வியாழன், 6 ஜனவரி, 2022

(திருதிருவென்று) விழித்திரு..

 அன்றே அவர் கையெழுத்து போட்டுக் கொடுக்கா விட்டால் பள்ளியில் பிரச்னை.  அங்கு ஸ்கேலில் அல்லது குச்சியில் அடிவிழும்!  அல்லது வெளியில் நிறுத்தப்படுவேன்.  சரி, சரி..  இந்த சப்ஜெக்ட் வேண்டாம்..   அது பெரிய கதை.  அப்புறம் உணர்ச்சிவசப்பட்டு வேறு சில உண்மைகளையும் சொல்லி விடுவேன்!

மறதிக்கு வருகிறேன்.  மறந்துபோய் வேறு எங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறேன்..  என்று சென்ற வாரம் முடித்திருந்தேன் அல்லவா....  ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தால் அது வேறெங்கொ எல்லாம் சுற்றி வருகிறது.  எதில் தொடங்கினோம், எதற்குத் தொடங்கினோம் என்பது மறந்து, 'என்ன சொல்ல வந்தேன்?' என்று கேட்கும் நிலை வரும்!  எனவே விஷயத்துக்கு வருகிறேன்...  

சில சமயம் என் நண்பன் சொல்வதுபோல 'ஓவர் ஜாக்கிரதை உடம்புக்கு ஆகாமல் போயி'ருக்கிறது!  அதாவது சில கோப்புகளை, அல்லது வீட்டில் சில பொருள்களை எங்கோ ஓரிடத்தில் அஜாக்கிரதையாக இருப்பதைப் (பல நாள்) பார்த்ததும், ஒருநாள் அதை எடுத்து 'ஜாக்கிரதையாக' , 'அடையாளமாக' ஒரு இடத்தில் வைப்பேன்.  அவ்வளவுதான்.  அதை மறுபடி தேடும்போது கிடைக்காது.  அந்நேரத்தில், அது அஜாக்கிரதையாக இருந்த இடம் நினைவில் நன்றாக இருக்கும்.  அதற்குப் பிறகு அதை எடுத்து வைத்தது கூட மறந்து போயிருக்கும்.  அப்புறம் அல்லவா எங்கே வைத்தோம் என்று தேட?  

ஆபீஸிலும் சரி, வீட்டிலும் சரி, அம்மா கற்றுக்கொடுத்த அந்தப் பாடத்தைப் பின்பற்றுகிறேன்.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் என் பொருட்களை வைத்து, எடுத்து வ...... ந்தாலும்...  அப்பப்போ வம்பில், தொல்லையில் மாட்டிக்கொண்டு சிலவற்றைத் தே...டுவதுண்டு!

எப்போதும் என் பொருட்களுக்கு 'பெட்'டுக்கு அருகிலேயே தனி இடம் வைத்து அங்கேதான் கும்பலாக போட்டு வைத்திருப்பேன்!

மழை பெய்துகொண்டிருந்த நவம்பர் கடைசி வாரம்.  எங்கள் தெரு சுற்றிலும் நீர் தேங்கி இருக்க, நான் ஆட்டோ ஏற கொஞ்சம் சுற்றிக் கொண்டு சென்று ஒரு சாலையில் காத்திருக்க வேண்டும்.  ஒருமுறை தேங்கியிருந்த நீரில் மாட்டி ஆட்டோ நின்று  ஸ்டார்ட் ஆகாமல் கழுத்தறுத்திருந்தது.  எனவே தேங்கிய நீரில் ஆட்டோ மாட்டாதிருக்க இந்த ஏற்பாடு!

உங்களுக்கு நினைவிருக்கும், அப்போது பாஸுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி இருந்தேன்.  காலை ஆறு மணி போல விழித்திருந்தவர், நான் கிளம்பும் சமயம் - ஆறரை - தூங்கி விட்டார்.  இரவெல்லாம் சரியாகத் தூங்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்.  எனவே தொந்தரவு செய்யாமல் அம்மாவிடம் கைகாட்டிவிட்டு நான் கதவை மூடிக்கொண்டு கிளம்பினேன். மழைக்காலக் கதவு சாத்தமுடியாமல் படுத்துவதால் சத்தமின்றி அழுத்திச் சாத்தித் தாளிட்டு, இரும்பு கேட்டையும் உள்புறமாகத் தாளிட்டுக் கிளம்பினேன். 

கிளம்பும்போதே எதுவோ குறைவது போல உணர்வு.  நோ நோ சஞ்சீவி நினைவில் தோன்றும் புன்னகையை நிறுத்துங்கள்.  பேண்ட்ஸ், ஷர்ட் எல்லாம் போட்டிருந்தேன்.  சில சமயம் பாதி தூரம் சென்றபின் இயல்பாகக் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்ய கை செல்லும்போதுதான் அதை அணியவில்லை, மறந்து விட்டேன் என்று நினைவுக்கு வந்த இரண்டு சந்தர்ப்பங்கள் உண்டு.  எனவே ஞாபகமாக மூக்குக் கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தேன்.  இருந்தது.  மகன் ஞாபகம் வரவும், மாஸ்க் போட்டிருப்பதை உறுதி செய்து கொண்டேன்.  செல்போன் இருந்தது.  மெல்லக் கொஞ்ச தூரம் சென்றதும் குடை எடுக்க மறந்திருப்பது தெரிய, கொஞ்சம் யோசித்து, வேண்டாம் என்று முடிவு செய்து தொடர்ந்து நடந்து நிற்க வேண்டிய இடத்தை அடைந்தேன்.

இயல்பாக கை பேண்ட் வலது பாக்கெட்டை நெருட, திகீரென்றது.  நல்லவேளை, இங்கேயே கவனித்தேன் என்று தோன்றியது.  ஆபீஸ் என் அறைச் சாவி இல்லை.

இந்த இடத்தில் என் இன்னொரு வழக்கத்தை சொல்ல வேண்டும்.  வலது பக்க பேண்ட்ஸ் பாக்கெட்டில்(தான்) சாவி இருக்கும்.  சட்டை பாக்கெட்டில் அன்றைய தேவைக்கான காசு இருக்கும்.  இடது பக்க பேண்ட்ஸ் பாக்கெட்டில் என் செல்போன் தவிர பொருள், காசு இருந்தால் அது என் காசு, பொருள்  அல்ல, வேறு யாருக்கோ கொடுக்க வேண்டிய காசு, பொருள் என்று அர்த்தம்.  யாரிடமிருந்தாவது கடன் வாங்கி விட்டு மறக்காமல் இருக்கவும், வேறு யாராவது அவரிடம் இந்தக் காசைக் கொடுத்து விடுங்களேன் என்று சொல்லி கொடுக்கும் காசோ, பொருளோ இருக்கும். 

அப்படிப் பழக்கத்தில்தான் வலது பக்க பேண்ட்ஸ் பாக்கெட்டை கை நெருடியபோது வெறுமையை உணர்ந்தது.

குடை இல்லாமல் சமாளிக்கலாம்.  சாவி இல்லாமல் எப்படி?  ஆ... ஆட்டோ வந்தால் அங்கேயே காத்திருக்கும்படி அலைபேசிச் சொல்லிவிட்டு திரும்ப வந்த வழியே சளக் சளக் என்று ஓடினேன்.  

இன்னொரு கவலை.  பாஸ் உடம்பு சரியில்லாமல் தூங்குகிறார்.  தொந்தரவு செய்யாமல் கிளம்பினோமே, இப்போது எழுப்பவேண்டுமே..  அம்மாவுக்கு காது கேட்காது.  பெல் அடித்தால் உடனே கேட்குமா?  

மெல்ல கதவை அழுத்தித் திறக்க....

திறந்து கொண்டது.

உள்ளே நல்லவேளை (?) தாள் போடவில்லை.

நான் (மறுபடி) உள்ளே நுழைந்தது கூட தெரியாமல் அம்மா படுத்திருக்க, மெல்ல என் அறைக்குச் சென்று என் குப்பையில் சாவியைத் தேடுகிறேன்.  

காணோம்.

பாஸ் இன்னமும் களைத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.  சத்தமில்லாமல் கொஞ்ச நேரம் தேடினேன்.  பதட்டம் வரத்தொடங்கியது.  அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.

கலைந்து கிடந்த என் குப்பைகளைக் கோழி போல கிளறி கிளறித் தேடினேன்.

ஊ..ஹூம்..  மேலாக வைத்திருக்கும் அந்த என் சாவியைக் காணோம்.  கண்ணிலேயே படவில்லை.  ஏற்கெனவே நேரம் தாண்டிக் கிளம்பியிருந்த என் பதட்டம் அதிகரித்தது.  அலுவலகப் பூட்டை உடைக்கும் காட்சியை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.  யார் யாருக்கோ பதில் சொல்லவேண்டும்.

செய்வதறியாமல் சட்டைப்பைக்குள் கைவிட்....   அட..  சாவி இங்கே எடுத்துக் போட்டிருக்கிறேன்!  அடச்சே...   அங்கேயே சட்டைப்பைக்குள் பார்த்திருக்க மாட்டேனோ...  என்ன ஞாபகமோ..  என்ன விதியோ..!

தலைவிதியை நொந்தபடி மெதுவாக முதலில் மறந்து போயிருந்த குடையையும் எடுத்துக் கொண்டு பழையபடி சத்தமில்லாமல் கதவைச் சாத்திக் கொண்டு சளக் புளக் என்று வந்து காத்திருந்த ஆட்டோ ஏறினேன்.

ஏதோ இரண்டு வியாழன் தேற்ற உதவியது.

=====================================================================================================

சற்றே தாமதமான பிற்சேர்க்கைகள்...  மன்னிக்கவும்!

செய்தித்தாளில் பார்த்த ரசிக்க வைத்த செய்தி ஒன்று!  எதற்கெல்லாம் சட்டம் போடவேண்டியிருக்கிறது!



===================================================================================================

முகநூலில் படித்த சுவாரஸ்ய செய்தி ஒன்று...

வியக்க வைத்த மனிதர்
======================

அடுத்த நாள் காலை கோவில் தரிசனம் செய்ய வேண்டும்.  அதற்காக, பூ வாங்க மாலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் சென்றேன். வழக்கமாக வாங்கும் பூக்கார அம்மா அப்போதுதான் வந்திருந்தார். உதிரிப்பூக்களை தொடுத்து தருவதாக கூறினார். அரை மணி நேரம் ஆகும் என தோன்றியது. அதற்குள்,  ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம் என எண்ணினேன்‌.

அருகில் தபால் நிலையம்.   " நொடிப்பொழுதில் பணம் பரிமாற்றம் இந்தியாவிற்குள் மிகக்குறைந்த சேவை கட்டணத்தில் "   என்று விளம்பரப் பலகை படித்து மகிழ்ந்தேன். பக்கத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோக்காரரின் கைபேசியில் இருந்து Manike Mage Hithe  என்று காலர் டியூன் Yohani குரல் வந்தது வியப்பாக இருந்தது. சிங்களப் பாடல் பல தரப்பினரையும் கவர்ந்து,  இவ்வளவு hit ஆகி விட்டதே என நினைத்தேன்.

பக்கத்திலே,  வழக்கமாக பழைய புத்தகங்கள் விற்பவர் தள்ளுவண்டியில் கடை போட்டிருந்தார்.  என்னை பார்த்ததும் ஒரு சினேகமான புன்னகை. சரி... சிறிது நேரம் புத்தகங்களைப் பார்க்கலாம் என வண்டியை பார்த்தேன் ராஜேஷ்குமார்,  ரமணிச்சந்திரன்,  சிவசங்கரி, அசோகமித்திரன் இவர்களின் புத்தகங்களும், காமிக்ஸ், சமையல், ஆன்மீகம்,  சித்தர்கள் என பல புத்தகங்கள்.

வேறு ஏதாவது பழைய புத்தகங்கள் பைண்ட் செய்தது உள்ளதா என கேட்டேன் அதற்கு அவர் தன்னுடைய சொந்தமான உபயோகத்திற்காக சில புத்தகங்கள் வைத்திருப்பதாக கூறினார். கொஞ்சம் சுவாரசியமாக உணர்ந்தேன். என்ன வகையான புத்தகங்கள் என அறிய ஆவலாக இருந்தேன்.

விக்ரமன்,சாண்டில்யன், பாலகுமாரன்,  கல்கி என ஆரம்பித்தார்.  இந்த புத்தகங்கள் என்னிடமும் உள்ளன என்றேன். கல்கி என்றதும், வழக்கமாக எல்லோரும் கேட்கும் பொன்னியின் செல்வன் படித்து உள்ளீர்களா என்றார்.

சிரித்துக்கொண்டே ஆம் என்றேன்.  நூலின்  ஆரம்பித்திலும்,  முடிவிலும், ஒரு ஒற்றுமை உள்ளதே,  அது என்ன தெரியுமா என்று கேட்டார்.  சிரித்துக்கொண்டே வீரநாராயண ஏரி என்றேன்‌.   அந்த ஊர்தான் என் சொந்த ஊர் என்றார்.  ஓ... காட்டுமன்னார்கோவிலாஎன்றேன்.  

இப்போது அடுத்த கேள்வி;  நந்திபுரத்து நாயகி, வந்தியதேவன் வாள் புத்தகங்களை படித்து உள்ளீர்களா என்றார். நந்திபுரத்து நாயகி , பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சி.  விக்ரமன் அவர்கள் எழுதியது என்றார். ( மறுநாளே அமேசானில் வாங்கிவிட்டேன்.)

இப்போது அவர் வைத்திருந்த ஒரு நோட்டுப் புத்தகம் என்னை கவர்ந்தது.  ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.  ஆர்வமிகுதியால், அதைப் பார்த்தேன். கண்கள் விரிந்தன. வித்தியாசமான எழுத்துக்கள்.  இது.. என தொடங்கினேன்.  நான் பழங்கால எழுத்துக்களை படித்து வருகிறேன்.  தரமணியில் பட்டயப்படிப்பு.  வாரம் இரண்டு நாட்கள் என மேலும் ஆச்சரியப்பட வைத்தார்.

நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது வட்டு எழுத்தா அல்லது பிராமியா எனக் கேட்டதும் அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது உங்களுக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று என்னைக் கேட்டார். புத்தகங்களைப் படித்து ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன் என்றேன்.  இப்போது அவரும் ஆர்வமாக சம்பாஷனையை தொடர்ந்தார். 

பிரம்மன் மூலமாக உதித்ததால் பிராமி என்று இந்து மதத்தினரின் நம்பிக்கை.
அந்த காலகட்டத்தில் இந்து மதத்தை போல,  சமண மதமும் புகழ் பெற்று இருந்தது.  முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவருக்கு இரு மகள்கள். ஒருவர் பெயர் சுந்தரி (சுந்தரி என்றால் மொழி). மற்றொருவர் பிராமி (பிராமி என்றால் எழுத்து என்பது சமணர்களின் நம்பிக்கை என்று படித்துள்ளேன் என்றேன். 

பிறகு அவர்,  பிராமி எழுத்துக்கள் முதலில் தோன்றின.  கி-மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5  நூற்றாண்டு வரை அவை  தமிழகத்திலும், வட இந்தியாவில் வட இந்திய பிராமியும் பழக்கத்தில் இருந்தது.  பின்னர் வட்டெழுத்துக்கள் தோன்றின  11 - 12ஆம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தின. பின்னர் தற்கால தமிழ் எழுத்துக்கள் பயன்பாட்டிற்கு வரத்தொடங்கின என்றார்.

வட இந்தியாவில் பிராகிருத மொழியிலும்,  தமிழில் தமிழி என்றும் அழைக்கப்பட்ட மொழியும் பயன் படுத்தினர் என்றார். ஆம் தமிழில் அப்போது தான் கிரந்த எழுத்துக்களும், மணிப்பிரவாளமும் பயன் படுத்தப்பட்டது அல்லவா என்றேன்.

ஆமாம் என்று கூறிய அவர்; பிராமி எழுத்துக்களை பிற்காலத்தில் ஓலைச்சுவடியில் எழுதும் போது, சிரமம் ஏற்பட்டது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால் அவை ஓலைச்சுவடிகளை கிழித்து விடுவதால், வட்டெழுத்து பயன்பாட்டிற்கு வந்தது என்றார்.

கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், அதுவும் பல்லவர்களின் குடவரை கோவில்களிலும், சோழர் கால கோவில்களிலும்,  நடுகல், மண்பாண்டங்கள், நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடி இவையெல்லாம் நமது தமிழ் மொழியில் காலங்காலமாக இருந்து வந்த எழுத்துக்கள் நமது பெருமையை, பண்பாட்டை, கலாசாரத்தை, எடுத்து கூறுகின்றன அல்லவா என்றேன்.

சிலப்பதிகாரத்தில், சீவக சிந்தாமணியில் இருந்த கண்ணெழுத்து, ஒலி எழுத்து, ஓவிய எழுத்து என பல உள்ளன என்றார்.

எட்டு மாதங்கள் முன்பு தனது ஆசானுக்கு பிராமியில் எழுதிய கடிதத்தையும், அதில் உள்ள தவறுகளை ஆசிரியர் திருத்தி அனுப்பியதையும் காட்டினார். அப்போது தான் எழுத தொடங்கி இருந்ததாக கூறினார்.

முகநூலில் உங்களைப் பற்றி எழுதவா என்ற போது வியந்து மறுத்த அவர், பின்னர் சரி என்றார். புகைப்படம் எடுத்தேன்.

அவர் பெயர் கனகசபை என்றார்.

அப்போது அங்கு வந்த பூக்கார அம்மா, வீட்டிற்கு செல்ல வேண்டும், நேரம் ஆகி விட்டது என்று கூறி பூச்சரங்களை தந்தார்.  இருவரிடமும் விடை பெற்றேன்..

சங்கர்
சென்னை

===============================================================================================

ஜனவரி மாதம் வந்தால் பேஸ்புக் இதைத் தவறாது ஞாபகப்படுத்தும்....  ஆமாங்க ஆறு வருஷம்(வயசு) ஆச்சு!




கீழ்க்கண்ட இந்தச் செய்தி உண்மையா என்று துரை செல்வராஜூ ஸாரும் தேவகோட்டையாரும்தான் சொல்லவேண்டும்!



பேஸ்புக்கில் ரசித்த கவிதை..   அமைதிச்சாரல் என்று அறியப்படும் திருமதி சாந்தி மாரியப்பனின் கவிதை...


207 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
    அனைவரும் தொற்று இல்லாமல் வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். மூன்றாம் அலை தொடங்கி இருக்கிறது. விறுவிறு என செம்பரம்பாக்கம் தண்ணீர் லெவல் போல ஏறுகிறது எண்ணிக்கை!

      நீக்கு
  2. காலை வணக்கம் எல்லோருக்கும்..

    வெளியில் நிறுத்தப்படுவேன். சரி, சரி.. இந்த சப்ஜெக்ட் வேண்டாம்.. அது பெரிய கதை. அப்புறம் உணர்ச்சிவசப்பட்டு வேறு சில உண்மைகளையும் சொல்லி விடுவேன்!//

    ஹாஹாஹா....ஹைஃபைவ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தால் அது வேறெங்கொ எல்லாம் சுற்றி வருகிறது. எதில் தொடங்கினோம், எதற்குத் தொண்டங்கினோம் என்பது மரந்து, 'என்ன சொல்ல வந்தேன்?' என்று கேட்கும் நிலை வரும்! //

    அதே அதே...ஸ்ரீராம். பாருங்க அதான் நாம பதிவை எழுதிட்டு எழுத்துப் பிழை கூடச் செக் செய்ய மறந்துவிடுவோம்!!!!

    பதிவு எழுதிட்டு சிலது மறந்துவிடுவேன். என் கூட எழுதற ஒரு வாத்தியார் இருக்காரு பாருங்க....யம்மாடி! கண்ணுல விளக்கெண்ணை விட்டுக் கொண்டு...முக்கியமானது அனைத்தும் நல்ல நினைவு.....தாங்காது எனக்கு. அதுவும் அவர் எழுதி அனுப்புற பதிவை டைப் செஞ்சு அனுப்பி....நான் சில சமயம் மறந்து....ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீராம். பாருங்க அதான் நாம பதிவை எழுதிட்டு எழுத்துப் பிழை கூடச் செக் செய்ய மறந்துவிடுவோம்!!!!//

      ok, ok... ர வை ற வாக்கி விட்டேன்.  ண் எடுத்து விட்டேன்!!!!

      நீக்கு
  4. வீட்டில் சில பொருள்களை எங்கோ ஓரிடத்தில் அஜாக்கிரதையாக இருப்பதைப் (பல நாள்) பார்த்ததும் ஒருநாள் அதை எடுத்து 'ஜாக்கிரதையாக' , 'அடையாளமாக' ஒரு இடத்தில் வைப்பேன். அவ்வளவுதான். அதை மறுபடி தேடும்போது கிடைக்காது. அந்நேரத்தில், அது அஜாக்கிரதையாக இருந்த இடம் நினைவில் நன்றாக இருக்கும். அதற்குப் பிறகு அதை எடுத்து வைத்தது கூட மறந்து போயிருக்கும். அப்புறம் அல்லவா எங்கே வைத்தோம் என்று தேட? //

    ஸ்ரீராம்....கட்சி தொடங்கிடுவோம்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தலைவரா, பொருளாளரா?

      நீக்கு
    2. ஆ ஆ ஸ்ரீராம் ரெண்டுமே வேண்டாம்....ஆனால் கண்டிப்பாகப் பொருளாளர் வேண்டாம்...மறதிக்கு ஒத்துவராத பதவி!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. நாம் சங்கம் ஆரம்பிப்பதையே அல்லது ஆரம்பித்ததையே மறந்து விடுவோம்!

      நீக்கு
    4. ஹாஹாஅஹா ஸ்ரீராம் ஆமாம்ல!!!

      கீதா

      நீக்கு
    5. //கண்டிப்பாகப் பொருளாளர் வேண்டாம்.// - அதை நாங்க சொல்லணும். வந்த காசையெல்லாம் சைடுல ஒதுக்கிட்டு, வந்ததே மறந்துவிட்டதுன்னு சொன்னாலும் சொல்லிடுவீங்க.

      நீக்கு
    6. //கண்டிப்பாகப் பொருளாளர் வேண்டாம்.// - அதை நாங்க சொல்லணும். வந்த காசையெல்லாம் சைடுல ஒதுக்கிட்டு, வந்ததே மறந்துவிட்டதுன்னு சொன்னாலும் சொல்லிடுவீங்க.//

      ஹையோ நெல்லை சிரிச்சு சிரிச்சு முடிலைப்பா.....யு மேட் மை குட் நைட்!!!! துளசியின் கருத்தை போட வந்துட்டு.....போடாம இதைப் பார்த்ததும் ..சிரித்துக் கொண்டிருக்கிறேன்...ஞாபகமா போட்டுவிட்டுப் போகணும்!!!

      ஸ்ரீராம்...ஹாஹாஹா

      ஆனால் நெல்லை நாங்க கணக்கு தப்பா போட்டாக் கூட கரெக்ட்டா அமௌன்ட் எல்லாம் சொல்லிடுவோமாக்கும்!!!! ஹாஹாஹா குழப்பிட்டேனா!!!

      கீதா

      நீக்கு
  5. மறதி வியாழனா:(
    அடப் பாவமே. ஏற்கனவே மழையின் அவஸ்தை. அந்தத் தண்ணீரில்
    நடந்து போக வேண்டிய கட்டாயம்.

    பாஸுக்கு உடம்பு சரியில்லாத சங்கடம்.
    என்னப்பா இது விடாது கறுப்பா இருக்கே.
    இப்போது பாஸுக்குத் தேவலியா.
    ஊர் சென்று வந்தது ஒத்துக் கொள்ளவில்லையோ !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போது பாஸுக்குத் தேவலியா.
      ஊர் சென்று வந்தது ஒத்துக் கொள்ளவில்லையோ !!!//

      அம்மா..  அது அப்போ...   இப்போ ரொம்பவே தேவலாம்..   இப்போ பசங்களுக்குதான்...!  ஹிஹிஹி..

      நீக்கு
  6. செய்வதறியாமல் சட்டைப்பைக்குள் கைவிட்.... அட.. சாவி இங்கே எடுத்துக் போட்டிருக்கிறேன்! அடச்சே... அங்கேயே சட்டைப்பைக்குள் பார்த்திருக்க மாட்டேனோ... என்ன ஞாபகமோ.. என்ன விதியோ..!"

    ரியல்லி!! சரியாகத் தூங்காவிட்டாலும் இந்த மறதி வரும்.
    அதுசரி உள்ளே வந்தது தெரியாவிட்டால் ஆபத்தாச்சே.!!!
    யார் வேண்டுமானாலும் வந்துவிட மாட்டார்களா.

    பசங்களும் தூங்கி விட்டார்களா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பசங்க எழ நேரமாகும்.  இதுமாதிரி எப்பவும் நேராது.  அன்றைய நிலைமை அப்படி.  அவ்வளவுதான்.

      நீக்கு
  7. ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தால் அது வேறெங்கொ எல்லாம் சுற்றி வருகிறது. எதில் தொடங்கினோம், எதற்குத் தொடங்கினோம் என்பது மறந்து, 'என்ன சொல்ல வந்தேன்?' என்று கேட்கும் நிலை வரும்! எனவே விஷயத்துக்கு""

    அனேகமாக எல்லோருக்கும் வரும் வேதனை தான்.
    எனக்கு முக்கியமாக உண்டு.
    அதுவும்பசங்களுக்கு திருப்பாவை விளக்கம் சொல்லும்போது
    வேறெந்தப் பாசுரத்துக்கோ போய்த் திரும்பி வர நேரிடும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   உங்களுக்கு பரவாயில்லம்மா..  நான் சின்னப் பையன் ஆச்சே..   எனக்கு அப்படி இப்பவே வரலாமா?!

      நீக்கு
    2. மறதி பற்றிச் சொல்லறீங்க. எனக்கு கவனமின்மை அதிகம். அதனாலத்தான் பதிவை ஒழுங்காகப் படிக்கலைனு சில சமயம் சிலபேர் சொல்லிடறாங்க.

      நேற்றுகூட பத்து மணி வாக்கில் மனைவி என்னவோ சொன்னா. கவனமில்லை. 1 1/2 மணிக்கு சுதர்சன் க்ரியா பண்ணும்போது, அவளிடம் தேங்காய் துவையல் பண்ணு, மோர்சாதம் சாப்பிடுகிறேன் என்றதற்கு, இரண்டுமுறை சொன்னேனே.. கவனிக்கலையா... போய் கரண்டி பிடிங்க என்று சொல்லிட்டாள்.

      மறதியைவிட கவனமின்மை இன்னும் மோசமானதுன்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. அதனாலத்தான் பதிவை ஒழுங்காகப் படிக்கலைனு சில சமயம் சிலபேர் சொல்லிடறாங்க.//

      ஹாஹாஹா நெல்லை, கீதாரங்கன்(கா) ன்னு சொல்ல வேண்டியதுதானே!!! நான் என்ன உங்களைக் கோபித்துக் கொள்ளப் போகிறேனா என்ன!!!!!!!!

      மோர்சாதம் சாப்பிடுகிறேன் என்றதற்கு, இரண்டுமுறை சொன்னேனே.. கவனிக்கலையா... போய் கரண்டி பிடிங்க என்று சொல்லிட்டாள்.//

      ஹாஹாஹாஹாஹாஹஹஹ சிரித்து முடியலை நெல்லை!!!!!

      அது வேற ஒண்ணும் இல்லை நெல்லை நம் மனது எதையோ தீவிரமாகச் சிந்த்தித்துக் கொண்டிருந்திருக்கும் அப்போது யார் எதைச் சொன்னாலும் நாம் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் கூட மனதில் பதியாது...பேசும் போது கூட இது நடப்பதுண்டு. திருப்பிச் சொல்லு என்று கேட்பதுண்டே!!

      சுதர்சன கிரியா பண்ணும் போது இடைல என்ன சாப்பாடு நினைவு!!!!!!!!!! ஹாஹாஹாஹா...

      கீதா

      நீக்கு
    4. கவனமின்மையும் மறதியும் ஒன்றுதான்!  கவனமாக இருக்கிறேன்...  ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறேன்.  ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருப்பப்பதால் கவனமாக இருக்கிறேன்.   ஞாபகத்தில் இல்லாவிட்டால், அல்லது கவனம் இல்லாவிட்டால் மறந்து விடுகிறேன் என்று சொல்லலாம்.  மறந்துபோய் கவனமில்லாமல் இரண்டும் வெவ்வேறு என்று சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    5. // சுதர்சன கிரியா பண்ணும் போது //

      அது ஏதோ கறி என்று நினைத்து விட்டேன்!

      நீக்கு
    6. சுதர்சன க்ரியா (குறுகியது 42 நிமிடங்கள், நெடியது 73 நிமிடங்கள்) பண்ணுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னால்தான் சாப்பிட்டிருக்கணும். அதாவது வெறும் வயிறோடு இருக்கணும். அதனால நான் சுதர்சன் க்ரியா பண்ணின உடனே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சில சமயம் உணவு ரெடியாக நேரமாகும்னா நெடிய க்ரியா செய்வேன். ஒருவேளை என்ன சாப்பிடுவேன் என்று சொல்லலைனா, இடைல, actual க்ரியா ஆரம்பிப்பதற்கு முன்னால் சொல்வேன்.

      நீக்கு
    7. பரவாயில்லை. இதெல்லாம் சரியாக பொறுப்புடன் செய்கிறீர்கள். பாராட்டுகள் நெல்லை.

      நீக்கு
    8. ஸ்ரீராம் ஹாஹாஹாஹ் நெல்லைக்கு அப்போவே சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று.

      இப்ப நீங்க் மறைந்த நடிகர் விசுவை விட சூப்பரா சொல்லிட்டீங்க!!! ஹாஹாஹா சும்மா ஜாலிக்கு...நீங்க சரியாதான் சொல்லியிருக்கீங்க...விளக்கமா...

      கீதா

      நீக்கு
    9. நெல்லை உங்களை சும்மா ஒரு கால் புல்லிங்க்!! நீங்க ரொம்ப கரெக்ட்டா ரெகுலரா பண்ணூவீங்கன்னு தெரியும்!!! அது நிஜமாகவே எல்லாராலும் முடியாத விஷயம்...அதுக்கு உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்!!

      கீதா

      நீக்கு
  8. //அம்மா கற்றுக்கொடுத்த அந்தப் பாடத்தைப் பின்பற்றுகிறேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் என் பொருட்களை வைத்து, எடுத்து வ...... ந்தாலும்... அப்பப்போ வம்பில், தொல்லையில் மாட்டிக்கொண்டு சிலவற்றைத் தே...டுவதுண்டு!

    இப்போதும் என் பொருட்களுக்கு 'பெட்'டுக்கு அருகிலேயே தனி இடம் வைத்து அங்கேதான் கும்பலாக போட்டு வைத்திருப்பேன்!//

    ஸ்ரீராம் ...டிட்டோ எனக்கும். பக்கம் பக்கமா சொல்லலாம் ஸ்ரீராம்!!! ஹாஹாஹா..எனக்கு அர்ச்சனைகளும் சேர்ந்துகொள்ளும்.

    எனக்கு அப்பாவிடமிருந்து இந்த நல்ல பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்தது. பின்னர் வாழ்க்கை திசை திரும்பிய போதும் கூட இருந்துவந்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அப்பழக்கம் தொலைந்து போனது!! அத்தனைக்கு வெளியில் தெரியாத, சொல்ல முடியாத ஸ்ட்ரெஸ். நீங்க பெட் பக்கத்தில்...நான் கணினி பக்கதில் சிலதும், என் உடைகள் வைக்கும் பகுதியில் சிலதும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடைய நல்ல வழக்கங்களை சொல்ல மாட்டார்கள். அதிலேயே அல்லது வேறு ஏதோ ஒரு தவறு நடந்து விட்டால் வீட்டில் உள்ளவர்களே கிண்டல் செய்வார்கள் பாருங்கள்...

      நீக்கு
    2. ஸ்ரீராம் கன்னாபின்னாவென்று உங்களை இதற்கு ஆதரிக்கிறேன்!!! அதே அதே.....

      கீதா

      நீக்கு
    3. எனக்கு, இருட்டில் சென்றாலும் இது இது இங்க இருக்கும் என்பதுபோல வைத்துக்கொள்வேன்.

      அதிகாலையில் லைட் போடாமலேயே அங்குமிங்கும் செல்வேன். அதனால் எதையாவது எங்கயாவது மாற்றிவைத்தால் (ஹாலில் ஏதேனும் மாற்றப்பட்டிருந்தால்) டென்ஷனாயிடுவேன்.

      நீக்கு
    4. உங்களுக்கு மேஜர் நெல்லைகாந்த் என்று பெயர் சூட்டி விடலாம் போல...

      நீக்கு
  9. தண்ணீர் தேக்கம், பாஸ் உடம்பு சரியில்லாமை எல்லாம் நீங்கள் எழுதியது நினைவில் இருக்கு!!!!

    பாருங்க இதெல்லாம் நினைவு இருக்கும்...ஆனால் அடுத்தடுத்த பாராக்களில் சொல்லியிருக்கீங்க பாருங்க அது ஹையோ என்ன சொல்லுவேன்...இப்படி எனக்குச் சம்பவிப்பதும் படம் பிடிச்சாப்ல சொல்றீங்களே. நானும் இப்படிச் சரியாக எடுத்து வைத்துக் கொண்டதை கொஞ்ச தூரம் நடந்து சென்று விட்டு....ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டோமா என்று நினைவுபடுத்திக் கொண்டு...ஏதேனும் ஒன்று குறைவது போலத் தோன்றும்...உடனே வீட்டுக்குச் சென்று தேடினால் கிடைக்காது...ஆனால் என் பையில் இருக்கும்!!!!!!

    'இதுக்குத்தான் வீட்டிலருந்து கிளம்பும் போதே செக் செய்யணும். பைல வைச்சுருக்கோம்ன்றது கூட மறக்கற............' (புள்ளிகளை வார்த்தைகளால் எழுத முடியாது!!!!!!!) என்ற கமென்ட் வரும்.

    ஆனால் நீங்கள் எழுதியது நினைவு இருக்கும்!!!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிலிருந்து கிளம்பும்போது பதட்டத்தில் ஒன்றும் தோன்றாது..  பதட்டத்தில் அல்லது பரபரப்பில்...

      நீக்கு
  10. இன்று என்ன மற்ற பகுதிகள் மிஸ்ஸிங்க்!! மறந்துவிட்டீங்களா!!! ஹாஹாஹஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... இப்போது சேர்த்திருக்கிறேன்.. பாருங்கள்..

      நீக்கு
    2. ஆஹா! இதிலும் நான் டிட்டோ...பதிவு போட்டப்புறம் இப்படிச் சேர்ப்பது எடுப்பது உண்டே!!

      ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. இன்னும் ஒன்றிரண்டு சேர்ப்பதற்கும் நேரமாகி விட்டது. ஓடிவிட்டேன்!

      நீக்கு
  11. அட மாமனார் மாமியார் பாதுகாக்க ஒரு சட்டமா. நிஜமாகவே

    அதிசயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், செய்தியாகப் பார்த்ததும் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது!

      நீக்கு
    2. காலையில் இந்த செய்தியைத் தேடிப் பார்த்துக் கண்ணில் சிக்காமல் எப்படிப் போச்சு. இப்ப க்ளியரா தெரியுது!!!!

      ஸ்ரீராம் இந்த செய்தி வந்து கொஞ்ச மாசங்கள் ஆச்சே. எனக்குத் தெரிந்து ஒரு வருடம் முன் வாசித்த நினைவு. நல்ல விஷயம்!!!

      ஆனால் அதில் மாமனார் மாமியார் கொடுமைகள் என்று ஏதேனும் இருந்தால் கேஸ் புட்டுக்கும்னும் சொல்லிருந்த நினைவு

      கீதா

      நீக்கு
  12. ஷாந்தி மாரியப்பனின் எழுத்தில் கவிதை
    அற்புதம்.
    சாது மிரண்டால் கதைதான். எப்போதுமே யானைகளிடம்
    ஒரு பரிதாபம் .ஏற்படும்.
    இதுக்குக் கோபமே வராதோ என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், படித்த உடன் எனக்கும் பிடித்துப் போனது.

      நீக்கு
  13. பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  இந்திரா சௌந்தர்ராஜன் சீரியல் போல!

      நீக்கு
  14. திரு.கனகசபை தனி ஒரு சரித்திரம். இப்படிப்
    பட்டவர்களை அறிவதே அதிசயம். நல்ல தொரு இணைப்பு.
    மிக மிக நன்றி ஸ்ரீராம் மீண்டும் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  16. இன்றைய கதம்பம் அருமை..
    பழைய புத்தகங்கள் விற்பவரின் ஆர்வம் பாராட்டத்தக்கது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  இப்படி ஆர்வம் இருப்பவரால்தான் பழைய புத்தகங்கள் விற்க முடியும்!

      நீக்கு
  17. மறந்து விடாமல் மன்றம் ஆரம்பிக்கும் போது நானும் சேர்ந்து கொள்கிறேன்...

    வாழ்க ம.ம.ம.ம!. (மறதி மன்னர்கள் மகிழ்வுறு மன்றம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞாபகமிருந்தால் ஆரம்பிக்கும்போது சேர்த்துக் கொண்டு விடலாம்!!!

      நீக்கு
  18. முதலாம் தீர்த்தங்கள் - தவறு. தீர்த்தங்கரர் என்று இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. திருத்திவிட்டேன்.

      நீக்கு
    2. ஓ..  நான் பகிர்ந்த செய்தியிலா?  அது அங்கேயே அப்படிதான் இருந்திருக்கவேண்டும்.

      நீக்கு
  19. ஓமன் நாட்டு விவகாரம் அது.. நமக்குத் தெரியாது.. ஆனாலும் அப்படியான பேரீச்சை வகைகள் இருக்கின்றன.. முதல் தரமான விருந்துகளில் அந்த வகை கேட்கப் படுவதன் பேரில் வழங்கப்படுவதுண்டு..

    பொதுவாக நான் பேரீச்சம் பழத்தை விரும்பித் தின்றதில்லை.. அது தவ முறையான வாழ்க்கைக்கு இடையூறானது.. உடற்சூடு அதிகரிப்பதற்கு அது ஒரு காரணி.. மேலும் ரத்தத்தில் சர்க்கரையை உயர்த்தி விடும்..

    மேலும் விஷயங்கள் உள்ளன.. அவை பொது வெளியில் சொல்வதற்கு ஆகாதவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ நானும் பேரீச்சம்பழம் விரும்பிச் சாப்பிடுவதில்லை!

      //அது தவ முறையான வாழ்க்கைக்கு இடையூறானது../

      ஓ..  அப்படியா??

      நீக்கு
  20. என்னத்த கவிதையோ.. என்னத்த ரசிச்சீங்களோ

    ஒண்ணுமே புரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாய் இருந்தது நெல்லை.  பல்வேறு வகை எழுத்துகளிலும் திறமையானவர் சாந்தி மாரியப்பன்.  இங்கே நம் கே வா போ விலும் திங்கக்கிழமையிலும் எழுதி இருக்கிறார்!

      நீக்கு
    2. சாந்தி மாரியப்பனை இணைய்வழி தெரியும்...எங்கள் ஊர்க்காரர். இங்கு எபியிலும் எழுதியது நினைவு இருக்கு. இங்கு இளநீர் பாயாசம் எழுதியிருந்த நினைவு. நல்ல எழுத்துக்குச் சொந்தக்காரர்

      ஆனால் இந்தக் கவிதை எனக்கு டக்கென்று புரியும் அளவு புரிதல் சக்தி இல்லை என்று தோன்றுகிறது ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  21. மறதி- எனக்குப் பிடிக்காத ஒன்று. என் பொருட்களெல்லாம் எங்க இருக்கும்னு சரியா தெரிஞ்சு வச்சிருப்பேன்.

    பெண், வண்டிச் சாவி எங்க வச்சேன் என்றெல்லாம் தேடும்போது கடுப்பாயிருக்கும்.

    இப்போதெல்லாம் சப்ஜெக்ட் மறதி வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என் பொருளை மட்டும்தான் தேடுவேன்.  மற்றவர்கள் பொருட்களை அவரவர்கள் தேடிக்கொள்வார்கள்!

      நீக்கு
  22. அரேபிய பாரசீக எகிப்திய மந்திர வாதங்கள் பிரசித்தியானவை.. இவற்றைப் பற்றியும் தனியாகப் பேசலாம்..

    இந்த மந்திர வாதங்களில் எள் அளவு எடுத்துக் கொண்டு இந்தியா, பங்களாதேஷ் இங்கெல்லாம் ஒரு சிலர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்..

    அப்படியான மந்திர வாதம் இரண்டு முறை என்மீது ஏவப்பட்டது.. இறைவனின் அருளால் தப்பித்து வந்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  ஆச்சர்யம்.  பகிரலாம் என்றால் ஒன்றிரண்டை இங்கே பகிருங்களேன்.  எனக்கு இவையெல்லாம் அனுபவம் இல்லாததால் ஆச்சர்யம்.

      நீக்கு
  23. 94ல் ஃபுஜைரா finance minister உடனான மீட்டிங்கில் பேரீட்சை கொடுத்தார்கள். நல்ல ருசியாக இருந்தது.

    இருந்தாலும் மரத்தில் பழுத்து உடனே சாப்பிடும் பேரீச்சை நல்ல சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ..   நாங்களெல்லாம் கடையில் விற்கும் பேரீச்சம்பழம்தான் வாங்கி இருக்கிறோம்.

      நீக்கு
    2. //மரத்தில் பழுத்து உடனே சாப்பிடும் பேரீச்சை நல்ல சுவை// ஆமாம். அப்படி பழுத்து குலுங்கும் பேரீச்சை மரத்தின் முன் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொண்டேன். எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டும்.

      நீக்கு
  24. கனகசபை நிஜமாகவே வியக்க வியக்கிறார்!!! வெத்துவேட்டுகள் பலரின் மத்தியில் இப்படிப்பட்ட எளிய அறிவாளிகள் ஆர்வலர்கள் தன்னடக்கம் மிக்கவர்கள் இருப்பது ஆச்சரியம். வியந்து நோ. கூடவே தன்னைப் பற்றி வெளியில் தெரிவதற்கும் தயக்கம் பாருங்க. மிக்க நன்றி ஸ்ரீராம். முகநூலில் இப்படி நிறைய கிடைக்கிறது இல்லையா!

    நல்ல தகவல். நன்றி ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். திறமைசாலிகள் எங்கும் இருக்கிறார்கள்.

      நீக்கு
  25. இப்படியான மந்திர வாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞனை இறைப்வன் அருள் துணையுடன் மீட்டு எடுத்திருக்கின்றேன்..

    இதெல்லாம் தாங்கள் இணைத்துள்ள அரேபிய மர்மங்கள் என்ற குறிப்புக்காகவே..வேறெதற்கும் அல்ல..

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரேபிய மர்மங்கள் என்று ஒரு தொடர் எழுதினால் ஞாயிரிலோ, சனியிலோ சேர்த்து விடலாமே..

      நீக்கு
  26. வியாழனில் விஷயம் இருக்கிறது! கருத்துப்போட நேரமில்லை!
    நேற்றைய கேள்விகளுக்கே இன்றுதான் போட்டுவிட்டு வந்தேன். நேரமாயிடுச்சு... 1 1/2 மணிக்கு கிரிக்கெட்டும் வந்துடும். ஷர்துல் டாக்குர் போல ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலொழிய, அநேகமாக இந்தியா தோற்றுவிடும் வாய்ப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியா தோற்பதற்காகவே கோஹ்லி, புஜாரா, ரஹானே போன்றோர்களையும் தேவையில்லாதபோது அஸ்வினையும் எடுக்கிறார்கள். இதுல கிரிக்கெட் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன. புஜாரா தொடர்ந்து 8 பூஜ்ஜியம் வாங்கி ரெக்கார்ட் கிரியேட் பண்ணச்சொல்லி அவருக்கு உத்தரவா?

      நீக்கு
    2. வாங்க ஏகாந்தன் ஸார்..   இன்று இந்தியா ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.  ரிஷப பந்த்தின் பொறுப்பில்லாத ஆட்டம், புஜாரா ரஹானே ஆகியோரின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம்..  இங்கு இந்தியா அதிகமுறை ஜெயித்திருக்கிறது என்று கணக்கு சொல்கிறார்கள்.  இந்தமுறை சந்தேகமாகத்தான் இருக்கிறது.  அற்புதம் நடக்கவேண்டும்! இந்த மேட்ச் ஜெயித்தால் சரித்திரம்!

      நீக்கு
  27. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  28. உங்களின் 'சாவி மறதி' என்றவுடன் எப்போதும் ஞாபகம் வருவது :-

    1988 - Madras - B & C Mills - Testing Department (Textiles) - முதல் குரு - திருமிகு ஜம்புலிங்கம் ஐயா - அந்த துறைக்கு என்னை தேர்வு செய்தவர் - மிதிவண்டி / இரு சக்கர வாகனம் என வேலைக்கு வருபவர்...

    அன்று ஒரு நாள் வந்தது மிதிவண்டியில் - மாலை பேண்ட் பாக்கெட்டில் சாவி எடுத்தால் - இரு சக்கர வண்டியின் சாவி - ஐயோ வண்டியை காணவில்லை என்று ஒரே களேபரம் - அனைவரும் தேடல் - எல்லோரும் கிளம்பியவுடன் ஒரு மிதிவண்டு தனியாக - மீண்டும் Department-யை திறந்து அவரின் Table-ல் சாவி கிடைத்து...

    கவனிக்க : வெளியில் அத்தனை நேரமும் தேடியது + தேட வைத்தது எல்லாம் அவரின் மிதிவண்டி அருகே நின்று கொண்டு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த வாழ்த்துகள். அவருக்கு எல்லா வளங்களும் குறையின்றி கிடைத்திட இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திரு தனபாலன் அவர்களே!

      நீக்கு
    3. நன்றி கமலா அம்மா...
      நன்றி கீதா அம்மா...

      நீக்கு
    4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் DD. வாழ்க வளமுடனும் நலமுடனும்.

      நீங்களும் சாவி தேடி இருக்கிறீர்கள்!

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. உங்கள் மறதி பற்றி விரிவாக சொல்லியுள்ளீர்கள். உண்மைதான்.. வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பும் நபருக்கு அதை எடுத்துக் கொண்டீர்களா? இதை எடுத்துக் கொண்டீர்களா? என கவனமுடன் நினைவூட்டி கேட்பதற்கு ஒரு ஆள் கண்டிப்பாக வேண்டும். ஏனெனில் கிளம்பும் நபர் அந்த இடத்திற்கு போய் சேரும் வரை ஆயிரம் டென்ஷனில் இருப்பார் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.அன்றைய தினத்தில் உங்கள் பாஸின் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், கவனமுடன் எல்லாவற்றையும் இருக்கிறதா எனக் கேட்டு வழியனுப்பியிருப்பார்.

    /ஒருநாள் அதை எடுத்து 'ஜாக்கிரதையாக' , 'அடையாளமாக' ஒரு இடத்தில் வைப்பேன். அவ்வளவுதான். அதை மறுபடி தேடும்போது கிடைக்காது. அந்நேரத்தில், அது அஜாக்கிரதையாக இருந்த இடம் நினைவில் நன்றாக இருக்கும். அதற்குப் பிறகு அதை எடுத்து வைத்தது கூட மறந்து போயிருக்கும். அப்புறம் அல்லவா எங்கே வைத்தோம் என்று தேட? /

    இதைப் போன்று எனக்கும் சிலது சில நேரங்களில் நடந்துள்ளது. முக்கால்வாசி ஒரு பொருளை அதற்குரிய இடத்தில் எந்த அவசரங்கள் என்னை அலைகழித்தாலும், பத்திரமாக வைத்து விடுவேன். சில நேரங்களில், சில மனிதர்களின் அவசர நடவடிக்கைகளினால் இடம் மாற்றி வைத்து விட்டு இப்படியொரு மறதியை சந்திக்க நேரும். அது முக்கியமான விலையுயர்ந்த பொருளாக இருந்தால் அப்புறம் அதை வேறு இடத்தில் பார்த்தால்தான் நிம்மதி வரும். அதற்குள் எல்லா இறைவனிடமும் ஆயிரம் பிரார்த்தனைகள்.ஆனால்,அது கண்டிப்பாக நினைவுக்குள் இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிளம்பும்போது அபப்டி கேள்விமேல் கேள்வி கேட்பவர்கள் மேல் கோபம் வரும்!  மறந்துபோய் திரும்பி வந்தாலும் அவர்கள்மேல் கோபம் வரும்!!  உன்னால்தான் மறந்தேன் என்போம்!  இதெல்லாம் நடக்கவே வேண்டும் என்று இருப்பது.  விதிக்கா!

      நீங்கள் சொல்வதுபோல தொலைந்த பொருள் விலை உயர்ந்ததாய் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் பதட்டத்துக்கு!

      நீக்கு
  30. என்னது மாமனார் மாமியார் இவர்களை கவனிக்க வேண்டுமா...?

    ஆமாம் ஒரே ஒரு பேச்சு பேசி விட முடியுமா என்ன...? வியாழன் கேள்வி அல்ல - என்றும்...(!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. DD - இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள், வளமுடனும், நலமுடனும்.

      நீக்கு
    2. டிடி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

      கீதா

      நீக்கு
    3. //கவனிக்க வேண்டுமா...?//

      க்ரூப்பில் இந்தச் செய்தியைப் பகிர்ந்திருந்தபோது என் சித்தி கூட இபப்டிதான் பதில் அளித்திருந்தார்.  

      நல்லா "கவனிச்சு"டலாம்!

      நீக்கு
  31. //ஏதோ இரண்டு வியாழன் தேற்ற உதவியது.// 
    இதைத்தான் மறக்கமுடியாத மறதி என்று சொல்வதோ. மறதியை மறக்காமல் எழுதி விட்டீர்கள். 

    சும்மாதான் கேட்கிறேன். உங்கள் மாமனார் மாமியார் யார் தயவில் இருக்கின்றனர். 

    பழைய புத்தகங்கள் விற்பவர்கள்  (பாதிப்பேர் படிக்காதவர்கள்) நம்முடைய நவீன Librarian களைக்  காட்டிலும் புத்தகங்களை பற்றிய அறிவு அதிகம் உடையவர்கள். எந்தப் புத்தகம் கேட்டாலும் இருந்தால் உடனே எடுத்து கொடுப்பார்கள். அந்த வகையில் கனகசபை மேலும் சிறப்பாக பழைய தமிழி, பிராமி போன்ற எழுத்துருவங்களையும் படிக்கக் கற்றுக் கொள்வது சிறப்பு. 


    /கீழ்க்கண்ட இந்தச் செய்தி உண்மையா என்று துரை செல்வராஜூ ஸாரும் தேவகோட்டையாரும்தான் சொல்லவேண்டும்!/


    ஏன் நெல்லையை விட்ட விட்டீர்கள்? 

    வாக்கியத்தின் வார்த்தைகளை  மடக்கிப்போட்ட  யானை கவிதை ஒன்றும் கவிதை அல்ல, நியூரான் முடிச்சு என்ற புது சொல்லைத்தவிர. உண்மையில் மதம் பிடிப்பது ஹார்மோன்களின் தூண்டுதலால் தான். ஆகவே இக்கவிதையை கவிதை அல்ல என்று விலக்குகிறேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இக்கவிதையை கவிதை அல்ல என்று விலக்குகிறேன். //

      கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று கிடைத்த புத்தகத்திலிருந்து நாலைந்து வரியை உருவிப்போட்டு (இயற்பியல் புத்தகம், வரலாறு, பாட்டனி என்று) அதையும் கவிதை என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட்டம் ரொம்பவே அதிகமாகிவிட்டது. இவர்களை மரபுக் கவிதை எழுது என்றால் அவர்கள் நிலை பல்லிளித்துவிடும். (எனக்கு மரபுக் கவிதை, அர்த்தமுள்ள புதுக்கவிதை தவிர எதையுமே கவிதை என்ற பெயரில் எழுதுபவர்களையும் சேர்த்துப் பிடிக்காது)

      நீக்கு
    2. //நெல்லையை விட்ட விட்டீர்கள்? //- அவரெங்க இதெல்லாம் ட்ரை பண்ணியிருக்கப்போகிறார் என்ற எண்ணமா? ஹா ஹா.

      நான் ஏகப்பட்ட வெரைட்டிகளைப் பார்த்திருக்கிறேன். சில, மிக மிக அதிக விலையில். நான் ஒன்றையும் வாங்கமாட்டேன். பொதுவாகவே மாம்பழம் என்றால் ருசியாக இருக்கணும், பேரீச்சை என்றால் தித்திப்பாக இருக்கணும். அவ்ளோதான். இங்க விளைந்தது, ஆர்கானிக், இந்தப் பகுதி பேரீச்சை என்றெல்லாம் என்னிடம் ஜல்லியடித்து அதிக விலை சொன்னால், நான் அம்பேல்.

      சில பேரீச்சைகளை க்ளூகோஸ் தடவி பள பளன்னு வச்சிருப்பாங்க. அது பக்கமும் நான் மறந்தும் போயிடமாட்டேன்.

      மரத்திலிருந்து பறித்த பேரீச்சை பழம் மார்க்கெட்டில் வாங்குவேன். 2 நாட்களுக்குள் சாப்பிட்டுடணும். ரொம்பவே ருசியாக இருக்கும்.

      நீக்கு
    3. @நெல்லை, குஜராத்தில் பேரிச்சைப் பழங்கள் ஆரஞ்சு வண்ணத்திலும் நல்ல சிவப்பு வண்ணத்திலும் குவியல் குவியலாகக் கிடைக்கும். எல்லோரும் கிலோ கணக்கில் வாங்கி அதை வெயிலில் காய வைத்து வருஷத்துக்குச் சேமித்துக் கொள்வார்கள். அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். புளிச் சட்னி செய்யப் பெரும்பாலும் இந்தப் பேரிச்சையைப் பயன்படுத்துவார்கள்.

      நீக்கு
    4. மாமனார் யார் தயவில் இல்லை ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...   அவர் எனக்கு திருமணமான புதிதிலேயே வைகுந்த பதவி அடைந்துவிட்டார்.  பாஸ் அவர்களுக்கு ஒரே மகள்!

      உண்மையில் நெல்லையையும் சேர்க்கவே வேண்டும் என்று நினைத்துதான் டைப்பத் தொடங்கினேன்.  அதற்குள் மறந்து விட்டது.

      நீக்கு
    5. நான் அதிகம் விரும்பாத பேரீச்சை பற்றி ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின்றன இன்று!

      நீக்கு
  32. இந்தப் பேரீச்சை பழம் பற்றிக் கொஞ்சம் தெரியும். ஏவல் கீவல் எல்லாம் தெரியாது. பழம் பற்றி மட்டும். அதில் ஒரு வகை வயாகரா என்று சொல்லப்படுவதுண்டு. அது உண்மையா என்று தெரியாது. மற்றதெல்லாம் தகவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஒரு வகை வயாகரா என்று சொல்லப்படுவதுண்டு. அது உண்மையா என்று தெரியாது. // இதைச் சொல்லிவிட்டு அடுத்த கருத்து விட்டுப் போனது. ஆனால் பேரீச்சம் பழம் பற்றி மருத்துவக் குணங்கள் பற்றி வாசித்த போது வயாகரா விஷயம் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. பொதுவாக அது நலல்து, ஹீமோக்ளோபின் அதிகரிக்க வல்லது, நல்ல உடற்சக்தி தரும் போன்ற தகவல்கள் தான்.

      கீதா

      நீக்கு
    2. எனக்கு அனிமியா இருந்தப்போப் பேரிச்சைப் பழங்களே அதிகம் எடுத்துக்கச் சொன்னார்கள்.

      நீக்கு
    3. பொதுவாக அனீமியா இருந்தால் பேரீச்சம் பழமும் எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  எனக்குதான் உள்ளேயே இறங்காது!

      நீக்கு
  33. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  34. மிகவும் சுவாரஸ்யமான பதிவு! திரு.கனகசபையின் ஆழ்ந்த அறிவும் தமிழ்ப்புலமையும் வியக்க வைக்கிறது!
    நெல்லைத்தமிழன் சொன்னது போல, மரத்திலிருந்து பறித்த பேரீச்சம்பழங்கள் பாதி கனிந்தும் பாதி காயாகவும் இங்கே கிடைக்கும். அது மிகவும் சுவையானது. 3 பேரீச்சம்பழங்களும் ஒரு கை தேங்காய்த்துண்டுகளும் தினமும் காலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அருமையாக ஏறும். இது அனுபவ உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 3 பேரீச்சம்பழங்களும் ஒரு கை தேங்காய்த்துண்டுகளும் தினமும் காலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அருமையாக ஏறும். இது அனுபவ உண்மை!//

      மனோ அக்கா மிக்க நன்றி. பேரீச்சம் பழம் உதவும் என்று தெரியும் கூடவே தேங்காய்த் துண்டுகளும் என்பது தகவல்!!

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
    2. எனக்கு ஹீமோக்ளோபின் குறைவு (12.. என்று நினைவு). அதனால் ரத்ததானம் செய்யக்கூடாது என்று இரு தடவை, ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு சொல்லிவிட்டனர். நான் நிறைய மாதுளை பேரீச்சை எல்லாம் சாப்பிடுவேன். நீங்கள் சொல்லியபடி செய்துபார்க்கிறேன்

      நீக்கு
    3. எனக்கு ஹீமோகுளோபின் பல வருடங்களாகவே 11, 12 இருந்து வந்தது. என் இயற்கை மருத்துவர் உடல்நலத்துக்காகத்தான் இதை காலை உணவுக்கு பதிலாக சாப்பிடச்சொன்னார். மூன்று மாதங்கள் கழித்து வேறு எதற்காகவோ ரத்தப்பரிசோதனை செய்த போது, என் ஹீமோகுளோபின் 15ஐத்தொட்டிருந்தது. எனக்கு அளவு கடந்த ஆச்சரியமாகி போனது. அதிலிருந்து அவ்வப்போது இப்படி சாப்பிட்டு வருகிறேன்.

      நீக்கு
    4. சுவையான, உபயோகமான மருத்துவக்குறிப்புகள்.  தேங்காயை துருவலாகவோ, துண்டாகவோ சாப்பிட்டால் எனக்கு முதலில் வருவது இருமல்!!!

      நீக்கு
  35. ஸ்ரீராம், எனக்குக் கவிதை புரியவில்லை.

    அவங்க தளத்திலும் வாசித்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்குக் கவிதை புரியவில்லை// - புரியலைனா அது ப்ரோஸ்.

      நீக்கு
    2. ​நான் அவர்கள் தளம் பக்கம் சென்று நீண்ட நாட்களாகிறது.

      நீக்கு
    3. உங்களுக்குப் புரியலைனா அது ப்ரோஸ் என்பது உங்கள் தீர்ப்பாக மட்டுமே இருக்கும் நெல்லை! :)))))

      நீக்கு
  36. சமீபத்தில் கூட ஜீவி அண்ணா ஒரு தொடர் எழுதத் தொடங்கினாரே. அதன் பின் தொடரவில்லை இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  37. ஸ்வாரஸ்யமான அரட்டை. அனைத்து பகுதிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  38. //ஏதோ இரண்டு வியாழன் தேற்ற உதவியது//
    ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி.

    பேரீச்சம்பழத்தை வயாகரா என்று சொல்வது மறுப்பதற்கில்லை.

    அரேபியர்கள் மூன்று மனைவிகளோடு, இருபது குழந்தைகளும் பெற்றெடுத்ததே இதற்கு சான்று.

    அடுத்த உண்மை ஒன்றை சொல்கிறேன் நம்ப மாட்டீர்கள். உலகிலேயே மிகவும் பெரியது மட்டுமல்ல! விலை அதிகமானது மட்டுமல்ல! மிகவும் சுவையான பேரீச்சம்பழம் அமெரிக்காவில் விளைவது மட்டுமே.

    இதனுடைய பெரும்பகுதி இறக்குமதி ஆவது அரபு நாடுகளில் மட்டுமே.

    நானும் சாப்பிட்டு இருக்கிறேன் ஆசைக்காக...

    குவைத் மன்னர் சொன்னதுபோல் தவ வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு தேவையில்லைதான்

    இவ்வுலக வாழ்வை அனுபவிப்பதற்கு மட்டுமே என்று அன்னை ஆதிபராசக்தியால் படைக்கப்பட்டவர்கள் அரேபியர்கள் மட்டுமே...

    மற்றபடி புராணக்(கட்டுக்)கதைகள் எங்கும் நிலவுவதே... நிலவு போல் உலாவிக் கொண்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மிகவும் சுவையான பேரீச்சம்பழம் அமெரிக்காவில் விளைவது மட்டுமே.//

      இப்போதுதான் நினைவுக்கு வந்தது. எங்கள் பாஸ் (கம்பெனி ஓனர், அரேபியர்) கலிஃபோர்னியாவிலிருந்து ரமதான் சமயத்தில் நிறைய இறக்குமதி செய்து, அமைச்சர்கள், அதிகாரிகள், பிறகு முஸ்லீம் department headsக்குக் கொடுப்பார். நான் ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன். ரொம்பவே ருசியாக இருக்கும். (ஆனா அமெரிக்காக்காரன் என்ன என்ன மாற்றங்களைச் செய்து இப்படி விளைவிக்கிறானோ.. அது என்ன என்ன பின்விளைவுகளைத் தருமோ யாருக்குத் தெரியும்?)

      நீக்கு
    2. கில்லர்ஜி கரெக்ட் எனக்குக் காலையில் நினைவுக்கு வரவில்லை. கலிஃபோர்னியா பேரீச்சை.

      ஆமாம் சுவையாக இருக்கும்.

      நெல்லை கலிஃபொர்னியா கொஞ்சம் வறண்ட பிரதேசம் 3 பெரிய பாலைவனங்கள் உண்டு. மற்றபடியும் கூட அங்கு விவசாயம் கொண்டு வர ரொம்ப பாடுபட்டு நல்ல விளைச்சல் பூமியாக்கினாங்க. அது போல தண்ணீருக்கும். அந்த மாநில விவசாயம் வரலாறு பற்றித் தெரிந்துகொண்ட போது அறிந்த விஷயங்கள். கலிஃபோர்னியாவில் ஓட்டுநர் லைசென்ஸ் கிடைப்பதும் கடினம், அதனால் சாலைவிதிகளை ரொம்பவே நன்றாகக் கடைபிடிப்பார்கள்.

      கீதா

      நீக்கு
    3. ஆ..   பேரீச்சம் பழத்திலும் அமெரிக்காவுக்குதான் முதலிடமா?  பெரியண்ணன் பெரிய ஆள்தான் போல!

      நன்றி ஜி.

      நீக்கு
  39. அனைத்தும் படித்தேன் சாந்தி மாரியப்பன் என்னும் அமைதிச் சாரலின் கவிதை உள்பட, திரு கனகசபை குறித்தும் படித்தேன் முகநூலிலேயே! எனக்கு இந்த அறிவு ஜீவிக் கவிதைகள் அவ்வளவாகப் புரியறதில்லை. ஆனாலும் அமைதிச் சாரல் மரபுக்கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவர். சந்தவசந்தம் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு இலந்தை ராமசாமி ஐயாவிடம் மறுபடியும் தமிழ் இலக்கணம் படித்தார்கள் முகநூல் சிநேகிதிகள் பலரும். அதில் அமைதிச் சாரல், கீதா சுதர்சனம், மாலா மாதவன், வித்யா சுப்ரமணியம்,எனப் பலர் உண்டு. அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ரதபந்தமெல்லாம் எழுதுவார்கள். திரு கேஷவின் கிருஷ்ணா ஓவியங்களுக்குத் தினமும் கவிதை எழுதுவோரும் உண்டு. ஆகவே சாந்தி மாரியப்பனின் இந்தக் கவிதை புரியவில்லை நமக்கு என்பதால் அவர் திறமையைக் குறைவாக நினைக்கக் கூடாது. அவர்களைப் பார்த்தாலே நான் வியந்து போவேன். நினைத்த உடனே மரபுக்கவிதை எழுதுவார்கள். அவர்களுக்குள் போட்டியும் நடப்பதுண்டு. இதில் கீதா எம்.சுதர்சனம் அவர்களின் கணவரும் கூடக் கவிதை எழுதுபவர். அவர் எழுதும் கவிதைகள் எல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் ரசிப்பதோடு சரி. சில சமயம் கீதா எம்.சுதர்சனத்தின் கவிதைகளுக்கு மட்டும் பாராட்டுத் தெரிவிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹல்ல்ல்ல்ல்ல்ல்லோ கீசா மேடம்... நான் உங்களுக்கு ஒரு இனிப்பு செய்துகொண்டு வருகிறேன். அது சுத்தமா நல்லால்லை. இனிப்பும் சரியில்லை பதமும் சரியில்லை என்றால், அதைச் சாப்பிட்டுவிட்டு, இந்த இனிப்பு ஒன்றுதான் சரியில்லை, நெல்லைக்கு நிறிஅய இனிப்புகள் சூப்பராச் செய்யத் தெரியும், அவருடைய திறமை எப்படி..அது இது என்று சொல்வீர்களா? ஒரு பானைக்கு ஒரு சோறு பதம். எபி தி.பதிவுல எழுதும்போது வக்கணையா எழுதாறார், ஆனால் ஒரு இனிப்பு செய்துதந்தா அது வாய்ல வைக்க முடியலை என்று சொல்வீர்களா?

      சாந்தி மாரியப்பனின் திறமையைப் பற்றி நான் சொல்லலை. இங்க உள்ள கவிதை சுத்தமா எனக்குப் புரியலைனு சொல்றேன். அஷ்டே

      நீக்கு
    2. உங்களுக்குப் புரியலைனா புரியலைனு சொல்லணும் நெல்லை. "ஆனால் நீங்க சொல்லி இருப்பது! கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று கிடைத்த புத்தகத்திலிருந்து நாலைந்து வரியை உருவிப்போட்டு (இயற்பியல் புத்தகம், வரலாறு, பாட்டனி என்று) அதையும் கவிதை என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட்டம் ரொம்பவே அதிகமாகிவிட்டது. இவர்களை மரபுக் கவிதை எழுது என்றால் அவர்கள் நிலை பல்லிளித்துவிடும். (எனக்கு மரபுக் கவிதை, அர்த்தமுள்ள புதுக்கவிதை தவிர எதையுமே கவிதை என்ற பெயரில் எழுதுபவர்களையும் சேர்த்துப் பிடிக்காது)" இந்த வாக்கியங்களுக்குத் தான் என்னோட நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட பதில். :)

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா..   உண்மைதான்.  அமைதிச்சாரல் பல்கலை வித்தகர்.  புகைப்படங்களும் அருமையாக எடுப்பார்.  அவரும் நெல்லைதான் இல்லையா?

      நீக்கு
    4. அதோடு நெல்லை, ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். இனிப்பு என்பதை எப்படியோ சாப்பிட்டுத் தீர்க்கலாம். ஒரு தீபாவளிக்கு எங்க வீட்டில் செய்த அல்வா கமர்க்கட் மாதிரி வந்து கதவிடுக்கில் உடைத்துக் கொடுத்தோம்/சாப்பிட்டோம். தூக்கி எல்லாம் போடவில்லை. இந்த மாதிரிப் பேசலை. என்னவோ இந்த வருஷம் வாய்க்கலை என்றே சொன்னோம். நீங்க சொன்னாப்போல் எப்போவும் நன்றாகத் தானே பண்ணுவா, இந்தத் தரம் என்னமோ இப்படி ஆயிடுத்து! என்றே சொல்லிக் கொண்டிருந்தோம். வாய்ல வைக்க முடியலைனு எல்லாம் சொல்லவில்லை. உண்மையை உண்மையாகச் சொல்லுவதே சிறப்பு. கவிதை எனக்கும் புரியலை. நான் கருத்தே சொல்லாமல் வந்துட்டேன். :))))

      நீக்கு
    5. அமைதி நெல்லை இல்லையாக்கும். நாரோயில்! ரசவடை பத்தி எழுதி இருப்பாங்க படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். சின்ன வயசில் என் அப்பாவோட சிநேகிதர் தாணுமாலயன் வீட்டில் பண்ணிக் கொடுத்தது நினைவில் வந்தது. அதே போல் கல்தோசையும், வெங்காயச் சட்னியும், உப்புமாக்கொழுக்கட்டையும் அபாரமாக இருக்கும்.

      நீக்கு
    6. //ஆகவே சாந்தி மாரியப்பனின் இந்தக் கவிதை புரியவில்லை நமக்கு என்பதால் அவர் திறமையைக் குறைவாக நினைக்கக் கூடாது. // இது தான் நான் சொல்ல வந்தது.

      நீக்கு
    7. ஆமாம்..  ஆமாம்...   நெல்லையோ நாரோயிலோ என்று சொல்ல வந்தேன்.  மறந்து விட்டது!

      நீக்கு
    8. நெல்லைக்கு ஒரு தகவல்..     அலுவலகத்தில் ஒருவர் நெல்லை சாந்தி ஸ்வீட்டிலிருந்து அல்வா வாங்கி வந்து கொடுத்தார்.  அதைச் சாப்பிட்டுக்கொண்டே பதில்களை டைப்பிக் கொண்டிருக்கிறேன்!!

      நீக்கு
    9. நான் அல்வா சாப்பிடுவதை நிறுத்தி ஒரு வருடத்துக்கும் மேல் இருக்கும். வீட்டிற்கு வந்தபோதும் நான் சாப்பிடவில்லை. இந்த முந்திரி அல்வா என்பது மனதைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. பார்க்கலாம். இந்தத் தடவை பிரயாணத்தின்போதும் இனிப்பு பக்கம் செல்லவில்லை. (அவர்கள் தினம் ஒரு இனிப்பு, வடை கலத்தில் போடுவார்கள், 4 மணிக்கு ஒரு இனிப்பு, காரம் கையில் தருவார்கள்).

      சென்ற முறை நாங்க இருவரும் நெல்லை சென்றிருந்தபோது அல்வா வாங்கவில்லை. ஆனால் மாலைல, 10 ரூபாய் (னு நினைவு) க்கு வாழை இலைல சுடச்சுட அல்வா கொஞ்சம் தருவாங்க. அதுமாதிரி இரண்டு மூன்று கடைகளில் சாப்பிட்டோம்.

      அல்வால உள்ள எண்ணெய், மற்றும் இனிப்பு - ரொம்ப அதிகம் என்று மனசுக்குத் தோன்றிவிட்டது

      நீக்கு
    10. பொதுவாக எனக்கும் அதிக விருப்பம் கிடையாது. ஆனால் அவ்வப்போது சாப்பிடுவேன். இதில் மதுரை ஹேப்பிமேன் முந்திரி அல்வா ஸ்பெஷல், மற்றும் ரயில் நிலையம் விட்டு வெளியே வந்து டவுன்ஹால் ரோடுக்குள் நுழையுமிடத்தில் உள்ள பிரேம விலாஸ் அல்வாவும் ஸ்பெஷல். இரண்டும் வெவ்வேறு ரகம்.

      நீக்கு
    11. ஸ்ரீராம் சாந்தி மாரியப்பன் எங்கூராக்கும் நாரோயில்!!! ஆனா இருக்கறது மும்பையில் இல்லையா...

      கீதா

      நீக்கு
    12. ஸ்ரீராம்... எனக்கு இனிப்பின்மீது ப்ரேமை... ஆனால் அதை விலக்கிவிடவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறேன். மதுரை சென்றால் நிச்சயம் ஹேப்பிமேன் ட்ரை பண்ணணும். (சென்ற வாரம்தான் மதுரையில் யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்தேன்)

      நீக்கு
  40. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்களின் கவிதைத் திறமையைப் பார்த்து வியந்து/பொறாமை கொண்டு ரசித்துக் கொண்டிருக்கேன். கீதா எம்.சுதர்சனம் அவ்வப்போது என்னையும் எழுதச் சொல்லுவார்கள். யார் படிக்கிறது? :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்பவர்களை எல்லாம் தெரியாது.  அமைதிச்சாரல் நமக்கெல்லாம் நண்பர்.

      நீக்கு
  41. அவங்க (கீதா எம்.சுதர்சனம்) கொரோனாவால் ஒரு வருஷம் கலிஃபோர்னியாவில் இருந்தப்போ எழுதின கவிதைகள் அனைத்தும் தனித்துவம் பெற்றவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதென்ன இந்த கீசா மேடம்... கவிதைகளின் ரசிகர் என்று இன்றுவரை தெரியாது

      நீக்கு
    2. ஹிஹிஹி, ஒரு காலத்தில் முத்தமிழ், மின் தமிழ், நம்பிக்கை குழுமங்களில் கவிதை விமரிசனங்களுக்கு நடுவராக இருந்த அனுபவங்கள் எல்லாம் உண்டு. :)))))) இப்போவும் கவிதைகளை ரசிப்பேன்/ரசித்துக்கொண்டே இருக்கேன்.

      நீக்கு
    3. போட்டிக் கவிதைகளுக்கு/நடுவராக!

      நீக்கு
  42. ஶ்ரீராமின் மறதி ஆச்சரியப்பட வைக்கிறது. எனக்கு எப்போவானும் சில சமயங்களில் சமையலறைக்குச் சென்றாலோ படுக்கை அறைக்குச் சென்றாலோ எதை எடுக்க வந்தோம்னு யோசிப்பேன். கூடியவரை நினைவில் வந்துடும். எப்போவானும் மறக்கும். ஆனால் காலை எழுந்ததும் செய்ய வேண்டிய சில வேலைகளுக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டு காலையில் எழுந்ததும் அதை எதுக்குப் போட்டுக்கொண்டோம் என்பது நினைவில் வராமல் போகும். இது அடிக்கடி நடக்கும். ஆனால் வேலைகள் சரியாக நடந்துவிடும் என்பதால் நினைவில் வரலையென்றாலும் பிரச்னை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 'எதை எடுக்க வந்தோம்?' பிரச்னை எனக்கும் அதிகம் உண்டு! திரும்ப தொடங்கிய இடத்துக்கு வந்து நின்று யோசிபபதும் உண்டு!

      நீக்கு
  43. ப்ராக்ரஸ் ரிபோர்ட்டில் நான் மூன்று ராங்குக்குள் வரவில்லை எனில் அந்த மாசம் அப்பா கையெழுத்துப் போட மாட்டார். அதோடு பள்ளிக்கும் வந்து புகார் கொடுத்துடுவார். வீட்டில் படிப்பதே இல்லை. கல்கி, குமுதம், விகடன் தான் படிக்கிறா. குமுதம் படிக்காதேனால் கேட்பதில்லை என்று சொல்லுவார். ஆனால் ஆசிரியப் பெருமக்களுக்கோ நான் நல்ல மதிப்பெண்கள் தானே எடுத்திருக்கேன். என நினைத்துக் கொள்வார்கள். அதிகம் கண்டித்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெண்கூட சில சமயம் சொல்லுவாளாம், என் திறமையை நான் appreciate பண்ணுவதில்லை என்று... யார்தான் அவங்க அவங்க பசங்களைப் பாராட்டிச் சொல்வாங்க? (அதுவும் அவங்க முன்னால) ஹா ஹா

      நீக்கு
    2. @நெல்லை, நீங்க என் புக்ககத்திற்கு மாமியார்/மாமனார் இருக்கையில் வந்து பார்க்கவே இல்லையேனு வருத்தமா இருக்கு. எல்லாப் பெண்களையுமே மாமியார்/மாமனார் சகலகலாவல்லிகள் என்றாலும் என் கடைசி நாத்தனார் மட்டும் ரொம்பவே ஸ்பெஷல். வீட்டில் எந்தக் காரியமானாலும் அவள் கருத்துத் தான் முதலில் கேட்பாங்க. அதோடு வீட்டில் பலகாரம் எது செய்தாலும் முதலில் அந்த மாவைத் தொடுவது அவங்களாத் தான் இருக்கணும். மறந்து போய் நாம் தொட்டுவிட்டால் ஒரு மாதமாவது மாமியார் புலம்புவார், நீ தொட்டுட்டே முதல்லே! அதான் அது சரியா வரலை. ராஜி தொட்டிருந்தா சரியாவும் வந்துருக்கும், சீக்கிரமும் பண்ணி இருக்கலாம் என்பார். அதோடு என் கடைசி நாத்தனார் கைகளில் சங்கு, சக்கரம் இருப்பதாகவும் அவங்க சொல்லுவாங்க. கிட்டத்தட்ட "மிதாஸ் டச்" அவங்களுக்கு உண்டு என்பாங்க. அவங்களுக்கு எச்சல், பத்து, தீட்டு போன்றவை பார்க்கவே மாட்டாங்க. மேலும் சொன்னால் நம்பக் கஷ்டமாக இருக்கும் என்பதால் இதோடு நிறுத்திக்கிறேன். என் அப்பா நேர்மாறாக எனக்கு எதுவுமே தெரியாது என்றே புக்ககத்தில் சொன்னார். அவங்களும் லிடரலாக அதை அப்படியே எடுத்துக்கொண்டு பல வருடங்கள் வரை எல்லோரிடமும் "அவளுக்கு எதுவுமே தெரியாது! அவ அப்பாவே சொல்லிட்டார்!" என்பார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்து அனுபவிக்க உங்களுக்குக் கொடுத்து வைக்கலை. :))))))

      நீக்கு
    3. பெண், மருமகள் என்று இல்லை.  பிடிக்காதவர்களிடம் திறமைகள் இருந்தால் அதை மனித மனங்கள் எப்போதுமே உடனடியாக ஒப்புக்கொள்ள மறுக்கும்.  நான் அப்படி அல்ல என்று இங்கே சொல்லிக்கொள்ளவேண்டும்.  ஆனால் சொல்லிக் காட்டுவது எனக்கு பிடிக்காது என்பதால் சொல்லாமல் தவிர்க்கிறேன்!

      நீக்கு
    4. ?????????????????????????????????????????????????????? என்ன விஷயம்? தப்பாய்ச் சொல்லிட்டேனோ?

      நீக்கு
    5. சேச்சே..   அதெல்லாம் இல்லை கீதா அக்கா..  சொந்த அனுபவங்களில் சில நினைவுக்கு வந்தது.  அதனால் குறிப்பிட்டேன்.  என் கமெண்ட்டின் இரண்டாவது வரி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது.

      நீக்கு
  44. மறதிக்கு மருந்து ;) எனது கணவருக்கும் மறதி உண்டு. இப்பொழுது நான் தப்பி இருக்கிறேன் இனிமேல் என்ன ஆகுமோ தெரியவில்லை.

    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. @ திண்டுக்கல் தனபாலன்..

    அன்பின் இனிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  46. //மாமனார் மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் சிறை// - இந்த 'கவனிக்காவிட்டால்' என்பதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமியாரை கவனிக்காவிட்டால் மாமியார் ஊட்டுக்கு அனுப்பிடுவாங்க!

      நீக்கு
    2. மாமியாரை வீட்டிலேயே வச்சுக்கிட்டா அது மாமியார் வீடு ஆகிடுமே. 

      நீக்கு
    3. ஶ்ரீலங்காவில் இலங்கைத்தமிழர்கள் வழக்கம் மாப்பிள்ளை தான் மாமியார்/மாமனாரோடு வசிக்க வேண்டும். பெண் புகுந்த வீட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை.

      நீக்கு
    4. ஸ்ரீலங்காவில் மனைவியை கணவர் 'வாங்க போங்க' என்றுதான் விளிக்கிறார்..

      நீக்கு
  47. டிடி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் சகோதரரே

    மாமனார், மாமியாரை தன்னுடன் வைத்து பாதுகாக்காதவர்களுக்கு தண்டனை தர வேண்டும். நல்ல தீர்ப்புதான். இதனாலேயே அவர்களை நன்கு கவனிக்க எண்ணம் வரும். மகனின் அப்பா,அம்மாவுக்குத்தான் அந்த கவனிப்பின் அர்த்தங்கள் நிறைய புரிய வரும்.

    படிப்பில், அதன் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் கனகசபை அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

    ஆறு வயதான உங்களின் முகநூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    கவிதை நன்றாக உள்ளது. சிறப்பாக எழுதிய திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆறு வயதான உங்களின் முகநூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்./

      கமலா அக்கா... முகநூலுக்கு ஆறு வயது இல்லை. நமது தளத்தில் கேட்டு வாங்கிப் போடும் கதை தொடங்கி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஜீவி ஸாரின் கதைதான் முதல் கே வா போ கதை.

      நீக்கு
    2. ஓ.. அப்படியா? நான்தான் முகநூல் என்பதைக் கொண்டு தவறாக புரிந்து கொண்டு விட்டேன் போலிருக்கிறது. மன்னிக்கவும். ஐந்து வருடத்தை வெற்றியுடன் கடந்த கே வா போ பதிவுகளுக்கும், முதல் கதையை எ பிக்கு தந்த ஜீவி சகோதரருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

      நீக்கு
    3. பழைய விகடன் இதழ் ஒன்றில் 'சந்திப்பு ஓயாது' என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை ஸ்ரீராம் பார்த்ததும் ஒரு காரியம் செய்தார். அதை அவர் செய்யவில்லை என்றால் இந்த கே.வா.போ.கதைப் பகுதியே எபியில் அந்த நேரத்திற்கு தொடங்கியிருக்குமா என்பதே யோசனையாக இருக்கிறது.
      அப்படி என்ன காரியம் அவர் செய்தார் என்பதை அவரே சொல்வது தான் முறை. அடுத்த வியாழனுக்கு ஒரு மேட்டர் கிடைத்ததே என்ற குஷியில் அவரே வேண்டுமானால் அதைச் சொல்லட்டும்.

      நீக்கு
    4. உண்மையில் அதைப் பற்றியும் யாராவது கமெண்ட்டுவார்கள் அப்போது சொல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன்.  அப்புறம் மறந்து விட்டது!

      அது நம் ஜீவி ஸார் எழுதிய கதை என்று நினைத்து கதையை பைண்டிங் புத்தகத்திலிருந்து பார்த்து டைப்பி, யார் எழுதியது என்று புதிர்ப்போட்டி வேறு வைத்தேன்.  அந்த ஜீவி வேறொரு எழுத்தாளர் என்று ஜீவி ஸார் மூலமாகவே தெரிந்ததும் கிலோகிலோவாக அசடு வழிந்தேன்!  அப்புறம் அதைச் சரிசெய்ய, அவரிடத்திலிருந்து அவர் எழுதிய கதை ஒன்றை கேட்டு வாங்கிப் போட்டு பிரசுரம் செய்தோம்.  அது க்ளிக்காகி அப்படியே ஒவ்வொருவரிடமும் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதி தொடங்கியது.  இப்போதெல்லாம் கே வா போ என்பதை எடுத்து விட்டு சிறுகதை என்று மட்டும் குறிப்பிடாத தொடங்கி உள்ளோம்.  கவனித்தீர்களோ?

      நீக்கு
    5. ஸ்ரீராம். அடுத்த வியாழனில் அந்த சந்திப்பு ஓயாது கதைத் தலைப்பை
      பழைய எபி பதிவிலிருந்து எடுத்துப் போட்டு சுவாரஸ்யமாகச் சொன்னால் தான் வாசிப்பவர்களுக்கு புரியும்.
      எபியின் மலரும் நினைவுகளில் இது ஒன்று இல்லையா?

      நீக்கு
    6. கமெண்டுவார்களா?.. வேடிக்கையாக இருக்கிறதே! பின்னூட்டங்கள் பெரும்பாலும் வண்டிப்பாதை தடம் போலத்தான். புதுசாக வெவ்வேறு
      விஷ்யங்களுக்கு எண்ணங்கள் தாவினால் பின்னூட்டங்கள் சுவாரஸ்யப்படும்.

      எனக்கு அந்த புத்தக வண்டி அன்பரின் படத்தைப் பார்த்ததும் அந்தப் படத்தின் பின்புலக் காட்சி பற்றி சொல்ல வேணும் என்று தோன்றியது.

      அந்த சாவி விஷயத்தில் தள்ளினால்
      வீட்டுக் கதவு திறக்கிற மாதிரி விட்டு விட்டு வருகிறாரே என்று மனம் பரிதவித்தது.

      நீக்கு
  49. சென்ற வாரமே கருத்திட வேண்டும் என்று நினைத்தது. ஸ்ரீராம் progress reportல் அப்பா கையெழுத்து வாங்க கஷ்ட்டப்பட்டதை எழுதியிருப்பதை வைத்து அவர் ஏதோ ஆவரேஜ் மாணவர் என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம். நிறைய மார்க், குறைந்த மார்க் என்பது வீட்டுக்கு வீடு மாறும். 95 மார்க் வாங்கியவனை அஞ்சு மார்க்கை எங்கே விட்டாய்? என்று அடிக்கும் அப்பாக்கள் உண்டு. நாற்பது மார்க் வாங்கியவனை,"பாஸாயிட்ட, குட்" என்பவர்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, இது நல்லாயிருக்கே...

      நீக்கு
    2. நான் எல்லாவற்றிலும் பாசிடிவ் பக்கத்தைப் பார்ப்பவள். இதை நேற்றே போட்டிருந்தால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும் இல்லையா!

      நீக்கு
    3. பானுக்கா கரெக்ட்!!!! அப்படியே வழிமொழிகிறேன்..உங்கள் கருத்தை.

      //நான் எல்லாவற்றிலும் பாசிடிவ் பக்கத்தைப் பார்ப்பவள். //

      யெஸ்ஸு...சூப்பர்....அக்கா

      கீதா

      நீக்கு
    4. என் அப்பா பானுமதி சொல்லி இருக்கும் அந்த ரகம்தான்! உடனேயே படிப்பை நிறுத்திடறேன் என ஆரம்பிப்பார்! :)))) நாங்க தான் அஞ்சாநெஞ்சராச்சே! விட மாட்டோமுல்ல! :)

      நீக்கு
    5. என் அப்பா பழமொழியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.  (அடி உதவறா மாதிரி...)

      நீக்கு
    6. ஹாஹாஹா, ஶ்ரீராம், அதெல்லாம் நிறையவே அடி வாங்கி இருக்கேன். கம்பு, விசிறிக்காம்பு, துணி உலர்த்தும் கொடிக்கம்புனு கையில் எது கிடைக்குதோ அதால் அடி கிடைக்கும். வீட்டில் திரைப்படப் பாட்டு பாடக் கூடாது. என் தம்பி ஒரு நாள் மாலை கோலி விளையாட்டில் ஜெயித்த கர்வத்தில், "அவள் பறந்து போனாளே!" என்று சந்தோஷமாகப் பாடிக்கொண்டு வர, திடீர்னு முதுகில் பளார்! திரும்பிப் பார்க்க அப்பா திடீர்னு வீட்டுக்கு வந்துட்டார். :)))))) நாங்க (அண்ணாவும், நானும்) அன்னிலேருந்து தம்பியை "அவள் பறந்து போனாளே!" என்று பாடிப் பாடி வெறுப்பேத்துவோம்.:)))) பொற்காலங்கள்.

      நீக்கு
  50. மறதி என்பது அழுந்த வருந்தவேண்டிய விஷயமில்லை! அதுவும் சுவாரஸ்யமானதுதான். எல்லாவற்றையும் சரியாக நினைவில் வைத்திருந்து என்ன கிழித்துவிட்டோம் பெரிதாக..

    கவிதை: கையில் அங்குசத்தை வைத்திருக்கும் மனிதா ! நியூரான் முடிச்சில் விதை தேடியா நீ நீர் வார்ப்பாய் ?

    வெறும் டிகிரியை வைத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளும் நகரத்து லைப்ரரியன்களை விட பழைய புத்தகம் விற்கும் மனிதர்கள், மொழி ப்ரியர்கள் எவ்வளவோ தேவலை. கனகசபை ஸ்பெஷல் டைப். படத்திலிருப்பது சங்கரா, கனகசபையா!

    பேரீச்சம்பழம், அரேபியா, வயாகரா, ஹரஹர மஹாதேவா! சுவாரஸ்யமாக எழுதவேண்டும் என்பதற்காக ஆதாம், ஏவாள் விழுந்த இடத்தில் அதலபாதாளம், ரகஸ்யம், சூட்சுமம் எனக் கட்டுகிறார் கதைகளை... ஒரு அராபியர் கொடுத்த பழத்திலேயே உசுப்பேறிக் குதிக்கும் ஆசாமிக்கு, 15-ஆம் நூற்றாண்டின் ஷேக் நஃப்ஸாவியைப்பற்றித் தெரியுமா? பழம் சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களில் பலர் படிப்பதில்லை புஸ்தகங்களை! படித்தவர்களும் இதுதான் சாக்கென்று இங்கே அள்ளித் தெளித்துவிடமுடியாது - அரசியலைப்போல erotica-வுக்கும் வந்து விழும் தடை!

    பதிலளிநீக்கு
  51. எனக்கு ப்ரோக்ரஸ் கார்டு விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. மார்க் கம்மியானாலும் கூட. நானும் அவேரேஜ் மாணவன் தான்.

    மறதி எனக்கும் உண்டு ஆனால் எல்லா விஷயத்திலும் இல்லை. குறிப்பாக பிறந்தநாள் தேதிகள், மணநாள் தேதிகள் இதெல்லாம் வாழ்த்துவதற்கு நினைவு வராது. தேதிகளும் நினைவில் இருக்காததால்.

    முக்கியமானதும் கூட சில சமயங்களில் மறப்பதுண்டு பெரும்பாலும் இல்லை என்றாலும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​பிறந்த நாள், மணநாள் போன்ற விசேஷங்களை நினைவு வைத்திருப்பதில் என் பாஸ் கில்லாடி! எனக்கு போறாது!

      நீக்கு
  52. பேரீச்சம் பழம் இரத்த விருத்திக்கும், ஹீமோகுளோபின் குறைந்தால் அதைக் கூட்டுவதற்கும் என்று அறிந்திருந்த எனக்கு, அரேபியன் பேரீச்சம் பழம் குறித்து எங்கள் ஊரில் பேசப்பட்டதிலிருந்து அறிந்தேன். எங்கள் ஊரிலிருந்து கெல்ஃபில் இருப்பவர்கள் அதிகம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  53. மாமனார் மாமியார் பாதுகாப்புச் சட்டம் மிக நல்ல விஷயம். ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தச் சட்டத்துல அர்த்தமும் உண்டு. இப்போல்லாம் வீட்டுக்கு ஒரு பெண்ணோ இல்லை ஒரு ஆணோதான். அதனால இருவரின் பெற்றோரையும் பார்த்துக்கொள்வது நல்லது. சட்டப் பாதுகாப்பு இருப்பதால், தன் பெண்ணை லவட்டிக்கொண்டுவந்து மாப்பிள்ளையின் பெற்றோரைப் பரிதவிக்கவிடும் செயல் குறையலாம் ஹா ஹா

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா...  நீங்கள் எதிர் திசையிலிருந்து பார்க்கிறீர்கள்!

      நீக்கு
    3. அப்படி எல்லாம் இல்லை ஶ்ரீராம். ஒரே பெண் என்பதாலேயே என் சிநேகிதியின் பிள்ளையை அந்தப் பெண் திருமணம் செய்துக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பெற்றோரைப் பார்த்துக்கணும் என்பது தான் காரணம். இத்தனைக்கும் பிள்ளை வீட்டில் சம்மதம் தான் கொடுத்தார்கள். ஆனால் இதெல்லாம் பேசிக்காமலேயே இருபக்கத்துப் பெற்றோரையும் அரவணைத்துச் செல்லும் தம்பதிகளும் உண்டு. என் தம்பி மனைவியின் அம்மா கடைசி வரை அவங்களோடு தான் இருந்தார். நாங்கல்லாமும் அடிக்கடி போய்விட்டு வருவோம். அதனால் எல்லாம் எந்தவிதமான பிரச்னைகளும் வந்ததில்லை.

      நீக்கு
  54. பழைய புத்தக விற்பனையாளர் கனகசபை அவர்கள் வியக்க வைக்கிறார் என்பதோடு பட்டயப்படிப்பு படித்து வருவதும் அதில் எழுதக் கற்றுக் கொண்டதும் மேலும் ஆச்சரியத்தை அளிக்கிறது. கடினமான விஷயம். பாராட்டப்பட வேண்டிய மனிதர்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  55. ஸ்ரீராம்ஜி உங்களின் கவிதைக்குப் பதில் நீங்கள் ரசித்த கவிதையா இன்று.

    ஆழமாகச் சொல்லப்பட்ட கவிதை. ஒரு வாசிப்பில் கடந்து செல்ல முடியாமல், ஆழ்ந்து வாசித்ததும் புரிந்தது. பொருளை ரசித்தேன். அமைதிச்சாரல் சாந்திமாரியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  56. நானும் கூட நினைவில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான பேப்பர்கள் என் நோட்ஸ் எல்லாவற்றையும் நோட்ஸ் எல்லாம் இப்போதும் பேப்பரில் எழுதுவதால், எல்லாவற்றையும் பரத்தி நான் பயன்படுத்தும் அறையில் இருக்கும் கட்டில் மேல் போட்டு வைத்திருப்பேன். பார்ப்பதற்குக் கொஞ்சம் குப்பையாகத்தான் இருக்கும். ஆனால் எளிதாக எடுக்க வேண்டி அப்படி என் மனதில் இருக்கும் ஆர்டர் படி வைத்திருப்பது வழக்கம். டக்கென்று எடுத்துக் கொள்ள முடியும் என்பதால்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  57. மாமனார் மாமியாரை கவனிக்கவில்லை என்றால் மாமியார் வீட்டுக்க் போக வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  இதே கருத்தைத்தான் ங்கள் குடும்ப க்ரூப்பிலும் சொல்லி இருந்தார்கள்.  இங்கு கேஜிஜியும் சொல்லி இருந்தார்.

      நீக்கு
  58. நேற்று இரவு 9:30 வாக்கில் போட்ட கமெண்ட் ‘காட்சி’தந்தது. கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விட்டது. ‘நீக்க’ப்பட்டதா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  நானே என்று மெயில் பாக்சில்தான் உங்கள் கமன்ட் பார்த்து பதிவுக்கு வந்து தேடினேன்.  எங்கும் காணோம்.  நீக்கப்பட்டால் நீக்கப்பட்டது என்கிற செய்தியாவது இருக்கும்.  இதை இன்றைய வெள்ளி பதிவில் கூட சொல்லி இருக்கிறேன். மர்மம்!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா, எல்லோரும் மாட்டிக்கிட்டீங்களா? ஜாலியோ ஜாலி! எனக்குப் போன வாரம் 2,3 நாட்கள் இப்படித்தான் படுத்தி எடுத்தது. அதை ஒரு பதிவாகவே போட்டு எல்லோரும் எங்களுக்கெல்லாம் ஒழுங்காத்தானே வருதுனு சொன்னாங்க! சொன்னாங்களா!உடனே தி/கீதாவிடம் ப்ளாகர் வேலையைக் காட்டியது. அடுத்து பானுமதி! இப்போ நீங்க @ஏகாந்தன். https://sivamgss.blogspot.com/2021/12/blog-post_17.html இந்தச் சுட்டியில் போய்ப் பாருங்க!

      நீக்கு
  59. போஸ்டிற்கும் போடற கமெண்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் ஏதோ அரட்டை கச்ச்சேரி நடந்து கொண்டிருப்பதால்
    நடுவில் வந்து பார்த்த நான் நாம் ஏன் இதில் குறுக்கிடுவானேன் என்று போய்விட்டேன். பதிவு போடுவது, பின்னூட்டம் போடுவது எல்லாமே ஒரு ஜாலிக்காகத் தான் என்று எபி குழுவே நினைப்பதால் நான் ஸ்ரீராமின் அருமையான வியாழற்கிழமை பிரசண்டேஷனை மட்டும் ரசித்து விட்டுப் போய்விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்.  சம்பந்தம் இல்லை என்று முழுவதும் சொல்லி விட முடியாது!

      நீக்கு
    2. சாதாரணமாகப் பள்ளியில் பாடம் நடத்தும்போதே அதுவும் தமிழ் இலக்கியம், சரித்திரப் பாடங்கள் அறிவியல் பாடங்கள் எனில் பாடத்தை ஆரம்பித்தாலும் விவரிக்கையில் எங்கெங்கோ சென்று விட்டுத் தான் திரும்பும். இன்னும் சொல்லப் போனால் வணிகவியல் பாடத்தில் கூட எங்கள் ஆசிரியர் பழங்காலம், மத்திம காலம், தற்காலம் என விவரிக்கையில் பல்வேறுவிதமான சம்பவங்கள்/நிகழ்வுகள்/அரசுகளின் மாற்றங்கள் அதனால் ஏற்பட்ட பொருளாதார மாறுதல்கள் அது பாதிக்கப்பட்ட விதம்னு சொல்லுவார்.ஆனால் இதெல்லாம் பாடத்துக்கு சம்பந்தமே இல்லாதது என்று சொல்ல முடியுமா? தமிழ் இலக்கியம்னால் கேட்கவே வேண்டாம். அன்றைய பாடம் எந்தத் தலைப்போ அதைச் சேர்ந்த பல்வேறு விஷயங்களுக்கும் தாவும். பள்ளியிலேயே இப்படின்னா இங்கெல்லாம் பொது வெளியில் ஒரு விஷயத்தைச் சார்ந்து பலவும் தான் பேசும்படி இருக்கும். பேசுவார்கள். அதோடு இல்லாமல் இங்கே பல பதிவுகளுக்கும் நாம் வருவது என்னைப் பொறுத்தவரை கூடிக் களிக்கவே! இங்கேயும் பள்ளியின் கட்டுப்பாடு போல் கட்டுப்பாடுகள் இருக்கும் எனில் யாருமே வரமாட்டார்கள். இது என் கருத்து மட்டுமே! பல்வேறு விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பேரிச்சை பற்றிப் பேசும்போது அதன் பலாபலன்கள் மட்டுமில்லாமல் அதோடு தேங்காய்த்துண்டுகள் சேர்த்துச் சாப்பிடுவதனால் ஏற்படும் பலன்களும் புதிதாய்த் தெரிய வந்தன. இது மனித சுபாவம். ஒன்றையே பற்றிக்கொண்டு அரைத்த மாவையே எத்தனை முறை அரைப்பது?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!