சனி, 6 பிப்ரவரி, 2021

''பசிக்கிறதா... வாங்க வந்து பிரியாணி சாப்பிடுங்க''

 

 குப்பையில் இருந்து கொட்டுது பணம் முன் உதாரணமான துப்புரவு ஊழியர்கள். 

ராயபுரம்:ராயபுரத்தில், மட்டையில் இருந்து தேங்காய் நார் தயாரித்து, குப்பையை பணமாக்குவதில், துப்புரவு ஊழியர்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.

ராயபுரம் மண்டலத்தில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 49வது வார்டு முதல், 53வது வார்டு

வரையிலான பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் இளநீர், பழச்சாறு கடைகள் உள்ளன.இக்கடைகளில் இருந்து, தினமும் 3 டன் தென்னம் மட்டைகளை, துப்புரவு ஊழியர்கள்

சேகரிக்கின்றனர். இவை, மூலக்கொத்தளத்தில் உள்ள, உரம் தயாரிக்கும் மையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

அங்கு, கன்வேயரில் போட்டு, தேங்காய் மட்டையில் இருந்து தேங்காய் நாரை தனியாக

பிரித்தெடுக்கின்றனர். பின், நாரை வெயிலில் போட்டு காயவைக்கின்றனர்.கன்வேயரில் போடப்பட்ட மட்டைகளை அரைத்து நார்களைப் பிரிக்கும்போது, அதிலிருந்து துகள்கள் தனியாக விழும். அந்தத் துகள்களைக் கொண்டு, தேங்காய் நார்க் கட்டிகள் தயாரிக்கின்றனர்.


இதுகுறித்து ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் கூறியதாவது:குப்பைக்கு போகும்

கழிவுகளை, மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றும் முயற்சிகளை செய்து வருகிறோம்.அந்த வகையில், தேங்காய் மட்டையில், தினமும், 500 கிலோ நார் தயாரிக்கப்படுகிறது. தேங்காய் நாரை, 50 கிலோ பண்டலாகக் கட்டி, விற்பனைக்கு கொண்டு வருகிறோம். இது, கிலோ, 15 - 20

ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பச்சை தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தேங்காய் நாரில், கால்மிதிகள், சோபாக்கள், பெட்கள், சணல் கயிறு உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.மேலும், நார்களை பிரிக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் துகள்கள், இயற்கை உரமாக பயன்படுகிறது.'கோகோ பித்' எனப்படும், இந்த தேங்காய் நார் கட்டிகள், அதிகளவிலான தண்ணீரை உறிஞ்சி தனக்குள் வைத்துக்கொள்ளும் என்பதால், மண்ணில்லா விவசாயம் செய்ய, இவை பெரிதும் உதவுகிறது.

இவை, கிலோ, 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நர்சரி, மாடி தோட்டம் வைப்போர் இயற்கை உரம் வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

= = = =

தானமாக பெறப்பட்ட இதயம் 'மெட்ரோ' ரயிலில் விரைந்தது.

ஐதராபாத்: தெலுங்கானாவில், மூளைச் சாவு அடைந்த நபரிடம் இருந்து, தானமாக பெறப்பட்ட இதயம், 'மெட்ரோ' ரயில் வாயிலாக விரைவாக எடுத்துச் செல்லப்பட்டு, மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

தெலுங்கானா தலைநகரான ஐதராபாதின், எல்.பி., நகர் என்ற இடத்தில், காமினேனி என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 45 வயது நபர், மூளைச் சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்.

இதையடுத்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட இதயத்தை, ஐதராபாதின், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள, அப்போல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.இந்த இரு மருத்துவமனைக்கும் இடையே, 21 கி.மீ., துாரம் உள்ளது. போக்கு வரத்து நெரிசலில், சாலை மார்க்கமாக இதை கடக்க, ஒரு மணி நேரத்திற்கு மேலாகும்.எனவே சிறப்பு, 'மெட்ரோ' ரயில் வாயிலாக, இதயத்தை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

இதற்கான சிறப்பு அனுமதிகள் பெறப்பட்டு, தனி ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவ மனையில் இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்ட இதயம், ஐதராபாதின், நாகோல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 3:30 மணிக்கு, சிறப்பு ரயிலில் கொண்டு செல்லப் பட்டது. மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், 16 ரயில் நிலையங்களை கடந்து, ஜூப்ளி ஹில்ஸ் ரயில் நிலையத்தை, 30 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் சென்றடைந்தது.அங்கிருந்து, ஆம்புலன்ஸ் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்ட இதயம், சம்பந்தப்பட்ட நோயாளிக்கு, வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

= = = =


''பசிக்கிறதா... வாங்க வந்து பிரியாணி சாப்பிடுங்க'' என, பிரியாணி தானம் செய்கிறார் கோவையில் ஒரு பெண்.


கோவை புலியகுளம் ரெட்பீல்டு ரோடு பகுதியில், வசித்து வருபவர் சபிரீனா சதீஸ். இவர் தனது கடையில் ஒரு பிளேட் பிரியாணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.''என்னது... 20 ரூபாய்க்கு பிரியாணியா...''என, ஆச்சரியப்பட வேண்டாம். பாக்கெட்டில் பணம் இருப்பவர்கள், 20 ரூபாய் கொடுத்து பிரியாணி சாப்பிடலாம். இல்லை என்றால் வயிற்றில் பசி இருந்தால் போதும்; இங்குஇலவசமாக பிரியாணி சாப்பிடலாம்!

எங்களுக்கு லாபம் வேண்டாம். மறுநாள் உணவு தயாரிக்க சமையல் பொருட்கள் வாங்க, பணம் கிடைத்தால் போதும்.பசியோடு வருபவர்கள் பகல் 12:00 முதல் 3:00 மணி வரை இங்கு உணவு சாப்பிடலாம். வியாபாரம் நன்றாக இருந்தால், 15 ரூபாய்க்கு பிரியாணி கொடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்,'' என்கிறார் சபிரீனா. வயிற்றுப்பசி போக்கும் இவர்களைப் போன்றோர்தான் வாழணும் பல்லாண்டு!

============= 

பழைய சோற்றின் மகிமை ! 


= = = = 

சென்னையில் திருப்பதி பத்மாவதி கோவில்- நன்கொடையாக இடம் வழங்கிய நடிகை காஞ்சனா. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும்.

சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது.

இதேபோல திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோவிலையும் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

இப்போது ஜி.என்.செட்டி ரோட்டில் கோவிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும். அதை அவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

மொத்தம் 14 ஆயிரத்து 880 சதுர அடியில் கோவில் கட்டப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.

கோவில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. கட்டுமானங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. ராஜகோபுரம், பிரகாரம், முகாம் மண்டபம் என கோவிலை கட்ட இருக்கிறார்கள்.

கோவிலுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவாகும் என முதலில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் அலங்கார செங்கல் கொண்டு கட்டுவதாக முடிவு செய்து இருந்தனர்.

அதன் பிறகு ஐதராபாத், குருஷேத்ரா ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் போல கிரானைட் மூலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அதன் மதிப்பீடு தொகை ரூ.6 கோடியே 85 லட்சமாக உயர்ந்துள்ளது.

அவற்றுக்கான பணத்தை திருப்பதி தேவஸ்தான விதிகளின்படி நன்கொடையாக பெற உள்ளனர். ராஜகோபுரம் மட்டுமே ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட இருக்கிறது.

:::  காஞ்சனா பற்றி - காலச்சக்கரம் நரசிம்மா :

எனது தந்தை சித்ராலயா கோபு,  சிவாஜி கணேசன் தொடங்கி , பாண்டியராஜன் வரையில், டி ஏ மதுரம் தொடங்கி கோவை சரளா வரையில்,  பதமினி தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரையில் பல நட்சத்திரங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருந்தாலும், எங்கள் வீட்டில் ஒரு சுப காரியம் என்றால் முதலில் வந்து நிற்பது, நடிகை காஞ்சனா என்கிற வசுந்தராதேவி. 

நட்சத்திரங்கள் கீழிருந்து மேலே உயர்வார்கள். இவர் விமான பணிப்பெண்ணாக பறந்துக்கொண்டிருந்தவர், நட்சத்திரமாக நடிக்க கீழே வந்தார். காதலிக்க நேரமில்லை மூலம் அறிமுகமானவர்!  கண்டிப்பான பெற்றோர் நடிக்கக்கூடாது என்று கூற, ஸ்ரீதரும் கோபுவும் நேரே சென்று, அவரது தந்தையிடம் பேசி  சம்மதம் கூற வைத்தனர். 

எம்ஜிஆர் சிவாஜி என்று பெரிய தலைகளுடன் நடித்தாலும், தெருவில் சாதாரணமாக நடந்துச்செல்பவர்.  பிரார்த்தனைக்காக ஒரு ஆலயத்தை சுத்தம் செய்ய, அவர் நடுத்தெருவில் இருப்பதாக  ஒரு பத்திரிகை எழுதியது. அதனை மறுக்க கூட அவருக்கு தெரியவில்லை. அவ்வளவு வெள்ளை மனசு. 

    அப்படிப்பட்ட நடிகைதான் இன்று முப்பது கோடி பெறுமானமுள்ள தனது ஜி என் செட்டி ரோடு நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதி வைத்தார்.  விளம்பரம் கூட தேடிக்கொள்ளவில்லை.  அந்த நிலத்தில் பத்மாவதி தாயார் ஆலயம் எழுப்பப்போவதாக டிடிடி அறிவித்துள்ளது. 


சித்ராலயா கோபுவுடன், காஞ்சனா. 

= = = = 

61 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய செய்திகள் நன்று. காஞ்சனா செய்தியை தினமலரில் படித்தேன். கூடுதல் தகவல் நன்று. ஒவ்வொருவரின் வாழ்க்கைதான் எப்படி எப்படி மாறிவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தீ நுண்மி என அழைக்கப்படும் தொற்று அடியோடு ஒழிந்திடப் பிரார்த்திப்போம். இப்போத்தான் நம்ம ரங்க்ஸ் இது ஒழிய ஏழெட்டு ஆண்டுகளாவது ஆகும் என விஞ்ஞானிகள் கூறுவதாகச் செய்தி வந்திருப்பதைத் தெரிவித்தார்.

  பதிலளிநீக்கு
 3. ஹிஹிஹி, பால்காரர் வந்தாரா? அவசரத்தில் பப்ளிஷ் கொடுத்திருக்கேன். விஞ்ஞானிகளின் இந்த முன்னறிவிப்பை முறியடிக்கும் விதமாகச் செயல்பட்டுத் தீநுண்மியை அடியோடு ஒழிக்கவேண்டும் என உறுதி எடுத்துப்போம். இறை அருளால் விரட்டி அடிப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விலகி நிற்போம்.  அவமரியாதை தாங்காமல் அதுவே ஓடிவிடும்!

   நீக்கு
 4. காஞ்சனா பற்றிய செய்திகள் முகநூலில் நானும் படிச்சேன். அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்துவிட்டதாகவும் கோயில் பிரசாதத்தை உண்டு வாழ்வதாகவும் பிரபலமான தமிழ்ப்பத்திரிகை "விகடன்" படங்களுடன் பல்லாண்டுகள் முன்னரே வெளியிட்டிருந்தது. எல்லோரும் சொல்லவே நானும் அந்தச் செய்தியைப் படிச்சிருந்தேன். என்னத்தைச் சொல்ல! இப்படி எத்தனை எத்தனை பொய்களை அது பரப்பி இருக்கோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் குடும்பத்தினரிடமிருந்து அந்த சொத்தை அவர் போராடிப் பெற்றதாகத்தான் நானும் படித்தேன்.  ஆனால் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதாக எல்லாம் சொன்னது ரொம்ப ஓவர்.

   நீக்கு
  2. அப்படியா? ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ள இருந்த நபரை அவர் சொந்த சகோதரரே மனதைக்கெடுத்துக் கல்யாணம் செய்துக்க விடாமல் செய்துவிட்டதாகவும் அதில் போட்டிருந்த நினைவு. பாவம்! :( வெண்ணிற ஆடை நிர்மலாவும் கல்யாணம் செய்துக்கலை. ஆனால் அவர் பற்றிய கிசுகிசுக்களோ, வதந்திகளோ படிச்சதில்லை. இப்போவும் தொலைக்காட்சித் தொடர்களில் வந்து போகிறார்.

   நீக்கு
 5. மற்றச் செய்திகள் புதியவை. தேர்தல் காலத்தில் பிரியாணியை இலவசமாகப் போடுகிறாரே! எந்தக் கட்சியைச் சேர்ந்தவராய் இருப்பார் என்னும் எண்ணமே முதலில் வருது! நம்ம புத்தி அப்படி! :)))))))

  பதிலளிநீக்கு
 6. பழைய சோற்றின் மகிமை நானும் பார்த்தேன். நான் கருத்துச் சொல்லும்வரை காணாமல் போயிருந்த நெல்லை அதுக்குள்ளே எனக்கு முந்திக்கொண்டது எப்படி? ஏதோ வெளிநாட்டுச் சதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை நேற்றிரவே ஷெட்யூல் செய்து விட்டாரோ!

   நீக்கு
  2. இருக்கும், இருக்கும். இல்லைனா எப்படி முன்னாடி வருவார்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. 5 1/2 மணிக்கே டிக்கட் கவுன்டர் ஓபன் பண்ணிட்டாங்க. தாய்க்குலம் முதல்ல போகட்டும்னு அரை மணி விட்டுக் கொடுத்தால், அப்புறமும் சண்டைக்கு வர்றாங்களே இந்த கீசா மேடம், அதுவும் என்னைப்போல அப்பாவி கிட்ட.... நியாயமா?

   நீக்கு
 7. "இதயம்" உள்ளவர்கள் மறக்கவே மாட்டார்கள் இந்த அரிய செயலை. எல்லாச் செய்திகளுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம்... இதயம் கொடுத்ததற்கு இறந்தவருக்கு நன்றி சொல்லணுமா இல்லை அவருடைய வீட்டாருக்குச் சொல்லணுமா இல்லை, அவசர அவசரமாகக் கொண்டு செல்ல உதவியவர்களுக்கு நன்றி சொல்லணுமா?

   நீக்கு
  2. எல்லோருக்கும் தான் நன்றி நெல்லை. எல்லோருடைய பங்கும் இருக்கே.

   நீக்கு
  3. அப்படி இல்லை. இறந்தவர் மனைவி, பசங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். இறந்தவருக்கு நன்றி சொல்லமுடியுமா?

   நீக்கு
 8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.அனைத்து செய்திகளையும்
  காலையில் தான் படிக்க வேண்டும்.

  அனைவரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
  இறைவன் அருள வேண்டும்.

  குளிர் எனும் அரக்கன்
  மைனஸ் டிகிரிக்கு போய்க்கொண்டிருக்கிறான்.
  மைனஸ் 22 ஃபாரன் ஹீட்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.. -22 ஆ... அட்டஹாசமாக இருக்குமே என்று நான் கற்பனை செய்துகொள்கிறேன்.

   நீக்கு
  2. நெல்லை, நீங்கள் உண்மையில் குளிரை அனுபவிக்கையில் திண்டாடித்தான் போவீர்கள். இதெல்லாம் ஒண்ணும் ரசிச்சு அனுபவிக்க வேண்டியது இல்லை. ஊட்டி குளிர், கொடைக்கானல் குளிர் வேறே! இது வேறே! சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லென்ற காற்று முகத்தில் அறையும்போது முகமே ஒரு வினாடி எவ்விதமான உணர்ச்சி/அசைவைக்காட்டாமல் முடக்குவாதம் வந்தாற்போல் ஆயிடும். இந்தியாவின் குளிரிலேயே பலருக்கு முகத்தில் பக்கவாதம் வந்து முகம்/வாய் கோணிக்கொண்டு விடும். பலருக்கு அப்படி நேர்ந்திருக்கிறது.

   நீக்கு
  3. நான் பஹ்ரைன்ல 4 டிகிரி, மைனஸ் 15 டிகிரி ஸ்டோரேஜ் வேர்ஹவுசுக்குள் போயிருக்கேன். சும்மா எழுதறேனே தவிர, மைனஸ் ரூம்லலாம் கால் வழுக்கும்படி ஐஸ் படிஞ்சிருக்கும். கொஞ்சம் கஷ்டமா ருக்கும். கொஞ்ச நேரத்துல கை லிம்ப் ஆனமாதிரி இருக்கும். இருந்தாலும் அந்த மாதிரி இயற்கை இடங்களுக்குப் போகணும்னு ஆசை இருக்கு

   நீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 10. குறைந்த விலையிலும், இலவசமாகவும் உணவு அளிக்கும் இளம்பெண், உயிர் கொடுக்க இதயத்தை மெட்ரொ ரயிலில் அனுப்ப உதவியவர்கள். கோவிலுக்காக நிலத்தை தானமாக தந்த நடிகை, குப்பை மேலாண்மை என்று பல தளங்களில் பாஸிட்டிவ் செய்திகள் பலே!

  பதிலளிநீக்கு
 11. இப்போது பலரும் பழையது சாப்பிடுகின்றனர், ஆனால் அதை ஃப்ரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடாக்கி...(சாதம் உட்பட). எங்கள் வீட்டில் சாதம் மிஞ்சினால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து நான் மட்டுமே சாப்பிடுவேன். சாதம் மீறாமல் கரெக்டாக சமை என்கிறான் மகன். ரொம்ப கரெக்டா சமைத்தால், வயிறு ரொம்ப சாப்பிட்டார்களா? இல்லையா? என்று சந்தேகம் வரும். அதனால் கொஞ்சமாவது மீறும்படிதான் சமைப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க குளிர்சாதனப் பெட்டியில் எதையுமே வைப்பதில்லை. சில சமயம் ராத்திரிச் சப்பாத்திக்குப் பண்ணின கூட்டு/கறி வகைகள் மிஞ்சினால் உடனேயே கீழே செக்யூரிடியையோ அல்லது வீட்டு வேலை செய்யும் பெண்ணையோ அழைத்துக் கொடுத்துவிடுவோம். சில சமயங்களில் காய்களை வதக்கும்போது நிறைய இருப்பதாய்த் தெரிந்தால் அந்தக் காய்களை எடுத்து வைப்போம். உப்பு, மஞ்சள் பொடி மட்டும் போட்டிருப்பேன். அவற்றை மறுநாளைக்குப் பயன்படுத்திப்பேன்.

   நீக்கு
  2. கூடியவரையில் சொப்பு வைத்தே சமைத்துவிடுகிறேன். ஆகவே சாதம் மிஞ்சினால் ஒரு கைப்பிடி மிஞ்சும். எப்போவானும் கொஞ்சம் கூட இருக்கும். இரண்டு பேரும்பகிர்ந்து ராத்திரிக்குப் போட்டுக்கொண்டு தீர்த்துடுவோம். குழம்பு, ரசம் எல்லாம் மிஞ்சும்படி வைப்பதில்லை. சாம்பார் கூட இப்போல்லாம் கரெக்ட்டாகப் போய்விடுகிறது. அந்த அளவுக்குக் கொஞ்சமாகவே வைக்கிறேன். பழைய சாதம் பிடிக்கும். பழையது சாப்பிடணும் என்றே வெயில்காலத்தில் கூடவே சாதம் வைத்து அதில் நீர் ஊற்றி வைப்பேன். நீரைத் தெளிவாக எடுத்துக் குடித்துவிடுவோம். காலை அதில் உப்பு, தயிர் சேர்த்துப் பிசைந்து கொண்டு சின்ன வெங்காயம்+பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டுக் கலந்து சாப்பிடுவேன். அவருக்கு நோ சி.வெ.+ப.மி. காம்பினேஷன். பிடிக்காது. கேழ்வரகுக் கூழையும் இப்படி முதல்நாளே கூழ் காய்ச்சி வைத்துக் கொண்டு அதிலேயே சி.வெ.+ப.மி நறுக்கிச் சேர்த்து உப்புப் போட்டு வைத்து விடவேண்டும். மறுநாள் அதில் முந்தைய நாள் சாதம் மிஞ்சி இருந்தால் கூழில் போட்டுக் கலந்து மோரை விட்டுக் குடித்தால்! ஆஹா! ஓஹோ! சொர்க்கம்!

   நீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
  குப்பை செய்திகள் ஸ்வாரஸ்யமானவை. பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட தன் சொந்த நிலத்தை தானமாக தந்த நடிகை காஞ்சனாவின் நல்ல மனதுக்கு பாராட்டுக்கள். அவர் பற்றிய செய்திகளையும் தெரிந்து கொண்டேன்.

  பழைய சோறு காணொளி பார்க்க முடியவில்லை. நான் தினமும் தண்ணீர் விட்ட பழைய சாதந்தான் மோருக்கு போட்டுக் கொள்வேன். என்னுடன் என் குழந்தைகளும் போட்டு சாப்பிடுவார்கள். மீந்தாமல் சாதம் வடிக்கத் தெரியவில்லை. எப்படியாவது மீந்து விடும். விரத நாட்களில், அதை தண்ணீர் மாற்றி மறுநாளாவது சாப்பிட்டு விடுவோம். வீணாக்குவதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்பெல்லாம், மறுநாள் காலையில் சாப்பிடுவதற்காகவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா அரிசி போட்டு சமைப்பேன்.

   நீக்கு
  2. //குப்பை செய்திகள் ஸ்வாரஸ்யமானவை// - இவர்..செய்திகளைக் குப்பை என்கிறாரா இல்லை வேறு அர்த்தமா? ஹா ஹா

   நீக்கு
 14. நடிகை காஞ்சனாவின் செயல் பிரமிக்க வைக்கிறது. 30 கோடியை வழங்குவதற்கு எவ்வளவு பெரிய மனது வேண்டும்.

  இவர் எங்கே ? கல்யாண மண்டபத்தில் வருமானம் இல்லை வரியை ரத்து செய்ய மனு போட்ட கூத்தாடி ரஜினி எங்கே ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இவர் எங்கே ? கல்யாண மண்டபத்தில் வருமானம் இல்லை வரியை ரத்து செய்ய மனு போட்ட கூத்தாடி ரஜினி எங்கே ?// எல்லோருமே இங்கே தான் !!

   நீக்கு
  2. கில்லர்ஜி.... ரஜினி மட்டும் தன் சொந்தப் பணத்தை தானம் செய்யணும், ஆனால் அரசியல்வாதிகள்லாம் டிரஸ்ட் வைத்து தலைமுறை தலைமுறையா கொள்ளையடித்துச் சேர்த்துவைத்தால் அது ஓகே, அதே கூத்தாடிகளை வைத்துப் படமெடுத்து ஒவ்வொரு படத்துக்கும் நூறு கோடி சம்பாதித்துப் பதுக்கினால் அதைப்பற்றிக் கவலை இல்லை என்ற நிலைப்பாடு சரியா?

   ரோட்டில் அடைப்பைச் சரி செய்யும் தொழிலாளி கடுமையாக உழைத்தால் ஒரு நாளில் 300-400 ரூ சம்பளம், சினிமாவில் ஒரு நாளைக்கு நடிக்கும் கொஞ்சம் புகழ் பெற்றவருக்கு 10,000 சம்பளம், ஏசி ரூமில் உட்கார்ந்து கணிணி தட்டுபவருக்கு 5,000 சம்பளம் என தொழிலைப் பொறுத்து சம்பள வேறுபாடு வேலை செய்பவரின் குற்றமா இல்லை அந்த நிலையை அடையமுடியாதவருடைய குற்றமா?

   நீக்கு
  3. எங்கும் குற்றம்.. எல்லாம் குற்றம் !

   நீக்கு

 15. படத்தில் இருவரும் சாப்பிடும் ஹோட்டல் மவுண்ட் ரோடில் உள்ள தாராபூர் டவரில் இருக்குக் ரெஸ்டரண்ட் மதுராதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாராபூர் டவர் - மதுரா ரெஸ்டாரெண்ட் ? சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு அங்கே போயிருக்கிறேன். இப்போ அந்த இடம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

   நீக்கு
 16. இப்பொழுதெல்லாம் செய்தித் தாள்களே படிப்பதில்லை. இது போன்ற பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. இன்றைய செய்தித் தொகுப்பு அருமை..

  வெறும் வாய் வேட்டு வீணர்களை விடவும்
  திரைத்தாரகை காஞ்சனா எவ்வளவோ மேல்!..

  பதிலளிநீக்கு
 18. அனைத்து செய்திகளும் உற்சாகம் தருபவை. தேங்காய் நாரும்
  இத்தனை உபயோகம் கொண்டதாக மாறுகிறது என்பது புதிய செய்தி. கேரளாக் காட்சிகளில் தான் சணல் திரிப்பதை மட்டும் பார்த்திருக்கிறேன்.
  ராயபுரம் சேவைக்கு மிக நன்றி.
  அதில் வேலை செய்பவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.

  பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கும் சப்ரீனா இறைவனைன் கருணை
  நிறைந்தவர்.

  மெற்றோவில் விரைந்து இதயம் காத்தவகளுக்கும் ,கொடுத்த
  உறவினர்களுக்கும்
  மனம் நிறை வாழ்த்துகள்.
  என்றுமே நம் நாடு சிறந்தது, இன்னும் மேன்மை பெற வேண்டும்.

  பழைய சோறு சாப்பிடும் வரை நானும் நலமுடன் தான் இருந்தேன்.
  மேற்கொண்டு எப்படி இதை நாம் செயல்படுத்தலாம்
  என்று பார்க்க வேண்டும்.

  மிக மிக நல்ல செய்திகளில் நடிகை காஞ்சனாவின் கொடை..
  நலம் பெறட்டும். சீக்கிரம் தாயாருக்குக் கோவில்
  வந்து நாமும் தரிசனம் செய்யலாம்..


  குளிர் ஆட்டம் போடட்டும். நமக்கெல்லாம் வீடு,ஹீட்டர் வசதி எல்லாம்
  கொடுத்த இறைவனுக்கு நன்றி.
  இந்த ஹீட்டர் உஷ்ணத்தால் உடல் சூடேறி
  இருமல், உடலெங்கும் பொரியாகக் கிளம்பும்
  கொப்பளங்கள்!!!
  எல்லாம் அனுபவங்கள் தான்.
  மிக மிக நன்றி ஜி.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுரைகளுக்கு நன்றி.
   ஹீட்டர் சமாச்சாரம் கவலை அளிக்கிறது. ஹீட்டர் உஷ்ண நிலையைக் குறைத்து, ஹீட்டர் உள்ள இடத்திலிருந்து அதிக தூரத்தில் படுத்து உறங்கினால் உடல் உபாதைகளை சமாளிக்க இயலுமா?

   நீக்கு
 19. அன்பு கௌதமன் ஜி.
  முன்பெல்லாம் இந்தத் தொந்தரவு இல்லை.
  இதையும் விடக் குளிர் எல்லாம் அனுபவித்திருக்கிறோம்.
  இங்கே எல்லாமே செண்டிரலைஸ்ட்.
  ஒரே மாதிரி, மாடி அறைகள், கீழ்த்தளம், பேஸ்மெண்ட் என்று பரவும்.

  என் அறைக்கு வரும் ஹீட் வெண்ட் vent இனி மூடி வைக்கப்
  போகிறேன்.
  கூடுதலுக்கு Humidifier போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

  இந்த அன்புக்கு மிக நன்றி மா. கடக்கலாம்.

  பதிலளிநீக்கு
 20. அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.

  //இதயம், 'மெட்ரோ' ரயில் வாயிலாக விரைவாக எடுத்துச் செல்லப்பட்டு, மற்றொரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.//

  நல்ல செயல் . உணவு அளிக்கும் இளம்பெண், கோவிலுக்கு நன்கொடை அளித்த காஞ்னா எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
  பழையசோற்றில் நிறைய சக்தி இருப்பது நம் முன்னோர்கள் சொல்லியது இப்போது பலராலும் ஏற்றுக் கொள்ளபடுவது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பழையசோற்றில் நிறைய சக்தி இருப்பது நம் முன்னோர்கள் சொல்லியது இப்போது பலராலும் ஏற்றுக் கொள்ளபடுவது மகிழ்ச்சி.// ஆம்.

   நீக்கு
 21. காஞ்சனாவின் மனசு புரிய ஆரம்பிக்கிறது.
  காஞ்சனா ஒரு அபூர்வம், விசித்திரம்.
  மற்றதுகள்... வெறும் சித்திரங்கள்.

  பதிலளிநீக்கு
 22. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!