சில சமயங்களில் சில கற்பனைகளை சொல்லும்போது நாமே அதற்கு சான்று இல்லை என்று சொல்லி விட்டால் கூட காலப்போக்கில் மக்கள் அதையும் உண்மைக் கதை போலவும், வரலாற்றில் சிலர் அதை மறைக்கப் பார்க்கின்றார்கள் என்றும் நம்பத் தொடங்கி விடுவார்கள்!
இதை நம் அன்றாட வாழ்வில் கூட காணலாம். நாம் அறிந்த, நம்முடன் பழகிவரும் ந(ண்)பர்களை பற்றியே ஒரு சாரார் சில கதைகளைக் கூறுவர். அவர்களிடமும் கேட்க முடியாது. நம்பவும் முடியாது. வதந்தியா உண்மையா என்றும் தெரிந்து கொள்ளமுடியாது. இதைச் சொல்லும் நண்பர்களில் இதைத் தொடங்கியது யார் என்றும் தெரிந்து கொள்ள முடியாது. அது தெரிந்தாலாவது அவருக்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்!
இது வேறு லைன்.
சமீபத்தில் ஜோசியம், கைரேகை பற்றி எழுதியபோது குடந்தை ஜோதிடர் வம்சம் என்று ஒன்று இருந்தததாக துரை செல்வராஜூ ஸார் குறிப்பிட்டிருந்தார். கற்பனைப் பாத்திரங்கள் அப்படி மனதில் இடம்பெற்று விடுகின்றன. பொன்னியின் செல்வன் காவியத்தில் யார் யார் கற்பனைப் பாத்திரம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்!
பொன்னியின் செல்வன் என்றில்லை, பல்வேறு வரலாற்றுக் கதைகளிலும் இந்நிலைதான். வரலாற்றுக் கதைகள் படிக்கும் சுவாரஸ்யத்தில் வரலாற்றிலேயே நிறைய கதைகள் சொல்வதும் வழக்கமாகிவிட்டது!
அதேபோலத்தான் சலீம்-அனார்கலி காதலும். https://en.wikipedia.org/wiki/ Anarkali
யாரோ இரண்டு வெளிநாட்டவர் லாகூரில் தாங்கள் பார்த்த ஒரு சமாதியை வைத்து, கேள்விப்பட்ட கதையை எழுத, நாளடைவில் உருது வரலாற்றாசிரியர்கள் நாதிரா என்பவர் சமாதியை இதனுடன் இணைத்து விட்டார்களாம். எந்த வழிகாட்டியின் கற்பனையோ அது! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி இருக்கும்! லாகூரைச் சேர்ந்த இமிதியாஸ் அலி என்பவர் 1922ல் சலீம்-அனார்கலி கதையை நாடகமாக எழுத, அது மக்கள் மனதில் இடம்பெற்று இதுவும் வரலாற்றில் மறைக்கபப்ட்ட உண்மை என்று மக்கள் நம்பத்தொடங்கி விட்டனர். இத்தனைக்கும் இமிதியாஸ் தனது நாடக வடிவத்தின் ஆரம்பத்தில் அந்த சம்பவத்துக்கு வரலாற்றில் ஆதாரம் எதுவும் கிடையாது என்று சொல்லியும் கூட.
அங்குதான் நிற்கிறார்கள் மக்கள். பொய் சொன்னால் நம்பும் உலகம் உண்மைகளை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளாது!
பொய்க்கு இருக்கும் வலிமை உண்மைக்கு கிடையாது.
இமிதியாஸ் அலியின் நாடகத்தை வைத்துதான் புகழ்பெற்ற முகல் இ ஆஸம் படம் கூட தயாரானது.
தமிழின் அம்பிகாபதி அமராவதி காதல் கதை கூட சலீம்-அனார்கலியின் தமிழ்ப் பதிப்பாக இருக்கலாம்! நான் திரைப் படத்தைச் சொல்லவில்லை!
சில உண்மைகளை மறைக்க விரும்பும் சிலர் அதற்கான மாற்றுத்தரவுகளை உண்மை போலவே பரப்பத் தொடங்குவது. கோயபல்ஸ் தத்துவம்! நாளடைவில் எது உண்மை, எது பொய் என்பதில் குழப்பம் வந்துவிடும். பேர்பாதியாய்ப் பிரிந்து நின்று இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவு தெரிவிப்பர். இரண்டு கட்சியுமே தான்தான் உண்மை என்று நம்புவார்!
சமீபத்து உதாரணம் ஒன்று சொல்ல வேண்டும் என்றால் ஜெமோவின் மஹாபாரத வெர்ஷன், வெண்முரசு. ஆனால் அவர் ஏதும் இதில் என் கற்பனை கலந்திருக்கிறேன் என்று முன்னுரை தந்திருக்கிறாரா என்று தெரியாது.
=====================================================================================================
2016 ல் வெளியான தினமணிக்கதிரில் வெளியானது. பாலசுப்ரமணியம் ஹேமலதா என் தந்தை.
நன்றி தினமணி "இந்த வார கலாரசிகன்" (31/1/2016). நன்றி வைத்தியநாதன் ஸார்.
============================== =============
நீதிபதி ராமசுப்பிரமணியனின் "சொல் வேட்டை' புத்தக வெளியீட்டு விழாவிற்கும், மதுரை செந்தமிழ்க் கல்லூரி விழாவுக்கும் சென்றவாரம் மதுரைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. மதுரையில் நான் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தவறாமல் வந்துவிடுவார் அவர். வயோதிகமும் தள்ளாமையும் அவரது உற்சாகத்துக்குத் தடையாக இருந்ததே இல்லை.
தன் மனைவி ஹேமலதா மீது அவருக்கிருந்த தாளாக் காதல் அபரிமிதமானது. அவரது மறைவு பாலசுப்பிரமணியத்தைத் தளர்ந்து போகச்செய்துள்ளது. அந்த நிலையிலும், மதுரையில் ஒரு விடுதியில் அறை எடுத்துக்கொண்டு தங்கி இருந்து, தன் மனைவியின் நினைவுடன் கழித்து வந்தவர் பாலசுப்பிரமணியம். இப்போது உடல்நலம் குன்றியிருப்பதால் தன் குழந்தைகளுடன் தங்கி இருக்கிறார்.
பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற மனவருத்தத்துடன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தேன். இங்கே அலுவலகத்திற்கு வந்து, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களை பரிசீலித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு வியப்பொன்று காத்திருந்தது.
எழுத்தாளர் கர்ணன், ஹேமலதா பாலசுப்பிரமணியம் எழுதிய "இவனும் அவனும்' என்கிற அவரது சிறுகதைத் தொகுப்பை அனுப்பித் தந்திருந்தார். கூடவே அவர் உடல்நலம் குன்றியிருப்பது பற்றிய சிறு குறிப்பையும் இணைத்திருந்தார்.
வழக்கம் போல தன் மனைவி ஹேமலதாவிற்கு அர்ப்பணித்திருந்த அந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் கர்ணன் அணிந்துரை எழுதியிருக்கிறார். கும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்.
கடந்த ஆண்டு வெளிவந்திருக்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளைப் படித்தால் ஒரு சிறிய வருத்தம் மேலோங்குகிறது. இந்த அருமையான சிறுகதை எழுத்தாளரை ஏன் இதழியல் உலகம் அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் அது.
அடுத்த முறை மதுரை செல்லும்போது, எழுத்தாளர் ஹேமலதா பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்த்தை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் தீர்மானித்துக் கொண்டேன்.
===================================================================================================
திரைக் கவிதைகள் = மூன்றாவது தவணை. கையிருப்பு காலி!
ஊஞ்சலாடும் உறவாய்
ஆடி அசைந்தாலும்
அறுந்து விழாமல்
கயிற்றின் பற்றுதலில்
கனிந்து நிற்கிறது
கதவுத்துணி
ஆடி நகர்ந்தாலும்
மறுபடி
நாடி நிற்கின்றன
கதவை ஒட்டியே
ஒதுக்கி விட்டாலும்
ஒளி தருகிறது
தழுவ வரும்
காற்றிடமிருந்து
நழுவி நெளிகிறது
திரைச்சீலை
காற்று பிரிக்கப்
பார்க்கிறது
கதவையும் திரையையும்
தோற்று விடுகிறது
ஒவ்வொரு முறையும்..
=================================================================================================
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி மதுரையை நோக்கித் தன் சிஷ்யர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவரின் குருநாதர் சங்கீதசுவாமி அவர் கனவில் தோன்றி மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றிப் புகழ்ந்து பாட வேண்டும் என்று கூறவே போகும் வழியிலேயே நவரத்தின மாலைப் பாடல்களை இயற்றிக்கொண்டே சென்றார். தியாகராஜருக்கு பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் மாதிரி, முத்துசுவாமி தீட்சிதருக்கு நவாவரண கீர்த்தனைகள் மாதிரி, சியாமா சாஸ்திரிக்கு நவரத்தின மாலிகைப் பாடல்கள்!
மதுரைக்கு அவரது முதல் விஜயம் அது. அவரது புகழ் ஏற்கெனவே மதுரையில் பரவியிருந்தாலும் யாரும் அவரை நேரில் பார்த்தது கிடையாது. மீனாட்சி அம்மன் சந்நிதியில் நவரத்தின மாலிகையைப் பாட ஆரம்பித்தபோது "யாரோ பாடுகிறார்' என்றுதான் அர்ச்சகர்களும் பக்தர்களும் அசட்டையாக இருந்திருக்கிறார்கள். நவரத்தின மாலிகையில் ஒன்றான "மாயம் மயனி நே பிலசிதே' என்ற பாடலை ஆஹிரி ராகத்தில் அவர் பாட அதைக் கேட்டு சந்நிதியில் இருந்த அனைவரும் அசந்து போனார்கள். பாடிக் கொண்டிருப்பது சியாமா சாஸ்திரி என்று தெரிந்ததும் பரவசப்பட்டார்கள்!
பார்வையாளர்களில் ஒருவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து, பக்தி உணர்வு மேலோங்க, கர்ப்பகிரகத்துக்கு ஓடிச் சென்று அம்மன் மீது சாத்தப்பட்டிருந்த பட்டுத்துணியை எடுத்து வந்து, "அன்னை மீனாட்சியின் அருளாசியைப் பெற உங்களைவிடத் தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்?' என்று கூறி அதை சாஸ்திரியின் தலையில் பரிவட்டமாகக் கட்டி மரியாதை செய்தார்!
இசைப் புரவலர் ஒருவர், "அப்பனே... நீ தம்புராவுடன்தானே பாடினாய்.. நீ பாடியபோது வீணை வாசிப்பதுபோல இருந்தது'' என்று சொல்லி மேற்புறம் யாளிமுகம் பொருத்தப்பட்ட தம்புரா ஒன்றை சாஸ்திரிக்குப் பரிசாகத் தந்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்!
எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிப் பாடி பிரபலப்படுத்திய சங்கராபரண ராகப் பாடலான "சரோஜ தள நேத்ரி' சியாமா சாஸ்திரியின் நவரத்தினமாலிகையில் ஒரு ரத்தினம்!
("சியாமா சாஸ்திரி' என்ற நூலில் வீயெஸ்வி)
[ தினமணி கதிர் ஒன்ஸ்மோர் - ஜனவரி 2014 ]
================================================================================================
இளங்காலை... இளங்குளிர்... இளம் வெயிலில் இளம் குருத்து!
====================================================================================
யார்யாரிடம் எப்படி எப்படி சென்சஸ் எடுப்பது....
மாருதி வரைந்த இந்த ஓவியத்தைக் காணும்போது எனக்கு மனதில் தோன்றும் காட்சிதான் உங்களுக்கும் தோன்றுகிறதா?
இப்போது கீழே உள்ள படத்தை ஒரு பழைய நினைவாய் பொருத்திப் பார்த்தால்....?
பழசை மறக்காத மாணவன்
காலை வணக்கம் அனைவருக்கும். கீசா மேடம்... நலமா?
பதிலளிநீக்குவணக்கம் நெல்லை வாங்க... ஹா ஹா ஹா... கீதா அக்கா இதோ இப்போ வருவாங்க...
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
நீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம்.
நீக்குஇன்னைக்கு கச்சேரி சீக்கிரமே களை கடி விட்டது...
பதிலளிநீக்குதொடங்க ஆயத்தமாகிறது!
நீக்குஅது சரி...
பதிலளிநீக்குபொன்னியின் செல்வனில் குடந்தை ஜோதிடரை மறந்து விட்டீர்களே.. என்றுதான் நான் கேட்டிருந்தேன்...
யாரோ ஒருவர் அந்தக் (!) கற்பனைக் கதாபாத்திரத்தின் வம்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாக - கருத்துப் பதிவுகளின் வழியாக அறிந்து கொள்ள முடிந்தது...
ஓஹோ.. அந்த அர்த்தத்தில் சொல்லி இருந்தீர்களா? என் புரிதலில் தவறு!
நீக்கு//யாரோ ஒருவர் அந்தக் (!) கற்பனைக் கதாபாத்திரத்தின் வம்சம் என்று சொல்லிக் கொண்டிருப்பதாக - கருத்துப் பதிவுகளின் வழியாக அறிந்து கொள்ள முடிந்தது...// அந்த யாரோ ஒருவர் நான்தான். எங்களுக்குத் தெரிந்த குடந்தையை சேர்ந்த ஒரு ஜோதிடர் தாங்கள் பொன்னியன் செல்வனில் வரும் குடந்தை ஜோதிடர் வம்சம் என்றார். அவர் வைணவர். பொ.செ.இல் குடந்தை ஜோதிடர் வைணவர் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார் கல்கி.
நீக்குவந்தார்கள் வென்றார்கள் தொடரில் கூட மதன் சொல்லியிருப்பார் அனார்கலி கற்பனை என்று...
பதிலளிநீக்குயாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை...
ஆமாம். உண்மைகளை யாரும் நம்ப தயாரில்லை என்பதால் தைரியமாக உண்மையே பேசி விடலாம்! அதுதான் நான் அப்பவே சொன்னேனே என்று சொல்லி விடலாம்!
நீக்குஅனார்கலி கற்பனை என்றாலும்
பதிலளிநீக்குஇது தான் சாக்கு என்று -
படகு.. படகு.. ஆசைப் படகு - என்னும் பாடலை (SPB பாடியிருக்கிறார் என்பதற்காக) எதிர்வரும் வெள்ளிகளில் பதிவு செய்து விடாதீர்கள்!...
/ (SPB பாடியிருக்கிறார் என்பதற்காக) எதிர்வரும் வெள்ளிகளில் பதிவு செய்து விடாதீர்கள்!.//
நீக்குஹா.. ஹா.. ஹா... அந்தப் பாடல் கேட்கும் பொறுமை எனக்கில்லை!
'ஓ... வானம்பாடி'யை மறந்து விட்டீர்களே...
இல்லை.. மறக்கவில்லை...
நீக்குஅதுவும் நினைவில் இருக்கின்றது...
சரி.. லைலா மஜ்னு பாடல் கூட
பதிலளிநீக்குவேறொரு படத்தில் இருக்கிறதே...
பொன்னைக் கண்டால் லைலா..
பூவைக் கண்டால் லைலா!..
சந்திரபாபு- நாகேஷ்..( TMS - AL ராகவன்)
லைலா மஜ்னு பாடல் இன்னும் இருக்குமே... காவியமா நெஞ்சில் ஓவியமா கூட காட்சியில் லைலா மஜ்னு போலதானோ!
நீக்குகாவியமா.. நெஞ்சில் ஓவியமா...
நீக்குபாடல் பிரதிபலிப்பது ஷாஜகான் மும்தாஜைத் தானே!..
ஓஹோ... அப்போ சரி! ஆமாம்.. மொகலாய சாம்ராஜ்ய தீபமே என்று வருமே... சமயங்களில் குழம்பி விடுகிறது!
நீக்குபாவை விளக்கின் மிக இனிய பாடல்.
நீக்குஷாஜஹான் சிவாஜி நன்றாகவே இருப்பார்.
உமா, எம் என் ராஜத்தின் கற்பனை.
இனிய நற்காலை வணக்கம் அன்பு துரை, அன்பு ஸ்ரீராம்.
இன்னும் வரும் அனைவருக்கும் இன்னாள் நல்ல நாளாக
இருக்கப் பிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குஆமாம்.. சி எஸ் ஜெயராம் குரலில் மிக இனிய பாடல்.
நீக்குஎன் மஹா பாரதக் கருத்துகள் மாறுவதில் எனக்கு விருப்பம் கிடையாது.
பதிலளிநீக்குஜெமோ படிக்காத அதிசயப் பிறவிகளில் நானும் ஒருவள்.
நானும் ஜெமோ ரொம்ப எல்லாம் படித்ததில்லை அம்மா.
நீக்குஆரம்ப கால ஜெ.மோவைப் படிச்சிருக்கேன். சித்தப்பா பல புத்தகங்கள் கொடுத்திருந்தார். ஆனால் அவரின் எழுத்துக்கள் மனதில் பதியவே இல்லை. அதோடு இல்லாமல் அவர் இறந்த பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களை அலசிக்கட்டுரை எழுத ஆரம்பித்ததுமே அவர் மேல் மதிப்பே இல்லாமல் போய்விட்டது. "வெண் முரசு" ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படித்தேன். பின்னர் நண்பர்கள் சிலர் அவர் எழுதி இருப்பது எல்லாம் உண்மையா, மஹாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறதா எனக் கேட்டுச் சுட்டி அனுப்பிப் பார்த்து அவர்களுக்கு பதில் சொல்லி இருக்கேன். மற்றபடி அந்த ஆழமான புதைகுழியில் விழுந்ததே இல்லை. நல்லவேளை, நான் பிழைத்துக்கொண்டேன்! :)))))
நீக்குநானும் சிலதான் படித்திருக்கிறேன்.ரொம்ப ஸ்பெஷலாக இதுவரை ஒன்றும் புலப்படாவிட்டாலும் நன்றாய் இருக்கிறது.வெண்முரசு படித்து விட்டு நானும் உங்களிடம் சந்தேகம் கேட்டிருந்தேன்!
நீக்கு//ஜெமோ படிக்காத அதிசயப் பிறவிகளில் நானும் ஒருவள்.// +1. ஜெமோவின் கட்டுரைகள் படித்திருக்கிறேன், கதை படித்ததில்லை. எஸ்.ரா., சாரு நிவேதிதாவும் அப்படியே.
நீக்குமாருதி ஓவியம் என்ன நினைவூட்டுகின்றது. முதியோர் இல்லமா.
பதிலளிநீக்குஅடுத்த ஓவியமும் அழகாக இருக்கிறது என்பதைத் தவிர
கதை நினைவில்லை.
பாவம் அந்தக் குழந்தை.
கதை எனக்கும் தெரியாதும்மா.. ஓவியத்தைப் பார்த்தல் அந்தக் காட்சிக்கு உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டிருக்கிறேன்!
நீக்குகுட்டிப் பிசாசு ஹாஹா.
பதிலளிநீக்குசாமா அவர்களின் திண்ணைப் பள்ளிக்கூடம் வெகு ஜோர்.
திரைச்சீலை ரு காவியத்தையே படைக்கிறது!!
கதவுக்கும் சீலைக்கும் அப்படியொரு காதலா.
ஆஹா!!!
உங்கள் எழுத்து மிக மிகப் பளிச்சிட்டு,
உரமேறுகிறதுமா. வாழ்த்துகள். ஏன் இன்னும் கீதாவைக் காணவில்லை?
நன்றி அம்மா பாராட்டுகளுக்கு. இன்று தை அமாவாசை என்பதால் கீதா அக்கா மெதுவா வருவார்களா இருக்கும்!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நெல்லை ஐந்தரைக்கே தேடி இருக்கார். இன்னிக்கு வர முடியலை. :))))) இப்போவும் இதோ போயிடுவேன். தை அமாவாசை, வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுச் சமைக்கணும்.
பதிலளிநீக்குokay ma.Thai Amavasai!!!
நீக்குவந்தாச்சா கீதா அக்கா.. வாங்க வணக்கம். எல்லோரும் தேடறாங்க பாருங்க!
நீக்குசென்சஸ் பிரமாதம். அதுவும் பெரியாரிடம் நல்ல கேள்வி!!
பதிலளிநீக்குகோவை அவினாசிலிங்கம் கல்லூரி செட்டியாரிடம் நல்ல கேள்வி.
அசோக் மேத்தா.!!
கடைசி பன்ச் சூப்பர்.
ஆமாம் அம்மா.. நானும் அதை ரசித்தேன்.
நீக்குஇந்த வாரம் நல்ல மருக்கொழுந்துக் கதம்பம். மணக்கிறது. அனைத்து விபரங்களும் மனதில் கொள்ள வேண்டியவை. சலீம், அனார்கலி கற்பனை என்பது ஊரறிந்த ரகசியம் ஆச்சே! திரைப்படங்கள் அவற்றை உண்மையாக்கிவிட்டன, கர்ணனையும், கட்டபொம்மனையும் கதாநாயகர்களாக்கி மகிழ்ந்தது போல!
பதிலளிநீக்குநன்றி. ஹா.. ஹா.. ஹா.. இன்றைய கதம்பம் அவ்வளவாக ரசிக்கப்பட மாட்டாது என்று நினைத்திருந்தேன்!
நீக்குஅந்தக் காலத்துல மரிக்கொழுந்து செண்ட் (மரிக்கொழுந்து வாசனையே வரும்) வித்தாங்க. அதை பிரபலப்படுத்த குமுதம் இதழின் அட்டையில் அந்த வாசனை வரும்படி விளம்பரப்படுத்தினாங்க. மரிக்கொழுந்து செண்ட் இப்போவும் கிடைக்குதா?
நீக்குநான் வாசனைத் திரவியங்கள் பக்கமே போவதில்லை!
நீக்குகுமுதம் அந்தக் காலக் குமுதம் அட்டையில் போட்டு விளம்பரப் படுத்தியது குனேகா சென்ட். மரிக்கொழுந்து இல்லை.
நீக்குகுனேகான்னா என்ன வாசனை?
நீக்குகுமுதம்காரங்களைத் தான் கேட்கணும். புத்தகத்தைத் தொட்டாலே கை மணக்கும்.
நீக்குஅது குனேகா மரிக்கொழுந்து செண்ட். குனேகா என்பது பிராண்ட். இஃக்கி இஃக்கி
நீக்குவீயெஸ்வீயின் சியாமா சாஸ்திரி கட்டுரை மிக சுவை.
பதிலளிநீக்குஇப்படி எல்லாம் புத்தகம் இருப்பதே எனக்குத் தெரியாது.
அற்புதம்.நன்றி ஸ்ரீராம்.
எனக்கும் அம்மா. திண்ணை போன்ற பகுதிகள் சுவாரஸ்யம்.
நீக்குதிரைச்சீலைக்கவிதைகள் அருமையாக இருக்கின்றன. குட்டிப்பிசாசை எடுத்துக் கொஞ்சணும் போல இருக்கே! இஃகி,இஃகி,இஃகி! ஸ்யாமா சாஸ்திரிகள் பற்றிய இந்தக்கட்டுரையை நானும் முன்னர் எப்போவோ படிச்சேன். அரசியல்வாதிகளைப் பேட்டி எடுத்திருக்கும் கார்ட்டூன் சுவாரசியம்.மாருதியின் படம் எந்தக் கதைகளில் என்று யோசித்துக்கொண்டிருக்கேன். குட்டிச் செல்லம் இளவெயிலில் குளிர் காய்வதும் அருமை, அழகு. திண்ணைப்பள்ளிக்கூட நகைச்சுவை யதார்த்தம். போயிட்டுப் பின்னர் வரேன்.
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் வேகமாக ஒரு அலசு அலசிவிட்டீர்கள். நன்றி!
நீக்குமூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பும் அம்மாவிடம் சண்டை போடுகிறார்களோ மகன், மருமகள்? பெண்/மாப்பிள்ளை? அல்லது அம்மா சண்டை போடத் திகைத்து நிற்கும் பெண், மாப்பிள்ளை, மகன், மருமகள்?
பதிலளிநீக்குமூத்த மகன்: அம்மா பாருங்கம்மா.... தம்பியும் அவன் மனைவியும் கூட்டுக் குடும்பத்துல இருக்கப் பிடிக்காம வீட்டை விட்டுப் போறான்மா.
நீக்குஅம்மா: டேய்... இதெல்லாம் விட்டுப் பிடிக்கணும்டா. இதே ஊர்தானே. நானும் அவனோட போறேன். கவலைப்படாதே... விரைவில் எல்லோரும் சேருவோம். உனக்கு இப்போ புரியாதுடா. நான் சொல்றதைக் கேளு. ரெண்டுபேரும் வருத்தப்படாதீங்க.
இரண்டாவது படம்.... தன்னுடைய மூத்த நாத்தனார், தன் குழந்தையை, செய்யாத குற்றத்திற்கு அடிப்பதைக் கண்டு மனம் பதைபதைக்கும் தாய்?
நீக்குஅடடே... எத்தனை கற்பனைகள் தோன்றுகின்றன... கீதா ரெங்கன் பார்த்தால் ஒரு கதை எழுதி விடுவார். முடிந்தால் படத்துக்கு ஒரு கதை எழுதி விடுவார்!
நீக்குமூத்த நாத்தனாரா அது? நான் மூத்த அண்ணி தன் நாத்தனாரையும் குழந்தையையும் கண்டிப்பதாக நினைத்தேன். அடைக்கலம் தேடி வந்திருக்கும் நாத்தனார்! அல்லது வீட்டு வாரிசு, ஆனால் பாட்டிக்குத் தெரியாது இது தன் மகன்/மகள் பெற்ற குழந்தை என்பது! அந்தக் குழந்தையின் தாய் திகைத்து நிற்கிறாள்.
நீக்குஅவரவர் கற்பனை.
நீக்குஅம்மா மண்டபம் படித்துறை பொதுமக்களுக்குத் திறந்து விட்டிருக்காங்க போல! ஒலிபெருக்கியின் அறிவிப்புச் சப்தம் காலையிலிருந்து கேட்டவண்ணம்!
பதிலளிநீக்குஇங்கும் கோவில்களில் கூட்டம்.
நீக்குஇங்கே கூட்டம் இல்லை, கூ ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊட்டம்! ஒரு வருஷம் கழிச்சு?!!!!
நீக்குஇங்கு மகாளய அமாவாசைக்கு அப்படி இருந்தது.
நீக்குமாருதியின் இரண்டாவது படக்கதை படிச்சிருக்கேனோ?
பதிலளிநீக்குஇல்லை. நீங்கள் படித்ததில்லை!
நீக்குஅப்படீங்கறீங்க?
நீக்குஅட ஆமாங்கறேன்!!!!
நீக்குகும்பகோணத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் கு.ப.ராஜகோபாலன், நா.பிச்சமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் பாலசுப்பிரமணியம்./////////WOW!!!!!உங்கள் தந்தை பற்றிய குறிப்பு மிக அருமை.எத்தனை அழகாகச் சிறப்பாக
பதிலளிநீக்குஎழுதி இருக்கிறார்.
மதுரையில் உங்கள் தந்தை தனியாக இருந்தாரா.
உங்களுக்கெல்லாம் அப்போ என்ன வயது?
அம்மாவின் பெயரைத் தாங்க பேத்தி இருக்கிறாரா.
உங்களுக்கும் அண்ணாவுக்கும் பிள்ளைகள்
என்பதால் கேட்டேன்.
சென்னையில் இருக்கும் போது தெரிந்திருந்தால்
உங்கள் அப்பா புத்தகங்கள்
எதையாவது வாங்கிக் கொண்டிருக்கலாம்.
அம்மா 2002 இல் காலமான பிறகு அப்பா அண்ணனுடன் இருந்தார். வெளியூர் வருவதற்கு மறுத்து விட்டார். அப்போதுதான் அம்மா நினைவாக ஹேமாஞ்சாலி வெளியிட்டார். பின்னர் தூறல்கள் எழுதும் முயற்சி தொடங்கினாலும் அது பின்னர்தான் புத்தக வடிவம் பெற்றது. பின்னர் 2009 என்று நினைவு. அப்போதுதான் முதல் முறையாக வெளியூர் வந்தார். அண்ணன் வீட்டிலிருந்து மதுரை டவுன் சற்று தொலைவு என்பதால் டவுன்ஹால் ரோடில் ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார் சிலகாலம். அப்போது(ம்) எனக்கெல்லாம் சின்ன வயசுதான்!
நீக்குநல்ல கதம்பம். அவரவர் பார்வையில் ரசனை இருக்கும். வரேன் அப்புறமா. உங்க அப்பாவின் இந்தப்புத்தகம் உங்கள் அண்ணா/நீங்க சொல்லி அனுப்பி வைத்திருந்தார். என்னிடம் இருக்கு. அவ்வப்போது எடுத்துப் படிப்பேன்.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்.
நீக்குவணக்கம், நன்றி கோமதி அக்கா.. வாங்க...
நீக்குமாருதியின் ஓவியங்களில் உணர்ச்சிகள் மிக முக்கியம்.
பதிலளிநீக்குபாட்டி சண்டை போட, மருமகன் குற்றம் சாட்ட,
மகள் கலங்குகிறாளோ?
அடுத்தது மும்பையில் நடக்கும் கதைச் சித்திரமா?
காதில் ரிங்க்... முழுக்கை ரவிக்கை, தலையில் ஏறிய புடவை.'''''''
//அடுத்தது மும்பையில் நடக்கும் கதைச் சித்திரமா?
நீக்குகாதில் ரிங்க்... முழுக்கை ரவிக்கை, தலையில் ஏறிய புடவை.//
ஹையோ... இப்படி எல்லாம் வேற இருக்கா? நான் இடத்தி எல்லாம் கவனிக்கவில்லை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனை வருகிறது பாருங்கள். அப்படியே கதையாக எழுதி அனுப்பினால் செவ்வாயில் போட்டு விடலாம்!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதம்பம் நல்ல வாசனை. பொய்கள் உண்மையாக தோற்றமளிப்பதை குறித்த கட்டுரை அருமை. மக்கள் வதந்திக்கு கட்டுப்பட்டவர்கள்.அதனால்தான் பொய்களும் உண்மையாக மாறிவிடும் பக்குவமுடையதாக ஆகி விடுகிறது போலும். மஹா பாரத கதைகளே கதைகளுக்குள் கதையாய் எத்தனை... முழுமையாக படித்துணர வாழ்நாள் போதாது.
உங்கள் தந்தையின் சிறப்பை படித்துணர்ந்து தெரிந்து கொண்டேன். சிறந்த எழுத்தாளரான அவருக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.
திரைச்சீலை கவிதைகள் அனைத்தும் அருமை. நன்றாக எழுதியுள்ளீர்கள். திரைசீலைகளையும், வாசல் நிலைப்படிகளையும், கதவையும் என்றுமே பிரிக்க முடியாதபடி ஒரே குடும்பமாக உங்கள் கவிதைகள் கட்டிப் போட்டு விட்டன உங்களின் அருமையான வர்ணிப்பு கோர்த்த வார்த்தைகளுக்கு பாராட்டுக்கள்.
சியாமளா சாஸ்திரி பற்றி தெரிந்து கொண்டேன். அரிய விபரங்களுக்கு நன்றி.
பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சியாமளா சாஸ்திரி!!
நீக்குநீங்கதான் எபில பெண்களின் ஆதிக்கம் அதிகமாயிடுச்சுன்னு சொன்னீங்களே.. அதனால வரும் கட்டுரையில் வருகின்ற ஆண்களையும் பெண்களாக மாத்திடறாங்க போலிருக்கு.
நீக்குவணக்கம் நெ. தமிழர் சகோதரரே
நீக்குஹா.ஹா.ஹா.
/அதனால வரும் கட்டுரையில் வருகின்ற ஆண்களையும் பெண்களாக மாத்திடறாங்க போலிருக்கு./
ஒரு"ளா"அறியாமல் சேர்ந்தவுடன் அவர் பெண்ணாகி விடுவாரா? அப்படியே இருந்தாலும், பெண்ணும் ஆணும் பிறப்பில் ஒன்றுதானே..! பெண்ணில்லாமல் ஆணில்லை. ஆணில்லாமல் பெண்ணுமில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து அனுசரணையாக இருப்பதற்காக, இறைவன் இருவரையும் இந்த உலகில் படைத்திருக்கிறார்.
இரண்டாவதாக, இன்று பதிவின் தலைப்பு ஏகமாய் ஈர்க்கவே, நானும் எழுந்தவுடன், ஜன்னல் கதவைக்கூட திறக்காமல், அந்த "இளம் இருட்டிலேயே" அவசரமாக கருத்துப் பதிந்ததில் அவர் பெயரை பெண்ணாக்கி விட்டேன் போலிருக்கிறது. ஹா.ஹா.ஹா. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தவறு ஏதும் இல்லை! ஒரே எழுத்தில் இவ்வளவு பெரிய மாற்றத்தை செய்ய இயலும் என்ற வியப்புதான்!!
நீக்குஅது உண்மைதான்.. ஒரு எழுத்தினால், வார்த்தைகளின் அர்த்தங்கள் அநாயசமாக மாறி விடும் இயல்பு வியப்பைத்தான் தருகிறது. நன்றி.
நீக்குசும்மாச் சொன்னேன் கமலா ஹரிஹரன் மேடம்...
நீக்குஷ்யாமா என்றால் கருமை, கருநீல நிறம் என்று அர்த்தம். ஷ்யாமள என்பது ஆண் form (ஷ்யாமள வண்ணனே மாதவனே கன ஷ்யாமள வண்ணனே மாதவனே - மீரா படப் பாடல்) அதன் பெண் form ஷ்யாமளா (கருமை/கருநீல நிறப் பெண் என்று அர்த்தம் கொள்ளலாம்).
அதனால தவறுலாம் இல்லை. (கோபித்துக்கொண்டு தரவேண்டிய கொழுக்கட்டைகளைக் குறைத்துவிடாதீர்கள் ஹா ஹா)
சுவாரஸ்யமான உரையாடல்கள்... பாராட்டுக்கும், சுவாரஸ்யம் சேர்த்ததற்கும் நன்றி கமலா அக்கா. என் அப்பா 2016 இல் காலமாகி விட்டார்.
நீக்குவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
நீக்குஆஹா.. ஷ்யாமா என்ற வார்த்தைக்கும், ஷ்யாமளா என்பதற்கும் அற்புதமான விளக்கம் தந்து விட்டீர்கள். படிக்கவே நன்றாக உள்ளது. கண்ணா, கருமை நிற கண்ணா.. உன்னை காணாத கண் இல்லையே...என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது. அந்த கருநீலநிற கண்ணனை கண்டு உள்ளமெல்லாம் மகிழும் கண்களும் கருப்புத்தான் இல்லையா.. !
நீங்கள் சும்மாதான் சொல்லியிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாதா? நானும் விளையாட்டுக்குத்தான் பதில் எழுதினேன். கோபமெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் ஏதாவது நினைத்துக் கொண்டு நான் எப்போதாவது அதிசயமாக எழுதும் பதிவுகளுக்கு கருத்துரைகள் இட வராமல் இருந்து விடாதீர்கள். (எனெனில் அதில்தான் எப்போதாவது வீட்டில் கொழுக்கட்டைகள் செய்யும் போது பதிவாக படங்களுடன் போடுவேன். நீங்களும் அந்தப்பதிவை பார்க்கவாவது முடியும். ஹா.ஹா.ஹா.) நாளை தை கடைசி வெள்ளி. முன்பெல்லாம் கடைசி வெள்ளியன்று அம்மனுக்கு கொழுக்கட்டை செய்வேன். நாளை பிழைத்து கிடந்தால் செய்யலாம் என நினைத்துள்ளேன்.. தெரியவில்லை பார்க்கலாம்.. நன்றி.
வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குஉங்கள் அன்பான பதிலுரைக்கு மிக்க நன்றி. தங்கள் தந்தை இப்போது நம்மிடையே இல்லையென்று தங்கள் பதிவுகளின் மூலம் முன்பே தெரிந்து கொண்டிருக்கிறேன். இன்று உங்கள் அப்பாவை பற்றி பதிவில் நீங்கள் குறிப்பிட்டதும், ஆத்மார்த்தமாய் அவருக்கு நமஸ்காரங்கள் தெரிவித்தேன்.
ஹேமலதா பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் நான் அப்போது சில கதைகள் படித்ததாக நினைவு.கதையின் பெயர்கள் நினைவிலில்லை. ஏதேனும் வார இதழ்களில் அவர் எழுதியவை வெளி வந்ததோ? இல்லை சிறுகதை தொகுப்பாக புத்தகங்களாக முன்பே வெளி வந்திருக்கிறதோ?
இன்றைய கதம்பம் பல நினைவுகளை தருவதாக அமைந்துள்ளது. நன்றி.
என் அப்பா "பெரும்பண்ணையூரான்", "சுபாஷ்சந்திரன்" என்கிற பெயர்களில் பத்திரிகைகளில் எழுதி வந்தார். இங்கு நம் தளத்தில் 2014, 2015 சமயங்களில் அவர் பங்கு கொண்டிருக்கிறார். அவை பாஹே பக்கங்கள் என்று பெயரிடப்பட்டிருக்கும்!
நீக்கு//நாளை பிழைத்து கிடந்தால் // - எங்க அம்மா அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள். பொழச்சுக் கிடந்தால் பார்க்கலாம் என்று நானும் உபயோகிப்பேன். வீட்டில் இப்படிச் சொல்லக்கூடாது என்று சொல்வதால் நான் இப்போதெல்லாம் உபயோகிப்பதில்லை.
நீக்கு"பிழைத்துக் கிடந்தால்" "பிச்சைக்காரனுக்கு" இரண்டும் கடவுளால் நமக்கு அளிக்கப்படும் ஆயுளுக்கு நன்றி கூறும் வார்த்தைகள். அவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் பிழைத்துக் கிடப்போம். அதே போல் அவனருளால் நாம் பெறும் ஒவ்வொரு நாளும் நம்மைப் பிச்சைக்காரராகவே ஆக்குகிறது. நாங்க இப்போவும்/எப்போவும் பயன்படுத்துவோம்.
நீக்குஅடுத்த நொடியே நம் கையில் இல்லை எனும் போது, நாளை நடப்பதை யாரறிவார்.? என் கருத்துக்கு உடன்பட்டு பதிலுரைத்த உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நீக்குவணக்கம் நெ. த சகோதரரே.
நீக்குஉங்கள் அம்மா கூறுவதை ஆமோதித்து அப்படியே நீங்கள் கூறி வந்ததை தெரிந்து கொண்டேன். சில வீடுகளில் இப்படி, இப்படியெல்லாம் சொல்லவே கூடாது என்ற நிர்ப்பந்தங்கள் இருப்பதையும் உணர்கிறேன். அனைவருக்குமே தங்களுடைய வாழ்வின் முதல் அத்தியாயத்தில் கிடைக்கும் சலுகைகள் இரண்டாவதில் கிடைப்பதில்லை.;)
'நாளை நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்' என்பதுபோல எதிர்காலத்தில் நடக்க இருபப்தை மனிதன் நம்பிக்கையுடன் சொல்வதை, இறைவன் ஆமோதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும்! மனிதன் ஒன்று நினைக்க, இறைவன்(விதி) ஒன்று நினைத்தால்...? இதைதான் இஸ்லாமியர்கள் இதுபோன்ற வார்த்தைகளோடு "இன்ஷா அல்லாஹ்" என்று சேர்த்துக்கொள்வார்கள்.. அதாவது 'அல்லாஹ் மனது வைத்தால்' என்கிற பொருளில். நாம் அதை "பொழச்சு கிடந்தது" என்கிறோம். எங்கள் வீட்டிலும் அப்படிச் சொல்லும் வழக்கம் உண்டு. நான் சமயங்களில் "இன்ஷாமுருகா" என்பேன்!
நீக்குகதம்பம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉண்மை கதைகளை எழுதும் போது கற்பனை கதாபாத்திரங்களை சேர்த்து எழுதுவது உண்டுதான். அந்த கதாபத்திரங்கள் மக்களின் மனதை கவர்ந்தும் விடுவார்கள்.
//இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்த்தை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று, அந்தச் சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் தீர்மானித்துக் கொண்டேன்.//
அவர் எண்ணம் நிறைவேறியதா?
நானும் உங்கள் அப்பாவின் இந்த சிறுகதை தொகுப்பிலிருந்து பிடித்த கதையை முன்பு ஒரு பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.
பிப்ரவரி 6ம் தேதி சியாமா சாஸ்திரிக்கு நினைவு தினம் வந்தது. அவரைப்பற்றி பகிர்ந்து கொண்ட விவரங்கள் அருமை.
//இளங்காலை... இளங்குளிர்... இளம் வெயிலில் இளம் குருத்து!//
தலைப்புக்கு காரணமான செல்லாம் அழகுதான். கண்ணில் கொஞ்சம் பயம் தெரிகிறது.
கவிதை, பொக்கிஷ பகிர்வு அனைத்தும் அருமை.
விரிவான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅவர் எண்ணம் ஈடேறவில்லை.
நீக்கு//நானும் உங்கள் அப்பாவின் இந்த சிறுகதை தொகுப்பிலிருந்து பிடித்த கதையை முன்பு ஒரு பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.//
ஆமாம். நன்றி கோமதி அக்கா. ராமலக்ஷ்மியும் பகிர்ந்து இருந்தார்.
கவிதை, பொக்கிஷங்களை ரசித்ததற்கு நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதலைப்புகேற்ற செல்லத்தின் படப்பகிர்வு அருமை. நல்லபடியாக இருக்கட்டும். படம் சென்ற வாரத்தை இன்றும் லேசாக நினைவு படுத்துகிறது.
உண்மையிலேயே இன்றைய கதம்பம் நான் குறிப்பிட்டபடி நல்ல வாசனை மலர்களால் கோர்க்கப்பட்டள்ளது. சந்தேகமேயில்லை.. நான் கருத்துக்கள் (டைப் செய்து) எழுதி தெரிவிப்பதற்குள், கருத்துரைகள் 40க்கும் மேலாக வந்து விட்டதே..! அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஹா ஹா ஹா செல்லம் சென்ற வரத்தை நினைவு படுத்துகிறதா? எனக்கும்! நன்றி கமலா அக்கா.
நீக்கு..பேர்பாதியாய்ப் பிரிந்து நின்று இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் ஆதரவு தெரிவிப்பர். இரண்டு கட்சியுமே தான்தான் உண்மை என்று நம்புவார்!//
பதிலளிநீக்குதமிழ்நாடு தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை. ’ரிசல்ட்’டை முன்கூட்டியே சொல்லவேண்டிய அவசியம் என்ன? கேட்டால், எபி-யில் அரசியலை அனுமதிப்பதில்லை என்ற பீத்தல் வேறு.. எல்லாமே ஜாலம்..!
எ பி யில் நாங்கள் அரசியல் மற்றும் மத சம்பந்தமான பதிவுகள் வெளியிடமாட்டோம். ஆனால், நல்லவைகள் எங்கு நடந்தாலும் பதிவு செய்து பாராட்டுவோம். எ பி ஆசிரியர்களும், வாசகர்களும் ஒரு குடும்பம் என்றே நாங்கள் கருதுகிறோம். அனாவசிய சண்டை சச்சரவுகள் மற்றும் மன வருத்தங்களைத் தவிர்க்கவே அரசியல் & மத சம்பந்தப்பட்ட பதிவுகள் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.
நீக்குசரி..சரி! மேலே என்னுடைய கமெண்ட்டை ’லைட்’-ஆ எடுத்துக்குங்க! வியாழனும் அதுவுமா, இவ்வளவு சீரியஸ் விளக்கம் வேண்டாம்!
நீக்கு:))))
நீக்குஹா ஹா ஹா வாங்க ஏகாந்தன் ஸார்... பனை மரத்துக்கு கீழ் குடிக்கும் பால்! ஆனால் இரண்டு கட்சிதான் என்று முடிவு செய்து விட்டீர்களா?!
நீக்குஏகாந்தன் சொல்லி இருப்பதும் சரி, உங்கள் இருவரின் பதில்களும் சரி, புரியலை! :(
நீக்குசும்மா அரசியல் கலந்த கலாய்த்தல்!
நீக்குசியாமா சாஸ்திரி - இப்போதுதான் இதனைத் தெரிந்துகொள்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போ ஒரு பாடல் எழுதினாலே கவிஞர் என்று பட்டம் போட்டுக்கறாங்க. இணையம், சோஷியல் மீடியா என்று விளம்பரம் கொடுக்க இடங்கள் இருக்கு. காசு கொடுத்தால் பத்திரிகைகளும் பெரிதாக எழுதுவாங்க.
அந்தக் காலத்துல அவங்க உயிரோடு இருக்கும்போதே புகழ் பெறுவதற்கு, அவரைப் பற்றி தேசம் தெரிந்துகொள்வதற்கு எவ்வளவு காலமாயிருக்கும்..
உண்மைதான்!
நீக்குரொம்பப் பின்னாடி வேணாம்.. பாரதியார் காலத்திலேயே அவர் மரணத்துக்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள்? அப்போது எவ்வளவு பேர் அவரைப் பற்றி அறிந்திருந்தார்கள்?
நீக்கு//பொய்க்கு இருக்கும் வலிமை உண்மைக்கு கிடையாது//
பதிலளிநீக்குநிதர்சனமான உண்மை ஜி
நன்றி.
நீக்குஇது உண்மை ஜி. நான் நம்பறேன்.
நீக்குவெண்முரசு - படித்ததில்லை. அதனால் கருத்தில்லை.
பதிலளிநீக்குபொதுவா வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்றமாதிரி எழுதுவதும் சொல்வதும் அரசியல். அதனை நம் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மிக நன்றாகவே செய்கின்றனர்.
சமீபத்தைய உதாரணம் பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்தது என்ற பொய்ச் செய்தி. இதனை மேடைகளில் சொல்லிச் சொல்லியே நம்ப வைத்து, இப்போ பாடத்திட்டத்திலும் அதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதே ரீல்தான் அண்ணா மறைவுக்கு இத்தனை கோடிப்பேர் சென்னைக்கு வந்தார்கள் என்றது.
வெண்முரசு ஜெமோ பக்கத்தில் இப்போ கூட முழுசா இணையத்திலேயே படிக்கலாம் - பொறுமை இருந்தால்.
நீக்குபெரியார் விஷயம் தெரியவில்லை. அண்ணா மறைவுக்கு கூடிய கூட்டம் ரெகார்ட்தானே?
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது மட்டுமா பொய்? அவர் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதாய்ச் சொல்லப்படும் செய்தியும் முழுப் பொய்! வைக்கத்தில்/குறிப்பாய்க் கேரளாவில் போய்ச் சொல்லிப் பார்த்தால் தெரியும்! சிரிப்பார்கள்! நாட்டுக்காகவோ/தமிழ் மக்களுக்காகவோ ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாமல் பெயர் வாங்கிக் கொண்டு பெரியவர்களாகச் சொல்பவர்கள் தான் இன்றைய அரசியல்வாதிகள். அவர்களைப் பற்றித்தான் நம் குழந்தைகள் படிக்கவும் வேண்டி இருக்கு. உண்மையான அரசியலோ/வரலாறோ குழந்தைகளுக்குத் தெரியாது!
நீக்குநெல்லை! மறந்து கூட வெண்முரசு படிச்சுடாதீங்க!
நீக்கு:-)
நீக்குஅவர் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதாய்ச் சொல்லப்படும் செய்தியும் முழுப் பொய்!
நீக்குhttps://en.wikipedia.org/wiki/Vaikom_Satyagraha#Involvement_of_E.V.Ramasamy
சான்று இல்லை என்றே சொல்லி இருப்பாங்க விக்கிபீடியாவில்!
நீக்குஎனக்குஎன்னவோ நமது இதிகாசங்களில் பாதிக்கு மேல் கற்பனை என்றே தோன்றுகிற்து
பதிலளிநீக்குநாம நம்ம கதையையே கற்பனை கலந்து, from our perspectiveல, நம்மைப் பற்றி கொஞ்சம் உயர்வா எழுதுவோம். ஆனால் இதிஹாசம் என்பது நடந்தது நடந்தபடி ஒரு நடுநிலையாளரால் எழுதப்பட்டதால்தான் கதாநாயகன் என்ற போற்றுதலோ, வில்லன் என்ற தூற்றுதலோ இல்லாமல் மனித மனத்தை, அவங்க நடந்துகொண்ட விதத்தை நல்லா எழுதியிருக்காங்க. இராமனோ இல்லை கிருஷ்ணனோ முழுவதுமாக சரியாகத்தான் நடந்துகொண்டார்கள் என்பதுபோல் எழுதவில்லை. (கிருஷ்ணர், இயற்கை விதியை முற்றிலுமாக மீறாது அதன்படி நடந்தார் என எழுதியிருக்கிறது) நாம் நம் வரலாறு என்று எழுதினால், நம்மை அறியாமலேயே நாம் செய்தது எல்லாம் சரி என்றுதான் எழுதுவோம் (பார்வைக்கு சும்மா ஒன்றிரண்டு தவறுகளை நாம் செய்தோம் என்று ஒத்துக்கொள்வோம், அப்போதான் நாம் நல்லவர் என்று எழுதியதை ஒத்துக்கொள்வார்கள் என்று). ஆனால் இரண்டு இதிஹாசங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிறை குறைகள் உள்ளபடியே சொல்லியிருக்காங்க என்று தோன்றுகிறது. அதனாலத்தான் முழுவதும் நல்லவர் என்றமாதிரியான பாத்திரங்கள் அபூர்வமாக இருக்கு. இதில் இடைச்செருகல்கள் இருக்க வாய்ப்பு குறைவு. ஆனா பிரவசனம், காலட்சேபம் பண்ணறவங்க, ரசனையாக இடையில் சேர்த்துச் சொல்லும் கதைகளையும் இதிகாசத்தின் ஒரு பகுதி என்று நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
நீக்குவாங்க ஜி எம் பி சார்... கர்ணன் பரம்பரையா வந்த கதைகளில் அவரவர் சரக்கும் சேர்ந்திருக்கும்தானே? அப்புறம் எழுத்தில் வாடிப்போர் தன் சரக்கையும் சேர்த்திருப்பார்கள்!
நீக்குநல்ல விளக்கம் நெல்லை.
நீக்கு//கர்ணன் பரம்பரையா//
நீக்குgrrrrr... கர்ண பரம்பரையா...
//இதிஹாசம் என்பது நடந்தது நடந்தபடி ஒரு நடுநிலையாளரால் எழுதப்பட்டதால்தான் கதாநாயகன் என்ற போற்றுதலோ, வில்லன் என்ற தூற்றுதலோ இல்லாமல் மனித மனத்தை, அவங்க நடந்துகொண்ட விதத்தை நல்லா எழுதியிருக்காங்க.// நடுநிலையாளர்களைப் பற்றிய உங்களுடைய நேற்றய கருத்துப்படி வால்மீகியும், வியாசரும் பாவம் செய்ய துணிந்து விட்டவர்கள் எனலாமா?
நீக்கு"நடு நிலை விமர்சனம்" என்பது வேறு, ஒரு விஷயத்தில் 'நடுநிலை' எடுப்பது என்பது வேறு என்று படித்துப் படித்து எழுதியிருந்தேனே... சரியாப் படிக்காம....
நீக்குஇதுல வால்மீகியும் வியாசரும், கௌரவ பாண்டவ சண்டைக்கு, இராம இராவண யுத்தத்துக்கு சமாதானத்துக்குப் போகலை, விமர்சனம் பண்ணலை. நடந்ததை நடந்தபடி எழுதிவச்சிருக்காங்க. ஆனால் இணையத்துல, 'நடுநிலை விமர்சனம்' பண்ணறோம்னு கண்ட கண்டவங்கள்லாம் ஒவ்வொரு கட்சியைப் பற்றி எழுதுவதுதான் சகிக்கலை.
இரண்டு பேர் சண்டை போடும்போது அந்தச் சண்டையைத் தீர்க்கும்போது நாம நடுநிலைமை எடுக்க முடியாது, நியாயம் எந்தப் பக்கம் இருக்கோ அந்தப் பக்கம்தான் தீர்ப்பு சொல்லணும். அப்படி இல்லாமல், நடுநிலை எடுக்கிறேன் என்று சொன்னால், நாம தவறு செய்தவனைக் குறைகூறி அவனுடைய நட்பை இழக்க விரும்பாமல், தவறுக்குத் துணை போகிறோம் என்று அர்த்தம்.
என்னை "ஐயம் பெருமாள் கோனார்" ஆக ஆக்கிவிட்டீர்களே
இரண்டு பேர் சண்டை பொடும் பொழுது எல்லோரும் தீர்ப்பு சொல்லித்தான் ஆக வேண்டுமா? அதை சரியாக புரிந்து கொள்ளலாமே? அப்படி சரியாக புரிந்து கொள்பவர்களையே நடு நிலை நக்கிகள் எங்கிறார்கள். தர்மம் ஒரு பக்கம்தான் இருக்கும் என்பதும் சரி கிடையாது. யார் பக்கம் அதிகம் இருக்கிறது என்பதுதான் விஷயம்.
நீக்குநீங்கள் தனி மனிதனைப் பற்றி பேசுகிறீர்கள், நான் ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றி பேசுகிறேன். அரசியல்,சமூக விஷயங்களை அலசும் பொழுது கடந்த காலத்தை அப்படியே விட்டு விட்டு நிகழ் காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
ஹேமலதா பால சுப்பிரமணியம்கதை தொகுப்பு நீஙகள் கொடுத்தது இன்னும் முழுவதும் படிக்கப்படாமலேயெ இருக்கிறது அவர் பற்றிய நினைவுகளை ப்கிர்ந்து கொள்ள்லாமே கணினியில் படிப்பது எளிதாக் இருக்கிறது
பதிலளிநீக்குமுடிந்தபோது செய்கிறேன் ஸார்.
நீக்கு//பால சுப்ரமணியத்தை நேரில் சந்திக்க முடியவில்லையே என்கிற.......... தீர்மானித்துக் கொண்டேன்...//
பதிலளிநீக்குஇதை வாசித்து விட்டு என்னுள்ளும் ஒரு தீர்மானம் உருவாயிற்று. உருவாயிற்று என்று சொல்வது கூட ஒரு விதத்தில் தவறான அனுமானம் தான். ஏற்கனவே உருவாகியிருந்த ஒன்றை செயல்படுத்தும் தீவிரம் கூடியது என்றே சொல்ல வேண்டும். அதை செயல்படுத்தி விட்டு அறிவிப்பது தான் முறையானது கூட. செய்கிறேன்.
என்னவாய் இருக்கும் என்று யோசிக்கிறேன் ஜீவி ஸார்! அல்லது யாராய் இருக்கும் என்று...
நீக்கு//காற்று பிரிக்கப்
பதிலளிநீக்குபார்க்கிறது
கதவையும் திரையையும்
தோற்று விடுகின்றன
ஒவ்வொரு முறையும்..//
தோற்று விடுகிறது
ஒவ்வொரு முறையும்..
சரியான திருத்தம். திருத்தி விட்டேன்,
நீக்குகதம்பம் ஜோராக மணக்கிறது . வரலாற்றுக் கதை களில் கொஞ்சம் கற்பனை இனிமையே!(பொன்னியின் செல்வனைப் போல). முழுதும் பொய் சொன்னால் அது தவறே(சலீம் - அனார்கலி போல).
பதிலளிநீக்குஓவியங்கள் நம் மனதின் நினைவுக்கு ஏற்ப தானே கற்பனை குதிரையை முடுக்கி விடுகிறது! தை அமாவாசையில் பெரியவர்களை வணங்கினால் மட்டும் போதாது...நமக்கு வாழ்வளித்த தெய்வங்களை கண்ணும் கருத்துமாக பேணி காக்க வேண்டும்.
நீங்கள் சாண்டில்யன், ஜெகசிற்பியன், நாபா கதைகள் படித்திருக்கிறீர்களா வானம்பாடி? சமீபத்தில் இதுபற்றி ஒரு உரையாடல் எனக்கும் காலச்சக்கரம் நரசிம்மமாவுக்கும் நடந்தது!
நீக்கு@ஶ்ரீராம், அட, அப்படியா? முன்னரே தெரிந்திருந்தால் நானும் கலந்து கொண்டிருப்பேன். ஆனால் ஜெகசிற்பியன் அதிகம் படித்தது இல்லை.
நீக்குநான் படித்ததே இல்லை!
நீக்குவிகடனில் வந்த "திருச்சிற்றம்பலம்" அநபாய குலோத்துங்கன் காலத்துக்கதை. கதை முடிவில் சேக்கிழார் "பெரிய புராணம்" எழுத ஆரம்பிப்பதோடு முடியும். "ஆலவாய் அழகன்" இதுவும் விகடனில் வந்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியனா? அல்லது சடையவர்மன் சுந்தரபாண்டியனா? நினைவில் இல்லை. ஏழிசை வல்லபி பாண்டியனை மணந்து கொள்பவள். முக்கோகிழானடிகள் பாண்டியனிடம் ஒருதலைக்காதல்கொண்டவள்! பெயர்கள் மறக்கவில்லை. இன்னும் சில கல்கியில் வந்தவையும் படிச்சிருக்கேன். பத்தினிக்கோட்டம் ஜெகசிற்பியன் எழுதியதா? பார்க்கணும்.
நீக்குஆமாம், ஜெகசிற்பியன் தான் பத்தினிக்கோட்டம், கல்கியில் வந்ததுனு நினைக்கிறேன்.
நீக்குஎன் அப்பாவின் பைண்டிங் கலெக்ஷனில் பத்தினிக் கோட்டம் இருந்தது. இப்போது அடுக்கும்போது அது கண்ணில் படவில்லை. இடைப்பட்ட காலத்தில் அது 'நகர்த்தப்பட்டிருக்க' வேண்டும்!
நீக்கு..பார்வையாளர்களில் ஒருவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து, பக்தி உணர்வு மேலோங்க, கர்ப்பகிரகத்துக்கு ஓடிச் சென்று அம்மன் மீது சாத்தப்பட்டிருந்த பட்டுத்துணியை எடுத்து வந்து,//
பதிலளிநீக்கு’பார்வையாளர்’ எல்லாம் மீனாட்சி கோவிலின் கர்ப்ப கிருஹத்துக்குள் போய் தெய்வத்தின் மீதுள்ள வஸ்திரத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடலாமா? அப்படிப்பட்ட காலமா சியாமா சாஸ்திரி வாழ்ந்த காலம்..? மேலும் கோவிலில் பரிவட்டம் கட்டிவிடுவது ‘பார்வையாளரின்’ வேலையா!
வீயெஸ்வீ அடிச்சுவிட்டிருக்கார். ஆஹா.. ஓஹோ சொல்ல அன்றும் இருந்தனர். இன்றும் பலர்..
பார்வையாளர்கள் என்று அவர் குறிப்பிடுவது, அல்லது அந்தப் பார்வையாளர் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஆளாயிருக்கலாம். அல்லது அந்த அதிகப் பிரசங்கித் தனத்தை ஒன்றும்ஸ் எய்ய முடியாமல் நிர்வாகத்தினர் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அல்லது நீங்ள் சொல்வது போல வீயெஸ்வி உயர்வு நவிற்சியில் உயர்வு காட்டியிருக்க வேண்டும்!
நீக்கு@ஏகாந்தன், நானும் காலம்பரவே கவனித்தேன். கேட்க நினைச்சு மறந்து விட்டிருக்கேன். கர்பகிரஹத்திற்குள் போயிருக்க முடியாது!
நீக்குஇதெல்லாம் ரொம்ப ஆராயப்படாது. அந்த உணர்வை இப்படி வார்த்தைகளால வெளிப்படுத்தறாங்க என்றுதான் புரிந்துகொள்ளணும்.
நீக்குஇதை நம்பி, எஸ்.பி. பாலு எவ்வளவு நல்லா சிவஸ்துதி பாராயணம் பண்ணறார்னு நினைத்து (காசி சிவன் கோவில்ல), நாம சிவலிங்கத்துல உள்ள பூமாலையை (அவருக்குப் போடலாம்னு) எடுத்தால், நம்ம கையை எடுத்துடுவாங்க.
இந்தப் பார்வையாளன் விவகாரத்தை காலையிலேயே நானும் கவனித்தேன்..
நீக்குஇங்குள்ள சில சூழ்நிலைகளால்
உடனடியாக ஒன்றும் எழுத முடியவில்லை..
உங்கள் தந்தையின் புத்தகம் பற்றிய தினமணி கட்டுரை 2016-ல் வந்திருக்கிறது. இதைப்பற்றி முன்பு எபி-யில் குறிப்பிட்டிருந்தீர்களா? புத்தகம் எப்போது வெளிவந்தது?
பதிலளிநீக்குகட்டுரை இறுதியில் நீங்கள் கொடுத்த லிங்கைத் தொடர்ந்து சென்றதால், த. மாலா பிரியதர்ஷினியின் இந்தக் கவிதை கண்ணில் பட்டது :
பிச்சைக்காரன்
செத்துக்கிடந்தான்
அருகில் ஒரு நாய்
செய்வதறியாமல்
வாலாட்டியபடி
**
அடடே... கவர்கிறதே கவிதை.
நீக்குபுத்தகம் கிட்டத்தட்ட அவர் இறுதிக் காலத்தில் வெளிவந்தது. அதுவும் மறைந்த எழுத்தாளர் கர்ணன் எடுத்த முயற்சியால்.
உங்கள் தந்தையின் புத்தகத்தை யார் விமர்சனம் செய்துள்ளார்கள் என தெளிவாக தெரிந்து கொள்வதற்காக நானும் காலையிலேயே, நீங்கள் தந்திருக்கும் இந்த லிங்கை தொட்டு தொடர்ந்ததில் இந்தக் கவிதையை ரசிக்க நேர்ந்தது.
நீக்குகர்ணனும் கடைசிக்காலத்தில் பணக்கஷ்டத்தில் இருந்ததாக எஸ்.ரா.வின் பக்கத்தில் முன்பு படித்த ஞாபகம்.
நீக்குஅவர் மிகவும் ஏழ்மை நிலையிலேயே இருந்தார். கடைசிக்கு காலத்திலும் அப்படிதான். யாராலோ அல்லது ஏதோ ஒரு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அவருக்கு பண உதவி செய்யக்கோரி ஒரு தபால் எனக்கு வந்திருந்தது. தபால் கண்ட சில மாதங்களிலேயே அவர் மறைந்து விட்டார்.
நீக்குகலாரசிகனின் பக்கங்கள் மிகவும் சுவாரஸ்யமாக படிக்கப்பட்டன. திரு வைத்தியநாதன் என் அப்பாவின் சதாபிஷேகத்துக்கு வந்திருந்தபோது இதைப் பற்றி அவரிடமே குறிப்பிட்டேன். இந்தப் பகுதி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தினமணி நாளிதழில் வெளியாகும். பல்வேறு விஷயங்கள் பற்றி எழுதுவார். கடைசியாக அவர் ரசித்த கவிதைகள் பற்றியும் ஒரு மாதிரிக் கவிதையும் வெளியிடுவார். தினமணியின் நடுப்பக்கத்தில் இலக்கியச்சோலையும் இடம்பெறும். சுவாரஸ்யமான பகுதி. மொழி ஆராய்ச்சி உட்பட பல விஷயங்கள் இருக்கும். இப்போதும் அவை வருகின்றனவா, தெரியாது!
நீக்குதினமணியில் இப்படியெல்லாம் வந்திருக்கிறதா! தெரியாது. டெல்லியில் தினமணி 2014-15-ல் வாங்கியிருக்கிறேன் கொஞ்சகாலம். இப்போது பெங்களூர் வீட்டில் தினமலர் வருகிறது.
நீக்குமுன்பு ஆங்கில ‘ஹிந்து’வில் வெள்ளிக்கிழமைகளில் ‘ Literary Supplement’ எனும் இலக்கியப் பகுதி வரும். ஆழமாக, அழகாக இருக்கும். படித்ததுண்டு. காந்தியின் இடுப்பில் பாக்கெட் கடிகாரம்போல் இப்போது ஹிந்து இடதுசாரிகளின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கிறது !
சரி, நிறுத்துவோம் இங்கே..
உங்கள் அப்பாவின் சிறுகதைகளில் ஒன்றை, எபி-யின் செவ்வாயில் வெளியிடலாமே..
பதிலளிநீக்குமுன்பு இப்படி ஏதோ வெளியிட்டிருப்பதாக நினைவு. ஆயினும் இதை மனதில் கொள்கிறேன்.
நீக்குசியாமா சாஸ்திரி பற்றிய கடுரை படித்த பொழுது, ஏகாந்தன் சாருக்கும், கீதா அக்காவுக்கும் ஏற்பட்ட சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.
பதிலளிநீக்குஅப்படியா?
நீக்குதிரைச்சீலை கவிதைகள் முடிந்து விட்டதா? அடடா!
பதிலளிநீக்குபொக்கிஷ நகைச்சுவை நல்ல சுவை.
அப்பாவை நினைவுகூர்ந்த விதம் நன்றாக இருக்கிறது. உங்கள் புகைப்படத்தைதான் பகிர மாட்டீர்கள், அப்பாவின் புகைப்படத்தையுமா?
//திரைச்சீலை கவிதைகள் முடிந்து விட்டதா? அடடா!//
நீக்குஆஹா.. நன்றி!
அப்பாவின் புகைப்படத்தை அப்புறம் வெளியிடுகிறேன்!
மாருதியின் முதல் படத்தில் மூன்று பேர் முகத்திலுமே ஒரு சோகம் தெரிகிறதே?
பதிலளிநீக்குஇரண்டாவது படத்தில், தன் தம்பியை தன் காதலுக்கு தூதாக பயன்படுத்திய சகோதரி, அம்மாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் மகன்
அடடா... அடுத்த கற்பனை! கதை எழுதுவதைவிட கவிதை, ஹைக்கூ போல சின்னச்சின்ன வரிகளில் விஷயத்தைச் சொல்லி விடலாம் போல!
நீக்குமிகவும் பிரபலமான இன்னொரு சரித்திர கதைப் பாத்திரம் சிவகாமியின் சபதத்தில் நாகனந்தி அடிகள்.
பதிலளிநீக்குஆமாம்... ஆமாம்...
நீக்குதிரைக் கவிதைகளை ரசித்தேன்... மற்ற பகுதிகளும் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குகதம்பம் நன்றாக இருக்கிறது, ஆனால் ஏனோ முதல் பகுதி மட்டும் எனக்குப் புரியவில்லை. இவனும் அவனும் அழகிய புத்தகம், கதைகளும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்..
பதிலளிநீக்குவெயிலில் குளிர் காயும் செல்லம் அழகு.
//மாருதி வரைந்த இந்த ஓவியத்தைக் காணும்போது எனக்கு மனதில் தோன்றும் காட்சிதான் உங்களுக்கும் தோன்றுகிறதா? //
இல்லை!!!.. ஹா ஹா ஹா
வாங்க அதிரா... பொய்களை நம்பும் உலகம் உண்மைகளை நம்புவதில்லை என்பதே முதல் பகுதி!
நீக்குஇல்லை சரி.. உங்களுக்கு என்ன கற்பனை தோன்றியது என்று சொல்லவில்லையே!
குட்டிப்பிசாசின் தாய்க்குடும்பம் அழகு:).
பதிலளிநீக்குஇப்பவும் பழைய மாணவனாகவே இருக்கிறாரே:)..
அவ்வளவு குருபக்தி!
நீக்குவியாழனின் கதம்பம் தொகுப்பு மிக நன்று. உங்கள் தந்தையின் கதைத் தொகுப்பு பற்றிய கட்டுரை மிக நன்று.
பதிலளிநீக்குதுணுக்குள் ரசனை.
தொடரட்டும் கதம்பம் பகிர்வு.
நன்றி வெங்கட்.
நீக்குநல்ல தொகுப்பு.
பதிலளிநீக்குதங்கள் தந்தையைப் பற்றிய தினமணி பகிர்வு சிறப்பானது. திரைச்சீலைக் கவிதைகள் ரசிக்க வைத்தன.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு