திங்கள், 24 ஜனவரி, 2022

"திங்க"க்கிழமை : வாங்கிபாத் - ஷ்யாமளா வெங்கடராமன் ரெஸிப்பி

 வாங்கிபாத்

ஷ்யாமளா வெங்கடராமன் கத்தரிக்காய்...............1/2கிலோ
காய்ந்த மிளகாய்.......10
கொத்தமல்லி.............2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு........2டேபிள்ஸ்பூன்
வெந்தயம்................1/2ஸ்பூன்
வேர்கடலை............1கைப்பிடி
கருவேப்பிலை........1கொத்து
சன் பிளவர் ஆயில்
கடுகு
தேங்காய்துருவல்

செய்முறை :

கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

  வாணலியில் எண்ணெய் விட்டு  அதில் மிளகாய் கொத்தமல்லி கடலைப்பருப்பு வெந்தயம்ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.  அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.   கத்தரிக்காயை எண்ணை விட்டு, கடுகு நன்கு வெடித்ததும் வதக்கிய காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை போடவும். , தேவையான உப்பு போட வேண்டும்.  கறிவேப்பிலை தேங்காய் துருவல் சேர்க்கவேண்டும்.

சாதத்தை குக்கரில் வடித்து அகலமான பாத்திரத்தில் போட்டு ஆறவைக்கவும்.
அதில் வதக்கிய கத்தரிக்காயை போட்டு ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாகக் கிளறி, அதில் வேர்கடலையை தூவி, கருவேப்பிலை போட்டு கிளறவும். இப்பொழுது வாங்கி பாத் ரெடி.  அதற்கு தேவையான சைட் டிஷ் அப்பளம் அல்லது வடாம் மிக நன்றாக இருக்கும். 29 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  என்றும் ஆரோக்கிய வாழ்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான வாங்கி பாத் செய்முறையும் படங்களும்
  அருமை. திருமதி ஸ்யாமளா வெங்கட் ராமனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. இதை எங்க வூட்ல் கத்தரிக்காய் சாதம் என சொல்லுவோம்

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல செய்முறை. ரொம்ப அபூர்வமாக நான் வாங்கிபாத் சாப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை.. எனக்கும் பிடிக்கும் என்றாலும் நானும் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகின்றன!

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இன்றைய திங்கப்பதிவில் திருமதி ஸ்யாமளா வெங்கட்ராமன் அவர்களின் ரெஸிபியான வாங்கி பாத் செய்முறை, மற்றும் படங்கள் நல்ல அழகுடன் தெளிவாக உள்ளது. அவருக்கு மனம் நிறைந்த நன்றி. தங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வாங்கி பாத் சூப்பர். நல்லா சொல்லிருக்காங்க. நம் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். வீட்டில் செய்வதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 8. சுருக்கமாக அருமை பிரியாணி போலவே தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம்.
  வாங்கி பாத் அருமை. படங்களோடு செய்முறை விளக்கம் சிறப்பு.
  இந்த வாங்கி பாத் என்னும் கத்தரிக்காய் சாதத்திற்கு நான் வெங்காயமும் சேர்ப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேங்காய் துருவலையும் வறுத்து சிறிது கரம் மசாலாவும் சேர்த்து வெங்காயம் வதக்கிப் போட்டு செய்வேன் சுலபமான முறை எழுதி இருக்கிறார்கள் நன்று

   நீக்கு
  2. ஆமாம், நானும் வெங்காயம் சேர்ப்பேன். அதோடு கோடா மசாலா என்னும் மராட்டியர்கள் பயன்படுத்தும் மசாலாப் பொடியும் செய்து சேர்ப்பேன். இது நம்ம ஊர்ப் பொடிக்கத்திரிக்காய்க் கறியோடு சேர்த்துச் செய்யும் முறை. ஆசாரக்காரங்களுக்கு இதுவும் பிடிக்கும்.

   நீக்கு
 10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 11. நடுவில கொஞ்சம் படத்தை காணோம்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 12. வாங்கி பாத் செய்முறை குறிப்பு நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. I use Kodak masala. Will make with different masala mix. This is.podi thoovi pannum method. Test!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி, கோடா மசாலா என்பது கோடக் மசாலானு வந்திருக்கு டோய்! ஆனா எப்படி இருந்தாலும் மொபைல் மூலம் கருத்துச் சொன்னது வந்துடுச்சே!

   நீக்கு
 14. "வாங்கி பாத்" - முதன் முறையில் அறிமுகமாகி இருக்கின்றது, கத்தரிக்காயில் எது செய்தாலும் பிடிக்கும் எனக்கு. எங்கே கிடைக்கும் என்று சொன்னால் "வாங்கி பாத்துட்டு" டேஸ்ட் எப்படினு சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 15. சுவையான வாங்கிபாத் செய்முறை நன்று. பல வருடங்களுக்கு முன்னர் சாப்பிட்டது. பொதுவாக கத்திரிக்காய் பிடிப்பதில்லை என்பதால் இந்த வாங்கிபாத் செய்வதும் இல்லை.

  பதிலளிநீக்கு
 16. வாங்கி பாத் செய்முறை எளிமையாக உள்ளது. ரெசிபிக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!