ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 16.

 

தென்னை மர நிழல் சாலை 


தனி ஒருவன் 


யாரையும் காணோமே !


கெங்கா -- - - ?
 எலக்டிரானிக்ஸ் கடையா !! அப்பாடி - சாலையில் ஆள் நடமாட்டம் இருக்கு! மாட மாளிகைகளும் உள்ளன தொடரும் 

54 கருத்துகள்:

 1. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்..

  குறள் நெறி வாழ்க.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  தொற்றில்லா வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. தென்னை மர நிழல் சாலை அழகு. கிராமங்களும்,
  பெரிய பங்களோ எல்லாம் ஊரின் செழிப்பைக் காட்டுகின்றன.
  பார்த்தால் அரபு நாட்டுப் பணம்
  போலத் தெரிகிறது:)

  நம் ஊர் இந்திரா நகரில் இது போல கறுப்புக் கண்ணாடி வீடு
  பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. தென்னைமர நிழல்சாலை இதம். மாடமாளிகைகள் இது இப்பொழுது இங்கும் பல ஊர்களிலும். இருப்பதற்கு அளவான வீடு வேண்டும் இப்படியும் வேண்டுமா ? படங்கள் பல செய்திகள் சொல்கின்றன.
  நேற்று மாலை சிறிய மலைகள்,பாறைகள்,பசுமை வயல்கள்,தாண்டி உடவளவைக்கு அண்மையில் வந்துள்ளேன் இங்கு நீர் தேக்கம், யங்கிள் சபாரி இருக்கிறது. நாளை திரும்புவேன்.மீண்டும் இரு நாட்களில் ஒரு பயணம் எமது ஊருக்கு. பயணங்கள் தொடர்கதை.....:) மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
  உள்ளூர் கிராமங்களின் அழகிய சாலையும் சாலையோர அழகிய வீடுகளும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களுமாய் அழகிய புகைப்படங்கள்!!

  பதிலளிநீக்கு
 7. தருமப் பிரபூ!!..
  அங்ஙனேயும் ஆக்ரமிச்சோ!..

  பதிலளிநீக்கு
 8. இப்படியாகத் தானே...
  ஆதௌ கீர்த்தனாரம்பத்தில்
  கீரிப்பாறை புண்யக்ஷேத்திர
  மஹாத்மியத்தில்....

  பதிலளிநீக்கு
 9. கீரிப்பாறையிலிருந்து ரிட்டர்னா!!! இறங்கி, எட்டாமடை வந்தாச்சு போல!! அழகியபாண்டிபுரம் ஊர்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அப்படித்தான் இருக்கும் போலிருக்கு!!

   நீக்கு
  2. அழகிய பாண்டியபுரம் தானே "ரோஜா" படத்தில் வந்தது? அல்லது திருநெல்வேலியின் சுந்தரபாண்டிய புரமா?

   நீக்கு
  3. இல்லை கீதாக்கா....அது திருநெல்வேலிப் பகுதி! அந்த அருவி பாணதீர்த்தம் சின்ன சின்ன ஆசை....முதலில் அப்புறம் பரிசல் வருவது பகுதி ஹொக்கேனக்கல்...

   மணிரத்தினம் படத்தில் எங்கள் ஊர் வருவது திருடா திருடா படத்தில். வீட்டருகில். அம்மா அப்போது மணிரத்னம் சுஹாசினி எல்லாரையும் பார்த்தாங்களாம் க்ரேன் ஷாட் எடுத்ததையும் சொன்னார்.

   கீதா

   நீக்கு
  4. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 10. தென்னைமர நிழல் சாலை அழகு!

  ரோடு எல்லாம் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மழை பெய்து ஓய்ந்த பின் போயிருக்கீங்க என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கு முன்பே போனது என்று நினைக்கிறேன். may be 2020 Nov

   நீக்கு
  2. ஒரு வருஷத்துக்குக் கிட்டத்தட்ட இருக்கும் இல்லையோ?

   நீக்கு
  3. கௌ அண்ணா இந்த மழையைச் சொல்லவில்லை. அவர் போன வருடம் தெரியுமே. அப்போது வாட்சப்பில் படங்கள் போட்டு உங்கள் ஊரில்தான் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தார் கேஜி அண்ணா.

   அந்தச் சமயத்திலும் மழைக்குப் பின் போயிருப்பார் என்றே நினைக்கிறேன். அப்போதும் எங்கள் ஊருக்குள் ஒரு பகுதியில் மட்டும் குளம் ஓவர்ஃப்ளோ ஆகிக் கொஞ்சம் தண்ணீர் வந்தது..சமீபத்தது போல் இல்லை.

   கீதாக்கா ஆமாம் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.

   கீதா

   நீக்கு
 11. அழகான பசுமை சூழ்ந்த குளிர்ந்த மனதைக்குளிர்விக்கும் சுற்று வட்டாரம். அங்கேயே தங்கலாம்னு இருக்கும். ஆனால் நம்ம ஊர் அது இல்லை என்பதால் திரும்பியே ஆகணும். இப்படியான இடங்கள் நமக்குச் சொந்தமாக இல்லையேனு தோணும்.

  பதிலளிநீக்கு
 12. கிராமப்புறமானாலும் கண்களைப் பறிக்கும் சுத்தம். நம் மக்கள் அங்கே போய்க் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைல இருந்தவங்கள்லாம் மதுரையை விட்டுப்போயிட்டு, பலகாலம் போய்த் திரும்பி வந்து, அதைக்காணோம் இதைக்காணோம் இந்தச் சாப்பாடு சரியில்லை, அது சரியில்லை என்று புலம்பவேண்டியது. கிராமத்தில் இருப்பவர்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்தால், அந்தப் பணத்தில் கிராமமும் மாறிவிடும்

   நீக்கு
  2. ஹாஹாஹாஹா நெல்லை....நீங்கள் சொல்லியிருக்கறது சரிதான்...கிராமத்தில் இருக்கறவங்க சென்னை நோக்கி என்று....

   சமீபத்தில் நானும் புலம்பத்தானே செய்தேன். ஆனால் நான் அங்கு இருந்திருந்தாலும் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. நான் என்ன அரசியல்வாதியா இல்லை பஞ்சாயத்து தலைவரா!!!!

   இந்த கிராமம் டு சிட்டி எக்சோடஸ் பத்தி அக்ரிகல்சுரல் எக்கனாமிக்ஸ் பாடத்தில் பெரிய சாப்டரே இருந்தது. அப்போதே...35 வருடங்கள் முன்பே!!

   கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் பேலன்ஸ் செய்யலாம். ஆனால் அப்படியான சிந்தனைகள் உள்ளவங்க செயலபடுத்தும் பதவியில் இருக்காங்களா சொல்லுங்க?

   கீதா

   நீக்கு
  3. நேற்று என் அப்பாவின் அத்தை பையன் பேசிக் கொண்டிருந்தார். மதுரைக்காரர்.

   அவரது பெரிய மகன் சின்னவர்தான் ஆனால் நல்ல பொசிஷனில், (மத்திய அரசு) ஒரு இன்ஸ்டிட்யூட்டில் பணி. டெக்னிக்கல் ஆராய்ச்சி. ஆடிட்டிங்க் செல்ல வேண்டி இருந்ததில் அவர் எதுவும் எழுத முடியாது. சைன் மட்டும் தான் போட முடியும். ஏகப்பட்ட ஊழல். எதையும் குறிப்பிட முடியாது!!!! இதுதான் நிலைமை. பையன் வருத்தப்பட்டுச் சொன்னதை மாமா என்னிடம் சொல்லிப் புலம்பினார்! வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்க நம்மால்?

   கீதா

   நீக்கு
 13. @ கீதாக்கா

  / நான் திருக்குறள் திருமண மண்டபம்னு படிச்சேன். :(..//

  யாரும் யார் கூடவும் கூடலாம்..
  கூவி முடித்ததும் முறித்துக் கொண்டு ஓடலாம்!..

  மேற்கத்திய நாகரிகம் ஆங்கில வழியாக நமக்களித்த பரிசு -
  கல்யாண பந்தமின்றி கூடி வாழ்வது...

  வெள்ளையன் விட்டுச் சென்ற வியாதி..

  இதிலே இது ஒரு கேடு!..

  பதிலளிநீக்கு
 14. குடும்பம் என்பதே சமஸ்கிருத வார்த்தை..

  இவனுவ சொல்றானுவோ அது பூட்ட கேஸ்..ந்னு!..

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நல்வரவு...

   வெகு நாட்களுக்குப் பிறகு தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..

   நலமெலாம் வாழ்க...

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   நலமாக உள்ளீர்களா? உங்கள் வருகை எங்களுக்கு மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. சகோ துரை செல்வராஜூ உங்கள் அன்பான வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
   கமலா , நலமாக இருக்கிறேன்.
   முடிந்த போது எல்லாம் வருகிறேன்.
   மகன், மருமகள், பேரன் இருக்கிறார்கள்.

   கெளதமன் சார் நன்றி.
   நேற்று கீரிபாறை தெருக்களும் , வீடுகளும் நன்றாக இருக்கிறது என்று பின்னூட்டம் போட்டேன், வரவே இல்லை.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  வழக்கம் போல் கீரிப்பாறை படங்கள் அனைத்தும் இயற்கை வனப்புடன் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. நேற்று என்னால் வர இயலவில்லை. இன்று வந்து படங்களை/இயற்கையை ரசித்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. படங்களை பார்த்தேன் ரசித்தேன்... தொடரட்டும் பயணம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!