வெள்ளி, 12 நவம்பர், 2021

வெள்ளி வீடியோ : பொன்மாலை நேரம் தேனானது... பூமஞ்சள் மேனி ஏன் வாடுது

 இயக்குனர் மகேந்திரன் மும்பையில் (அப்போது பம்பாய்) ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு நாளில் ஜன்னல் வழியே ஒரு பெண் ஜாகிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாராம். அவர் அந்தக் காட்சியில் கவரப்பாட்டாராம்.  அந்தப் பெண் திருமணத்திற்குப் பின்னும் இதே மாதிரி ஓடுவாளா என்கிற எண்ணம் எழ, அந்த எண்ணமே நெஞ்சத்தைக் கிள்ளாதே படமாக உருவாகி இருந்திருக்கிறது.  

1980  வெளியான இந்தப் படத்துக்கு உடை டிசைன் நெல்லையின் அபிமான ஓவியர் ஜெயராஜ்!  கேமரா அசோக்குமார்.  "பருவமே புதிய பாடல் பாடு" பாடல் காட்சியை அதிகாலை நான்கு மணிக்கு சவாலாக படமாக்கினாராம் அவர்.  அவர்கள் ஓடும் சத்தம் எப்படி வந்ததது என்று நீங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள்.

பெங்களுருவில் படமாக்கப்பட்ட இந்தப் படம், பெரும்பாலும் கப்பன் பார்க் பகுதியிலேயே படமாக்கப்பட்டிருந்திருக்கிறது.  மூன்று விருதுகளை பெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் தியேட்டரில் ஓடியதாம்.   கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் பாடல்களுக்கு இளையராஜா இசை.  மகேந்திரன் இயக்கம் என்று சொல்லவே வேண்டாம்!

ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் இனிமையானவை.  இன்று பகிரப்போகும் பாடல் 'உறவெனும் புதிய வானில்' பாடல்.

இன்று பகிரப்போகும் இரண்டு பாடல்களிலும் இசை அப்போதும் ஏன், இப்போதும் புதுவிதம்.  ஆழமான நீண்ட இசை.  மெதுவான டெம்போ..  இனிமையான குரல்கள், கனமான டியூன்..  அழகான வரிகள்.

பத்மினி கோலாப்பூரியை தேர்வு செய்ய நினைத்து பின்னர் அந்த ரோலில் சுஹாசினியை நடிக்க வைத்திருக்கின்றனர்.  தமிழ்த் திரையுலகத்துக்கு ஒரு திறமையான நடிகை கிடைத்தார்.  கோகிலா கன்னடப் படத்துக்குப் பிறகு மோகனுக்கு தமிழில் முதல் கனமான வேடம்.    சைக்கோத்தனமான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த பிரதாப்புக்கும் வித்தியாசமான வேடம்.

அந்த காலகட்டத்தில் ஒரு வித்தியாசமான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட ஆரம்பம்.  அதாவது திரையில் கதாபாத்திரங்கள் பாடலுக்கு வாயசைப்பதை விட்டுவிட்டு தங்களுக்குள் பேசிக் கொண்டே நடப்பார்கள்!  இது  மாதிரிக் காட்சிகளுக்கான ஆரம்பம் ஒருவேளை ஹிந்தியின் பாஸு பட்டாச்சார்யாவோ என்கிற சந்தேகம் உண்டு.

எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி இணைந்து பாடும் பாடல்.  கங்கை அமரன் வரிகள்.  ஜானகி அம்மா பாடலைத்தோங்க, சரணத்தில் இணையும் எஸ் பி பி  சரணத்துடன் பல்லவிக்கு வருவது அழகு.

உறவெனும் புதிய வானில் பறந்ததே இதயமோகம் 
ஓடும் அலை என மனம் போகும் 
கனவிலும் நினைவிலும் புதுசுகம் 

பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம் 
பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்  
மாலை வரும் போதிலே நாளும் உந்தன் தோளிலே  
கனவில் ஆடும் நினைவு யாவும்  
கனவில் ஆடும் நினைவு யாவும் இனிய பாவம்  
உறவென்னும் புதிய வானில்  பறந்ததே இதய மோகம்   

நெஞ்சில் உள்ளூர ஓடும் என் ஆசைகள் 
நேரம் இல்லாமல் நாளும் உன் பூஜைகள்  
எந்தன் மனம் எங்கிலும் இன்பம் அது சங்கமம்  
இணைந்த கோலம் இனிய கோலம்  
இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம்அதே 1980 களின் தொடக்கத்தில் வெளியான படம் 'நதியைத் தேடி வந்த கடல்'.  மகரிஷியின் கதை.  என்ன ஒரு வித்தியாசமான, கவித்துவமான தலைப்பு, இல்லை?

மகரிஷியின் இயற்பெயர் டி கே பாலசுப்ரமணியம்.  TNEB யில் க்ளெர்க்காக இருந்த இவருக்கு வயது இப்போது 85 க்கு மேல்.  மிகவும் அதிகமாக படமான கதைகளுக்கு சொந்தக்காரர் மகரிஷி.  நிறைய திருட்டுகளும் நடந்திருக்கிறதாம்.  இவரது முதல் நாவல் பனிமலையே என்னதான் முடிவு என்று படமானது.  ஆனால் தோல்விப்படம்.

ஜெயலலிதா கடைசியாக தமிழில் நடித்த படம்.  இந்தப் படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 32. 

https://www.ndtv.com/people/who-is-j-jayalalithaa-765381

Jayalalithaa's last film was Nadhiyai Thedi Vandha Kadal in 1980. In 1982, at the age of 34, she joined the AIADMK and went straight to the top echelons of the party as propaganda secretary, much to chagrin of many seasoned partymen, and was soon nominated to the Rajya Sabha.

இணையாக நடித்தவர் சரத்பாபு.  தோழி ரமாபிரபாவின் வற்புறுத்தல் காரணமாகவும், புதிய இயக்குனர் லெனின் பீம்சிங்கின் மகன் என்பதாலும் நடிக்க ஒத்துக்க கொண்ட படமாம்.  மிகச்சில தியேட்டர்களிலேயே வெளியான படம் என்றும், தெளிவான பிரிண்ட் எங்குமே கிடைக்காது என்றும் விக்கி சொல்கிறது.  தொலைக்காட்சியிலும் இதுவரை போடாத படம் என்றே நினைக்கிறேன்.  

இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் புகழ்.  ஒன்று தவிக்குது தயங்குது பாடல்.  ஜெயச்சந்திரனும், எஸ் பி ஷைலஜாவும் பாடிய பாடல்.  ஆனால் நான் இன்று பகிரப்போவது எஸ் பி பி ஓ சுசீலா பாடிய எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் எனும் பாடல்.

நான் முதல் பாடலுக்குச் சொன்னதைக் காட்டிலும் ஆழமான பாடல்.  இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலைக் கேட்கும்போது நிஜமாக வானவெளியில் எங்கோ பறந்து தொலைந்து போகலாம்.  ஒரு அமானுஷ்ய உணர்வை அனுபவிக்கலாம்.  அமைதியாகத் தொடங்கும் சரணங்கள் மெதுவாய் வரி வரியாய் உச்சத்தை அடைவதும், பின்ணணி இசையும் சிறப்பு.  அதுவும் பாடலின் அந்த ஆரம்ப இசை.  நடு ஆகாயத்தில் அது உங்களைத் தூளியாட்டும்.

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் 
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம் 
குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் 
பெறவேண்டும் சுகங்களே 

பூஞ்சோலையில் பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது 
என் நெஞ்சம் தடுமாறுது 
தோளோடு நான் சாய்ந்தாடவா சொல்லாத சுவை கூறவா 
சூடான கதை சொல்லவா 
பொன்மாலை நேரம் தேனானது பூமஞ்சள் மேனி ஏன் வாடுது 
சொர்க்கத்தைக் கண்டேனம்மா 

தாயாகினேன் தாலாட்டினேன் 
கண்ணா என் ராஜாங்கமே 
நீதான் என் ஆதாரமே 
மணிப்பிள்ளைகள் மான்குட்டிகள் 
உறவாடும் தெய்வங்களே ஒளிவீசும் தீபங்களே 
வாடாத முல்லை பூமேனியே 
தேடாமல் வந்த செல்வங்களே 
என் ஜீவன் உன்னோடுதான் 

59 கருத்துகள்:

 1. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. காலை வணக்கம் எல்லாருக்கும்...

  சென்னை, மற்றும் தமிழ்நாட்டில் பல ஊர்கள் பயங்கரமாக இருக்கிறதே...நிர்வாகிகள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மக்கள் எல்லாரும் அட்லீஸ்ட் இனியாவது தன் நலம் பார்க்காமல் பொதுநல நோக்கில் செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் நாம் எல்லோரும்.

  ஆமாம் குளம் ஏரிகளில் எல்லாம் வீடு கட்ட யார் அனுமதி கொடுத்தது?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா...   அதிகாரிகளின் அலட்சியப்போக்கு இன்று நேற்றா ஏற்பட்டது?                இனியாவது ஆபத்தை உணர்ந்து அவர்கள் கொஞ்சமாவது செயல்படவேண்டும்.  மக்களும் கொஞ்சம் பொறுப்புடன் இருக்கவேண்டும்.

   நீக்கு
 3. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்
  என்றும் ஆரோக்கியமும் அமைதியும் பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் வந்த போது
  பாடல்கள் நெஞ்சை அள்ளிப் போயின.

  தோழியின் வீட்டில் புதிதாக வாங்கிய ஸ்டீரியோவில்,

  டக்டக்டக் பருவமே கேட்டதும் we went crazy:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அதிகாலை நேரம் சூழல் உடனே நம் மனதில் ஏற்பட்டுவிடும். இளையராஜா!

   நீக்கு
  2. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் இனிமையானவை.????? எந்தப் பாடல்?

   நீக்கு
  3. மம்மி பேரு மாரு... என்பது போல  ஒரு பாடல் வரும்.  அது!  படத்தில் கீச் பாடும் பாடல்!

   நீக்கு
  4. ஓ. மறந்து போய் விட்டேன். வெண்ணிற ஆடை மூர்த்தி குழு
   கீச் நு அந்தப் பையன். சரி.

   நீக்கு
 5. உறவெனும் பாடலின் இனிமை சொல்லி முடியாது.
  பார்வை ஒவ்வொன்றும்.... இங்கே பாலு சாரின் குரல் என்ன இனிமை.
  மொத்தத்தில் மிகப் பிடித்த பாடல். எத்தனை தடவைகள் கேட்டிருப்போமோ தெரியாது.


  ஏ தென்றலே பாடலும் சுகமாக இருக்கும். சுசீலாம்மாவின் குரல்
  வெல்வெட் மாதிரி. நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா... 'ஏ தென்றலே' பாடலை ஆரம்பத்தில் நான் 'கேள் தென்றலே' என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

   நீக்கு
 6. சுஹாசினி, சரத்பாபு நடிப்பு மிக இனிமை.
  சரத்தின் துணையாக வருபவரும் மென்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மென்மை?  அவர்தான் வில்லி!  பிரதாப் கூட நன்றாய் நடித்திருப்பார்.

   நீக்கு
  2. :))நான் மனைவி என்று சொல்லவில்லை. துணை என்றேன்.!!

   நீக்கு
  3. //பிரதாப் கூட நன்றாய் நடித்திருப்பார்.// என்ன இப்படி கூறி விட்டீர்கள்? எந்த படத்தில் அவர் மோசமாக நடித்திருக்கிறார்?

   நீக்கு
  4. அந்த துணை இயக்குநர் மகேந்திரனுக்கும் துணையாக ஆனாரோ? "யார் அந்த பொம்மை முக கதாநாயகி?" என்று குமுதத்தில் எழுதியிருந்தார்கள்.

   நீக்கு
  5. //என்ன இப்படி கூறி விட்டீர்கள்? எந்த படத்தில் அவர் மோசமாக நடித்திருக்கிறார்?//

   அதுவும் சரிதான்.  நன்றாகத்த்தான் நடிப்பார்.  அதற்கு உன் வந்த அவர் படங்களில் எல்லாம்  சைக்கோ மாதிரி நடித்திருப்பார்.  இதில் அவர் கேரக்டர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

   நீக்கு
  6. அந்த துணை இயக்குநர் மகேந்திரனுக்கும் துணையாக ஆனாரோ? "யார் அந்த பொம்மை முக கதாநாயகி?" என்று குமுதத்தில் எழுதியிருந்தார்கள்.

   புரியவில்லை.  சுஹாசினி மணிரத்தினத்தைத்தானே மணந்தார்?

   நீக்கு
 7. மகரிஷியின் கதை தொடராக வந்ததோ ? இல்லை குறு நாவலா...நினைவில்லை.
  இந்தப் படம் அதன் காட்சிகள் கூட இணையத்தில் இல்லையே.
  பாவம் ஜெஜே.

  எங்கள் எல்லோருக்கும் அந்தக் காலத்தில் பிடித்த ஹீரோயின்.
  இந்தப் பாடலும் மிக நன்றாக இருக்கிறது.

  மிக இனிமையாக பாலு சாரும்,சுசீலாம்மாவும் இணைந்து
  கொடுத்திருக்கும் நல்ல பாடல்.
  எப்பொழுதுமே நல்ல இசையைக் கொடுக்கிறீர்கள்
  ஸ்ரீராம். மிக மிக நன்றியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பாடலின் ஆரம்ப இசையும், பாடகர்களின் குரலும்...   இப்போது அந்தப் பாடல் என்னை படுத்துவதைவிட அந்தக் காலத்தில் அதிகம் கவர்ந்தது. 

   நீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  நெஞ்சத்தை கிள்ளாதே பட பாடல்கள் நன்றாக இருக்கும். பாடல்கள் வந்த புதிதில் வானொலியில் அடிக்கடி கேட்டுள்ளேன். பிறகு எப்போதோ தொலைக்காட்சியில் பார்த்த நினைவு.படம் முழுக்க அடிக்கடி இப்படி ஓடிக் கொண்டேயிருப்பார்கள். அப்போது அந்த படமும் வித்தியாசமாக இருந்தது. படம் குறித்து மேலும் தாங்கள் தந்த தகவல்களும் அருமை.

  இரண்டாவது பாடல் கேட்டதில்லை என நினைக்கிறேன். மகரிஷியின் நாவல்கள் மாலைமதியில் படித்திருக்கிறேன்.புவனா ஒரு கேள்வி குறியும் அவரது நாவல்தானே.? சில நாவல்கள் படிக்கும் போது பிரபலம் அடைவதை போல திரைப்படங்களில் சோபிக்காது போகும். இரண்டு பாடல்களையும் கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், புவனா ஒரு ?, வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி எல்லாமே மகரிஷியின் கதைகள்தான்.  இரண்டாவது பாடலையும் அவசியம் கேட்டுப்பாருங்கள் கமலா அக்கா.

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம். புயல் ஒரு வழியாக கரையை கடந்து விட்டது போலிருக்கிறதே..? மக்களுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. இன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே இனிமையானவை..

  அதிலும் - அந்த உறவெனும் புதிய வானில்!..

  ஆகா!..

  ஆயினும்
  இன்றுவரை நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் மனதில் எழுந்ததே இல்லை..

  பதிலளிநீக்கு
 12. நெஞ்சத்தைக் கிள்ளாதே பலர் நெஞ்சங்களை கிள்ளிய படம். அந்த படத்தில் சுஹாசினி ஒப்பனை இல்லாமல் நடித்திருப்பார். இன்னும் சில படங்களிலும் அப்படி நடித்தார். பின்னர் லட்சுமியின் அறிவுரைப்படி அதை மாற்றிக் கொண்டாராம்.

  பதிலளிநீக்கு
 13. அந்த படத்தில் மோகனை அவர் திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததும்,"பிரதாப் அவரிடம்,"நீ ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லவில்லை?" என்று கேட்க, சுஹாசினி,"நீங்கள் என்னிடம் கேட்கவில்லையே..?" என்பார். அந்த வசனம் அந்தக் கால இளம் பெண்களின் மன நிலையை பிரதிபலித்ததாக பாராட்டப்பட்டது. அப்போதைய இளம் பெண்ணான எனக்கு ,"எல்லா இளம் பெண்களும் இப்படியா இருக்கிறோம்?" என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அந்த வசனம் பேசப்பட்டது அப்போது.  சில இளம்பெண்கள் அப்படி இருந்திருக்கலாம்.

   நீக்கு
 14. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். முக்கியமாய்த் தமிழக மக்களின் ஒட்டு மொத்த நலனுக்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள். கடந்து சென்ற புயலும் இனி வரப்போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் புயலும் அதிக சேதங்களை விளைவிக்காமல் கடந்து செல்லவும் எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​வாங்க கீதா அக்கா... வணக்கம். இப்போது இந்தப் பிரார்த்தனை அவசியம் தேவைதான்.

   நீக்கு
 15. முதல் பாடல் மற்றும் அந்தப் படத்தில் உள்ள பருவமே பாடலும் மிக மிக ரசித்ததுண்டு. இப்பவும் பல வருடங்களுக்குப் பிறகு மிகவும் ரசித்தேன். அப்போது எந்த ஊரிலிருந்து ரசித்தேனோ அதே ஊரில் இப்பவும் ரசித்தேன்!!!!!!!!!!!

  மிகவும் வித்தியாசமான பாடல். எப்போதும் ரசிக்க முடிந்த பாடல்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே ஊரிலிருந்து மறுபடி ரசிப்பது ஒரு ஆச்சரியம்தான்.

   நீக்கு
 16. இந்தப் பாடல் நடபைரவி ராகம் பேஸ் என்று தோன்றுகிறது ஆனால் வெஸ்டர்ன் ஸ்டைல் அதிகம்...மிக மிக வித்தியாசமான இசை. மனதைக் கவரும் இசை. இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அப்போது. மகேந்திரனின் டைரக்ஷன் மற்றும் சுஹாசியின் நடிப்பு மிகவும் ஈர்த்தது. நான் என் அத்தை, என் தங்கை (அத்தை மகள் தான்!!!!) மூவரும் சேர்ந்து சென்று பார்த்த படம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படத்தின் இசை, மற்றும் பாடல்களின் இசை சற்றே உயர்தரம்!

   நீக்கு
 17. பருவமே புதிய பாடல் பாடு பாடலின் ராகம் மோகனம் போல இருக்கும். அந்தப் பாடல் பாடி கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலை லிங்க் செய்யலாம்...

  என்ன வித்தியாசமான மோகனம்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 19. இரண்டு பாடல்களும் கேட்டு பல வருடம் ஆகிவிட்டது.
  இன்று கேட்டேன்.


  'நதியைத் தேடி வந்த கடல்'. கதை மாத இதழ் மலைமதியில் படித்த நினைவு.
  வீட்டில் அந்த புத்தகம் இருக்கும் தேடிபார்க்க வேண்டும்.

  //மிகவும் அதிகமாக படமான கதைகளுக்கு சொந்தக்காரர் மகரிஷி.//

  மகரிஷியின் நிறைய கதைகள் சினிமாவாக வந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அதைதான் நானும் சொல்லி இருக்கிறேன்! நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 20. இரண்டாவது பாடலும் நிறைய கேட்டிருக்கிறேன் ரசித்த பாடல்...ஆரம்பம் பாருங்க மெதுவா ஆரம்பித்து அப்படியே மேலே போகும்....

  செம பாட்டு அருமையான இசையமைப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணத்தின் முடிவில் 'கனவிலாடும்...'.   என்று இழுத்து, மறுபடி 'கனவிலாடும்' என்று பாடி, 'நினைவு யாவும்' என்னும்போது சரணம் முடிந்து விடுமோ என்று நினைக்கும்போது, இல்லை, இன்னும் ஒரு வார்த்தை முத்தாய்ப்பு இருக்கிறது என்று 'இனிய பாவம்' என்று வரும்.  

   நீக்கு
 21. இரண்டாவது பாடல் என்ன ஒரு ராகம்...நம்ம ஊர் பந்துவராளி/வடக்கு பூர்யதனஸ்ரீ கூட லலிதா கலந்து வருவது போல இருக்கு.எனக்கு அப்படித் தோன்றுகிறது. என் அனுமானம் தவறாக இருக்கலாம். அழகான பாடல் ஹப்பா என்ன ஒரு இசையமைப்பு. எஸ்பிபி இதில் கொஞ்சம் அடக்கி பாடியிருக்கிறாரோ? மென்மையாக...

  இந்தப் பாட்டிலிருந்து அப்படியே ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் போயிடலாம்...

  மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இரண்டு பாடல்களுமே அருமையான பாடல்கள். நிறைய தடவை கேட்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 23. இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன் இனிய பாடல்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!