திங்கள், 10 ஜனவரி, 2022

"திங்க"க்கிழமை :  வாழைப்பழ கேக் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

வாழைப்பழ கேக்


இது என் அக்காவின் பேத்தி செய்த ரெஸிப்பி.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு  - 1 கப்
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - அளவைப் பொறுத்து 3 அல்லது 4
உடைத்த பாதாம் & வால் நட்ஸ் -  1 கப்
சர்க்கரை - 1 கப் அட ஈவ்
பட்டை பொடி - 1/2டீ ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1/2 கப்
வெனிலா எஸென்ஸ் 1/2 டீ ஸ்பூன்
பேக்கிங் பவுடர் 1 1/2 டீ ஸ்பூன்
பேக்கிங் சோடா 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் கோதுமை மாவு, ஆல் பர்பஸ் மாவு, பட்டை பொடி, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவைகளை கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் வாழைப்பழங்களை உரித்து போட்டு, நன்கு மசித்துக் கொள்ளவும். 

பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். 

அதன் பிறகு குக்கிங் ஆயிலை சேர்த்து கலக்கவும்.

பின்னர் சலித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் உடைத்த பாதாம், வால் நட் இவைகளை சேர்த்து கலக்கவும். 

இதற்கிடையில் அவனை (Oven) 10 நிமிடங்களுக்கு 350°(F)க்கு ப்ரீ ஹீட் பண்ணி தயாராக வைத்துக் கொள்ளவும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு வாழைப்பழ மாவு கலவையை 
ஒரு பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி அல்லது மாவை தூவி ஊற்றி அவனுக்குள் வைத்து 350°(F) இல் இருபது நிமிடங்களுக்கு பேக் பண்ணவும்.  பட்டர் பேப்பரிலும் ஊற்றலாம். இருபது நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஒரு டூத் பிக் அல்லது கத்தியை தேங்கியுள்ள நுழைத்து வெளியே எடுத்தால் எதுவும் ஒட்டியிருக்க கூடாது. கேக்கில் மேல் புறம் கோல்டன் ப்ரவுனில் இருப்பதும் ஒரு அடையாளம்.

முட்டையில்லாத, வெண்ணெய் இல்லாத கேக்கை விநாயகருக்கு படைத்து விட்டு சாப்பிடவும்.70 கருத்துகள்:

 1. விநாயகருக்கு உன்னி அப்பம் தான் பிடிக்கும். கொட்டாரக்கரை உன்னி அப்பம் பிரசித்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்னி அப்பம்?  உன்னி என்றால் சின்ன என்று அர்த்தம் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. உண்ணியப்பம் வாழைப்பழமும் அரிசி மாவும் சேர்த்து செய்வது. பணியார சட்டியில் பொரித்தெடுப்பது. யு  டியூபில் விவரங்கள் கிடைக்கும்.

   Jayakumar

   நீக்கு
  3. உன்னி அப்பம்?// தெரியாதா? செய்து எ.பி.க்கு அனுப்பி விட வேண்டியதுதான்.

   நீக்கு
  4. ஜெயகுமார் சார்.. இது தெரியாம எங்க ஊரில் பிள்ளையார் கொழுக்கட்டை, தேங்காய் வெல்ல பூரணத்தோடு செய்து பிள்ளையார் சதுர்த்திக்கு வைக்கிறார்கள்.

   நீக்கு
  5. ஸ்ரீராம் உண்ணி அப்பம் நல்ல டேஸ்டியா இருக்கும்..நெய்யில் செஞ்சால் அதன் டேஸ்ட் செம..அல்லது தேங்காய் எண்ணை

   கீதா

   நீக்கு
  6. @நெல்லை சார் 
   கொட்டாரக்கரை கணபதி கோவிலில் சன்னதிக்கு எதிரில் கிட்டத்தட்ட சன்னதி வாசலில் போத்தி அடுப்பில் உன்னி அப்பம் சுட்டுக்கொண்டிருப்பார். அதுவே பிரசாதமாக விலைக்கு கொடுக்கப்படும். அது அம்பலப்புழா பால் பாயசம் போன்று பிரசித்தமானது. அதைத்தான் இங்கு குறிப்பிட்டேன். 

   Jayakumar

   நீக்கு
  7. https://english.mathrubhumi.com/travel/pilgrimage/of-small-appam-and-kottarakkara-1.34172

   நீக்கு
  8. கொட்டாரக்கரை கணபதி கோவிலில் சன்னதிக்கு எதிரில் கிட்டத்தட்ட சன்னதி வாசலில் போத்தி அடுப்பில் உன்னி அப்பம் சுட்டுக்கொண்டிருப்பார். அதுவே பிரசாதமாக விலைக்கு கொடுக்கப்படும். அது அம்பலப்புழா பால் பாயசம் போன்று பிரசித்தமானது. அதைத்தான் இங்கு குறிப்பிட்டேன். //

   சில வருஷங்களாக மிஸ் செய்யும் ஒன்று.

   கீதா

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. எல்லாருக்கும் காலை வணக்கம்.

  அட! வாழைப்பழ கேக்!!

  சூப்பர்! நன்றாக இருக்கிறது பானுக்கா. உங்கள் அக்காவின் பேத்திக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரி

  தங்கள் அக்கா பேத்தியின் செய்முறையான வாழைப்பழ கேக் படங்களுடன் நன்றாக வந்துள்ளது. இது போல் நான் இதுவரை செய்ததில்லை.அவருக்கு வாழ்த்துகளைத் கூறவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  சங்கடங்கள் இல்லாத வாழ்க்கை தொடர
  இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் பானுவின் அக்கா பேத்திக்கு வாழ்த்துகள்.

  தெரிந்திருந்தால் என் பேத்தி செய்யும் சீஸ்கேக் மற்றும் குக்கீஸ் அனுப்பி இருப்பேனே.:)

  படங்கள் அருமையாக வந்திருக்கின்றன.
  அதுவும் அருமையாக
  கட் செய்து வைத்திருக்கும் ஸ்லைஸ்கள்
  மிக மிக சிறப்பு.

  அதுவும் தயாரிப்பதும் சுலபம். முட்டை இல்லை.
  எல்லோருக்கும் பிடிக்கும்.

  மிக மிகப் பிடித்த செய்முறை.
  அக்கா பேத்திக்கு அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரிந்திருந்தால் என் பேத்தி செய்யும் சீஸ்கேக் மற்றும் குக்கீஸ் அனுப்பி இருப்பேனே.:)// கைவசம் படங்கள் இருந்தால் உடனே அனுப்பி வையுங்கள். முதலில் கீதா அக்கா வின் பின்னூட்டம் என்று நினைத்தேன்.

   நீக்கு
  2. தெரிந்திருந்தால் என் பேத்தி செய்யும் சீஸ்கேக் மற்றும் குக்கீஸ் அனுப்பி இருப்பேனே.:)//

   என்ன வல்லிம்மா என்ன தயக்கம்? அனுப்புங்க சீக்கிரம்.

   மகன் எனக்கு சீஸ் கேக் அவன் செஞ்சது சொல்லி நானும் செய்தேன். ஆனால் அது எல்லாமே ரிபெர் ஆன ஹார்ட் டிஸ்கில். எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் சேமிக்க நினைத்து விடுபட்டு போய்விட்டது.

   கீதா

   நீக்கு
  3. எங்க அப்புவும் கேக்வகைகள் எல்லாம் கத்துண்டு பண்ணும். பனானா கேக்கும் பண்ணி இருக்கா. கப் கேக் அடிக்கடி பண்ணுவா. ஆனால் அவங்களுக்கெல்லாம் தமிழ் படிக்கத் தெரியாது என்பதால் நான் வாங்கிப் போடுவது இல்லை. :))))

   நீக்கு
  4. படத்தை வாங்கி நீங்க எழுதவேண்டியதுதானே... கேக் செய்தவர்களுக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால், கேக்கை நாங்கள் பார்க்கக்கூட முடியாதுன்னு சொல்வீங்க போலிருக்கே. உடனே வாங்கி (படத்தை) எழுதி அனுப்புங்க. ஆனால் அதுல, 'ராஜஸ்தானிலேயே ஓவன் - அவன் இல்லாமல்னு எழுதினா யார் இல்லாமல்னு கேட்பீங்க, இல்லாமல் நீங்க கேக் செய்ததையும் சேர்த்தே எழுதுங்க

   நீக்கு
  5. என் அக்காவின் பேத்தி துபாயில் பிறந்து வளர்ந்ததால் அவளுக்கும் தமிழ் தெரியாது. நான் எழுதி அவளிடம் படித்துக் காட்டி பின்னர் அனுப்பினேன்.

   நீக்கு
  6. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்பு எங்க பெண்ணோட இரண்டாவது பெண். அவள் தான் எங்களைப் பார்த்துக்க இந்தியா வரணும்னு சொல்லுவா! அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் தான் இருக்கா. சமையலில் ரொம்பவே ஆர்வம். :)))))ஆகவே ராஜஸ்தான், ஓவன், அவன் என்றெல்லாம் சொன்னது தப்போ தப்பு! அங்கெல்லாம் வீடுகளில் எரிவாயு அடுப்பு அல்லது மின் அடுப்போடு சேர்ந்து பெரிய அவனும் சேர்ந்தே வரும். அதைத் தவிர்த்து மைக்ரோவேவ் சமையல் அடுப்புக்கு மேலே வைப்பார்கள்.

   நீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 8. கேரளத்து உன்னியப்பம் இஷ்டமானது.. அது வேறொன்றுமில்லை..

  பச்சரிசி மாவு, கனிந்த நேந்திரன் பழம் , சர்க்கரை, சிறிது கருஞ்சீரகம் ஏலக்காய் - இவற்றை தளரப் பிசைந்து பணியாரச் சட்டியில் இட்டு வேக வைத்து எடுப்பது..

  இப்போது புதிய செய்முறை.. காலம் மாறியிருக்கின்றது...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பஹ்ரைனில் செய்துகொடுப்பதும் (1 தினாருக்கு 40 என நினைவு). கேரளக் கடைகளில் கிடைப்பதும் ரொம்ப நல்லாயிருக்கும்.

   சமீபத்தில் திருவித்துவக்கோடில் பிரசாதமாகச் செய்துதந்தது அவ்வளவாக நன்றாக இல்லை என்பது ஆச்சர்யம். அங்கு செய்துகொடுத்த சர்க்கரைப் பொங்கலும் அரவணைப்பிரசாதமும் ருசி சொல்லி மாளாது.. ஒரு டப்பா 115ரூ (குருவாயூரில் 90ரூ)

   நீக்கு
  2. துரை அண்ணா பொதுவாக புளிப்பு பாளைங்கோட்டன் பழம் தானே சேர்ப்பது.

   கீதா

   நீக்கு
  3. @ கீதா...

   // புளிப்பு பாளையங் கோட்டன் பழம்.. //

   ஓ!.. அப்படியா.. கனிந்த பழங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்..

   நீக்கு
  4. நான் கனிந்த பழங்களையே சேர்க்கிறேன்.புளிப்புப் பழம் சேர்ப்பதில்லை.

   நீக்கு
  5. துரை அண்ணா நீங்கள் சொன்னது சரிதான் கனிந்த நேந்திரன் என்று சொன்னதால் சொல்லியிருந்தேன். பாளையங்க்கோடன் தான் சேர்ப்பது என்று. நல்ல கனிந்த பாளையங்கோடன் கொஞ்சம் புளிப்புச் சுவை இருக்கும் துரை அண்ணா, கீதாக்கா அதுதான் சொன்னேன். (அந்தச் சுவை புளிப்புதானே!!!?? லைட்டா இருக்குமே)

   கீதா

   நீக்கு
 9. என் அக்காவின் பேத்தி இந்த கேக் செய்து கொண்டிருந்த பொழுது ஏனோ புகைப்படம் எடுக்க தவறி விட்டேன். அது நன்றாக வந்ததும் அடடா! மிஸ் பண்ணி விட்டோமே என்று தோன்றியது. கடைசியில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் இதுபோல நிறைய படங்கள் வைத்திருக்கிறேன் (வாழைப்பழ கேக் உட்பட). ஆனால் ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோக்களை மகள் தரவில்லை.

   இந்த வருடம் எப்போ எழுத நேரம் கிடைக்குமோ.

   நீக்கு
  2. நெல்லை தம்பி உங்க கூட நான் இல்லை போட்டிக்கு!!! ஹாஹாஹா எங்கிட்டயும் எல்லாம் படங்களோடு இருந்தும் இப்ப ஹார்ட் டிஸ்கில் இருந்து எடுத்து அனுப்ப முடியாத நிலையில்...இனி நான் எப்போது செய்வேன் என்று தெரியவில்லை.

   கீதா

   நீக்கு
  3. இப்படியே கதை சொல்லவேண்டியது. அப்புறம் வருஷத்துக்கு 10 தி பதிவுகள், 10 சிறுகதைகள் என்று எழுதிக்குவிக்கவேண்டியது. ஒரிஜினல் நெல்லை என்றால் நம்பலாம். பார்க்கும் ஊரையெல்லாம் தன் ஊர்னு சொல்லிக்கிற கீதா ரங்கன்(க்காவை) நம்பமுடியாது

   நீக்கு
 10. மாவுக் கலவையோடு வாழைப் பழம் அல்லாமல் சிறிதளவு Dry Cherry Cubes சேர்த்து செய்யலாம்.. Black Choco Powder சேர்த்தும் செய்யலாம்..

  எல்லாம் டெக்னாலஜி தான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்து, தோசை செய்யும்போது டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கலாம், இட்லிக்குள் சின்ன சாக்லேட் வைத்துச் செய்யலாம், இட்லி மாவோடு M&M மிட்டாய்களையும் சேர்த்துச் செய்தால் ருசியாக இருக்கும்னுலாம் எழுத வேண்டியதுதான் பாக்கில்

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, டுட்டி ஃப்ரூட்டி போட்ட கேக் நீங்க சாப்பிட்டதில்லை போல!

   நீக்கு
 11. பதில்கள்
  1. துரை அண்ணா ப்ரெட் இம்ப்ரூவர் சின்ன பாக்கெட்டில் கிடைத்தால் தேவலாம். இங்கும் சரி, சென்னையிலும் சரி பெரிய பாக்கெட்டாகக் கிடைக்கிறது. எப்பவோ பேக் செய்வதற்கு அந்த அளவு அதிகம்...வீரியம் போய்விடுகிறது.

   கீதா

   நீக்கு
 12. பதில்கள்
  1. கொஞ்சம் காத்திருந்தீர்களென்றால்,

   வெண்ணெய் சேர்த்து இதே கேக் செய்து கிருஷ்ண ஜெயந்திக்கு க்ருஷ்ணருக்குப் படைத்துவிடுங்கள் என்று சொல்லிடுவார்.

   மேலே வெள்ளித் தாள்களைச் சேர்த்து அம்பாள் பிரசாதம் என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை

   நீக்கு
  2. ஹாஹா! இதை சுவைத்ததவுடன் உன்னி அப்பம் போல இருப்பதாக தோன்றியது. அதனால்தான் விநாயகருக்கு.

   நீக்கு
  3. @கில்லர்ஜி: அவருக்கு படைத்து விட்டு நமக்கு.:))

   நீக்கு
 13. வாழைப்பழகேக் செய்முறை நன்று.

  எழுத வைத்திருப்பதையெல்லாம் முந்திக்கொண்டு எழுதிவிடுகிறீர்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால என்ன நெல்லை நீங்க எழுதி வைத்திருக்கறத அனுப்புங்களேன். ஒவ்வொருவரின் செய்முறை ருசி எல்லாம் வேறுதானே...

   பனானா சாக்கோ கேக் அதுவும் சாகோ chips ப்ரௌன் அல்லது வொய்ட் போட்டுச் செய்தால் அது ஒரு டேஸ்ட்.

   கீதா

   நீக்கு
  2. பனானா சாக்கோ கேக் அதுவும் சாகோ chips ப்ரௌன் அல்லது வொய்ட் போட்டுச் செய்தால் அது ஒரு டேஸ்ட்.// அடுத்த முறை செய்யும் பொழுது முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா. ஊரில் செட்டில் ஆகி விட்டீர்களா?

   நீக்கு
  2. கொஞ்சம் கொஞ்சமாக ஆகி வருகிறது. முழுமையாகவில்லை.
   வேலைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

   நீக்கு
 15. @ கில்லர் ஜி

  // கடைசியில் இது விநாயகருக்கா?.. //

  அவர் தானே ஊருக்கு உழைத்தவர்!..

  அப்புறம் இன்னொன்னு!..

  கை வசம் அவருக்கிட்ட தானே எலி இருக்கு!..

  !?..!?..!?..

  :))

  பதிலளிநீக்கு
 16. அம்பேரிக்காவில் காலை உணவில் இது பிரபலம். சுலபமான செய்முறை. அக்கா பேத்திக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பேரிக்காவில் ஒரு ஸ்லைஸ் எடுத்துக்குவாங்க. நமக்கெல்லாம் ஒரு முழு கேக் சாப்பிட்டால்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். கட்டுப்படியாகுமா? (உடம்புக்கு)

   நீக்கு
 17. அக்கா பேத்தி செய்த வாழைப்பழ கேக் அருமை.
  பேத்திக்கு வாழ்த்துக்கள்.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. பேத்திக்கு வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 19. நன்றாக இருக்கிறது என்னுடைய பேத்திகளும் பல விதங்களில் கேக் செய்கிறார்கள் இப்பொழுது அவர்களிடமிருந்து ஏராளமாக தெரிந்துகொள்ள முடிகிறது அருமை அன்புடன்

  பதிலளிநீக்கு
 20. உங்கள் பேத்தி செய்த கேக்குக்கு பாராட்டுக்கள்... இதை உங்க ஊரில் கேக்குன்னு சொல்லுறாங்களா எங்க ஊரில் இதுக்கு பெயர் பனானா பிரெடு என்று பெயர் ஹீஹீ என் மகளும் இதை செய்வாள் டெஸ்ட் அருமையாக இருக்கும் என்ன பெயராக இருந்தால் என்ன வாயில் போட்டால் சாப்பிட சுவையாக இருக்கனும் அதுதானே வேண்டும்

  பதிலளிநீக்கு
 21. வாழைப்பழ கேக் செய்முறை நன்று. உண்ணியப்பம் குறித்த கருத்துரைகள் கண்டேன்... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 22. செய்முறை அருமை. நானும் இதே முறையில் செய்வதுண்டு. அக்காவின் பேத்திக்கு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!