திங்கள், 3 ஜனவரி, 2022

"திங்க"க்கிழமை : முள்ளங்கிச் சட்னி - துரை செல்வராஜூ ரெஸிப்பி

 

முள்ளங்கிச் சட்னி

துரை செல்வராஜூ 

*** *** ***
 
முள்ளங்கி (நடுத்தரமானது)  - 1
வெள்ளை உளுத்தம் பருப்பு - 2  Tsp
பச்சை மிளகாய் - 2/3
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி  - கட்டை விரலளவு
பூண்டு - 5 இதழ்கள்
உப்பு - தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு :-
நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மிதமான சூட்டில் உளுத்தம் பருப்பை வறுத்துக் கொள்ளவும்.. காலகாலமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்ற மாதிரி பொன்னிறத்துக்காக எல்லாம் காத்துக் கொண்டிருக்காமல் இளம் பழுப்பு நிறத்தோடு நிறுத்திக் கொண்டு தனியே எடுத்து ஆற விடவும்...
( பழுப்பு நிறத் தோடு எங்கே?.. - என்று யாரும் கேட்காதிருப்பீர்களாக!..)


முள்ளங்கியை நன்றாகக் கழுவிய பின் தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்..

வெங்காயம் இஞ்சி பூண்டு, மிளகாய் இவற்றையும் சுத்தம் செய்து கழுவிக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்..


மீண்டும் வாணலியை அடுப்பில் ஏற்றி நன்றாகச் சூடேறியதும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் முள்ளங்கித் துண்டுகளை மட்டும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  சில நிமிடங்களில் சற்றே வதங்கி வரும்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து வதக்கவும்.. நன்றாக வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடவும்.. 



அது ஆறுவதற்குள் ஒரு கதை..

(அட.. திங்கக் கிழமையிலயும் உன் தொந்தரவா!?.. - என்று யாரும் மலைக்காதீர்கள்.. இது வேற கதை..)

இங்கே படத்தில் உள்ளது - Arabian Chilly.. சற்று காரம் குறைவானது.. காரத்திற்காக வற மிளகாய் ( 2 அல்லது 3 ) சேர்த்துக் கொள்வது என்றால் கூடவே ஒரு தக்காளியையும் சேர்த்துக் கொண்டு வதக்கிக் கொள்ளவும்... இதே மாதிரி பெரிய வெங்காயத்துக்குப் பதிலாக சாம்பார் வெங்காயம் (4 அல்லது 5) கூட சேர்த்துக் கொள்ளலாம்.. இதனால் எல்லாம் முள்ளங்கி கோபித்துக் கொள்ளாது என்பதையும் அறியவும்..

இப்போது வதக்கி வைத்த எல்லாமும் நன்றாக ஆறியிருக்கும்..

முள்ளங்கி வகையறாக்களை மிக்ஸியில் போட்டு அவற்றுடன் வறுத்தெடுத்த உளுத்தம் பருப்பையும்  உப்பையும் போட்டு கொஞ்சமாக நீர் ஊற்றி சுழற்றி விடவும்..



நன்றாக மசிந்ததும் வேறொரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு  -
அதில் கடுகு, உ. பருப்பு, கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்டவும்..

அவ்வளவு தான் - முள்ளங்கிச் சட்னி..

இதனுடன் இட்லி, தோசையை ஒரு கை பார்க்கவும்..

85 கருத்துகள்:

  1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும்
    வேண்டற் பாற்றன்று..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆண்டின் முதல் பதிவாக இந்தக் குறிப்பு அமையும் என எதிர்பார்க்கவில்லை..

      அன்பு ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
    2. உங்களுக்கும் எங்கள் நன்றி.

      நீக்கு
  4. மாவு இல்லாமல் இட்லி சுடுவது (!) எப்படி?.? என்ற பாணியில் குழாயடி விவரிப்புகள்..

    சென்ற வாரத்தில் எனக்கு கூகுள் ஒன்றைப் பரிந்துரை செய்தது..

    Stuffing Idly..
    அதாகப்பட்டது பூரண கொழுக் கட்டை மாதிரி.. ஆனால் உள்ளீடு வேற மாதிரியானது..

    பதிலளிநீக்கு
  5. அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்..

    நேற்று நன்றாக இருந்தது வானம்.. இப்போது விடியலில் மழைத் தூறல் போல் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூறலோடு போகட்டும் அப்பா.
      பொங்கலுக்கு முன் கொஞ்சம் மழை வருவது சகஜம் தானே.

      நீக்கு
    2. நேற்று நன்றாக இருந்தது வானம்.. இப்போது விடியலில் மழைத் தூறல் போல் இருக்கின்றது..//

      துரை அண்ணா வெதர்மேன் ஏதோ சொல்லியிருக்கிறாரே!!

      கீதா

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், தொற்று இல்லாமல் பிரச்னைகள் இல்லாமல் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மனமகிழ்ச்சியுடனும் நீண்ட நாட்கள்/வருடங்கள் வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. முள்ளங்கிச் சட்னி செய்முறை பூண்டு சேர்க்காமல் செய்திருக்கேன். இப்போல்லாம் முள்ளங்கியே வாங்குவதில்லை. :( முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற ஆங்கிலக் காய்களுக்குத் தடா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னட காய்கறிகள் வாங்குவது உண்டா?

      நீக்கு
    2. ம்ஹூம், அந்த உடுப்பி ரசம் பண்ணப் பயன்படூத்தும் ஒரு மி.வ. பைதேகி/ வைதேகி! அதுவே இங்கே கேட்டால் சிரிக்கிறாங்க! காஷ்மீரி சில்லினு வாங்கிண்டு வந்து பூஞ்சக்காளான் பிடிச்சுப் போய்த் தூரப் போட்டாச்சு! நான் சமைக்கிறாப்போல் சமைச்சாலே போதும்னு முடிவு பண்ணிட்டேன். :))))))

      நீக்கு
    3. ஆமாம் கீதாக்கா, காஷ்மீரி சில்லியும், பேகெடி சில்லியும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

      என்றாலும் நான் வாங்குவதுண்டு. வெயிலில் காய வைத்துவிடுவேன். உ ர வுக்கு வறுத்துப் பொடி செய்வதுண்டு இல்லையா அப்படி பொடித்துவிட்டால் அதாவது தே எண்ணையில் வறுத்துவிட்டால் ஒன்றும் ஆவதில்லை.

      கீதா

      நீக்கு
    4. நல்ல நல்ல குறிப்புகள்..
      நன்றி..

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலைக்கான வணக்கம்.
    இறைவன் அருளால் தொற்றில்லா வாழ்வு
    தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் துரை செல்வராஜுவின்
    சமையல் குறிப்பு.
    அட! என்ன அருமையான படங்கள். !!
    செய்யத் தெரிவது ஒரு கலை என்றால் ,அதை சுத்தமாகப் படம் எடுப்பது இன்னோருகலை.

    சிறப்பாக வந்திருக்கிறது.

    முள்ளங்கி யாகச் சாப்பிட்ட காலம் போனது. இப்போது
    அதெல்லாம் பயன் படுத்துவதில்லை.
    ஆனால் துரை சொல்லி இருக்கும் முறைக்கு
    வேறு எந்த காய்கறி
    சேர்த்தும் செய்யலாம்.
    உங்கள் உ.பருப்பு பழுப்பாக வந்திருக்கிறதே!!
    இதுவே தொகையலுக்கு ஏற்றது.
    சின்ன வெங்காயம் இன்னும் வாசனை சேர்க்கும்.

    இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்தே
    இங்கு எல்லாம் செய்கிறோம்.

    அருமையான சமையல் குறிப்புக்கு அன்பு வாழ்த்துகள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ வல்லியம்மா..

      //அருமையான சமையல் குறிப்புக்கு அன்பு வாழ்த்துகள்..//

      அன்பின் வாழ்த்துரைக்கு நன்றியம்மா...

      நீக்கு
  10. துரை அண்ணா முள்ளங்கி சட்னி செம!! சூப்பரா செஞ்சுருக்கீங்க.

    அப்படியே இங்கு கொஞ்சம் கிண்ணத்தை நகர்த்துங்க!!!!!!

    சுவை சுவை! கலக்கறீங்க!

    நீங்கள் இடையில் கதையில் சொன்னது போலவும் சிவெ வமி போட்டும் செய்வது பெரும்பாலும். சிவெ இல்லை என்றால் பெவெ பமி யும் கூட வமி யும் போட்டு என்று..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமாகச் செய்யலாம்..
      அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து பார்க்கலாம்..

      நீக்கு
  11. பூண்டு வெங்காயம் சேர்க்க முடியவில்லை என்றால் பெருங்காயம் போட்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வித்தியாசமான சட்னி. செய்து பார்க்கலாம். இட்லியை விட தோசைக்கு ஒத்து வரும் என்று நினைக்கிறேன், சரியா?

    பதிலளிநீக்கு
  13. செய்முறை நன்று.

    நேற்று அரைகிலோ 10 ரூபாய்க்கு முள்ளங்கி வாங்கிவந்தேன். சாம்பார், வெண்பொங்கலுக்காக. வேறு எதற்கும் முள்ளங்கியை உபயோகித்ததில்லை.

    சட்னி செய்வேனான்னு தெரியலை.

    இங்க விதவிதமான மிளகாய்கள் கிடைக்கிறது. ஆனால் எது காரமற்றது எனக் கண்டுபிடிப்பது சிரம்ம். காரம் முதல் படுபயங்கரக் காரம் வரை மிளகாய்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Byadagi Chilli plants begin flowering 40 days after transplantation although the majority of flowers bloom 60 to 80 days after transplanting. The chilli pods are harvested from January to May.[6] The annual production of Byadagi Chilli is around 21,000 kg.[7] The quality of chilli varieties is measured in terms of the extractable red colour pigment; this colour is measured in ASTA colour units. Byadagi Chilli has an ASTA colour value of 156.9.[7] The higher the ASTA colour unit, the better the quality of chilli and therefore the higher the price. The Byadagi chilli has negligible capsaicin content making it less pungent than other chilli varieties.[7]

      நீக்கு
    2. முள்ளங்கி ரொட்டி பண்ணலாம். முள்ளங்கி பராத்தா பண்ணலாம். கறி, கூட்டு பண்ணலாம். துருவி எ.ப. பிழிந்து கொண்டு சாலடாகச் சாப்பிடலாம். பச்சையாகவே சாப்பிடலாம். அப்படியே சாப்பிடலாம். :)

      நீக்கு
    3. வெண்பொங்கலுக்கு முள்ளங்கியா? என்ன? எப்படி?

      நீக்கு
    4. ஸ்ரீராம், நெல்லை சொல்லியிருப்பது முள்ளங்கி போட்ட சாம்பார் - வெண்பொங்கலுக்குச் சாம்பார் செய்ய...

      கீதா

      நீக்கு
    5. நெல்லை, மிளகாய்ல ஒரு மாதிரி இளம் பச்சையுமில்லாமல் மஞ்சளுமில்லாமல் ரொம்பவே லைட் கலர்ல இருக்குமே பஜ்ஜி மிளகாய் அது காரமே இல்லை. அது பொடி பொடியாகக் கட் செய்து எண்ணையில் தாளித்து தயிர் சாதத்தில் கலந்து பாருங்க சுவை செமையா இருக்கும். அது போல ஃப்ரைட் ரைஸ், காய்களோடு, சலாடில்...மிளகாய் ஊறுகாய் நல்லா இருக்கும்

      கீதா

      நீக்கு
    6. பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி...

      நீக்கு
  14. எளிதான செய்முறை...

    ஒரு கை பார்க்க முடியாது...! காரணம் :-

    946

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
      கழிபேர் இரையான்கண் நோய்.


      மு.வரதராசன் விளக்கம்:
      குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

      நீக்கு
    2. மு. வரதராசனார் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

      நீக்கு
    3. டிடி முள்ளங்கி நல்லதில்லையா என்ன?!!! அதுவும் நம்மைப் போன்ற இனியவர்களுக்கு?!!!

      முள்ளங்கி நல்லதுதானே.

      கீதா

      நீக்கு
    4. // முள்ளங்கி நல்லதுதானே.//

      கீழே விவரம் சொல்லியிருக்கின்றேன்..

      நீக்கு
    5. பார்த்துவிட்டேன் அண்ணா. ஆமாம் அப்படியும் சொல்லப்படுகிறது. விளாம்பழம் துவர்ப்பும் சேர்த்துக் கொள்ளலாம்

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  15. சுருக்கமான செய்முறை அருமை ஜி.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டின் முதல் சமையல் குறிப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    டெல்லி-பெங்களூர் எனப் பறந்துகொண்டிருந்ததால் புத்தாண்டு புகுந்ததைக் கவனிக்கவில்லை! இண்டிகோ-வாவது ’ஹேப்பி நியூ இயர்’ என்று சொல்லியிருக்கலாம். ஒரே சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ‘கருப்புக் காப்பி’ கொடுத்துவிட்டு நகர்ந்தாள் அந்த சிவப்புப் பெண்...ம்ஹ்ம்..!

    சனிக்கிழமை இவ்வளவு சுவாரஸ்யமான எபி புள்ளி விபரங்களைக் கொண்டிருக்கும் என்று எவரும் குறி சொல்லவில்லையே. இப்பத்தான் படித்துப் பார்த்தேன். ’படைப்பாளி’களுக்குப் பரிசுகளா? இது ’தமிழ் கல்ச்ச’ரிலே கிடையாதே! 2021 மெச்சத் தகுந்த வருடமா இருந்திருக்கு போலிருக்கிறதே.

    2022 எப்படியாவது நல்லபேர் வாங்கிடணுமேன்னு கவலை மோத ஆரம்பிச்சிருச்சு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி, இன்டிகோவில் எங்களுக்குக் கறுப்புக்காஃபி எல்லாம் கொடுப்பதில்லை. இப்போல்லாம் காம்ப்லிமென்ட்ரி ப்ரெக்ஃபாஸ்ட் அல்லது டின்னர் கொடுத்துடறாங்க. போஹா என்னமோ நல்லாவே இருக்கு. உப்புமாவும் முந்திரியில் குளிச்சிருக்கும். :))))

      நீக்கு
    2. எங்களுக்கும் காப்பி/ஜிஞ்ஜர் டீயோடு , பிஸ்தா சாண்ட்விச், பிஸ்கட் டின் கிடைத்தன - எங்களது சாய்ஸ்படி. காப்பி கருப்பா இருந்தாலே போதும், க்ரீமர் கண்றாவியெல்லாம் போட்டுக் குலுக்கவேண்டாமென்றேன் - போன தடவை அனுபவம் அப்படி!

      நீக்கு
    3. 2022 எப்படியாவது நல்லபேர் வாங்கிடணுமேன்னு கவலை மோத ஆரம்பிச்சிருச்சு..!//

      வாங்க ஏகாந்தன் அண்ணா . புத்தாண்டு வாழ்த்துகள். நீங்களும் களத்துல குதிச்சுருங்க!!!

      கீதா

      நீக்கு
    4. பயப்படாம குதிச்சுக் கலக்குங்க!...

      நீக்கு
    5. @ கீதா, @ துரை செல்வராஜு:

      நன்றி ! நன்றி ! 22-ஐ ஒரு கை பார்த்திடுவோம்..

      நீக்கு
    6. @ஏகாந்தன், பிஸ்கட் டின்னா? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! புகை வருதே எனக்கு! :))))))

      நீக்கு
    7. இண்டிகோவில் நான் விரும்பும் ஸ்னாக் காம்பினேஷன்: gently roasted, mildly salted cashews அல்லது their chocolate cookies/biscuits (Hello Delhi!) -இரண்டுமே அழகான டப்பாவில் வரும்! ஒரு ஸ்னாப் ஷாட் இங்கு போட்டு உங்களுக்கு மேலும் புகை வரச் செய்ய வழி தெரியவில்லை!

      நான் ஸ்லீக்கான டின்னிலிருந்து லாவகமாக கேஷ்யூவை உருவி வாயில் போட்டு அசைபோடுவவதை, அக்கம்பக்கம் பக்கவாட்டில் பார்க்கும். ஆனால் வாங்காது! 50 கிராம் டின் 150 ரூ.வாச்சே! (நாகர்கோவில் இண்டியா ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் தயாரிப்பு)

      நீக்கு
    8. ம்ம்ம்ம்ம், நீங்க பிசினஸ் க்ளாசில் பயணம் செய்வீங்க போல! :)அந்த பிஸ்கட் ஒன்றே ஒன்றைக் கொடுத்துட்டுப் பிரமாதமா வர்ணிப்பாங்க பாருங்க. எரிச்சலா வரும். ஆனால் பிஸ்கட் நல்ல பெரிதாகத் தான் இருக்கும். இங்கே ஸ்நாப் ஷாட் போட முடியாது தான். தனியா இதுக்குனு ஒரு பதிவு போடுங்க! புகை விட்டுக்கொண்டே பார்த்துக்கறேன். :)))))

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. தம்பி,

    திங்களும் நானே
    செவ்வாயும் நானேவா?

    ஜமாயுங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தங்களுடைய ஆசிகள் தான் அண்ணா...
      நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  20. மூலி சட்னி நன்றாக இருக்கும்போலிருக்கே.. அட்டெம்ப்ட் பண்ணுவோம்!
    முள்ளங்கியைக் குட்டையாய்க் காண்பிக்கும் மிளகாய்!

    பதிலளிநீக்கு
  21. இன்னும் சற்று நேரத்தில் வருகின்றேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்னி நன்றாக இருக்கிறது இரண்டொரு துளி எலுமிச்சை சாறு சேர்த்தால் இன்னும் கூடுதல் ருசியாக இருக்கும் எல்லா துறையிலும் புகுந்து விளையாடுகிறார்கள் கெட்டியாக துவையல் மாதிரி செய்தோமானால் சிறிது புலி கூட சேர்க்கலாம் சாதத்தில் பிசைந்து கொள்ள காரசாரமாக தயார் செய்யலாம் முள்ளங்கியில் பலவிதங்களில் அருமை அன்புடன்

      நீக்கு
    2. ஒரு வார்த்தை சரியாக அச்சாகவில்லை புலி இல்லை அது

      நீக்கு
    3. இப்படியான பிழைகள் எல்லாருக்கும் நேர்கின்றன அம்மா..

      நீக்கு
  22. Stuffed Idly..
    அதாகப்பட்டது பூரண கொழுக் கட்டை மாதிரி.. ஆனால் உள்ளீடு வேற மாதிரியானது..

    @ கௌதமன்...
    // எழுதி அனுப்புங்களேன்..//

    வேண்டாம்.. அது இறைச்சி சம்பந்தப்பட்டது!...

    பதிலளிநீக்கு
  23. எளியேனது குறிப்புக்கு இத்தனை வரவேற்பு கண்டு மிக்க மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு
  24. இந்தக் குறிப்பினை முன்னெடுத்து அடுத்தடுத்த செய்முறைகளுக்குக் கொண்டு சென்ற கீதா, வல்லியம்மா, காமாட்சி அம்மா மற்றும் கீதாக்கா அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  25. திருப்பாவைப் (22) பதிவினை நிறைவு செய்வதற்கு நேரமாகி விட்டது.. எனவே தான் தாமதம்.. மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  26. @ கீதா..

    //முள்ளங்கி நல்லதுதானே..//

    சுரைக்காய்,முள்ளங்கி,வாழைத் தண்டு இவற்றால் சிறுநீரகக் கற்கள் கரைகின்றன என்கின்றனர்...

    கொட்டைப் பாக்கு, வாழைப் பூ இவற்றின் துவர்ப்பும் உடலுக்கு நல்லது தான்...

    பதிலளிநீக்கு
  27. முள்ளங்கி சட்னி சொன்னவிதம் அருமை.

    எமக்கு காரசட்னி பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  28. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்கப் பதிவில் அதுவும் புது வருட ஆரம்பத்தில் வந்த முதல் திங்களில் தங்கள் சமையல் ரெசிபி வந்துள்ளதற்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    முள்ளங்கி சட்னி படங்களுடன் செய்முறை விளக்கமும் அருமையாக உள்ளது.1 முதல் 4 வரை அதன் ஸ்டெப்ஸ் படங்களை தொகுத்து இணைத்து விளக்கமாக எழுதியது மிகவும் நன்றாக உள்ளது. தங்கள் செய்முறையுடன் செய்வது இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள வெகு பொருத்தமாக இருக்கும். அருமையான ரெசிபிக்கு மிக்க நன்றி.

    நானும் முள்ளங்கியை சமையலில் பல விதங்களில் பயன்படுத்தும் போது, இப்படிச் செய்வேன். வெறும் உ. ப வுடன் சிறிது க. பா.வையும் சேர்த்து வறுத்துக் கொண்டு, கொஞ்சம் புளியும் வைத்து அரைத்தால் சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம். அதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது காயுடன் தயிர் பச்சடியும் பொருத்தமாக இருக்கும்.

    இன்று சில சூழ்நிலைகளினால், நான் வலைத்தளத்திற்கு தாமதமாக வந்து கருத்துரைக்கிறேன். மன்னிக்கவும். நாளைய உங்கள் கதை பகிர்வுக்கும் என மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் இங்கு வந்து சிறப்பித்துச் சொல்வதே எங்களுக்கு மகிழ்ச்சி..

      கால தாமதத்துக்கு மன்னிப்பு என்று எழுதுவதெல்லாம் வருத்தமாக இருக்கின்றது..

      நான் குவைத்தில் இருந்த போது இந்தப் பக்குவம் என் ஒருவனுக்குப் போதுமானதாக இருந்தது..

      அவசரத்துக்கு 15/20 நிமிடங்களில் செய்து விடலாம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  29. முள்ளங்கியில் சட்னி - படிக்கும்போதே செய்து பார்க்க தோன்றுகிறது. நகைச்சுவை உணர்வு கலந்து விளக்கம் சொன்னது சிறப்பு. தொடரட்டும் சமையல் குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட். தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும் எபியில் ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன்..

      தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. @ கமலா ஹரிஹரன்..

    // நாளைய உங்கள் கதை பகிர்வுக்கும் .. //

    நாளைக்கும் எனது பதிவு என்று தங்களுக்கு எப்படித் தெரியும்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      சென்ற வருட இறுதியில் சகோதரர் கௌதமன் அவர்கள் வரும் புது வருடம் முதல் செவ்வாய் அன்று நீங்கள் எழுதிய கதை என சொன்னதாக நினைவு. அதனால் குறிப்பிட்டேன். அதன்படி வெளியாகியுள்ள நீங்கள் தந்திருக்கும் அருமையான கதையை படித்து விட்டு வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஓ!..அதுதான் விஷயமா!...

      நன்றி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!