செவ்வாய், 18 ஜனவரி, 2022

காற்றினிலே .. 1/6 :: துரை செல்வராஜு

 

மாலை மயங்கிக் கொண்டிருந்தது..

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த ஒற்றைச் சாலையில் சீரான வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது இரு சக்கர வாகனம் ஒன்று.. 

அதில் முழு முகத்தையும் மறைத்தவாறு விஜய்.. அவன் முதுகில் முழுதாகப் படர்ந்தபடி ஆர்த்தி..

சாலையின் ஓரத்தில் ' ஆ ' - என்று விரிந்திருந்த புளிய மரத்தைக் கடந்து திரும்பியதும், அந்தக் கட்டிடம்.. பளிச் என்றிருந்தது..


இரண்டு மாடிகளும் ஏராளமான ரகசியங்களும் என, இவர்களுக்காகவே காத்திருந்தது - இன்னும் சிறிது நேரத்தில் குருதிக் குழம்பைப் பூசிக் கொள்ள இருப்பதை அறியாமல்..

விஜய்யும் ஆர்த்தியும் தேடி வந்த விடுதி இது ..

விடுதியின் முன் வாயிலில் அலங்காரப் பூ வேலைகளுடன் நெடிதுயர்ந்த கம்பிக் கதவுகள்..

கட்டிட வடிவமைப்பில் நவீனம் மிகுந்து இருந்தாலும் பழைமையின் பிடியிலிருந்து விடுபடாதபடிக்கு மதிற்சுவரின் மேல் கோரச் சிரிப்பும் தொங்கிய நாக்குமாக ஒரு தலை..


சூளை நெருப்பில் இட்டு சுட்டெடுக்கப்பட்டிருந்த - அது இவர்களைக் கண்டதும் நாக்கைச் சுழற்றி சுவைத்துக் கொண்டது..

இதையெல்லாம் அறியாதவனாக வாகனத்தை வாயிலின் ஓரமாக நிறுத்தினான் விஜய்..

கட்டிடத்தைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த பறவைகளுள் ஒன்று மட்டும் இவர்களைப் பார்த்து கத்தியது..

" விதியைத் தேடி வந்தாயிற்றா?.. "

 " ஒரு வழியா வந்துட்டோம் ஆர்த்தி!.. - என்றான் விஜய்..

" ம்!.. " - ஒற்றைச் சொல் மட்டும் அவளிடமிருந்து..

ஆனாலும்,

எப்போது அறைக்குள் சென்று, அவனைத் தழுவிக் கொண்டு மெத்தையில் விழுவோம் - என்றிருந்தது அவளுக்கு..

அதற்குள் காவல் கூண்டின் உள்ளிருந்து அந்தப் பெரியவர் வெளியே வந்தார் நடக்கப் போகும் விபரீதங்களை அறியாதவராக..

ஜர்கினின் பக்கவாட்டில் இருந்து செல்போனை எடுத்தான் விஜய்.. அதன் உறக்கத்தைக் கலைத்தான்.. அவரிடம் நீட்டினான்..

கண்ணாடியை சரி செய்தவாறு செல்போனை உற்று நோக்கியவர் மீண்டும் கூண்டை நோக்கி நடந்து அங்கிருந்த போனை எடுத்தார்.. பேசினார்..

" உள்ளே போங்க தம்பி!.. "

முன்னால் விஜய் நடக்க அவனைத் தொடர்ந்தாள் ஆர்த்தி..

இவர்களைக் கண்ட நொடியில் - விடுதியின் முன் கூடத்தில் விருந்தினர்களை வரவேற்கும் பணியில் இருந்த இளம்பெண் அதிர்ந்தாள்.. ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.. அவள் உடல்  நடுங்கியது.. மேலுதட்டில் மெலிதாக வியர்த்தது..

அருகிருந்த இளைஞனிடம் - அறைச் சாவியைக் கொடுத்து விரலை உயர்த்திக் காட்டினாள்..

அவன் அவர்கள் இருவரையும் இருகரம் நீட்டி வரவேற்க - அவனைத் தொடர்ந்தான்  விஜய்..

ஆச்சர்யத்தில் அதிர்ந்திருந்த அந்தப் பெண் ஆர்த்தியை நெருங்கினாள்..

சட்டெனக் குனிந்து வலது கையைப் பற்றி மிருதுவாக முத்தமிட்டாள்..

"  வணக்கம்.. இளவரசி.. தங்களுக்கு நல்வரவு!.. "

நேபாளத்தில் இருந்து இங்கு உணவகப் பணிக்கு வந்திருப்பவள் - நீலு ஷிவ்பகதூர்..

ஒரு நொடியில் அறுநூற்று ஐம்பது வருடங்களுக்கு முந்தைய - மித்ரா சுபாஷிணி என, நின்றாள்..

" மித்ரா!..  எப்படி அறிந்தாய் என்னை?.. "

மித்ராவிடமிருந்து கவிதை ஒன்று பிறந்தது..

"காற்றினிலே வந்ததம்மா

கனிந்த நட்பின் வாசம்..

காலத்தினால் அழியாது

கலந்திருந்த நேசம்..

காத்திருக்கும் மனதிலே

கவி மலராய் வீசும்..

கால் மறந்த தூரத்திலும்

கண் மலர்ந்து பேசும்!.. "

இருவரது கண்களும் களிப்பில் மிதந்து கொண்டிருந்தன.. 

திலக்புரி..

ஹிமாச்சலத்தின் அடிவாரத்து சமஸ்தானங்களில் ஒன்று.. சிறிய குன்றின் மீது கோட்டையும் கொத்தளமும்.. குன்றிற்கு முன்னால் விவசாய நிலங்களும் மேய்ச்சல் வனங்களும்..  குன்றிற்குப் பின்னால் 

இமயத்தின் பனி நீர்த்திரள்..

கங்கையுடன் கலப்பதற்காக விரைந்தோடும் ஷிவானிகங்கா எனும் சிற்றாறு..

திலக்புரி சமஸ்தானத்தின் ராஜ கன்னிகை  அவந்திகா ஸ்ரீஷாந்தினி.. அவளது சேடிப் பெண்களுள் அந்தரங்கத் தோழியானவள் தான் இந்த மித்ரா சுபாஷினி..

மித்ராவின் கவிதையைக் கேட்டு முகம் மலர்ந்த அவந்திகாவின் கரம் இயல்பாக கழுத்துக்குச் சென்றது..

கண்களால் புன்னகைத்த மித்ரா தனது கன்னத்தில் தட்டிக் காட்டியதும் அவளை வலக்கரத்தால் அணைத்து முத்தமிட்டாள் அவந்திகா..

" மித்ரா!.. அறைக்கு வா!.. " - என்றபடி  முன் நடந்த அவந்திகா - சட்டெனத் திரும்பினாள்.. அவளது விழிகள் எதையோ தேடித் திரிந்தன..

" உன் காதலர் எங்கே? மித்ரா!.. " - புன்னகைத்தபடி நடந்தாள்..

மித்ராவை நாணம் சூழ்ந்து கொண்டது..

"  எனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றார் தேவி!.. " அவந்திகா நடக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்  மித்ரா..

வாசலில் இருந்த திருஷ்டி பொம்மை மறுபடியும் நாக்கைச் சுழற்றிச் சுவைத்துக் கொண்டது..

 (தொடரும்) 


113 கருத்துகள்:

 1. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்..

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. இது ஆனந்த அதிர்ச்சி..
  ஒன்றும் புரியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா....ஹா..   கொஞ்சம் தண்ணிய இல்ல இல்ல வெந்நீரை குடிச்சுக்கோங்க...!

   நீக்கு
  2. உங்களின் புதிய மொபைல் ஃபோன் நேற்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது என்று கூகிள் தேவதை எண் கனவில் வந்து சொல்லியது. அது சரிதான் என்றால், எனக்கு ஃபோன் எண் தெரிவிக்கவும்.

   நீக்கு
  3. கூகிள் நேற்று தான் சொல்லியதா!..

   என்ன ஒரு ஓரவஞ்சனை!..

   நீக்கு
  4. முக்கியப்பட்டவர்கள் எல்லோருக்கும் முதலில் சொல்லிவிட்டு - அதன் பிறகு என்னிடம் வந்து சொல்ல கூகிள் தேவதைக்கு அவ்வளவு நாட்களாகிவிட்டன என்று நினைக்கிறேன்!

   நீக்கு
  5. எனக்கெல்லாம் இல்லையாக்கும்.

   நீக்கு
 4. இருந்தாலும்,

  இன்றிலிருந்து தொடரும் ஆறு செவ்வாய்க் கிழமைகளை எனக்காக அல்ல அல்ல..

  அவந்திகா ஸ்ரீஷாந்தினிக்காக வழங்கி சிறப்பித்திருக்கும் அன்பின் திரு ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

  உடன் நம்மை மகிழ்விக்க வரும் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 5. கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவரையும்
  அவந்திகா ஸ்ரீ ஷாந்தினியின் சார்பாக இரு கரம் நீட்டி மகிழ்வுடன் வரவேற்பவள் -

  மித்ரா சுபாஷினி!..

  பதிலளிநீக்கு
 6. விழித்துக் கொண்ட நேரம் அதிகாலை 3:30.. வழக்கம் போல செல்போனை எடுத்து உசுப்பி தினமலரைப் பார்த்து விட்டு ஏதோ நினைவில் குறிப்பேட்டிற்குள் சென்று இன்று வெளியாகியிருக்கும் இந்தக் கதையின் ஒரு அத்தியாயத்தைப் படித்தேன்...

  என்னைப் போலவே முன்னதாக விழித்துக் கொண்ட பல்லி ஒன்று கிச்கிச் என்றது..

  பதிலளிநீக்கு
 7. இந்த முதல் பகுதியைக் கூட வேறு விதமாகத் தான் புனைந்தேன்.. இரண்டாம் பகுதியை ஆரம்பிக்கும் போது அமானுஷ்யமாக அருகே வந்து நின்ற அவந்திகா என்னைப் பற்றி எழுது.. - என்று, நான் நினைத்து வைத்திருந்த கதையின் போக்கினைத் திருப்பி விட்டாள்...

  அதன் பிறகு ஐந்து பகுதிகளையும் முடிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகின..

  ஒவ்வொரு பகுதியையும் செதுக்கிச் செதுக்கி நாளுக்கு ஒன்றாக ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்..

  பல்வேறு பிரச்னைகளுக்கு இடையேயும் இதனைப் படித்து கருத்தினை வழங்கி திரு KGG அவர்களையும் தூங்க் விடாமல் செய்திருக்கின்றார்..

  டிசம்பர் 15 ல் தொடங்கி மாதம் முடிவதற்குள் முழுக் கதையையும் அனுப்பி வைக்க மின்னல் வேகத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார் - அன்பின் ஸ்ரீராம்..

  நன்றி.. நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போது, எப்படி என்று குழம்பிக் கொண்டிருந்த என்னைத் தெளிய வைத்து தேதி சரி செய்து கொடுத்தார் கேஜிஜி.  நன்றி அவருக்குதான் சொல்லவேண்டும்!  படங்கள் வரையவும் அவருக்கு நேரம் தேவைப்பட்டது.

   நீக்கு
 8. ஏதோ விபரீதம் நடக்கப் போவதின் சுவடு தெரிய ஆரம்பித்தது இருக்கிறது...

  தொடர்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி.

   தங்களுக்கு நல்வரவு.. ஆயினும் ஏதோ நீங்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கின்றீர்கள் என்ற தைரியம் தான்!..

   நீக்கு
 9. @ ஸ்ரீராம்..

  // என்னைத் தெளிய வைத்து தேதி சரி செய்து கொடுத்தார்.. //

  ஓ.. தெளிய வைத்து வேப்பிலை அடித்து விபூதி பூசி விடவும் அருகே வசதி...

  ஆகா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்!  அவந்திகா அவரிடம் ஏதோ சொல்லி இருக்கவேண்டும்.

   நீக்கு
  2. " என் ஸ்வரூபத்தை முழுமையாக வரைய உன்னால் இயலாது" என்று எண் கனவில் வந்து சவால் விட்டார் அவந்திகா. என்னால் இயலவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டியது என் நிலை.

   நீக்கு
  3. கௌ அண்ணா இப்படிக் கதை எல்லாம் சொல்லலாமோ!!! ஹாஹாஹா சஸ்பென்ஸ்!!

   கீதா

   நீக்கு
  4. கதையை நான் சொல்லியிருக்கிறேனா !! எங்கே?

   நீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  தொற்றில்லாக் காலம் தொடர இறைவனே சரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

   நீக்கு
  2. இறைவனே சரணம்..
   வல்லியம்மா அவர்களின் வேண்டுதலுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. எல்லோருக்கும் காலை வணக்கம்!!!

  ஆ!!! துரை அண்ணாவின் வித்தியாசமான கதை அதுவும் எனக்குப் பிடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்று இருக்கிறதே!!

  காற்றினிலே வரும் ரத்தம்???!!!!

  கௌ அண்ணா படங்கள் கலக்கீட்டீங்க!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. வருக.. வருக..

  ஜனவரி முதல் வாரத்திலேயே சொல்லியிருந்தேன் - சித்திரச் செல்வர் என்று..

  நான் நினைத்த மாதிரியே
  திருஷ்டி பொம்மை..

  பதிலளிநீக்கு
 13. அன்பின் துரை செல்வராஜுவுக்கும் பதிப்பித்த ஸ்ரீராம், படம் பதித்த ஸ்ரீ கௌதமன் ஜி
  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  இரண்டு குடும்பங்களும் பத்திரமாக மீண்டாலும் களைப்பு இருக்கும்.

  என் உறவுகளிலும் இரண்டு குடும்பத்தாருக்கும்,
  தோழி ஒருவருக்கும் வந்து விட்டது.
  உடம்பு சரியில்லாவிட்டாலும் சமைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ - எல்லோரும் நலம் பெற பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. எல்லா இடையூறுகளும் நீங்குவதற்கு வேண்டிக் கொள்வோம்..

   நீக்கு
 14. நேபாள நாட்டிலிருந்து வரும் கதையா. வ்கு சுவார்ஸ்யமாக ஆரம்பித்திருக்கிறார் துரை செல்வராஜு.

  திகிலுடன் செல்லும் என்று தோன்றுகிறது.
  அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. கண்களால் புன்னகைத்த மித்ரா தனது கன்னத்தில் தட்டிக் காட்டியதும் அவளை வலக்கரத்தால் அணைத்து முத்தமிட்டாள் அவந்திகா..//

  அவர்களுக்குள் சங்கேத மொழியோ?

  ஓஹோ இந்த அவந்திகாதான் முந்தைய ஒரு பதிவில் கருத்துகளில் பேசப்பட்டளோ!!

  பூர்வஜென்மம்...ஏதோ ஒரு பழிவாங்கல் என்று கதை போகிறது போல் இருக்கிறது!! விறுவிறுப்பு...ஏணிமலை வந்த போது துரை அண்ணா சொல்லியிருந்த நினைவு அவரும் எழுதுவதாக...அந்தக் கதைதான் இல்லையா

  கீதா

  பதிலளிநீக்கு
 16. @ கௌதம்

  // " என் ஸ்வரூபத்தை முழுமையாக வரைய உன்னால் இயலாது" என்று .. //

  ஆச்சர்யம்.. ஆச்சர்யம்..

  முதல் நாள் உருவம் காட்டாமல் வந்திருந்த அவந்திகா மறுநாள் சர்வ அலங்காரத்துடன் காட்சி தந்தாள்..

  அழகு.. அழகு.. சொல்லி மாளாது..

  அப்போதே நினைத்தேன்.. அவந்திகாவை எழுதுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று!..

  பதிலளிநீக்கு
 17. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. இங்கே நான் அவந்திகாவைப் பற்றி சொல்லிக் கொண்டு வருவதெல்லாம் உண்மை உண்மை..

  பதிலளிநீக்கு
 19. @ கீதா..

  // பூர்வஜென்மம்... ஏதோ ஒரு பழிவாங்கல் என்று கதை போகிறது போல் இருக்கிறது!விறுவிறுப்பு...//

  இப்படியெல்லாம் துப்பறிந்து கொண்டிருந்தால் அப்பாவி எழுத்தாளர்கள் என்ன தான் செய்வது?!...

  பதிலளிநீக்கு
 20. @ கீதா

  // ஏணிமலை வந்த போது துரை அண்ணா சொல்லியிருந்த நினைவு அவரும் எழுதுவதாக... அந்தக் கதை தான் இல்லையா.. //

  அதே.. அதே!..

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  கதையின் முதல் பகுதியே விறுவிறுப்பாக தொடர்கிறது. சுவையூட்டும் திகில் கதைகள் எனக்கும் பிடித்தமானது. (இரவில் தூக்கம் வராத சில சமயங்களில் கனவோடு வந்து கதையின் சில பகுதிகள் என்னோடு கதை பேசி பயமுறுத்தும். அது வேறு விஷயம்..:))) )


  ஆறு வாரங்கள் அவந்திகாவின் அழகோடு, அதிரும் ஆர்பாட்டத்திலும் நாங்கள் திளைக்கப் போகிறோம் போலிருக்கிறது. சென்ற வாரத்தில் இந்த அவந்திகாவை குறிப்பிட்டு கருத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. கதையை தொடர ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... அப்படியெல்லாம் அச்சமூட்டும் கதை அல்ல இது என்பதைத் தாங்களே புரிந்து கொள்வீர்கள்..

   அவந்திகாவும் மித்ராவும் நம்முடன் கலந்தவர்கள்..

   நீக்கு
 22. வணக்கம் கௌதமன் சகோதரரே

  படங்கள் நன்றாக உள்ளன. கதைக்கேற்ப படங்களை வரைந்து தொகுத்து தந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

  தங்களுக்கு கிடைத்த சித்திரச் செல்வர் என்ற பட்டமும் மகிழ்வை தருகிறது. வாழ்த்துகள். படங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. ஏணிமலை தொடர்ச்சியா? தொடர்கதை, மோஹினி, விடுதி, மலை என்று அதே போல் வருகின்றனவே! எங்கே இருந்து சார் அந்த புளியமரத்தை பிடித்தீர்கள்? பார்க்கும் போதே ஆவிகள் தென்படுகின்றனவே!.
   
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // எங்கே இருந்து சார் அந்த புளியமரத்தை பிடித்தீர்கள்?..//

   புளிய மரத்தை நாங்கள் பிடிக்கவில்லை.. அது தான் எங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 24. தொடர்கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது.

  செல்வராஜ் சாரின் எழுத்துநடைபோல ஆரம்பத்தில் தெரியவில்லை.

  வித்யாசமான களம். நல்ல எழுத்து. தொடர்கிறேன். கேஜிஜி அவர்களின் ஓவியமும் நன்று.

  பதிலளிநீக்கு
 25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 26. கதை நன்றாக இருக்கிறது. ஆரம்பமே நல்ல விறு விறுப்பு.

  //வாசலில் இருந்த திருஷ்டி பொம்மை மறுபடியும் நாக்கைச் சுழற்றிச் சுவைத்துக் கொண்டது..//

  திருஷ்டி பொம்மைவேறு பயமுறுத்துகிறது.

  படங்கள் பொருத்தமாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கோமதி அரசு..

   // திருஷ்டி பொம்மைவேறு பயமுறுத்துகிறது.. //

   இப்படியான திருஷ்டி பொம்மைகளுக்குள் .....

   ம்ஹூம் .... இப்போது சொல்லமாட்டேன்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. ஆமாம், முக்கியக் கதாபாத்திரம் திருஷ்டி பொம்மை. அநேகமாய் வில்லன்/அல்லது ஆவி/அல்லது பேய்/பிசாசு திருஷ்டி பொம்மை உருவில் வருமோ?

   நீக்கு
 27. சித்திரச் செல்வர் பட்டம் நன்றாக இருக்கிறது.
  சித்திரச் செல்வருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. திருஷ்டி பொம்மை முக்கியமான கதாபாத்திரமோ? அவந்திகா/மித்ரா என வட மாநிலப் பெயர்கள். எல்லாம் அம்பிகையின் பெயர்களே என்றாலும் தமிழ்நாட்டிற்குப் பழக்கம் இல்லாத ஒன்று. இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கீதா அக்கா..

   // என்றாலும் தமிழ்நாட்டிற்குப் பழக்கம் இல்லாத ஒன்று. இல்லையா?.. //

   இந்தக் கதை ஹிமாச்சலத்தில் இருந்து தான் வருகின்றது...

   அவந்திகா திலகபுரி சமஸ்தானத்தின் இளவரசி.. மித்ரா அவளது அந்தரங்கத் தோழி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
  2. ஆமாம்,அதைக் கவனித்தேன். ஆனாலும் மனதில் சரியாகப் பதியவில்லை போலும். :(

   நீக்கு
  3. இது எத்தனை ஜன்மத்துக் கதை?

   நீக்கு
  4. எத்தனை ஜென்மம் எபது தெரியவில்லை.. 650 வருடங்களுக்கு முன் அவந்திகா என்று கொள்ளவும்..

   நீக்கு
 29. ஒரு வழியாக கதைக்கான ஆரம்ப களத்தை அமைத்தாகி விட்டது.

  இனி எழுது விளையாட்டைத் தொடர வேண்டியது தான் பாக்கி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி அண்ணா..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 30. வாசிப்பு ஓட்டத்தில் இரண்டு இடங்கள் என்னைக் கவர்ந்தன

  ஒன்று:

  விதியைத் தேடி வந்தாயிற்றா? - என்ற பறவை கத்தலுக்கு "ஒரு வழியா வந்திட்டோம் ஆர்த்தி.." என்று விஜய்
  சொன்ன இடம்.

  வெகு இயல்பாக 'எழுத்தாள திறமை' பதிந்த இடம் இது.

  பதிலளிநீக்கு
 31. இரண்டு:

  மித்ராவிடமிருந்து பிறந்த அந்தக் கவிதை வரிகள்.

  அலட்டிக்காத அருமை இது

  திலக்புரியின் வர்ணனையும் அபாரம்.

  தம்பியின் புது மாதிரியான எழுத்து வடிவம். மனம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் பாராட்டுரைக்கு மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

   நீக்கு
 32. தொடக்கமே திகிலுக்கான அறிகுறி. படமும் நன்று.

  பதிலளிநீக்கு
 33. துரை அண்ணா கதையில் குருதி எல்லாம் வந்தால் நம்ம சித்திரச் செல்வருக்குப் பயமாக்கும் அதனால்தான் ஏணிமலையை சாதுவாக முடித்து ஷூட்டிங்க் கதை வேறு என்று முடித்துவிட்டாராக்கும்!!! உங்க கதைல குருதி வருவது போல இருக்கிறதே!! சித்திரச்செல்வர் பயப்படாமல் படம் வரைவார் என்று நினைக்கிறேன்!!!!

  சித்திரச் செல்வர் - அழகான பட்டம்!

  சித்திரச் செல்வர் அல்ரெடி படம் வரைந்திருப்பார்.

  துரை அண்ணா உங்கள் எழுத்து செமையா இருக்கு பல இடங்கள் ரொம்ப ரசித்தேன். உங்களின் எழுத்தின் திறமையைப் பறை சாற்றும் இடங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ கீதா..

   // கதையில் குருதி எல்லாம் வந்தால் நம்ம சித்திரச் செல்வருக்குப் பயமாக்கும்.. //

   அதற்காகத் தான் வேப்பிலை விபூதி எல்லாம் கைவசம் இருப்பு வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கின்றேன்..

   நீக்கு
  2. விபூதி : அமேசான் மூலம் வாங்கி வைத்துள்ளேன். வேப்பிலை இந்த பிராந்தியத்தில் எங்கும் காணப்படவில்லை. என்ன செய்வது?

   நீக்கு
  3. வேப்பிலை இல்லாத பிராந்தியமா..

   ஓ!..

   நீக்கு
 34. கீரிப்பாறையின் சாலைகளை நினைவூட்டும் புளியமரச் சாலை. இரு சக்கரவண்டிப்பயணிகளின் முகம் இப்போது தெரியவில்லை. பின்னால் தெரிய வருமோ? சித்திரங்களை வரையும் கேஜிஜிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா ரகசியங்களையும் இப்போதே சொல்லி விட்டால் எப்படி!?...

   கேஜிஜி அவர்களின் கைவண்ணம் அருமை..

   நீக்கு
 35. @ கீதாக்கா...

  // இது எத்தனை ஜன்மத்துக் கதை?.. //

  அன்றைக்கு இதே கேள்வியை ஸ்ரீராம் அவர்களும் கேட்டிருந்தார்கள்..

  இது ஏழாவது ஜன்மம்.. சந்தேகம் இருந்தால் அவந்திகாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லியிருந்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
   சொந்தமிந்த சொந்தமம்மா
   வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
   தஞ்சையம்பதி உந்தன் நெஞ்சமம்மா!

   நீக்கு
  2. ஆஹா.. ஆஹா
   அற்புதம்.. அற்புதம்!..

   நீக்கு
 36. முற்றிலும் புதிய களம், புதிய நடை, விறுவிறுப்பான துவக்கம். சபாஷ்! திகில் தொடர் என்று தெரிந்ததால் நேற்று இரவு படிக்கவில்லை. காலையில் எழுந்ததும் தான் படித்தேன்.
  படங்கள் அபாரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. அகிலா திகிலா எல்லாம் இல்லை.. இது ஒரு குடும்பக் கதைங்க..

   அப்படியும் பயந்த குறை இருந்தா வேப்பிலை விபூதி எல்லாம் கை வசம் இருக்கிறது..

   படங்களில் அழகு.. அழகு..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..

   நீக்கு
 37. எங்கள் ப்ளாகில் மற்றொரு மர்மத் தொடர் தொடங்கியிருக்கிறதா. துரை செல்வராஜு சார், மிகவும் சிறப்பான தொடக்கம். நல்ல எழுத்து நடை. கதை என்ன சொல்லப் போகிறது என்று கொஞ்சம் புரிகிறது. ஆவலுடன் தொடர்கிறேன். எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

  படங்கள் வரைந்த கௌதமன் சாருக்கும் வாழ்த்துகள். நன்றாக இருக்கிறது

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. சொல்ல வருவது கொஞ்சம் புரிகிறதா?..

   ஐயப்பா..காப்பாற்ற வேணும்..

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 38. மர்மக் கதையின் சிறப்பான தொடக்கம். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.... படிக்கக் காத்திருக்கிறேன். கதையும் கதைக்கான ஓவியங்களும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

   கதையையும் ஓவியங்களையும் ரசித்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!