வெளிவந்த ஆண்டு : 1977 44 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படம்!
கமல் ரஜினி இணைந்து நடித்த படங்களில் ஒன்று. ரஜினி ஸ்டைல் வில்லன்! பாலச்சந்தர் படம். அவர்கள் திரைப்படம்.
படம் வெற்றிபெறாவிடினும் சுஜாதாவுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது.
கமலஹாசன் இந்தப் படத்துக்காக வென்ட்ரிலாகிசம் பயின்றார். அதோடு ரகுராம் மாஸ்டரோடு இணைந்து நடனத்தையும் வடிவமைத்திருக்கிறார் என்கிறது விக்கி. தனக்கு காட்சிகள் இல்லாதபோது கமல் நடிப்பதைக் கூர்ந்து கவனித்துத் தன் நடிப்பை மேம்படுத்திக் கொள்வாராம் ரஜினி. இதையு விக்கிதான் சொல்கிறது! ஆனால் கமலை விட ரஜினி இந்தப் படத்தில் திறம்பட செய்திருப்பதாகத்தான் தோன்றும். அவருக்கு அமைந்த கேரக்டர் அப்படி.
பானு அக்கா இந்தப் படத்திலிருந்து "காற்றுக்கென்ன வேலி" பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டிருக்கிறார். பெண்குரலில், அதுவும் எஸ் ஜானகி குரலில் இதே படத்தில் என் முதல் தெரிவு "இப்படியோர் தாலாட்டு பாடவா" பாடலாக இருக்கும். எம் எஸ் விஸ்வநாதன் குழலிசையில் விளையாடி இருப்பார்.
கண்ணதாசன் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை.
பாலச்சந்தர் படங்கள் என்றாலே பாடல்கள் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.
சென்றவாரப் பாடல் பகிர்வில் ஜீவி ஸார் பாடல் வரிகளிலேயே கதையைப் பிழிந்து கொடுப்பதில் கண்ணதாசனைப் புகழ்ந்திருந்தார். இதோ ஒரு உதாரணம்.
முதலில் பானு அக்காவின் விருப்பமாக காற்றுக்கென்னவேலி பாடல்.. இந்தப் பாடல் பாலநந்தினி ராகத்தில் அமைக்கப்பட்ட பாடலாம். இந்த ராகத்தின் பெயரை இப்போதுதான் நான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன். பெண் தான் எப்படி சுதந்திரமாகத் துள்ளித்திரிய வேண்டும் என்று கற்பனை செய்து பாடும் பாடல். எல்லோருக்கும் இந்த கற்பனை, ஆசை இருக்கும். திருமணம்தான் போடுகிறது - பெரும்பாலும்.
காற்றுக்கென்ன வேலி...
கடலுக்கென்ன மூடி
கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று
நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்றுக்குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு
தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசி பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில் போனேன் குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்
அடுத்ததாக இப்படி ஓர் தாலாட்டுப் பாடவா பாடல்... குழந்தைக்கு தாலாட்டு பாடுவது போலவே பழைய காதலனுக்கு தன் நிலையைக் கூறும் பாடல். முதலில் உள்ள வரிகளைக் கேட்கவேண்டும் என்றால் மேலே இபப்டி ஓர் வரியில் உள்ள லிங்க் க்ளிக் செய்து அந்த இடத்தில பாடலைக் கேட்கவேண்டும்! கடைசி சரணத்துக்கு முன் வருகிறது குழல் ஒலி. மீண்டும் பாடலின் இறுதியில் வந்து சுகமாகத் தாலாட்டுகிறது.
கங்கையிலே நீர் பெருகி
வயல்கள் எல்லாம் விளைந்து
பொய்கையிலே தாமரைப்பூ பூத்ததம்மா
கைநிறைந்த பூக்கள் என மதிநிறைந்த விழிதிறந்து
கோகுலத்தில் ஒரு குழந்தை பிறந்ததம்மா
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கை பிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
கை பிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
எப்படியோ வேறு பட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
என் மடியில் நீ விழுந்தாய்
நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டினிலே தங்கி வந்தது
அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்
ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்
அது வரைதான் தன் கதையை என்னிடம் சொன்னாள்
நான் அதில் இருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்
கண்ணன் அவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது
இன்று வரை அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது
இப்போது என் தெரிவாக ஒரு பாடல். முந்தைய தெரிவும் என் தெரிவுதான்! இது எஸ் பி பி குரலில் வரும் அற்புதமான பாடல். இது என் வெள்ளி லிஸ்ட்டில் ஏற்கெனவே இருந்த பாடல். இன்று பானு அக்கா இந்தப் படப்பாடலை நேயர் விருப்பமாகக் கேட்டதும் இந்த இருபாடல்களையும், குறிப்பாக இந்தப் பாடலையும் சேர்த்தே பகிர்கிறேன். எம் எஸ் வி இந்தப் பாடலை பதினைந்து நிமிடங்களில் அமைத்தாராம். இந்தப் பாடல் தீரசங்கராபரணம் ராகத்தில் அமைந்த பாடலாம்.
கணவனிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் பெண். வந்த இடத்தில் அந்தத் அலுவலகத்தில் வேலைபார்க்கும் நல்லவன் ஒருவன் அவளை விரும்புகிறான். அவன் பார்த்து குடிவைக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பழைய காதலன்!
திடீரென இந்த அலுவலகத்துக்கு மேலதிகாரியாய் பழைய கணவனே வந்து விடுகிறான். என்ன சொல்ல அனுவின் நிலையை!
ஒரு சமயம்அவளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றதும் மூவரும் பரபரக்கிறார்கள். "கண்ணா என்றால் முருகன் வந்தான்... முருகா என்றால் கண்ணன் வந்தான்... எந்த தெய்வம் சொந்தம் என்று பூவை பூஜை செய்வாள்." இந்நிலையை கண்ணதாசன் இப்படி விளக்குகிறார்.
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு எந்த நாள் உந்தன் நாளோ
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கதை எழுதி பழகி விட்டாள் முடிக்க மட்டும் தெரியவில்லை
அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று பூவை பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா
அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா... வாங்க.. இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மன அமைதியும் மன நிம்மதியும் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குபடம் பெயரையே குறிப்பிடவில்லை. ஆனால் "அவர்கள்" படமாக இருக்கலாமோ? மலையாளத்து மூலம். அங்கே ஸ்ரீவித்யா நடிச்சிருப்பார். கடைசிக் காட்சியில் அவர் கண்கள் சொல்லும் கதை! அபாரமாய் இருக்கும். தமிழில் பார்த்தது இல்லை. ராகங்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கெல்லாம் ஞானம் இல்லை. ஆனால் பாடல்கள் கேட்டிருக்கேன்.
பதிலளிநீக்குஅடடே... படம் பெயர் சொல்ல விட்டு விட்டேனா? ஆம். அவர்கள் படம்தான். ராகம் நான் கூட கண்டுபிடிக்கவில்லை. அங்கேயே போட்டிருந்ததை இங்கே தூக்கி வந்தேன்!
நீக்குஇனிமை் இனிமை் இனிய காலை வணக்கம் அனைவருக்கும். என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருளட்டும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் அனைத்தும் அருமை. படத்தின் பல தகவல்களும் நீங்கள் கூறியதில் தெரிந்து கொண்டேன். படம் பெயர் அவர்கள் என்றுதான் நினைக்கிறேன். இயக்குனர் கே. பாலசந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். அதுவும் சுஜாதாவின் ரசிகை நான். அவர் நடித்த படங்களில் அவர் நடிப்பு என்றுமே பிரகாசிக்கும். இந்தப் படம் கூட தொலைக்காட்சியில்தான் பார்த்துள்ளேன். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வானொலியில் கேட்டு ரசித்திருக்கிறேன். இன்று இங்கு பகிர்ந்த பாடல்களையும் பிறகு நிதானமாக கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கும் நல்ல பாடல்களுக்கும் மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தக் கால வானொலியில் அலுக்க அலுக்க போட்ட பாடல்கள்தான் இவை. நன்றி கமலாக்கா.
நீக்குஇன்றைய பாடல்கள் நன்று.
பதிலளிநீக்குகதைக்கு, சூழ்நிலைக்கு ஏற்பட பாடல் எழுதுவதில், பாடலாசிரியரின் திறமையைவிட, என்ன வேணும் என்று கேட்டு வாங்கத் தெரிந்த டைரக்டரின் திறமைதான் பளிச்சிடுகிறது. Ofcourse, அதைச் சரியாகக் கொடுக்கத் தெரியவேணும்.
என்னை மாதிரி, பாடல் காட்சிகளை ஸ்கிப் பண்ணறவங்களுக்கு கதை புரியாமல் போயிடும். அதான் பிரச்சனை.
பாடல் காட்சி படத்தின் கதையைச் சொல்லவேண்டும். பாடல் கேட்காவிட்டாலும் கதை புரியவேண்டும்.
நீக்குஅங்கும் இங்கும் பாதை உண்டு.....வாழ்வின் பல காலங்களில் நம்மை யோசிக்க வைப்பது
பதிலளிநீக்குஇந்த வரி.
அடிக்கடி என் மனதில் ஓடும் பாடல்களில் இதுவும் ஒன்று/
இப்படியோர் தாலாட்டு மிக மிக அருமை.
கவிஞர் ஒருவராலதான் இது போல எழுத முடியும்.
அவர்கள் திரைப்படம் அழாத சுஜாதாவின் கதை.
ரஜினி படு பயங்கர வில்லன்.
வென்ட்ரிலோகிசம் கற்ற கமலுக்கு சிறப்பு வாழ்த்துகள். குரல் கொடுத்தது
'சதன்?"
சுஜாதாவின் மாமியாராக வரும் பெண்மணியும் நல்ல நடிகை. அனைவரையும் ஆட்டி வைக்க திரு பாலச்சந்தர் ஒருவரால் தான் முடியும்.
எல்லாப்பாடல்களும் மிக அருமை. 77க்குப் போய் திரும்பி வந்தேன்.
நான் கூட ஏதோ ஒரு பாடல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாட்களுக்கு முன் கேட்டிருந்தேன்.
எனக்கே மறந்து போய் விட்டது.ஹாஹ்ஹா.
ஆஹா... என்ன பாடல் கேட்டீர்கள் என்று நினைவில்லையே அம்மா... அவள் ஒரு தொடர் கதை படத்தில் சதன் குரல் கொடுத்திருப்பார், இதில் தெரியவில்லை.
நீக்குஅந்தக்கால தூர்தர்ஷன் தேசிய ஒளிபரப்பில் தொகுப்பாளர் இந்த மாதிரி ஒரு வென்ட்ரிலாகிஸ்ட் (பொம்மை)யுடன் பேசுவது போல் காலை ஒளிபரப்பு வரும். உரையாடல் சுவையாக இருக்கும்.
நீக்குமிக அருமையான பாடல்களுக்கு மனம் நிறை நன்றி.
பதிலளிநீக்குநன்றிம்மா.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குதிருவெண்காட்டில் இருக்கும் போது புது சினிமா பார்க்க வேண்டும் என்றால் மாயவரம் போக வேண்டும், அப்படி மாயவரம் போய் பார்த்த படம்.தம்பி ஊரிலிருந்து வந்து இருந்தான் அவனை புது படம் கூட்டி போக எண்ணி பார்த்த படம். வரும் போது வீட்டு சாவி தொலைந்து விட்டது , பின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் போனோம்.
பதிலளிநீக்குஇந்த படம் பாடல் கேட்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும்.
மூன்று பாடல்களையும் கேட்டேன். எல்லாம் பாடலும் பிடித்த பாடல்தான்.
அடடா... பாடல் கேட்கும்போதே அது சார்ந்த நினைவுகளும் வருவது சுகம்தான், நன்றி கோமதி அக்கா.
நீக்குமூன்றாவது பாடல் கேட்டு நாளாச்சி... இனிமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்கு//அவர்கள் படம் தான்.//
பதிலளிநீக்குஎவர்கள் படம்?
ஹா.. ஹா... ஹா... திரைப் படத்தின் பெயர் அவர்கள் என்று வரியை அமைந்திருக்கவேண்டும்!
நீக்குசும்மாவானும் தமாஷூக்காக. (என்ன ஷூன்னு கேள்வி வந்துடப்போறது!)
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஇன்றைய பதிவின் பாடல்கள் அனைத்துமே அருமை.. மிகவும் பிடித்தமானவை....
பதிலளிநீக்குஆனாலும் இந்தப் படத்தை இன்னும் பார்த்ததில்லை...
ஆச்சர்யமாக இந்தப் படம் நான் பார்த்து விட்டேன்! தஞ்சை ஹவுசிங் யூனிட்டில் மாதம் ஒரு படம் போடுவார்கள். அந்தத் வரிசையில் பார்த்தேன்.
நீக்குமுதல்பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குஎல்லாப் பாடல்களும்தான் ஜி.
நீக்குகாற்றுக்கென்ன வேலி..கடலுக்கென்ன மூடி!
பதிலளிநீக்கு- உங்கள் புண்ணியத்தில் இன்று வெகுகாலத்திற்குப்பின், கேட்டேன். அந்தக்காலத்தில் வார்த்தைகளை சரியாகக் கவனித்ததில்லை. இசையே போதுமானதாக இருந்திருக்கவேண்டும்..
அருமையாக வரைந்திருக்கிறார் தாசன். வரிகளைக் கவனிக்கையில் -
கோவில்விட்டுக் கோவில் போனேன்
குற்றம் என்ன.. ஏற்றுக்கொள்வேன்..
அழகு.
அழகாகப் பாடியுமிருக்கிறார் ஜானகி.
நன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்கு//தனக்கு காட்சிகள் இல்லாத பொழுது...... கொள்வாராம் ரஜினி//
பதிலளிநீக்குஉண்மை போலவே நம்மை நினைக்க வைப்பதில் சூரர்கள்...
// சூரர்கள்..//
நீக்குசூராதி சூரர்கள்!..
இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ்ம்!
நீக்குஅவர்கள் படத்திலிருந்து பாடல்கள். மிகவும் ரசித்த பாடல்கள்.
பதிலளிநீக்குதகவல்களும் நன்று.
நன்றி வெங்கட்.
நீக்கு..தனக்கு காட்சிகள் இல்லாதபோது கமல் நடிப்பதைக் கூர்ந்து கவனித்துத் தன் நடிப்பை மேம்படுத்திக் கொள்வாராம் ரஜினி. இதையும் விக்கிதான் சொல்கிறது!//
பதிலளிநீக்குதப்புத்தப்பாகச் சொல்வது விக்கியின் வழக்கம்!
ரஜினி இப்படி மற்றவரைக் ’..கூர்ந்து கவனித்து ’மேம்படுத்திக்’கொண்டதில்லை. ஒரு கலைஞன் என்கிற நிலையில், பொதுவாக அப்படி கவனித்திருக்கக்கூடும்தான். ”வேலையில்லாதபோது, அவன் எப்படி நடிக்கிறான்னு போய்ப் பாரு.. கத்துக்கோ!” என்று ரஜினிக்கு, ஹாசனின் நடிப்பைப் பார்க்கச்சொல்லி புத்திமதி வழங்கியவர் பாலசந்தர். Because, KB was impressed by Kamal Haasan of yesteryears!
ஆனால், ரஜினி அப்படிப் பார்த்துத்தான், கவனித்துத்தான் கற்றுக்கொண்டார் என்பதில்லை. அவரே ஒரு natural artist. அதனால்தான் சில ரோல்களை effortless-ஆக அவரால் செய்யமுடிந்தது. நான் அவர் கொடுத்த ’ஹிட்’ மசாலா படங்களை இங்கே குறிப்பிடவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், தப்புத்தாளங்கள், (ஸ்ரீதரின்) இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்கள் வித்தியாசமாக அவரைக் காட்ட முற்பட்டவை.
// புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும்,...//
நீக்குஅருமை!...
ஆறிலிருந்து அறுபது வரை... விடுபட்டுப் போதென்பது எனது பணிவான கருத்து..
’ஆறிலிருந்து அறுபதுவரை’ நன்றாக இருந்திருக்கக்கூடும். யார் இயக்கமோ? நான் பார்க்கவில்லை, அதனால் தெரியவில்லை.
நீக்குபொதுவாக மிகவும் குறைவான, சில தேர்ந்தெடுத்த தமிழ்ப்படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். பிறமொழிகளிலும் அப்படியே. (தமிழ்நாட்டில் இருந்தபோது சராசரி நண்பர்கள் சிலரின் ரசனைக்கேற்ப, சில அசட்டுத்தனமான படங்களைப் பார்த்ததுண்டு. எதிர்பாராதவிதமாய் அவற்றில் தென்பட்ட ஒன்றிரண்டு நல்ல பாடல்கள் ஆச்சரியப்படுத்தியதுமுண்டு)
’முள்ளும் மலரும்’ படத்தை மகேந்திரனின் இயக்கத்தைக் கவனிப்பதற்காக, டெல்லியில் ‘நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ விழாவில் நண்பனொருவனோடு போய்ப் பார்த்தேன். ஷோபாவும், ரஜினிகாந்தும் கவனத்தில் வந்தார்கள்.
ரஜினி நல்ல நடிகர். ஆனால் மசாலா வலைக்குள் மாட்டிக்கொண்டு மூழ்கிப்போனார்.
நீக்குகமல் மற்றும் "முள்ளும் மலரும்" படத்தின் ஒரு காட்சிக்கான உரை : இயக்குனர் மகேந்திரன் அவர்கள் :-
நீக்குhttps://m.facebook.com/story.php?story_fbid=1509882725826732&id=100004150567842
பார்த்தேன், கேட்டேன். ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்!
நீக்குசாக்கடையில் விழுந்து கிடக்கும் ஆப்பிளுக்காக இந்நாட்டு இளைஞர்கள் அடித்துக் கொள்வதாகக் காட்டியதில் இருந்து இந்த பாலசந்தரைப் பிடிக்காமல் போனது..
பதிலளிநீக்குசில்க் சுமிதா கடித்த ஆப்பிளை போட்டிபோட்டு அங்கேயே 600 ரூபாய்க்கு ஏலம் எடுத்த 'இளைஞர்களை' மறந்துவிட்டீர்களே
நீக்குவறுமையின் நிறம் சிவப்பு. அந்தக் காலத்தில் கேபி படங்களை எல்லோரும் திட்டிக்கொண்டே இருந்தாலும் விடாமல் பார்த்து விடுவார்கள்!
நீக்குஅந்த இளைஞர்கள்தமிழர்கள் என்றே காட்டி இருப்பார் இல்லையோ? எனக்கு பாலசந்தரின் ஆரம்ப காலப் படங்கள் பிடித்த அளவுக்குப் பின்னர் அவர் எடுத்த படங்கள் பிடிக்கவில்லை. தொலைக்காட்சி தயவில் பார்த்தவையே பெரும்பாலான படங்கள்.
நீக்குஅதே நேரம், இதே தீமில் வெளிவந்த படம்தான் பாரதிராஜாவின் 'நிழல்கள்'.
நீக்குசராசரி தமிழ் இயக்குனர்களிலிருந்து தன்னை, சராசரிப் படங்களிலிருந்து தன் படங்களை, மிகவும் வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் முயன்றவர் பாலசந்தர். ஒரு professional என்கிற ரீதியில் அதில் தவறில்லை. ஆனால் உண்மையில் அப்படி இருந்திருக்கவேண்டும். சராசரிகளிலிருந்து உயர்ந்திருப்பது, மேம்பட்டிருப்பது வேறு. உயர்ந்திருப்பதாகக் காட்ட முயற்சிப்பது வேறு. ’தரம்’ என்பது வேறு, ’தரமானதாக’க் காட்டிக்கொள்வது என்பது வேறு என்பதை, சிலர் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பது அவருக்குப் புரிந்திருக்கவில்லை. Sad.
பதிலளிநீக்குஆதரவை விட எதிர்ப்புகளால் பெரிதும் பிரபலமடைந்தவர் அவர்.
நீக்குபாலசந்தர் எங்கே தரமான படங்களை எடுத்திருக்கார்? தரம் கெட்ட படங்களே பெரும்பாலானவை.
நீக்குதமிழ் சினிமாவைக் கெடுத்ததே அவர் தான்!
நீக்கு😞😖😖😖😞😞😞 yes I agree.
நீக்குபிரபலம் ‘அடைந்தது’ தமிழ்நாட்டளவில்தான். இந்திய அளவிலல்ல. புகழ்பெற்ற சத்யஜித் ரே, மிருணால் சென், ஷ்யாம் பெனெகல், ஜி.அரவிந்தன், சயீத் அக்தர் மிர்ஸா, கோவிந்த் நிஹலானி போன்ற இந்திய இயக்குனர்களின் பக்கத்தில்கூட வரத் தகுந்தவரில்லை இவர்.
பதிலளிநீக்குஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில, பல புறம்போக்குகளுக்கு பாலசந்தர் ஒரு ஸ்டீவன் ஸ்பீல்பர்க், அகிரா குரசாவா !
'ஆதர்ச நாயகி சரிதா என்பதால் சரிந்தாரோ' என்று எடுத்துக் கொள்ள வேண்டுமோ...?
நீக்குஏகாந்தன் சொல்லுவது முற்றிலும் சரியே!
நீக்குஆதர்ச நாயகி சரிதாவா.. அதனால் சரிந்தாரா! இப்படி ஒரு கதை செல்கிறதா! நான் அறிந்திருக்கவில்லை.
நீக்குஆனால் சரிதா ஒரு நல்ல நடிகை. ’தண்ணீர்..தண்ணீர்’, ’தப்புத்தாளங்கள்’ தாண்டி, அவரது மற்றபடங்கள் கவனத்துக்கு வந்தனவா?
என்னவோ போங்க... ம்... சிறுபிள்ளை... (!)
நீக்குசரிதா ஒரு நல்ல நடிகை. ’தண்ணீர்..தண்ணீர்’, ’தப்புத்தாளங்கள்’ தாண்டி, அவரது மற்றபடங்கள் கவனத்துக்கு வந்தனவா?// மெளனராகங்கள், கீழ் வானம் சிவக்கும், நெற்றிக்கண், துணை, அச்சமில்லை அச்சமில்லை, ஜீலி கணபதி போன்றவை எனக்கு நினைவில் வந்த படங்கள். நடிப்பதை நிறுத்திய பிறகு நிறைய பேருக்கு டப்பிங் பேசினார்.
நீக்குஏகாந்தன் சொன்ன அனைவரின் படங்களையும் காப்பி அடித்தும் பாலசந்தர் எடுத்திருக்காரே! முக்கியமாய் ரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் படம் நீர்க்குமிழியாகவும், கோல்மால் படம் தில்லுமுல்லுவாகவும் மாறியது. சத்யகாம் படம் தான் புன்னகை! இப்படி எத்தனை வேண்டும்?
நீக்குCopy-paste tech தமிழ் சினிமாவில்தான் முதலில் வந்தது என்கிறீர்கள் !
நீக்கு//Copy-paste tech தமிழ் சினிமாவில்தான் முதலில் வந்தது என்கிறீர்கள் !//
நீக்குஅப்படி சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.
ஆம். பிராந்திய மொழி சினிமா பாலிவுட்டிலிருந்தும், ஹாலிவுட்டிலிருந்தும் மற்ற ‘உட்’களிடமிருந்தும் தாராளமாகத் திருடியிருக்கிறது! எதையாவது போட்டு உருட்டிப் பணம் சம்பாதித்தால் சரி என்கிற கொள்கை..
நீக்கு@கீதா அக்கா: ஆனந்த் வருவதற்கு முன்பே நீர்குமிழி வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்,ஆம் என்கிறார் கூகுளார். நீ.கு. 1965, ஆனந்த் 1971. மற்ற படங்களும் ரீ மேக் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
நீக்குநான் ரசித்த பாலசந்தர் படங்களில் இதுவும் ஒன்று. பாலசந்தர் என்னை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கார் என்று பேசும் பொம்மை நான் அதிகம் ரசித்தேன். (இதே பொம்மை மகாராஜா ஒரு மகாராணி...என்ற சிவாஜிகணேசன் நடித்த திரைப்படத்தில் காணலாம்) அந்த பொம்மை மூலமாக தன் மனதை வெளிப்படுத்தும் நாயகனின் முயற்சி சிறப்பாக அமைந்திருக்கும்.
பதிலளிநீக்குஆமாம். நினைவிருக்கிறது. நன்றி முனைவர் ஸார்.
நீக்குதேர்வு செய்யப்பட்ட பாடல்கள் அனைத்துமே புகழ் பெற்றவை தான் என்றாலும், ' அங்கும் இங்கும் ' பாடல் அதன் இனிமைக்காக அதிகம் புகழ் பெற்ற பாடல். இதை எஸ்.பி.பியே ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார்.
பதிலளிநீக்குநானும் படித்த நினைவு இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த அப்பாடல். நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குமூன்று பாடல்களும் இன்று மிக மிக இனிமையானவை.. கடசிப்பாட்டு எனக்கும் மிகமிகப் பிடித்த பாடல், கேட்க நன்றாக இருக்கும்.. அவள் ஒரு தொடர்கதைப் பாடல்கள்போல....
பதிலளிநீக்குஇந்தப் படம் பார்த்ததில்லை, பார்க்கோணும்... எங்களுக்கு திங்கட்கிழமை ஸ்கூல் ஆரம்பமாகிறது இங்கு.
//பாலச்சந்தர் படங்கள் என்றாலே பாடல்கள் கொஞ்சம் ஸ்பெஷல்தான்.//
படங்கள் மட்டுமன்றி, அவர் இயக்கும் நாடகங்களும் மிக அருமையாக இருக்கும்.
ஆஆஆ இல்லை இல்லை இந்தப் படம் பார்த்துவிட்டேன்.. அவர்கள்:)) மிக அருமையான படம், ஏன் பெரிதாக ஓடவில்லை என்கிறீங்க ஸ்ரீராம்? அப்படியோ? ஓடவில்லையோ படம்?
நீக்குவாங்க அதிரா... சுஜாதாவை ரசிக்கும் அதே அளவு ரஜினி நடிப்பையும் ரசிக்கலாம் இந்தப் படத்தில்.
நீக்குஇன்று என் விருப்பப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? என்பதற்கேற்ப துள்ளும் இசை மற்றும் ஜானகியின் குரல். S.ஜானகி ஒரு phenomenal singer! ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக, பாடியிருப்பார். "சிங்கார வேலனே தேவா", "ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி" "முதல்வனே, வனே, வனே" என்ற மூன்று பாடல்களையும் பாடியிருப்பது ஒரே ஜானகிதானா? என்று சந்தேகமாக இருக்கும். புருவத்தை கூட உயர்த்தாமல், அனாயசமாக அவர் பாடுவது ஆச்சர்யமாக இருக்கும். அவர் பாடியிருக்கும் "வானம் நமது தந்தை, பூமி நமது அன்னை உலகம் நமது வீடு, உயிர்கள் நமது உறவு" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்தப்படம் என்று தெரியவில்லை, முத்துராமனும், ஒரு பெங்காலி நடிகையும்(நந்திதா போஸ்?) நடித்து, விருது பெற்ற, அதனால் ஓடாத படம். அந்தப் பாடலைக்கூட ஒரு முறை முடிந்தால் பகிருங்கள்.
பதிலளிநீக்குமுன்னர் எப்போதோ பகிர்ந்த நினைவு. படம் பெயர் தாகம். எம் பி ஸ்ரீநிவாஸன் இசை என்று நினைவு.
நீக்குமற்ற இரண்டு பாடல்களும் குறிப்பாக "இப்படியோர் தாலாட்டு பாடவா?" பாடல் வெகு இனிமை.
பதிலளிநீக்குஎனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.
நீக்குஅவர்கள் படம் இப்போது வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். அப்போது படம் பலருக்கு புரியவேயில்லை.
பதிலளிநீக்குசேத்தன் பகத்தின் One Indian girl படித்து விட்டு, ஒரு பெண் மூன்று ஆண்கள் என்னும் தீமை எத்தனை வருடங்களுக்கு முன்னரே பாலசந்தர் எடுத்து விட்டார்? என்று வியந்தேன். கீதா அக்கா மலையாள ரீமேக் என்கிறார்களே?...!
ஆமாம், பானுமதி, நான் மலையாளத்தில் ஶ்ரீவித்யா நடிச்சுப் பார்த்திருக்கேன். கடைசிக்காட்சி மனதை உருக்கும். ஶ்ரீவித்யாவின் கண்களில் தெரியும் நிராசை! தமிழில் அப்படி வரலை. சுஜாதாவை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தால் கொஞ்சம் கூட எடுபடலை.
நீக்குமலையாள மூலம் பற்றி எனக்குத் தெரியவில்லை. படம் இப்போது வந்தாலும் எடுபடாது என்றுதான் தோன்றுகிறது!
நீக்கு..ஒரு பெண் மூன்று ஆண்கள் என்னும் தீமை //
நீக்குதீமைதான். நன்மை என்றா சொல்லமுடியும்!
நீங்கள் பதியும் பாடல்களே அருமையாகத் தான் இருக்கு ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஅதனால் நோ வொர்ரீஸ்.
அருமையான பாடல்கள்
பதிலளிநீக்கு