வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

வெள்ளி வீடியோ : அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண் என்று வந்தால் என் என்று சொல்வேன்?

 1976 இல் வெளியான திரைப்படம் வரப்பிரசாதம். நான் தஞ்சை ஹௌசிங் யூனிட்டில் பார்த்த படங்களுள் ஒன்று ஆயினும் கதை சுத்தமாக நினைவில்லை. ஆனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது - அது இந்தப் படத்தில்தான் எனும் நினைவோடு.. 

ரவிச்சந்திரன், ஜெயசித்ரா விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஆர் கோவர்தன இசை.  படத்துக்குப் பின்னணி இசை இளையராஜா.  புலமைப்பித்தனும், வலம்புரி ஜானும் பாடல்களை எழுதி இருக்கின்றனர்.  இன்று பகிரப்படும் பாடல் வலம்புரி ஜான் எழுதியது.

நடிகர் ரவிச்சந்திரனின் சொந்தப்பெயர் பி எஸ் ராமன்!  திரையுலகுக்கு வருவதற்கு முன் இரண்டு நாடகங்களிலும், வந்த பின் இரண்டு நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.  அதில் ஒன்று இரட்டை வேடம்!  ஏகப்பட்ட பட்டங்கள் வாங்கி இருக்கும் இவர்தான் முதலில் 'புரட்சிக் கலைஞர்' என்றும் அழைக்கப் பட்டவர்.

முதல் மனைவியை விவாகரத்து செய்து நடிகை ஷீலாவை மணந்து, அவரையும் விவாகரத்து செய்துவிட்டு மறுபடி முதல் மனையுடனேயே வாழ்ந்திருக்கிறார்.

அவர் நடித்த படங்களின் வரிசைப் பட்டியலில் ரஜினி நடித்த பேட்டையும் இருக்க திகைப்பாய் இருந்தது.  பின்னர் பார்த்தால் விக்கி சொல்கிறது "Photo only!"

ஜெயசித்ராவின் சொந்தப் பெயர் ரோஷ்ணி!  வெங்கட் கவனிக்கவும்!  அவர் அம்மாவும் நடிகை(ஜெயஸ்ரீ)  என்பதால் இவர் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 1973 இல் குறத்தி மகனில் கதாநாயகியாக அறிமுகமானாராம்.  படத்தின் இயக்குனர் கே எஸ் ஜி வைத்த பெயர்தான் ஜெயசித்ரா.

இரண்டு படங்கள் இயக்கி இருக்கிறார் ஜெயசித்ரா.  அதில் ஒன்று, தானே இயக்கி கதாநாயகியாய் நடித்து ஹீரோவாக ரகுமானை நடிக்க வைத்தார்.  புதிய ராகம் என்று பெயர்.  இளையராஜா இசையில் பாடல்கள் நல்ல பாடல்கள்.

சரி, இன்றைய பாடலுக்கு வருகிறேன்.

கே ஜே யேசுதாஸ், வாணி ஜெயராம் குரலில் இந்தப் பாடல் மனதில் நிற்கும் பாடல்களில் ஒன்று.  சுமாராக இருக்கிறது என்று கருத்து சொல்லப் போகிறவர்களும் ஓரிரண்டு நாட்களுக்குள் ஒருமுறை மனதுக்குள் முணுமுணுக்கப்போகும் பாடல்!

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....

கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்
காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,
விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணிமணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்....
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,

மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,
உள்ளம் நெகிழ்ந்தான்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்

மாணிக்கப் பாவை நீ வந்த வேளை,
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்
மாணிக்கப் பாவை நீ வந்த வேளை
நினையாததெல்லாம் நினைவேற கண்டேன்
​​அன்பான தெய்வம், அழியாத செல்வம்,
பெண் என்று வந்தால் என்என்று சொல்வேன்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்

மணியோசை கேட்டு மணமாலை சூட்டி
உறவான வாழ்கை நலமாக வேண்டும்,
நடமாடும் கோவில், மணவாளன் பாதம்
வழிபாட்டு வேதம் விழி சொல்லும் பாவம்
திருநாளில் ஏற்றும் அணையாத தீபம் 
ஆனந்த பூஜை ஆரம்ப வேளை...= = = = 

( அடுத்து ஒரு பயனுள்ள தகவலுடன் ஒரு டீஸர் காணொளி. ) 

சில நாட்களுக்கு முன்னால், ' விஷமக்காரக் கண்ணன் ' பாடல் வரிகளுக்காக கூகிள் செய்து தேடிய போது எதேச்சையாக 'விஷமக்காரன்' என்ற ஒரு தமிழ்ப் படத்தின் இயக்குனர் + கதாநாயகன் கொடுத்திருந்த ஒரு பேட்டி நிகழ்ச்சி கண்ணில் பட்டது. 

" இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திரைப்பட நிர்வாகம் மற்றும் உருவாக்கம் தொடர்பான ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரை உருவாக்கினோம். ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்தது. இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டோம். மேலும், இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்க இருக்கிறோம்." 

இந்த மென்பொருள் திரையுலகினருக்கு - குறிப்பாக low budget படம் எடுக்கின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 

விஷமக்காரன் படம் விரைவில் வெளியாக உள்ளது. படம் வெளியானதும் அதைப் பார்த்து, நம் நண்பர்கள், ரசிகர்கள், புதிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ள படம் எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். 

கீழே உள்ளது அந்தப் படத்தின் அறிமுக காணொளி. 


( கூகிள் ஆராய்ச்சிகளின் பொது தெரிந்துக்கொண்ட ஒரு உபரி தகவல் - இந்த இயக்குனர் எங்கள் ஆசிரியர்களுக்கு சுற்றி வளைத்து - தூரத்து உறவினர் ) 

= = = = 

72 கருத்துகள்:

 1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறைவன் அருள் நிறைவாக
  எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அட? இன்னுமா யாரும் வரலை? என்ன இது? என்ன இது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி நீங்க வருவதற்கு முன்பாக வரவேண்டும் என்று மறைந்திருந்து பார்த்து வந்துவிடுகிறார்கள்!

   நீக்கு
  2. /மறைந்திருந்து பார்த்து வந்துவிடுகிறார்கள்!//

   :>)

   நீக்கு
 3. அதானே பார்த்தேன்! அனைவருக்கும் காலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வல்லியோட கருத்துத் தெரியவே இல்லை, இத்தனைக்கும் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் வித்தியாசம். என்ன ஆச்சு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க கணினியில் காட்டப்படும் நேரத்தையும், IST யையும் ஒருமுறை சரிபார்க்கவும்.

   நீக்கு
  2. வாங்க கீதா அக்கா.  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  3. @கௌதமன், என்னோட மடிக்கணினி, எங்க வீட்டு கடிகாரம், தொலைக்காட்சி சானல்களில் காட்டும் நேரம் எல்லாம் ஒன்றாகவே இருக்கும் எப்போதும்.

   நீக்கு
 4. // ரிலாண்டு நாட்களுக்குள் // அது என்ன "ரி"லாண்டு நாட்களுக்குள்? இரண்டு நாட்களுக்குள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓரிரண்டு என்று மாற்றிவிட்டேன்.

   நீக்கு
  2. இரண்டு என்பதுதான் அப்படி வந்திருக்கும்.  நன்றி கீதா அக்கா, நன்றி கேஜிஜி..

   நீக்கு
 5. முடிஞ்சா மத்தியானம் வரேன். படமே தெரியாது. பாட்டு மட்டும் எங்கே கேட்டிருக்கப் போறேன். ஶ்ரீராமுக்குக் கடுப்பாக வரும். ஹிஹிஹி, பாடலை ரசிக்கிறவங்களா இவங்க இல்லையேனு நினைச்சுப்பார். பாடலை நானும் ரசிப்பேன் தான். பிடிக்கும். ஆனால் கர்நாடக சங்கீதம் மட்டும். பின்னணியில் ஒலிக்க வேலை செய்யப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருமுறை கேட்டால் ஞாபகம் வந்துவிடும்.

   நீக்கு
  2. நான் சினிமாப் பாட்டு கேட்டே வளர்ந்தவன்.

   நீக்கு
  3. ம்ம்ம்ம்ம் கொடுத்து வைச்சிருக்கீங்க ஶ்ரீராம். நாங்கல்லாம் சினிமாப்பாட்டுப் பக்கத்து வீடுகளிலே போடும்போது ரகசியமாக் கேட்டுப்போம். அப்பா கவனிச்சா காதே கேட்காதது போல் நடந்துப்போம். ஆனால் மதுரைவாசி என்பதாலே அடிக்கடி ஒலிபெருக்கிகள் மூலம் சீனிமாப்பாடல்கள் கேட்கும் வாய்ப்புத் தானாகவே கிடைச்சுடும். அப்போ அப்பாவால் கூட எதுவும் செய்ய முடியாது. அப்படிக் கேட்டவை தான் பல பாடல்களும்.

   நீக்கு
  4. இதற்கெல்லாமா கொடுத்து வைத்திருக்க வேண்டும்?  என் அப்பாவுக்கு கர்னாடக சங்கீத ஞானம் இல்லை.  எனவே நாங்கள் திரைப்படடப் பாடல்கள் கேட்பதை ஆட்சேபிக்கவில்லை!

   நீக்கு
  5. grrrrrrrrrrrrrrr I have already told my father is Ourangazeb vamsam! :P :P No music in house.

   நீக்கு
  6. அப்போ சரி..  நான் கைகொடுத்து வைத்தவன் தான்!!!

   நீக்கு
 6. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 7. நான் அப்போதே வந்து விட்டேன்...
  தேநீர் குடித்து வருவதற்குள் நெரிசலாகி விட்டது...

  பதிலளிநீக்கு
 8. காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான
  ரவிச்சந்திரன்,
  அதற்குப் பிறகு நிறைய படங்களில்
  சிவாஜி மாதிரி நடிக்க,நடக்க முயற்சித்து
  நிறைய நடனமாடி ஜெய்ஷங்கர் அளவுக்கு இல்லாவிடினும்
  முன்னணியில் இருந்தார்.
  ஜெய்சித்ராவும் துடிப்பாகப் பாத்திரங்களை ஏற்று
  நன்றாகவே இருந்தார்.
  உடலைக் கவனித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
  அக்னி நட்சத்திரத்தில் பார்த்தோமே.
  அழுத்தமான நடிகை.

  இந்தப் பாடலும் அருமையான பாடல்.
  அர்த்தம் பொதிந்த வரிகள். எல்லாப்பாடல்களிலும்
  ராமன் வந்த காலம்:)
  ராமன் பெயரைக் கொண்டவர்கள் ராமனாக முடியுமா என்ன!!!
  இப்பொழுதும் என் காதில் ஏதோ பாடல் , ஜேசுதாஸ் அவர்களின்
  குரலில் பயணம் செய்கிறது.
  நடுவில் உள்ள இசையை வைத்து முதல் வரியைக்
  கண்டுபிடிக்க முயல்கிறேன்.
  இதமான பொழுது போக்கு.

  முடிந்தால் உங்களுக்கும் அனுப்புகிறேன்.
  சொல்லுங்கள்.

  இன்று இந்தப் பாடலுக்கு மிக நன்றி மா.அருமையான
  வாணி அவர்களின் குரல். இதுவும் ஜேசுதாசோ.
  கேட்டுவிட்டு வருகிறேன்மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. ஆமாம்.  ரவிச்சந்திரன் சிவாஜி ஸ்டைலில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.  ஷம்மி கபூர் ஸ்டைலில் ஆட முயற்சித்திருப்பார்.  அவருக்கென்று ஒரு ஸ்டைல் அமைந்ததா, தெரியவில்லை.  ஜெயசித்ரா எனக்குப் பிடிக்காத நடிகை!  நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 9. கேட்க மிக இனிமையான பாடல். காட்சி அமைப்பும் நன்றாக இருக்கிறது.
  இந்த மாலை வேலையில் கேட்க அமைதியான
  பாட்டு.நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யே சிந்தகி கலே லகாதே.
   ஜேசுதாஸ் இல்லை. சுரேஷ் வதேகர்.
   ஸாயி பஜன் எல்லாம் பாடுவாரே.
   ஸத்மா படம்.

   நீக்கு
  2. நன்றி வல்லிம்மா.    தமிழ் 'பூங்காற்று புதிரானது' பாடலின் ஹிந்தி வடிவம் நீங்கள் சொல்லி இருக்கும் பாடல்.  பின்னர் இளையராஜா அதே டியூனை 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் 'என் வாழ்விலே' பாடலாக மாற்றினார்!

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. இந்த பாட்டு நீங்கள் முன்பே பகிர்ந்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.
  நல்ல இனிமையான பாட்டு

  இந்த படத்தை இந்த பாட்டுக்காக பார்த்த நினைவு இருக்கிறது.
  ரவிசந்திரன், ஜெயசித்ரா பற்றிய செய்திகள் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இந்த பாட்டை போட்ட பின் இந்த படத்தை தேடி பார்த்தேன் இந்த பாட்டுக்காக.

   நீக்கு
  2. ஓஹோ...   முன்னரே பகிர்ந்திருக்கிறேனா...   எனக்கே நினைவில்லை கோமதி அக்கா.  நன்றி.  படம் முழுதாகப் பார்க்கக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்!

   நீக்கு
  3. உண்மைதான். வேறு ஒரு செய்தியோடு பகிர்ந்து இருந்தீர்கள் ஸ்ரீராம்.

   நீக்கு
 12. தூரத்து உறவினரை தேடி தந்து விட்டதே! கூகுள் ஆராய்ச்சி.

  அந்த காணொளியும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 13. இப்படத்தைப் பார்த்துள்ளேன். கங்கை நதியோரம் பாடல் மிக அருமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் காலை வணக்கம். நல்ல இனிமையான பாடல். படம் வெளியான காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்படும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம். நல்ல இனிமையான பாடல். ஆம் நானும் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
 15. இன்று நள்ளிரவில் செய்தி கேட்டதில் இருந்தே விழித்துக் கொண்டிருக்கின்றேன்...

  எது ஜெயிக்கும் என்று தெரியாமல்!..

  பதிலளிநீக்கு
 16. அருமையான பாடல்...

  தூரத்து உறவினருக்கு அனுஷ் பிடிக்காதது வருத்தம் தருகிறது... விஷமம் இல்லாத விஷமக்காரன்... ம்...

  பதிலளிநீக்கு
 17. ரோஷ்ணி - கவனித்தேன்! :)

  பாடல்கள் கேட்ட நினைவில்லை. காணொளியை பிறகு பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. எப்போதோ கேட்டு, எப்போதோ மறந்து போன பாடல்! மீண்டும் இன்று அந்தப்படலையும் காட்சியையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 19. இந்தத் தடவையும் (ஜே) யேசுதாஸ் தானா?..

  பதிலளிநீக்கு
 20. அருமையான பாடல் அடிக்கடி கேட்டதுண்டு.

  //ஜெயசித்ராவின் சொந்தப் பெயர் ரோஷ்ணி! வெங்கட் கவனிக்கவும்//

  ஹா.. ஹா.. ஸூப்பர்

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல் நன்றாக உள்ளது.இந்தப் படம் பார்த்ததில்லை. பாடல் வரிகளை பார்த்த போது கேட்ட நினைவே வரவில்லை. பின் இப்போது இங்கு கேட்டதும் முன்பு வானொலியில் அடிக்கடி கேட்டது நினைவுக்கு வந்தது. நல்ல இனிமையாக உள்ளது. படம் குறித்த தகவல்களுக்கும், ரவிச்சந்திரன், ஜெயசித்ரா குறித்த தகவல்களுக்கும், பாடல் பகிர்வுக்கும் நன்றிகள்.

  இரண்டாவது காணொளியும் கேட்டேன். இப்போதெல்லாம் வரும் புது படங்கள் எதுவும் பார்ப்பதில்லை. இந்தப்படம் வந்தால் பார்க்கலாம். படம் பெயரே விஷமகாரனா? தகவல்களுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 22. முதல் மனைவியிடமே திருப்பி அனுப்பிய ஷீலாவுக்கு, ரவிச்சந்திரன் சார்பாக நன்றி! இப்படி, தற்செயலாக நன்மை செய்துவிடும் பெண்கள்.. இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 23. இரண்டு வாரங்களாக ஜெயக்குமார் சந்திரசேகர் ஸாரைக் காணோம். யாருடைய தளத்திலுமே அவர் பின்னூட்டம் கண்ணில் படவில்லை.

  பதிலளிநீக்கு
 24. ஆஹா கங்கை நதி ஓரம்... என் பேவரிட் பாட்டு... கேட்கும்போதெல்லாம் மனதில் என்னமோ பண்ணும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் பிடித்த பாட்டு என்பதில் சந்தோஷம் அதிரா...   நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!