வியாழன், 18 நவம்பர், 2021

OTT யும் ஒரு சில சீரிஸ்களும்

 பல் டாக்டர் மாதிரி பல ஸிட்டிங்ஸ்லதான் நான் இப்போதெல்லாம் படங்கள் பார்க்கிறேன்.  ஓட்டிட்டி உபயம்.  இந்த வகையில் சில சீரிஸ் எல்லாமும் பார்த்திருக்கிறேன்.


உண்மையில் நான் சீரிஸ் பக்கமே போனதில்லை.  ஃபேமிலி மேன் என்றொரு சீரிஸ்.  அதற்கு தமிழகத்தில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக வைகோ போன்றவர்கள் பக்கத்திலிருந்து.  அப்போதுதான் ஆர்வம் வந்தது, அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று அறிய.  விடுதலைப்புலிகள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்த்தார்கள். சரி, என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று போனால் அது இன்னும் வெளியாகவில்லை.  ஆனால் அதன் முதல் பாகம் பார்க்க தயாராய் இருந்தது.  அது கிட்டத்தட்ட போபால் பயங்கரம் பற்றிய கதை.  சுவாரஸ்யமாக பார்க்க முடிந்தது.  அதிலும் அந்த மனோஜ் பாஜ்பாய் ரொம்பவே பிடித்துப்போனது.  அவரது உடல்மொழி நன்றாய் இருந்தது.  அவரைப் பற்றி அறியச் சென்றால் அவர் ஒருமுறை விருது கூட வாங்கி இருக்கிறார்.
ஃபேமிலி மேன் சீரிஸில் குடும்பம் ஒரு பக்கம், த்ரில், சஸ்பென்ஸ் ஒரு பக்கம் என்று இருந்தது.  அமைதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் திவாரி ஒரு ரகசிய ஏஜென்ட்.  அலுவலகத்துக்கு தாமதமாக சென்று கதைகள் சொல்பவர்.  மகளிடமும், மகனிடமும் பாசம் வைத்திருப்பவர், மனைவி மேல் சந்தேகப்படுபவர்!  மனைவியாக ப்ரியாமணி.  அவர் தமிழ்ப்பெண்ணாகவும், மனோஜ் வடஇந்தியராகவும் பாத்திரப்படைப்பு.  தேவைப்படும் நேரத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார் மனோஜ்.  
காத்திருந்து, சமந்தா நடித்த பார்ட்டும் வந்துவிட அதையும் பார்த்து முடித்திருந்தேன்.  அப்போதே அதுபற்றி ஒரு பகிர்வு எழுத நினைத்திருந்தேன்.  சமந்தா நடித்திருக்கும் சீரிஸில் சமந்தாவுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.   அவருக்கு செம ஆக்ஷன் காட்சி ஒன்று உண்டு.  

நான் அப்புறம் மனோஜ் ரசிகனாகி, அவர் நடித்த ஓரிரு திரைப்படங்கள் கூட பார்த்தேன்.  இன்னொரு சீரிஸ் Bhuj என்று நினைக்கிறேன்.  அதையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.  இவர் ஒரு தமிழ்ப்படத்தில் நடித்திருக்கிறார்.  நானும் பார்த்திருக்கிறேன் என்பது அவர் பற்றி படிக்கும்போதுதான் தெரிந்தது.  தமிழில் வழக்கம்போல சிறு வில்லனாக நடித்திருக்கிறார். நான் ரசித்த சீரிஸ் ஃபேமிலி மேன்.

இப்போது ZEE5 ல் மனோஜ் நடித்த டயல் ஃபார் 100 என்று ஒன்று வந்திருக்கிறதாம்.  என்னிடம் அந்தத் ஓட்டிட்டி கிடையாது.  ஆனால் பார்க்க ஆவல்.  மகன் நண்பனுடைய ஐடியை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறான்.


அடுத்ததாக மகன்கள் மற்றும் சிலர் சிபாரிசில் Money Heist என்றொரு சீரிஸ் பார்த்தேன்.  போலீஸால் துரத்தப்படும் ஒரு பெண்.  அவர் அம்மாவே அவரை வெறுத்து வெளியே போகச் சொல்கிறார்.  நொந்துபோய் வெளியில் வரும் அவரை (டோக்கியோ) எதிரிகளும், போலீஸும் துரத்தும்போது சிலரால் கடத்த அல்லது காப்பாற்றப் படுகிறார்.  
கடத்தியது ப்ரொபஸர்.  அவர் அதுமாதிரி சில நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைத்து செயல்படுகிறார்.  எல்லோரையும் அமரவைத்து வகுப்பெடுக்கிறார்.  ஒவ்வொருவருக்கு வெவ்வேறு பெயர்கள் (டென்வர், சிட்னி, பெர்லின் என்று எல்லாம் ஊர்ப்பெயர்கள்) தரப்படுகின்றன.  ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு திறமை.  இவர்கள் அனைவரும் ப்ரொபஸரின் மூளையால் இணைக்கப்படுகிறார்கள்.   பெரிய கொள்ளை ஒன்று திட்டமிடப்படுகிறது.  ப்ரொபஸர் அவற்றை இன்ச் இஞ்சாக என்றால் இன்ச் இஞ்ச்சாக திட்டமிடுகிறார்.  ஒவ்வொரு நேரத்திலும் நிகழக்கூடிய ஆபத்துகள், திருப்பங்களை துல்லியமாக யோசித்து, இப்படி நடந்து விட்டால் அப்போது என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு சொல்லிக் கொடுக்கிறார்.  அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றாலும் இவர் அவர்களை காணொளி, காதொலியில் தொடர்ந்து கொண்டே இருப்பார்.  பல ஆண்டுகளாக திட்டமிட்ட கொள்ளை.  கோடி கோடியாக கொள்ளை அடிக்க திட்டம் ஒன்றைத் தயாரிக்கிறார் ப்ரொபஸர்.  அதில் அவர் அண்ணன் பெர்லின் நிறையவே உதவுகிறார்.  பார்த்துப் பார்த்து ஆள் செலெக்ட் செய்கிறார்கள்.அவ்வளவு திட்டமிட்டும் நிகழும் திருப்பங்களும், சறுக்கல்களும், அவர்களுக்குள் பந்தம், பாசம் கூடாது என்று ப்ரொபஸர் சொல்லி இருந்தாலும் ஏற்படும் பந்தங்கள், பிணைப்புகள்...  பிரமிக்க வைக்கும் திட்டமிடல்களுடன், திருப்பங்களுடன் பார்த்த சீரிஸ்.  

ஒரே ஒரு விஷயம்..  கொஞ்சம் அசந்தால் ட்ரெஸ்ஸைக் கழற்றத் தயாராய் இருக்கிறார்கள்.  அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலாகவே காட்சிகள் இருக்க, மகன்கள், மற்றவர்களுடன் பார்ப்பது சற்றே சங்கடம்!  அதில் இரண்டாவது சீரிஸும் வந்து, அதையும் பார்த்து விட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறோம்!  பார்க்கும் எல்லோருமே வில்லன் கட்சிதான்!  அதில் எல்லோர் மனதையும் கவர்ந்த ஒரு பெண் பாத்திரம் (நைரோபி) தமிழ்ப்பெண் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன!  இந்த நைரோபி, பெர்லின், டென்வர் எல்லோரும் என் அபிமான கேரக்டர்கள்!  டென்வரின் சிரிப்பு எரிச்சலும் வரும், மனதிலும் நிற்கும்!
அப்புறம் தமன்னா நடித்து விகடன் வெளியீடாக நவம்பர் ஸ்டோரி என்று ஒரு சுமாரான சீரிஸ் பார்த்தேன்.  சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.  அல்ஸைமர் வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய  எழுத்தாளர் ஒரு கொலை நடந்த இடத்தில் இருப்பதைப் பார்க்கும் அவர் மகள் அவரை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதோடு அங்கிருக்கும் இவர் சம்பந்தப்பட்ட தடயங்களையும் அழித்து விட்டதாக நம்புகிறார். 
அப்படியும் போலீஸுக்கு இவர்மேல், அதாவது எழுத்தாளர் மேல்  சந்தேகம் வருகிறது.   எழுத்தாளராக ஜி எம் குமார், இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் பசுபதி..  இவர்களே தெரிந்த முகங்கள்.  ஆங்காங்கே சில திருப்பங்களோடு, ஒரு எதிர்ப்பார்த்த எதிர்பாரா முடிவுடன் அமைந்த த்ரில்லர்!


=========================================================================================================

எழுத்தாளர் மஹரிஷியின் பேட்டி, 2017 ல் வந்தது.  சுட்டியைக் க்ளிக் செய்து அங்கும் சென்று படிக்கலாம்.  அல்லது அதையே இங்கேயேயும் படிக்கலாம்.  எனக்கு இந்த பேட்டியைப் படித்த பிறகு 'வேதமடி நீ எனக்கு' படிக்க ஆசை.  


மகரிஷி என்பது எதன் குறியீடு? என் பெற்றோர் தஞ்சாவூர் கிருஷ்ணசாமி அய்யர் – மீனாட்சி. பெற்றோர் வைத்த பெயர், பாலசுப்ரமணிய அய்யர். ஆரம்பத்தில் இருந்தே எனக்கு ஆன்மீகத்திலும், எழுத்திலும் ஆர்வம் அதிகம். மின்வாரியத்தில் ரிக்கார்டு கிளர்க் ஆக பணியாற்றினேன். எழுதுவதற்கு வசதியாக, எனக்கு கிடைத்த பதவி உயர்வுகளையும்கூட மறுத்துவிட்டேன். என் எழுத்திலும் ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருக்கும். அதனால் ஆன்மீகத்தோடு தொடர்புடைய சற்றே வித்தியாசமான, யாரும் ‘ஹெஸிடேட்’ செய்ய முடியாத பெயராக இருக்க வேண்டும் என்பதால், பாலசுப்ரமணி அய்யரான நான் ‘மகரிஷி’யாக மாறிவிட்டேன். 

முதல் நாவல் அனுபவங்கள்…? முதன்முதலில், ‘பனிமலை’ என்ற நாவல் எழுதினேன். அடிப்படையில் நல்லவனான ஒருவன், தான் செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. தான் விடுதலை ஆகி வந்தபின், தான் சிறைக்குச்செல்ல காரணமான ஒருவனை பழிவாங்க எண்ணுகிறான். ஆனால், அந்த கெட்டவனோ, நல்லவனின் சகோதரனின் முன்னேற்றத்துக்கு ஏணிப்படியாக இருப்பது தெரிகிறது. எரிமலையான ஒருவன், எப்படி பனிமலையாக மாறினான் என்பதுதான் கதை. இந்த நாவல், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘என்னதான் முடிவு?’ என்ற பெயரில் படமாக வந்தது. என் முதல் நாவலே படமாக வந்தது. இதற்காக அப்போது எனக்கு ரூ.7000 ஊதியம் கொடுத்தார்கள். அது ஒரு புகழ்ப்பெற்ற தோல்விப்படம். 

கதை திருட்டு: 

திரைப்படமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாவல் எழுதுவீர்களா? (லேசான புன்னகையுடன்) அப்படித்தான் பலபேர் கேட்கிறார்கள். படத்துக்காக எந்த நாவலும் எழுதப்படல. கதை எழுதித்தரும்படி எந்த இயக்குநரும் தேடியும் வரல. ஆனால், என் நாவல்கள்தான் அதிகமாக திரைப்படமாகி உள்ளன. அதிகமாக கதை திருட்டுக்கு உள்ளாகி இருக்கின்றன. மாணவர்கள் அதிகளவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வதும் என் நாவல்கள்தான்.நான் ரொம்ப சின்சியரான சிவபக்தன். என் படைப்புகள் அனைத்தும் சிவன் சொத்துக்கள். என் அனுமதியின்றி கதையை திருடி படமாக்கியவர்கள் நல்லாவே இல்ல. நல்லாவும் இருக்க மாட்டாங்க. (இவருடைய நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட படங்களையும், இயக்குநர்களையும் ‘ஆப் தி ரெக்கார்ட்’ ஆக சொன்னதால் அவை பிரசுரிக்கப்படவில்லை). 

படைப்பாளிகள் பற்றிய உங்கள் பார்வை? லா.ச.ரா, நா.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, மௌனி, அகிலன், இடதுசாரி எழுத்தாளர் தி.க.சி, இந்திரா சவுந்தர்ராஜன், விமர்சகர்கள் கா.நா.சு., சி.சு.செல்லப்பா ஆகிய மூத்த படைப்பாளிகளுடன் பரிச்சயம் உண்டு. அப்போது, எழுத்தாளர்கள் என்றால் மிகுந்த மரியாதை இருந்தது. படைப்பாளிகளின் எழுத்திலும் சின்சியாரிட்டி இருந்தது. இப்போதுள்ள படைப்பாளிகள் யாருடனும் எனக்கு தொடர்பு இல்லை. 

இப்போதும் உங்கள் படைப்புக்கு வரவேற்பு இருக்கிறதா? வரவேற்பு இருப்பதால்தான் 130 நாவல்கள் எழுத முடிந்துள்ளது. கடைசியாக ‘வேதமடி நீ எனக்கு’ என்ற நாவலை எழுதினேன். இது, அதர்வண வேதத்தை அடிப்படையாக வைத்து, நீண்ட ஆராய்ச்சி செய்தபின், எழுதி முடித்தேன். மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவரை மீட்கும் ரகசியம் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. வேதங்களைப் பற்றியது என்பதால் முன்னணி பதிப்பகங்கள்கூட இதை அச்சிட முன்வரவில்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன். கடைசியாக செண்பகா பதிப்பகம், என் நாவலை அச்சிட முன்வந்தது.

வேதங்களும் பெண்களும்: 

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டதை ஒரு படைப்பாளியாக எப்படி கருதுகிறீர்கள்? வேதங்களை பெண்கள் படிக்கக்கூடாது என்பதெல்லாம் பொய். திணிக்கப்பட்ட கருத்து. அதுபோலத்தான் கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பதும். வேதங்களில் பெண்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.

பெண்கள் இல்லாமல் யாகம் நடத்த முடியாது. கணவன், மனைவியாக கலந்து கொண்டால்தான் யாகம் நடத்த முடியும். அப்படி இருக்கும்போது, பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கலாம். ஆகம விதிப்படி, பெண்கள் ‘தீட்டு’ காலத்தில் ஒதுங்கி இருப்பது நல்லது. 

ஜெயலலிதா நடித்த கடைசி படம்: 

கடைசியாக திரைப்படமான உங்கள் நாவல் என்ன? நான் எழுதிய, ‘நதியை தேடிவந்த கடல்’ நாவல், அதே பெயரில் படமானது. ஜெயலலிதா நடித்த கடைசி படம் அதுதான். அந்தப்படத்திற்காக, எனக்கு ரூ.22 ஆயிரம் ஊதியம் கொடுத்தனர்.

சாஹித்ய அகாடமி போன்ற விருதுகள் எதுவும் பெறாதது வருத்தமாக இல்லையா? பொதுவாக, விருதுகள் மீது அபிப்ராயம் கிடையாது. கொடுத்தா வாங்கிக்குவேன். விருதுகளைத் தேடிப்போறதில்ல. (சிரித்தவாறே) ஏன் விருது கிடைக்கலைனு நான் உங்களத்தான் (ஊடகத்தினரை) கேட்கணும். 

இந்த வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்க முடிகிறதே எப்படி? ‘உயிர்த்துடிப்பு’ என்ற என்னுடைய நாவலில் ‘வயதே வியாதி’ எனச்சொல்லி இருப்பேன். மூப்பு என்பதை தவிர்க்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் நல்ல ‘பிஹேவியர்’ முக்கியம். காலை 6.30 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். பல் தேய்த்து, குளித்துவிட்டு காலை டிபன் முடித்து விடுவேன். உணவுப்பழக்கத்தில் நான் ரொம்ப ஸ்டிரிக்ட். யாராவது என்னைப் பார்க்க வந்தால்கூட, அவர்களை உட்கார வைத்துவிட்டு, 8 மணிக்கு இரவு உணவை முடித்து விடுவேன்.  துவரை ஹோட்டலில் சாப்பிட்டதும் இல்லை. தினமும் ஒரே ஒருமுறை காபி. அவ்வளவுதான். பிறரின் உள் விவகாரங்களை ஆழமாக தெரிந்துகொள்வதால், நாம் ஏன் வீணாக அதிர்ச்சிக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக வேண்டும்? அதனால், டி.வி.கூட பார்ப்பதில்லை. நாம ‘கரெக்டாக’ இருந்தா எல்லாம் சரியாக இருக்கும்.  

இளம் படைப்பாளிகளுக்கு சொல்ல விரும்புவது என்ன?  நான் யாருக்கும் அட்வைஸ் பன்றதில்ல. ஆனால், யாராக இருந்தாலும் ஏதோ பரபரப்புக்காக மேம்போக்காக எழுதாமல், எதையும் ஆழமாக தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது. எழுத்தாளர்களுக்கு எப்போதும் சின்சியாரிட்டி முக்கியம். வாசிப்பு பழக்கமும் அவசியம்.  130 நாவல்கள் படைத்த மூத்த எழுத்தாளர், பொதுவெளியில் கவுரவிக்கப்படாமல் இருப்பதே தமிழனின் ஆகப்பெரிய சாபக்கேடு.  

(2016 -ஜூலை, புதிய அகராதி திங்கள் இதழில் இருந்து…)

தொடர்புக்கு: 93452 41711, 0427-2417111. 

– இளையராஜா .சு 

=============================================================================================================

என் கவிதை ...

ஏதோ ஒரு வார்த்தையில்
உடைந்து போகிறது
கட்டுப்படுத்தி வைத்திருந்த
உணர்வுக் கோட்டை 
ஒரு 
ஊசி குத்தலில் 
உடைந்துபோன பலூன் போல 
இலகுவாகிப் போகிறது மனம் 

======================================================================================================

பொக்கிஷம்..

அப்போதெல்லாம் நேயர் கடிதங்களுக்கு இப்படி பதில் சொல்லி இருக்கிறது விகடன்!

பாட்டி சரியாய்த்தான் கேட்டிருக்கிறார்!


பின்னாளில் தமிழ்நாட்டில் காலமான ஒருவர் "விளக்கை அணைச்சுட்டு போ" என்று சொன்னதே கடைசி வார்த்தை.

சரிதானே எசமான்...

உண்மை விளம்பி!

122 கருத்துகள்:

  1. இன்றைக்கு "கடைசி வார்த்தை" மனதைச் சலனப்படுத்தியது.

    கோவிட் பாதிப்பில் ஐசியுவில், கான்பரன்ஸ் வீடியோவில் பேசமுடியாத என் மாமனார், தெளிவான கையெழுத்தில் ஶ்ரீமன் நாராயணா என் உடல் நினைவில் முழுவதும் இருக்கிறான், Good bye to all of you. என எழுதிய பேப்பரைக் காண்பித்தார். ரொம்பவே மனத்தை வருத்தப்படுத்திய சம்பவம். அதன் பிறகு மூன்று நாட்கள்தான் இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள இபப்டியான சந்தர்ப்பங்கள் அமைந்து விடுகின்றன..என் அப்பா காலையில் காபி குடிக்கும்போது (அவருக்கு கைகள் செயல் வராது என்பதால் யாராவது வாயில் ஊற்ற வேண்டும்) புரையேறி மூச்சித் திணறி உயிர் பிரிந்ததாக அண்ணன் சொன்னபோது மனம் தாங்கவில்லை.

      நீக்கு
    2. நீங்கள் எழுதினதைப் படித்தபோது எனக்கு அரசு சார் நினைவுக்கு வந்தார். அந்த க்ஷணத்தில் எவ்வளவு பரிதவித்திருக்கும் கோமதி மேடத்தின் மனது.

      நீக்கு
    3. சாரின் நினைவு உங்களுக்கு வந்தது அறிந்து மனம் நெகிழ்ந்து போகிறேண்.
      "விபூதி பூசு" என்பதே கடைசி வார்த்தை சார் பேசியது.
      தினம் காலை 7.50 அந்த நேரத்தின் நினைவுகள் வந்து மனம் கலங்கி போகிறது.
      இதோ இறந்த தினம் தேதிபடி 25 வரப்போகிறது. ஏகாதசி திதி டிசம்பர் 14.

      எப்படி இருக்கிறேன் இன்னும் என்பதே சில நேரம் எழும் கேள்வி.

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன் உங்கள் மாமா எழுதிகாட்டியதும் எண்ணம் முழுவதும் ஸ்ரீமன்நாராயணன் என்றதும், ஸ்ரீராம் அவர் அப்பாவைப்பற்றி சொன்னதும் மனதை நெகிழ வைத்து விட்டது.

      நீக்கு
    5. மனம் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது நெல்லை..

      கோமதிக்கா நீங்கள் சொல்லிருந்தீங்க என்னோடு பேசிய போது.

      கீதா

      நீக்கு
    6. அதற்குள் ஒரு வருடம் ஆகிறதா கோமதிக்கா?

      கீதா

      நீக்கு
    7. //தினம் காலை 7.50 அந்த நேரத்தின் நினைவுகள் வந்து மனம் கலங்கி போகிறது.//

      இந்த வரி மனதை அசைக்கிறது.  சில நினைவுகள் மட்டும் ஒரு படிமம் போல மனதில் தங்கி விடுகின்றன.

      நீக்கு
    8. மனதைக் கலங்கடித்த உரையாடல்கள். இப்படித் தான் ரேவதியும் சொல்லுவார். :(

      நீக்கு
    9. நன்றி கீதா மா. கடைசி வார்த்தை கிடைப்பதும்
      ஒரு அதிர்ஷ்டம்.
      ஒன்றும் சொல்லாமல் சென்றவர்கள் என் பெற்றோரும்
      தம்பிகளும், கணவரும். மாறாத சோகம்.

      நீக்கு
    10. உண்மை அம்மா...  கடைசி வார்த்தை கிடைக்காதவர்கள்தான் அதிகம்.  என் அப்பா என்னிடம் தன்னை சென்னைக்கும் ழைத்துப் போகச்சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.  (அவர் மதுரையில் இருந்தார்)  அப்போது அவர் பேசிய சில பேச்சுகள் கொஞ்சம் குழந்தைத்தனமாகக் கூட இருந்தன.  அது நிறைவேறவில்லை என்பதோடு அந்தக் அக்கடைசி நிமிடம் அவர் என்ன சொல்ல நினைத்திருப்பார் என்றும் தோன்றும்.

      நீக்கு
    11. அன்பின் ஸ்ரீராம்,
      என் அப்பா அவர் நல்லபடியாக இருந்தபோதே
      நான் உங்க வீட்டு மாடிக்குக்
      குடிவந்துடறேனே என்று சொன்னார்.
      நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை:(

      நீக்கு
  2. Serials என் பையன் ஹாட்ஸ்டார் போட்டு அதில் சூப்பர் சிங்கர் பழைய எபிசோடுகளை தினமும் இரண்டு மணி நேரம் வீதம் பார்த்து, நேரம் போனதுதான் மிச்சம்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சீரியல் பார்க் எண்ணம். நேரம் எப்போ கிடைக்குமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது என் இளையவன் ஸ்குவிட் கேம்ஸ் என்று ஏதோ ஓர் சீரிஸ் பார்த்து என்னையும் பார்க்கச் சொல்கிறான். மனம் அதில் செல்லவில்லை!

      நீக்கு
    2. நான் டிஸ்னி ஹாட் ஸ்டார் இருந்தும் அதைத் தரவிறக்கிக் கொள்ளவில்லை. ஏனோ தோன்றவே இல்லை.

      நீக்கு
    3. டவுன்லோட் செய்தாலும் பணம் கட்டினால்தான் பார்க்க முடியும்!

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. இன,று எழுத்துப் பிழைகள் வார்த்தைப் பிழைகள் உள்ளன.

    தமிழகத்தின் பிரபலமான ஒருவர்.

    நேயர்-ஞர் என வந்துள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நேயர்' கண்டுபிடித்து திருத்தி விட்டேன். 'தமிழகத்தின் பிரபலமான ஒருவர்' எங்கிருக்கிறது, என்ன தவறு என்று தெரியவில்லை!

      நீக்கு
  5. வேலைக்கு வரும்போது... ஜோக்.. என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்தது.. வேலைக்கான கூலி/சம்பளம் கறாரா பேசிக்கணும். வேலை முடிந்ததும் கொஞ்சம் அதிகமா கொடுக்கணும். வேலை முடியும் வரையில் கொஞ்ச பணம் கொடுக்காமல் நம் கையில் இருக்கணும். இல்லைனா வேலை முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விதியை நாம் அனைவரும் கிட்டத்தட்ட தானாகவே பின்பற்றுவோம் என்று தோன்றுகிறது. நேற்று கூட ஒருவரிடம் வேலை வாங்கும்போது நான் அப்படிதான் செய்தேன்!

      நீக்கு
    2. அவருடைய இன்னொரு அறிவுரை... கடைசி காலம் வரை சொத்தைப் பிரிப்பதோ இல்லை குழந்தைகளுக்குக் கொடுப்பதோ கூடாது என்பது. திருமணம் ஆகிவிட்டால் அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக்கொள்ளணும், நம்ம செலவை நாம்தான் பார்த்துக்கொள்ளணும் என்பது

      நீக்கு
    3. நெல்லை உங்க அப்பாவின் அறிவுரை மிகவும் சரி.

      கீதா

      நீக்கு
    4. ஆம்.  அவரின் இன்னொரு அறிவுரை எல்லோரும் அறிந்தது.  ஆனால் நிறையபேர் பின் பற்றாதது!  பாசத்துக்கு அவர்களின் அளவீடு அபப்டி.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லா நாட்களும் நலமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. கடைசி வார்த்தை எத்தனை முக்கியமாகப்
    போகிறது.
    புரைக்கேறுவது எங்களகத்தில் இயல்பு.
    உங்கள் தந்தைக்கு என்று கேள்விப் படுவது
    இதுவே முதல் தடவை.
    கொடூரம்.
    நோய் வந்து சிரமப் படுவது, மற்றவர் நம்மைக் கவனிப்பது
    எல்லாமே நாலாம் பட்சம் தான்.
    சில பேருக்கே லகு மரணம் கொடுக்கிறான் இறைவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா இரண்டு வருடங்கள் பிறர் தயவில் எல்லா காரியங்களும் செய்துகொள்ள மிகவும் கஷ்டப்பட்டார்.  அவருக்கு தண்ணீர் குடிப்பது கூட சிறுவயதிலிருந்தே சிரமப்படுவார்.  

      நீக்கு
  8. நெட்ஃப்ளிக்ஸில் ஒவ்வொரு சீரிஸாகப் பார்த்து வருகிறேன்.
    இப்போது 'ஸ்வீட் மக்னோலியாஸ்.'

    மணி ஹெய்ஸ்ட் ,பார்க்க சங்கடப்பட்டு பார்க்கவில்லை.தபூ படம்
    த்ரில்லர் பார்த்தாச்சு.

    ஃபாமிலி man பார்க்கவில்லை.
    தென் கொரிய சீரீஸ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன.

    நல்ல தத்துவங்கள் சொல்லும் தயவு பிரபாவதி அவர்களின் சொற்பொழிவுகள்
    மனதுக்கு இதமாக இருப்பதால்
    அதையே கேட்கிறேன்.

    அதிர்ச்சிகள் திருப்பங்கள் போதும் என்றே தோன்றுகிறது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைகாட்சி பக்கம் பெரும்பாலும் செல்வது இல்லை.  எப்போதாவதுதான்.  இந்த சீரிஸ் எல்லாம் கூட எப்போதோ நேரம் கிடைத்த இடைவெளிகளில் அவ்வப்போது பார்த்தது.

      நீக்கு
  9. ஏதோ ஒரு வார்த்தையில்
    உடைந்து போகிறது
    கட்டுப்படுத்தி வைத்திருந்த
    உணர்வுக் கோட்டை ''


    கஷ்டம் தான். வாய் புளிக்க மாங்காய் புளிக்க
    என்று சொல்லிவிட்டு நான் அவஸ்தைப் பட்டிருக்கிறேன்.
    எத்தனை பேரை வருத்தினேனோ:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதுக்குள் இருக்கும் பல உணர்வுகள் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே கடத்தும் எல்லாம் எங்கோ ஒரு வார்த்தை அதை உடைத்து விடுகிறது.

      நீக்கு
  10. அனைவருக்கும் சர்வாலய தீபத்திருநாள் வாழ்த்துகள். இன்னிக்கு சர்வாலய தீபம் ஏற்றிக் கார்த்திகைத்திருநாள் கொண்டாடுவோர் அனைவருக்கும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எங்க வீட்டில் நாளைக்குத் தான், மலைக்கார்த்திகை. ஆனால் இரண்டு நாட்களும் விளக்கு ஏற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொரிஉருண்டை, வேர்க்கடலை உருண்டை பூஜைப் படங்கள் வருமா?

      நீக்கு
    2. நாளைதானே திருக்கார்த்திகை?

      நீக்கு
    3. ஆமாம் ஶ்ரீராம், எங்க வீடுகளில் நாளைக்குத் தான் திருக்கார்த்திகை. சிலர் சரவாலய தீபம் ஏற்றுவார்கள். எங்க வீட்டில் இரண்டு நாட்களும் பொரி நிவேதனம் உண்டு என் மாமியார் அப்படித் தான் செய்வார். ஆனால் நான் மலைக்கார்த்திகை அன்றே நிவேதனம் செய்து வருகிறேன். நாளைக்குத் தான் பொரி. உருண்டை இப்போதெல்லாம் பிடிக்க முடியறதில்லை. விரல்கள் வலுவிழந்து விட்டன. கடலை உருண்டை எங்க வீட்டில் கார்த்திகைக்குப் பண்ணுவது இல்லை.

      நீக்கு
    4. சில வார்த்தைகளில் மனது கலங்குகிறது. இந்த விரல்கள்தீனே நூறு பேர் சமாராதனைக்கு வந்தாலும் சமைத்தது.

      என் அப்பா, என்னிடம், எத்தனையோ ஹெவியான பைகளையெல்லாம் தூக்கிக்கொண்டு மைல் கணக்கில் நடந்திருக்கிறேன். இப்போ கைகள் வலுவிழந்துவிட்டன என்றார்.

      எனக்கு என்ன எழுதியிருக்கிறானோ

      நீக்கு
    5. என்ன செய்ய முடியும் நெல்லை. புளி கரைக்கையில் கூட விரல்கள் வலிக்கின்றன இப்போல்லாம். வலி இருக்கேனு சந்தோஷப்பட்டுப்பேன். உருண்டைகள் எல்லாம் பிடித்து 4,5 வருடங்கள் ஆகின்றன. சேர்த்து வைத்தாலே கைகளில் அடங்காமல் கீழே விழுகின்றன. ஒரு காலத்தில் செய்ததெல்லாம் கனாக்காலம். :))))))

      நீக்கு
    6. //எனக்கு என்ன எழுதியிருக்கிறானோ//

      எனக்கும் அப்படித் தோன்றும்.  என் அப்பா பட்ட அவஸ்தைகள் எனக்கும் ஜீனில் வந்திருக்கின்றன.   கீதா அக்கா சொல்லி இருப்பதைப் படிக்கும்போது அந்த எண்ணம் வலுப்படுகிறது.

      நீக்கு
  11. பொக்கிஷப் பகிர்வு நன்றாக உள்ளது. ஶ்ரீராமின் கவிதையும் கூட. மஹரிஷி இன்னமும் இருக்காரா? அவருடைய பல நாவல்களையும் நான் படித்திருக்கிறேன். நதியைத் தேடி வந்த கடலும் படித்த நினைவு. படமாக வந்தது தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  மஹரிஷி இன்னமும் இருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.  சென்ற வாரம் நதியை தேடி வந்த கடல் படத்திலிருந்து ஒரு பாடல் பகிர்ந்திருந்தேன், நினைவிருக்கிறதா?  'எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்...'

      நீக்கு
  12. கடைசி வார்த்தையும், அதுக்கு நெல்லை/ஶ்ரீராம் ஆகியோரின் கருத்துகளும் மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  13. ரோபோ வந்து விட்டது, அடக்கி வைக்க/ நானா உட்காருவேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் எந்தத் தொடரும் பார்க்கவில்லை/பார்ப்பதும் இல்லை. ஆனால் மனோஜ் வாஜ்பாய் நடித்த ஹிந்தி திரைப்படங்கள் பார்த்திருக்கேன். இதை எல்லாம் பார்க்க உட்கார்ந்தால் பின்னால் அதுவே வழக்கமாகிவிடும் என்னும் அச்சமும் இருக்கு. அதோடு பார்த்து என்ன பண்ணப் போகிறோம் என்னும் எண்ணமும் இருக்கு. பொதுவாகவே நான் யூ ட்யூப் சானல்கள் எதுவும் பார்ப்பதில்லை. பதிவுகளில் சிநேகிதர்கள் பகிர்வதைத் தவிர்த்து. ஏனோ இவற்றை எல்லாம் தவிர்க்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோபோ உங்களுக்கு இன்றுதான் வருகிறதா?  எனக்கு இரண்டு மூன்று நாட்களாகவே உங்கள் தளம் உட்பட எல்லோர் தளங்களிலும் வருகிறது.  ரோபோ வராத ஒரே தளம் ரமணி சார் தளம்தான்!

      நீக்கு
  14. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரோபோ,ரோபோ,ரோபோ! நான் பார்த்துக் கொண்டிருக்கும்/கொண்டிருந்த ஒரே தொடர் "கர்மா" அதையும் இப்போக் கொஞ்ச நாட்களாகப் பார்க்க முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்வது தொடர் வகையில் சேர்க்க முடியாது.​ செட் செட்டாக வரும். அவ்வப்போது கொத்து கொத்தாக பார்க்க முடியும்!

      நீக்கு
  15. ஸிரீஸ் களை விடக் குறும்படங்கள் தான் ஈர்க்கின்றன.
    ராயல் ஸ்டாக் நல்ல தயாரிப்புகளை வழங்குகிறது.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  17. எபி யிலும் தஞ்சையம்பதியிலும்
    அன்புடன் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..

    நேற்று மதியர்ருக்குப் பிறகு காய்ச்சல் இல்லை.. மூக்கினுள் தான் ரணமாக இருக்கின்றது..

    சரியாகி விடும்..
    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நானும் இந்த அவதிகள் பட்டேன்.  இப்போது(ம்) விடாத இருமல்!  நீங்கள் குணமாகி வருவது மகிழ்ச்சி.

      நீக்கு
    2. இருமல் குணமாக, கடுக்காய்த் தோலை வாயில் அடக்கிக்கொண்டு, உமிழ்நீரை அவ்வப்போது விழுங்கிக்கொண்டிருந்தால் - இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் / காதி பவனில் கிடைக்கின்ற ஆடாதோடை பொடி கலந்த நீரை காலை / மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல், தொண்டை தொந்தரவுகள் அகலும்.

      நீக்கு
    3. அதையும் முயற்சித்து விடுகிறேன்!

      நீக்கு
  18. அன்பின் அனைவருக்கும் நற் கார்த்திகை தீப நல்வாழ்த்துகள். அறியாமை,
    நோய் இருள் தீர ஒளி தீபம் வழிகாட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  19. அன்பின் கீதாமா வாழ்த்துகளுக்கு நன்றி.

    அன்பின் துரை செல்வராஜு நோய் நீங்கி நல் நலம் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. ஏதோ ஒரு வார்த்தையில் உடைந்துபோகிறது மனம்.... எனக்கும் சில காட்சிப்படுத்தல், பாடல்கள் அழுகையை வரவழைத்துவிடும். சமீபத்தில் பார்த்த சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் பாடல், அதற்கு முன்பு முத்துச்சிற்பியின். காயாத கானகத்தே பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்கள் எனக்கு அழுகையை வரவழைத்தது இல்லை.  ஆனால் குறையொன்றும் இல்லை பாடலில் பின்னால் "ஒன்றுக்கும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா" என்று வரும்போது மனதை என்னவோ செய்யும்.  அதுபோல பாலமுரளியின் குரலில் ஆபேரியில் வரும் நகுமோமு பாடல்.

      நீக்கு
  21. பொக்கிஷப்பகிர்வின் நகைச்சுவை அருமை.
    மஹரிஷியின் பேட்டி 2016 இலா?

    இப்போது புதிதாக வந்திருக்கிற வேதம் புத்தகம் கிடைக்கிறதா
    என்று பார்க்கிறேன்.

    பதிவுக்கு மிக நன்றி ஸ்ரீராம். மீண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் விலைக்கு கிடைக்கிறது அம்மா.

      நன்றிம்மா.

      நீக்கு
    2. ஓ .நன்றி மா. மீண்டும் யாரையாவது கேட்கணும்!!

      நீக்கு
  22. எந்தெந்த சீரியல்கள், எந்தத் தளத்தில் பார்க்கலாம், நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அவரவர் விருப்பப்படி நெல்லை.  நான் டயல் 100 (மனோஜ்) பார்த்துவிட்டேன்.  புஜ் இன்னும் பார்க்கவில்லை.  விநோத சித்தம் படமும் அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க படமும் பார்க்க ஆவல்.  அதன் இணைப்பு என்னிடம் இல்லை!

      நீக்கு
    2. ஜியோ இணைப்பு வாங்கினால் ஊரிலுள்ள ஓடிட்டி தளங்கள் அனைத்தும் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது!  அதன் ரிமோட்டில் வாய்ஸ் ரெகக்னைஸர் இருக்கிறது!

      நீக்கு
    3. ஆமாம், ஜியோவில் தினமும் பிடுங்கல் தாங்கலை, வாங்கிக்கோ, வாங்கிக்கோனு!

      நீக்கு
    4. அது தரும் வசதிகள் காரணமாக நிறைய பேர்கள் அதை வாங்கி இருக்கின்றனர்.  

      நீக்கு
    5. Jio எப்போதும் சூப்பர். பெங்களூர்ல அவங்க இல்லை. ஏர்டெல்தான். இல்லைனா நான் ஜியோக்குத்தான் போயிருப்பேன். போன் ஜியோ. சரியா எடுக்காது

      நீக்கு
    6. வசதிகள் இருந்தாலுமே நான் சட்டென அதற்கு மாற விரும்பவில்லை.  தற்சமயம் ACT யில் இருக்கிறேன்!

      நீக்கு
  23. நவம்பர் ஸ்டோரி மட்டும் பார்த்திருக்கிறோம்... எழுத்தாளர் பேட்டி அருமை...

    பதிலளிநீக்கு
  24. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. போதையடி நீ எனக்கு -ன்னு தலைப்பு வச்சா போட்டிபோட்டுக்கிட்டு வருவான் தமிழ்நாட்டிலே பிரசுரிக்க. ’வேதமடி நீ எனக்கு’-ன்னு அசட்டுத்தனமாய் பேரை வச்சிட்டு, ஒரு முன்னணி பதிப்பகமும் முன்னாடி வரல வெளியிடன்னு அழுதா எங்கே போய் முட்டிக்கிறது மகரிஷி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  ஆனால் மகரிஷி நாவல்களுக்கு தனி ரசிக வாசகர் வட்டம் உண்டு ஏகாந்தன் ஸார்.  ஆனால் இவர் படைப்புகள் ஒரு தொகுப்பாய் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  27. அதிலும் அந்த மனோஜ் பாஜ்பாய் ரொம்பவே பிடித்துப்போனது. அவரைப் பற்றி அறியச் சென்றால் அவர் ஒருமுறை விருது கூட வாங்கி இருக்கிறார்.//

    Manoj Bajpayeeபற்றி இப்பத்தான் தெரியுமாக்கும்? அவர் ஒருமுறை விருதுகூட வாங்கியிருக்கிறார்னு வியாழக்கிழமை ஆச்சர்யம் வேறயா! நீங்க அடிக்கடி ஓடிடி-யாவது பாக்கணும்.

    மனோஜ் பாஜ்பாயீ சில வருடங்களாக ஹிந்தி ஆர்ட் பட உலகின் முக்கிய ஆளுமை. (பாலிவுட், ஹிந்தி திரை என்றால் நமக்கு ஷாருக் கான், சல்மான் கான், ஆமீர் கான் என்று ‘மட்டுமே’ ஞாபகம் வந்தால், அதற்கு நாம் முன்பு செய்துவிட்டிருந்த கொடிய பாவம் ஏதும் காரணமாக இருக்கக்கூடும்!)

    கொஞ்சம் சீரியஸாக: மனோஜ் பாஜ்பாயீ ஒரு விருதல்ல, பல முக்கிய விருதுகளை வென்ற கலைத்திரை ஆர்வலர்களால் மதிக்கப்படும் கலைஞர். தன்னுடைய நடிப்புத்திறனுக்காக 3 முறை தேசிய விருது, 2 முறை ஆசியா-பசிஃபிக் ஸ்க்ரீன் விருது, 5 முறை ஃப்லிம்ஃபேர் விருது என வாங்கி அடுக்கிவைத்திருக்கிறார். இத்தகைய திறமையின் பின்னணியில்தான் பத்மஸ்ரீயும் தரப்பட்டிருக்கிறது இவருக்கு.

    மனோஜின் மசாலா என்ன என்று தெரியாத பாலிவுட், அவரது முதல்படமான Drohkaal-ல் (1994) ஒருசில நிமிடமே தாக்குப்பிடிக்குமாறு அவருக்கு ஒரு ரோல் கொடுத்தது. மறந்துவிட்டது! பின் ஷேகர் கபூரின் Bandit Queen-ல் ஒரு வாய்ப்பு. ஏகப்பட்ட முகந்தெரியாக் கொள்ளைக்காரர்களில் ஒருவராக! இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் ’சத்யா’வில்தான் அவர் கொஞ்சம் கவனிக்கப்பட்டார் - பிகு மாத்ரே எனும் கொடூரனாகத் தன்முகத்தைக் காண்பித்தபோது! ‘நெகடிவ் ரோலுக்கு இந்த மூஞ்சி தேவல போலயே..’எனப் பேச ஆரம்பித்தார்கள் வடக்கே..

    ஒரு நல்ல நடிகனாக ஆகவேண்டும், அதற்காக முறையாகப் ’படிக்கவேண்டும்’ - என அப்பாவியாக ஆசைப்பட்டு, பிஹாரிலிருந்து டெல்லிவந்து புகழ்பெற்ற திரை/ நாடகப்பயிற்சிக்கூடமான ’நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வின் கதவைத் தட்டிப்பார்த்திருக்கிறார். ‘மூஞ்சப்பாரு..மூஞ்ச! நடிக்கவந்துட்டான்.. போடா!’ என்று பலதடவை கதவை முகத்தில் அறைந்து மூடி விரட்டிவிட்டிருக்கிறார்கள். இப்படி அவலங்கள், அவமானங்கள் பல மனோஜ் பாஜ்பாயிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோஜ் பற்றி இப்போதுதான் அறிந்தேன்.  அப்புறம் அவர் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்கள் யாவும் நானும் படித்துத் தெரிந்துகொண்டேன்.  திரையுலகம் முதலில் விரட்டிய நடிகர்கள்தான் பின்னர் புகழ்க்கொடி நாட்டி இருக்கிறார்கள்.  அமிதாப், ஹேமமாலினி, ரஜினி,...

      நீக்கு
  28. @ ஸ்ரீராம்..

    // தமிழ்நாட்டில் காலமான ஒருவர் "விளக்கை அணைச்சுட்டு போ" என்று சொன்னதே கடைசி வார்த்தை..//

    ஏன்?..
    பெருந்தலைவர் என்று நேரிடையாக எழுதினால் ஏதும் பிரச்னையா?..


    போலீஸ் பிடித்த மர்ம நபர்கள், ஒரு ஆசிரியர், ஒரு தனியார் பள்ளி
    ( தனியார் பள்ளி என்று போட்டதே பெரிய தைரியம்!..)

    - என்று தமிழக ஊடங்கள் சொல்கின்ற மாதிரி இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெருந்தலைவர் என்று நேரிடையாக எழுதினால் ஏதும் பிரச்னையா?..//

      சிரித்து விட்டேன்.   அப்படிச் சொன்னது அவர்தான் என்பது யாருக்காவது தெரிந்திருக்கிறதா என்று பார்க்கவே அப்படி வெளியிட்டேன்.  நீங்கள் மட்டும்தான் சொல்லி இருக்கிறீர்கள்.  அவர் அப்படிச் சொன்னது அவர் உதவியாளர் வயிரவனிடம்.

      நீக்கு
    2. இது எனக்கு சட்னு நினைவுக்கு வரலை. ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரும், சரவணனிடம் கடைசியாகச் சொன்னது அது.

      நீக்கு
    3. ஆமாம்..  நீங்கள் சொன்னதும் படித்திருக்கிறேனோ நானும் என்று தோன்றுகிறது.ஒன்று யோசித்துப் பாருங்களேன்..  நாம் இனி மறந்துபோய்க்கூட இரவு நம் வீட்டில் விளக்கை அணைச்சுட்டு போ என்று சொல்ல மாட்டோம்!  மனதுக்குள் ஒரு திடுக் வந்துவிடும்!!

      நீக்கு
    4. போறதுக்கு எதுக்கு திடுக் ஶ்ரீராம்? நம்ம ஸ்டேஷன் வந்தா இறங்கிட வேண்டியதுதான். டக்னு போனா மத்தவங்க மனசுல இருப்போம். தொந்தரவா இருந்தோம்னா அவங்களுக்குமே பெரிய மனசுக் கஷ்டம், கில்டி ஸபீலிங்

      நீக்கு
    5. இன்று 'அந்த சம்பவம்' நடந்து விடுமோ என்கிற திடுக் தான்!  அப்படி மனசு முதலிலேயே யோசிக்காமல் இருந்து விடுமா என்ன!

      நீக்கு
    6. ???????? என்னதான் தைரியமாக இருந்தாலும் மனசு கொஞ்சம் கலங்கும் தான். ஆனால் எல்லாம் இறைவன் கைகளில் என்று இருந்துவிட்டால் கலக்கமோ/பயமோ வராது.

      நீக்கு
  29. ஓடிடி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஸ்ரீராம். பணம் கட்டியதில்லையே....ஒரு முறை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஃப்ரீயாக மலையாளப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது தமன்னா வின் நவம்பர் ஸ்டோரி டீசர் வந்தது அப்போது பார்க்க ஆவல் இருந்தது இப்ப நீங்க சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது இன்னும் தள்ளிப் போடலாம் என்று தோன்றுகிறது!!

    ஃபேமிலி மேன் எல்லாருமே நல்ல ரிவ்யூ கொடுத்தார்கள். நீங்களும் என்னிடம் சொன்னீர்கள்.

    கொள்ளையடிக்கப் ப்ளான் போடுவது திருப்பங்கள் சமாளித்தல் எல்லாம் செமையா இருக்கு என்றும் சொன்னீர்கள். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமேஸான் பி எஸ் என் எல் இணைப்புக்கு ஓசியாக ஒரு வருடம்.  ஹாட்ஸ்டார் ஏர்டெல் ஒரு வருட சந்தாவுக்காக ஒரு வருட இலவசம்..  இப்படித்தான் எனக்கும் கீதா..  இப்போதும் அமேசானுக்கும், நெட்ப்ளிக்ஸ்சுக்கும் பணம் கட்டுகிறோம்.

      நீக்கு
  30. கவிதை அட்டகாசம் வழக்கம் போல். ஒரு சொல் போதும் நம் கற்பனைக் கோட்டை தகர்ந்திட!! அருமை... அருமையா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வுக் கோட்டையும் தான் நீங்கள் சொல்லியிருப்பதை வைத்து என் கற்பனைக் கோட்டைத் தகர்வதையும் சொன்னேன்!!!

      கீதா

      நீக்கு
    2. நன்றி கீதா. இதற்கு ஒரு விளக்கம் வல்லிமாமவுக்குக் கொடுத்திருப்பதையும் படித்திருப்பீர்கள்!

      நீக்கு
  31. கடைசி வார்த்தை//

    எனக்குச் சட்டென்று கோமதிக்கா என்னிடம் பேசும் போது சொன்னது நினைவு வந்தது மாமா கடைசியாகச் சொன்னது "விபூதி பூசு" என்று கோமதிக்கா என்னிடம் சொன்னதாக நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்ககா சொன்ன போது மனம் அதை விஷுவலாக நினைத்து அக்கா எப்படியான ஒரு மன நிலையில் அப்போது இருந்திருப்பார் என்று நினைத்து வேதனைப்பட்டது.
      கடைசி வார்த்தை என்பது கொஞ்சம் மனதை சலனப்படுத்தியது. எவ்வளவோ நினைவுகள் அலைமோதுகிறது.

      கீதா

      நீக்கு
    2. அக்கா உடனடியாக எனக்குத் தொலைபேசிச் சொன்னபோது நம்பவே முடியவில்லை.  மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  ஆம், ஒருவருடம் ஓடிவிட்டது.  என் மாமா கொரோனாவில் காலமான பின் நடந்த துயர சம்பவம்.  காலையே எழுந்து குளித்து, அப்போது(ம்) சென்னையை புயல் தாக்கப்போகிற விஷயம் குறித்து தொலைக்காட்சியில் செய்தி  பார்க்க அமர்ந்தார் ஸார் என்று அக்கா சொன்னார்.

      நீக்கு
  32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா..

      //..எனக்குச் சட்டென்று கோமதிக்கா என்னிடம் பேசும் போது சொன்னது நினைவு வந்தது மாமா கடைசியாகச் சொன்னது "விபூதி பூசு" என்று கோமதிக்கா என்னிடம் சொன்னதாக நினைவு...//

      இந்த சோகம் அப்போதே பேசப் பட்டது.. ஐயா அவர்களது நினைவு இப்போதும் என் மனதில் கொந்தளிக்கும்..

      நீக்கு
  33. பொக்கிஷ ஜோக்குகள் மிகவும் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  34. திரைப்படம் பற்றிய விளக்கம் படம் பார்த்த திருப்தியை கொடுத்தது ஜி.

    பதிலளிநீக்கு
  35. மஹரிஷி தகவல்கள் வெகு சுவாரசியம். எத்தனை கதைகள் திரைப்படமாகியிருக்கு! பிரமிப்பு!

    அவரது கதைகள் கிடைத்தவற்றை எடுத்து வைத்துள்ளேன். வாசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது கதைகளை இணையத்திலிருந்து பெற்றீர்களா? லிங்க்?

      நீக்கு
  36. ஒரே சொல்லில்
    வெளியேறியது
    மன இறுக்கம்

    விடுபட்ட spring போன்று.

    கிதா ரஙகன் அனுபாவித்தார்
    ஸ்ரீ ராம் அனுபவுக்கிறார்
    பெருமழை



    பெரு மழை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவர ஹைக்கூவில் கலக்குகிறீர்கள் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

      நீக்கு
  37. Money heist பார்த்துள்ளேன். மற்றையவை பார்கவில்லை.

    ஜோக்ஸ் ரசனை. தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   மணி ஹெயிஸ்ட் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?  நன்றி மாதேவி.

      நீக்கு
  38. ஹாட்ஸ்டார் ,நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி என்று என் பிள்ளைகள் நல்ல படம், நல்ல தொடர் என்று சொல்வதையும், பேரனுடன் டிஸ்னி படங்களையும் பார்ப்பேன்.

    உங்கள் விமர்சனங்கள் நன்றாக இருக்கிறது.

    மகரிஷி அவர்கள் பேட்டி நன்றாக இருக்கிறது.

    //ஏதோ ஒரு வார்த்தையில்
    உடைந்து போகிறது
    கட்டுப்படுத்தி வைத்திருந்த
    உணர்வுக் கோட்டை //

    உங்கள் கவிதை மிக உண்மை . இன்று உணர்வுகளை கொட்டி விட்டேன்.

    சோகத்தை கொடுத்து விட்டேன். மன்னிக்கவும்.
    நிறைய விஷயங்களை படிக்கும் போது கேட்கும் போது மனம் உடைந்து கண்ணீர் மளுக் என்று வந்து விடுகிறது. மனதிடத்தை தர இறைவனை வேண்டிக் கொண்டு பிற வேலைகளில் கவனம் செலுத்துகிறேன்.

    பழைய கதைகளை பைண்ட் செய்து வைத்து இருப்பதில் இப்படி நேயர் கடிதங்கள் இருக்கிறது. குமுதம், விகடன் புத்தகங்களில்.

    கடைசி வார்த்தை பக்கம் நிறைய நினைவுகளை கொடுத்தது, அப்பா, அம்மா, மாமா, அத்தை உற்றார், உறவினர் என்று நினைவுகள் வந்து போனது உண்மை.
    காமராஜர், மெய்யப்பசெட்டியார் நினைவில் வந்தார்கள்.


    இன்றைய நகைசுவைகளும் நிறைய யோசிக்க வைத்து விட்டது.
    அனைத்தும் அருமை.

    சாரை நினைவு கொண்ட அனைவருக்கும் அன்பான நன்றி.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய ஏதோ ஒரு வார்த்தையில் எல்லோருமே உடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.    மனம் கொஞ்சமாவது லேசானால் சரி.

      நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  39. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பம் நன்றாக உள்ளது. நான் இதுவரை இந்த சிரீயல்களை பார்த்ததில்லை. குழந்தைகள் பார்ப்பார்களோ என்னவோ..

    தங்கள் கவிதை வரிகள் அருமை.மனதுள் ஒரு சோகத்தை உண்டாக்கியது.

    இறுதி வார்த்தை என்ற அலசல்கள் வேறு மனதை கலங்க வைத்தது. உங்களுக்கு, சகோ நெல்லைத் தமிழருக்கு, சகோதரி கோமதி அரசுவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கும் மனதை விட்டகலாத சிலவற்றுடன் வாழ்ந்து வருகிறேன்.

    மகரிஷி பேட்டி இன்னமும் படிக்கவில்லை பிறகு கண்டிப்பாக படிக்கிறேன்.

    பொக்கிஷ பதிவாக இன்றைய அனைத்து ஜோக்ஸ்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    காலையில் செல்லில் சார்ஸ் இல்லையீகையால், அதைப் போட்டு ஏற்றியதும், பதிவை முழுக்க படித்து கருத்திடலாம் என இருந்தேன். நடுவில் கொஞ்சம் வேலை முடிந்து என் இளைய மகனுக்கு இன்று திருமணநாளாகையால், வாழ்த்து கூறி, மகனிமும், மருமகளிடம் பேசி விட்டு பதிவை படிக்கலாம் என தாமதித்தேன். ஆனால் என் பேத்தி, மாமாவிடம் பேச வேண்டும், அதுவும் பார்த்து பேச வேண்டுமென என் ஃபோனை நீண்ட நேரம் பறிமுதல் செய்ததில் சகோதரி கீதா ரெங்கன் பதிவை தவிர வேறு எதையும் படிக்கவியலாத சூழ்நிலைகள் அமைந்து விட்டது. எனவே இப்போதுதான் வருகிறேன். இன்றைய தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகனின் திருமண நாளுக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள் கமலா அக்கா.   தாமதமாகப் படிப்பதனால் ஒரு தவறும் இல்லை.  இதெல்லாம் பொழுதுபோக்குதானே..  குடும்பம் முக்கியம் அல்லவா...   நன்றி அக்கா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      இன்றைய தாமதத்திற்கு காரணங்களை சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொன்னேன். தங்கள் வாழ்த்துகளையும் என் மகனிடம் கூறுகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. கம்லா ,உங்கள் மகன் , மருமகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்கள் அன்பான வாழ்த்துக்களை என் மகன்,மருமகளிடம் தெரிவிக்கிறேன். ரொம்பவும் நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. தாமதமான வாழ்த்துகள் கமலா. உங்கள் மகன்,மருமகள் இருவரும் என்றென்றும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் வாழவும் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  40. நல்ல பதிவுதான். ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு (அனுஷ்கா படம் என்று புரிந்து கொள்ள வேண்டாம்).
    நெட் சீரீஸ்களைப் பற்றி அடிக்கடி முகநூலில் படிப்பதால் படித்ததை மே மீண்டும் படித்தது போன்ற உணர்வு.
    மகரிஷியின் நாவல்கள்தான் அதிகபட்சம் படமாக்கப்பட்டிருக்கின்றன என்பது செய்தி. சுஜாதா..?
    கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன குறைகிறது என்று யோசித்துப் பார்க்கிறேன்.  அனுஷைதான் கேட்கவேண்டும்!

      நன்றி பானு அக்கா.

      நீக்கு
  41. சீரியல்கள் பார்த்ததில்லை
    தங்கள் பதிவைப் படித்ததும், மனம் சில சீரியல்களைப் பார்க்க விழைகிறது
    நன்றி

    பதிலளிநீக்கு
  42. //என் படைப்புகள் அனைத்தும் சிவன் சொத்துக்கள். என் அனுமதியின்றி கதையை திருடி படமாக்கியவர்கள் நல்லாவே இல்ல. நல்லாவும் இருக்க மாட்டாங்க.

    படைப்புகள் சிவன் சொத்துனு அர்ப்பணிச்ச பிறகு சாபம் என்ன வேண்டிக்கிடக்கு?! how low! பிரபலங்களிடம் இப்படியொரு பிசுநாறித்தனம் ஒட்டிக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!