வியாழன், 27 ஜனவரி, 2022

நேரம்!

 சிலருடன் எப்போதும் உறவு நன்றாய் இருக்காது!  சிலருடனான உறவு திடீரென சீர்கெடும்.  

என் தவறு எதுவுமில்லாமலேயே நான் தவறாக நினைக்கப்பட்ட ஒரு சமீபத்தைய சம்பவம்.

ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு சிலரைப் பிடிக்காது போவது போலவே நம்மையும் சிலருக்கு பிடிக்காது போகும் சந்தர்ப்பங்கள் உண்டு.  சில சமயம் நாம் அதை சீர் செய்து கொள்ள முயற்சிப்போம்.  சிலசமயம் இயலாத காரியம் என்று தெரிந்தாலோ, அல்லது சொல்லியும் புரிந்து கொள்ள மாட்டார்கள், பயன் ஒன்றும் விளையப் போவது இல்லை என்று நினைத்தாலோ அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டு விடுவோம்.  

சிலருக்கு நாம் முடிந்தவரை உதவியும், நன்மையுமே செய்தும் கூட நம்மைக் கண்டால் அவர்களுக்கு ஆகாது.  அது ஏனென்றே தெரியாது.  எனக்கு இந்த அனுபவம் உண்டு.  அதனால் சொல்கிறேன்.  அதுவும் அடிக்கடி அல்லது தினசரி சந்திக்கும் நபர்களாய் இருந்தால் ரொம்பவே சங்கடம்.

உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் .

நமக்குத் பிடிக்காதவரைப் பற்றி பேசுவோமே தவிர, நம்மைப் பிடிக்காதவர்கள் பற்றி பேசமாட்டோம்.  ஒன்று கௌரவம் தடுக்கும்  அல்லது நாமே அறியாமல் அல்லது கவலைப்படாமல் இருப்போம்.  நாம் நமக்கு நெருங்கியவர்கள் என்று நினைத்துப் பழகும் எவ்வளவு பேர்கள் நம்மிடம் போலியாக, வேண்டா வெறுப்பாகப் பழகுகிறார்களோ என்கிற எண்ணம் அவ்வப்போது எனக்கு வரும்.

நான் எல்லோரிடமும் உண்மையாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லலாம்.  அவர்களுக்கு அது தெரிய வேண்டுமே..  அவர்களுக்கு நம்மை எந்த காரணத்துக்காக பிடிக்காமல் போனதோ...  நம்மிடம் சொல்லவா போகிறார்கள்?  எனக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து முடிந்தவரை ஒதுங்கி விடுகிறேன்.

இந்த விஷயத்தில் மிகப்பழைய சம்பவமும் ஒன்று உண்டு.  அலுவலக சங்கடங்களில் இதெல்லாம் சகஜம் என்றாலும் இவற்றை எல்லாம் தாண்டி வருவது சற்றே சங்கடத்தைத்தரும் நேரங்கள்.  90 களில் நடந்த ஒரு சம்பவம்.

ஒரு பெண்மணி அவருக்கு அலுவலகத்தில் நேரும் எல்லா சங்கடங்களுக்கும் நான்தான் காரணம் என்று சந்தேகப்பட்டார்.   அதை அருகிலிருந்த சிலர்  ஊதி பெரிதாக்கினார்கள்.  இத்தனைக்கும் என்னிடமும் பாஸிடமும் நன்றாய்ப் பழகிக் கொண்டிருந்தவர் / கொண்டிருப்பவர்தான்.  

என் அப்பா அடிக்கடி சொல்வார், ஒரே இடத்தில் பல வருடங்கள் இருந்தால் அது பல்வகைப்பட்ட பொறாமைகளுக்கு வழி வகுக்கும் என்று.  அந்த வகையில் சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் பெயரைக் கெடுத்தார்கள்.

அதில் நான் மிகவும் உதவி செய்த இரு நபர்களும் அடக்கம்.  ஒருபக்கம் என்னிடமிருந்து உதவி. இன்னொரு பக்கம் இப்படி..  அவர்கள் மனதில் என்னவோ..

மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று வேதனையுடன் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

"ச்சே...   இவர்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க ஸ்ரீராம்.."

இவர்கள் பேச்சைக்கேட்டு அந்தப் பெண்ணும் உறுதியாக நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நம்பத் தொடங்கி விட்டார். 

இதனால் எனக்கு அவரால் தொல்லை எதுவுமில்லை.  அவரால் எதுவும் என்னைச் செய்ய முடியாது - என் அமைதியை, நிமமதியைக் கெடுப்பதைத் தவிர! சண்டையும் ஏற்படவில்லை என்றாலும், அவரின் திடீர் பாராமுகம் கஷ்டப்படுத்தியது.  அவரிடம் ஏகப்பட்ட ப்ளஸ்கள் உண்டு.  அயரா உழைப்பாளி.  யாருக்காவது உதவி என்றால் முன்னே நிற்பார்.  நன்றாய் சிரிக்க சிரிக்கப் பேசுபவர், திடீரென முகத்தைத் திருப்பிக் கொண்டு போவது புதிராய் இருந்தது.  முதலில் கவனிக்கவில்லை.  சில நாட்கள் கழித்துதான் கவனித்தேன். 

அவரிடம் விளக்கம் கேட்க முயன்ற முயற்சிகள் தோல்வி அடைந்தன.  விஷயம் என்ன என்று ஒரு மாதிரி காதுக்கு வந்தது.  மனதில் இந்த விஷயம் ஊவா முள்ளாய் உறுத்திக்கொண்டே இருந்தது. 

நாம் தவேறேதும் செய்து அதன் பொருட்டு இதெல்லாம் நடந்தால் நம்மை இந்த அளவு அது பாதிக்காது.  உள்ளுக்குள் உறுத்தலுடன் தட்டி விட்டுக் கொண்டு போய்விடுவோம்!

"தப்பாய் புரிஞ்சிக்கிட்டிருக்கறவங்களுக்கு உண்மையை எப்படிப் புரிய வைப்பது?"

இங்கு அப்படியும் இல்லையே...  என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.  இது மாதிரி விஷயங்களை சட்சட்டென பைசல் செய்தால்தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்!

ஒருநாள் மாலை என் பாஸை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்கே சென்று விட்டேன்.  என்னைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார் அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்.  வரவேற்பறையில் அமர்ந்தோம்.

பின்னர் வெளியே வந்த அலுவலகப் பெண் நேரடியாய் பேச்சைத் தொங்கினார்.

"ஒரு மாசமா தினமும் உங்களை 'கவனிக்கும்'படி முட்டி போட்டு நானும் என் மகனும் ரெண்டு வேளை ஜீசஸ் கிட்ட பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்...  என் தேவன் உங்களை சும்மா விடமாட்டார்.." என்றார்!

நான் சொல்ல வந்ததை ஒத்திப்போட்டு, "ஒரு மாதமாகவா?" என்றேன்.

"ஆமாம்..  காலைலயும்  ஒண்ணும் சாப்பிடாம  ஒரு மணி நேரம் ஜெபம் செய்வோம்.  அப்புறம்தான் சாப்பிடுவோம்"

"ஏன்?  இதற்கு நீங்கள் நேராய் என்னிடம் வந்து விளக்கம் கேட்டிருக்கலாமே..  இவ்வளவு நாள் பழகியதில் நீங்கள் என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா?"

"அதெல்லாம் ஜீஸஸ்க்கு தெரியும்,  அவர் பார்த்துக்குவார்"  அவர் என் கண்களை பார்க்காமல் வேண்டா வெறுப்பாக தரையைப் பார்த்தபடியேதான் பேசிக் கொண்டிருந்தார்.

"பழி வாங்குவதற்குதான் கடவுள் என்றால், அது கடவுளே அல்ல.  உங்கள் தேவன் உங்களுக்காக என்னை பழி வாங்க வருவாரேயானால், இந்த ஒரு மாதத்தில் இந்நேரம் நான் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.  நான் அவ்வளவு சக்தி வாய்ந்த ஆளா?  இல்லை, உங்கள் கடவுளுக்குத்தான் பலமில்லையா?  நான் ஏன் பாதிக்கப்படவில்லை?  உங்கள் கடவுள், என் கடவுள்  என்பதை எல்லாம் விடுங்கள்.  மேலே தனித்தனி அறைகளில், பங்களாக்களில் உங்கள் கடவுள், என் கடவுள் என்றெல்லாம் தங்கி இருந்து என் ஆள், உன் ஆள் என்று பாகுபாடு பார்ப்பதாய் நான் நினைக்கவில்லை.   ஒருவருக்கு கெடுதல் செய்யும் ஆள் நான் இல்லை என்பதை இவ்வளவு நாள் பழக்கத்தில் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தமே..  அப்படி கெடுதல் செய்திருந்தால், பாதிக்கப்பட்டவரின் வயிற்றெரிச்சலே கஷ்டம் கொடுத்தவரை படுத்தி தண்டனை கொடுத்துவிடும்.  நான் இதுவரை நன்றாகத்தான் இருக்கிறேன் என்பதைப் பாருங்கள்.  உங்களிடம் என்னைப்பற்றி யாராவது தவறாகச் சொல்லி இருந்தால், என்னிடம் அவர்கள் யாரென்று சொல்லவேண்டாம், அவர்கள் யார், அவர்கள் குணம் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.. நீங்கள் தவறான ஆளை துரத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.  உங்கள் உண்மையான எதிரிகள் யாரென்று எனக்குத் தெரியாது, அவர்கள் உங்களை திசை திருப்பி விட்டு அவர்கள் இன்னமும் உங்களுக்குத் தொல்லை தரத் தயாராய் இருக்கக் கூடும்.  எனவே கவனமாக இருங்கள்.  சமீபத்தில்தான் உங்கள் கோபம் பற்றி நான் அறிந்தேன்.  உங்களை அலுவலகத்திலேயே வைத்து, இது சம்பந்தமாய் பேச முயன்றும் முடியவில்லை.  மேலும் அங்கு பேசுவதை விட இங்கு பேசுவது எளிதாக இருக்கும் என்று தோன்றியது.  நான் குற்றமற்றவன் என்று சொல்லவே நான் என் மனைவியுடன் இங்கே வந்தேன்.  உதவி செய்ய முடியாவிட்டாலும் யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது என்பது என் அடிப்படைக் கொள்கை.  தனியாக வந்தால் அதுவும் ஏதாவது கதை கட்டப்பட்டு சிரமப்படுத்தலாம் என்பதாலேயே மனைவியுடன் வந்தேன்.  நான் சொல்ல வேண்டியதை  உங்களிடம் சொல்லி விட்டேன்.  எப்படி விசாரித்து அறிவீர்களோ, அது உங்கள் பாடு.  விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  என்னைப் பற்றி சொன்னவர்களிடம் நான் எங்கேயும் வந்து பதில் சொல்லத் தயார்.  உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைத்த்தை சொல்லிவிட்டேன்.  என் மனதில் இனி பாரம் இருக்காது.  நீங்கள் சுதாரித்துக் கொள்வது இனி உங்கள் பாடு.  இனி நான் எதுவும் விளக்கம் கொடுக்க மாட்டேன்.  வருகிறோம்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.

"மை காட்...   அப்புறம் என்னதான் ஆச்சு?"

பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.  அருகில் அவர் டீனேஜ் மகனும் அமர்ந்திருந்தான். இவர்களுடன் இன்னொரு பழைய கூத்து ஒன்றும் உண்டு.  அது அவருக்கும் நினைவுக்கு வந்திருக்கும்.  எனக்கும் நினைவுக்கு வந்தது.  எனக்கும் அல்ல, எங்களுக்கும்...  திரும்புகையில் சரியாக பாஸும் அதை நினைவு படுத்தினார்.  

அடுத்த இரண்டு நாட்களிலேயே உண்மையாய் தொல்லை தருபவர்கள் யாரென்பதைக் கண்டுபிடித்து விட்டார்.  என்னிடமும் சாதாரணமாக பேசத் தொடங்கினார்.  தொல்லை தந்தவர்கள் யார், என்ன செய்தீர்கள் என்று நானும் கேட்கவில்லை. அவராக சொல்ல வந்தபோதும் தேவையில்லை என்று தடுத்து விட்டேன்.

இப்போதும் அவர் என் நல்ல நண்பிகளில் ஒருவர்.  நல்ல இடத்தில் பணிபுரியும் அவர், சமீபத்தில் கூட என் நண்பர் ஒருவருக்கு உதவி கேட்டபோது செய்து கொடுத்தார். 

என்ன ஒன்று, அவ்வப்போது தன் மதம்தான் உயர்ந்தது என்று வாதத்துக்கு வருவார்.  நான் வாதிடுவதில்லை.  அவர் எதிர்பார்ப்பது போல மாறுவதுமில்லை!!

தற்போதைய சங்கடத்துக்கு வருகிறேன். 

சரிதான்...   அது அடுத்த வாரமா?  இதே வழக்கமாய் போச்சு இவன் கிட்ட..."

==========================================================================================================

'தமிழ்த்தாய் வாழ்த்து' எழுதிய மனோன்மணீயம் சுந்தரனாரின் பேரன் முனைவர் மோதிலால் நேரு: 

"மனோன்மணீயம் சுந்தரனார் மலையாளி என்றும், அவர் எழுதிய பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடலாமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்றைய கேரளாவில் உள்ள ஆலப்புழையில் மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்ததால், அவரை மலையாளி என்று சொல்கின்றனர். 

முன்னர் மலையாள நாடு என்று சொல்லப்படும் கேரளா, சேர நாடாகத் தானே இருந்தது. அப்படியானால் சேர மன்னர்கள் தமிழர்கள் இல்லையா?ஐரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களான முனைவர் பெர்னல், முனைவர் நெல்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், தமிழர் நாகரிகம் என்ற ஒரு நாகரிகம் இருந்தது என்ற உண்மையை மறைத்ததுடன், நம் இலக்கியங்களின் சிறப்பையும், இயற்றப்பட்ட காலத்தையும் குறைவாக மதிப்பிட்டு, தங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் உலக அளவில் ஆவணப்படுத்தி விட்டனர். 

இதை மறுத்துத் தன் ஆராய்ச்சி முடிவுகளை தக்க சான்றுகளுடன், அவர்களது மொழியான ஆங்கிலத்திலேயே எழுதி, தமிழின் தொன்மையையும், தமிழர்களின் நாகரிகத்தையும் உலகத்துக்கு பறை சாற்றியவர் சுந்தரனார் தான்.கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை என்பதால் தான், எல்லா மொழிகளையும் உள்ளடக்கி, கிரீடமாகத் தமிழ் இருப்பதை உணர்த்தவே, 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்று பாடினார் சுந்தரனார்.

மற்ற மொழிக்காரர்கள் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. காரணம், அவர்களின் மொழிக்குக் கருப்பையாக தமிழ்தான் இருந்தது என்பதை ஒப்புக் கொள்வதில் அவர்களுக்கு சங்கடமும், மனத் தடையும் இருக்கிறது. தமிழும், அதன் வழியாக உருவான பிற மொழிகளும் கிளைத்த நாடு என்பதால், இதைத் திராவிட நல்நாடு என்று சுந்தரனார் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, 1970 மார்ச் 11ல் நடந்த திரைப்படத் துறை சாதனையாளர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் தான், 'தமிழக அரசு நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் இறைவணக்கம் பாடுவது போல், தமிழ்த்தாய் வாழ்த்தாக, 'நீராரும் கடலுடுத்த' பாடல் இருக்கும்' என்று அறிவித்தார். இந்த முடிவை கருணாநிதி எடுத்தபோது அவர் சந்தித்த சவால்கள் அதிகம். அவை எல்லாவற்றையும் தாண்டி, என் தாத்தாவின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அரங்கேறியது, எங்கள் குடும்பத்தினருக்குப் பெருமை!"

-தினமலர் பகிர்வு! -

==============================================================================================================

கவிதை நேரம்!

வாழ்க்கைப் புதிரின் வார்த்தைக் கட்டங்கள் 
எழுத்துகளை இடம் மாற்றி நகர்த்தி 
புதிய வார்த்தைகள் அமைக்கிறேன் 
வார்த்தைகளை மாற்றி மாற்றி 
புதிய வரிகளை கோர்க்கிறேன் 
இடம் நகர்த்த வெற்றிடம் ஒன்றோடு 
வெறும் கட்டம் ஒன்றும் போனஸ் 
வேண்டிய எழுத்தை 
வேண்டியபோது சேர்த்துக் கொள்ளலாம்.

=====================================================================================

மீசை வைப்பது அவ்வளவு பெரிய குத்தமாய்ய்யா....!  தேவகோட்டையார்தான் இவர்களை காக்கவேண்டும்!


போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் சைக்கிள் கைப்பிடியான, 'ஹேண்டில்பார்' போல், பெரிய மீசை வளர்த்த போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் காவல் துறையில் மோசடி தடுப்பு பிரிவு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றியவர் கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் அதிக அளவில் முடி வளர்த்து, கடா மீசை வைத்திருந்தார். சீருடை பணியாளர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றை ஒழுங்குப் படுத்தும்படி உயர் அதிகாரிகள் உத்தர விட்டனர். ஆனாலும் அவர் மீசையின் அளவை குறைக்காமல் பிடிவாதம் செய்து வந்தார். இதையடுத்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ''மீசை, என் சுயமரியாதை சம்பந்தப்பட்டது என்பதால் சஸ்பெண்ட் ஆனாலும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்,'' என, ராகேஷ் ராணா கூறி உள்ளார்.

==========================================================================================================

மதன் ஜோக்ஸ்...   'ஸ்டார் ஹோட்டல்' என்ற தலைப்பில் அவர் வரைந்தவை!

இப்போ என்னென்ன பெயர்கள் வைப்பார்கள்?


"அட ஏம்ப்பா பயமுறுத்தறே...!!"


"இங்கிருந்தா...?  குதிச்சிட்டாலும்...!"


பார்த்து..   பள்ளத்துல விழுந்து கீழே உள்ள ரூம்ல போய் விழுந்துடாம...!

அடடே...   புதுசா இருக்கே!

மூழ்கிட்டாருப்பா....!

135 கருத்துகள்:

 1. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன்..

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.  முற்றிலும் குணமடைந்து விட்டீர்களா?

   நீக்கு
  2. துரை அண்ணா என்ன ஆச்சு?! உடம்பு நலம்தானே..

   கீதா

   நீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நோயில்லா நிறை வாழ்வு இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை வணக்கம்.

  தவறாகப் புரிந்துகொள்பவர்கள் எத்தனைபேரிடம் நேரில் விளக்கம் சவல்வது? நம்மை தினமும் பாதிக்கும் என்றால் வேறு வழியில்லை.

  உங்களைப்பற்றி நடுஇரவிலும் நைட்டியோடு ஒருவர் யோசித்திருக்கிறாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // உங்களைப்பற்றி நடுஇரவிலும் நைட்டியோடு ஒருவர் யோசித்திருக்கிறாரே// ஆ !! அவ் .. வ் !! :)))

   நீக்கு
  2. நெல்லை உங்களுக்கு ஏன் புகையுது!!! ஹாஹாஹா கீழ போய் ஹிஹிஹிஹிஹியை ஃபில் பண்ணுங்க!!!ஓழுங்கா...

   கீதா

   நீக்கு
  3. வாங்க நெல்லை..  வணக்கம்.  நமக்குத் தெரியாமல் இருந்தால் பரவாயியிலை, அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை.  இங்கு அப்படி இல்லையே...   அதுதான்...

   நைட்டியுடன் யோசிப்பவர் அழகு மிகுந்தவர், அக்கறை மிகுந்தவர்!

   நீக்கு
 5. ஶ்ரீராமை ஜோசப் ஶ்ரீராமாக மாற்றாமல் விடமாட்டாரோ?

  பதிலளிநீக்கு
 6. மதன் ஜோக்ஸ் அருமை.

  மீசை செய்தி படித்தது. எதைச் செய்தாலும் சுயநலம் இல்லாமல் கருணாநிதி செய்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் கருணாநிதி எங்கே வந்தார்?!

   நீக்கு
  2. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் பாடலை, தனக்கு ஏற்றபடி வெட்டி ஒட்டிக்கொண்டதில்

   நீக்கு
 7. மீசைக்கார ராணா வாழ்க!!!

  ஸ்டார் ஹோட்டல் 1980 களா:)

  பதிலளிநீக்கு
 8. மதன் ஜோக் அத்தனையும் மிக அருமை.
  17 ஆவது மாடி பாரசூட்.:)
  26 ஆவது மாடி டைவிங்க் ஹாஹாஹா.

  மூழ்கும் படுக்கை.:))

  பதிலளிநீக்கு
 9. ஆங்காங்கே உள்ள படத்துடன் கூடிய கமெண்ட்ஸ் நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 10. என் தவறு எதுவுமில்லாமலேயே நான் தவறாக நினைக்கப்பட்ட ஒரு சமீபத்தைய சம்பவம்.//

  ஹைஃபைவ்!!!! நிறைய தடவை தட்டிக் கொள்கிறேன்!! ஹாஹாஹாஹாஹா...இதெல்லாம் சர்வசகஜமப்பா...

  அட! நேற்று நெல்லை பேசிய போது மகன் பற்றிப் பேசும் போது இது குறித்தும் பேசினேன் இன்று உங்கள் பதிவில் முதல் வரிகளே அப்படியான உங்கள் சம்பவம்.

  இப்படி சம்பவங்கள் வரும் போது எனக்கு உடனே மனதில் தோன்றும் பாடல் "யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே"

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா... அதுதான் நானும் சொல்லி இருக்கிறேன்... எல்லோருக்குமே இருக்கும் இது மாதிரி அனுபவம் என்று...!!

   நீக்கு
 11. இந்த வாரம் கதம்பம் கொஞ்சம் கன்பூசியன் ஆக இருக்கிறது.

  தூங்கும் படமும் செல்லம் படமும் ஏன் என்று புரியவில்லை. 

  1.மத ரீதியாக மற்றும் மதத்திலும் ஜாதி ரீதியாக என்று மக்கள் வேறு பட்டு சிந்திப்பது தற்போது அதிகரித்து வருகின்றது. சந்தேகம் என்பது சாதாரணம் ஆகிவிட்டது. காரணம் தற்போதைய தலைவர்கள் தாம். 

  ஆனாலும் 90களில் நடந்த சம்பவத்தை தற்போது எழுதியது ஏன் என்று புரியவில்லை. 

  2. திராவிட கட்சிகளே பெயரில் மாத்திரம் திராவிடத்தை வைத்திருக்கும்போது திராவிடத்தை ஏன் மீண்டும் நினைவு படுத்த  வேண்டும்? 

  3. கவிதை தான் டாப் கன்பூசன். எழுத்துக்களை இடம் மாற்றினால் புது வார்த்தை வந்து விடுமோ? வேறு வார்த்தை என்றாலும் அதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமோ?

  4. முடி  இருப்பவன் தானே மீசை வைக்க முடியும். முடி இல்லாமல் இருப்பவனுக்கு அது வயிற்றெரிச்சல். அதுதான். (சிலருக்கு தலையில் இருக்க வேண்டியதெல்லாம் முகத்தில்  இருக்கிறது)

  5. அப்பாடா, மதன் ஜோக்ஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கியது. அதிலும் நட்சத்திர ரூம் சூப்பர்.  இது போதும் இந்த வார கதம்பத்தை தூக்கி நிறுத்த. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...

   தூங்கும் படம், செல்லம் படம் வேறு அர்த்தம் ஏதாவது தருகிறதா என்ன!


   1) தற்போதைய சம்பவம் ஒன்றை எழுத நேரும்போது இதேபோன்ற பழைய சம்பவம் நினைவுக்கு வந்ததது. வேறொன்றுமில்லை.

   //மத ரீதியாக மற்றும் மதத்திலும் ஜாதி ரீதியாக என்று மக்கள் வேறு பட்டு சிந்திப்பது தற்போது அதிகரித்து வருகின்றது. சந்தேகம் என்பது சாதாரணம் ஆகிவிட்டது. காரணம் தற்போதைய தலைவர்கள் தாம்.//

   சம்பவம் நடந்தது 90 களில் . தற்போதைய தலைவர்கள் அப்போது எப்படி காரணமாக முடியும்? குழப்பம்.

   என் மகன் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளும் உண்டு. நீங்கள் அரியலூர் நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள் என்றால், இல்லை.

   தமிழ்த்தாய் வாழ்த்து அப்ற்றி மிகச் சமீபத்தில் பகிர்ந்தேன். அதில் மனோன்மணியம் சுந்தரனார் பேரனின் மகிழ்ச்சிதான் தெரிகிறது.

   அர்த்தம் வரும்படி வார்த்தையை அமைக்கத்தான் போராட்டம். வாழ்க்கையில் சில விஷயங்களை வார்த்தை போல மாற்றியமைக்க முடிந்தால்...

   நீக்கு
  2. //சம்பவம் நடந்தது 90 களில் . தற்போதைய தலைவர்கள் அப்போது எப்படி காரணமாக முடியும்? குழப்பம்.// ஹாஹாஹா ஶ்ரீராம், உங்களுக்கு வரலாறே தெரியலை. இந்தியா இரண்டாகப் பிரிஞ்சதே தற்போதைய தலைவர்களால் தான். காந்தியைக் கொன்னதும் தற்போதைய தலைவர்கள் சொல்லித் தான். இந்தியா-பாகிஸ்தான் சண்டை ஏற்படக் காரணமே தற்போதைய தலைவர்கள் தான்.

   நீக்கு
 12. என்னப்பா இத்தனை சங்கடங்களா.:(
  மிக அருமையாக சமாளித்திருக்கிருக்கிறீர்கள்.
  அதுவும் பாஸ் உடன் சென்று
  பேசி இருக்கிறீர்கள்.

  கேட்கவே வருத்தமாக இருக்கிறது.
  வேலை செய்யும் இடத்தில்
  இத்தனை தொந்தரவுகள் பற்றி
  தம்பிகள் சொல்வார்கள்.
  மனதை அரிக்கும் இது போல நச்சுகள் , வேலை செய்வதைத் தடுக்குமே.

  பதிலளிநீக்கு
 13. என்ன ஒன்று, அவ்வப்போது தன் மதம்தான் உயர்ந்தது என்று வாதத்துக்கு வருவார். நான் வாதிடுவதில்லை. அவர் எதிர்பார்ப்பது போல மாறுவதுமில்லை!!

  தநல்ல படியாக சங்கடங்கள் தீரட்டும். இறைவன் அருள வேண்டும் ஸ்ரீராம்.

  நேரமாகிவிட்டது.
  மனம் திறந்து சிரிக்க வைத்ததற்கு மிக நன்றி.
  நல்ல பதிவுக்கு வாழ்த்துகள்.ற்போதைய சங்கடத்துக்கு வருகிறேன்''


  பதிலளிநீக்கு

 14. அனுஷ்ஷ் :- கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் -
  கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு...
  காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் -
  கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு...
  கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
  குணத்துக்குத் தேவை மனசாட்சி - உன்
  குணத்துக்குத் தேவை மனசாட்சி

  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - உனக்கு நீ தான் நீதிபதி...
  மனிதன் எதையோ பேசட்டுமே - மனச பாத்துக்க நல்லபடி -உன்
  மனச பாத்துக்க நல்லபடி...

  பதிலளிநீக்கு
 15. மீசைக்கார நண்பா - உனக்கு ரோசம் அதிகம்டா...

  பதிலளிநீக்கு
 16. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும் .//

  மீக்கு டிட்டோ..ஆனால் ஓரிருவர்தான் ...சரியாகிவிடும். மகனுக்கு கொஞ்சம் கூடுதல் ஹாஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா? ஆனால் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும்தான்.

   நீக்கு
  2. /எல்லோருக்கும் இந்த அனுபவம்// - என்னைப் பற்றி என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் (என் டிபார்ட்மெண்ட், எனக்கு ரிப்போர்ட் செய்தவர்கள்) எப்போதும் சொல்லும் குறை, நான் புரிந்துகொண்டதை, தவறாகவே புரிந்துகொண்டிருந்தாலும், அதனை விளக்குவதற்கு, நீங்கள் நினைத்தது தவறு உண்மை இது என்று விளக்குவதற்கு நான் எப்போதும் வாய்ப்பு கொடுத்ததில்லை என்று.

   நீக்கு
 17. "ச்சே... இவர்கள் எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க ஸ்ரீராம்.."//

  ஹாஹாஹாஹாஹா நெல்லைய நல்லா ஹிஹிஹிஹிஹி.....விட்டார் ஸ்ரீராம்!!! இந்த ஹிஹிஹிஹிஹி யை நெல்லை ஃபில் செய்து கொள்ளவும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 18. ஒரு மாசமா தினமும் உங்களை 'கவனிக்கும்'படி முட்டி போட்டு நானும் என் மகனும் ரெண்டு வேளை ஜீசஸ் கிட்ட பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்... என் தேவன் உங்களை சும்மா விடமாட்டார்.." என்றார்!// இவ்வளவு மோசமான கலீக்கா? அவர் இப்போது நல்ல நண்பி என்கிறீர்கள்..‌‌பெரிய மனதுதான் உங்களுக்கு.
  கவிதை புரியவில்லை.
  மதன் ஜோக்ஸ் அபாரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து விரோதம் பாராட்டி என்ன ஆகப் போகிறது? இப்போதும் நண்பிதான் அவர்

   நீக்கு
 19. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. சிறப்பான கட்டுரை ஜி என் மனதில் இருந்த பல விடயங்களை இப்பதிவில் கண்டேன். காரணம் நான் கடந்து வந்த பாதையை போலவே இருக்கிறது.

  //மீசை, என் சுயமரியாதை சம்பந்தப்பட்டது என்பதால் சஸ்பெண்ட் ஆனாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்//

  மனுசன்டா...

  இப்படித்தானே அபுதாபி கவர்மெண்டில் இருந்து வருடங்களாக போராடியே (வாழ்ந்தேன்) வந்தேன்.

  பதிலளிநீக்கு
 21. சீக்கியர்கள் டர்பனும், பாக்கிஸ்தானியர்கள் தாடியும் வைத்துக் கொள்வது மட்டும் ஒழுங்கா ?

  இவர்களை மட்டும் போலீஸ் வேலையில் சேர்க்கலாமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாடி பாகிஸ்தானியருக்கு மட்டும் சொந்தம் அல்ல. சீக்கியர்கள் அவங்க மதக் கலாசாரப்படி நீண்ட முடியை வளர்த்துத் தாடியும் இருக்கணும். தலையில் தூக்கிக் கட்டுவாங்க. டர்பனும் அவங்களுக்கு முக்கியம். இதில் ஒழுங்குப் பிரச்னை ஏதும் இல்லை. பல வெளிநாடுகள் தங்கள் நாடுகளில் வசிக்கும் சீக்கியர்களுக்கு இதில் சலுகைகள் கொடுத்திருக்கின்றன. இதைப் பற்றி விவரிக்கப் போனால் பெரிசாகி விடும். இந்திரா காந்தியைக் கொலை செய்தது ஒரு சீக்கியர் தான் என்பது வெளியே தெரிந்ததும் தில்லி, பஞ்சாப் மற்ற மாநிலங்களில் உள்ள சீக்கியர்கள் தங்கள் தலைமுடியை நீக்கிவிட்டுச் சாதாரணமாக மாறினார்கள். அல்லது மாறும்படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

   நீக்கு
  2. நான் சீக்கியர்களின் மதக்கலாச்சாரத்துக்குள் வரவில்லை டர்பனுக்குள் ஊசி வைத்துக் கொண்டு விமானங்களில் பயணிக்கவே உலக நாடுகள் அனுமதித்து விட்டன...

   ஆனால் மீசையை எடுக்கச் சொல்வதை ஏற்க இயலாது.

   நீக்கு
  3. பாகிஸ்தான் சட்டங்களைப் பற்றி நாம் பேச முடியாது. சீக்கியர்களின்'கிர்பான்' (தானே?!) பற்றி முன்பு கான்ட்ரவர்ஸி இருந்த நினைவு!

   நீக்கு
  4. இந்தக் "கிர்பான்" என்பது சீக்கியர்கள் இடுப்பில் தொங்கும் ஒரு வகை வளைந்த கத்தி. இதில் இந்தியச் சீக்கியர்கள் இந்தப் பெரிய கத்தியைத் தான் வைத்துக்கொள்வார்கள். பல வெளிநாடு வாழ் சீக்கியர்கள் சின்னதான கூர்மையான வளைந்த கத்தியை வைச்சுக்கறாங்க எனக் கேள்விப் பட்டிருக்கேன்.

   நீக்கு
 22. சராசரி மனிதர்களின் மீசையை விட போலீஸ் அதிகாரிகளின் மீசை தான் அந்த பதவிக்கே (மேலும்) அழகு சேர்க்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி, நம்ம சந்தன வீரப்பனையும், அவனைத்தேடிப்போன வீரப்பனையும்..ஐயையோ... நக்கீரன் கோபாலையும் மறந்துவிட்டார் போலிருக்கே

   நீக்கு
 23. யம்மாடியோவ் சிவாஜி வசனம் பேசியிருக்கீங்களே!!! ஹாஹாஹாஹாஹா...ஸாரி சிரித்ததுக்கு அன்று உங்கள் மனம் எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறாது. உங்கள் பாயின்ட்ஸை ரசித்தேன். அழகாகச் சொல்ல வந்திருக்கிறது. கோர்வையாக.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொன்ன உடன் டென்ஷன் குறைந்து மனம் லேசானது அப்போது.

   நீக்கு
  2. என்னிடம் ஸ்ரீராம் மாதிரி யாரேனும் சொல்லியிருந்தால், 'அட.. என் ஜட்ஜ்மெண்டையே, அனுமானத்தையே தவறு என்று இவர் விளக்குகிறாரே.. அது எப்படித் தவறாக இருக்கமுடியும்'னு அப்போ நினைத்திருப்பேன். ஹா ஹா

   நீக்கு
 24. செல்லங்களின் வசனம் ஆஹா!! சூப்பர்..

  அதுங்க நினைச்சிருக்கும் நம்ம பொழைப்பே பரவால்லாப்ப இந்த மனுஷங்க என்னா அவஸ்தை. மனசுக்குள்ள வைச்சுக்கிட்டு...நமக்கெல்லாம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான். ஆன் த ஸ்பாட்!! பிடிக்கலைனா (ரெண்டு செல்லங்களும்தான் உர்ர்ர்ர்ற்) லொள் லொள்/உர்ர்ர்ர்.... உர்ர்ர்ர்ர் இல்லைனா ஒதுங்கி அன்னாண்டை...ஆனாலும் இது கூடப் பரவால்லதான்...ம்ம் இப்பவே அடுத்த தெரு அந்த ப்ரௌனி கிட்ட போய் ஸ்ரீராம் மாதிரி வசனம் விட்டுப் பார்ப்போம்...னும் கூட நினைச்சிருக்குமோ..!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 25. ஒரு மாசமா தினமும் உங்களை 'கவனிக்கும்'படி முட்டி போட்டு நானும் என் மகனும் ரெண்டு வேளை ஜீசஸ் கிட்ட பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்... என் தேவன் உங்களை சும்மா விடமாட்டார்.." என்றார்!//

  ஆனாலும் ஸ்ரீராம் இது ரொம்பவே ஓவரான ஒரு பெர்சனாலிட்டி. திஸ் இஸ் டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ மச்.

  உங்களின் அப்ரோச் நல்ல செய்கை. மறப்போம் மன்னிப்போம்....ஷமா ஹி சத்ய ஹை!!! ஜீஸஸின் தத்துவமும் இதுதான்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சம்பவத்துக்குப் பின் எங்களுக்குள் சண்டை வந்ததில்லை. அப்புறமப்புறம் அளவான தூரத்தில் அளவளாவி அங்கிருந்து கழன்றுகொள்வேன்.

   நீக்கு
  2. //உங்களை 'கவனிக்கும்'படி முட்டி போட்டு// - இறைவனிடம், அடுத்தவர்களை 'கவனித்துக்கொள்ளும்படி' ப்ரார்த்தனை செய்தால், அது பொதுவாக பூமராங்க் ஆகிவிடுமே

   நீக்கு
 26. அவங்க ஜீஸஸை-கடவுளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்புறம் என்ன வேண்டிக் கிடக்கு மண்டியிட்டு ப்ரேயர்!! அவங்களை ஜீஸஸ் ரட்சிப்பாராக!

  அவர் சொன்னது போன்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் கும்பிடற தெய்வம் என் தெய்வம் (அதென்னவோ நான் கும்பிடற தெய்வம்...என் தெய்வம் நு டயலாக்!!!) நான் செய்யற வேண்டுதல் உண்மைனா உன்னை சும்மா விடாது. பழி வாங்கியே தீரும்...என்று....எனக்குச் சிரிப்பு வந்துவிடும்..அந்த வார்த்தைகள் நம்மை மீறிய அந்த சக்தியைப் பற்றிய அவர்களின் புரிதல் ..

  அது போல தமக்குத் தீங்கிழைத்தவர் கஷ்டப்பாட்டால் உடனே பாதிக்கப்பட்டவர் சொல்லும் டயலாக்...பாத்தியா எனக்குத் துரோகம் செஞ்சாங்கல்ல அதான் கடவுள் நல்லா தண்டிச்சிட்டார்னு...என்ன புரிதலோ அந்த சக்தியைப் பற்றி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீசஸ் என்றில்லை, அனைவருமே இந்த "நான் கும்பிடற தெய்வம்.." வசனம் விடுவாங்க..

   நீக்கு
 27. அடுத்த இரண்டு நாட்களிலேயே உண்மையாய் தொல்லை தருபவர்கள் யாரென்பதைக் கண்டுபிடித்து விட்டார். என்னிடமும் சாதாரணமாக பேசத் தொடங்கினார். //

  உங்களிடம் ஸாரி சொன்னாரா?!! சொல்லவில்லை என்றால் அவர் வணங்கும் கடவுளை அவர் புரிந்து கொள்ளவில்லை.

  //தொல்லை தந்தவர்கள் யார், என்ன செய்தீர்கள் என்று நானும் கேட்கவில்லை. அவராக சொல்ல வந்தபோதும் தேவையில்லை என்று தடுத்து விட்டேன்.//

  இது குட் பெர்சனாலிட்டிக்கு அடையாளங்களில் ஒன்று

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடந்து போச்சு பல வருடங்கள். இப்போதும் நாங்கள் நல்ல நண்பர்கள்.

   நீக்கு
 28. தற்போதைய சங்கடத்துக்கு வருகிறேன். //

  ஹாஹாஹாஹா பரவால்ல பரவால்ல அப்பால சொல்லுங்க இப்பவே தள்ளுதே!! (படம்!!)

  கீதா

  பதிலளிநீக்கு
 29. தினமலர் பகிர்வு - இந்த மாதிரிப் பிரச்சனைகள் எழுப்புவது இம்மெச்சூர் தனம். நாம் இன்னும் வளரவில்லை.

  இப்போதைய கேரளத்துப் பகுதிகள் சோழர்கள் ஆட்சியிலும் இருந்தது. அப்படிப் பார்த்தால் ஒரு காலத்தில் எல்லாமே ஒரே நிலப்பரப்பாகத்தானே இருந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா யார் யார் என்னென்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் ஒரு சுவாரஸ்யம்தான்.

   நீக்கு
 30. பாவம் எதிர்தரப்பு!..

  ரெண்டு மாசத்துக்கு முட்டு கொடுத்தது தான் மிச்சம்!..

  பதிலளிநீக்கு
 31. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 32. என்னவோ போங்க. இந்த மதம் மாற்றுபவர்கள் மிகவும் அமைதியாகத் தங்கள் வேலையைச் செய்வார்கள். இப்போ இல்லை. நானெல்லாம் படிக்கும் காலத்திலேயே உண்டு. எங்கள் பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் சும்மா இருந்தாலும் ஒரு சிலர் ப்ரேயர் க்ரூப் எனப்படும் வழிமுறையைப் பின்பற்றுபவர்கள். அவங்க தொந்திரவு அதிகமாக இருக்கும்.அவங்க வகுப்புக்கு வந்தால் யாரும் நெற்றிப் பொட்டு வைச்சுக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது, மருதாணி வைக்கக் கூடாது என்றெல்லாம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு நான் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டதே மெயின் சப்ஜெக்ட்! இதெல்லாம் கடக்கும்போது நனந்த சிறு சம்பவங்கள்.

   நீக்கு
  2. அது புரிஞ்சது ஶ்ரீராம். ஆனால் அதற்காக அவங்க "கவனி"க்கச் சொன்னது யாரை? என் கருத்து அதைப் பற்றியே! மாமாவின் அலுவலக நண்பர் ஒருவர் மனைவி நான் ராஜஸ்தானில் இருந்த கால கட்டத்தில் இலங்கை வானொலியில் தினம் ஆறுமணிக்கு ஒலிபரப்பாகும் தினகரனின் பேச்சைக் கேட்கச் சொல்லி வற்புறுத்துவார். விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்னால் நீங்க என்ன சொன்னாலும் உங்க பெருமாள் எழுந்திருக்கவா போகிறார்? என்றெல்லாம் கேட்பார். ஒரு தரம் நான் கொஞ்சம் கடுமையாகவே சொல்லிவிட்டேன் எங்க குடும்பத்து வழக்கங்களில் தலையிட வேண்டாம் என்பதை. கொஞ்ச நாள்கள் பேச்சு வார்த்தை இல்லை. பின்னர் சரியானது.

   நீக்கு
  3. தவறாகப் புரிஞ்சுக்கறது வேறே! ஆனால் நல்லது செய்யப் போய் அது எதிராகத் திரும்பிடும் எனக்கெல்லாம். இது எங்க குழந்தைகளிடம் கூடச் சில சமயம் நடக்கும். :((((

   நீக்கு
  4. உங்கள் ராஜஸ்தான் சம்பவம் போல மிக சமீபத்தில் இங்கு ஒன்று நடந்தது. நான் அதைப் பெரித்தாக மதிக்கவில்லை!

   நீக்கு
  5. இங்கே ஶ்ரீரங்கத்தில் நடந்து கொண்டே இருக்கு. சென்ற வருடம்/அல்லது இரு வருடங்கள் முன்னர் சுற்றுலாப் பயணிகளைப் போல் கோயிலுக்குள் நுழைந்து ஆயிரக்கால் மண்டபத்தில் பிரசாரம் நடக்க ஆரம்பிக்க பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பிப் போனார்கள். அறமற்ற நிலையத் துறையோ காவல்துறையோ கண்டுக்கவே இல்லை.

   நீக்கு
 33. //உதவி செய்ய முடியாவிட்டாலும் யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது என்பது என் அடிப்படைக் கொள்கை. //

  உங்கள் அடிப்படை கொள்கை அருமை. எப்படியோ அவர் உங்களை புரிந்து கொண்டார். தினம் சந்திப்பவர் பாராமுகம் சங்கடப்படுத்தும். இப்போது சகஜ நிலை திரும்பியது மகிழ்ச்சி.

  அடுத்தவர் மூலம் தவறான எண்ணம் ஏற்பட்டாலும் நேரில் கேட்டு தீர்த்துக் கொள்வது நல்லதுதான்.

  கவிதை நன்றாக இருக்கிறது.
  தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவரம் அருமை.

  மீசை நன்றாக இருக்கிறது, இருந்தாலும் காவலர்களுக்கு உள்ள மாதிரி தானே தலைமுடி வெட்டிக் கொள்வது , மீசை வைத்துக் கொள்வது என்று இருக்க வேண்டும்!

  தனி மனிதர் என்றால் எப்படி வேண்டுமென்றாலும் மீசை , தலைமுடியை வைத்துக் கொள்ளலாம்.

  மதன் ஜோக்ஸ் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 34. ''மீசை, என் சுயமரியாதை சம்பந்தப்பட்டது என்பதால் சஸ்பெண்ட் ஆனாலும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்,'' என, ராகேஷ் ராணா கூறி உள்ளார்.//

  ஹாஹாஹாஹாஹா அப்ப நம்ம கில்லர்ஜியும் போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல சேர்ந்திருக்க முடியாது போல!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மூர்ல இந்த பொறாமை கிடையாது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. கடவுளே! ஶ்ரீராம் இந்த அளவுக்கு "அப்பாவி"யா????????????????

   நீக்கு
  3. நான் மீசை வளர்ப்புக்குச் சொன்னேன் கீதாக்கா..

   நீக்கு
 35. மதனின் ஸ்டார் ஹோட்டல் ஜோக்ஸ் அத்தனையும் "ஸ்டார்ஸ்"!!

  சிரித்துவிட்டேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 36. என் அண்ணா பெண்ணும் ஆவடியில் ஒரு பள்ளியில் படித்தாள். அங்கேயும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆகவே இதற்கும் இப்போதைய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதோடு ஶ்ரீராமுக்கு நடந்தது தொண்ணூறுகளில். அப்போது நல்ல அரசு தானே ஆண்டு கொண்டிருந்தது. இப்போ அதிகமாய் வெளிப்படுகிறது. அப்போதெல்லாம் அரசு ஆதரவு இருந்ததால் அதிகம் வெளிவரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆங்காங்கே உள்ளுக்குள் நிறைய சிறு முயற்சிகள், சம்பவங்கள் உண்டுதான். இவை அவ்வளவாக வெளிவருவதில்லை.

   நீக்கு
 37. என்னைப் பொறுத்தவரை என்னோட ராசி யாருக்கு நான் முழு மனதுடனும் ஆர்வத்துடனும் ஓடி ஓடிச் செய்கிறேனோ அவங்க எனக்கு ஜன்ம விரோதியாகிவிடுவார்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் என்னைப் பற்றி தூஷணை சொல்லியே அது எனக்குத் தெரியாமலும் பார்த்துக்குவாங்க. மீறிச் சில/பல சமயங்கள் வந்துடும். அப்போ பயங்கரமாகச் சண்டை போடுவாங்க. ஆனாலும் என் கெட்ட புத்தி மறுபடி அவங்க உதவி கேட்கும்போது உடனே ஓடிப் போய்ச் செய்யச் சொல்லும். இப்படி நிறைய ஏமாந்திருக்கேன். முகநூலில் இம்மாதிரியான அனுபவம் கொண்டவங்க நாங்க சிலர் இருக்கோம். ஜென்ம நக்ஷத்திரமும் ராசியும் தான் காரணம்னு பேசிப்போம். :)))))

  பதிலளிநீக்கு
 38. நான் அங்கு இருந்தபோதும் இப்படித்தான்...

  மதம் மாறியதும் இங்கேயே இன்னொரு கல்யாணம்.. (மதம் மாறிய பிலிப்பினோ, சிங்களம்..) இல்லாவிடில் ஊரில் இருந்து பழைய மனைவியை வரவழைத்துக் கொள்ளலாம்.. நல்ல சம்பளத்துடன் வேறு வேலை - என்றெல்லாம் ஜிகினாக்கள்..

  ஒருமுறை கோபம் வந்து விட்டது..நல்லவேளை தப்பித்து விட்டேன்.. மேலிடத்தில் இழிவாகப் பேசினான் என்று பொய்ப் புகார் அளித்து விட்டால் முடிந்தது.. நம்முடன் இருப்பவனே ஆமாம் என்று சாட்சி சொல்வான்..

  எப்படியோ புன்னகையுடன் எல்லாவற்றையும் கடந்து வந்தாயிற்று..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடந்து வரும் நேரம்தான் கடினம். அப்புறம் மெள்ள புன்னகைத்துக் கொள்ளலாம்

   நீக்கு
 39. மதுரைக்காரன் ஒருவன் மாறினான்.. ஒரே நாளில் மூன்றரை லட்ச ரூபாய் கிடைத்ததாம்.. பேசிக் கொண்டார்கள்.. ஒரு மாத சம்பளமும் மருத்துவ விடுப்பும் கொடுத்தது நிர்வாகம்..

  பதிலளிநீக்கு
 40. வாசித்து விட்டேன். 'எங்கே காணோம்' என்று நினைக்காமல் இருப்பதற்காக இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி அண்ணா..
   நலம் தானே!..
   தங்களைக் கடந்த செவ்வாய் அன்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்..

   நீக்கு
  2. வாங்க ஜீவி ஸார்.. வணக்கம். நலம்தானே?

   நீக்கு
  3. நலம் தான் ஸ்ரீராம்.

   நலம் தான் தம்பி. தங்கள் கதைப் பகுதியையும் வாசித்தேன. மூச்சு முட்ட வர்ணனைகளின் கடைசிப் பகுதியில் கதையை நகர்த்த சாமர்த்தியமாக முயன்றிருந்ததையும் ரசித்தேன்.

   நீக்கு
  4. அன்பின் அண்ணா..
   காற்றினிலே 2/6 பகுதிக்கான கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 41. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பம் அருமை. முதல் எண்ணங்களாக நேரம் பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மையே..! எப்போதும் படிப்பது போல் உங்கள் முதல் எண்ணங்கள் என்ற தொகுப்பை இன்று காலையில் படிக்க எனக்கு நேரமில்லாமல் போய் விட்டது. அதனால் இன்று தாமதம். (என் நேரம் இப்போதுதான் பதிவை படிக்க உதவியது என்பதில் உள்ள என் நேரம் என்பது வேறு. :))

  தங்களை தவறாக புரிந்து கொண்டவரிடம் நன்றாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் பேசியிருக்கிறீர்கள்...பாராட்டுக்கள். இந்த இடத்தில் தெளிவான பேச்சு மட்டும் ஒருவருக்கு பேசவே வரவில்லையென்றால், இருக்கும் பிரச்சனைகளும், திசைக்கொன்றாக முகம் திருப்பிக் கொண்டு புதுப்புது பிரச்சனைகளை வெவ்வேறு தினுசாக தினமும் வரவேற்கும்.

  /என் அப்பா அடிக்கடி சொல்வார், ஒரே இடத்தில் பல வருடங்கள் இருந்தால் அது பல்வகைப்பட்ட பொறாமைகளுக்கு வழி வகுக்கும் என்று. /

  தங்கள் தந்தை சொன்னது நூற்றுக்கு நூறு சரியானது. ஒருவருக்கு நம்மையோ, இல்லை நமக்கு ஒருவரையோ,பிடிக்காமல் மனக்கசப்பு வருவதற்கு இது சாதகமாயும் அமையும்.

  அவர்களுடன் இன்னொரு கூத்து உண்டு என்கிறீர்கள். அது அடுத்த வாரத்தின் அலசலோ? இல்லை, அவர்கள் மதத்தில் அவர்கள் பற்று மிகுந்தவர்கள் என்பதால், தங்களையும் அவ்வாறே மாறி வரும்படி வறுப்புறுத்திய கூத்தா? எப்படியோ உங்களை புரிந்து கொண்டு பிரச்சனைகள் ஏதுமின்றி, இதுவரை அவர்கள் நட்பாக இருப்பது சந்தோஷமே..!

  இடையிடையே, பதிவு வெளிவந்து நாங்கள் படித்து வருத்தப்பட்டு, கவலைப்பட்டு கருத்துகள் சொல்வதற்குள், தங்களுக்கு பிடித்தமானவர்கள் பதிவுடனே வந்து தங்கள் பேச்சுக்களை ரசித்து, மனதில் வருத்தத்தோடு அங்கலாய்த்து, நட்பாக இருந்து ஆறுதலாக உரையாடியதையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்கள் இந்த வாரத்தோடு சரி.. அடுத்த வாரம் வேற ஆள் கமலா அக்கா!

   நீக்கு
  2. இவரால் ஏற்பட்ட இன்னொரு அனுபவம் முடிந்தால் பிறகு இன்னொரு வியாழனில்!

   நீக்கு
 42. வணக்கம் சகோதரரே

  கவிதை நன்றாக உள்ளது. நல்ல கருத்தாழம் மிக்க வரிகள். வேண்டிய எழுத்தை வேண்டும் பொழுதில் சேர்த்துக் கொள்ள வசதிகள் இருந்தும் சி(ப)லருக்கு வாழ்க்கை புரியாத புதிராகத்தான் உள்ளது.

  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பற்றிய செய்திகள் அருமை.

  பெரிய மீசையால் பணி போனது அறிந்து கொண்டேன். எங்கும் விதிகளின்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது நம் விதியின் வலிமை போலும்.

  நட்சத்திர ஹோட்டல்.. மதன் அவர்களுடைய நகைச்சுவை அனைத்தையும் ரசித்தேன்.

  17வது மாடியிலிருந்து பாரசூட் கூட தெருவிற்கு கொண்டு போய் சேர்த்து விடும். ஆனால், 23வது மாடியிலிருந்து நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க குதிப்பவர் தைரியமாக குதித்தாலும் குளத்தில் போய் விழுவாரா? ஹா. ஹா.

  கதம்பம் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நீச்சல் குளத்தில் டைவ் அடிக்க குதிப்பவர் தைரியமாக குதித்தாலும் குளத்தில் போய் விழுவாரா? // - என்ன மாதிரிலாம் சந்தேகம் வருது கமலா ஹரிஹரன் மேடத்திற்கு. ஹா ஹா

   நீக்கு
  2. ஹா.ஹா.ஹா. பதினேழுக்கான பாராசூட்டின் உதவியில்லாமல் மேலும் ஆறு மாடி உயரத்தை கடந்து கீழிறங்க அவர் தன் கைகளை நம்ப வேண்டுமே என்ற பயத்தில் ஒரு சந்தேகமும் வந்து விட்டது. வேறு ஒன்றுமில்லை. :)

   நீக்கு
  3. நீச்சல் குளத்தில் போதுமான தண்ணீர் வேறு இருக்கவேண்டுமே!!! மண்டை உடையாமல் இருக்க வேண்டும்! நம் கவலை நமக்கு.

   நீக்கு
  4. தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக இப்பத்தானே வற்றாத வெள்ளம் மூலமாக சந்தித்திருக்கிறோம். இந்தக்கவலை வரலாமோ? ஹா ஹா.

   நீக்கு
 43. கவிதை நேரம் பற்றி சொல்லியிருந்த கருத்து எங்க போச் - அதுவும் வாழ்க்கைப் புதிர் கட்டத்துக்குள்ள போய் உட்கார்ந்திருச்சோ?!!!

  ஸ்ரீராம் கவிதை பிடித்திருந்தது. வாழ்க்கையே புதிர்தான் எத்தனை வெற்றுக் கட்டம் இருந்து மாற்றி மாற்றி போட்டுப் பார்த்தாலும் புதிரை அவிப்பது சிரமம்தான். ஒரு க்யூப் ஸ் புதி கூட போட்டுரலாம்!!! ஆனால் இந்தப் புதிர் மட்டும் ம்ஹூம்!

  போனஸ் வேற இருக்கு மாத்தி மாத்தி போட்டுப் பாருங்க ஸ்‌ரீராம் உங்களுக்குக் கிடைச்சா எனக்கும் நைஸா ரகசியமா சொல்லுங்க!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 44. இன்று நிறைந்த ஜோக்ஸ் அனைத்தும் சிரிக்க வைத்தன.
  ஒருவரை பிடிக்காமல் போவது பெரும்பாலும் தப்பான எண்ணங்கள்தான் அதை புரிய வைப்பதுதான் பெரும்பாடு நீங்கள் புரியவைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 45. சின்னச்சின்னதாய் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நட்பை உதாசீனப்படுத்தி செல்லும் சிலர்.... சில அனுபவங்கள் எனக்கும் உண்டு. பதிவின் மற்ற பகுதிகளும் நன்று. அனைத்தும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 46. பாராமுகத்துடன் இருந்தவரை அப்படியே விட்டு விடாமல் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து நட்பைத் தொடர்ந்தது பாராட்டுக்குரியது. அடுத்த வாரம் தொடரக் காத்திருக்கிறேன்.

  கவிதை அருமை.

  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
 47. ஸ்ரீராம்ஜி உங்களுக்கும் இப்படியான நிகழ்வா? உங்களிடம் பேசாமல் விலகிய நட்பிடம் நேரில் சென்று உங்கள் மனதைச் சொல்லிய விதம் மிக நன்று. பாராட்டுகள். வேறு என்ன நிகழ்வு என்பதற்குத் தொடர்கிறேன். படங்களோடு சொல்லியிருப்பது ரசிக்கும் படி இருக்கிறது.
  இப்படியான நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் வரத்தான் செய்யும் போல. வயதானபிறகும் கூட சிலர் இப்படி இருப்பதைக் காண நேர்கிறது.

  ஜோக்ஸ் ரசித்தேன்.

  உங்களின் கவிதை அருமை. புதிர்தான் அடுத்து என்ன என்பதே தெரியாத போது எல்லாமே புதிர்தானோ.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசாமல் விலகி இருந்தால் கூட சரி என்று விட்டு விடலாம். எனக்கு எதிராக சில விஷயங்கள் செய்ய ஆரம்பித்தார்!

   நன்றி துளசி ஜி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!