வெள்ளி, 28 ஜனவரி, 2022

வெள்ளி வீடியோ :  ஜூலையில் பிறந்தவன் ஜாதகம்..  காதலில் அது ரொம்ப சாதகம் 

 இன்றைய நேயர் விருப்பப் பாடல் ஒன்று.  பானு அக்கா என்னை அறிந்தால் படத்திலிருந்து ஒரு பாடல் கேட்டிருந்தார். 

அஜித், அருண்விஜய், அனுஷ்கா, திரிஷா நடித்த என்னை அறிந்தால் படம் இரண்டு வருடங்கள் எடுக்கபப்ட்டு 2015 ல் திரைக்கு வந்தது.  அஜித்து இதற்கு சம்பளம் 25 கோடியாம்!  விக்கி தகவல்.அட, ஏண்டா...  நான் கேட்டேனா?!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரையின் பாடல் 'உனக்கென்ன வேணும் சொல்லு' விருது பெறும் பாடல்கள் பட்டியலில் இடம்பெற்றதாம்.

பென்னி தயாள் - மஹதி குரலில் பாடல்...

உனக்கென்ன வேணும் சொல்லு… உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம்… புது மேகம்… தேடிப் போவோமே…

பிடித்ததை வாங்கச் சொல்லு… வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம்… புது ஆறு… நீந்திப் பார்ப்போமே…
குழு (ஆண்கள்) : இருவரின்… பகல் இரவு… ஒரு வெயில்…
ஒரு நிலவு…

ஆண் : தெரிந்தது… தெரியாதது… பார்க்கப் போறோமே…
குழு (ஆண்கள்) : உலகென்னும்… பரமபதம்… விழுந்தபின் உயா்வு வரும்…
நினைத்தது நினையாதது… சோ்க்கப் போறோமே…

ஆண் : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல… இந்த பூமி… சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம்… மினுங்கும் மேல…
ஒரு வெள்ளிக் கொலுசுப் போல… இந்த பூமி…சிணுங்கும் கீழ…
அணியாத வைரம் போல… அந்த வானம்… மினுங்கும் மேல…

ஆண் : கனவுகள்… தேய்ந்ததென்று…கலங்கிடக் கூடாதென்று…
தினம் தினம்… இரவு வந்து… தூங்கச் சொல்லியதே…
ஆண் : எனக்கென… உன்னைத் தந்து…உனக்கிரு கண்ணைத் தந்து…
அதன் வழி… எனது கனா… காணச் சொல்லியதே…
ஆண் : நீ…அடம் பிடித்தாலும்…அடங்கிப் போகின்றேன்…
உன் மடி…மெத்தை மேல்…மடங்கிக் கொள்கின்றேன்…
ஆண் : தன தார…னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
குழு (ஆண்கள்) : உனக்கென்ன…வேணும் சொல்லு…
உலகத்தைக்…காட்டச் சொல்லு…
புது இடம்…புது மேகம்…தேடிப் போவோமே… …
ஆண் : பிடித்ததை…வாங்கச் சொல்லு…
வெறுப்பதை…நீங்கச் சொல்லு…
புது வெள்ளம்…புது ஆறு…நீந்திப் பார்ப்போமே…

ஆண் : பருவங்கள்… மாறி வர… வருடங்கள் ஓடி விட…
இழந்த என் இனிமைகளை… உன்னில் கண்டேனே…
ஆண் : எழுதிடும்… உன் விரலில்… சிரித்திடும்…
உன் இதழில்… கடந்த என் கவிதைகளை…கண்டுக் கொண்டேனே…
ஆண் : துருவங்கள்… போல் நீளும்… இடைவெளி அன்று…
ஓ… ஓ… தோள்களில்…உன் மூச்சு…இழைகிறதின்று…
ஆண் : தன தார…னத்தர நம்தம்… தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…தன தார… னத்தர நம்தம்…
ஆண் : உனக்கென்ன…வேணும் சொல்லு…
உலகத்தைக்…காட்டச் சொல்லு…
புது இடம்…புது மேகம்…தேடிப் போவோமே…
குழு (ஆண்கள்) : பிடித்ததை…வாங்கச் சொல்லு…
வெறுப்பதை…நீங்கச் சொல்லு…
புது வெள்ளம்…புது ஆறு…நீந்திப் பார்ப்போமே…
ஆண் : இருவரின்…பகல் இரவு…ஒரு வெயில்…ஒரு நிலவு…
தெரிந்தது தெரியாதது…பார்க்கப் போறோமே…
ஆண் : உலகென்னும்…பரமபதம்…விழுந்தபின் உயா்வு வரும்…
நினைத்தது நினையாதது…சோ்க்கப் போறோமே…
குழு (ஆண்கள்) : ஒரு வெள்ளிக்…கொலுசுப் போல…
இந்த பூமி…சினுங்கும் கீழ…அணியாத வைரம் போல…
அந்த வானம்…மினுங்கும் மேல…
குழு (ஆண்கள்) : ஒரு வெள்ளிக்…கொலுசுப் போல…
இந்த பூமி…சினுங்கும் கீழ…அணியாத வைரம் போல…
அந்த வானம்… மினுங்கும் மேல…சித்ராலயா கோபு 'திக்கு தெரியாத வீட்டில்' என்றொரு நாடகம் எழுதி, மேடையில் நடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  அதைப் பார்த்து ரசித்த ஜெயலலிதா அது திரைப் படமாக எடுக்கப்படும்போது மாலதி கேரக்டரில் தன்னைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் படம் எடுக்கப்பட்டபோது ஜெயலலிதா டேட்ஸ் கிடைக்காததால் அந்த பாத்திரத்தில் லஷ்மி நடித்தார்.  நான் பார்த்து ரசித்த படங்களில் ஒன்று.   நல்ல நகைச்சுவைப் படம்.

இதில் ஒரு எஸ் பி பி பாடல் இருக்கிறது.  ஆனால் இன்று அதை பகிரப்போவதில்லை.  இன்று சாய்பாபா பாடிய ஒரு பாடல். 

சாய்பாபா பற்றி விவரம் சேகரிக்கலாம் என்று சென்றால், ஊ...ஹூ..ம் ஒன்றும் தேறவில்லை.  எல்லாமே ஷீர்டி சாய்பாபா பற்றிதான் கூகுள் மழை பொழிகிறது.  இவர் டி எஸ் பாலையா மகன் என்று யாரோ சொன்ன நினைவு.  Another son, Sai Baba, was part of MSV's troupe and sang a few songs என்று டி எஸ் பாலையா பற்றிய விக்கி பக்கத்தில் குறிப்பு இருக்கிறது.

வீட்டுக்கு வீடு - 1972 ல் வெளியான படம்.  சி வி ராஜேந்திரன் இயக்கம்.  கண்ணதாசனின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.

சில காரணங்களுக்காக பொய் சொல்லி யார் கணவன், யார் மனைவி என்று குழப்பும் கதையமைப்பு.

அதில் பாட்டு வாத்தியார் மகன் பட்டுசாமி - நாகேஷ் - பாடும் பாடலாக திரையில் வரும் பாடல் இது.

கமலா அக்கா மூன்று தெய்வங்கள் பாடல் பற்றிச் சொன்னது போல நான் இந்தப் பாடலைச் சொல்கிறேன்.  இதை நான் வாய்விட்டுப் பாடிக் கொண்டிருக்கும்போது என் நண்பர்கள் "அப்படியே பாடறாண்டா" என்று ஏற்றி விடுவார்கள்!  அவ்வப்போது பாடச்சொல்லிக் கேட்பார்கள்!

மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலோமி சலோமி சலோமி..ஐ லவ் யூ

அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா..ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ. 

ஜூலையில் பிறந்ததென் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
ஜூலையில் பிறந்ததென் ஜாதகம்
காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம்
எங்கு செல்லுமோ இந்த நாடகம்

ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா.ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ.

இனி உனை யாரும் நெருங்கிடார் 
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார் 
இனி உனை யாரும் நெருங்கிடார் 
உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார் 
ஊர்வசி வந்தாலும் மயங்கிடார் 
உன் மேல் ஆணை மை கிட்டார்
மை கிட்டார்
ஓடி வா.ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ.

அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி
ஓ ஓ ஒ மை ஸ்வீட்டி
ஓடி வா..ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ
ஓஓ ஓஒ ஹோ ஹோ ஹோ..

48 கருத்துகள்:

 1. காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
  அன்ன நீரார்க்கே உள..

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. // இதில் ஒரு எஸ் பி பி பாடல் இருக்கிறது.ஆனால் இன்று அதை பகிரப்போவதில்லை. //

  !?...
  !?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று நேயர் விருப்பப் பாடல் ஒன்று, இன்னொரு பாடல் ஒன்று என்பதுடன் நிறுத்திக் கொள்வோமே என்றுதான்!

   நீக்கு
  2. இந்த சாய்பாபா பாட்டுக்கு அது மேலாக இருந்திருக்கும்...

   அப்போதே இந்தப் பாடல் எனக்குப் பிடிக்காதது..

   நீக்கு
  3. ஹா..  ஹா...   வித்தியாசமான பாடல்.  எஸ் பி பி பாடல் ஜோடிப்பாடலாக வெளியிட எடுத்து வைத்திருக்கிறேன்!

   நீக்கு
 4. இன்றைய இரண்டு பாடலையும் கேட்ட நினைவு இல்லை.

  காணொளி பிறகு பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை.. கேட்டதில்லையா? என்னை அறிந்தால் பாடல் கூடவா?

   நீக்கு
 5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஆரோக்கியம் நிறைந்த வாழ்வு என்றும் நிலைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. என்னை அறிந்தால் படம் வந்தது தெரியும். இந்தப் பாடல் தெரியாது.
  எனக்குப் பிடித்த படம் வீட்டுக்கு வீடு.

  ஜெய்ஷங்கர் லக்ஷ்மி, முத்துராமன் வெண்ணிற ஆடை நிர்மலா

  எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள். நாகேஷ்
  நடிப்பு அவுட் ஸ்டாண்டிங்க்.
  ம்ம்ம் மாட்டிக்கிட்டான்'' மறக்க முடியாத வசனம்:)
  அதுவும் சாய் பாபா குரல் தனி ரகமாக ஒலிக்கும்.
  இவரின் மற்ற பாடல்களையும் கேட்டிருக்கிறேன்.

  என் தம்பிக்கு மிகப் பிடித்த காட்சி இது.
  மை கிடார்... அதற்கேற்ற மாதிரி நடிப்பு.ஓடிவா என்று சொன்னபடியே

  அப்பாவின் முடியைப் பின்னி விடுவது.ஹஹாஹஹஹா.
  மிக நன்றி மா.

  பதிலளிநீக்கு
 7. என்னை அறிந்தால் படப் பாடல் மிக நன்றாக
  இருக்கிறது.
  மிம்க மிக இதம்.
  கேட்கச் சொன்ன பானு வுக்கு மனம் நிறை நன்றி.
  கேட்கக் கேட்க நன்றாக இருக்கிறது.
  அந்தக் குழந்தையு அஜித்தும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமையான பாடல்.  எனக்கென்னவோ வந்த வரிகளே மீண்டும் மீண்டும் வருவது போல தோன்றும்.

   நீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம். அட! என்னுடைய (என் பேத்தியுடைய) விருப்ப பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. மற்றொரு பாடலை எப்போது பகிரப் போகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்!  வாங்க பானு அக்கா.  அது இன்னொருநாள்!  ஆமாம், என்ன பாடல்?

   நீக்கு
 10. எனக்கென்ன வேணும் : நேயர் விருப்பம் :-


  இரண்டாவது பாடலை பாடி கேட்பொலியாக போடவும்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா. இன்று சகோதரர் ஸ்ரீராம் மாட்டிக்கிட்டார்.

   நீக்கு
  2. ஹா.. ஹா... ஹா... இப்போது நான் பாடினால் பயணங்கள் முடிவதில்லை மணியோசை கேட்டு எழுந்து, மற்றும் சங்கராபரணம் இருமும் பாடல் போல இருக்கும் !!

   நீக்கு
 11. சாயிபாபா முன்னாள் நடிகர் பாலையா வின் மகன் தானே? மிமிக்ரி கூட செய்வார் இல்லையா? வீட்டுக்கு வீடு நல்ல காமெடி படம். அதில் ஜெயலலிதா நடிக்க ஆசைப்பட்டாரா? லக்ஷ்மி அளவிற்கு நடித்திருக்க முடியாது. இந்த படம் போலவே விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று எடுத்திருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாடல்கள் இரண்டும் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.படம் பார்த்ததில்லை. இரண்டாவது பாடல் இடம் பெற்ற படம் பார்த்து நிறையவே ரசித்திருக்கிறேன். (இதே மாதிரி கதையுடன் பிறகு கோவை சரளா படமும் வந்ததோ?) பாடலும் அப்படித்தான் நாகேஷ் நடிப்பில் பாடகர் சாயிபாபாவின் பொருத்தமான குரலுடன் நன்றாக இருக்கும். உண்மையில் அப்போது இந்தப்பாடல் பிரபலந்தான்.இன்று தலைப்பை பார்த்ததுமே பாடல் லேசாக நினைவுக்கு வந்து விட்டது. இவர் நிறைய படங்களில் வேறு பாடல்களும் பாடியுள்ளார் என நினைக்கிறேன். சட்டென சொல்ல நினைவுக்குத்தான் வரவில்லை.

  ஆக நீங்களும் இந்தப்பாடலை அப்படியே பாடி நண்பர்களிடையே பாராட்டுக்கள் வாங்கியிருக்கிறீர்கள்..:) என்னுடைய பாராட்டுக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.. நான் போட்ட கருத்து வந்தபின்தான் மேலை வந்த கருத்தைப் பார்க்கிறேன். சகோதரி பானுமதி அவர்கள் அந்தப்படத்தின் பெயரை நினைவூட்டி விட்டார். நல்ல. நினைவாற்றல் உங்களுக்கு சகோதரி.

   பழையகால படமாக்கிய வீட்டுக்கு வீடு கதையம்சத்துடன் ஒத்துப்போவது போல விஸ்வநாதன் ராமமூர்த்தி படம் கோவை சரளா காமெடியுடன் வந்தது. நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

   நீக்கு
  2. நன்றி கமலா அக்கா..   இதுபோலவே இப்போது வந்த படம் பற்றி நான் அறியேன்.  இப்போது நீங்கள் இருவரும் சொல்லிதான் அறிகிறேன்.

   நீக்கு
 13. கேட்ட பாடல்களே...
  இன்றைய நடிகர்களுக்கு பாடலுக்கு வாயசைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 14. ம்ம்ம்ம்ம், முதல் படம் வந்ததோ/பாடலோ தெரியாது. கேட்டதும் இல்லை. அடுத்த படம் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். நல்ல நகைச்சுவைப் படம். விஸ்வநாதன்/ராமமூர்த்தி என்று வந்ததெல்லாம் தெரியாது. இங்கே சினிமா விஷயத்தில் நான் ஜீரோ என்றால் பானுமதி கோவிச்சுக்குவாங்க! அதனால் மெல்லப் பின் வாங்கிக்கறேன். :))))

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் இன்றைய பொழுது இனிதாக இருக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 16. முதல் பாடல் கேட்டிருக்கிறேன் ஓரிரு முறை அவ்வளவே. நல்ல மெலடி டக்கென்றும் தெரியவில்லை. இந்தப் பாட்டு அப்படியே உப்புக்கருவாடு பாட்டுக்குத் தாவலாம்...ஆனா அது ஃபாஸ்ட் பீட்!! யமன் கல்யாணி பேஸ் போல இருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 17. அந்தப்பக்கம் ...பாட்டு கேட்டிருக்கிறேன். நாகேஷு?க்குப் பொருந்திப் போகிறது!! சாய்பாபா குரல் நு இப்பதான் தெரியும்...வித்தியாசமான பாடல்...எனக்குப் பிடித்த பாடல். காலேஜ் படிக்கும் போது இப்பாடலை இப்படிப் பாட முயற்சி செய்ததுண்டு...அதாவது இப்படியான ஜர்னரும் பாடிப்பார்த்தால் என்ன என்று...குரல் மாற்றி ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏ எல் ராகவன் குரலும் நாகேஷுக்கு ரொம்பப் பொருந்தும்.

   நீக்கு
 18. அஜித் படப்பாடல் இனிமையாக இல்லை, ஆனால் பாடல் வரிகள் மிக அருமை!
  வீட்டுக்கு வீடு படத்தில் சாய்பாபா பாடிய பாடல் அன்றைய நாட்களில் மிகப்பிரபல்! அதையும் விட நாகேஷ் அந்தப்பாடலில் நடித்த நடிப்பு மிகவும் பேசப்பட்டது!

  பதிலளிநீக்கு
 19. இரண்டு பாடல்களும் கேட்டேன்.
  நன்றாக இருக்கிறது . முதல் பாடல் அடிக்கடி இப்போது தொலைக்காட்சியில் வைக்கிறார்கள்.
  சாய்பாபா பாடிய பாடல் கேட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது வானெலியில் கேட்டது. வீட்டுக்கு வீடு படம் பார்த்து இருக்கிறேன்,நகைச்சுவை படம்.

  பதிலளிநீக்கு
 20. முதல் பாடல் படம் பார்த்த போது கேட்டது என்றாலும் நினைவில் இல்லை. இப்போது மீண்டும் கேட்டேன். நன்றாக இருக்கிறது என்றாலும் இரண்டாவது பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் இப்போது பல வருடங்களுக்குப் பின் கேட்கிறேன். வீட்டுக்கு வீடு படம் பார்த்திருக்கிறேனோ என்று கொஞ்சம் தோன்றுகிறது. யுட்யூபில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 21. 'உனக்கென்ன வேணும் சொல்லு ' .... மிகவும் இனிய பாடல் எனக்கும் நன்கு பிடித்த பாடல் இதில் காட்சிகளும் அழகு. பகிர்ந்ததற்கு நன்றி.

  இரண்டாவது இப்பொழுதுதான் கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. //திரைபபடமாக எடுக்கபப்டும்போது//

  முதல் பாடல் மிகவும் பிடித்த பாடலும் கூட - காரணம் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று படம்பிடித்து இருப்பார்கள் - அதில் சில இடங்கள் நானும் பார்த்தவை!:)

  இரண்டாவது பாடல் கேட்ட நினைவில்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!