புதன், 10 பிப்ரவரி, 2021

பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா? பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா?

 


வல்லிசிம்ஹன் : 

1, கவலை, Anxiety, Depression வித்தியாசம் என்ன?

$ கவலை: ஒரு வேலை நல்லபடியாக நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு
நடக்குமோ நடக்காதோ என்கிற கிலேசம் anxiety
அரிக்கும் கவலைகளால் உண்டாகும் அழுத்தத்தின் result depression 

 # நல்லதானால் சரியாக நடக்க வேண்டுமே என்றும், தீது நடக்காமல் இருக்க வேண்டுமே என மனப் போராட்டத்தோடு இருப்பது கவலை. 

சரியாகப் போய்க்கொண்டிருப்பினும் 'கடைசி வரை' நீடிக்க வேண்டுமே என பரபரப்படைவது anxiety. 

காரணமாகவோ இன்றியோ எல்லாம் வெறுத்துக் கசந்து,  வாழ்க்கையை சோகமயமாக்கிக் கொண்டு ஜடமாகி விடுவது மன அழுத்தம். 

& worry என்பதை கவலை என்று மொழிபெயர்த்தால், anxiety என்பதை இனம்புரியாத கவலை என்று கூறலாம். 

கவலை - நம் எதிர்மறை எண்ணங்களால் விளைவது. நேர்மறை எண்ணங்களால் சரி செய்துவிட இயலும். 

இனம்புரியாத கவலை நம் உள்ளுணர்வால் ஏற்படுவது. எண்ணங்களால் ஏற்படும் கவலைகளை மாற்ற அல்லது மறக்க பல வழிகள் உள்ளன. ஆனால், இனம் புரியாத கவலைகள் பல  தொடர்ந்து மனதை மாதக் கணக்கில் அரித்துக் கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன நல மருத்துவ உதவி கொண்டுதான் மன அழுத்தத்தைப் போக்க இயலும். 

2, எல்லாமே டி என் ஏ யோடு வருவதா?

$ DNA தான் காரணமாகக் காட்டப் படுகிறது.

# டி என் ஏ யில் வந்ததல்ல. தெளிவான சிந்தனை இல்லாமைதான் காரணம். 

3, கவலைப் படுவதால் பிரச்சினைகள் தீருவதில்லை. இருந்தும் அந்த உணர்ச்சியைப் போக்க முடிவதில்லை ஏன்?

$ நாம் தனியனாகி விட்டோம் அல்லது விடப்பட்டோம் என்கிற எண்ணம் இருந்தாலே மற்றெல்லாம் தொடர்ந்து வரும்.
தனியாகப் போராடும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நண்பர்களும் சகோதர சகோதரிகளும் அவரவர் வழியில் உபதேசங்களை உதவிகளும் செய்வர் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். 

# கவலைப்படுதல் தீர்வு அல்ல என்பதை அறிவோமே தவிர உணர்வதில்லை.

4, தொடர்ந்து ரோலர் கோஸ்டர் போல இந்த உணர்ச்சிகளில் மனம் செல்லும்போது பாதிக்கப் படும் உடல் உறுப்புகள் எவை?

$ கோபம் கவலை இவற்றால் அட்ரீனலின் டோபமின் இவை பாதிக்கப் பட்டு ஜீரண உறுப்புகள்,இதயம், மூளை முதலான பல உறுப்புகள் பாதிக்கப் படலாம்.

 # உள் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

கீதா சாம்பசிவம் : 

1. "கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!" என்பார்கள். இரண்டையும் செய்பவர்கள் பலர் இருக்காங்க! ஆனாலும் இது ஒரு கஷ்டமான வேலை என்பது போல் சொல்வதன் காரணம் என்ன?

$ கல்யாணம் பண்ணுவதானாலும் வீட்டைக்கட்டுவதாநாலும் பல விதமான கருத்துகளும் ஆலோசனைகளும் இலவசமாக வருவதால் நீங்கள் குழம்பும் அபாயம் இருக்கிறது என்கிற எச்சரிக்கை.

# இரண்டுமே மத்திய தர மக்களுக்குச் சவாலான விஷயமாக இருந்தன - இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்.

& மீனாட்சி அம்மாள் என்னும் பிரபல சமையல் கலை வல்லுநர் - 'சமைத்துப் பார் ' என்று புத்தகம் எழுதியுள்ளார். அப்போ கல்யாணம் கட்டுவது, வீடு கட்டுவது, சமைப்பது எல்லாமே கஷ்டமான வேலைகள்தானோ? 

2. வீடு கட்டும்போது உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஏதானும் உண்டா?

$ நிறைய. சொல்ல இடம் போதாது.

# என் வீடு 376 சதுர அடி. மனை 912 ச.அ. கட்டி முடித்த நிலையில் ஒதுக்கீடு கிடைத்தது. விலை மொத்தமாக 29900 தான். அச்சுப்பிழை அல்ல. வீடு கிடைத்ததே மறக்க முடியாத அனுபவம்தான். 

& வீடு கட்டும்போதுதான் முதல் முறையாக வாழ்க்கையில் பெரிய தொகை கடன் வாங்கினேன். அதற்காக அலைந்த அலைச்சல்கள், வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட பட்ட பாடுகள் எல்லாமே மறக்க முடியாத அனுபவங்கள்தான். 

3. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா? பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவது எளிதா?

$ உங்கள் பிள்ளை,பெண் - இவர்களையும், உங்களையும் பொருத்தது.

# முன்பு பிள்ளைக்கு எளிதாக இருந்தது. இப்போது பெண்களுக்கு எளிதாக இருக்கிறது. 

& இப்போது எனக்குத் தெரிந்து, பிள்ளைக்குக் கல்யாணம் செய்ய பெண் தேடுபவர்கள்தான் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

4. நாம் பெற்ற குழந்தைகளுக்கு நாம் கொடுக்காத சலுகைகளைப் பேரக்குழந்தைகளுக்குக் கொடுப்பதன் உளவியல் காரணம் என்ன?

# வயது அனுபவம் காரணமாக பல குழந்தைக் குறைபாடுகளை அதிக முக்கியத்துவம் இல்லாதனவாகக் காண்கிற பக்குவம் வந்ததன் காரணமாக இருக்கலாம்.

& நாம் பெற்ற குழந்தைகளை வளர்க்கும்போது அவர்களுடைய முன்னேற்றத்திற்கு, எதிர் கால வாழ்க்கைக்கு நம் வளர்ப்பு மட்டுமே முக்கியமான அம்சமாக இருந்தது. ஆனால் பேரக்குழந்தைகளை வளர்ப்பதற்கு அவர்களின் பெற்றோரின் பங்கு அதிகம் என்பதால், நாம் சும்மா சலுகைகளை அள்ளி வீசுகிறோம். பேரக்குழந்தைகளை சரியாக வளர்க்கப் போகிறவர்கள், நாம் நாம் நான்கு வளர்த்த நம் குழந்தைகள்தானே என்ற தைரியம்! 

5. உறவுமுறைகளின் பெயர்கள் மறைந்து வருவது நல்லதா? உதாரணம்: "மன்னி" இப்போல்லாம் ஒரு பெண்/ஒரு பையர் என இருப்பதால் "மன்னி" என்பதே காண முடியவில்லை. அதே போல் சித்தி, பெரியம்மா, பெரியப்பா, அக்கா, தங்கை என்பதும் நாளடைவில் மறைந்து ஒழிந்து விடுமோ?

$ கல்யாணம் செய்து வாழ்தல் என்பதே கேள்விக்குறியாகி பாலச்சந்தர் பட விடுகதையாகும் போது கட்டாயம் உறவு முறைகள் மறைந்து செல்வன் செல்வி மட்டுமே மிஞ்சலாம். 

# உறவுமுறைகளே அருகி விட்டதால் அவற்றைக் குறிக்கும் சொற்களுக்குத் தேவையில்லாமல் போய் விடுகிறதே.  
இருவர்க்கு ஒருவர் என்பதே இயல்பாகி விடும் போல இருப்பதால் உறவுமுறைகள் பல காணாமல் போகும் அபாயம் இருப்பது உண்மை.


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒருதலை பட்சமாக பேசாமல் நடு நிலையில் நின்று ஒரு விஷயத்தை ஆராய்வது உயரந்த குணம் இல்லையா? ஆனால் இப்போதோ அவர்களை நடுநிலை நக்கிகள் என்கிறார்களே?

$ உயர்ந்த குணத்தைப் பாராட்டும் மனமிருந்தால் அவர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள். 

# நடுநிலையில் உண்மையாக இருப்பவருக்கு இது போன்ற ஒரு பக்கம் சார்ந்தவரது கருத்துக்கள் ஒரு பொருட்டாக இரா.

& நடுநிலை என்ற பெயரில் ஒரு சாராரை மட்டும் மட்டம் தட்டி, ஆனால் தவறு செய்யும் இன்னொரு சாராரை எதுவும் சொல்லாமல் விடுகின்ற ஒரு சிலரைதான் பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் NNN  என்று குறிப்பிடுகிறார்கள். உண்மையான நடுநிலையாளர்களை அப்படி சொல்வதில்லை. 

புத்தக கண்காட்சிகளில் எப்போதும் சிறுவர்களுக்கான புத்தகங்கள், சமையல் புத்தகங்கள், சுய முன்னேற்ற நூல்கள் இவையே அதிகம் விற்பனையாவது எதைக் குறிக்கிறது?

$ சிறார்கள்,சமையல்,சுயம் எல்லாவற்றுக்கும் முன்னேற்றம் தேவை என்பதை.

# மக்கள் விருப்பம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

தாரை தப்பட்டை ஓங்கி ஒலிக்கும் இசையமைப்பதில் போட்டி வைத்தால், அதில் இளையராஜா, இமான், அனிருத் இவர்களில் யார் வெல்வார்கள்?

$ தம்பட்டத்துக்கே வந்த சந்தேகம்/சோதனை?

 # Out of syllabus.
= = = = 
சென்ற வாரம் கேட்டிருந்த டெட்டி கரடி படத்திற்கு இதுவரை வந்துள்ள    படங்கள் 

முதல் படம் அனுப்பியவர் - திருமதி கோமதி அரசு. 
படம் வரைந்தவர் : அவருடைய பேரன் (பெயர் : Kavin Kasi Arunachalam) 
முப்பது நிமிடங்களில் சென்ற புதன் கிழமையே சுடச்சுட வரைந்து கொடுத்து, அன்றே எங்களுக்கு வந்து சேர்ந்தது இந்தப் படம். 


படத்தை வரைந்தவர் : 

கீழே இருப்பது, அவருடைய டெட்டி கரடி பொம்மை. : 


இரண்டாவது படம் :

வரைந்தவர் : ஸ்ரீநிதி பாலா  (என் சகோதரரின் பேத்தி. ) 


வரைந்தவர் இவர்தான் : 


மூன்றாவது படம் : 

திருமதி கமலா ஹரிஹரன் அனுப்பிய படமும், விவரமும் :

இத்துடன் என் பேத்தி, " நானும் உன்னுடன் படம் வரைவேன்" என்றதினால், நான் ஸ்கெட்ச் போட்டு தந்ததில் அவள் ஆர்வத்துடன் வர்ணம் தீட்டியிருக்கிறாள். அதை அனுப்பி வைத்திருக்கிறேன். வரும் புதனன்று அவள் வரைந்த ஓவியத்தை எ. பியில் அவளுக்கு  காட்டும் போது நானும் சந்தோஷமடைவேன். தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

நன்றியுடன் 
கமலா ஹரிஹரன். 

===== 

இந்தப் பதிவு வெளியாவதற்கு ஆறரை மணி நேரங்களுக்கு முன்பு, ஒருவர், டெட்டி கரடியை, லாரல் - ஹார்டி வடிவத்தில் கற்பனை செய்து வரைந்து அனுப்பியுள்ளார். அவர் யார் என்று கண்டுபிடிங்க ! 

லாரல் டெட்டி : ஹார்டி டெட்டி := = = = 
அடுத்த வாரம், Flying Machine செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கப் போகிறேன். தயாராக இருங்கள். 

= = = = 

103 கருத்துகள்:

 1. இடுக்கிலே யாரானும் நுழைஞ்சிருப்பாங்களோ? முக்கியமா நெல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை 5:25வரை இணையத்தில் பதினைந்து நிமிடங்கள் இருந்தேன். பிறகு ஜிம், யோகா... சில நாட்கள் 7மணி யோகாவிற்கு அப்புறம் ஜிம் சென்றால் இங்க வர முடியும்.

   நீக்கு
 2. சரி, சரி, இன்னும் யாரும் வரலை போல! அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சௌகர்யமா உங்க பையர் குடும்பம் புது இடத்தில் செட்டிலாகணும்னு ப்ரார்த்திக்கிறேன். அங்க வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வது சுலபம், கற்றுத் தந்தால் நம் சமையலைச் செய்வார்கள் என்று என் நண்பர் முன்பு சொல்லியிருக்கிறார் (அம்பேரிக்காவில் இந்த சௌகர்யம் கட்டுப்படியாகாது)

   நீக்கு
 3. இந்த வாரக் கேள்வி/பதில் "பெண்கள் தினம்" ஆகிவிட்டது போல! எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் இந்த வாரம் கூடியவரை மூவரும் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. * ஶ்ரீராம் பதில் தரலை. காசு சோபனா இந்தப் பட்டியலிலேயே இல்லை போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கேள்வி/பதில் "பெண்கள் தினம்" ஆகிவிட்டது// - அப்படி இருந்தாலும், சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் புத்திசாலித்தனம் ஆண்களிடம் (மட்டும்தான்) உண்டு என்று ஒத்துக்கொள்வது போல ஆகிவிடுகிறதே கீசா மேடம்...

   நீக்கு
  2. கேள்வி மேல் கேள்வி கேட்டுத்திணற அடிக்க மாட்டோமா!

   நீக்கு
  3. //சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் புத்திசாலித்தனம் ஆண்களிடம் (மட்டும்தான்) உண்டு// ஐயே!ரொம்பதான்... ஆண்களின் அறிவை சோதிக்க கேட்கப்படும் கேள்விகள் அவை.

   நீக்கு
 4. குழந்தைகள் இருவருமே நன்றாய் வரைந்திருக்கின்றனர். கமலாவின் பேத்தியின் வண்ணக்கலவையும் அருமை. லாரல், ஹார்டியை வரைந்தவர் திரு கௌதமன் அவர்கள் தானோ? யோசிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட! நான் சொல்வது சரி போல இருக்கு! கவின் அவங்க தாத்தாவைப் போலவே திருத்தமாக வரைகிறான். குழந்தை ஶ்ரீநிதியும் நன்றாக முயற்சி எடுத்திருக்கிறாள். பழகப் பழகக் கை திருந்தும். கமலாவின் பேத்தியும் சொல்லிக் கொடுத்தால் விரைவில் தானே வரைய ஆரம்பிப்பாள்.

   நீக்கு
  2. அ.வ.சி.அ.வ.சி.அ.வ.சி. எல்லோரும் பானுமதினு சொன்னப்புறமா இப்போத்தான் வலது மூலையில் உள்ள கையெழுத்தைக் கவனித்தேன். காலம்பரத் தெரியலை! கண் கோளாறுனு சமாளிக்க விருப்பம் இல்லை. நான் சரியாக் கவனிக்கவில்லை! :(

   நீக்கு
 5. அடுத்த வாரம் வகுப்பு எடுக்கப் போறீங்களா? லீவ் எடுத்துடலாம்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேப்பரில் ஐந்து நிமிடங்களில் செய்ய முடிந்த working model. It really works. Wait and see.

   நீக்கு
 6. ஶ்ரீராம் வேலை மும்முரமோ? கொஞ்ச நாட்களாகக் காண முடிவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாமா இல்லையா? சரியாச் சொல்லுங்கள்

   நீக்கு
  2. ம்ம்ம்ம்ம், சிலருக்கு எப்போவும் வேலைத் தொந்திரவு தான்! அது போல் எங்களுக்கும் இப்படித்தான் இந்தக் கொரோனா ஆரம்பத்தில் இருந்து கடுமையான வேலைகள்! இல்லைனா யாரானும் வருவாங்க! ஒருத்தரும் இல்லைனா கணினி மருத்துவர் இல்லைனா கேபிள்காரர் இல்லைனா இணைய இணைப்புக் கொடுப்பவர், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர்னு யாரானும் வந்துடுவாங்க. அவங்களையும் கவனிச்சுச் சமையல் மற்ற வேலைகளையும் கவனிச்சு நம்மவர் உம்மாச்சிக்குப் பூ வைச்சுட்டு (ஒரு மணி நேரம் ஆயிடும்.) சாப்பிடும்போது இப்போல்லாம் பனிரண்டரை/ஒரு மணினு ஆயிடுது. எல்லாம் இந்தக் கொரோனாவால் தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. அதிலும் காய்கள் வாங்கி வந்தால் அன்னிக்கு ரொம்பவே நேரம் பிடிக்கும். முதலில் காய்களைத் தனித்தனியாய்ப் பிரிச்சு எடுத்து வடிகட்டியில் போட்டு நன்கு கழுவி மறுபடி பெரிய வடிகட்டியில் வடிகட்டி அவை ஈரம் போனதும் தனித்தனியாய் எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும். அதிக நேரம் எடுக்கும் வேலை!

   நீக்கு
 7. இனிய காலை வணக்கம். இறைவன் என்றும் நம்மைக் காக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. 1.கல்யாண மண்டபங்களின் அருகில் குடி இருந்த அனுபவம் உண்டா?

  2.கல்யாணங்களில் செண்டை மேளத்தை வரவேற்கிறீர்களா?ஆதரிக்கிறீர்களா?

  3.பாரம்பரியம் முற்றிலும் ஒழிந்து/மறைந்து வருவது நன்மை பயக்கும் விஷயமா?

  4.திருமணங்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும், ஆடல், பாடல்களும் தேவையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1. இப்போல்லாம் டாஸ்மாக் கடை இல்லாத இடமேது... இஃக்கி இஃக்கி

   நீக்கு
  2. டாஸ்மாக் இங்கே எங்கே வந்தது? ஆனால் திருமணங்களில் பாச்சிலர் பார்ட்டி எனக் கொடுப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அது உண்மையா? அதிலே பெரும்பாலும் இம்மாதிரி மது அருந்தி ஆடிப்பாடும் பழக்கம் உண்டென்றும் சொல்வது உண்மையா?

   நீக்கு
  3. //திருமணங்களில் பாச்சிலர் பார்ட்டி எனக் கொடுப்பார்கள் எனக் கேள்விப் பட்டிருக்கேன். அது உண்மையா?// உண்மைதான். அதை stag party என்பார்கள். திருமணத்திற்கு முதல் நாள் இந்த பார்டியை வைத்துக் கொண்ட மணமகன் மாஸ்டர் விஜயைப்போல மட்டையான கூத்துகள் உண்டு.

   நீக்கு
 9. என்னுடைய கேள்விகளுக்கு மிக அழகான
  அருமையான பதில்கள் கிடைத்திருக்கிறது.
  என் தந்தை ...He was a worrier. But he had good reasons
  to be so.
  மன நல மருத்துவரா:) ஓகே. Psychologist is ok. Not Psychiatrist:))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன சம்பந்தப்பட்ட எந்த மருத்துவராக இருந்தாலும் சரி.

   நீக்கு
  2. சரி. மருந்து கொடுக்காமல் பேசிச் சரி செய்து,
   பிரார்த்தனைகள் ,தியானம் வழியும்
   எபியின் சனிக்கிழமை செய்திகளும்
   தொடர்ந்து எதிர் கொள்ளும் நல்ல நிகழ்ச்சிகளும்
   ஆரோக்கியம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

   நீக்கு
  3. ஆம், நிச்சயம் இவை பலன் கொடுக்கும்.

   நீக்கு
 10. worry என்பதை கவலை என்று மொழிபெயர்த்தால், anxiety என்பதை இனம்புரியாத கவலை என்று கூறலாம்////////. சரியான பதில். மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 11. சரியாகப் போய்க்கொண்டிருப்பினும் 'கடைசி வரை' நீடிக்க வேண்டுமே என பரபரப்படைவது anxiety. ///////////////////100% கரெக்ட். அனைத்துப் பதில்களையும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
  மனம் நிறை நன்றி.

  பதிலளிநீக்கு
 12. அன்பு கீதாவின் கேள்விகளும் உங்கள் பதில்களும்
  மிக சுவாரஸ்யம். மன்னி என்று சொல்லாமல்
  மதினி என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.
  செட்டினாட்டு உறவு முறைகளைச் சொல்லி
  அழைப்பதையும் காரைக்குடியில் கண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னையில் எங்கள் வீட்டிற்கு எதிர்வீட்டுக்காரர்கள்,திருநெல்வேலி சைவப்பிள்ளை. அவர்கள் வீட்டில் கூட மதனி என்றுதான் அழைப்பார்கள்.

   நீக்கு
  2. மதினி, சித்தியா, அண்ணா (அப்பா என்பதைக் குறிப்பிட), முத்தா (அண்ணன் என்பதைக் குறிப்பிட.. இது மூத்தவன் என்பதிலிருந்து வந்திருக்கணும்) போன்றவை நாங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள்.

   நீக்கு
  3. அண்ணன் மனைவியைச் செட்டிநாட்டில் "அண்ணன்முண்டி" அல்லது "அண்ணன்மண்டி" என்று சொல்வார்கள். அம்பத்தூரில் இருந்தப்போப் பார்த்திருக்கேன்.

   நீக்கு
 13. பேரக்குழந்தைகள் வரைந்த படங்கள் மிக அழகு.
  கோமதி அரசு பேரன் படம் ,
  கமலா ஹரிஹரன் அவர்களின் பேத்தி வரைந்தது,
  குழந்தை ஸ்ரீநிதி பாலா வரைந்த படம்

  பானு வெங்கடேஸ்வரனின் லாரல் ஹார்டி டெட்டி
  எல்லாமே மிக அருமை. குழந்தைகள் படமும் இனிமை.
  எத்தனை இனிமையான குழந்தைகள்.
  மனமே மகிழ்கிறது.
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பானு வெங்கடேஸ்வரனின் லாரல் ஹார்டி டெட்டி
   எல்லாமே மிக அருமை.// ஹாஹா! நன்னி நன்னி!

   நீக்கு
 14. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களின் கேள்விகளுக்கு எ.பி ஆசிரியர்கள் அனைவரும் கூறிய பதில்கள் உண்மையானவை. அதீத கவலைக்கு ஒரே மருந்து மனமாற்றந்தான். அதுவும் நாமே நம் மனதை நல்ல சிந்தனைகள் செய்து மாற்றிக் கொள்வது. அன்பான ஆறுதலும், தேறுதலும் பக்கபலமாக நின்று துணை புரியும்.

  சகோதரிகள் கீதா சாம்பசிவம், பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் கேள்விகளும், அதற்கு தகுந்த பதில்களும் ரசிக்கும்படி இருந்தது.

  குழந்தைகள் அனைவரும் வரைந்த கரடி படங்கள் நன்றாக உள்ளது. கோமதி அரசு அவர்களின் பேரன் சின்ன வயதிலிருந்தே இந்த மாதிரி கலையுணர்வுகள் அதிகம் நிரம்பியவராக இருப்பதை சகோதரியின் பதிவுகளில் கண்டிருக்கிறேன். அழகாக படங்களை வரைந்தனுப்பிய குழந்தைகள் கவின், தங்கள் பேத்தி ஸ்ரீ நிதி பாலாவுக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

  எங்கள் பேத்தி வரைந்ததை வெளியிட்டு மகிழ்வித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மற்றும் பேத்தியை குறிப்பிட்டு கூறி வாழ்த்துரைத்த சகோதரிகள் கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப் பார் - இதற்கான பதில்கள் சரியில்லை.

  இந்த இரண்டு டாஸ்க்கிலேயும், நிறைய, எதிர்பாராத செலவுகளும் கஷ்டங்களும் வரும். மன வருத்தங்கள் வரும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால் எதையும் காண்பித்துக்கொள்ள முடியாது. ஒரு வழியா நல்லா முடிஞ்சதுடா சாமி என்று நினைக்கும்படி இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Leaving behind the obvious point, editors have given some different views.

   நீக்கு
  2. எங்க வீடு கட்டும்போது ஒரு மாதிரிப் பிரச்னைன்னா, எங்க பொண்ணு கல்யாணத்தின்போது வேறே மாதிரிப் பிரச்னை. கல்யாணமே நடக்குமா, நடக்காதா என்று ஆகிவிட்டது. பிள்ளை கல்யாணத்தில் அந்த வருஷம் எக்கச்சக்க மழை, வெள்ளை, புயல். எல்லா ஊர்களிலிருந்தும் உறவினர்கள் பிள்ளை அம்பேரிக்காவில் இருந்து வர முடிஞ்சதா? கல்யாணம் உண்டா என்றே கேட்டார்கள். நாங்க பிள்ளை வந்தாச்சு, யார் வந்தாலும் வராட்டியும் பெண் வீட்டினரும் நாங்களும் மட்டுமாவது போய்க் கல்யாணத்தை நடத்திவிடுவோம் என்று பதில் சொன்னோம். கடைசியில் நல்ல கூட்டம் கல்யாணத்தில், அதன் பின்னர் கல்யாணத்தன்று மாலை ரிசப்ஷனிலும்!

   நீக்கு
 17. நடுநிலையில் ஒரு விஷயத்தை ஆராய லட்சத்தில் ஒருவரால்தான் முடியும். இது விமர்சனம் செய்வதில்.

  இன்னொன்று, நான் நடுநிலை வகிக்கிறேன் என்று ஒருஒர் சொன்னால், அவர் பாவம் செய்யத் துணிந்துவிட்டார் என்று பொருள். நடுநிலையில் விமர்சனம் செய்துவிட முடியும், ஆனால் நடுநிலை வகிக்க முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடுநிலையில் நின்று யோசித்தால் - நீங்கள் சொல்வது சரி என்று தோன்றுகிறது.

   நீக்கு
  2. //இன்னொன்று, நான் நடுநிலை வகிக்கிறேன் என்று ஒருஒர் சொன்னால், அவர் பாவம் செய்யத் துணிந்துவிட்டார் என்று பொருள்.// Very strong words! இதற்கு நடுநிலை நக்கியே பரவாயில்லை.

   நீக்கு
  3. @பா.வெ. - நியாயம் எப்போதும் ஒரு பக்கம்தான் இருக்கும் (தர்மம்). அந்த மாதிரி இடத்தில் நடுநிலை வகிப்பது என்பது, தவறுக்குத் துணை போவது போல. அதனால் நடுநிலை எதிலுமே நாம் வகிக்க முடியாது. தனக்குச் சம்பந்தம் இல்லை என்று கண்டுகொள்ளாமல் போவதும் அதுபோலத்தான் என்று நான் நினைக்கிறேன், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

   ஆனால் நடுநிலையில் யோசிப்பது என்பது விருப்பு வெறுப்பில்லாமல் இருவரின் நிலையையும் அலசுவது.

   நீக்கு
 18. உறவு முறையின் பெயர்கள் மறைவது - கீசா மேடம் சொல்லும் காரணம் வேறு, நான் பார்க்கும் காரணம் வேறு. ஒரு வீட்டின் மாப்பிள்ளையை, அந்த வீட்டு மற்றும் அவர்களின் கஸின்கள் போன்றவரும் மாப்பிள்ளை என்றுதான் முன்னம் கூப்பிடுவார்கள். அதுபோல உறவுமுறையில்அத்தான், அத்தங்கா, மச்சின்ன், அத்திம்பேர், அத்தை, மாமி என்றெல்லாம் கூப்பிடுவதே மறைந்துவருகிறது. உறவு முறை சொல்லாமல் aunty, uncle என்று சொல்வதில் என்ன பெருமை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mummy & Daddy கள்தான் பதில் சொல்லவேண்டும்!

   நீக்கு
  2. நெல்லை, குழந்தைப் பிறப்புக் குறைந்ததே உறவு முறை மறைந்ததன் காரணமாக நான் சொல்கிறேன். இங்கே நீங்க சொல்லுவதும் அப்படித்தானே. பையருக்கு அக்காவோ, தங்கையோ இருந்தால் தான் அத்தை உறவும் தொடர்ந்த அத்தான்/அத்தங்கா உறவும். மச்சினனை இப்போதெல்லாம் மச்சான் என்கின்றனர், அத்திம்பேர் அத்தை வீட்டுக்காரரும் அத்திம்பேர், அக்கா வீட்டுக்காரரும் அத்திம்பேர்! ஆனால் பலரும் சொல்லுவதில்லை. பெண் குழந்தைகளுக்குக் கூடப் பிறந்த தம்பியோ அண்ணனோ இருந்தால் தான் "மாமா!" ஒரே குழந்தை எனில் எந்த உறவு இருக்கும்?

   நீக்கு
 19. பெற்ற குழந்தைக்குக் கொடுக்காத சலுகை - முன்னதில் நமக்கு பொறுப்பு அதிகம், நாமும் அனுபவக் குறைவுடன் இருப்போம். பின்னதில் நமக்கு அது ஒரு விளையாட்டு பொம்மை, நமக்கு அதிக அனுபவம் வந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. அனைத்துப் படங்களும் அருமை.

  ஆனாலும் தமிழில் கரடி என்று எழுதிய காசி அருணாச்சலம் என்னைக் கவர்கிறான்.

  அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலம் அமையட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரனிடம் சொன்னேன் நீங்கள் சொன்னதை மகிழ்ந்தான்.
   நன்றி நெல்லை.

   நீக்கு
  2. மகன் பேர் காசி அருணாசலம் பேரன் பேர் கவின்

   நீக்கு
  3. ஓ... நான் ஸ்கூலுக்காக கவின் என்றும், பெயர் காசி என்றும் நினைத்தேன். தமிழ் கற்றுக்கொடுத்து, தமிழில் எழுதவேணும் என்று நினைக்கவைத்த பெற்றோரையும் பாராட்டுகிறேன்.

   நீக்கு
 21. ரசனையான பதில்கள்.
  இளம் ஓவியர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. அனைவருக்கும் காலை வணக்கம். மார்ச் எட்டாம் தேதி வர வேண்டிய பதிவு இப்போதே வந்து விட்டதா? Thinking too ahead!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மார்ச் எட்டாம் தேதி வரவேண்டிய பதிவா!! இதென்ன புதுசா கரடி விடறீங்க!

   நீக்கு
  2. மகளிர் சிறப்பிதழாக இருக்கே..!

   நீக்கு
  3. ஓஹோ - அதுவா - எங்கள் Blog எப்பவுமே பெண்கள் ஆதிக்கம் நிறைந்த வலைத் தளம் என்று விஷயம் அறிந்த ஒரு வாசகர் குமுறிக்கொண்டிருக்கிறார் !!

   நீக்கு
 23. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 24. //நண்பர்களும் சகோதர சகோதரிகளும் அவரவர் வழியில் உபதேசங்களை உதவிகளும் செய்வர் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். //

  நல்ல பதில் . அப்படித்தான் நம்பிக்கையை வளர்த்து கொளள் வேண்டும்.
  வல்லி அக்கா கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் அருமை.
  கீதா, பானு கேட்ட கேள்விகளுக்கும் பதில்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 25. கவின் ஓவியம் இங்கு இடம்பெற்றதில் கவினுக்கும் எங்களுக்கும் மகிழ்ச்சி. எங்கள் நன்றிகள். எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு.

  பதிலளிநீக்கு
 26. ஸ்ரீநிதி பாலா கரடி குடும்பத்தின் போட்டோ மிக அருமை. வாழ்த்துக்கள் ஸ்ரீநிதிக்கு.

  கமலாஹரிஹரன் வரைந்த கரடி ஓவியத்திற்கு பேத்தி வர்ணம் தீட்டியது அருமை. ஆர்வத்தை பாராட்ட வேண்டும், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. பானு வெங்கடேஸ்வரனின் லாரல் ஹார்டி டெட்டி ஓவியமும் நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. கரடி படங்கள் அனைத்தும் அருமை.

  கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 29. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 31. இன்றைய பதிவில் குழந்தைகளின் கை வண்ணம் அருமை.. அழகு..

  அன்பின் வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
 32. glad to see the kid's drawing!
  Nice explanation by Vallisimhan Mam. Worrying is root for anxiety and depression. We can do what we can. Others things will be taken care of god.I wish you all to be happy and thankful for this life! Reading , drawing , gardening or anyother hobby will surely deviate us from worries.
  They say marriage is an institution. Now a days it is really hard to get admission in this institution.Can get good engineer to built a house.We can learn cooking.But hard to find good bride and groom.

  பதிலளிநீக்கு
 33. பேரன் -பேத்தி மலரா? பெண்கள் ஸ்பெஷலா! நேற்றைய நாள்தான் என்ன? புரியவில்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!