வியாழன், 25 நவம்பர், 2021

முகங்கள் (செஹ்ரே ...)

 பகத் பாசில் பெயரைக் கொண்டாடினார்களே என்று ஒரு படம் பார்த்தேன்.  சகிக்கவில்லை.  அண்ணன் , அக்கா என்று குடும்பத்தார் எல்லோரையும் வித்தியாசமில்லாமல் பாரபட்சமில்லாமல் கொல்கிறார்!  

சமீபத்தில் பார்த்தது ஒரு இந்திப்படம்.  பெல்பாட்டம். பெல்பாட்டம் என்றதும் நிறைய பேர்களுக்கு 80 களின் ட்ரெஸ் ஸ்டைல் ஞாபகத்துக்கு வரும்.  தொளதொளவென்று பேண்ட்ஸ், கீழே பாதத்தில் 32, 36, 42 என்று அகலம் வைத்துத் தைப்பார்கள்.  இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் கமல், ரஜினி, தோஸ்தானா, ஷோலே, யாரானா  போன்ற படங்களில் அமிதாப் கூட பெல்பாட்டம் போட்டிருப்பார்!  அதற்கு ஜோடி தலையில் ஸ்டெப் கட்டிங்!


இங்கு பெல்பாட்டம் என்பது ஒரு சீக்ரெட் ஏஜெண்ட்டுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் புனைப்பெயர்.  காலிஸ்தான் தீவிரவாதிகளால் 80 களில் சில விமானங்கள்  ஹைஜாக் செய்யப்பட்ட நேரத்தில் பிரதமர் இந்திரா காந்தி ஒரு முடிவு எடுக்கிறார்.  ஜியா உல் ஹக்கின் திரைமறைவு ஆட்டங்களை சொல்கிறது படம்.  அக்ஷய் குமார் தன் சொந்தப் பெயர் மறைத்து பெல்பாட்டம் என்கிற மறைபெயரில் நேரடியாகச் சென்று கடத்தப் பட்டவர்களை மீட்கும் நிஜக்கதை.  அதாவது நிஜமாக நடந்த கதை.  சுவாரஸ்யமாகவே இருந்தது.  அதீமான காதல், சண்டைக்காட்சிகள், மெலோ ட்ராமா, இல்லாத, ஏன், ஆக்ஷன் காட்சிகள் கூட தேவைக்கேற்பவே அமைந்த படம்.  அக்ஷய் நன்றாகவே செய்திருக்கிறார்.  தான் சீக்ர ஏஜென்ட் என்பதை மனைவியிடமே (வழக்கம்போல) மறைக்கும் அக்ஷய், கடைசி சின்ன ட்விஸ்ட் என்று எல்லாமே சுவாரஸ்யம்.

சுமார் ஒரு மாதத்துக்கு முன் பார்த்த படம்  - செஹ்ரே.   முகங்கள் என்று பொருள்.  படத்தில் அமிதாப்பைப் பார்த்ததும் பார்க்கத் தொடங்கினேன்.  


இதேபோல சில நாட்களுக்குமுன் 'ஆங்கேன்' என்னும் அமிதாப் படம் பார்க்கத் தொடங்கி விக்கியில் சென்று கதை படித்ததன் காரணம், படத்தைப் பார்க்காமலேயே கைவிட்டேன்.  தனது உழைப்பால் ஒரு வங்கியை நல்ல முறையில் வளர்த்து வைத்திருக்கிறார் அமிதாப்.  ஆனால் அவரது கோபம் பிரசித்தமானது.  ஒரு கிழவியிடம் பணம் கொடுக்கும்போது வங்கி ஊழியர் ஒருவர் பத்து ரூபாயோ, நூறு ரூபாயோ ஏமாற்றி விடுகிறார். அதைப் பார்த்துவிடும் அமிதாப், அவரை கொலை செய்யுமளவு துவைத்து எடுக்கிறார்.  


அவரை வங்கி டிஸ்மிஸ் செய்கிறது.  அவர் எதிரிகளுக்கு கொண்டாட்டம்.  இவர் ஆற்று ஆற்றுப் போகிறார்.  என்னை எப்படி, நான் யார், எப்படி உழைத்தேன் என்றெல்லாம் யோசிக்கிறார்.  அந்த வங்கியை பற்றி அக்குவேறு ஆணிவேர் அறிந்திருப்பதால் அதைக் கொள்ளையிட்டு அவர்களுக்குப் பாடம் கற்றுத்தர தீர்மானிக்கிறார்.  அதற்கு அவர் மூன்று கண்தெரியாதவர்களை தெரிவு செய்கிறார். அதில் அக்ஷய் குமாரும் ஒருவர்.  அப்புறம் கதை படித்து படம் பார்ப்பதை நான் கைவிட்டுவிட்டேன்! 

செஹ்ரே படத்தையும் அது மாதிரி செய்யக் கூடாது என்று கதை படிக்காமல் படம் பார்த்தேன்.  அமிதாப்பும், இம்ரான் ஹாஷ்மியும் முக்கிய பாத்திரங்களில்.  இன்னொரு கேரக்டரில் வருபவர் அன்னு கபூர் என்று நம்பவே முடியவில்லை.  பிங்க் நீதிபதி இங்கும் நீதிபதி!


ஒரு மெசேஜ்ஜைப் படித்து விட்டு வேகமாக வரும் இம்ரான் கார், காட்டின் நடுவே, பனிமலையில் சிக்கிக் கொள்கிறது.  அதுவே ஒரு வலை.  உதவிக்கு 'எதிர்பாராவிதமாக' வரும் அன்னு கபூர் அவரை ஒரு இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார்.  அங்கு ஏற்கெனவே இரண்டு நபர்கள், ஒரு பெண் இருக்க, அப்புறம் இன்னும் இருவரும் சேர்த்து கொள்கிறார்கள்-அமிதாப்பையும் சேர்த்து.

மெல்ல பேச்சு தொடங்க, இம்ரானை மற்றவர்கள் அவர்கள் தாங்கள் தினசரி மாலையில் விளையாடுவதாகச் சொல்லும் ஒரு விளையாட்டுக்கு அழைக்கிறார்கள்.  அந்த மாளிகையில் ஏற்கெனவே சில பொருள்களையும், சில படங்களையும் பார்த்து இம்ரான் கிலேசமடைந்திருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் சமாளிக்கிறார்.  விளையாட்டுக்கு வராமல் மறுக்கும் அவனை மற்றவர்கள் சீண்டிச் சீண்டியே விளையாட்டில் இணைக்கிறார்கள்.

விளையாட்டு என்பது, நீதிபதி நீதிபதியாகவும், அமிதாப் அரசாங்கத் தரப்பு வக்கீலாகவும், அன்னு கபூர் குற்றவாளி சார்பில் ஆஜராகும் 'விளையாட்டு'.  குற்றவாளி இம்ரான்.  அவன், தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்.  இன்னொருவர் இருக்கிறார்.  அவர் யாரென்று கேட்டால் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டால் நிறைவேற்றுபவராம்.  அங்கிருக்கும் பெண்ணை இம்ரான் வசப்படுத்த முயல்கிறான்.  அவளுக்கொரு அண்ணன் வேறு இருக்கிறான்.

மிகவும் சீரியஸாகவே விளையாட்டு தொடர்கிறது.  இம்ரான் பதட்டமடைகிறான்.  விளையாட்டை இடையில் நிறுத்தவும் முடியவில்லை.  அது ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கும் விதி.  இறுதியில் என்ன ஆகும் என்றும் அவனுக்கு புரியவில்லை.  நடுவிலேயே தப்பிக்கவும் முயற்சிக்கிறான்.

இறுதியில் நான் நினைத்த ட்விஸ்ட் ஒன்று இல்லை என்றானது.  சமீபத்தில் நான் பார்த்த படங்களில் வித்தியாசமான படம்.  இந்த வருடம்தான் வெளியாகி இருக்கிறது..  அவர்கள் சொல்லிக் கொள்ளாத ஒரு விஷயம், இந்தப் படம் 1956 ல் வெளியான 'டேஞ்சரஸ் கேம்' என்கிற ஆங்கிலக் கதையின் தழுவல்.  இது ஏற்கெனவே மராத்தி, கன்னடம், வங்காள மொழிகளில் தழுவி எடுக்கப்பட்டிருந்திருக்கிறது.

=========================================================================================================

என் கவிதை ...

மழையில் நனைந்த காக்கை 
மனதில் 
என்ன இருக்கும்?
சிறகுகள் சீக்கிரம் காயவேண்டுமே 
என்கிற கவலையைத்தவிர?

உடல் சிலிர்த்துப் பறக்கும் 
ஒரு 
உஷ்ணமான அனுபவத்துக்கு 
காத்திருக்கிறது மனம்  

=====================================================================================================


சமீபத்தில் படித்தது...


சென்னை மயிலாப்பூரில், 'ஆழ்வார்' புத்தகக் கடையைத் தற்போது நடத்தி வரும் ஆழ்வாரின் நான்கு மகள்களில் ஒருவரான ஜூலி:
"சென்னையிலேயே பழைய புத்தக கடைகளில் எங்கள் கடையும் ஒன்று. வாடிக்கையாளர்கள் எங்கள் கடையை 'தாத்தா கடை' என்று அன்புடன் அழைப்பர். சென்னைக்கு வந்ததும் அப்பா, சின்ன சின்ன வேலையாக ஆரம்பித்து, லஸ் ஏரியாவில் பழைய பேப்பர் வியாபாரம் செய்யும் அளவில் வளர்ந்தார். 

சினிமாவிலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அவரின் ஆர்வம் எல்லாம் புத்தகங்கள் மீது தான். ஆரம்பத்தில், சென்னை முழுக்க சைக்கிளிலேயே சென்று புத்தகங்களை வாங்கி வந்தார். அண்ணாதுரை கூட எங்கள் கடையில் புத்தகங்கள் வாங்கிச் சென்றுள்ளார். 

எத்தனையோ உயர் அதிகாரிகள் கூட எங்கள் கடையின் வாடிக்கையாளர்கள். நிறைய வக்கீல்கள் வீட்டுக்கு அப்பாவே போய் புத்தகங்கள் கொடுத்துட்டு வருவார். இப்படி எவ்வளவோ அதிகாரிகள் தெரிந்திருந்தாலும், அப்பாவுக்கு புத்தகங்கள் தவிர, வேறு எந்த ஆசையும் இல்லை. யாருக்கும் தொந்தரவில்லாமல் இருந்தாலும், நிறைய முறை கார்ப்பரேஷனில் இருந்து ஆட்கள் வந்து கடையை அப்புறப்படுத்தி, புத்தகங்களை எடுத்து சென்று விடுவர்; அவர் புத்தகங்களை போராடி மீட்டு வருவார். 

செங்கல்கள் இல்லாமல், புத்தகங்களால் கட்டப்பட்ட வீட்டில் தான் நாங்கள் வளர்ந்தோம்; அதற்கு பின் தான் தனியாக வீடு பார்த்து குடியேறினோம். அவரது 13 வயதில் துவங்கிய இந்த கடை, அவர் சாகும் வரை இந்த கடை தான் அவரது உயிராக இருந்தது. 

பெற்றோர் மறைவுக்கு பின், கடையை மூடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். என் சிறு வயதில், எங்கள் கடை திருவிழா போல இருக்கும்; மக்கள் வந்தபடியே இருப்பர். 

ஆனால், இன்று 'ஆன் லைன், டிஜிட்டல்'னு வந்து விட்டதால் புத்தகங்களின் வரவும், வியாபாரமும் குறைந்து விட்டது. பழைய புத்தகங்கள் தானே என்று வாடிக்கையாளரும், விலையை குறைத்து கேட்கின்றனர். இதனால், ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு விற்பதே சிரமமாக இருக்கிறது.

தற்போது, மெட்ரோ பணி துவங்குவதால், கடையை காலி செய்ய சொல்கின்றனர்; அதனால், எங்கு செல்வது என்று தெரியவில்லை. எங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமே புத்தகங்கள் தான். எங்கள் புத்தக கடையை நடத்த நிரந்தரமான ஒரு இடம் ஏற்படுத்திக் கொடுத்து, எங்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

=======================================================================================================================

எப்பவோ பகிர்ந்தவை, இப்போ மறுபடி உங்க பார்வைக்கு...!=======================================================================================================================

ஜோக்ஸாம்...!

யாருடைய நேரம் சிக்கனமாகிறது?

பதினெட்டுக்கு மேலயா...  ஊஹூம்... ஏறவே ஏறாது!


சுத்தமான வேலை 

முன்னால போறது ஆணா, பெண்ணா?!


59 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளிரில் முடங்காமல் வெளியில் பறக்கும் உஷ்ணமான அனுபவம்! உஷ்ணமான அனுபவம் என்றால் அது ஒன்றுதானா?!  எனினும், கழுகளவு பறக்க முடிவதில்லை காக்கைகளால்!

   நீக்கு
 2. நீங்கள் காக்கையை நினைத்தீர்கள். நான் உங்களை நினைத்தேன். காக்கைக்கு தேவை உஷ்ணம் மட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி, என்னை நினைக்காமல் எல்லோரையும் நினைக்கலாம்!

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து வரப்போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் புயல்/மழை முற்றிலும் இல்லாமல் காற்றழுத்தத் தாழ்வு நிலை பலவீனம் அடையப் பிரார்த்தனைகள். இத்தனை மழையைத் தமிழகம் தாங்காது. இறை அருளால் போதிய நீர் வரத்து இருப்பதால் இனி மழை குறைந்து அடுத்த வருஷம் திரும்ப வரட்டும் எனப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று நாட்கள் மழை இருக்கும் என்றார்கள். இப்போது ஒன்றாம் தேதி வரை இருக்கும். கனமழை இருக்கும் என்று பிரதீப்பும் சொல்கிறார். 2015 நினைவுக்கு வருகிறது. கடவுள் காப்பாற்றட்டும்.

   நீக்கு
  2. தற்போதைய செய்தி! பாலிமரில் வந்தது! உருவாகிக் கொண்டிருந்தது பலவீனமாகிவிட்டதாகவும் இன்னொன்று அடுத்த வாரத்தில் உருவாகும் எனவும் தொலைக்காட்சிச் செய்தி.

   நீக்கு
  3. ஆஹா... நல்ல செய்தி! கடையிலிருந்து ஒரு கிலோ முந்திரி ஸ்வீட் வாங்கிக்குங்க... (உங்க காசுலதான்..ஹிஹிஹி...)

   நீக்கு
  4. ஆனால் மழை இருக்கும் என்று சொல்கிறார்களே! :( குறைவாகப் பெய்யும் போல! காலம்பர இருந்து இங்கே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கு! அவ்வப்போது தூற்றல், பெருமழை, தூற்றல், பெருமழை!

   நீக்கு
  5. மதியத்துக்கு மேல் பெரிய மழை எதுவும் இல்லை.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பம் அருமை. ஹிந்தி படங்களின் அலசல்கள் நன்றாக உள்ளது.

  புத்தக கடைப் பற்றி அவர் பெண் கூறிய செய்திகள் வருத்தமாக உள்ளது. உண்மைதான்.. இப்போது புத்தகங்களை வாங்கி படிப்பவர்கள் குறைந்து போய் விட்டனர்.

  மழைக் கால காக்கையின் மன நிலையை விளக்கும் கவிதை அருமை.

  சிந்தனை சிதறல்களையும், தோட்டத்தில் முருங்கை மரத்தின் கம்பளி பூச்சி குடும்பத்தையும் ரசித்தேன். இடுப்பளவு மழையில் பஸ்ஸை தேடும் பெண்மணியை சென்ற தடவையும் பார்த்துள்ளேன்.

  ஜோக்குகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. எதுவும் பேசாமலே ஒரு பிரசங்கம்.. தங்கள் கம்பெனியின் தயாரிப்பான கூந்தல் தைலம்...இரண்டும் வாய் விட்டு சிரிக்க வைத்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் புத்தகக்கடை ரொம்பப் பிரபலம் கமலா அக்கா...  தெரியும்தானே?  

   கவிதையை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 7. ஶ்ரீராம் கல்யாண அனுபவங்கள்/முக்கியமாய் மழை வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டு தப்பித்த அனுபவங்களை எழுதி இருப்பார் என நினைத்து வந்தால் முழுவதும் திரைப்பட விமரிசனங்கள். இவை எதையும் நான் பார்த்தது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு படித்து ரசித்தேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கூட நினைத்தேன் அக்கா...  ஆனால் எழுதும் மூடி வரவில்லை.  மேலும் இரண்டு நண்பர் வீட்டுக் கல்யாணங்கள், ஆஃபீஸ்...

   நீக்கு
  2. //ஆனால் எழுதும் மூடி வரவில்லை.//

   கிர்ர்ர்ர்...    எழுதும் மூடே வரவில்லை என்று படிக்கவும்!

   நீக்கு
 8. ஶ்ரீராமின் மழைக்கவிதை நன்று. ஆழ்வாரின் பெண்ணின் குறைகள் நிவர்த்தி அடையட்டும். முருங்கை மரக் கம்பளிப்பூச்சியையும், பஸ் வருதா என்னும் படத்தையும் ஏற்கெனவே பார்த்த நினைவு. கூந்தல் தைலத்துக்கான நகைச்சுவைத் துணுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலியின் "கேஷ்கந்தி"யைத் தடவிக்கொண்டு என் தலைமயிரை நான் இழந்த சோகக்கதைகள் நினைவுக்கு வந்தன. :( அதுக்கப்புறமா நீலி பிருங்காதிக்கு மறுபடி மாறியும் பலன் இல்லை. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  அந்த இரண்டும் ஏற்கெனவே வெளியிட்டதுதான்.  உங்கள் அனுபவம் சோகமானதுதான்!

   நீக்கு
  2. ஹூம்! என்னைப் பார்க்கிறவங்க, என்னடி? நீ தான் இளைச்சுட்டேன்னால் தலைமுடி கூடவா? என்கிறார்கள்! :)))))))) என்னத்தைச் சொல்ல!

   நீக்கு
  3. நான் பதஞ்சலி பற்பசை உபயோகிக்கிறேன் அது நன்றாக இருக்கிறது அதனால் பதஞ்சலி ஷாம்பூவை ந..ம்..பி.. வாங்கினேன் அது உபயோகித்த உடன் முடி அதிகம் கொட்டத் தொடங்கியது உடனே நிறுத்தி விட்டேன்

   நீக்கு
  4. ஆமாம், ஆமாம், தந்த்கந்தி நானும் பயன்படுத்துகிறேன்.காலை/இரவு இரு வேளைகளும். ஆனால் கேஷ்கந்தி! கடவுளே! ரொம்பவே மோசம். :(

   நீக்கு
  5. நானும் பதஞ்சலி பற்பசைதான்.  அதில் மெடிகேட்டட் என்று ஒன்று முன்னர் வந்தது.  இப்போது அது வருவதில்லை.  நேச்சுரல் மற்றும் அட்வான்ஸ்ட்.

   நீக்கு
 9. மாமணியின் நகைச்சுவைத்துணுக்கு எனக்குப் புரியலை. மற்றவை ஓகே! ஆமாம், செய்தித்தாள்களில் உண்மைப்பெயரைக் குறிப்பிடவில்லை எனச் சொல்லிட்டு இப்படிப் பொய்யான பெயர்களைக் கொடுப்பது எனக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஒருவேளை இனிஷியல் உண்மையா இருக்குமோ என்னமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய நகைச்சுவை எதுவும் அதில் இல்லை என்று நினைக்கிறேன். சும்மா பின்னால் வரும் வாலிபர் நூல் விடுகிறார்! ஆனால் முன்னால் போகும் பெண் பெண் மாதிரியே இல்லை.

   நீக்கு
  2. ஓ, அதுவா? இப்போ மறுபடி போய்ப் படத்தைப் பார்த்தேன்.

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 11. நகைச்சுவை துணுக்குகள் வழக்கம் போல...

  காக்கையின் கவிதை அருமை..

  பதிலளிநீக்கு
 12. திரைப் படங்களின் விமர்சனம் அருமை...

  மனம் நினைக்கும் அனுபவமும் அருமை...

  பதிலளிநீக்கு
 13. இதிலே மணக்கோலத்தில் தேர்வு எழுதிய பெண் என்னும் செய்தியை ராம்மலரின் வலைப்பக்கத்தில் பார்க்கையில் எங்கள் பெண் ஏசிஎஸ் பரிக்ஷை எழுதிவிட்டுப் பெண் பார்க்கத் தயாரானதெல்லாம் நினைவில் வருது. மத்தியானம் 3 மணிக்கு அவங்க வராங்க. இவள் காலையில் நுங்கம்பாக்கத்தில் பரிக்ஷை எழுதச் சிநேகிதியோடு போனாள். நான் வேண்டாம்னு சொல்லியும் மாமா கேட்கலை.மாப்பிள்ளை வீட்டிலும் போயிட்டு வரட்டும், என மாப்பிள்ளையே சொல்லிட்டார். எனக்கானா பேரூந்தில் போயிட்டு வருவதால் வெயிலில் முகம் சோர்ந்து விடும், அதோட வேறே ஏதேனும் பிர்ச்னை வந்து அவள் நேரத்துக்குத் திரும்ப முடியாமல் போயிடுமோ என்றெல்லாம் எண்ணங்கள். பரிக்ஷை முடிச்சுட்டு மத்தியானம் ஒரு மணிக்குத் திரும்பிட்டாள் நல்லவேளையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

   நீக்கு
 14. திரைப்படங்களின் விமர்சனம் மிக அருமை! நானும் ' பெல்பாட்டம்' பார்க்க நினைத்திருக்கிறேன். ஆழ்வார் புத்தகக்கடை பற்றி அருமையான தகவல் தந்திருக்கிறீர்கள்! சென்னை வரும்போதெல்லாம் ராயப்பேட்டையிலுள்ள ' ஈஸ்வரி புத்தகக்கடைக்கு செல்வது வழக்கம். அடுத்த முறை சென்னை வ‌ரும்போது இந்தக் கடைக்கும் சென்று பார்க்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மனோ அக்கா.   செஹ்ரே கூட பார்க்கலாம்.  ஆழ்வார் புத்தகக்கடை ரொம்பப் பழசு, புகழ்பெற்றது.

   நீக்கு
 15. கவிதை நன்று. கூந்தல் தைலம் செம சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 16. காலைலயே படித்தேன். ஐபேட்ல இன்று பின்னூட்டம் சரியா போகலை.

  ஹிந்தி சீரியல்கள் - இதற்கு நீளமாகவும் புரிந்தும் பின்னூட்டம் எழுதும் வல்லிம்மா சில நாட்களாக வலைப்பக்கம் வரலை. எனக்கோ இதெல்லாம் புரியாது ஹாஹா

  பதிலளிநீக்கு
 17. புகைப்படக்கலைஞரின் ஆர்வம் ஆச்சர்யப்பட வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 19. சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  கவிதை நன்றாக இருக்கிறது.
  பழைய புத்தகம் விற்பவருக்கு நிரந்தரமான இடம் கிடைக்க வேண்டும்.
  கம்பிளி பூச்சியை பார்த்தாலே பயம், அதுவும் இவ்வள்வு கொத்து கொத்தாக முன்பு பகிர்ந்து இருந்தீர்கள்.பழைய பதிவில் எரிவிட்டதாக சொன்ன நினைவு.
  மழையில் பஸ்ஸை காணோம் படம் முன்பே இடம் பெற்று விட்டதே! புதன் கேள்வி , பதில் பதிவில்.


  நகைச்சுவை துணுக்குகள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், முன்னரே ஒருமுறை பகிர்ந்ததுதான்!  நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 20. திரை விமர்சனங்களால் நிரப்பி விட்டீர்கள். சென்ற வாரமும் இப்படித்தான் நடந்தது. குட்டி கவிதை பிரமாதம்! ஜோக்குகளும் நன்றாக இருக்கின்றன கம்பளிப்பூச்சி ஏ ஏ! ஆழ்வார் கடைக்கு நானும் சென்று இருக்கிறேன் இப்போதைய நிலை வருத்தமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்ற வாரத்தின் தொடர்ச்சிதான் இது.​ நன்றி பானு அக்கா.

   நீக்கு
 21. பெல்பாட்டம்..எங்கள் கல்லூரிக்கால நினைவு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் நினைவு வந்ததா?  நன்றி முனைவர் ஸார்.

   நீக்கு
 22. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

  மழையில்லா காலம் தொடரட்டும்.
  ஈர வீதிகளைப் பார்த்து அலுத்து விட்டது.

  ஆழ்வார் கடை எத்தனையோ பொக்கிஷங்களைக்
  கொடுத்திருக்கிறது.
  எங்கள் வீட்டு பெரி மேசன், சேஸ், எல்லாம் அங்கே
  அடைகலம் புகுந்திருக்கின்றன,
  அருமையான மனிதர் அவர்.
  அவர் கடையும் புத்தகங்களும் பாதுகாக்கப் படவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.  கண்கள் சரியாகி விட்டனவா?  

   மழையில்லா காலம் தொடரவே விருப்பம்.  சென்ற மழைக்கு நிரம்பிய பெரும் பள்ளங்களே இன்னும் தண்ணீர் இறைக்கப்படவில்லை.
   ஓ..  உங்கள் பழைய புத்தகங்களை அங்கு கொடுத்து விட்டீர்களா?

   நன்றி அம்மா.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!