வெள்ளி, 31 ஜனவரி, 2020

வெள்ளி வீடியோ : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே

புதிய பாடல், சமீபத்திய பாடல் போல தோன்றினாலும் படம் வந்து பனிரெண்டு  ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நம்ப முடியவில்லை.   எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது காலம்!



வாரணம் ஆயிரம்.  2008 இல் வெளிவந்த திரைப்படம். இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்து வெளியானது.  1.5 கோடி மதிப்புள்ள கேமிராவை ஒரு டெக்னீஷியன் உடைத்து, மறுநாள் அதே கேமிரா புதிதாக வாங்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.  அசின் இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தும், சூர்யா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.   முன்னதாக அவருடைய சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க அசின் மறுத்ததே காரணமாம்.  



இந்தப் படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.   அவருடைய அப்பா மறைந்த செய்தி அவருக்கு ஒரு விமானப் பயணத்தில் சொல்லப் பட்டதாம்.  அந்த இன்ஸ்பிரேஷனில் உருவான படமாம் இது.  ஆனாலும் பாரஸ்ட் கம்ப் மற்றும் ஒரு ஆங்கிலப் படத்தின் பாதிப்பு படத்தில் இருப்பதாகவும் அப்போது கிசுகிசுத்தார்கள்.



சூர்யாவின் தந்தையாக நடிக்க முதலில் நானாபடேகர், மோகன்லால் என்றெல்லாம் யோசித்து, கடைசியில் சூர்யா தானே அந்த வேடத்தையும் செய்வதாகச் சொன்னாராம்.   

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் இனிமை.   அதில் இந்தப் பாடல் சூப்பர்ஹிட்.  ஹரிஹரன் குரலில் பாடல் வெகு இனிமை.பாடலை எழுதி இருப்பவர் கவிஞர் தாமரை.  இந்தப் படத்துக்குப் பிறகு ஹாரிஸும், கெளதம் வாசுதேவ் மேனனும் பிரிந்து விட்டு, 2015 இல் மறுபடி இணைந்தார்களாம்.  இந்தப் பாடலில் வரும் கிடார் இசை ஒரு ஸ்பெஷல்.

சூர்யாவும் சமீரா ரெட்டியும் காட்சியில்.  சமீரா ரெட்டியின் முதல் தமிழ்ப்படம்.  

நிறைய ஹரிஹரனின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.  இந்தப் பாடலில் அவர் குரல் மிக நன்றாய் இருக்கும். 

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை 
நீருக்குள் மூழ்கிடும் தாமரை 
சட்டென்று மாறுது வானிலை 
பெண்ணே உன் மேல் பிழை  
நில்லாமல் வீசிடும் பேரலை 
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை 
பொன்வண்ணம் சூடிய காரிகை 
பெண்ணே நீ காஞ்சநை  
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி 
என் உயிரை உயிரை நீ ஏந்தி 
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி 
இனி நீதான் எந்தன் அந்தாதி 

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க 
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க 
கள்ளத்தனம் ஏதும் இல்லா 
புன்னகையோ போகன்வில்லா 
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ 
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ 
என்னோடு வா வீடு வரைக்கும் 
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்  
இவள் யாரோ யாரோ தெரியாதே 
இவள் பின்னால் நெஞ்சே போகாதே 
இது பொய்யோ மெய்யோ தெரியாதே 
இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே..  

தூக்கங்களை தூக்கிச் சென்றாள் 
ஏக்கங்களை தூவிச் சென்றாள் 
உன்னை தாண்டி போகும் போது 
வீசும் காற்றின் வீச்சு வேறு 
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே 
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே 
காதல் எனை கேட்கவில்லை 
கேட்டால் அது காதல் இல்லை  
என் ஜீவன் ஜீவன் நீதானே 
என தோன்றும் நேரம் இதுதானே 
நீ இல்லை இல்லை என்றாலே 
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே





49 கருத்துகள்:

  1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. பாடலும் அதன் வர்ணனையும் நன்று..

    பதிலளிநீக்கு
  4. இன்று நேயர் விருப்பம் இல்லையா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும்.  நேரமின்மை.  இது சில நாட்களுக்கு முன்னரே தயார் செய்யப்பட்டது.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    இன்றைய வெள்ளி பாடல் கேட்டிருக்கிறேன். அருமையான பாடல். புதுப் பாடல் என்றாலும், சில பாடல்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. அந்த மாதிரி பாடல்களில் இதுவும் ஒன்று.

    படத்தில் இந்தப் பாடலைப் பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன். பாடலை இன்றும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பிரார்த்தனைகளுக்கும் ரசித்ததற்கும் நன்றி கமலா அக்கா.... வாங்க... வணக்கம்.

      நீக்கு
  6. நெஞ்சுக்குள் மாமழை என்றால்
    நீருக்குள் ஏன் மூழ்க வேண்டும் தாமரை?...

    இதனாலேயே இந்தப் பாடல் பிழைத்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன் காலம் தவிர்த்து திரைப்பட பாடல்களில் அர்த்தம் நோக்கும் வீண்வேலை தவறில்லையா துரை செல்வராஜு சார்?

      நீக்கு
    2. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' ஒரு நிகழ்வு. 'நீருக்குள் மூழ்கிடும் தாமரை' வேரொரு நிகழ்வு. காதல் வசப்படும் பொழுது நடைபெரும் இயல்பு மீறிய சம்பவங்கள். ,செக்கச்சிவந்தன விழிகள், கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்..' என்று வாலி எழுதவில்லையா? இதற்கெல்லாம் காரணம் அந்தப்பெண். இப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
    3. நான் இந்தப் படம் பார்த்ததில்லை..
      பாடலை அடிக்கடி கேட்டதும் இல்லை...

      ஆலமரத்தில் கூடுகட்டும் ஒரு மாடப்புறா என்றது மாதிரி இருக்கலாம்....

      அன்பின் விளக்கத்துக்கு நன்றி...

      நீக்கு
    4. கவிஞர் தன் பெயர் கொண்ட முத்திரை பதித்திருக்கிறாரோ என்னவோ...!

      நீக்கு
    5. பானு அக்கா குறிப்பிட்டிருக்கும் சுசீலா பாடல் வெகு இனிமையான பாடல். "ஒரு நாள் யாரோ..."

      நீக்கு
  7. உலக அதிசயமா இருக்கே! சூப்பர்பாடல், ஓரிரு தசாப்தய பாடல் ஶ்ரீராம் விருப்பமாக...

    பாடலைச் சுற்றிய மசாலாச் செய்திகளும் நன்று

    பதிலளிநீக்கு
  8. கேட்டேன். வாக் போகிறேன். வந்து சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாமரையின் வரிகள் இசையமைக்க ஏதுவானவை. ஹாரிஸும் சரியாகச் செய்ய, ஹரிஹரன் இழைகிறார். பாடல் நன்றாக வந்துள்ளது. இப்போதுதான் முதன்முதலாகக் கேட்கிறேன்.

      பாட்டுக்கு இடையிலே வசனத்தைப் பேசுவது பாடலின் ரிதம்-ஐக் குலைக்கும் செயல். ஒன்று பாடல்..இல்லையென்றால் வசனம். காப்பியையும், டீயையும் கலந்து குடிக்கமுடியாது!

      பொதுவாகப் பாடலுக்கான காட்சியமைப்பு அசட்டுத்தனமாக அமையும். இங்கே வீடியோவும் சரியாக இணைகிறது!

      நீக்கு
    2. கேட்டுட்டு ஓடாமல் நடந்தபோதே பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்று தெரிந்தது ஏகாந்தன் ஸார்! ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    3. பாடலின் இடையே பெருமளவில் வசனம் இல்லாதது ஆறுதல்!

      நீக்கு
  9. நல்ல பாடல் ஜி
    படத்தைக் குறித்த விடயங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  10. சூர்யா மீது இளம் பெண்கள்(என் பெண் உட்பட) பைத்தியமாக இருந்த காலம் அது.இந்தப்பாடல், சில்லென்று ஒரு காதல் படத்தில் வரும் பாடல் இவை தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டால் உடனே நட்பு வட்டத்திற்கு மெஸேஜ் பரக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த கவர்ச்சியை சூர்யா இப்போது இழந்து விட்டாரோ....!

      நீக்கு
    2. அழகான குழந்தை முகம், ஜோதிகாவைக் கைப்பிடித்தது என்றவைகளால் சூர்யா நல்ல ரசிகர்களைக் கொண்டிருந்தார்.

      ஒரு படத்துக்கு சிக்‌ஷ் பேக் வைத்து அழகை இழந்தார்.

      பாவெ மேடம்.. இயல்பை மீறிய விஷயங்கள் பின்னூட்டத்தைப் பாராட்டுகிறேன்

      நீக்கு
  11. கெளதம் மேனனின் தந்தை இறந்த பிறகு, அவர் இயக்கிய படம். இந்தப்படத்திற்குப் பிறகுதான் கெளதம் வாசுதேவ் மேனன் என்று டைட்டில் போட்டுக்கொள்ளத் தொடங்கினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். மிகமிகப் பிடித்த பாடல். அருமையான வரிகள். தாமரையின் நெஞ்சம் நிறைந்ததால் அது தண்ணீரில் மூழ்கியதோ!
      இனிய இசை, குரல். சூர்யா மீது காதலாகிக் கிடந்த பல சின்னப் பசங்களைத் தெரியும்! பானுமா சொல்லும் செய்திகளும் புதியவை. பாடலுடன் தொடரந்த செய்திகள் மிக சுவை. நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா... வணக்கம். ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  12. "என்னோடு வா வீடு வரைக்கும், என் வீட்டை்ப்பார் என்னைப் பிடிக்கும்"இந்தப்பாடலில்,என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை. காதலில் என்னவொரு நேர்மையான அப்ரோச்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பையன் வீட்டைப் பார்த்தபின் வீட்டிலுள்ள பெண்ணைப் பிடித்ததென்றால்.. கதை வேறுமாதிரியா போகுமே!

      நீக்கு
    2. இங்கு வீட்டிற்கு அழைப்பது பையன்.

      நீக்கு
    3. எனக்கும் அந்த வரிகள் பிடிக்கும். அனுபவபூர்வமாக அதை நான் அனுபவித்தவனும் கூட...

      நீக்கு
  13. அருமையான பாடல். நான் ரசித்தனவற்றில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  14. இப்போதைய புதிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்.
    இனிமையான பாடல்.
    கேட்டு ரசித்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பாடலைக் கேட்கும் போது மனம் மலர்ந்தால்
      இந்தக் குரலுக்கும் இசைக்கும், சூரியாவுக்கும்
      முதல் மதிப்பெண்.
      நான் இந்தப் படம் பார்க்கவில்லை.
      இருந்தும் வெகுவாகக் கவர்கிறது இந்தப் பாடல். மிக மிக நன்றி
      ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வாங்க கோமதி அக்கா... நன்றி.

      நீக்கு
    3. ஒரு அதிசயம்!!!!! நான் இந்தப் படம் பார்த்தேன் வல்லிம்மா... குரலுக்கு முதலிடம். ட்யூன் சமமாக முதலிடம்தான்!

      நீக்கு
  15. எல்லாமே புதுசு. பாடலையும் அதன் விளக்கத்தையும் விடச் சொல்லப் பட்ட கருத்துகள் மனதைக் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  16. பாடல் இனிமை. படமும் பார்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. படம்பார்த்ததில்லை பாட்டு கேட்டிருக்கிறேன் ஆனால் உங்களைப் போல் ரசிதததில்லை

    பதிலளிநீக்கு
  18. இனிமையான பாடல். நானும் நிறைய முறை கேட்டு ரசித்திருக்கிறேன்.

    இப்போது இனிமையான புல்லாங்குழலோசை கேட்டு ரசித்திக் கொண்டிருப்பதால் இந்த, சினிமா பாடலை கேட்கவில்லை! பிறிதொரு சமயம் கேட்கலாம்! :)

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!