அழைத்து அவர்களுக்குப் பரிமாறும் போது

      அளிசல்.. ல உப்பு இல்லைங்கறது
      தெரியறப்போ தான்..

      வழிசல்!....

      (இதுக்கு நாங்க எங்க வூட்லயே சாப்டுருப்போம்..)

      சும்மா லுலுலுவாவுக்காக!....

      நீக்கு
  11. படங்கள் செய்முறையை அழகாக காட்டியது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. என்னாங்கோ பட்டை, கிராம்பு,  ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு, போன்ற மசாலா சாமான் இல்லாமல் செய்தால் குருமா ஆகாது என்பது என் கருத்து. இது வேண்டுமென்றால் தேங்காய் அரைத்த சேர்த்த காய்கறி சூப் என்று சொல்லலாம். 

    பதிலளிநீக்கு
  14. நேற்று எங்கள் வீட்டில் உளுந்து சாதமும் வெஜிடபிள் குருமா + வாழைக்காய் சாப்ஸ்.

    பதிலளிநீக்கு
  15. ரெசிப்பியை கோடுபோட்ட நோட்டில் எழுதி அனுப்பினீங்களா? ஸ்ரீராம், அப்படியே வெளியிட்டிருக்கிறார் (கோடு போட்ட நோட்டு மாதிரியே).

    இப்போல்லாம் ஸ்ரீராம் ரொம்ப பிஸி. கீதா ரங்கன், நெ.த வைத் தொடர்ந்து ...ஹா ஹா

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. குருமா நன்றாக இருக்கிறது.
    செய்முறை படங்களுடன் அருமை.

    பதிலளிநீக்கு
  18. மிக அருமையான குறிப்பு.அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்
    பானு.
    எனள் வீட்டுக் குருமாவில் தக்காளி கிடையாது. உ.கி
    நிறைய உண்டு.
    பூண்டு, கொத்தமல்லி,ப.மிளகாய், கசகசா,ஏலக்காய்,கிராம்பு,தேங்காய்
    வெங்காயம், முந்திரி எல்லாம் சேர்த்து அரைத்து
    உ.கி கொதித்ததும் சேர்த்து
    கலந்து வாசனை போனதும் இறக்கி விடுவது.
    இது சப்பாத்திக்குத் தொட்டுக்கச் செய்யும் குருமாவா செய்து விடுவேன்,.

    ஓரொருத்தருக்கு ஒவ்வொரு முறை பழகி இருக்கிறது.
    காய்கறிகளுக்குத் தனி குருமா.
    மனம் நிறை வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  19. 'குரு'மா' மிகவும் பிடிக்கும்...!

    நாளை செய்து விட்டு சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. D D உண்மையாலுமே ஒரு 'குரு'மா இருக்கிறார். குரு கிராமம் பக்கம். பெரிய ஆஸ்ரமம் நடத்துகிறார். 
      http://www.gurumaa.com/ashram/ashram-rishi-chaitanya-ashram-in-india

      Jayakumar

      நீக்கு
  20. நன்றாக இருக்கு. பொதுவா குருமா எனில் கசகசா சேர்ப்பார்களெல்லோ, அதற்குப் பதிலாகத்தான் பட்டாணியோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கச கசாவுக்கு பதிலாக பட்டாணியா! அப்போ கடுகுக்கு பதிலாக சுண்டைக்காய் வத்தலா!

      நீக்கு
    2. கேஜிஜி சார்... கடையில் ஃப்ரோசன் வாங்கி அவனில் சுடவைப்பவர்களிடம் இதையெல்லாம் விளக்கலாமோ? அதிராவுக்கு எங்க தெரியப்போவுது, கசகசா மற்றும் முந்திரியின் உறவு?

      நீக்கு
    3. அதானே அப்போ இது குருமாக் கறி இல்லையாக்கும்:).. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ:)... கசகசாவும் கஜூவும் இல்லை எனில் அது எப்படிக் குருமா ஆகும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... :)

      நீக்கு
  21. மசாலாக்கள் சேர்காத மரங்கறிகுருமா உடலுக்கு தீங்கில்லாதது.

    பதிலளிநீக்கு
  22. குருமா நல்லா இருக்குக்கா ..நான் பீன்ஸ் அப்புறம் turnip சேர்ப்பேன் குருமாவில் பீட்ரூட் போட்டா கலரை மாத்திடும் கூட வதக்கும்போது குடை மிளகாயும் சேர்ப்பேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்க சமைப்பீங்களா ? நான் என்னவோ நீங்க சமையல் குறிப்பு மட்டும் எழுதுவீங்க என நினைச்சு இருந்தேன்

      நீக்கு
    2. மதுரைத் தமிழன் — இப்படீலாம் கலாய்க்கப்படாது. டேவடை கிச்சனில் கடந்த இரண்டு வருடங்களில் இரண்டரை ரெசிப்பி படங்களோட போட்டுருக்காங்களே. அப்புறமும் உங்களுக்கு டவுட் வரலாமா?

      நீக்கு
    3. யப்பாடி ரெண்டு பேருக்கும் எவ்ளோ சந்தோஷம் என்னை கலாய்க்கிரதில் :) சரி சரீ ஆப்பியா இருங்க :))) அது அதான் புது சமையல் ரெசிப்பி உங்களை நோக்கீ வருது :)))))))))))))))))

      நீக்கு
  23. நல்லதொரு பகிர்வு.

    தரி வாலா மிக்ஸ் வெஜ்! :))) தேங்காய் இல்லாமல் இங்கே சிலர் செய்வதுண்டு!

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!