புதன், 24 நவம்பர், 2021

மழையில் நனையப் பிடிக்குமா?

 

கீதா சாம்பசிவம் :

கிழிந்த உடைக்கலாசாரம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நான் சொல்லி யார் கேட்கப் போறாங்க. அதே போல் இளைஞர்களின் தாடியும். நுனியில் கூர்மையாக வரும்படி அனைவரும் தாடி வைத்துக்கொள்கிறார்களே, இதன் காரணம் என்ன?

$ உலகம் பழித்ததை அழிக்க முடியாதவர்கள் வள்ளுவர் வழி நடக்க முயற்சி செய்பவர்கள் ?

# எதுக்கெல்லாம் காரணம் கேட்பது என்று ஒரு வரைமுறையே இல்லையா ? அலங்காரம் அவரவர் விருப்பம்.  அடுத்தவர் கடுப்பாவது அதை மாற்றாது.

ஃபாஷன் என்ற பெயரில் ஆபாசம் அருவருப்பு ஆட்சேபகரமானதுதான்.

& இந்த இடத்தில் ஒரு படம் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் -- -- 

நெல்லைத்தமிழன் : 

கேஜிஜி சாருக்கு ஓவியம் வரைவதில் ஆசையா இல்லை சந்தடி சாக்கில் கவர்ச்சிப் படம் போடுவதில் ஆசையா ?

$ Blog நடத்துவதில்.

# பொருத்தமாக வரைவதில்தான் ஆசை.

& ஹூம் இந்தக் கேள்வியைப் பார்த்ததும் வரைய நினைத்த படம் எல்லாம் மனதுக்குள் மழையில் கரைந்து போய் - - - -

மழையில் நனையப் பிடிக்குமா? எனக்கு மழை என்றால் அவ்வளவு ஆசை. நடைப்பயிற்சியின்போது (மிகப் பெரும் மழை தவிர) மழை வந்தாலும் அதை அனுபவித்துக்கொண்டே நடப்பேன்.

 # மழையில் நனைவது ஒத்துக் கொள்வதில்லை.

& மழையில் நனைந்து சந்தோஷப்படுபவர்களைப் பார்க்கப் பிடிக்கும். 

ஹோட்டல் உணவுப் பண்டங்களின் விலை, பல்வேறு காரணிகளை, Service Tax உட்பட, உள்ளடக்கியது. அப்படி இருக்கும்போது எதற்கு சர்வருக்கு டிப்ஸ் என்ற பிச்சையெடுக்கும் வேலை?

$ நீங்கள் பிறர் எதிரில் பெரிய வள்ளல் என்று காட்டிக் கொள்வதற்கு செய்யும் செலவு. என்னவோ துப்பாக்கியைக் காட்டி பணம் பறிக்கிற மாதிரி சொல்கிறீர்களே!

 # அற்ப சம்பளம் வாங்கும் நபருக்கு ஐந்தோ பத்தோ தருவது சரிதான்.  

& யானையையே விலை கொடுத்து வாங்குபவர், அங்குசம் வாங்க சுணக்கம் காட்டலாமா ! 

வரிசை என்று ஒன்று இருக்கும்போது, எதற்காக நாம் முன்னுரிமை கேட்க அல்லது வரிசையை ஏமாற்றி முன்னே செல்ல ஆசைப்படுகிறோம்? இந்தக் குணம், பெரிய நாடுகளில் இந்தியாவில்தான் இருக்கிறது.

 $ வளரும் நாடு!

# ஒழுங்கின்மை நமது தேசிய அடையாளம். அது வரிசை மீறலோடு நின்று விட்டால் நன்றாக இருக்கும்.

& வரிசையை ஏமாற்றுவது ஒரு சாமர்த்தியமான செயல் என்று பாமரர்கள், தவறாக நினைப்பதும் ஒரு காரணம். அடிச்சுப் பிடிச்சி எம்ஜியார் படத்துக்கு வரிசையில் ஏமாற்றி முன்னேறி , வேட்டி இழந்து வீரமாக வெற்றிக்களிப்புடன் சினிமா டிக்கெட் வாங்கி வருவதில் ஆரம்பித்த விடலைப் பருவ கண்றாவி அப்புறமும் தொடர்கிறது. 

எதனால் நாம் நகைச்சுவை நடிகர்கள்  சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை? அவங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஏன் நினைக்கிறோம்?

# மக்குத்தனம்தான் நகைச்சுவை என்று  ஆகிவிட்டதால் அவர்களை ஏமாளிகளாகப்  பார்க்கிறோம்.

& யாரைத்தான் நாம் சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்! நம்மைத் தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது என்றுதானே நினைக்கிறோம் ! 

நடிக்கும் கதாபாத்திரத்தின் இமேஜை நாம் ஏன் நடிகர்கள் தலையில் சுமத்துகிறோம்?  ஏழைக்குப் பாடுபடுபவனாக நடித்தால், இந்த நடிகர் ஏழைப்பங்காளி என நாம் ஒரு இமேஜ் கொடுப்பது போல

(எனக்கு இப்போதும் எஸ்.பி.பியின் சகோதரி, அடாவடிப் பேர்வழி என்றே ஒரு இமேஜ் மனதில் உண்டு, அவர் சலங்கைஒலி படத்தில் நடித்ததைப் பார்த்த பிறகு)

# கண்ணால் காண்பதே மெய்.  பார்த்துப் பார்த்துப் பதிந்து விடுகிறது போலும்.

& எஸ் பி ஷைலஜா உண்மையிலேயே அடாவடிப் பேர்வழிதான் - இதிலென்ன சந்தேகம்? சில வருடங்களுக்கு முன்பு விஜய் டீ வி சூப்பர்  சிங்கர் போட்டிகளில் அவர் தேர்வாளராக இருந்து, போட்டிக்கு வந்து பாடியவர்களை என்னவோ அவர் வீட்டு வாசலில் பொறுக்க வந்தவர்களைப் பேசுவதுபோல பேசியது இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது. 

பொதுவா, ஆண், ஒரு நல்ல தாயாக இருக்க முடியுமா?  இல்லை ஒரு பெண் நல்ல தந்தையாக இருக்க முடியுமா (அவர்களின் குழந்தைகளுக்கு.. விதிவிலக்குகளை விட்டுவிடுங்கள்)

# ஆண் தாயாக / பெண் தந்தையாக... இது எப்படி முடியும் ?

& தாயுமானவர் கேள்விப்பட்டிருக்கிறோம். தந்தையுமானவள் கேள்விப்பட்டதில்லை!  

ஜெயக்குமார் சந்திரசேகர் :  

கேள்விகள் அல்லாதவற்றிற்கும் கமெண்ட்ஸ் கொடுக்கலாம். 

& கொடுத்துடுவோம் !

விருந்துக்கு முன்புள்ள சாலட் போல. அப்போது நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. 

& சுவைக்க நீங்கள் தயார் என்றால், வழங்க நாங்களும் தயார்தான் ! 

எப்படியோ ஆசிரியர்கள் தீர்மானிக்கலாம். மிக்க நன்றி. கேள்விகளை மாற்றி அமைக்கலாம். எல்லா உரிமையும் ஆசிரியருக்கே. நன்றி.

& நாங்க பதில்களை மட்டுமே மாற்றி அமைப்போம்! 

கடவுளுக்கு கடிதம் எழுதும் கோண்டு (ஸ்ரீரங்கத்து தேவதைகள்-சுஜாதா) என்னிடம் சொன்ன சில கேள்விகள். 

& யப்பா கோவிந்து! வாப்பா வா !!

விரிவான பதில்கள் தரவேண்டியவை. ஆகவே EWI  (equal weekly instalments) முறையில் பதில் கொடுக்கலாம். 

& ஹி ஹி ! விரிவான பதில்கள் எல்லாம் தர எங்களுக்குத் தெரியாது!  

சிரி(றி)ய எச்சரிக்கை.

எல்லோரையும் திருப்தி படுத்தக்கூடிய பதில் எழுதுவது கடினம். (எல்லா கேள்விகளும் அப்படித்தானே! mind voice)

& எங்கள் திருப்திக்கு நாங்க பதில் அளிக்கிறோம். அவ்வளவே! 

1. ஆன்மீகம் என்றால் என்ன?

ஆன்மிகம் பக்தி அல்ல. பக்தி எல்லா மதத்திற்கும், மதம் இல்லாதவர்க்கும் பொதுவானது. ஆனால் ஆன்மிகம் என்ற வார்த்தை இந்து மதத்தினர் மட்டுமே சொல்வது. ஆன்மீகம் வேதத்திலோ புராணங்களிலோ சொல்லப்படவில்லை. அப்படி என்றால் ஆன்மிகம் என்றால் என்ன?

# உடல், புலன்களை மீறி நம்மிடம் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்ந்து அதை ஆத்மா என்று பெயரிட்டோம்.  ஆத்மா தொடர்பான தேடல் ஆன்மீகம். 

& அடுத்த கேள்வி பிளீஸ் - - 

2. மஹாபாரதத்தில் ஆஞ்சநேயர் எப்படி வந்தார்.

http://hindumythologyforgennext.blogspot.com/2012/08/bheema-and-saugandhika-flower-part-1-of.html 

அதேபோன்று துரியோதனன் மகனுக்கு லக்ஷ்மணா என்று பெயர். ராமாயணமும் மஹாபாரதவும் சம காலத்தவையா? அல்லது இது இடைச்செருகலா? 

# ஆஞ்சநேயர் சிரஞ்சீவி.  மகாபாரதத்தில் அவர் வருவது அல்ல இப்போது வராதிருப்பதுதான் ஆச்சரியம்.

இராமாயணத்துக்குப் பின் பாரதம்.

3. ப்ரம்மத்திற்கு தோற்றம் முடிவு என்பதில்லை. பிரம்மமும் பரமாத்மாவும் ஒன்றா? 

 # ஒன்று என்பதே இந்து மதக் கோட்பாடு.

& எல்லா உயிரினங்களுக்கும் உள்ளே இருந்து இயக்குவது ஒரே பிரம்மம்தான் என்று தெரிந்து தெளிந்தவன், பிரம்மஞானி என்று கேள்விப்பட்டதுண்டு. பரமாத்மா ஒவ்வொரு  பிரம்மத்தையும் அதனதன் ஊழ்வினைக்கேற்ப (பூர்வ ஜன்ம புண்ணிய பாவங்களுக்கேற்ப ) இயங்க வைப்பவர்.  

4. சூரியன் இல்லையேல் பூமி இல்லை. பூமி இல்லையேல் நாம் இல்லை. சூரிய வழிபாடு பண்டு முக்கியமானதாக இருந்தது. ஆனால் வேதங்கள் அக்னியையும்  இந்திரனையும் முக்கிய கடவுள்களாக வழிபடுகிறது. இது எவ்வாறு ஏற்பட்டது? ஏன்?

# வேதங்களில் சிவன்,  விஷ்ணு முதலான குறிப்புகள் கூட இல்லை என்று சொல்கிறார்கள். ஐம்பூதங்களைக் கண்டு உணர்ந்ததன் வெளிப்பாடாக வேதங்கள் இருக்கலாம். இந்தப் பெரும் சக்தியைத்தாண்டி கற்பனை செய்யத் தேவை இல்லாது இருந்திருக்கலாம்.

நமக்கு வேதங்கள் பற்றிய தெரிதலோ தெளிவோ இல்லை.  நான் சொல்வது கூட  ஊகமான எண்ணங்கள்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

ஆண்கள் தினத்தை எப்படி கொண்டாடினீர்கள்?

# குழந்தைகள் தினம் கொண்டாடிய மாதிரி தான். ஒன்றும் விசஷமாகச் செய்யாமல்...

& ஆண்கள் தினமா? எப்போ வந்துச்சுங்க ? முன்பே சொல்லியிருக்கக் கூடாதா! 

இணையத்தில் அதிக நேரம் செலவழிப்பது ஆண்களா? பெண்களா?

 # எல்லாரும்தான்.

ஒரு கலை வடிவத்தை   படைப்பு என்று மட்டும் பார்க்காமல் தங்கள் மன மாஸ்சர்யங்களை அதன் மீதுசுமத்துவது சரியா?

# எதைச் சொல்கிறீர்கள் ? ஜெய்பீம் கான்ட்ராவர்சியா ? சினிமா கலைவடிவமாக இருப்பது மிக மிக அபூர்வம்.  பெரும்பாலான "கலை வடிவங்கள்" வணிகப் பொருள்கள்தாம்.  எங்கோ எப்போதோ விதி விலக்காக ஒன்றிரண்டு இருப்பதுண்டு.

கலை வடிவம் காண்பவருக்கு எம்மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து அதன் மதிப்பு நிர்ணயமாகிறது. 

தாக்கங்கள் குறித்து ஏறுமாறான எதிர்ப்புகள் யாவும் பணம், விளம்பரம் அல்லது தேர்தல் வெற்றி நோக்கி உருவாக்கப் படுபவை.

உலகளாவிய ரீதியில் நிர்வாண ஓவியங்கள் சிற்பங்கள் கலை வெளிப்பாடாகக் கருதப் படுகின்றன.  பெரிய பெரிய மேதைகளும் இதில் அடக்கம். இம்மாதிரியான படைப்புகளின் நோக்கம் என்ன என்பது புரியாத புதிர்.  பல கோயில் சிற்பங்களும் இதில் அடங்கும்.

 = = = = =

ஏற்கெனவே நீண்ட பதிவைப் படித்து களைத்துப் போயிருப்பீங்க (இதுவரை யாராவது பொறுமையாக எல்லாவற்றையும் படித்தவர்கள் இருந்தால், கருத்துரையில் " படிக்கவில்லை" என்று எழுதவும். )

எனவே இந்த வாரம் நாங்க கேள்விகள் எதுவும் கேட்டு உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை.

 = = = = 

லைட் ஆக - - - படம் பார்த்து கருத்து சொல்லுங்க 

1) 

2) 


3) 

= = = =

99 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானு அக்கா.. வணக்கம்.

   நீக்கு
  2. காலைலயே 'மாலை' போட்டு வணக்கம் தெரிவிக்கிறாங்களே...

   நீக்கு
  3. //காலைலயே 'மாலை' போட்டு வணக்கம் தெரிவிக்கிறாங்களே...//எல்லாம் ஒரு பாசம்தான். இதில் எனக்கு முன்னோடி கீதா அக்கா.

   நீக்கு
  4. ஹிஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்கீஸ்! அங்கே மாலைன்னா இங்கே காலை அல்லவா? அதான் இரண்டு பக்கத்துக்கும் சேர்த்துச் சொல்லுவேன்.

   நீக்கு
 2. //தந்தையுமானவள் கேள்விப்பட்டதில்லை! // - பாலகுமாரனுக்கு அவருடைய அம்மாதான் எல்லாமாக இருந்தார் (அப்பா இல்லாததால்), அவருடைய வளர்ச்சிக்கு வித்திட்டு வளர்த்தவர் அவர்தான் என்று எழுதியிருந்தாரே

  பதிலளிநீக்கு
 3. அது சரி... தாயின் பொறுப்புகள் என்ன, தந்தையின் பொறுப்புகள் என்ன என்பதை அவதானித்தால் சுலபமாகச் சொல்லிடலாம் (என்னைக் கேட்டால்... தந்தை... புலி உறுமுவதுபோல உறுமுவதைவிட வேறு எதையும் செய்வதில்லை. தாய்தான் குழந்தையை திருமணம் வரை வளர்க்கிறாள்... என்ன சொல்றீங்க? ஹாஹா)

  பதிலளிநீக்கு
 4. கௌ அண்ணா முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்னி கேட்டோ!!!!..ஹிஹிஹி...எதுக்கு?
  எல்லாம் இந்த நெல்லைய படம் போட்டு ஒரு கலாய் கலாய்ச்சிருக்கீங்க பாருங்க!!! ஹையோ சிரிச்சு சிரிச்சு முடில...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை முதல் படத்திலா? அல்லது மூன்றாவது படத்திலா? மூன்றாவது என்றால் சரியில்லை. நெல்லை விபூதி பூசமாட்டார். 

   நீக்கு
  2. கொஞ்சம் 'அப்'புல பாருங்க !

   நீக்கு
 5. நெல்லை ஹைஃபைவ்! எனக்கும் மழையில் அதுவும் பன்னீர் போன்று தூவும் மழைச் சாரலில் ரசித்து நடப்பேன். என்ன ஒரே ஒரு பிரச்சனை. என் ஹியரிங்க் எய்ட் நனைஞ்சுருமேன்னு அதைக் கழட்டி பத்திரமா கைல டப்பால வைச்சுட்டு நடப்பேன்!!!!! இப்பக் கூட இங்க வானம் பன்னீர் தெளிப்பது போன்று மழைச் சாரல்...ரசித்துக் கொண்டிருக்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா! நல்லவேளை - பன்னிரெண்டு வயதிலிருந்து, ஐம்பத்தைந்து வயது வரை - நான் மழையில் நனைந்த நாட்களில், ஹியரிங் எய்ட் அணிய அவசியமில்லாமல் இருந்தது. இப்போ எல்லாம் மழையை பத்திரமாக நின்று / அமர்ந்து ரசிப்பத்தோடு சரி!

   நீக்கு
  2. எனக்கு நல்ல மழையாக இருந்தாலும் நடப்பதில் பிரச்சனை இல்லை. அனுபவித்து நடப்பேன். என்ன ஒண்ணு.. பார்க்கிறவங்களுக்குத்தான் வித்தியாசமாக இருக்கும். சில வாரங்கள் முன்பு, டென்னிஸ் கோர்ட் சுற்றி நடந்துகொண்டிருந்தேன். சட் சட் என்று பெரிய தூறல்கள். நான் கவலைப்படாமல் நடந்துகொண்டிருந்தேன். மர நிழலில் ஒதுங்கி என்னை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன நினைத்திருப்பாரோ ஹாஹா

   நீக்கு
 6. வால் பையன், துள்ளும் காளை, காசு கொடுத்தால் தான் ஆசீர்வாதம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 7. திருநெல்வேலியில் கனமழை இப்ப....இங்க கன்னியாகுமரியிலும் சொல்லிருக்காங்க. ஊரில் சாரல். மழை மேகம் ஊர்வலம். ஆனால் ஊரைச் சுற்றியுள்ள கீரிப்பாறை மலைகள், ஆரல்வாய்மொழி மலைகள் எல்லாம் இப்ப தெரிகின்றன. மழை மூடவில்லை. ஆற்றிலும், கால்வாயில் நீர் வரத்து இப்போது இல்லை. இன்று இரவு ரயிலில் பங்களூருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 9. முதல் கேள்வி என்னை கவர்ந்தது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்வி கவர்ந்தது. சரி. பதில்?

   நீக்கு
  2. கௌதமன் சார் படம் வரைந்திருந்தால் பதில் இன்னமும் நன்றாக இருந்திருக்குமோ? என்றாலும் இப்போதைய ஃபாஷன் கலாசாரம் ஏனோ மனதை உறுத்துகிறது.

   நீக்கு
  3. ஏன் வருத்தம்? உங்களைப் பாராட்டித்தானே சொல்லி இருக்கேன்? அல்லது ஃபாஷன் கலாசாரத்தை நினைத்தா? நீங்க எப்படிப் படம் வரைஞ்சிருப்பீங்கனு கற்பனை பண்ணிப் பார்த்துக் கொண்டேன்.

   நீக்கு
  4. தெளிவு படுத்தியதற்கு நன்றி.

   நீக்கு
  5. "கௌதமன் சார் படம் வரைந்திருந்தால் பதிவில் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?" என்று வந்திருக்கணும். பதிவு பதிலாகி விட்டது. அதான் உங்களுக்குக் குழப்பமோ? போகட்டும் விடுங்க! :))))))) ஆனால் இதிலும் உங்கள் படத்தால் பதில் இன்னும் சோபிக்கும் என்றுதான் சொல்லி இருக்கேன். :)))))

   நீக்கு
  6. ஏதோ கேள்வி கேட்க வந்து இதைப்பார்த்ததும் அது மறந்து போச்சு. மறுபடி யோசிச்சுப் பார்க்கிறேன்.

   நீக்கு
 10. பெண்ணின் பெருந்தக்க யாவுள...? ஒப்பீடு செய்வது பேதைமை...

  பதிலளிநீக்கு
 11. //பரமாத்மா ஒவ்வொரு பிரம்மத்தையும் அதனதன் ஊழ்வினைக்கேற்ப// - இந்து மதம் என்று பொதுவாகச் சொல்ல முடியாது. இந்து மதம் (அல்லது க்ரூப்) என்பது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று மதங்களையும், வேதத்தைவிட்டு விலகிச் செல்லும் மூன்று மதங்களையும் கொண்டது. வேதத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று மதங்களில் அல்லது நிச்சயமான இரண்டு மதங்களில், ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரு தத்துவ வேறுபாடுகளே கோட்பாட்டை நிர்ணயிக்கிறது. ஆனால் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் ஸ்ரீமந் நாராயணனே முழு முதற் கடவுள் என்பதை ஒத்துக்கொண்டுதான் மற்ற விளக்கங்களைத் தருகிறது.(த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்)

  ஸுகப் ப்ரம்மம் என்பதை வைத்துக்கொண்டு, 'ஒவ்வொரு ப்ரம்மம்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மையில் இருப்பது, பரமாத்மா (முழுமுதற்கடவுள்), ஜீவாத்மா (உடலில் இயங்கும் நம் ஆத்மா), அதன்மீது சாட்சிபூதமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் பரமாத்மாவின் ஒரு துளி.

  /பரமாத்மா ஒவ்வொரு பிரம்மத்தையும் அதனதன் ஊழ்வினைக்கேற்ப இயங்கவைப்பவர்// - இதுவும் தவறான புரிதல். பரமாத்மா நம்மை இயங்கவைப்பவர் அல்லர். நாம் நம் ஊழ்வினைக்கேற்ப முடிவுகளை எடுக்கிறோம், திருந்தி ஞானம் பெற்று நல்ல வழிக்குச் செல்லும் முடிவும் நம்மால் எடுக்கமுடியும். பரமாத்மா இயங்க வைக்கிறார் என்றால் நமக்கு அதில் பொறுப்பு இல்லை என்றாகிறது. நான் கொலை செய்தேன் அதற்கு பரமாத்மாதான் காரணம், நான் புண்யகாரியங்கள் செய்தேன் அதற்கும் பரமாத்மாவே காரணம் என்று எப்படிச் சொல்வது (கடமையில் பற்றற்று இருப்பது வேறு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துகளையும் உங்கள் கண்ணோட்டமாக ஏற்றுக் கொள்கிறேன்.

   நீக்கு
  2. ப்ரம்மம் ஒன்று தான், பரப்ரும்மம் ஒன்றுதான். எப்போவோ அன்னமாசார்யார் சொல்லிட்டுப் போயிட்டார். மஹாநதி ஷோபனா குரலில் இதைக் கேட்கப் பிடிக்கும். நேற்று அருணா சாய்ராம் குரலில் "முத்தைத்திரு" திருப்புகழ் கேட்டுவிட்டு மெய் சிலிர்த்துப் போய்விட்டது. அனைவரும் எழுந்து நின்று கைதட்டி standing ovation கொடுத்தார்கள். தயாரிப்பு சுபஶ்ரீ தணிகாசலம். இந்த வருடத்தியதுனு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. த்வைதமா / அத்வைதமா என்ற சர்ச்சைக்குள் நுழைந்தால் முடிவில்லாமல் சுற்ற வேண்டியதுதான்!

   நீக்கு
 12. //என்னவோ அவர் வீட்டு வாசலில் பொறுக்க வந்தவர்களைப் பேசுவதுபோல // - புதன் கேள்வி - எப்படி விநோதமான குணங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்களிடம் இருக்கிறது? எஸ்பிபி மிக மிக நல்ல ஆத்மா என்ற உணர்வு தோன்றும்போது ஷைலஜா ரொம்ப அடாவடிப் பேர்வழி என்று தோன்றுவது போல

  பதிலளிநீக்கு
 13. //ஆண்கள் தினத்தை எப்படி கொண்டாடினீர்கள்?// - பஹ்ரைனில் இருந்தபோது, (என் அம்மாவும் வந்திருந்தார்) ஒரு மே 1ம் தேதி, காலையில் 5 1/2 மணிக்கு எல்லோரையும் காரில் ஏற்றிக்கொண்டு, காலை உணவு, சுற்றுதல், மதிய உணவு, ஒரு சில வணிக வளாகங்கள் ஊர் சுற்றல், கடைசியில் இரவு உணவு 11 மணிக்கு என்று முடித்துக்கொண்டு 12 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். ஒரு நாள் முழுவதும் மனைவிக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று.

  மத்தபடி, பெண்கள் தினம், ஆண்கள் தினம், அப்பாடக்கர் தினம் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை

  பதிலளிநீக்கு
 14. சான்றோனாக்கும் தந்தையின் கடனை தாயால் செய்து விட முடியும், ஆனால் ஈன்று புறம் தரும் தாயின் கடனை யாராலும் செய்ய முடியாது. அதற்கு உதவ வந்ததற்கே தாயும் ஆனவர் என்று ஒரு உயர்வு சிறப்பு உம்மை போடப்பட்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதற்கு உதவ வந்ததற்கே தாயும் ஆனவர் என்று ஒரு உயர்வு சிறப்பு // - இது எனக்கு மட்டும்தான் புரியலையா?

   நீக்கு
 15. எனக்கு மழையில் நனைய பிடிக்கும். டூ வீலரில் வந்து கொண்டிருந்தால் கூட, மழை பெய்யும் பொழுது ஒதுங்க மாட்டேன். சாலையும் காலியாக இருக்கும், நனைந்தபடி ஓட்டி வந்து விடுவேன்.

  பதிலளிநீக்கு
 16. //யானையையே விலை கொடுத்து வாங்குபவர், அங்குசம் வாங்க சுணக்கம் காட்டலாமா ! // - யானை வாங்கும்போதே அங்குசத்துக்கும் சேர்த்துத்தானே சார்ஜ் பண்ணறாங்க. அப்புறம் எதற்கு இந்தக் கைநீட்டல்? அப்போ சலூன், வீட்டு இண்டீரியர் வேலை செய்பவர், தண்ணீர் கேன் போடுபவர், நியூஸ் பேப்பர் போடுபவர் என்று வகை தொகை இல்லாமல் எல்லாருக்குமே டிப்ஸ் என்ற பிச்சை கொடுக்கணும் அல்லவா?

  பதிலளிநீக்கு
 17. படம் 1. நிஜமான வால்தான் நம்ம பையனுக்கு பார்க்கலாம்.
  படம் 2. பாயும் காளை
  படம் 3. படத்தில் மறைந்தது மாமத யானை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // படம் 1. நிஜமான வால்தான் நம்ம பையனுக்கு பார்க்கலாம்.// மிகவும் வித்தியாசமான இரசனையான கமெண்ட்! நன்று.

   நீக்கு
 18. எஸ்.பி.பி.கணவான் என்று கூறிவிட முடியாது. முன்னுக்கு வர வேண்டிய இளைஞர்கள் பாட வேண்டிய பாடலை அவர் பறித்துக் கொண்ட சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.ஆனால் அவை வெளியே வந்ததில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் புண்யகார்யத்தைக் கொஞ்சம் விமரிசையாக வடக்கே செய்துகாட்டியவர் ஒரு அம்மணி. தன்னைவிடச் சிறந்த குரல்வளம், திறன் உடையவர்களைக் கண்டு அஞ்சி, அவர்களின் இளம் வயதிலேயே பாலிவுட்டிலிருந்து விரட்டிவிட்ட மஹானுபாவர்தான் லதா மங்கேஷ்கர் (அவருக்கு உதவிய செல்வாக்கு மிக்க அல்லக்கைகளுடன் சேர்ந்துகொண்டு). லாதா பாட்டிக்கு சூடம் சாம்பிராணி காண்பிப்பவர்களும் கொஞ்சம்பேர் உண்டு !

   நீக்கு
  2. இன்றைய பதிவில் நிறைய விவாத மேட்டர் இருக்கு போலிருக்கே!

   நீக்கு
  3. ஆமாம், வாணி ஜெயராமை ஒழித்துக்கட்டியதில் லதா மங்கேஷ்கருக்குப் பெரும் பங்கு உண்டு. அடுத்துக் கவிதா கிருஷ்ணமூர்த்தியும் என நினைக்கிறேன். :(

   நீக்கு
  4. கீதா தத்! கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேரா நாம் சின் சின் சின், Babuji dheere chalna.. pyaar mein zara sambalnaa...!, Mujeh jaan na kaho, meri jaan ..! இப்படிக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். கீதாவின் குரலோடு அவரது ரேஞ்ச், versatility தெரியவரும். 41 வயதிலேயே அவர் போய்விட்டார் எனினும் அவரை அதிகமாகப் பாடவிட்டிருக்கமாட்டார் புண்யவதி லதாஜி!

   நீக்கு
  5. ஆஹா! நன்றாகவே தெரியும். ஒரு காலத்தில் இவை எல்லாம் உயிர் நாடியாக இருந்த பாடல்கள். இப்போதெல்லாம் கேட்பது குறைந்திருக்கிறது. சென்னையில் இருந்தவரை கணினியில் உட்கார்ந்தாலும் பின்னணியில் இசை ஒலிக்கும். ஏனோ இப்போதெல்லாம் தோன்றுவதில்லை. கீதாவின் குரலோடு ஒப்பிட்டால் லதா மங்கேஷ்கர் ஒண்ணுமே இல்லை.

   நீக்கு
 19. குரங்கு சேட்டை புகைப்படம் அதிகம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 20. சூப்பர் சிங்கரில் ஷைலஜா அடாவடியாக நடந்து கொண்டதாக நான் உணர்ந்ததில்லை. போட்டியாளர்களை அநாகரீகமாக திட்டியது கிருஷ்(ராஜ் டி.வி.). வெளிப்படையாக ஓரவஞ்சனை காட்டியது ஸ்ரீநிவாஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த சூப்பர் சிங்கர் போட்டி சில வாரங்களில் நான் கண்டதை சொல்லியிருக்கிறேன்.

   நீக்கு
  2. நல்லவேளையாக நான் இதெல்லாம் பார்த்ததில்லை/பார்ப்பதும் இல்லை/பார்க்கப் போவதும் இல்லை. :)

   நீக்கு
 21. மழை..
  மழையில் நனைவது
  தனியொரு ஆனந்தம்...

  தற்போது அதை விரோதியாக ஆக்கியது - ஊழல் துளைத்த அரசியல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மழையில் நனைவதற்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியவில்லை.

   நீக்கு
 22. இன்றைய பதிவில் விறுவிறுப்பு குறைவாக உள்ளதே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைகள் காம்பன்சேட் செய்துகொண்டு உள்ளனவே!

   நீக்கு
 23. யானை தொட்டுவிடும் தூரம்தான். எம்பவேண்டியதில்லை!

  பதிலளிநீக்கு
 24. இன்னும் எங்கள் ஊரில் ஹோட்டல்களில் டிப்ஸ் பழக்கம் அத்தனை ஏற்பட்வில்லை. பில்லைக் கொடுத்துவிடுகிறார்கள் அதைக் காட்டி பணத்தை கல்லாவில் இருப்பவரிடம் கொடுத்தால் போதும். பரிமாறுபவர்களும் நம்மை ஒரு மாதிரி பார்ப்பதுமில்லை. ஆரியபவன் போன்ற ஹோட்டல்களில் கூட டிப்ஸ் பழக்கம் இல்லை.

  டிம் லைட் போட்ட ஹோட்டல்கள் பற்றித் தெரியவில்லை!

  கீதா

  பதிலளிநீக்கு
 25. @ கௌதம்..

  // மழையில் நனைவதற்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? எனக்குப் புரியவில்லை..//

  ...... யில் பரவலாக மழை..
  சாலைகளில் மழைநீர் தேக்கம்..
  வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.
  எங்கு பார்த்தாலும் தண்ணீர்..
  இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
  வடிகால் கட்டமைப்பு சீர்குலைவு..

  இதற்கெல்லாம் காரணம் என்ன?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! அந்த சம்பந்தமா - ஓ கே. நான் நனைவதை நினைத்துக் குழம்பிவிட்டேன்.

   நீக்கு
 26. சற்று முன்னர் தான் தொலைக்காட்சியில் நம் முன்னோர்கள் பற்றியதொரு ஆவணப்படம் பார்த்தேன். அம்மா/அப்பா உட்கார்ந்திருக்கக் குட்டிக்குரங்கு அங்குமிங்கும் ஓடி விஷமம் செய்ய அலைய அம்மா கண்டிப்புடன் அதைப் பிடித்துக் கைகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டு உட்கார, அந்தக் குட்டி மெல்ல மெல்ல நகர்ந்து போய் அம்மாவின் தலைமேல் ஏறிக் கொண்டு/பின் அப்பாவைத் தாஜா செய்து தப்பித்து ஓடப் பார்த்தது. முடியலை/

  பதிலளிநீக்கு
 27. அடுத்தது ஃபோட்டோ ஷாப் செய்த படமோ? காளை ஏன் நீரில் பாய்கிறது? ஆனால் இந்தப் படத்தை எப்போவோ/எங்கேயோ/முன்னாடியே பார்த்த மாதிரி இருக்கே!

  பதிலளிநீக்கு
 28. ம்ம்ம்ம் நம்ம மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நிதிக்கு அருகே இருந்த குட்டி ஆனை மாதிரி இருக்கு. அந்த அம்மா பயந்துண்டே குட்டியின் தும்பிக்கையைப் பிடிக்க/அல்லது காசு கொடுக்க முயல்கிறார்கள். அது இவங்க பயப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ஓரக்கண்ணால் பாகனிடம் ஜாடை காட்டுகிறது. சூலம் வரைஞ்சிருப்பதால் ஏதேனும் அம்மன் கோயில் ஆனையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள் !

   நீக்கு
  2. அட! நம்ம பொழுதுபோக்கே ஆனைக்குட்டிங்களைக் கவனிக்கிறது தானே! திரும்பத் திரும்ப அலுத்துக்காமப் பார்ப்போமாக்கும். :)

   நீக்கு
 29. கேள்வி பதில்கள் ரசனை.
  1) தண்ணீர் இதமான சூடுதான் வா குளிக்க.
  2) காளைப் போட்டியா? ....அய்யோ நான் வரவில்லை.
  3) ஆசீர்வாதம் தரமாட்டேன்.

  பதிலளிநீக்கு
 30. ///சர்வருக்கு டிப்ஸ் என்ற பிச்சையெடுக்கும் வேலை?///

  சர்வர் மட்டுமா பிச்சை எடுக்கிறார் அரசு அலுவலகத்தில் உள்ள அனைவரும்தானே பிச்சை எடுக்கிறார்கள் அங்கே டிப்ஸ் லஞ்சம் என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது...

  சர்வர் டிப்ஸ்;;; அமெரிக்காவில் சர்வருக்கு மிக மிக குறைந்த சம்பளமே தரப்படும். சர்வர்கள் தங்கள் தரும் தரமான சர்வீஸினால்தான் டிப்ஸ் பெற முடியும்.. அதுதான் அவர்களது வருமானம்.. சர்வர்கள் தரமான சர்வீஸை தரவே இப்படி ரெஸ்டராண்ட் ஒனர்கள் செய்துள்ளனர். இதை மேலை நாட்டு மக்கள் நங்கு அறிந்துள்ளதால் தாரளமாக 15 ல் இருந்து 25 சதவிகதம் டிப்ஸ் தருவார்கள்.. இப்படி கொடுப்பதில் இந்தியர்கள் மிக கஞ்சர்கள்... நாந்தானே சாப்பாட்டுக்கு பணம் தருகின்றேனே அப்புறம் டிப்ஸ் எத்ற்கு என்ற மெண்டாலிட்டிதான் காரணம்

  பதிலளிநீக்கு
 31. 1. சாப்பாடு/சமையல் முறை உலகெங்கும் பொதுவானதாக இருக்கச் சிலருக்கு அது மட்டமாகத் தெரிவது ஏன்?
  2.சமையல் பற்றிப் பேசினாலோ/கேள்விகள்கேட்டாலோ அது சிலருக்கு ஏன்
  பிடிப்பதில்லை? அவங்கல்லாம் சாப்பிட மாட்டாங்களா?
  3.உங்களுக்கு உங்க சமையல்/அம்மா சமையல்/மனைவி சமையல்/பெண் சமையல்/
  மருமகள் சமையல் இவற்றில் யாரோட சமையல் பிடிக்கும்?
  4.எந்தப் புத்தகக் கண்காட்சி வைத்தாலும் சமையல் புத்தகங்கள் மட்டும் விற்றுப் போவதன் காரணம் என்ன?

  பதிலளிநீக்கு
 32. 5. தொலைக்காட்சித் தொடர்களை விடாமல் பார்க்கும் வழக்கம் உங்களில் யாருக்கு உண்டு?
  5. நம்ப முடியாதபடிக்கு அதில் பெண்கள் அடியாட்கள் எல்லாம் வைத்துக்கொண்டு தனக்குப்பிடிக்காதவர்களைப் பழி வாங்குவதும், சர்வ சாதாரணமாக "அவனைத் தூக்கிடறேன்!" என்று சொல்வதும் சரியா? இந்தத் "தூக்கறேன்" என்பதை நானும் என்னமோ சாதாரணமாகத் தூக்கிச் செல்வதாகத் தான் நினைச்சிருந்தேன். கடைசியில் பார்த்தால் (ஆரம்பத்தில் இருந்தே) தூக்கிடறேன் என்றால் "கொலை பண்ணிடறேன்" என்று அர்த்தமாம். சீரியலில் சர்வ லோக நிபுணி ஒருத்தர் மூலம் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 33. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.

  மழையில் நனைவது மிகவும் பிடிக்கும் . மழையை ரசிப்பது பிடிக்கும்.
  பெருமழையாக பெய்யும் போது கவலை வந்து விடும் அனைத்து ஜீவராசிகளும் கஷ்டபடுமே என்று.

  மழையால் மக்கள் படும் துன்பங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறோம். மற்ற உயிரினங்கள் என்ன பாடு படுகிறதோ! காலநடைகள் நீரில் அடித்து செல்வதை பார்த்தோம்.

  சேட்டை செய்யும் குட்டி குரங்கை "வாலை சுருட்டி வைத்து கொள் "என்று கண்டித்து சொல்கிறதோ தாய் குரங்கு.
  ஜல்லிகட்டு காளை நீரில் பாய்வது குளிக்கத்தான் என்று நம்புகிறேன்.
  பாகன் அருகில் இருக்கிறார், குட்டி யானை என்ர தைரியத்தில் தொட்டு வணங்கி கொள்கிறார் பெண் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பயம் இருக்கிறது அவருக்கு என்பதை அவர் நிற்கும் தோரணை சொல்கிறது.  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!