நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 27 பிப்ரவரி, 2021
நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஸ்வாதி மோகன்.
தமிழறிஞர் பேராசிரியர் விருத்தாசலனார் முழுஉருவ வெண்கலச் சிலை.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார். சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை இடம்பெறச் செய்தவரும் இவரே. சென்னை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் 30 ஆண்டுகள் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் மாணவர் நலனுக்கும் அர்ப்பணித்துக் கொண்ட தமிழறிஞர் . அவரிடன் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக அவரிடம் கல்வி பயின்ற மாணாக்கர்கள் ஒன்றிணைந்து தனது ஆசானுக்கு நன்றி செலுத்தும் வகையில் முழுஉருவ வெண்கலச் சிலையை தஞ்சாவூர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் திறந்தனர் .
= = = =
நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஸ்வாதி மோகன்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்கிற இளம் பெண் விஞ்ஞானி, நாசா செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தை துல்லியமாக வழிநடத்தி செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்திருக்கிறார். ஸ்வாதி மோகனின் இந்த சாதனையை அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது.
மாபெரும் சாதனை புரிந்துள்ள ஸ்வாதி, ‛தி குயின்ட்' தளத்திற்கு அளித்த பேட்டி: இது ஒரு சிறப்பான தருணம். என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தினேன் என்று நான் சொல்ல வேண்டும். இப்போது 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாதுகாப்பாக உள்ளது. எனது குடும்பத்திற்கு ஒரு வலுவான பணி நெறிமுறை மற்றும் கல்வியில் அர்ப்பணிப்பு உள்ளது. என் பெற்றோர் எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியை மதிப்பிட்டனர். அவர்கள் இருவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் என்னை தொடர ஆதரித்தனர். நான் என்னை அமெரிக்கராகவும், இந்தியராகவும் கருதுகிறேன்.
நாசாவில் அனைவரிடமும் பேசியதில்லை. ஆனால் ஜே.பி.எல்.,லில் நிறைய இந்தியர்கள் மற்றும் தெற்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் உள்ளனர். பலரும் விடாமுயற்சியுடன் இருக்கிறார்கள். இது ஒரு பெரிய கூட்டு முயற்சியாகும். எங்களது அணியில் பாதிபேர் மட்டுமே உள்ளனர். கொரோனா நெறிமுறை காரணமாக இறுதி கட்டத்திற்கு பாதி அணியை மட்டுமே அனுமதிக்க முடிந்தது.
நான் நாசாவில் இருக்கப் போகிறேன் என்று நினைக்கவில்லை. நான் ஒரு குழந்தை மருத்துவராகப் போகிறேன் என்று தான் நீண்ட காலமாக நினைத்திருந்தேன். ஆனால், விண்வெளி குறித்து ஆர்வமாக இருந்தது. பிக் பேங் கோட்பாட்டைப் பற்றி, நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றி என விண்வெளி பற்றிய புத்தகங்களைப் படித்தேன். மற்றவைகள் ஒவ்வொன்றாக நடந்தன. உங்கள் கனவைப் பின்தொடருங்கள். நான் இந்த சாதனையை நாசாவில் செய்யப்போகிறேன் என்று கனவு கண்டதில்லை. புதியதை கற்றுக் கொண்டே இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
= = = = =
பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம்.
செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது என நாசா முன்னதாகத் தெரிவித்தது. அது இரண்டு ஆண்டுகள் அங்கு சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில் இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வாதி மோகனுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 'பெர்சவரன்ஸ்' என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை இந்த ரோவர் தற்போது அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேமரா ஏ எனப்படும் ரோவரின் முன்புறம் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று படிக்கப் போகும் நல்ல செய்திகளுக்கு நன்றி. என்னாளும் நல்ல செய்திகளே நம்மை அடைய வேண்டும். இறைவன் அருள் துணை செய்யட்டும்.
பெர்செவியரன்ஸ் மார்சில் இறங்கியபோது கூடவே ஒலித்த குரல் ஸ்வாதி மோஹனோடதுதான். நாங்கள் முழு நிகழ்ச்சியையும் பார்த்து மகிழ்ந்தோம். பொட்டு வைத்த அந்த முகத்தைக் காணும் போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நம் நாட்டின் அறிவுச் செல்வம் இங்கே பிரகாசிக்கிறது. வளமுடன் வாழ வேண்டும். இங்கே பதிந்ததற்கு மிக நன்றி ஜி.
மாணவர்கள் சேர்ந்து பேராசிரியருக்கு சிலை எடுத்த நற்செயல் மிக மகிழ்ச்சி கொடுக்கிறது. நம் சக பதிவாளர் கரந்தை ஜெயக்குமார் பதிவிட்டிருந்தார் என்று நினைக்கிறேன்.
நாசா விண்கலம் செவ்வாயில் இறங்கியது பற்றித் தெரியும். ஆனால் இந்திய வம்சாவளிப் பெண் குறித்து இப்போதே அறிகிறேன். வாழ்த்துகள். பேராசிரியருக்குச் சிலை எடுப்பித்த மாணாக்கர்களுக்கும் வாழ்த்துகள். இவர் பற்றியும் தெரியாது.
தமிழறிஞர் பேராசிரியர் விருத்தாசலனார் அவர்களுக்கு முழுஉருவ வெண்கலச் சிலையை அவரிடம் படித்த மாணவர்கள் அமைத்து இருப்பதை சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்கள் பதிவில் படித்தேன். இங்கு காணொளி பார்த்தேன் வாழ்த்துக்கள் மாணாக்கர்களுக்கு.
//ஸ்வாதி மோகன் என்கிற இளம் பெண் விஞ்ஞானி, நாசா செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தை துல்லியமாக வழிநடத்தி செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்திருக்கிறார்.//
ஆசிரியருக்கு சிலை அமைத்திருக்கும் மாணவரகள் வாழ்க வளமுடன். காற்றிலே ஏறி விண்ணையும் சாட வைத்திருக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஸ்வாதி மோகனுக்கு போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி.
தங்கள் ஆசானுக்கு, அவர் பண்பை போற்றும் விதமாய் சிலை அமைத்த மாணவர்களை பாராட்டுவோம்.
நாசாவின் வெற்றிகளுக்கு தன் திறமை கொண்டு உறுதுணையாக இருந்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஸ்வாதி மோகனுக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள். இன்றைய அருமையான பாஸிடிவ் செய்திகளை தொகுத்து தந்த. தங்களுக்கும் மிக்க நன்றிகள்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று படிக்கப்
பதிலளிநீக்குபோகும் நல்ல செய்திகளுக்கு நன்றி.
என்னாளும் நல்ல செய்திகளே நம்மை அடைய வேண்டும்.
இறைவன் அருள் துணை செய்யட்டும்.
வணக்கம் வல்லிம்மா... வாங்க... இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி. வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குபெர்செவியரன்ஸ் மார்சில் இறங்கியபோது
பதிலளிநீக்குகூடவே ஒலித்த குரல் ஸ்வாதி மோஹனோடதுதான்.
நாங்கள் முழு நிகழ்ச்சியையும் பார்த்து மகிழ்ந்தோம். பொட்டு வைத்த அந்த முகத்தைக் காணும்
போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
நம் நாட்டின் அறிவுச் செல்வம் இங்கே பிரகாசிக்கிறது.
வளமுடன் வாழ வேண்டும்.
இங்கே பதிந்ததற்கு மிக நன்றி ஜி.
மாணவர்கள் சேர்ந்து பேராசிரியருக்கு
நீக்குசிலை எடுத்த நற்செயல் மிக மகிழ்ச்சி கொடுக்கிறது. நம் சக பதிவாளர்
கரந்தை ஜெயக்குமார் பதிவிட்டிருந்தார் என்று நினைக்கிறேன்.
கல்வியும், கல்வியைப் போதிப்பவர்களும் சிறக்கட்டும்.
ஆமாம். நானும் படித்தேன்.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். பெருகும் தொற்றுக் குறைந்து எங்கும் ஆரோக்கியம் பெருகப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குநாசா விண்கலம் செவ்வாயில் இறங்கியது பற்றித் தெரியும். ஆனால் இந்திய வம்சாவளிப் பெண் குறித்து இப்போதே அறிகிறேன். வாழ்த்துகள். பேராசிரியருக்குச் சிலை எடுப்பித்த மாணாக்கர்களுக்கும் வாழ்த்துகள். இவர் பற்றியும் தெரியாது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் வாழ்க வளமுடன்.
நீக்குதமிழறிஞர் பேராசிரியர் விருத்தாசலனார் அவர்களுக்கு முழுஉருவ வெண்கலச் சிலையை அவரிடம் படித்த மாணவர்கள் அமைத்து இருப்பதை சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்கள் பதிவில் படித்தேன்.
பதிலளிநீக்குஇங்கு காணொளி பார்த்தேன் வாழ்த்துக்கள் மாணாக்கர்களுக்கு.
//ஸ்வாதி மோகன் என்கிற இளம் பெண் விஞ்ஞானி, நாசா செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தை துல்லியமாக வழிநடத்தி செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்திருக்கிறார்.//
வாழ்த்துக்கள் ஸ்வாதிக்கு.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
அன்பின் வணக்கம்
நீக்குஇன்றைய தொகுப்பின் செய்திகள் மகிழ்ச்சியளிப்பன.. ஸ்வாதி மோகனின் பணி சிறப்புடன் தொடரட்டும்..
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குதமது பேராசிரியரை நினைவு கொண்டு சிலை எடுப்பித்த செயல் மகத்தானது..
பதிலளிநீக்குஅன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களது பதிவும் இங்கே காணொளியும் சிறப்பு...
பேராசிரியர் விருத்தாசனார் அவர்களது புகழ் வாழ்க..
வாழ்த்துவோம்.
நீக்குதிறமைசாலிகளை அரவணைத்துக் கொள்வதில் என்றுமே அமெரிக்கா முன்னோடிதான்.
பதிலளிநீக்குஆம்.
நீக்குஆசிரியருக்கு சிலை அமைத்திருக்கும் மாணவரகள் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாற்றிலே ஏறி விண்ணையும் சாட வைத்திருக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஸ்வாதி மோகனுக்கு போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி.
போற்றுவோம்.
நீக்குசிலை அமைத்தது சிறப்பு...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் ஆசானுக்கு, அவர் பண்பை போற்றும் விதமாய் சிலை அமைத்த மாணவர்களை பாராட்டுவோம்.
நாசாவின் வெற்றிகளுக்கு தன் திறமை கொண்டு உறுதுணையாக இருந்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஸ்வாதி மோகனுக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள். இன்றைய அருமையான பாஸிடிவ் செய்திகளை தொகுத்து தந்த. தங்களுக்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஇன்றைய தகவல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குமுதல் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்கு