புதன், 24 மார்ச், 2021

இலவசங்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

கீதா சாம்பசிவம் :

வரப்போகும் தேர்தலில் கட்சிகள் அறிவித்திருக்கும் இலவசங்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

# நான் இலவசங்களை ஆதரிக்க மாட்டேன்.

& ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவரை எந்தத் தேர்தலிலும் வழங்கப்பட்ட எந்த இலவசத்தையும் நான் வாங்கியதில்லை. 

இலவசங்களையும் ஓட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

# பலமாக எதிர்க்கிறேன். 

எந்தத் தேர்தலிலும் வோட்டுப் போட பணம் வாங்கியது இல்லை. எந்தத் தேர்தலிலும் வோட்டுப் போடாமல் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல்களில் நான் வோட்டுப் போட்ட வேட்பாளர்கள் ஜெயித்ததும் இல்லை! 

கார்ப்பொரேட், கார்ப்பொரேட் எனக் கத்தும் அரசியல்வாதிகள் பலரும் கார்ப்பொரேட் கம்பெனிகளை நடத்துபவர்கள் தான் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உதாரணமாக எல்லாச் சானல்களின் நிர்வாகிகளும்.

# அரசியல் வாதிகளை சரிவர அறிந்தவர்களுக்கு இதெல்லாம் வியப்பு இல்லை.

கார்ப்பொரேட் என்றால் அம்பானி, அதானி மட்டும் என்பது போல் நாட்டில் எது நடந்தாலும், என்ன வந்தாலும் அதற்குக் காரணம் பிரதமர் ஒருவர் மட்டுமே என்று அனைவரும் சுட்டிக்காட்டுவதற்கு என்ன காரணம்?

# பலமான எதிர்ப்பு பலமான ஆதரவு பலமான ஆராதனை நம் சாபம்.

இதற்கு முன்னரும் பல பிரச்னைகள்/சம்பவங்கள்/தொற்று நோய்கள் என வந்திருக்கின்றன. என்றாலும் இப்போது கொரோனா மட்டும் மத்திய அரசால் கொண்டுவரப் பட்டது என்பது போல் நினைக்கும் மக்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

# மேலே சொன்னதுதான்.

& கரோனா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது என்று நினைக்கும் மக்களா !! அது எப்படி !! 

கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட பலருக்கும் (இரண்டு முறை போட்டதுக்குப் பின்னரும்) தொற்று ஏற்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தியைப் பார்த்தீர்களா? இதற்கு என்ன காரணம்?

# இந்த மாதிரி முரண்கள் எங்கும் எதிலும் உண்டு.

& தடுப்பு ஊசி இந்தியாவில் போட ஆரம்பித்த தேதி ஜனவரி 16, 2021 - அதுவும் சுகாதார பணியாளர்கள், மருத்துவத் துறை முன்னணி வேலையாட்களுக்கும்  முதலில் போட ஆரம்பித்தார்கள். 

பொதுமக்களில் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கும் மற்றும் 45 to 60 வயதுள்ள - இணை நோய்கள் (comorbid conditions) உள்ளவர்களுக்கும். மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளார்கள். 

மார்ச் ஒன்றாம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் அடுத்த தடுப்பூசி மார்ச் இருபத்தொன்பதாம் தேதி வரையிலும் கிடையாது. (இப்போ covishield தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் - குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் கழித்துதான் அடுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்) 

இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, இரண்டு வாரங்கள் சென்ற பிறகுதான் தடுப்பூசியின் தடுப்பாற்றல் வேலை செய்யும். 

அப்படி இருக்கையில், ஜனவரி 16 ல் முதல் ஊசி - பிப்ரவரி 14 இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டு பிப்ரவரி 28 க்குப் பிறகு தொற்று காணப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் யாரும் இருந்தால்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.  

எங்கள் ப்ளாக் ஆசிரியக் குழுவில் அனைவருக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு விட்டதா? உங்கள் ஆதரவு அதற்கு உண்டா?

# தடுப்பு ஊசிக்கு ஆதரவு உண்டு. ஆனால் இன்னும் போட்டுக் கொள்ளவில்லை.

& போட்டுக்கொண்டேன். ஆதரவு உண்டு. எங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் தடுப்பூசி ஆதரவாளர்களே! 

நெல்லைத் தமிழன் : 

1. கீழடி போன்றவற்றை அகழ்ந்தெடுத்து ஆராய்ந்து அதனால் நமக்கு என்ன பிரயோசனம்? 1000-2000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்களைப் பற்றியே நமக்கு முழுமையான ஆராய்ச்சி மனப்பான்மையோ இல்லை தெரிந்துகொள்ளும் ஆர்வமோ இல்லாதபோது, ஏதோ மண் மேடைத் தோண்டி, நாலு மண்பாண்டங்களைக் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறோம்?

# ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் வாழ்க்கை பற்றி அறிவது சுவாரசியம்தான். நம் ஐம்பது வருடம் பழைய போட்டோவை பத்திரப் படுத்துவது போல.

2. தமிழர் நாகரிகம், கலாச்சாரம் என்று வாய் நிறையப் பேசிவிட்டு, பிட்சா சாப்பிடுவோம், சப்பாத்தி/கோதுமை சப்ஜி சாப்பிடுவது, பன்/ப்ரெட் உணவு, ஓலாவைக் கூப்பிடு, ஜீன்ஸ் ஆர்டர் பண்ணணும், லோக்கல் கடைகளை அம்போன்னு விட்டுவிட்டு பிக் பாஸில் ஆர்டர் செய்வோம் என்ற மனநிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

# நாகரிகம், கலாசாரம் பற்றிய ஆர்வம் இருந்தால் பிட்ஸா கூடாது என்று ஏன் நினைக்க வேண்டும் ? அறிவுத்தேடல் வேறு நாவின் விருப்பச் சுவை வேறு. அது இதைக் கட்டுப்படுத்தாது.

 = = = = =

எங்கள் கேள்வி. 

(தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டும் ) 

வருகின்ற சட்டசபை தேர்தலில், உங்கள் தொகுதியில், எந்த இரண்டு கட்சிகளுக்கு / அணிகளுக்கு இடையே போட்டி? 

அடுத்த கேள்வி எல்லோருக்கும் பொது : 

தேர்தல்களில் வோட்டுப் போடாதவர்கள் பெரும்பாலும் சொல்லும் காரணங்கள் கீழே கொடுத்துள்ளோம். அதில் எவை எல்லாம் சரி என்று நீங்கள் நினைக்கிறீர்கள் - 

a ) இந்த வேகாத வெய்யிலில் போய் வரிசையில் நின்று, ஏன் வோட்டுப் போடவேண்டும்? 

b) போட்டியிடுபவர்கள் எவருமே யோக்கியன் இல்லை. 

c) என்னுடைய ஒரு வோட் என்ன சாதித்துவிடப் போகிறது? 

d) என்னுடைய வோட் வேறு ஊரில் உள்ளது. அருகில் உள்ள வாக்குச் சாவடியில் வோட் செய்ய இயலாது. 

e) நான் ஆதரிக்கும் கட்சி என் தொகுதியில் போட்டியிடவில்லை. கூட்டணி கட்சிதான் போட்டியிடுகிறது. எனவே வோட் செய்ய ஆர்வம் இல்லை. 

f) உடம்பு சரியில்லை. ஆரோக்கியமாக இருந்திருந்தால் வோட் போட்டிருப்பேன். 

g ) உங்களுக்குத் தெரிந்த வேறு காரணங்கள் ஏதாவது இருந்தால் அதை பதியவும். 

= = = = =

நன்றி. மீண்டும் சந்திப்போம்! 

= = = = =

55 கருத்துகள்:

  1. செல்லிடத்துக் காக்க சினம் காக்க அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி அனைவரும் ஊரடங்கோ மற்ற எந்தப் பிரச்னைகளோ இல்லாமல் வாழப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  4. எங்க தொகுதியில் நிற்பவர்கள் யாருக்கும் ஓட்டளிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் ஓட்டளிக்க வேண்டிய நிர்ப்பந்தம். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பவர்களுக்குள் யார் கொஞ்சமானும் நேர்மை, (எருமை, பொறுமை க்ர்ர்ர்ர்ர்ர்) எனப் பார்த்துத் தான் போடணும். இன்னமும் இங்கே சூடு பிடிக்கலை. ஒருவேளை ஶ்ரீரங்கம் தெருக்களில் பிரசாரங்கள் நடக்கலாம். இங்கே அதிமுக சார்பில் இரண்டு இளைம்பெண்கள் வந்து ஓட்டளிப்பவர்கள் பட்டியலைச் சரிபார்த்துச் சென்றனர்.

      நீக்கு
    2. //எங்க தொகுதியில் நிற்பவர்கள் யாருக்கும் ஓட்டளிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் ஓட்டளிக்க வேண்டிய நிர்ப்பந்தம். பார்ப்போம்.//

      டிட்டோ

      நீக்கு
  5. //அப்படி இருக்கையில், ஜனவரி 16 ல் முதல் ஊசி - பிப்ரவரி 14 இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டு பிப்ரவரி 28 க்குப் பிறகு தொற்று காணப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் யாரும் இருந்தால்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். // அப்படித் தேதிகள் எல்லாம் குறிப்பிட்டுச் செய்திகள் வரவில்லை. அதோடு மருத்துவப் பணியாளர்களும் இல்லை. வட மாநிலத்தின் ஏதோ ஓர் ஊரில் இருப்பதாகச் சொல்லப்பட்ட செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாட்கள் முன்னர் தினமலரில் கூட இந்தச் செய்தி "அரசியல் நிருபரின் அனுபவம்" என்ற வகையில் பகிரப் பட்டது. ஆனால் இப்படி ஒரு பேச்சு இருப்பதாக முகநூல் மூலமாகவும் தெரிய வந்தது.

      நீக்கு
  6. //& கரோனா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது என்று நினைக்கும் மக்களா !! அது எப்படி !! // மருத்துவர்களாலும், அரசாலும் மருந்துகள் விற்பனைக்காகவும் மற்றச் சில வசதிகளுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது கொரோனா என நாங்கள் சந்தித்த சிலரே சொல்லி இருக்காங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாம் இந்த மத்திய அரசு செய்யும் வேலைனு சொல்றவங்களையும் பார்க்கிறோம்/கேட்கிறோம். தேர்தல் சமயம் கொரோனாவினால் பாதிப்பு ஏற்படலாம் என மக்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியதற்கே, தமிழ்நாட்டுத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதற்காக மத்திய அரசு செய்யும் வேலை இது என்று தேர்தல் கூட்டங்களில் மக்கள் பேசிக்கொள்வதாக தினசரிப் பேப்பர் செய்திகளில் வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற நாடுகளிலும் நம் மத்திய அரசு அவ்வாறு செய்ய இயலுமா? இன்றளவில் உலக ஜனத்தொகையில் - பத்துலட்சம் பேரில் 352 பேர் கரோனாவினால் மரணம் அடைந்துள்ளனர். எழுபத்தேழு நாடுகளில் இந்த எண்ணிக்கை விகிதம் மிகவும் அதிகம். மேற்கத்திய நாடுகள் பலவற்றில் பத்துலட்சத்திற்கு மரணம் ஆயிரத்திற்கு மேலே. (Belgium, UK, Italy, USA, Spain, Mexico, France உள்ளிட்ட 37 நாடுகள் / பகுதிகள் இதில் அடக்கம்). இந்தியாவில் பத்துலட்சம் பேர்களில் 115 மரணம். சீனாவிற்கு மேற்குப் பக்கத்தில் உள்ள நாடுகள் எல்லாவற்றிலும் பாதிப்பு அதிகம். இந்திய அரசு சரியான நேரத்தில் lockdown கொண்டுவந்ததால் தொற்று பரவும் சங்கிலித் தொடர் வலுவிழந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போது மக்கள் பல பாதுகாப்பு விதிகளை அலட்சியம் செய்வதால், ஐந்து மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் இந்த நிலையிலிருந்து மீள முடியும்.

      நீக்கு
    2. மக்களாவது ..
      விழிப்புணர்வு பெறுவதாவது?...

      மனப்பால் குடிக்கலாம்...

      நீக்கு
    3. கௌதமன் சார், மத்திய அரசு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், எல்லைகளைப் பாதுகாப்பதிலும் தவறி விட்டதாயும் அதிலிருந்து மக்களைத் திசை திருப்ப இப்படி எல்லாம்வதந்திகளைக் கிளப்புவதாகவும்சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர்.நீங்க தினசரிகள் படிப்பதில்லை. அல்லது எல்லாச்செய்திகளையும் பார்ப்பதோ/படிப்பதோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசின் தவறான நடைமுறை/வழிமுறையினால் உயிரிழப்பு அதிகம் எனவும் கொரோனாவை நம்புபவர்கள் சொல்கின்றனர். ஊரடங்கைச் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் அவர்கள் குற்றச் சாட்டு!

      நீக்கு
    4. //மற்ற நாடுகளிலும் நம் மத்திய அரசு அவ்வாறு செய்ய இயலுமா?// ஹாஹாஹா உலக அளவில் பிரபலமான/முன்னேறிக் கொண்டிருக்கும் நகரம் எது என ஒரு கருத்துக்கணிப்புச் சில ஆண்டுகள் முன்னர் நடத்தப்பட்டது. ஐ/நாவா? நினைவில் இல்லை. அதில் அஹமதாபாத் முன்னேறுவதில் சிறப்பாக முன்னிலை வகிப்பதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அனைவரும் பொங்கி எழுந்தனர். மோதியும், அமித்ஷாவும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அஹமதாபாதை முன்னிலைப் படுத்தி இருப்பதாக அரசியல் தலைவர்களில் இருந்து மெத்தப்படித்த மேதாவிகள் வரை சொல்லிக் கொண்டிருந்தனர். விமரிசனம் தளத்தில் மோதி/அமித்ஷாவைக் கண்டித்துப் பதிவு கூட வந்திருந்தது. இதற்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இல்லைனா யாருமே ஒத்துக்கலை! அந்த அளவில் தான் நம் மக்களின் புரிதல்/பொது அறிவு இருக்கு!

      நீக்கு
  7. அரசியல் தளத்தில்..அதுவும் தேர்தல் நேரத்தில்...இலவசம் படுத்தும்பாடு அப்பப்பா. சொல்லி மாளாது.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம். கொரோனா பற்றி தெளிவான விளக்கம் தந்ததற்கு நன்றி. கொரோனா பற்றியும், தடுப்பூசி பற்றியும் எத்தனையெத்தனை வதந்திகள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இத்தகைய வதந்திகளைக் கேள்விப் பட்டிருப்பதற்கும் அதைச் சொல்வதற்கும் நன்றி பானுமதி! வாட்சப் மூலம் கூட வருகின்றன.

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    வதந்திகளுக்கு - அதுவும் நம் ஊரில்! கேட்கவா வேண்டும்! அவர்களே நேரில் இருந்து பார்த்தால் போல செய்திகளைப் பரப்புவதில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. எத்தனை சொன்னாலும் புரியாதவர்கள்.

    இலவசம் - அரசியல் விளையாட்டு - ஏமாறுவது தாங்களே என்பது புரியாத (மா)மக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல்களில் நான் வோட்டுப் போட்ட வேட்பாளர்கள் ஜெயித்ததும் இல்லை! // - நினைத்தேன்... எந்த நல்லவன் தேர்தலில் இதுவரை ஜெயித்திருக்கிறான் என்று...

    பதிலளிநீக்கு
  13. கொரானாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் மறக்கப்பட்டு குற்றங்கள் தான் மன்னிக்கப்பட்டு விட்டனவே!..

    இனி கொரானா இரண்டாவது அலையின் போது தேனும் பாலும் ஓடும்!..

    பதிலளிநீக்கு
  14. ... (தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டும்) ...

    நல்லவேளை... நானும் தப்பித்தேன்...

    பதிலளிநீக்கு
  15. //இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, இரண்டு வாரங்கள் சென்ற பிறகுதான் தடுப்பூசியின் தடுப்பாற்றல் வேலை செய்யும். //

    முதல் ஊசி போட்டுக்கொண்டபின் தடுப்பு அரண் ஏற்படும்.  தொண்ணூறு நாட்களுக்குப் பின் அது வலுவிழக்க ஆரம்பிக்கும். இரண்டாவது ஊசி போட்டுக்கொள்வதால் அண்டஹ்த் தொண்ணூறு நாட்களுக்குப்பின் வலுவிழப்பு ஏற்படாமல் தடுப்பு அரண் உறுதியாய் இருக்கும்.

    இந்தத் தடுப்பூசியுமே நூறு சதவிகிதம் காத்துவிடும் என்று சொல்ல முடியாது.  இப்போது இருப்பதைவிட இன்னொரு ஐம்பது அல்லது அறுபது சதவிகிதம் கூடுதல் பாதுகாப்பு.  அவ்வளவுதான்.  நம்முடைய ஜாக்கிரதையிலும் இருக்கிறது.  நிறையபேர் கூடும் விழாக்களுக்கு போகக்கூடாது.  முகக்கவசம் கட்டாயம்.  சானிடைசர் போன்ற பொருட்களை அவ்வப்போது உபயோகிப்பதும் அவசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இந்தத் தடுப்பூசியுமே நூறு சதவிகிதம் காத்துவிடும் //


      "எந்தத் தடுப்பூசியுமே நூறு சதவிகிதம் காத்துவிடும்..."

      நீக்கு
    2. நல்ல விளக்கம். டிரஸ் இல்லாமல் இருப்பதற்கு ஒரு கிழிந்த டிரவுசராவது...என்ற அளவில்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைப் பார்க்கணும். அதைவிட முக்கியம், முககவசம் சரியாக உபயோகிப்பதும், தேவையில்லாத விழாக்களுக்குச் சென்று கலந்துகொள்ளாமல் இருப்பதும்தான். இப்போதெல்லாம், கொரோனா, திருமண விழாக்களுக்குச் செல்பவர்களைத்தான் தாக்குதாம் (ie chance of catching is too high)

      நீக்கு
    3. // கிழிஞ்ச டவுசராவது!?... ///

      நாங்க பொறந்த மேனிக்குத் தான் இருப்போம்!.. ஒங்க வெள்ள வேட்டிதான் கண்ண உறுத்துது!...

      நீக்கு
  16. இரண்டு தினங்கள் முன்பு கீழடி அகழ்வாராய்ச்சி இடத்திற்கு சென்று வந்தேன் ஞாயிறு ஆதலால் பூட்டி இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய புதன் பதிவில் எப்போதும் போல் சிந்திக்க வைக்கும் கேள்வி பதில்கள் அருமை. தடுப்பூசி இரண்டும் போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா வைரஸ் வருவதற்கு சாத்தியம் உள்ளது எனக்கூறுவது முன்னெச்சரிக்கை குறித்த பயனுள்ள விஷயம். ஆனாலும் இறைவனின் சித்தத்தை யார் தடுக்க முடியும்? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    இந்த ஊரிலும் தொற்று இல்லை என்று சாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.

    அவர்களால் எத்தனை நபர்களுக்குத் தொற்று சென்றடைந்ததோ தெரியாது.

    நேற்றும் நம் நாட்டில் வேற்று மானிலத்தில் நடந்த
    திருமணம் ஒன்றை தொலைக்காட்சியாகக்
    கண்டோம். எல்லோரும் அறிந்தவர்கள்.
    படித்தவர்கள். இருந்தும் முகக் கவசம் அணியவில்லை.

    இது நடந்த ஊரில் ஏற்கனவே தொற்று அதிகம்.
    அனைவரும் சுகமாகத் திரும்ப வேண்டும்.

    நாம் நல்லது சொன்னாலும் ஏற்கும்
    மன நிலையில் யாரும் இல்லை.
    இது தான் நிதர்சனம்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது சொன்னாலும் ஏற்கும்
      மன நிலையில் யாரும் இல்லை.
      இது தான் நிதர்சனம்.:(

      நீக்கு
  19. இதுவரை ஓட்டே போட்டதில்லை இலவசத்திற்கு எங்கு போவது ஒரு முறை அடையாள அட்டை சேஷன் காலத்தில் கிடைத்தது எலெக்ஷன் சமயம் நான் வேறு எங்காவது இருப்பேன் இம்மாதிரி யாருக்கும் அனுபவம் இருக்காது ஓட்டு போடாத அனுபவம் கேள்வி பதில் சுவாரசியமாக இருக்கிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. அன்பு காமாட்சிமா, என் கதையும் அதுதான். 2011இல் ஓட்டுப் போட்ட நினைவு,.
    இப்போது இங்கே இருக்கிறேன்.
    யார் மேலேயும் நம்பிக்கை விழவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // யார் மேலேயும் நம்பிக்கை விழவில்லை.// தமிழக அரசியல் நிலை அப்படி!!

      நீக்கு
  21. என் பதில் D. என் மற்றும் மகனின் வோட்டு இருப்பது மதுரை கிழக்கு. திமுக-அதிமுக நேரடி மோதல். பக்கத்தில் என்றால் போய்வந்து விடலாம். கொரோனா அச்சுறுத்தும் இவ்வேளையில் 'ரிஸ்க்' எடுக்கவிருப்பமில்லை. தபால் வோட்டு அல்லது ஆன்லைன் மூலம் போட அனுமதித்தால் வாக்களிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பதில். நன்றி. வோட் உரிமையை தற்போதுள்ள தொகுதிக்கு மாற்றிக்கொண்டிருக்கலாமே?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!