திங்கள், 22 நவம்பர், 2021

"திங்க"க்கிழமை  :  நீர்க்கொழுக்கட்டை -  கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 



நீர்க்கொழுக்கட்டை

எபி நட்புகள், வாசகர்கள் அனைவருக்கும் எபி கிச்சன் குழுவின் அன்பான வணக்கத்துடன் இன்றைய ரெசிப்பி காலை (நான் காலையிலும் செய்வதால்) அல்லது மாலை/இரவு உணவு என்று சொல்லலாம். பூட்டானிலிருந்து கொஞ்சம் நம்மூர்ப்பக்கம். பின்னர் மீண்டும் இமயமலை தேசங்களுக்குச் செல்லலாம். நேபால், திபெத், பூட்டான் என்று!!!!!

இந்தப் பதார்த்தம் பிறந்த வீட்டில் செய்யப்படுவது. என் அம்மா தேங்காயும் தேங்காய் எண்ணையும் கருகப்பிலையும் மணக்க மணக்கச் செய்வார். பெரும்பாலும் மாலை/இரவு உணவாக. ப்ளெயினாக. நானும் ப்ளெயினாகச் செய்வதென்றாலும் தாளிதத்துடனும் செய்வதுண்டு. விளக்கங்கள் கொலாஜ் பெட்டியில். இது தேங்காய் எண்ணையில்தான் செய்ய வேண்டும். தாளிதம் இல்லாமல் ப்ளெயினாகச் செய்தாலும் கொழுக்கட்டை அரைத்த மாவை வதக்க தேங்காய் எண்ணைதான். கொழுக்கட்டை நீரில் வெந்த பிறகு அதன் மேலேயும் கொஞ்சம் தேங்காய் எண்ணை விட்டால் மணமும் சுவையும் கூடும். 

செய்முறை இதோ 




எபி ஆசிரியர்கள், நட்புகள், வாசகர்கள் அனைவருக்கும் எபி கிச்சன் குழுவின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

42 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    ஆகா.. நீர்கொழுக்கட்டை.. இன்றைய திங்கள் ரெசிபியில் சகோதரி கீதாரெங்கனின் பகிர்வு அருமை. மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் அம்மா வீட்டில் அடிக்கடிக் செய்து சாப்பிட்டுள்ளோம்.

    இப்போது கூட சமயங்களில் செய்வேன். அதை விட, இதை படங்கள் எடுத்து வேறு தலைப்புடன் பகிர்வதற்காக வைத்துள்ளேன். இன்னமும் முழுவதுமாக எழுதி முடிக்கவில்லை. (வழக்கம் போல் தாமதம்) அதற்குள் சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் முயல், ஆமை கதையாக முந்தி வந்து விட்டார். ஹா.ஹா.ஹா. பாராட்டுக்கள்.
    ஆனால், சகோதரி விளக்கமாக அருமையாக படங்களை தொகுத்து எழுதுவார்கள். அவர்களின் திறமைக்கு முன் நானெல்லாம் வெறும் பிசுபிசுப்பு. நன்றாக மீண்டும் ஒரு தடவை படித்து விட்டு பிறகு வருகிறேன். வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா நீங்களும் உங்கள் ரெசிப்பியை போடுங்களேன் இதிலென்னருக்கு. உங்கள் முறையையும் தெரிந்து கொள்ளலாமே. நீங்களும் மிக மிக அழகாக எழுதறீங்களே. நீங்க வேற நானே ரொம்ப லேட்டாகத்தான் எழுதுவது. குறைப்பட்டுக்காதீங்க கமலாக்கா!!!!! ஹாஹாஹா..சீக்கிரம் போடுங்க உங்க ரெசிப்பிய

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சென்னை மற்றும் தமிழகமெங்கும் மழை குறைந்து வெள்ளம் வடிந்து அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. நீர்க்கொழுக்கட்டை கேள்விப் பட்டது தான். பண்ணினதும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. ஆனால் இதே முறையில் பால் கொழுக்கட்டைக்கு அரைத்துக் கிளறிப் (பச்சரிசி+தேங்காய்) பின்னர் வெல்லம் சேர்த்துக் கொண்டுத் தேங்காய்ப் பாலில் வெல்லம் சேர்த்துக் கொண்டு அந்த வெல்லக் கரைசலில் கொழுக்கட்டைகளை உருட்டிப் போட்டுக் கொதிக்கவிட்டுப் பின்னர் தேங்காய்த் துருவலை நெய்யில் வறுத்துச் சேர்த்து ஏலப்பொடி போட்டுப்பண்ணி இருக்கேன். பசும்பாலிலும் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவிட்டு உருண்டைகளை உருட்டிப் போட்டுப் பின்னர் தேங்காய் சேர்த்து/சேர்க்காமல் பண்ணி இருக்கேன். இது புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உப்புமா கொழுக்கட்டை செய்திருப்பீர்கள். அரிசி உப்புமாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து. அது போல்தான் இதுவும். 

      நீக்கு
    2. உப்புமாக்கொழுக்கட்டை, மட்டும் என்ன? அரிசி உப்புமாவே எப்போவானும் தான் பண்ண முடியுது. உப்புமாக் கொழுக்கட்டை பண்ணிட்டு நான் மட்டும் தான் சாப்பிடணும். அதெல்லாம் மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)

      நீக்கு
    3. //அதெல்லாம் மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! // - அடடா... உடனே உங்கள் தளத்துக்குச் சென்று உப்புமா கொழுக்கட்டை எப்படிப் பண்ணணும் என்ற செய்முறையைத் தேடி உங்கள்ட ஷேர் பண்ணறேன்.. நினைத்தேன்.. காடரர் கிட்டவே நிறைய தடவை வாங்கறாங்களே... செய்முறை மறந்துடாதோ என்று. மறந்துடக்கூடாது என்றுதான் வெந்நீர் வைப்பதையும் நீங்கள் செய்முறையாக பதிவு செய்திருக்கிறீர்கள் என்பதைப் பார்த்தேன். ஹாஹா

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, அதெல்லாம் செய்முறை எழுதி வைச்சிருக்கேன். மாமியார், மாமனார் இருக்கையில் அரிசி உப்புமா, பொங்கல் (இப்போப் பொங்கல் எப்போவானும் பண்ணலாம். ஆனால் அரிசி உப்புமாவுக்குத் தடை) புளிப்பொங்கல்னு பண்ணுவேன். போணி ஆகும். குழந்தைகளுக்கும் அரிசி உப்புமா பிடிக்காது; புளிப்பொங்கலோ,பொங்கலோ (வடநாட்டுக் கிச்சடி மாதிரிப் பண்ணினால் சாப்பிடுவாங்க)பிடிக்கிறதில்லை. ஆகவே அதெல்லாம் பண்ணவே முடியாது. சர்வாதிகாரமா இல்லையோ?

      நீக்கு
    5. நல்லவேளை என்னிடம் இந்தக் கேள்வி (சர்வாதிகாரமா இல்லையோ?) கேட்டீங்க. என் மனைவிட்ட கேட்டிருந்தீங்கன்னா... வீட்டுக்கு வீடு வாசப்படின்னு நினைச்சுக்குவா. எங்க அப்பா செய்த அதே தவறை நானும் என்னை அறியாமலேயே செய்திருக்கிறேன். எங்க வீட்டில், நான் (+மனைவி) சாப்பிடும் உணவின் மெனு நான் சொல்வேன். பசங்க வளந்துட்டாங்க. அதனால கடந்த சில வருடங்களாகவே என் பப்பு வேகலை அவங்கள்ட.

      நீக்கு
    6. பால் கொழுக்கட்டையும் செமையா இருக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் கீதாக்கா. நம் வீட்டில் எல்லாமே போணியாகும். எதுவும் பிடிக்காது என்று யாரும் சொல்வதில்லை. ஒதுக்கல் கழித்தல், எதுவும் இல்லை புதுசா செஞ்சாலும் விரும்புவதுண்டு. இது வயிற்ற்கு ஒன்றும் செய்யாது

      உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைத்தேன் கீதாக்கா.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  5. நீர்கொழுக்கட்டை பிடிக்கும். சம்பா அரிசி என்பது சிவப்பரிசி தானே? அதுதான் சுவையாக இருக்கும். தேங்காய் சட்னியை விட தக்காளி தொக்கு நன்றாக இருக்கும்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் பிடிக்கும்ன்றது மகிழ்ச்சி ஜெ கே அண்ணா. ஆமாம் அதே! சிவப்பரிசிதான். ஆமாம் சுவையாக இருக்கும்..

      த தொ வும் நன்றாக இருக்கும். ஆனால் நம் வீட்டிற்கு வருபவர்களுக்குப் பெரும்பான்மையோருக்கு தே ச தான் பிடித்திருக்கிறது.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
  6. சம்பா அரிசியில்தான் அடை நன்றாக இருக்கும் (சிவப்பரிசி) என்று என் அம்மா சொல்லுவார். நானும் ஒரு தடவை சிவப்பரிசி வாங்கிச் செய்திருக்கிறேன். ருசிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை நானும் சம்பா அரிசியில் அடை செய்வதுண்டு ரொம்ப நன்றாக இருக்கும்... இதுவும் அந்த அரிசியில்தான் நன்றாக இருக்கும்

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. நீர்க்கொழுக்கட்டையை ருசித்தேன்.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. டிடி இது நம்மைப் போன்ற இனிமையானவங்களுக்கு நல்லதாக்கும்...

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  10. ஒரே செய்முறையில் இத்தனை வேரியேஷன்ஸ் கொடுத்தால், அப்புறம் பின்னூட்டம் இடுபவர்கள் தங்கள் அனுபவத்தை எப்படிப் பகிர்ந்துகொள்வது? இன்னும் 'பாஸ்மதி அரிசி' உபயோகிக்கலாம், மாங்காய், கேரட் ஆகியவற்றை சன்னமாகச் சீவி அதனையும் மாவுடன் கலக்கலாம் என்று மட்டும்தான் எழுதலை இந்த கீதா ரங்கன்(க்கா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை நான் செய்யறதை சொல்லணுமில்லையா அதான்....

      நான் சொல்லிட்டேன்னு இப்ப என்ன குறையாக்கும் உங்களுக்கு!!!!!! நீங்களும் பாஸ்மதி, கேரட் மாங்காய்னு சொல்லிட்டீங்களே!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  11. நல்ல செய்முறைக் குறிப்பு..

    ஆனாலும் கைத்தொலைபேசியில் பக்கங்களைப் பெரிதாக்கிக் கொண்டு இப்படியும் அப்படியுமாக நகர்த்திப் படிப்பதற்குள் களைத்து விடுகின்றது..

    நலமே வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா..

      ஓ இப்படி கொலாஜ் செய்து எழுதுவதால் படிக்கக் கஷ்டமாக இருக்கிறதோ துரை அண்ணா?

      கீதா

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. நீர் கொழுகட்டை செய்முறை விளக்கமும், படங்களும் அருமை கீதா.


    நீர் கொழுகட்டை எங்கள் அம்மா வீட்டில் அடிக்கடி செய்வோம். கொழுகட்டைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு கொழுகட்டை வெந்த நீரில் தேங்காய்பூ, ஏலக்காய் வெல்லம் போட்டு கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
    நீர் கொழுகட்டையை தாளித்தோ, அல்லது சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடும் போது இடை இடையே இளம் சூடாய் கொழுகட்டை தண்ணீரும் குடிப்போம். வயிறு நிறைந்து விடும். சுவையாக இருக்கும்.

    கணவருக்கு பிடிக்காது என்பதால் , குழந்தைகளுக்கு மட்டும் செய்வேன். அவர்களுக்கு காரம் போட்டு செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோமதிக்கா இடையிடையே கொழுக்கட்டை வெந்த நீர் அதில் தேங்காய்ப்பூ போட்டு இடையிடையே இளம் சூடாய் கொழுக்கட்டை தண்ணீரும் குடிப்பதுண்டு. செம டேஸ்டா இருக்கும். ஆமாம் வ்யிறும் நிறைந்துவிடும்.

      உங்கள் அம்மா திருவனந்தபுரத்துல இருந்தாங்க இல்லையா அதான் இந்தக் கொழுக்கட்டை நீங்களும் சாப்பிட்டு செஞ்சும் இருக்கீங்க. காரம் போட்டுச் செய்வதும் நன்றாக இருக்கும்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  14. அனைவருக்கும் மாலை/காலை வணக்கம்.
    நீர் கொழுக்கட்டை! ஒரே ஒரு முறை எங்கள் மாமி செய்து சாப்பிட்டிருக்கிறேன்.‌ இதே போல் வெல்லம் போட்டு செய்யும் பால் கொழுக்கட்டை செய்வதுண்டு எ.பி.யிலும் பகிர்ந்திருக்கிறேன். அது வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். நீர் கொழுக்கட்டை... முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. எங்க வீட்டுல கொழுக்கட்டை எங்க வூட்டு மாமி செய்வாங்க ஆனால் இந்த மாதிரி நீர்க் கொழுக்கட்டை அல்ல பூரிக்கட்டை வைத்து என் உடம்பில் செய்யும் கொழுக்கட்டை அது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடிக்காது என்றாலும் பழகியாச்சு

    பதிலளிநீக்கு
  16. நீர் கொழுக்கட்டை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!