புதன், 19 ஜனவரி, 2022

எ பி க்கென்று ஏதேனும் மோட்டோ அல்லது குறிக்கோள் உண்டா?

 

ஜெயக்குமார் சந்திரசேகரன் : 

வேதாளம் மீண்டும் கேட்கிறது.

& விக்ரமாதித்ய ஆசிரியர்கள் பதில் சொல்வார்களா? 

வாருங்கள் எ பி ஆசிரியர்காள்.

& வந்தோம். 

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தும் பதில் சொல்லாவிட்டால்--------------------------கடவது.

& பதில் தெரிந்திருந்தால்தானே !!

1. எ பி துவங்கியது எப்போது? முதல் ஆசிரியர் யார்? 

 * 2009 June.

& (விக்ரம சகாப்தம், 2066 ஆம் ஆண்டு)  ஆங்கில வருடம் 2009, ஜூன் 28, தமிழ் வருடம் விரோதி, ஆனி மாதம் பதினான்காம் தேதி, வளர்பிறை, சப்தமி திதி, பூரம் நக்ஷத்திரம் நான்காம் பாதம், காலை மணி 7 - நிமிடம் 22 க்கு எங்கள் Blog சுபஜனனம். 

(அன்றையத் தேதிக்குறிப்பில் - உள்ள ஆச்சரியமான தகவலைப் பாருங்கள்!!) 

முதல் ஆசிரியர் : முதல் பதிவை வெளியிட்டவர். >>> சுட்டி 

2. கூட்டு முயற்சி என்ற பெயரில் 5 ஆசிரியர்களும் வேவ்வேறு கிழமைகளில் வெவ்வேறு தலைப்புகளில் எழுதத் துடங்கியது எப்போது? 

துவங்கிய இரண்டாவது வாரம் முதல்..

& தொடங்கிய வார இறுதியிலிருந்து. 

3. எ பி ஆசிரியர்கள் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. என்றாலும் குறைந்தது பெயர் ஊர் இவற்றை தெரியப்படுத்தலாம் அல்லவா? 

$ இன்னும் 2 வருடங்களில் தெரியப்படுத்தலாம்..!

& பல வாசகர்களுக்கு இதற்கு பதில் தெரியும். எங்கள் blog முகப்புப் பக்கத்திலேயே ஆசிரியர்கள் பெயர்கள் உள்ளன. (கணினி மூலமாக  பார்த்தால்  தெரியும். ஊர் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும்.) 

4. எ பி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உபயோகப்படுத்தும் hardware,  software என்ன? தமிழ் தட்டச்சு தமிழ் விசைபலகை உபயோகித்தா  அல்லது செல்லினம் போன்று மென்பொருளா? (word processor or transliteration software?)

$  google transliteration on indic keyboard.

*நான் டைப்புவது கூகுள் ட்ரான்ஸ்லிட்ரேஷன் 87.5%, செல்லினம் 10.5%, அழகி 2%.

& கூகிள் கீ போர்டு. 

5. மற்ற சில பிளாக் (சஹானா, சின்னுஆதித்யா) போன்று விளம்பரம்  உட்படுத்தல் நோக்கம் ஏதேனும் உண்டா? 

*விளம்பரத்தையோ வருமானத்தையோ விரும்பியதில்லை, யோசித்ததில்லை.

6. எ பி க்கென்று ஏதேனும் மோட்டோ அல்லது குறிக்கோள் உண்டா? 

 $ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே...

*சந்தோஷம், மகிழ்ச்சி, உற்சாகம்.  பகையில்லா உறவும் நட்பும், தடையில்லா மகிழ்ச்சியும் பகிர்வும்.

& பிளாக் படிப்பவர்களுக்கு உபயோககரமான விஷயங்களைப் பகிரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். Entertain, educate and share useful matter mixed with humor. 

கடைசியாக விடை தேட வேண்டிய ஒரு கேள்வி. 

வேதாளம் விக்ரமாதித்தனிடம்  சொன்னது எத்தனை கதைகள்?

*கடைசிக் கேள்விக்கு பதில் : வேதாளத்தின் கணக்குப் புத்தகம் வெள்ளத்தில் போய்விட்டதாம்.  விசனத்தில் இருக்கிறாராம் விக்ரமாதித்தன்!

& பன்னிரெண்டாம் நூற்றாண்டின் சோமதேவ் பட் எழுதிய குறிப்பின்படி மொத்தம் 25 கதைகள். (ஆனால் அம்புலிமாமா படி ஆயிரக் கணக்கான கதைகள்! ) 

= = = = = =

  சென்ற வாரம் நாங்கள் வெளியிட்டிருந்த ஜோதிடக் குறிப்புகள் கேள்வி கேட்டவரின் குணாதிசயங்களை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டவை அல்ல. 

எப்படி சொல்லப்பட்டது என்பதை கீழே விவரித்துள்ளேன். 

நாங்கள் கேட்டது 660 க்குள் ஓர் எண். + இருபதுக்குள் மற்றொரு எண். 

என் கையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட சிறிய அளவு ஆங்கில அகராதி ஒன்று கிடைத்தது. அதில் உள்ள மொத்த பக்கங்கள் 660. 

ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள பிரதான வார்த்தை சராசரி 20. 

660 க்குள்  வாசகர்கள் சொல்லும் எண் பக்கம் எண் ஆகவும், இருபதுக்குள் சொல்லும் எண் வார்த்தை எண் என்றும் கொண்டு அந்த வார்த்தையை பிரதான வார்த்தையாக எடுத்துக்கொண்டு, அதற்கான பலன்களை எழுதினேன். 

வல்லிசிம்ஹன் : 

660க்குள் ஒரு எண் 227, 20க்குள் ஒரு எண் 14

இவருக்கு வந்த வார்த்தை : fluorescence 

ஜெயக்குமார் சந்திரசேகரன் :

600க்குள் ஒரு எண்  238,  20க்குள் ஒரு எண் 17

இவருக்கு வந்த வார்த்தை : froth 

 Geetha Sambasivam : 

ஓஓ, இந்த நம்பர் சொல்லணுமா? எல்லோரும் சொல்லி இருக்காங்களே, என்னடாப்பானு பார்த்தேன். 660க்குள்ளாக 300 20க்குள்ளாகப் பதினைந்து.

இவருக்கு வந்த வார்த்தை : indomitable 

Bhanumathy Venkateswaran : 

420 & 15

இவருக்கு வந்த வார்த்தை : passim 

Anuprem:

500,  10

இவருக்கு வந்த வார்த்தை : roister 

இப்போ உங்கள் வீட்டில் ஆங்கில அகராதி இருந்தால், அதில் ஒவ்வொருவரும் தங்களின் வார்த்தைக்கு என்ன அர்த்தம் போடப்பட்டுள்ளது என்று பார்த்துக்கொள்ளுங்கள். 

ஆங்கில அகராதி இல்லாதவர்கள் " Word Web " என்னும் app தங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து அதன் மூலமாக சரி பார்த்துக்கொள்ளவும். 

= = = = =

அடுத்த வாரத்து ஜோதிடக் குறிப்பிற்கு, மனதுக்குள் ஏதேனும் குழப்பம் அல்லது பிரச்சனை இருந்தால், அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டு,  4690 க்குள் ஓர் எண்ணை கருத்துரையில்  குறிப்பிடுங்கள். எந்த பிரச்சனைக்காக கேட்கிறீர்களோ அந்தப் பிரச்சனையை எங்களுக்கு சொல்லவேண்டாம். ஆனால் பிரச்சனையை, உங்கள் குறிப்புப் புத்தகத்தில் எதிலாவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஜோதிடம் என்னைப் பொருத்தவரையில் மிகவும் சரியாக இருந்துள்ளது. அது உங்களுக்கு எந்த அளவு ஒத்துப்போகின்றது என்பதை அறிய ஆவல். 

குறிப்பு : 1. பிரச்சனை என்ன என்பது கேள்வி கேட்பவருக்கு மட்டுமே தெரியும். நாங்கள் கொடுக்கப்போகும் குறிப்பிலிருந்து அதற்கான தீர்வை கேள்வி கேட்டவர் மட்டுமே அடையாளம் காண இயலும்.  

2) விளையாட்டான பிரச்சனைகள் அல்லது இல்லாத பிரச்சனைகள் எதையும் நினைக்காமல் உண்மையிலேயே ஒரு பிரச்சனையை நினைத்து எண் குறிப்பிடுங்கள். 

= = = = =

ப பா க எ : 

1) 

2) 

3) 


கடைசி படத்தில் ஓர் எண் மறைந்து உள்ளது. அது எது? 

= = = = =

76 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஜோசியம் சொல்வது கையாண்ட முறை சிறப்பு. படங்களும் நன்று. வேதாளத்தின் கேள்விகள் அதற்கான பதில்கள் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. எல்லோரும் இன்புற்றிருக்கவே பதிவுகள்..... நல்ல சிந்தனை - பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. பதில்களுக்கு நன்றி.

  நாடி ஜோதிடத்தை உல்டா செய்து அகராதி (dictionary) ஜோதிடம்! இதுவும் நல்லாத்தான் இருக்கிறது. 


  பத்திரிகைகளில் தினப்பலன் வாரபலன் எழுதுவார்கள். அது போன்று ஒவ்வொரு புதன் அன்று அந்த வாரத்தின் பொதுவான நிகழ்வுகள் எண் ஜோதிடம் (உங்கள் ஜோதிட முறை) என்ற புதிய பகுதி துடங்கி வெளியிடலாம். வரவேற்பு நிச்சயம் உண்டு. அது பலிக்காவிட்டாலும்  பரவாயில்லை. 

  அடுத்து பிரச்சினைகளுக்கு பரிகாரமா? அதற்கும் எண் வேண்டும். முதலில் உண்மையான பிரச்சினை ஒன்றை கண்டுபிடிக்கவேணும். பின்னர் எண் தேர்ந்து எடுக்க வேண்டும். ஆகவே பின்னர் வருகிறேன். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
 4. ஒருவருக்கு மட்டுமே இன்று பங்கெடுத்திருக்கிறார் ஆனாலும் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை.

  பதிலளிநீக்கு
 5. படம் பார்த்து கருத்துக்கள். 

  1. சிங்கம் என்றாலும் நக்கித்தான் குடிக்கும். 

  2. பூனைக்கும் கை (கால்?) கொடுக்கத்  தெரியும். 

  3. குரங்கும் வால் பிடிக்கும். பாம்பினை பிடித்த குரங்கு வாலையும் பார்த்து பயந்தது என்ற பாவலரின் பாட்டு நினைவில் வந்தது. 


  முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும் தான் எண்களைக் கண்டேன். 3 வது படத்தில் தெரியவில்லை. இரண்டாவத்து படத்தில் கவுதமன் சார் எட்டிப் பார்க்கிறார். 

  இந்த வாரம் வாசகர்களுக்கு கேள்விகள் இல்லையா?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகர்கள் கேட்கவேண்டும் என்பதற்காக இன்று எங்கள் கேள்விகள் off செய்து வைத்துள்ளோம்!

   நீக்கு
 6. காலை வணக்கம் எல்லோருக்கும்

  அட! எபி பிறந்த நாளன்று நாட்குறிப்பில் உள்ள வாசகம் பொருந்தியிருக்கிறதே!! கூடவே நம்ம ஸ்ரீராமுக்குப் பிடித்த முருகன்!

  இப்படியான சுப முகூர்த்தம் எப்போதும் தொடர்ந்திடவும் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. *கடைசிக் கேள்விக்கு பதில் : வேதாளத்தின் கணக்குப் புத்தகம் வெள்ளத்தில் போய்விட்டதாம். விசனத்தில் இருக்கிறாராம் விக்ரமாதித்தன்!//

  ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். இது ஸ்ரீராமின் பதில்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. & பன்னிரெண்டாம் நூற்றாண்டின் சோமதேவ் பட் எழுதிய குறிப்பின்படி மொத்தம் 25 கதைகள். (ஆனால் அம்புலிமாமா படி ஆயிரக் கணக்கான கதைகள்! )

   தகவல் இப்பதான் அறிகிறேன். மிக்க நன்றி கௌ அண்ணா

   கீதா

   நீக்கு
 8. 8க்கும் 10க்கைம் இடையில் உள்ள எண்.

  பதிலளிநீக்கு
 9. சென்ற வாரம் அடியேனும் ஒரு கேள்வி கேட்டதாக நினைவு...

  அது :-

  வேறென்ன திருக்குறள் பற்றி தான்... கேள்விக்குறியோடு இன்று :-

  எப்படி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எட்டும் எட்டும் ஏழு...! (8+8=7) ?
   இதுவா சார்?
   மன்னிக்கவும் - இந்த அளவுக்கு யோசிக்கும் திறன் எனக்கு இல்லை.
   கேள்வியை விளக்கமாக கேட்கவும்.
   நன்றி.

   நீக்கு
  2. நான் யோசித்த வரையில், 8 + 8 = 16. and 1 + 6 = 7.
   இதுதான் தோன்றியது. ஆனால் இந்த பதில் ரொம்பவும்
   சிம்பிள் ஆகத் தோன்றியதால் choice ல விட்டுவிட்டேன்!

   நீக்கு
  3. அருமை... எத்தனை இலக்க எண்ணையும் ஓரெண்ணாகும் வரையில் கூட்டி (+) வரும் எண், கூட்டின எண்ணின் மூல எண்... அதன்படி 8+8=7

   // இந்த பதில் ரொம்பவும்
   சிம்பிள் //

   Simple தான், ஆனால் இதற்கு பின் திருக்குறளின் சொல்லாய்வு கணக்கியல் அடங்கி உள்ளது...! நன்றி...

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 12. மூன்றாவது படத்தில் மறைந்திருக்கும் எண் 3.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் தேடவேண்டியதுதான்!! படத்திலா அல்லது படத்துக்கு வெளியிலா!

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய விக்கிரமாதித்தன் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தது. எ.பியின் பிறந்த நாள் மற்றும் விபரங்கள் அறிந்து கொண்டேன். அந்த நாளுக்கான ஆச்சரியகரமான தகவல் மிகவும் சிறப்பு. நல்ல பண்புகளோடு, எண்ணங்களோடு, குறிகோளோடு வளர்ந்திருக்கும் எ.பி தொடர்ந்து எந்நாளும் நல்ல வளம் பெற்று பல்லாண்டுகள் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. & பன்னிரெண்டாம் நூற்றாண்டின் சோமதேவ் பட் எழுதிய குறிப்பின்படி மொத்தம் 25 கதைகள். (ஆனால் அம்புலிமாமா படி ஆயிரக் கணக்கான கதைகள்! ) //

  ஓஹோ..

  ஜெகே அண்ணாவின் கேள்விககள் சுவாரசியம் என்றால் பதிகளும் சுவாரசியம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட!!! ரெண்டு கருத்து எழுதி வைத்து போட ப்ளாகர் ரோபோவை அனுப்பியது ஒன்று இங்க வந்திருக்கு!! மற்றோன்று என்னடா நம்ம கருத்தை காணலையே என்று மேலே இப்பதான் காப்பி பேஸ்ட் பண்ணி போட்டால் ரோபோ!!! கருத்து வந்துவிட்டது

   கீதா

   நீக்கு
 15. படம் 1. என்னது இது மனுஷன் எங்கிட்டருந்து தப்பிக்க வாத்து வேஷம் போட்டிருக்கானோ? ஹூம் இன்னிக்கு இம்புட்டுத்தான் போல..இதையும் அடிச்சுப்போம்.

  படம் 2. ஹெலோ! ஐ ஆம் பூனாச்சு!!!

  படம் 3. வால் கொடுக்கும் வால்கயிறு! (கை கொடுக்கும் கை போல!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 16. படம் 3 - சீக்கிரம் ஏறு. எவ்வளவு நேரம் உக்காந்திருக்கறது...எனக்கு ட்யூட்டிக்கு நேரம் ஆகுது.

  கீதா

  பதிலளிநீக்கு
 17. நெல்லைத் தமிழன், நான் நலம். வேலைப்பளு. குழந்தைகளுக்கு செமஸ்டர் பரீட்சை அதனால் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது, ரப்பர் தோட்ட வேலைகள், தற்போது மாணவர்களுக்குப் பாட சம்பந்தமாக மலையாளம் ஆங்கிலம் கலந்து சொல்லும் காணொளிகள் பதிகிறேன். சிறிய சிறிய காணொளிகளாக கீதாவுக்கு அனுப்பி அதை அவர் மெர்ஜ் செய்து, பார்ட் பார்ட்டாக யுட்யூபிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிடுதல், அடுத்து அதே காணொளிகள் தமிழிலும் செய்ய திட்டமிடுதல், கல்லூரிப் பணிகள் என்று கொஞ்சம் நேரம் டைட். இடையில் தாமதமாகத்தான் வலைப்பதிவுகளை வாசிக்க முடிகிறது. மற்றபடி நான் நலம்.

  நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் நலம் வாழ்க துளசிதரன்..

   நீக்கு
  2. நலம் வாழ்க என்று நாங்களும் வாழ்த்துகிறோம்.

   நீக்கு
  3. துரை அண்ணா கூ சுக் சுக்... முடிஞ்சா ஏறிக்கோங்க!!!! இப்ப காவல்கிணறுல வண்டி நிக்கி. நிக்க சொல்லிருக்கேம்லா!!! முடிஞ்சா வந்து ஏறிக்கோங்க சாப்பாடு எல்லாம் கவலையில்ல!

   கீதா

   நீக்கு
 18. ஸ்ரீ வாக்ய வசதியானந்த ஸ்வாமிகளுக்கு ஜே!..

  பதிலளிநீக்கு
 19. @ அன்பின் அசரீரி

  // விளம்பரத்தையோ வருமானத்தையோ விரும்பியதில்லை, யோசித்ததில்லை... //

  வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சொல்வதற்கில்லை..

  வேண்டும் பணம்..
  வேண்டாம் நாணம்!..
  - என்றாகிவிட்ட பிறகு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு
 20. எபியின் மோட்டோ பற்றிய கேள்விக்கான பதில்கள் இரண்டுமே அசத்தல்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொத்தம் மூன்று பதில்கள் உள்ளனவே! இரண்டு அசத்தல் என்றால் எது அசத்து? :))))

   நீக்கு
  2. ஹாஹாஹாஹாஹா அண்ணே 'டாலர்' கண்ணுல படாம விட்டுப் போச்சு!!!!!!

   மூன்றுமே....அசத்தல்!! நோ அசத்து!

   கீதா

   நீக்கு
 21. கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 22. எங்கள் ப்ளாக் ஆரம்பித்த புராணம் அருமை. ஆனால் நான் அந்தச் சமயத்தில் எல்லாம் வந்தேனா நினைவில் இல்லை. ஆனால் என்னோட வலைப்பக்கம் "எண்ணங்கள்"க்கு கௌதமன், ஶ்ரீராம், கணேஷ்பாலா, ஆ.வி., மன்னார்குடி ராமமூர்த்தி, ஆரண்யநிவாஸ், வைகோ எல்லோரும் அப்போது தான் வர ஆரம்பித்திருந்தனர். நடு நடுவே ரிஷபனும் எட்டிப் பார்ப்பார். ஒரே த்ரில்லாக இருந்தது அப்போ. ஏனெனில் மங்கையர் மலரில் வெளிவந்த ரிஷபனின் நீண்ட கதை ஒன்றுக்கு விமரிசனம் எழுதிவிட்டுச் சில கேள்விகளும் கேட்டிருந்தேன். யாரிடமிருந்தும் பதில் இல்லை. இப்போ நேரிலேயே வந்திருக்கார் கேட்கலாம்னு நினைச்சால் திடீர்னு காணாமல் போயிட்டார். பின்னர் அவர் வலைப்பக்கத்தைத் தேடிப் பிடித்துக் கண்டுபிடித்துச் சென்றேன்.

  பதிலளிநீக்கு
 23. முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஒரு வலைப்பக்கத்துக்கு ஐந்து ஆசிரியர்களா என. ஆனால் நாங்கள் நண்பர்கள் சேர்ந்து ஏற்கெனவே ப்ளாக் யூனியன், ஆசார்ய ஹ்ருதயம், மதுரை மாநகர் என வலைப்பக்கங்கள் குழுவாக ஆரம்பித்து வெற்றிகரமாய் நடந்து கொண்டிருந்தது. பின்னர் நண்பர்கள் பிரிவில் அனைத்தும் தடம் புரண்டது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் சேர்ந்தவர்கள். ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதில் மதுரை மாநகரம் வலைப்பக்கம் மட்டும் எங்கெங்கோ வசிக்கும் மதுரையைத் தங்கள் சொந்த ஊராகக் கொண்டு இருக்கும் நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்து அவரவர் மதுரை அனுபவங்களை எழுதி வந்தோம். அதுவும் ஒவ்வொருவர் ஒவ்வொரு இடம் போகப் பின்னர் மெல்ல மெல்ல நின்று விட்டது. இந்த அனைத்துக்குழுவிலும் இருந்த நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 24. தவளை ராஜகுமாரி கதையிலிருந்து அநேகமாக அவ்வப்போதும் சில சமயங்கள் தொடர்ந்தும் எங்கள் ப்ளாகிற்கு வருகிறேன். இந்த மாதிரியான ஒரு அமைப்பில் அப்போது வரவில்லை இல்லையா? திடீர்னு கேஜிஜி தான் ஒரு வாரம் "திங்க" பதிவு எழுதிட்டு என்னிடமும் மும்பை சட்னி (பாம்பேசட்னி) குறித்து எழுதச் சொல்லிக் கேட்டார். அவ்வப்போது மைக்ரோவேவில் காஃபி போடுவதும் அப்போப் பால்காரப் பேயார் வந்ததும் குறித்து எழுதுவார். ஶ்ரீராம் எப்போலேருந்து வர ஆரம்பிச்சார்னு தெரியலை. முன்னெல்லாம் ஞாயிறு படம் போடும்போது நானும் போட்டிப் படம் போடுவேன். கேஜிஎஸ் அப்போது அடிக்கடி படங்கள், கணக்குகள்னு போடுவார். காசு எழுதினதாக நினைவில் இல்லை. கேஜிஒய் "ராமன்" என்னும் பெயரில் எழுதி இருப்பார். ஶ்ரீராம் எப்போ எழுத ஆரம்பிச்சார்/அல்லது நான் எப்போலேருந்து ஶ்ரீராமின் எழுத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் அவர் அப்பாவின் எழுத்துகள் அவ்வப்போது "பாஹே" என்னும் பெயரில் வரும். பாஹே என்பது ஶ்ரீராமின் அப்பாவுக்கான புனைபெயர் என்பதும் அவர் அப்பா பெயரின் முதல் எழுத்தும், அம்மா பெயரின் முதல் எழுத்தும் இணைந்து "பாஹே" என்பதைத் திரு விஸ்வேஸ்வரன் சொன்ன நினைவு. அவரும் அவ்வப்போது அப்போதெல்லாம் எழுதுவார். ஊட்டியின் தோட்டங்கள் குறித்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணன் விஸ்வேஸ்வரன் எங்கள் Blog பதிவுகளில் ஆரம்ப வருடங்களில் அதிகம் பங்கேற்றதில்லை.

   நீக்கு
  2. இருக்கலாம். ஆனால் அவர் ஊட்டியில் தான் இருந்ததாகவும் அரவங்காட்டில் எங்கள் குடியிருப்பு எங்கே இருந்தது என்பது பற்றியும் என்னிடம் மெயில் மூலம் விசாரித்திருந்தார். ஆகவே அவரும் ஆசிரியர்களில் ஒருவரோ என நினைத்தேன். என்றாலும் ஒரு சில பதிவுகள் அவர் எழுதியதாகவும் நினைவு. எப்போனு குறிப்பாத் தெரியலை.

   நீக்கு
 25. கடுமையான பிரச்னைகளில் சிக்கி இருக்கேன். எண் 3999. என்ன பதில் வருதுனு பார்க்கக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு ஸ்கிரீன் ஷாட் அனுப்புகிறேன். அதில், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா என்று படித்துப் பாருங்கள். (குறிப்பு :அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து படிக்கவும். உங்கள் பிரச்சனைக்கு நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும்)

   நீக்கு
  2. வாட்சப், மெயில் மற்றும் இங்கேயும் நீங்கள் கொடுத்திருக்கும் அருமருந்துக்கு மிக்க நன்றி. இது தெய்வத்தின் கருணையாலேயே நிறைவேற வேண்டுமெனப் பிரார்த்தித்துக்கொண்டே இருக்கேன். மற்றபடி ஆறுதலான வார்த்தைகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பதற்கு மீண்டும் மீண்டும் நன்றி. எப்போதுமே நான் எனக்கு ஒரு பிரச்னை வந்தால் என்னை விட அதிக சிரமப்படுபவர்களை நினைத்துக் கொண்டு நாம் எவ்வளவோ பரவாயில்லை என நினைக்கும் ரகம். ஆகவே விரைவில் இதிலிருந்தும் வெளியே வரும்படி ஆண்டவன் கருணை வைப்பான் என்று முழுமையாக நம்புகிறேன். நன்றி. வணக்கம்.

   நீக்கு
 26. சிங்கத்துக்கு முன்னால் குட்டி வாத்து ஒண்ணு இருக்கு.

  பொம்மை? கையைப் பிடித்து இழுக்கும் குழந்தைக்கு இது அடிக்கடி பரிச்சயமோ?

  ஹிஹிஹி, குட்டியார் அம்மா/அப்பா வாலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுகிறார்.

  பதிலளிநீக்கு
 27. ஜோதிடம் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் எதிர்மறை விடயங்கள் மறைக்கப்படும்போது.

  நாடி ஜோதிடம் / ஓலை சுவடு ஜோதிடம் எனக்கு இன்னமும் ஆச்சரியமே.

  நம்பிக்கைதானே வாழ்க்கை - நம் வாழ்க்கை நம் கையில் என்பது ஒருவேளை கைரேகை ஜோதிடத்தை குறித்த குறிப்பாக இருக்குமோ.
  கோ.

  பதிலளிநீக்கு
 28. சுவாரசியமான கேள்வி பதில்கள். படங்கள் ரசனை.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் சகோதரரே

  ஜோதிட பலாபலன்கள் அதன் விபரங்கள் என அனைத்தும் அருமை.

  "புலி பசித்தாலும் புல்லை தின்னாது. ஆனால் நான் அப்படியில்லை...! எது கிடைத்தாலும்,நீ பொம்மையாக இருந்தாலும் அதை கொன்று தின்று பார்ப்போம் என முயற்சித்து விடுவேன்..." என்கிறாரோ காட்டு ராஜா.

  என்னுடன் தைரியமாக கை குலுக்கும் நீ நான் கைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி விடுவேனோ என்ற பயமேதும் இல்லாமல், உன் முயற்சியால் காலூன்றியும் நிலையாக நிற்கிறாய்..சபாஷ் " என்கிறதோ பூனையார்.

  "அம்மா.. என்னால் உன் வால் பிடித்து மேலே ஏற முடியவில்லை..!!!மேல் படத்தில் அந்த குழந்தைக்கு பூனையார் கை கொடுப்பது போல் நீ உன் கை கொடுத்து உதவு என்றால், உன்னால் முடியும்..நீயாகவே முயற்சி செய்..! எனக் கூறுகிறாய். எனவே எப்படியும் முயன்று பார்க்கிறேன்...!" என்கிறாரோ நம் மூதாதையரின் வாரிசு.

  இப்படி மூன்றிலும் முயற்சியை முன்னிறுத்தி கொஞ்சம் வேறு மாதிரி எழுதினேன்.அதை அனுப்பவதற்குள் மகனிடமிருந்து ஃபோன் கால் வந்து விட பேசி முடிப்பதற்குள் எழுதியது அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டது. அப்போது எழுதியதில் நினைவிலிருப்பதை நானும் முயற்சித்து எழுதி இருக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் .. !! கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!