புதன், 24 பிப்ரவரி, 2021

கொரோனா தாக்கம் நமக்கு நன்மைகளையும் அளித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

நெல்லைத் தமிழன் : 

ஏழை என்றால் என்ன? எப்படி அதை வரையறுப்பீங்க?

$ உணவு உடை உறைவிடம் கிடைக்காதவர் ஏழை எனலாம். இவை அனைத்தும் இருந்தும் மனத்தால் ஏழை ஆகிப்போவாருண்டு.

# உணவிற்காகக் கடன் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் ஏழை. கடன் கொடுப்பார் யாருமில்லாத நிலையில் இருப்பவன் பரம ஏழை. 

பிச்சை எடுத்துப் பிழைப்பாரும் கிழிசல் துணிகளை தானமாகப் பெற முனைவோரும் ஏழையிலும் ஏழை.

பள்ளிப் பாடங்களில் 90 சதவிகிதம் வாழ்க்கைக்கோ அல்லது வேலைக்கோ உபயோகப்படுவதில்லை. அப்படி இருந்தும் ஏன் அவற்றை வைத்திருக்கிறார்கள்?   

# பள்ளியில் கற்பது நம் ஆர்வம் எங்கு இருக்கும் என்று கண்டு கொள்ளவும், ஒரு விஷயத்தைக் கற்பது எப்படி என்று பயிற்சி பெறவும் பயன்படும். மற்றபடி மொழி கணிதம் விஞ்ஞானம் மட்டுமே போதும் என்றாகிவிடும். 

& ஏ எம் ஐ இ - பிரிவு அ - படிக்கும்போது, அதில் சோசியல் சயின்ஸ் என்று ஒரு பாடம். அந்தப் பாடப் புத்தகத்தின் முன்னுரையில், அந்தப் பாடம் ஏன் பொறியாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்கள். ' பொறியாளர் சமூகத்திற்காக இயந்திரங்களையும், கட்டுமானங்களையும் வடிவமைத்தல், உருவாக்குதல் ஆகிய பணிகளை செய்பவர்கள். சமூக அறிவியல் இல்லை என்றால், சமூகத்திற்கு பொறியாளர் சரியான பணி செய்ய இயலாது. ஆகவே இந்தப் பாடம், Institute of Engineers Kolkatta (அப்போ அது Calcutta) வால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இந்த Social Science பாடத்தை அந்தக் காலத்தில் (1974/75)  எங்களுக்கு Indian Institute of Engineering Technology (IIET) Kodambakkam - நடத்தியவர் சுந்தரம் என்பவர் ( பி எஸ் வீரப்பாவின் மகன் என்று அவரே அறிமுகம் செய்துகொண்டார்.) புத்தகத்தில் இருக்கும் பாடம் ஒருமணி நேர வகுப்பில் கால் மணி நேரம் - மற்ற முக்கால் மணி நேரம் செமையாக அரட்டை அடிப்பார். நிறைய கிசு கிசு விஷயங்கள், சினிமா நடிக நடிகைகள் பற்றி எல்லாம் சொல்லுவார். அவ்வப்போது - ' இதுவும் சமூக அறிவியல் சம்பந்தப்பட்டதுதான்' என்பார். நான் அந்த சமூக அறிவியல் பாடத்தில் எப்படி முதல் அட்டெம்ப்ட்டிலேயே பாஸ் செய்தேன் என்பது தனிக்கத்தை. அப்புறம் சந்தர்ப்பம் வாய்த்தால் பகிர்கிறேன். 

கொரோனா தாக்கம் நமக்கு நன்மைகளையும் அளித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  

# சில கட்டுப்பாடுகளைப் பயின்றிருக்கிறோம். அதை மதிக்கிறேன்.

& அத்தியாவசிய செலவுகள் என்னென்ன, அனாவசிய செலவுகள் என்னென்ன என்பதை உணர்த்தியது, கொரோனா கட்டுப்பாடுகள். வாழ்க்கையில் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம், அதை அலட்சியம் செய்தல் கூடாது என்பதையும் உணர்த்தியது கொரோனா தாக்கம்

திரைப்படம் வெளியான அன்று பார்த்திருக்கிறீர்களா? அன்று எப்படி உணர்ந்தீர்கள்?

# வெளியான அன்றே பார்க்க முயன்றதில்லை. 

& என் நான்காவது அண்ணன் - சில சிவாஜி படங்களை - படம் வெளியான அன்றே பார்த்து, இரசிகர் கூட்டம் பற்றி, டிக்கெட் வாங்குவதற்கு நடந்த அடிதடி வம்புகள் பற்றி, படத்தில் அவர் ரசித்த காட்சிகள் பற்றி எல்லாம் மிகவும் ரசனையாக சொல்லுவார். நான் எந்தப் படத்தையும் வெளியான நாளே பார்த்ததில்லை; பார்க்க ஆசைப்பட்டதும் இல்லை.  

கலைமாமணி பட்டம் எதுக்குக் கொடுக்கறாங்க?

# இதற்கு கொடுப்பவர்தான் பதிலளிக்க முடியும். நமக்கு விளங்காத விஷயம். 

& அதானே! எதுக்குக் கொடுக்கிறாங்க ! சமீபத்துப் பட்டியலில் சௌகார் ஜானகி, சரோஜா தேவி எல்லாம் வேற இருக்காங்க! ஒருவேளை "புதிய பறவை" என்ற படத்தின் பெயரைப் பார்த்து, 'புதிய படம்' என்று நினைத்திருப்பார்களோ தேர்வாளர்கள்? 

= = = =

மின்நிலா சித்திரை சிறப்பிதழுக்காக - படம் பார்த்து - - - - 

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். 

இந்தப் படத்தை மையமாக வைத்து, கதை / கட்டுரை/ கவிதை எழுதி அனுப்புங்கள். 

உங்கள் படைப்புகள் மின்நிலா சித்திரை சிறப்பிதழில் வெளியிடப்படும். 

தலைப்பில் " படம் 210222 " என்று குறிப்பிடவும். 

Please send your creative articles to : engalblog@gmail.com 

or Whatsapp number 9445687840 


நன்றி. மீண்டும் சந்திப்போம்! 

65 கருத்துகள்:

 1. அடடா? மீ த போணி? பிள்ளையாரப்பா! போணி ஆகணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...   நெல்லை, வேணாம் இந்தத் தொல்லை, போட்டி இனி இல்லைன்னு முடிவு பண்ணிட்டார் போல!

   நீக்கு
 2. நானே தாமதம்னு நினைச்சுட்டிருந்தா இன்னும் யாருமே வரலையா நிஜம்மாவே! சரியான தூங்குமூஞ்சிங்க போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூக்கமோ, வேலைகளின் தாக்கமோ...!

   நீக்கு
  2. நிஜமாவே யாருமே வரலை... ஒருவேளை மிரட்டி வச்சருக்கீங்களோ கீசா மேடம்?

   நீக்கு
  3. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மஹாராஷ்ட்ராவில் அறிவிக்கப்பட்டிருக்கும் லாக் டவுன் விரைவில் நல்லபடியாக முடிந்து இயல்பான நிலைமைக்குத் திரும்பப் பிரார்த்திப்போம். அனைவர் வாழ்விலும் சகஜமான போக்குவரத்து அமையவும் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 4. ஏழை என்பவர்கள் மனதாலும் ஏழையாக இருப்பார்கள் என நினைக்கிறேன். பணம், காசு இருந்தால் மட்டுமே ஏழை இல்லை. மனதாலும் ஏழையாக இருப்பவர்கள் உண்டு.
  படிப்பு சம்பந்தமான நெல்லையின் கேள்விக்கு! நம் நாட்டுப் படிப்பு வாழ்வாதாரங்களை ஒட்டியே தான் இருந்து வந்தது. அவற்றை மாற்றியவர்கள் வெள்லையர்கள். இதைக் குறித்து எழுதப் போனால் பெரிதாக ஆகிவிடும். இன்று நம்மவர்களின் அந்தக்காலப் படிப்பையே நாம் அலட்சியம் செய்து வருகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான்.

   நீக்கு
  2. // வெள்ளையனின் கல்வி...//

   அதற்குச் சாமரம் வீசுபவர்கள் நிறையவே உண்டு...

   இத்தகைய கல்வியைத் திட்டமிட்டவன் மெக்காலே!.. அவனது கனவு நிறைவேறிக் கொண்டு இருக்கின்றது..

   நல்லொழுக்கத்தைப் பழக்காததும் ஒரு கல்வியா?..

   நீக்கு
  3. "வெள்ளையர்கள்" காலை அவசரத்தில் "வெள்:லை"யர்கள்" ஆனாலும் அதுவும் உண்மைதானே! "லையர்கள்" என்பதில்!

   நீக்கு
 5. @நெல்லை, இயன்றால் திரு தரம்பால் அவர்களின் The Beautiful Tree புத்தகத்தைத் தரவிறக்கிப் படியுங்கள். இங்கே சுட்டி கொடுக்க முயன்றால் வலைத்தளம் இல்லை என கூகிளார் சொல்கிறார். ஏதேனும் பிரச்னை இருக்கலாம். இல்லை எனில் என்னிடம் இருக்கு அனுப்பி வைக்கிறேன். அல்லது தமிழில் இதே புத்தகம் "அழகிய மரம்" என்னும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. அதை வாங்கிப் படியுங்கள். நம் படிப்பு எவ்வளவு மோசமாக மாற்றப்பட்டது என்பது புரியவரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கருத்தைப் படித்தவுடன், தி ப்யூடிஃபுல் ட்ரீ புத்தகத்தை தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்தேன். சப்ஜெக்ட் எனக்குக் கொஞ்சம் போர் அடிக்கும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. நான் அல்ரெடி புத்தகமே வாங்கிட்டேன்!

   நீக்கு
  3. @கௌதமன், அழகிய மரம் தமிழில் வாங்கிப் படித்துப் பாருங்கள். அதோடு நிர்வாகம் பொதுவாகப் பொருளாதாரம் சார்ந்த நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் "பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியா" பற்றிய புத்தகத்தில் கிடைக்கும். அதில் எப்படிப்பட்ட அருமையான நிர்வாகத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பது தெரியவரும். தற்சமயம் இவற்றைக்குறித்துத் தொல்லியல் அறிஞர் திரு நாகசாமி ஒவ்வொரு திங்களன்றும் தினமலர் திருச்சி பதிப்பில் எழுதுகிறார். கூடவே ஆங்கிலேயக் கெசட்டியரில் அவங்க இதை எல்லாம் குறிப்பிடாமல் அவங்க பக்கம் மெல்ல மெல்ல இந்தியர்களை மாற்றியது பற்றி மட்டுமே குறிப்பிட்டிருப்பதாகவும் ஆதாரங்களுடன் கூறுகிறார்.

   நீக்கு
  4. பொருளாதாரம் சார்ந்த சரித்திரத்தில் ஈடுபாடு இருந்தால் இம்மாதிரிப் புத்தகங்களைப் படிக்கலாம். நான் பள்ளியிலேயே இந்தத் துறையில் சிறப்புப் பாடம் எடுத்துப் படித்ததால் கொஞ்சம் கொஞ்சம் இதில் ஆர்வம் உண்டு.

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அனைவரையும் நல்ல விதத்தில் காப்பாற்றி வரட்டும்.

  தொற்று மீண்டும் சுற்றி வராமல் இருக்கப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தொற்று மீண்டும் சுற்றி வராமல் இருக்கப் பிரார்த்தனைகள்.//

   அதேதான். இணைந்து பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா... வணக்கம்.

   நீக்கு
 7. பெங்களூரில் பெண்ணின் தோழி இருக்கும் வளாகத்தில் ஒரு
  ப்ளாக்கைச் சேர்ந்த 100 நபர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
  எல்லோரும் சேர்ந்து கார்னிவல் நடத்தினார்களாம்.
  முழு ப்ளாக்கும் க்வாரண்டைன் செய்திருக்கிறார்கள்.
  தோழியின் பெற்றோர்கள்
  நடக்கப் போவதற்குக் கூட அஞ்சுகின்றனர்.
  நாயகன் படக் கேள்வி போல , தொற்று போய்விட்டதா
  இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.

  திருவல்லிக்கேணியில் இன்னோர் வயதான தம்பதியினர்
  பாதிக்கப் பட்டு நல்ல வேளையாக மருத்த்வ மனையிலிருந்து
  திரும்பி விட்டார்கள்.
  ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை அவர்களுக்கு
  உடல் நலமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பன்னர்கட்டா incidentஆ? இங்க இரு மாதங்களுக்கு முன்பு (எங்கள் வளாகத்தில் - 500 flats இப்போ நிரம்பியிருக்கு) மஞ்சள் விழான்னு நடத்தி, மஞ்சளை உபயோகப்படுத்தி முழு meals party ராஜஸ்தானியர்/மார்வாரி வச்சாங்க (ஒருத்தருக்கு 500 ரூபாய் என்று). நாங்க கலந்துக்கலை. சென்ற வாரம், கல்லூரி விளையாட்டுத்திடலில் 108 சூரிய நமஸ்காரம், அப்புறம் இரு நாள் கழித்து, அருகில் ட்ரெக்கிங் என்று 500 பேர் கலந்துகொண்டார்கள். நாங்க கலந்துக்கலை. இன்னும் சில நாட்களில் சிவராத்திரி என்று இரவு சிவன் கோவில்கள் சேவிக்க பேருந்து அரேஞ்ச் பண்ணறாங்க (இந்த மூன்றும் யோகா க்ரூப் நடத்துது-வெளில உள்ளவங்க). இதிலெல்லாம் கலந்துகொள்ளவே பயமாக இருக்கு-எங்கே தொற்று வந்துடுமோ என்று.

   நீக்கு
  2. பதிவுலக நண்பர் ஒருவர் இப்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.  அவர் நலமுடன் திரும்பப் பிரார்த்திப்போம்.

   நீக்கு
  3. யார் அந்தப் பதிவுலக நண்பர்?

   நீக்கு
  4. அட ராமா. நன்றாகத் தேறி வரட்டும்.

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு

 9. கேள்விகளுக்கு பதில் அருமை.
  கொரோனா மீண்டும் வருவது கவலை அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் எச்சரிக்கையாகவும், பொறுப்போடும் நடந்துகொள்ள வேண்டும்.

   நீக்கு
  2. /// மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்பாகவும்... ///

   !?...

   நீக்கு
  3. நீங்கள் சொல்வதுதான் சரி.

   நீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். கேள்வி பதில்கள் குறைவாக இருந்தாலும் செறிவாக இருக்கின்றன. 

  பதிலளிநீக்கு
 11. ஏழை மனதை மாளிகையாக்கி...
  இரவும் பகலும் காவியம் பாடி...
  நாளை பொழுதை இறைவனுக்களித்து...
  நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு...
  நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு...

  உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
  நினைத்து பார்த்து நிம்மதி நாடு...

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 13. .. சமீபத்துப் பட்டியலில் சௌகார் ஜானகி, சரோஜா தேவி எல்லாம் வேற இருக்காங்க!//

  பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி., டி.ஆர்.ராமச்சந்திரன், குசலகுமாரி போன்ற பெயர்கள் தட்டெழுத்தில் விட்டுப்போனதாக அரசு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்தவண்ணம் இருக்கின்றன!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம் யோசித்துப் பார்த்தேன். எம்ஜிஆர் 11 வருடத்துல கொடுத்தால், தவறாகத் தெரியும் என்று நினைத்துக் கொடுக்கலையோ? அப்புறம் ஜெ. வும் கொடுக்கலையோ? கருணாநிதி எம்ஜிஆர் ஆட்களுக்குக் கொடுப்பார்னு கனவுலகூட நினைக்கமுடியாது. திடுமென்று இவங்களுக்கெல்லாம் விட்டுப்போச்சுன்னு நினைத்துக் கொடுத்துட்டாங்களோ?

   அது சரி..கலைமாமணி விருது கொடுத்தால், அவங்க இலவசமா அரசு பேருந்துல போகலாமா?

   நீக்கு
  2. கலைமாமணி விருதின் பயன்கள் என்னென்ன? என்று கேள்வி கேட்டால் - ஒரு பதிலும் கிடைக்காது.

   நீக்கு
  3. // பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி., டி.ஆர்.ராமச்சந்திரன், குசலகுமாரி போன்ற பெயர்கள் தட்டெழுத்தில் விட்டுப்போனதாக அரசு வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்தவண்ணம் இருக்கின்றன!// :))))))))

   நீக்கு
 14. //அதானே! எதுக்குக் கொடுக்கிறாங்க // - சௌகார், சரோஜாதேவிக்கெல்லாம் இப்போதான் கலைமாமணி பட்டம் கொடுக்கறாங்கன்னா, அந்தப் பட்டத்துக்கே அர்த்தமில்லாமல் போகுது. இனி, பாகவதர் போன்றவர்களை சமாதியிலிருந்து எழுப்பி கொடுப்பாங்க போலிருக்கு. அரசுத் துறைக்கு வெட்கமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு ஒரு கதை இருக்கு...
   அந்தக் கதையை இங்கே சொல்லலாம்..

   ஆனால் அந்தக் கதையின் முத்தாய்ப்பைப் பொதுவெளியில் சொல்லலாமா!?..

   நீக்கு
  2. // இதுக்கு ஒரு கதை இருக்கு...
   அந்தக் கதையை இங்கே சொல்லலாம்..

   ஆனால் அந்தக் கதையின் முத்தாய்ப்பைப் பொதுவெளியில் சொல்லலாமா!?..// வாட்ஸ் அப் செய்தியாக அனுப்புங்க.

   நீக்கு
 15. //உணவிற்காகக் கடன் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் ஏழை// - அப்படீன்னா அரசின் எந்தத் திட்டமும் (2500 ரூ இலவசம், ரேஷன் எல்லாம்) அவங்களுக்கு மட்டும்தானே போய்ச்சேரணும். அப்புறம் எதுக்கு மத்தவங்கள்லாம் வாங்கிக்கறாங்க? தங்களைப் பிச்சைக்காரர்கள் என்று எண்ணிக்கொள்வதாலா?

  கேபிள் கனெக்‌ஷன் இருப்பவர்கள், Gas அடுப்பு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கிடையாது என்று சட்டம் வந்தால்தானே, யாருக்குத் தேவையோ அவங்களுக்கு அரசு உதவி கிடைக்கும்? எல்லாருமே ரேஷன் பிச்சை எடுக்கணும்னா, அப்புறம் ஊழல் புரியும் அரசியல்வாதியையோ அதிகாரிகளையோ குறை சொல்லும் யோக்கியதை இவங்களுக்கு எப்படி இருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரேஷன் காரடுக்கு - குறிப்பாக இலவச அரிசி வாங்கும் காரடுக்கு வருமான வரம்பு உண்டு என்று நினைக்கிறேன். நான் சென்னையில் இருந்த காலத்தில், ரேஷன் கார்டை புதுப்பிதற்கு கொடுக்கச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன தாம்பரம் விலாசத்தில் கொண்டுபோய் கொடுத்து ஒரு acknowledgement வாங்கிக் கொண்டேன். அப்புறம் பல தடவைகள் அந்த அலுவலகத்திற்கு நடையாய் நடந்தும் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்ட் எனக்குக் கொடுக்கவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது இது.

   நீக்கு
 16. கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்று.

  கதை/கவிதைக்கான படம் அசத்தல்.

  பதிலளிநீக்கு
 17. ஏழைன்னா என்னை பொறுத்தவரை உதவி செய்ய இயன்ற நிலையில் இருந்தும் உதவி செய்ய மனமில்லாதோர்தான் ஏழை 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது பாயிண்ட். வாரா வாரம், பிறரிடம் கையேந்திப் பெற்ற பணத்தை நற்செயலுக்கு கொடுக்கும் 'பிச்சைக்காரர்' ஏழையாக இருந்தாலும் மனதால் பணக்காரர். ரேஷன் கடையில் 2500 ரூபாய் வாங்கிக்கொண்டவர்கள், பணமுள்ளவர்களாக இருந்தாலும் ஏழைகள்தாம்.

   நீக்கு
  2. எனக்கு நம் நாட்டில்  நடக்கும் பல விஷயங்கள் தெரியறதில்லை .முக்கிய காரணம் அங்கே நடப்பவற்றை எனக்கு உடனடி தகவலை சேர்க்கும் இருவரும் சாமிகிட்ட அது சினிமா கிசுகிசுவா இருக்கட்டும் அரசியல் வாழ்வாதாராம்னு பல விஷயங்கள் 2012 லருந்து தெரியவேயில்லை அதனால் தான சில சம்பவங்கள் என்னை ஆச்சர்யப்படுத்துது .ரேஷனில் 2500 கொடுப்பட்டது இப்போ தான தெரியுது

   நீக்கு
  3. // ஏழைன்னா என்னை பொறுத்தவரை உதவி செய்ய இயன்ற நிலையில் இருந்தும் உதவி செய்ய மனமில்லாதோர்தான் ஏழை // கரெக்ட் .

   நீக்கு
 18. பள்ளிப்பாடங்களில் moral இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இன்னமும் பள்ளிகளில் தொடர்ந்து பயிற்றுவிக்கிறார்களா என தெரியலை ஆனால் நான்  படித்தது கத்தோலிக்க பள்ளி .அதில் கத்தோலிக்க மாணவியர் கத்தோலிக்க 45படத்துக்கு  நிமிடம் காலையில் போயிருவாங்க மற்ற மதத்தினர் மற்றும் non கத் தோலிக்கர் என்னைப்போன்ற ப்ராட்டஸ்டண்ட்ஸ் மாறல் இன்ஸ்ட்ரக்ஷனுக்கு இருப்போம் .அதில் ஆசிரியர்கள் எங்களை வழிநடத்திய விதம்தான் இன்னமும் என்னைப்போன்றோருக்கு பயன்படுத்து .மாறல் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் படிச்சதால் தப்பே செய்யலை செய்ததில்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனால் தவறை உணரும் திருந்தும் மீண்டும் முன்னேறும் பக்குவத்தை அனைவரையும் மதிக்கும் குணங்களை நான் எனது ஆசிரியைகளிடமிருந்து கற்றுக்கொண்டேன் .அதேபோல் இங்கே வெளிநாடுகளில் ஒரு வகுப்பு 11 ஆம் வகுப்பு வரை உண்டு அது நிச்சயம் வாழ்க்கைக்கு உகந்தது அதில் சொல்லிக்கொடுப்பது என்ன தெரியுமா ?இனம் மதம் இவற்றை சாட்டி யாரையும் பேசக்கூடாது ,நிறம் எத்னிசிட்டி மற்றும் அவரவர் விருப்பங்களை நாம் கேலி கிண்டல் அடிக்கக்கூடாது உருவம் கண்டு எள்ளாமை .பிறர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் மிக முக்கியமா இன்க்ளூஷன் அதாவது ஆன் பெண் lgbt எவராக இருப்பினும் மனதார ஏற்க வேண்டும் .முக்கியமா நமது வெறுப்பு விருப்புக்களை பிறர்மேல் திணித்தல்கூடாதது 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வ் கமெண்ட் பெச்சாகிடுச்சு 

   நீக்கு
  2. ஒரு வகுப்பு // a subject it is PHE

   Physical and health education courses foster the development of knowledge, skills and attitudes that will contribute to a student's balanced and healthy lifestyle. Through opportunities for active learning, courses in this subject group embody and promote the holistic nature of well-being.

   நீக்கு
  3. சுவையான, பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 19. 1, பச்சோந்திகள் ..எப்படி இருக்கும் வரையறுக்கவும் ? நான் கேட்டது மனித உருவில் உள்ள பச்சோந்திகளை பற்றி 
     இரண்டு கால் பச்சோந்திகளை கண்டுபிடிப்பது எப்படி ?

  2, கொஞ்சம் வயதில் பெரியவர்களை எத்துறை சார்ந்திருப்பினும் அவர்கள் பொது வெளியில் விமரிசனத்துக்குள்ளாகும்போது மனது கஷ்டப்படுது இதன் காரணம் என்ன ? அவங்க தப்பே செய்திருக்கட்டுமே ஆனாலும் மனம் வருத்தப்படுவதன் காரணம் என்ன ?
  3, ஒரு காலத்தில் சீரியஸாக எடுக்கப்படாத சின்ன விஷயங்கள் கூட இப்போதெல்லாம்  சிலறால் ஊதி பெரிதாக்கப்படுகின்றன இதை பற்றி உங்கள் கருத்து ? 
  4, உங்கள் வீட்டு கிச்சனில் எழுதப்படாத சட்டங்கள் எவை ?
  5,// 100 வருஷம் சேர்ந்து இணைபிரியாம வாழணும் // இப்படி வாழணும்னா பிறந்த உடனேயே கல்யாணம் ஆகியிருக்கணுமே ?      சும்மா ஜாலிக்காக கேட்டேன் 

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!