வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

வெள்ளி வீடியோ : அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

 1951 இல் வெளிவந்த ஓரிரவு திரைப்படம் நடிகர் கே ஆர் ராமசாமியின் நாடகக்குழுவுக்காக அறிஞர் அண்ணாவால் எழுதித்தரப்பட்ட கதை.  ஏ வி எம் நிறுவனம் அதைப் படமாக்க முனைந்தபோது ஏற்கெனவே அண்ணாவின் இரண்டு படைப்புகள் அவர்களால் படமாக்கப்பட்டிருந்தன.  'நல்ல தம்பி' மற்றும் 'வேலைக்காரி'!


ப நீலகண்டன் இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் அவதாரம் எடுத்திருந்திருக்கிறார்.  நாடகம் ஜெயித்த ளவு படம் ஜெயிக்காததற்கு இயக்குனர் திரைக்காக கதையை சற்றே மாற்றியதுதான் காரணம் என்று ஏ வி எம் செட்டியார் நினைத்தாராம்.  

அறிஞர் அண்ணா ஏ வி எம் ஸ்டுடியோவில் ஒரே இரவில் அமர்ந்து முன்னூறு பக்கங்களுக்கு இதன் திரைக்கதையை எழுதிக் கொடுத்தாராம்.  10,000 ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டாராம்.

பாரதிதாசன், பாரதியார், கு மா பா, மற்றும் கே பி காமாட்சி சுந்தரம் பாடல்களுக்கு ஆர் சுதர்சனம் இசை அமைத்திருக்கிறார்.

எம் எல் வசந்தகுமாரி இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார்.  "பூலோகம்தனை காண வருவீர்" எனும் பாடலும், புகழ்பெற்ற "ஐயா சாமி ஆவோஜி சாமி" பாடலும்.  இந்தப் பாடலின் மூலம் எங்கிருந்து தெரியுமா?
இன்று பகிரும் இந்தப் பாடல் பாரதிதாசன் பாடல்.  இவ்வளவு இனிமையான இந்தப் பாடலைப் பாடி இருப்பவர் குழந்தைக் குரலில் பின்னாளில் புகழடைந்த எம் எஸ் ராஜேஸ்வரி.  உடன் பாடும் ஆன் குரல் வி ஜெ வர்மா

நாகேஸ்வரராவ் மற்றும் லலிதா நடித்திருக்கும் இந்தக் காதல் காட்சிதான் எவ்வளவு நளினமாக இருக்கிறது?  தேஷ் ராகத்தில் இடம்பெற்றிருக்கும்  இந்தப் பாடல் ஒரு ஆல்டைம் ஹிட்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - 

எப்படி எப்படி 

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?

ஆஹா அஹாஹா  அந்த இடம்தான் அற்புதம்..  கண்ணே கண்ணே,,,

கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்...

இல்லை இல்லை பாடு..   கண்ணே சரிதானா என்று கேட்டேன் 

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?

வர்மா :   நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?


42 கருத்துகள்:

 1. அன்பின் இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

  இறைவன் அருள் என்றும் நம்முடன் இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 2. கோரே கோரே பாடல் போலவே ஐயா சாமி
  பாடலும் மிகப் பிரசித்தம் அடைந்தது.

  அந்த ஜிப்சி உடை மாதிரி பின்னாட்களில் அம்மா தைத்துக் கொடுத்தார்.


  துன்பம் நேர்கையில் பாடல் மாமா அடிக்கடி
  பாடி எனக்கும் மனப் பாடம் ஆகிவிட்டது.
  '' தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
  இயம்பிக் காட்ட மாட்டாயா"" எத்தனை அருமையான வரிகள்.
  அந்த இசைக்குத்தான் என்ன இனிமை.
  1951 ஆம் வருடத்தில் வந்த படமா.
  லலிதாவும், நாகேஸ்வர ராவ் இருவருமே
  நளின நடிப்பினால் மனம் கவருகிறார்கள்.

  நல்ல பாடலைப் பதிவிட்டதற்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. ஜிப்ஸி உடை அந்தக் காலத்து ஃபேஷனானதோ..

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம். கையில் அந்த டாம்புரீன் வைத்துக் கொண்டு
   ஆடப் பள்ளியில் சந்தர்ப்பம் கிடைத்தது. எட்டு வயதிருக்கும்.

   நீக்கு
 3. ஐயா சாமி ஆவோஜி சாமி... எனக்கு மிகவும் பிடித்த பாடல். எம் எல் வி, கர்நாடிக் பாடகி என்பது இந்தப் பாடலைக் கேட்டாலே புரிந்துவிடும். இருந்தும் பாடல் அருமை..

  எனக்கு எப்போதும் பிடித்த பாடல், துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ.... சோகம் இழையோடும் பாடல்.

  இன்று நல்ல தேர்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு ஐயா சாமி பாடலில் அவ்வளவு ஆர்வமில்லை. இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். சோகமா தெரிகிறது? நம் வந்தேமாதரம் கூட இதே ராகம்தான்.

   நீக்கு
  2. //எனக்கு எப்போதும் பிடித்த பாடல், துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ.... சோகம் இழையோடும் பாடல்.//சோகமா? கெட்டது குடி! ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குணம், தன்மை, பலன் எல்லாம் உண்டு. அப்படி தேஷ் என்பது பிரபஞ்ச அமைதிக்கும், காதலுக்குமான ராகம். 

   நீக்கு
 4. சிகோ சிகோ போர்டோ ரிகோ பாடல்
  சுவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பே கேட்டிருக்கிறீர்களா?

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம். காலிப்ஸோ இசை என்று
   மேற்கிந்திய இசைக் குழு ஒன்று
   1964 இல் சென்னை வந்திருந்தது.
   மாமா அழைத்துப் போனார்.
   நம் மியூஸிக் அகாடமியில் தான் .,என்று நினைக்கிறேன்.இல்லை ம்யூஸியம் திரை அரங்கிலா???????
   க்ளியோபாட்ரா திரைப்படம் வந்த நேரம்.

   நீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலம் வாழ்க. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...

   நீக்கு
 6. துன்பம் நேர்கையில்
  யாழெடுத்து நீ!..

  மிக மிக பிடித்தமான பாடல்..

  மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. இப்பாடல் கேட்டு இருக்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 9. இரண்டுமே இனிமையான பாடல்கள். மாலை ஒரு முறை கேட்க வேண்டும்! நீண்ட நாட்களாயிற்று இந்தப் பாடல்களைக் கேட்டு.

  பதிலளிநீக்கு
 10. நல்லவேளையா இரண்டுமே கேட்ட பாடல்கள். நல்ல தேர்வு இன்றைய வெள்ளிக்கு! அடிக்கடியும் கேட்டிருக்கேன். ரேவதி அளவுக்கு ஆராய்ச்சி செய்யத் தெரியலைனாலும் ஓரளவுக்கு இந்தப் பாடல் குறித்துத் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நல்லவேளையா இரண்டுமே கேட்ட பாடல்கள். // இரண்டா? மொத்தம் நான்கு பாடல்கள் கீதா அக்கா! சரியாக கேளுங்கள், அல்லது நீங்களும் என்னைப்போல கணக்கில் வீக்கா? 

   நீக்கு
  2. கீதாமா, ஆராய்ச்சி எல்லாம் இல்லம்மா.
   நம்ம வீட்டில மறுபாதி எல்லா மேற்கத்திய இசையையும் வாங்கிக் குவிப்பார்.

   அது மாட்டுக்குப் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். நமக்குத்தான் கேட்டதை
   மறக்க முடியாதே.
   சில சமயம் இது வேண்டாத குணமாகி விடுகிறது:)))))

   நீக்கு
  3. வேண்டாத குணமா? அப்படி எல்லாம் இல்லைம்மா...   எனக்கும் மனதில் அவ்வப்போது பல பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

   நீக்கு
 11. எல்லாப் பாடல்களும் இனிமை! அதுவும் இன்றைய பாடல் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து..' பாடல் எல்லாக் காலங்களிலும் ரசிக்கப்படும் பாடல். பகிர்ந்ததற்கு நன்றி. அது சரி லலிதா என்ன இவ்வளவு மொக்கையாக  ஆடுகிறார்? ஐயா சாமி ஆவோஜி சாமியில் நடனமாடியிருக்கும் நடிகை யார் என்று குறிப்பிடவே இல்லையே? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரிந்தால் சொல்ல மாட்டேனா?   உங்கள் காலத்து நடிகை.  உங்களுக்கெல்லாம்தான் தெரிந்திருக்க வேண்டும்!!

   நீக்கு
  2. //உங்கள் காலத்து நடிகை. உங்களுக்கெல்லாம்தான் தெரிந்திருக்க வேண்டும்!!// நீங்கள் ரசித்த நடிகைகளின் காலம் எனக்கு என்ன தெரியும்? எங்கள் காலத்து நடிகை என்றால் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா என்றால் எனக்குத் தெரியம். 

   நீக்கு
  3. ஹா...   ஹா...  ஹா...     இவ்வளவு வேகமா பதில் எதிர்பார்க்கவில்லை!

   நீக்கு
 12. ஒரு நேயர் விருப்பப்பாடல்: அவர்கள் படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடியிருக்கும் 'காற்றுக்கென்ன வேலி ? கடலுக்கென்ன மூடி..?" பாடல். 

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் அருமை. விபரங்களின் தொகுப்பும் நன்றாக உள்ளது. எனக்குத்தான் இன்றெல்லாம் பாடல் கேட்கவே முடியவில்லை. நெட் ஒரே சுத்தல். சமயத்தில் நின்றே போகிறது. இரண்டாவது பாடல் ரேடியோவில் அடிக்கடி கேட்டுள்ளேன். நன்றாக இருக்கும். இனிமையான பாடல். வரிகளும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. பகிர்ந்த பாடல்கள் பிடித்த பாடல்கள்.
  கேட்டு மகிழ்ந்தேன்.
  அய்யா சாமி பாடலின் வரிகள் மிக அருமை.

  பழைய பாடல்கள் கேட்கும் போது அப்பா அப்போது உள்ள பாடல்களை சொல்லி இந்த பாடல் இசை காப்பி அடிக்கபட்டது இந்த ஆங்கில பாடலிலிருந்து இந்த இந்தி பாடலிருந்து எல்லாம் சொல்வார்கள்.
  எங்களுக்கும் அப்படியே பழக்கமாகி விட்டது.
  முன்பு இந்தி பாடல்கள், தமிழ் பாடல்கள் எல்லாம் ஒப்பு நோக்குவோம். அது போன்ற தெலுங்கு, மலையாளம் பாடல்களை சார் கேட்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று கூட சில கன்னட, தெலுங்குப் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்.  நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 16. துன்பம் நேர்கையில்... கேட்ட பாட்டு ஆனா முதல் மூண்று வரிகள் மட்டுமே தெரிந்த வரிகள்..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!