==========================================================================================================
நான் படிச்ச கதை
ஜெயக்குமார் சந்திரசேகர்
----------------------------------------------------------------------
இலங்கைத் தமிழ் ஒரு தனித் தன்மையுடையது. கேட்பவருக்கு தாலாட்டாகும். எழுத்தில் படிக்கும் போது சங்கத்தமிழ் போன்று இருக்கும். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் இருவர் பிரபலம் அடைந்தவர்கள். அ. முத்துலிங்கம் மற்றும் டொக்டர் முருகானந்தம்.
Doctor முருகானந்தம் தளம் https://hainallama.blogspot.
முத்துலிங்கம் chartered accountant. இவரைப் பற்றிய பின்னட்டை அறிமுகம்.
1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்த பின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.
2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராக செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
இவரது தளம் https://amuttu.net/
இவர் 90க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
'நான் படிச்ச' இந்தக் கதையின் பெயர் கம்ப்யூட்டர்.
இந்த கட்டுரையில் சிவப்பு எழுத்துக்களில் உள்ளது கதாசிரியர் எழுதியது.
கதைச்சுருக்கம்:
வருடம் 1996. PC கள் விற்பனை ஆன காலம். நம்முடைய ஆசிரியரும் ஒரு PC வாங்க தீர்மானிக்கிறார். அந்தக் காலத்தில் சாதாரண 48MB RAM 18 GB hard disk கம்ப்யூட்டர் ஒரு புதிய கார் விலைக்கு சமம்.
அவருக்கு PC பற்றிய புரிதல் திகையாமையால் PC பற்றி தெரிந்த நண்பருடன் சென்று ஒரு 486 PC வாங்குகிறார். படிப்படியாக உபயோகிக்கக் கற்றுக்கொண்டு அதில் அவருடைய கதைகளை சேர்த்து வைக்கிறார். மனைவியும் மகனும் கூட அதை உபயோகிக்கிறார்கள்.
ஓர் இரவு நல்ல கதை ஒன்றை “தொலை” என்ற தலைப்பில் தட்டச்சு செய்து முடிக்கிறார். அப்போது மின்தடை ஏற்படுகிறது. பின்னர் அந்தக் கதை தொலைந்து போய் விடுகிறது. கடைசியில் தொலைந்த கதை மீண்டும் கிடைக்கிறது. சுபம்.
இந்தக் கதை (அல்ல நிஜம்) ஸ்ரீராம்க்கு (!) ஏற்பட்டது போன்ற சாதாரண நிகழ்வு தான்.
இந்தக் கதையை கட்டுரை, கவிதை, கற்பனை என்ற மூன்றையும் கலந்து பால் சீனி டிகாக்ஷன் சேர்ந்த காபி போன்று (சிறுகதை) தருகிறார். அதுவே இதன் சிறப்பு. அந்தக் காபியை நான் கொஞ்சம் ஆற்றித் தருகிறேன். முதலில் வாசனையை அனுபவியுங்கள். பின்னர் சுட்டிக்கு சென்று கதையை படியுங்கள்.
இவருடைய தனித்தன்மை பகடி. இலங்கை தமிழர்களுக்கே உரித்தான நகைச்சுவை. ஒவ்வொரு வரியிலும் அவருடைய பகடி வெளிப்படுகின்றது. உதாரணத்திற்கு சில.
ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை. கம்ப்யூட்டர்களில் ஆண் பெண் பேதம் இருப்பது எனக்குத் தெரியாது. அதைக் கண்டுபிடிக்க என்ன குறுக்கு வழி (சுஜாதா குறும்பு?) என்பதையும் யாரும் சொல்லித்
தரவில்லை.
இவ்வாறு கூறுபவர் சற்று கழித்து
சில நிபுணர்கள் பார்த்த வாக்கிலே சொல்லி விடுவார்களாம். பெண் என்றால் வழிக்கு கொண்டு வர கனநாள் ஆகுமாம். ஆனால் அணைந்து விட்டால் விசுவாசமாக செயல்படும். ஆனால் ஆண் அப்படி இல்லையாம். ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக ஒத்துழைக்கும். நாள் போகப்போக காலை வாரி விட்டு விடும்.
(இது கணவன் மனைவிக்கும் பொருந்தும் தானே.)
ஆசை மனைவி ஆர்மோனியப்பெட்டி போல இதையும் வளைத்து விடலாம் என்று ஆர்வமான கனவுகளுடன் காத்திருந்தாள்.(கில்லெர்ஜீ ஸ்டைல்?)
தற்போது PC யில் பியானோ மென்பொருள் வந்து விட்டது. பியானோ போன்று கீபோர்டை உபயோகித்து கம்போஸ் செய்யலாம்.
கம்ப்யூட்டர் சேல்ஸ்மேன் பற்றி விவரிக்கும்போது
தலையில் இருக்க வேண்டிய முடியெல்லாம் மூக்கு வழியாகவும் காது வழியாகவும் வந்து கொண்டிருந்தது.
விற்பனையாளர் இவருடைய தேவைகளை பற்றி கேட்ட கேள்விகள்
சந்தி பிரிக்காத பாடல் போன்று தலை சுற்றியது. என்று கூறுகிறார்.
கம்ப்யூட்டர் வகைகளை பற்றி கூறும்போது
மேசையில் வைப்பது, மடியில் வைப்பது (இது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்) கக்கத்தில் வைப்பது இப்படிப் பல. தலையில் வைப்பது இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். வந்துவிட்டால் பெண்கள் தலையில் மல்லிகைப்பூ வைப்பதற்கு பதில் இதை வைத்துக் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தற்போது கம்ப்யூட்டர் செய்யக்கூடிய பாதி வேலைகள் கைபேசிகள் செய்து விடுகின்றன. தலையில் இல்லாவிட்டாலும் எல்லோரும் earbuds உபயோகிக்கத் தொடங்கி விட்டார்கள்.
சரி கம்ப்யூட்டர் வாங்கியாயிற்று. வீட்டுக்கும் கொண்டு வந்தாயிற்று.
முதல் வேலையாக மனைவி சாமிக்கு தீபம் காட்டி விட்டு வந்து கணிப்பொறியின் நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டு வைத்தாள். என் மனைவி கையகலத்திற்கு அரவிந்தன் “ஓம் ஸ்ரீ ராம் “ எழுதினான். (நம்முடைய ஸ்ரீ ராம்!)
கதை கணினியில் காணாமல் போன போது புலம்பல்
பக்குவமாய் பணியாரம் செய்து பனை நார் பெட்டியில் மூடி மாடாவில் மறைத்து வைத்தது போல் இவ்வளவு கவனமாக இந்தக் கதையை கோப்பிலே செருகி வைத்தேனே. எங்கே போனது.
எலி கொண்டு போச்சோ?
இது போன்று பலப்பல பகடிகள். சரி சாம்பிள் போதும்.
இனி கவிதை மேற்கோள்.
ஹார்ட்டிஸ்க், பிளாப்பி,மெகா பைட், சொப்ட்வேர், இன்டர்பேஸ், உ பி எஸ், என்ற வார்த்தைகள் எல்லாம் சிதம்பரச் சக்கரமாக இருந்தது.
இது பற்றி கூறும்போது கவி காளமேகம் தெலுங்கு தாசியிடம் பட்ட அவஸ்தையை விவரிக்கும் பாடலை மேற்கோள் காட்டுகிறார்.
(அடல்ட்ஸ் ஒன்லி கொஞ்சம் கூடுதல் இல்லையா? )
எமிரோ வோரி என்பாள் எந்துண்டி வஸ்தி என்பாள்
தாம் இராச்சொன்னவெல்லாம் தலை கடை தெரிந்ததில்லை
போம் இராசூழும் சோலை பொரு கொண்டை திம்மி கையில்
நாம் இராப்பட்ட பாடு நமன் கையில் பாடு தானே.
இது போல் ஒரு பாக்குவெட்டி கவிதையும் ஒன்று உண்டு.
இனி கட்டுரைக்கொரு சாம்பிள்.
கணிப்பொறி என்பது ஒரு ராட்சச வேலைக்காரன். சொல்லும் வேலைகளை எல்லாம் கச்சிதமாகச் செய்யும். ஆனால் தவறான கட்டளை பிறப்பித்து விட்டாலோ தானே எஜமானன் ஆகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமை தான். இன்னொன்று பயந்து பயந்து அணுகினால் அது எட்ட எட்ட போய்விடும்.
இது எல்லா காட்ஜெட்ஸ்க்கும் பொருந்தும் தானே.
சரி. ஏதோ கற்பனையம் உண்டு என்கிறீர்களே? இந்த கதை நிஜம் அல்லவா? என்று கேட்காதீர்கள். நிஜக்கதையில் ஒரு கற்பனைக்கதை இருந்தது ; அது தான் தொலை, தொலைந்து போய் விட்டதே. ஆனாலும் கதை சுருக்கம் உண்டு.
இப்போது கொஞ்சம் ரொமான்ஸ். கொஞ்சம் என்ன, ரொம்பவே.
இதயத்தில் சந்தோசம் பொங்கும் அந்த நேரங்களில் என் விரல்கள் சில்லென்று குளிர்ந்திருக்கும். அவள் இடையைப் போய் தொட்டுவிடும். அப்போது எட்ட நின்று “press any key to enter” என்று சொல்லி விட்டு ஓடத் தயாராகவே இருப்பாள். நான் எட்டிப்பிடிக்க “if you want to escape press here” என்று உதட்டைத் தொட்டு காட்டுவேன்.
தொலைகாட்சி கதாநாயகியின் தொப்புள் பிரதேசத்தில் மெய்ம்மறந்து இருந்த நான்
அறிமுகம் செய்ய ஆரம்பித்து, முகவுரை ஆகி, பின்னர் அணிந்துரை புகழுரை என்றாகி விட்டது.
இப்போது சொல்லுங்கள்
இந்தக் கதையை கட்டுரை, கவிதை, கற்பனை என்ற மூன்றையும் கலந்து பால் சீனி டிகாக்ஷன் சேர்ந்த காபி போன்று (சிறுகதை) தந்திருக்கிறார் என்பது சரிதானே? அந்தக் காபியை நான் கொஞ்சம் ஆற்றித் தந்தேன். வாசனையை அனுபவித்தீர்கள் என்பதுவும் சரிதானே?
இப்போது சுட்டிக்கு சென்று கதையை. படிக்கலாம். கதைகளின் முழுத்தொகுதி சுட்டி நூலகத்தில் உள்ளபடி
என்ற சுட்டியில் 46ஆவது கதையாகக் காணலாம்.
இது தொகுப்பில் இருந்து கதை உள்ள பக்கங்களை மட்டும் PDF to PDF பிரிண்ட் எடுத்து.
https://drive.google.com/file/
சுட்டியாகக் கொடுத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசிவகார்த்திகேயேன் செயல் போற்றத் தக்கது
நன்றி மதுரை.
நீக்குசிவகார்த்திகேயனைப் பாராட்டலாம்.
பதிலளிநீக்குமுத்துலிங்கம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். தமிழன் எவ்வளவு கஷ்டப்பட்டு புலம் பெயர்ந்து கனடா அடைகிறான் என்பதை ஒரு நாவலாக எழுதியிருந்தார். (விகடன் வெளியீடு என்று நினைவு) என்னைக் கட்டிப்போட்ட எழுத்து. அவருடைய சில சிறுகதைகளும் படித்திருக்கிறேன்.
தன் அனுபவம் மாதிரியே கதை எழுதுவதில் வல்லவர். நேர்த்தியான எழுத்து. எதையோ புதிதாக நாம் தெரிந்துகொள்ளும்படியான எழுத்து.
கதைகளை பிறகுதான் நேரமிருக்கும்கோது வாசிக்கணும். நல்ல அறிமுகம் ஜெயக்குமார் சார்.
நன்றி
நீக்குநன்றி நெல்லை, JC ஸார்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆரோக்கியம் வளர வாழ்வு தொடர வேண்டும்.
வாங்க வல்லிம்மா, வணக்கம்.
நீக்குசிவகார்த்திகேயனின் நேரம் அறிந்த உதவி
பதிலளிநீக்குமிகவும் பாசிட்டிவ்.
அதே!
நீக்குகவிஞர் அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்தையும்,
பதிலளிநீக்குஇணைய பேட்டிகளையும் பார்த்திருக்கிறேன்.
இத்தனை சுவையான கதையை இப்பொழுதுதான் அறிகிறேன்.
எத்தனை கோணங்களில் கணினியை அணுகி இருக்கிறார்.
அதே 1996 இல் தான் முதல் டெஸ்க் டாப்
எனக்கும் கிடைத்தது.
சுவையான நிகழ்வுகளைக் கச்சிதமாக இங்கே பதிந்திருப்பதே
திரு ஜயக்குமார் அவர்களின் ஈடுபாட்டையும் திறனையும் காட்டுகிறது.
மிக நன்றி.
நல்லதொரு அறிமுகம்.
நீக்குமிக்க நன்றி அம்மா
நீக்குJayakumar
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குதிரு.. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரியவர்...
பதிலளிநீக்குவாழ்க என்றென்றும்..
அதே..
நீக்குகதையின் கதை அழகு..
பதிலளிநீக்குஅதே..
நீக்குகதையின் கதை! பாராட்டுகளுக்கு நன்றி அய்யா.
நீக்குJayakumar
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் தொற்றுக் குறித்த அச்சம் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு வாழப் பிரார்த்தனைகள். தொடர்ந்து பயமுறுத்தும் புதிய தொற்றால் யாருக்கும் கெடுதல் ஏற்படாமல் முற்றிலும் அழிந்து போகவும் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குஅதே..
நீக்குஇந்த வாரம் நல்ல செய்திகளே இல்லை என்பது வருத்தமாய் உள்ளது, வித்தியாசமான முறையில் கதைகளையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்து வரும் திரு ஜேகேவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஏதோ ஒரு நல்ல செய்தி இருக்கிறதே.... இந்நன்று எடுத்து வைத்திருதேன். ...
நீக்குமிக்க நன்றி அம்மா
நீக்குJayakumar
அருமையான ரசனையான காஃபி...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசிவகார்த்திகேயன் செயலின் சுட்டியை லதா ரஜினிகாந்த்க்கு அனுப்பி வைக்க வேண்டும் ஜி.
பதிலளிநீக்குகதையின் சுட்டிக்கு பிறகுதான் செல்ல வேண்டும். இது எவ்வகையில் கில்லர்ஜி ஸ்டைல் ? நாராயணா....
ஹா... ஹா.. ஹா.. நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி . . .வாங்க
நீக்குசிவகார்த்திகேயனை பாராட்ட வேண்டும். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குடாக்டர் முருகானந்தம் அவர்கள் தளம் படிப்பேன். திரு முத்துலிங்கம் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். மிக அருமையாக முத்துலிங்கம் அவர்களை பற்றி சொல்லி அவர் கதையை விமர்சனம் செய்து இருப்பது நன்றாக இருக்கிறது. கதையை படிக்கிறேன்.
மிக்க நன்றி அம்மா
நீக்குJayakumar
நன்றி கோமதி அக்கா.
நீக்குசிவகார்த்திகேயனைப் பாராட்டுவோம். நிறைய நல்லது செய்துவருகிறார்.
பதிலளிநீக்குகீதா
ஜெகே அண்ணா வித்தியாசமான விமர்சனம். அசத்திட்டீங்க. நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமுத்துலிங்கம் எனக்கு மிகவும் பிடித்த என்னைக் கவர்ந்த எழுத்தாளர். செமையா நகைச்சுவை கலந்து எழுதுவார். பகடி அவருக்கு அநாயாசமாக வருகிறது. அவரது சிறுகதைகளில் சில வாசித்திருக்கிறேன். இந்தக் கதையும் வாசித்திருக்கிறேன். சிரிந்துவிட்டேன்.
டாக்டர் முருகானந்தம் அவர்களின் தளமும் செல்வதுண்டு. சமீபகாலமாகத்தான் போகவில்லை.
கீதா
இந்தப் பகுதிக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஜெயக்குமார் சார். உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கதை எபி வாசகர்களுக்கும் பிடித்திருப்பதில் சந்தோஷம்.
ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா. கதையை வாசிக்கக் கோருகிறேன்.
நீக்குJayakumar
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்று தாமதமானதற்கு வருந்துகிறேன்.
இன்றைய பாஸிடிவ் செய்தி அருமை. நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல செயல்களை மனதாற பாராட்டுவோம். அந்தச் செய்தியை என் கைப்பேசியில் பெரிதாக்கி பார்க்க இயலவில்லை. சின்ன எழுத்துக்களில் சரிவர விபரம் அறிய முடியவில்லை.
சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தாம் படித்த கதையாக தந்த குறித்த விபரங்கள் அருமை. டாக்டர் முருகானந்தம் அவர்களின் தளமும் முன்பு சென்று அவரின் மருத்துவ குறிப்புகளை வாசித்திருக்கிறேன். திரு. முத்துலிங்கம் அவர்களின் கதைகள் இதுவரை வாசித்ததில்லை. இன்று கொடுக்கப்பட்டிருக்கும் அவரின் கதையான கம்யூட்டர் கதையை கண்டிப்பாக வாசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அம்மா
நீக்குவணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே
நீக்குகம்யூட்டர் கதையை படித்தேன்.கதையை ஆசிரியர் நல்ல சொல்லாடலுடன் அழகாக அதே சமயம் நகைச் சுவைகள் கலந்து எழுதியுள்ளார். இறுதியில் அவர் கதை எங்கும் தொலையாமல் அங்கேயே கிடைத்தவுடன்தான் எனக்கும் மூச்சே வந்தது. சிறப்பான கதையை படிக்கத் தந்தமைக்கும், கதையைப் பற்றிய தங்களின் அழகான விமர்சனத்திற்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது. நன்றி அம்மா.
நீக்குJayakumar
பாசிட்டிவ் செய்தி மகிழ்ச்சி அளித்தது.... ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா அவர்களின் பார்வையில் ஒரு சிறுகதை. சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஒரு சிறந்த விமரிசகர் என்னுடைய முயற்சியையும் பாராட்டியமைக்கு நன்றி. கொஞ்ச நாட்களாக பதிவுகள் காணவில்லை. என்ன சுணக்கமோ?
நீக்குவளைகுடா நாட்டில் இருந்த போது பத்தாண்டு காலம் ஈழத் நம் தமிழர்களுடன் பழகி இருக்கின்றேன்.. அதற்கு முன்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்..
பதிலளிநீக்குல கர, ள கர, ழ கர - உச்சரிப்புகள் இனிமையாக இருக்கும்..
கதைப்பதற்கு சரியான கூட்டாளி கிடைக்கும் எண்டால் வடிவாகப் பேசிக் கொண்டு இருக்கலாம் தானே!..
Sivakarthikeyan's humanitarian deed towards the needy makes us feel good!
பதிலளிநீக்குHave read Muthulingam sir's stories in Vikatan. He is skillfull in explaining the landscape, feelings in a humble, humorous way. He shines unique with his typical native slang! Thanks for today's positive vibes and short story.
சிவ கார்த்திகேயன் ஏதோ நல்லது செய்திருக்கிறார் என்று தெரிகிறது. என்னுடைய செல்ஃபோனில் அதை பெரிது படுத்தி பார்க்க முடியாததால் விவரமாக தெரிந்து கொள்ள முடியவில்லை.
பதிலளிநீக்குஜே.கே.சார் படித்த கதையைப் பற்றி ஸ்வாரஸ்யமாக கூறியிருக்கிறார். படிக்க வேண்டும். நன்றி.
டாக்டர் முருகானந்தன் தளத்தை எ பி இல் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குதிரு. முத்துலிங்கம் கதைகள் படித்திருக்கிறேன்.
அருமை
பதிலளிநீக்கு