சனி, 26 பிப்ரவரி, 2022

'மீட்கப்பட்ட காதர்மைதீன்' - பாசிட்டிவ் பக்கங்கள் மற்றும் 'நான் படிச்ச கதை'

 

பூவெல்லாம் கேட்டுப்பார் என் பேர் சொல்லும்..


சென்னை பேசின் பிரிட்ஜ் பக்கம் உள்ள வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகம்,மாடியில் வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழை மரங்கள் வந்து என்னைப் பாரேன் என்று அழைத்தது. 

தரையில் தண்ணீர் விட்டு வளர்த்தாலே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் வாழை, கான்கீரிட் கட்டிடத்தின் மாடியில் செழித்து வளர்ந்து காணப்படுகிறதே, பக்கத்தில் போய் பார்த்து விடுவது என்று மொட்டை மாடிக்கு சென்றால் அங்கே செடி கொடிகள் நிறைந்த ஒரு சோலைவனமே காட்சி தந்தது.

அவைகளை பராமரித்துவரும் மாநகராட்சி ஊழியர் எஸ்.ராஜிதான் இதற்கு காரணமானவர்.

சில வருடங்களுக்கு முன் இங்கு பொறியாளராக பணியாற்றிய ஜெயராமன் என்பவர்தான், இவ்வளவு பெரிய மொட்டை மாடியை மாடித்தோட்டம் போட பயன்படுத்தலாமே என யோசனை சொல்லி அதற்கான உதவிகளும் வழங்கினார்.

இதைப் பார்த்துக் கொள்ள ஆர்வம் உள்ள ஒரு ஊழியர் வேண்டுமே என்று யோசித்த போது எதிலுமே ஒரு ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய என்னை நியமித்தனர்.

ஆரம்பத்தில் அழகுதரும் செடிகள் வளர்த்தேன் அதன் பின்னர் கத்திரி வெண்டை அவரை புடலை உள்ளீட்ட செடிகளும் வாழை,பப்பாளி,சப்போட்டோ,கொய்யா போன்ற மரங்களும் செம்பருத்தி,ரோஜா போன்ற மலர்ச் செடிகளும் வைத்தேன் .நல்ல பலன் கிடைத்தது அதன் பிறகு நார்த்தங்காய்.எலுமிச்சை என்று பலவித செடி கொடிகளை வளர்த்துவருகிறோம்.பயன் கிடைப்பதுடன் கண்ணுக்கும் கட்டிடத்திற்கும் குளிர்சியாக இருப்பதால் இப்போது கட்டிடத்தின் மாடிப்படிகள் மற்றும் வராண்டா என்று பல இடங்களில் செடிகள் வைத்துள்ளோம்.இப்போது மொட்டை மாடி முழுவதும் செடி கொடி மரம் கீரை வகைகள் வளர்த்து வருகிறோம், காலையில் மாடிக்கு வந்து இந்த செடிகொடிகளுக்கு தண்ணீர் விடுவது உரமிடுவது உள்ளீட்ட பராமரிப்பு பணிகளை பார்த்து முடிப்பதற்குள் மாலை வந்துவிடும்.

செயற்கை உரமே கிடையாது செடிகளுக்கு விடும் தண்ணீர் தரைக்கு போய் தரையை பாழாக்கிவிடக்கூடாது என்பதற்காக தேங்காய் நார் போட்டு அதன் மேல் செம்மண்,ஆற்று மண்,மண்புழு உரமிட்டு செடிகளை வளர்க்கிறோம் இதில் வளரும் வெண்டை கத்திரி உள்ளீடட்டவை நல்ல ருசியாக இருப்பதுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும். 

விளைந்த காய்கறி கீரைகளை இங்குள்ள எங்கள் அலுவலர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவோம் இதனால் எல்லோரும் சந்தோஷமாக இங்கு வந்து செடிகொடிகளை பார்த்து தங்களாலான உதவிகளை வழங்குவர் எனக்கான பங்கை இதுவரை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்றது இல்லை வழியில் எதிர்படும் ஏழை பெண்களிடம் கொடுத்துவிடுவேன் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷப்படுவர், மறுநாள் பார்க்கும் போது காய் அவ்வளவு ருசிம்மா என பாராட்டவும் செய்வர்.

ஒவ்வொரு செடி கொடிகளையும் அது வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், நீ ஒரே ஆளா இவ்வளவையும் பராமரிக்கிறாய் என எல்லோரும் ஆச்சரியமாக கேட்பர் நான் இதை வேலையாக பார்த்தால்தானே சோர்வுவரும் என் பிள்ளைகளா பார்க்கும் போது ஆனந்தம்தானே வரும்.

பிள்ளைகளுக்கு ஆகாரமே தண்ணீர்தானே ஆகவே விடுமுறை நாள் என்றெல்லாம் பார்க்கமாட்டேன் விடிந்ததும் செடிகளை பார்க்க வந்துவிடுவேன் நான் வரும்போது வாடியிருக்கும் செடிகள் என்னைக்கண்டதும் மலர்ந்து சிரிக்கிற மாதிரியே இருக்கும் இது எல்லாம் சொன்னால் புரியாது அனுபவித்தால்தான் தெரியும்.

அவ்வளவு ஏன் என் மகளுக்கு தலைப்பிரசவம் கூடவே இருந்து தாய்தான் பார்க்கணும் ஆனா நான் செடி கொடிகள் மீது வச்சிருக்கிற பாசம் என் மகளுக்கு தெரியும் அவளே அம்மா என்னைப்பார்த்துக்க ஆள் இருக்கு ஆனா நீ வச்ச செடியப்பார்க்க உன்னைவிட்ட ஆள் இல்ல போய்ட்டு வாம்மா என்று அனுப்பிவைத்தார். 

நல்லா மழை பெஞ்சா இரண்டு மூணு நாளைக்கு செடிக்கு தண்ணீர்விட வேண்டிய தேவை இருக்காது அந்த நேரம் பார்த்து போகவேண்டிய இடத்திற்கு போய்ட்டு வந்துருவேன் எங்கே போனாலும் நினைப்பு என்னவோ இங்கதான் இருக்கு,இருக்கும்..

-எல்.முருகராஜ் (தினமலர்) 

= = = = =

சென்னையின் பிரக்ஞானந்தா உலகை வியக்க வைத்த கதை !

உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார்.

ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார். இவர் 8ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். 



இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச்  வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 19 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் முதல் முறையாக உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் செஸ் விளையாட்டில் அசுர வளர்ச்சி பெற்று வரும் பிரக்ஞானந்தா கடந்து வந்த பாதை என்ன?

சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய தந்தை ரமேஷ்பாபு மற்றும் தாய் நாகலட்சுமி எப்படி இவர்களின் கவனத்தை மாற்றுவது என்று நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தீவிர செஸ் ரசிகரான ரமேஷ் பாபு தன்னுடைய மகள் வைஷாலியை முதலில் செஸ் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். 

அக்கா வைஷாலி செஸ் பயிற்சி வகுப்பிற்கு செல்வதை பார்த்த பிரக்ஞானந்தாவிற்கு சிறுவயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்காவிடம் இருந்து நான்கு வயது முதல் செஸ் கற்று கொள்ள தொடங்கினார். 5 வயது முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தன்னுடைய 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார். 


இதைத் தொடர்ந்து  12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்பின்னர் 2019 ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் 2019 டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார். 

ஒருகட்டத்தில் இவர் மற்றும் இவருடைய அக்கா வைஷாலியின் செஸ் பயிற்சிக்கு பெற்றோர்களால் பணம் செலுத்த முடியாத சூழல் உருவாகியது. அப்போது தொழிலதிபர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல் பிரக்ஞானந்தாவின் பள்ளி அவருக்கான பள்ளி கட்டணம் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை தளர்த்தியது. இதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரக்ஞானந்தா தொடர்ந்து செஸ் விளையாட்டில் கவனம் செலத்தி வருகிறார். இவர் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. அவருக்கு பதிலாக அவருடைய ஆட்டம்தான் அதிகம் பேசும். திநகரிலுள்ள பிரபல செஸ் பயிற்சியாளார் ஆர்.பி.ரமேஷின் மாணவர்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன் மெக்ன்ஸ் கார்ல்சனை அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


= = = = ==========================================================================================================

தமிழின் பெருமை...

திருநெல்வேலி : சீனப் பெண், தன் மதுரை பயணம் குறித்து எழுதிய நுால் வெளியீட்டு விழா, திருநெல்வேலியில் நடந்தது.


சீனாவைச் சேர்ந்தவர் ஜாங் கீ, 33; சீனாவின் யுனான் மிஞ்சூ பல்கலையில், தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். தமிழ் மீதான ஆர்வத்தால், தன் பெயரை நிறைமதி என, வைத்துஉள்ளார். இவர், மதுரை காமராஜர் பல்கலையில், தமிழியல் துறை நடத்திய அயலக பேராசிரி யர்களுக்கான 27 நாள் பயிற்சியில் பங்கேற்றார். அப்போது, மதுரை, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், கீழடி உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.  அவர், தன் பயணம் குறித்து எழுதிய, 'மலைகள் தாண்டி மதுரைப் பயணத்தில், சீனப் பெண்ணின் பண்பாட்டு தேடல்' நுால் வெளியீட்டு விழா, தமிழ் முழக்கப் பேரவை சார்பில், திருநெல்வேலியில் நடந்தது.பசிபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், இணையவழியில் தலைமை வகித்தார். டாக்டர் மகாலிங்கம் அய்யப்பன் நுாலை வெளியிட, பேராசிரியர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.  நுாலாசிரியர் நிறைமதி தமிழில் பேசுகையில், ''மதுரை பயணமே மகிழ்ச்சியை தந்தது. தமிழர்களின் அன்பையும், விருந்தோம்பலையும் மறக்க இயலாது. மணிமேகலை காப்பியத்தை, மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வின் மூலம் சீன மொழியில் மொழி பெயர்க்கிறேன்,'' என்றார்.

=============================================================================================

கொடுமையிலிருந்து விடுதலை.  தூதரகத்தின் உதவி.

ராமநாதபுரம் : கத்தார் நாட்டில் ஒட்டகம் மேய்க்க வைத்து சித்ரவதை செய்யப்பட்ட ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மீட்கப்பட்டார்.


ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காதர்மைதீன் 39. திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக கத்தார் நாட்டிற்கு டிரைவர் வேலைக்காக பணம் கொடுத்து 2021 ஜூலையில் சென்றார்.அங்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கப்பட்டது. அதை மறுத்த போது சித்ரவதை செய்தனர். சம்பளமும் சரியான உணவும் கிடைக்காமல்அவதிப்பட்டார். அவரது நிலை குறித்து கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டார்.

இது குறித்து தினமலர் நாளிதழில் பிப்.4ல் செய்தி வெளியானது. அவரை வேலைக்கு வைத்திருந்தவர் அவரை துாதரகத்தில் ஒப்படைத்தார்.நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தவரை மனைவி,குழந்தைகள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

=======================================================================================================================


நான் படிச்ச கதை
- ஜீவி  -
===========================

மெளனியின்  'அழியாச்சுடர்'


அழியாச்சுடர் லேசில் மறக்க முடியாத சிறுகதை.

தன்னையும் அறியாத உத்வேகத்தில் ஒருவன் பெண்ணொருத்தியிடம் உறுதிமொழி மாதிரி வெளிப்படுத்திய வார்த்தைகளை பல ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நிறுத்திக் கொண்டு புழுங்கும் கதை இது.

இத்தனைக்கும் அவள் மிக நெருக்கத்தில் அவனருகில் இருந்த பொழுது தான் அவன் அதை அவளிடம் சொன்னான். கோயில் சந்நிதி என்பதால் சுற்றி பலர் இருந்தனர் என்பது வாஸ்தவம் தான். அந்த சூழ்நிலையில் யாரும் இதைக் கேட்டிருக்க முடியாது. இருந்தும் கோயிலில் ஈஸ்வரன் சந்நிதிக்கு முன் இதை அவன் அவளிடம் சொன்னதால், உள்ளிருந்த விக்கிரகம், எதிர்த்தூணில் ஒன்றி நின்ற யாளி, இதெல்லாம் அவன் சொன்னதைக் கேட்டிருக்கும் என்று எண்ணுகிறான்.  கேட்டதை ஊர்ஜிதப்படுத்துவதைப் போல கீற்றுக்கு மேலே சந்தனப்பொட்டுடன் வீபூதி அணிந்திருந்த அந்த விக்கிரகம் உருக்கொண்டு புருவஞ்சுழித்து சினம் கொண்டது போலவும், தூணில் ஒன்றியிருந்த யாளியும் மிக மருண்டு பயந்து முகம் சுழித்து பின் கால்களில் எழுந்து நின்று பயமூட்டியதாகவும் உணர்கிறான்.

மிஞ்சி மிஞ்சிப் போனால், அவளுக்கு பதிமூன்று வயதிருக்கும்.   பின்னிய ஜடை பின் தொங்க,  மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சதங்கைகள் ஒலிக்க அவள் போய்விடுகிறாள். பிராகாரத்தை அவள் சுற்றி வருகையில் மீண்டும் அவளைத் தனியே பார்க்கிறான்.

அவளும் அவனைப் பார்க்கிறாள். 'உனக்காக நான் எது செய்யவும் காத்திருக்கிறேன்,  எதையும் செய்ய முடியும்' என்று அவளிடம் சந்நிதியில் அவன் சொன்ன அந்த வார்த்தைகளைத் திருப்பிக் கொள்ளும்படிக் கேட்டு அவள் அவனிடம் கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்த்தாக அவனுக்குத் தோன்றுகிறது.   அவளை நெருங்கும் அவன் மறுபடியும் ஒரு தரம் 'என்ன வேண்டுமானாலும் உனக்காக'  என்று ஆரம்பித்து முழுதும் சொல்லி முடிக்காமல் தடுமாறித் திரும்புகிறான்.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து அவன் கோயிலுக்குப் போகும் பொழுது மறுபடியும் அவளைப் பார்க்க நேரிடுகிறது.  முன்பு அவளை அவன் பார்த்த மாதிரி இப்பொழுது அவள் இல்லை.    ஒரு நவநாகரிகத் தோற்றம்.  'இதுவும்  நல்லதுக்குத் தான்;  அப்பொழுது வேகத்தில் ஏதோ சொன்னதை இப்பொழுது ஒரு பொருட்டாக அவள் எண்ண மாட்டாள்' என்று அவன் நினைத்துக் கொள்கிறான்.


அதே சமயம் ஒருவித தியான நிலையில் கடவுள் முன் கைகூப்பி நிற்பவள் சடாரென்று திரும்பி அவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வை அவள் அவனைக் கண்டு கொண்டு விட்டாள் என்று புலப்படுத்துகிறது.  அவள் பார்வை எதிரில் இருந்த தூணில் படுகையில் அவன் முன்பு அவளிடம் சொன்ன வாக்கின் அழியாத சாட்சியாக இருந்த அந்த யாளியும் எழுந்து நின்று கூத்தாடுவது போல் அவனுக்குத் தோன்றுகிறது.  ஆணை இடுவது போல அவள் பார்வை அவனை ஊடுருவுகிறது.  என்ன நடந்தது என்று அவன் சுதாரிப்பதற்குள் அவள் போய் விட்டாள்.

--- இந்தக் கதையில் தான் மெளனியின் பிரசித்தி பெற்ற வாக்கியமான, 'நாம் சாயைகள் தாமா?.  எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்ற வாக்கியம் வருகிறது. அந்த வாக்கியத்தின் அடிப்படையில் அவரவர் அவரவருக்குத் தோன்றிய வழியில் இந்தக் கதையை அவதானித்துக் கொள்ளலாம்.

தமிழ் எழுத்துலகிற்கு தற்செயலாக வந்தவர் தான் மெளனி. மெளனியைப் பொறுத்த மட்டில் எல்லாமே தற்செயல் தான்.  இவர் எழுதுவதற்கு தூண்டுகோலாகவும் முழு முதற் காரணமாகவும் இருந்தவர் 'மணிக்கொடி' பி.எஸ்  ராமையா அவர்கள். தமிழில் எழுதுவது பற்றி எந்த நோக்கமும் இல்லாதிருந்த சுப்ரமணியனை ஊக்குவித்து  அவரை எழுதச் சொல்லிக் கதையைப் பெற்றவர், 'மெளனி' என்கிற புனைப்பெயரையும் அவருக்கு சூட்டி பெற்ற கதையை மணிக்கொடியில் பிரசுரித்தார்.

மெளனி எழுதிய மொத்த சிறுகதைகள் இருபத்து நான்கு என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். எழுதியது எவ்வளவு என்பதை விட 'தமிழ்ச் சிறுகதை உலகின் திருமூலர்' என்று புதுமைப் பித்தன் இவரைப் பாராட்டி மகிழ்ந்தது தான் பெரிய விஷயமாகப் போயிற்று.

மெளனியின் கதை உலகம் தனித்தன்மையானது.  சிலந்தியென தன்னைச் சுற்றித் தானே பின்னிக் கொண்ட வலையிழைகள் தாம் இவரது அத்தனை கதைகளும்.  மெளனிக்கு வார்த்தைகள் மிக மிக முக்கியம்.  ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் விரும்புகிற அர்த்தத்தைப் புதைத்து வைத்திருப்பார்.

புதைத்திருப்பது எது என்று கிளறிப் பார்ப்பவர்களுக்கு புரிதலும் பல சமயங்களில் அசாத்தியமான காரியமாக அமைந்து விடுவதும் உண்டு. அத்தனை கதைகளையும் தனக்காகத் தான் அவர் எழுதிக் கொண்டாரோ என்று கூடத் தோன்றும்.  யாரோ அவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரசுரித்து விட்ட மாதிரி அப்படியொரு தோற்றம். அவரது பெரும்பாலான கதைகளுக்கும் 'அவன்' அல்லது 'அவள்' தான் கதைகளின் நாயக, நாயகிகள்.

மெளனி பிறந்தது, தஞ்சை மாவட்ட செம்மங்குடியில். கல்லூரியில் படித்தது உயர் கணிதமும் தத்துவமும்.  சாஸ்திரிய சங்கீதத்தில் வெகுவாக ஈடுபாடு கொண்டவர். கும்பகோணத்திலும் திருச்சியிலும் படித்தவர் சிதம்பரத்தில் வாழத் தலைப்பட்டார்.  அது என்னவோ தெரியவில்லை, ஒரு மாதிரியான வெறுமைச் சூழ்நிலையும், அந்தப் பாலைச் சுழற்சியின் முடிவாகிய மரணமும் மெளனியின் ஆழ் மனத்தில் பதிந்து போய் விட்ட உணர்வுகள் போலும். அத்தனை கதைகளிலும் தவறாது இந்த உணர்வுகளைப் பதிந்திருக்கிறார். வாழ்க்கை பூராவும் அதை வெல்வதற்காக தேடிய உபாயங்கள் போல அவரது கதைகள் தோற்றம் தரும்.

57 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்கியம் நிறை வாழ்வு நமக்குக் கிடைக்க இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  2. மௌனி அவர்களின் சிறுகதையின் மொழி
    அப்படியே ஈர்க்கிறது. அந்தக் காலங்கள் இந்த மௌன மொழிகளில்,
    பார்வைகளில்
    நிறைந்திருந்தன.

    அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. ''அது என்னவோ தெரியவில்லை, ஒரு மாதிரியான வெறுமைச் சூழ்நிலையும், அந்தப் பாலைச் சுழற்சியின் முடிவாகிய மரணமும் மெளனியின் ஆழ் மனத்தில் பதிந்து போய் விட்ட உணர்வுகள் போலும். அத்தனை கதைகளிலும்''

    இதைவிடத் தெளிவாகச் சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
  4. பிறவா யாக்கை பெரியோன் மலரடி தாழ்ந்து பணிந்து அனைவரின் நலனுக்கும் துதிப்போம்.

    காலை வணக்கம்.
    மாலை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. செடி, கொடிகள் மீதான பற்று எல்லோரும் வராது.

    பிரக்ஞானந்தா இன்னும் சிகரம் தொட வாழ்த்துவோம்.

    திரு. காதர் மைதீன் அவர்கள் இனியாவது மகிழ்ச்சியாக வாழணும்...

    பதிலளிநீக்கு
  6. திரு காதர் மைதீன் நல்ல படியாகத் திரும்பி வந்ததற்கு இறைவனுக்கு நன்றிகள்.
    தூதரகம் உடனடியாக செயல் பட்டதே அவர் குடும்பத்துக்கு
    கிடைத்த பாக்கியம். மிகவும் நல்ல செய்தி. நன்றி மா.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  8. // மீட்கப்பட்ட காதர்மைதீன் - நான் படிச்ச கதை //

    இப்படியொரு கதையும் இருக்குது போல.. ன்னு நெனச்சேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயக்குமார் சார் சொன்னதும் புரிந்தது.  மாற்றி விட்டேன்.  இப்போது பாருங்கள்.

      நீக்கு
  9. அழகான மாடித் தோட்டம்...
    பசுமையே வாழ்க!..

    பதிலளிநீக்கு
  10. // சென்னை பிரக்ஞானந்தா உலகை வியக்க வைத்த கதை //

    மேலும் பல சிறப்புகளை எய்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  11. // மதுரையின் பெருமையைக் கூறும் சீனத்து ஜாங் கீ..//

    அழகே தமிழே நீ வாழ்க..
    அமுதே உந்தன் பேர் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  12. " கார் ஓட்டுறத்துக்குன்னு கூட்டிட்டுப் போய் ஏண்டா ஒட்டகம் மேய்க்க விட்டாய்?.. "

    - அப்டின்னு ஒருத்தர் கூட கேக்கலையே!..

    பதிலளிநீக்கு
  13. இன்றைய கதையை உள் வாங்கிக் கொள்வதற்கே தனித் தன்மை வேண்டும்..

    பதிலளிநீக்கு
  14. ஜீவி அய்யாவின் அழியாச்சுடர் அறிமுக விமரிசனம் சிறப்பாக இருந்தது. 


    அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். இதில் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.அன்று வாய் விட்டு சொல்ல முடிந்த இளமைத் தைரியம் 9 வருடங்களுக்குப் பின் சொல்லமுடியாமல் முதிர்வில் உதிர்ந்து விடுகின்றது. எல்லாம் ஒரு கவிதை போன்று, ஒரு ரவி வர்மா ஓவியம் போன்று மனதைக் குத்துகிறது. 

    1937 காலகட்டத்தில் காதல் என்ற சொல்லே ஒரு அநாகரிக வெறுக்கப்பட்ட சொல்லாக இருந்தபோது இவ்வளவு சரியாக "கண்டதும் காதல்" பற்றி மௌனி எழுதியது புரட்சி தான். 

    கடைசியாக அவளின் இரு சொட்டு கண்ணீர் எத்தனை எண்ணங்களை எழுப்புகிறது. 9 வருட சரித்திரமே அதில் அடங்கியுள்ளது. கையறு நிலை பற்றி வாய் விட்டு சொல்ல முடியவில்லை. 

    //எல்லாம் அவனுக்கு தெரியும் என்ற எண்ணம் தான் எனக்கு;  "அவன்" என்பது இருந்தால். //

    கதையை வாசித்தபின் தோன்றிய ஒரே உணர்வு 'ஹூம், அதுஒரு காலம். மணிக்கொடி காலம்.' 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  15. மௌனியைத் திருத்த நான் ஒன்றுமில்லை. எனக்கு என்னமோ தலைப்பு சரியாக இல்லாததாகத் தோன்றுகிறது. அழியாச்சுடர் என்பது பொருள் ரீதியாக சரியில்லை என்பது எனது கருத்து. வேண்டுமானால் அனையாச்சுடர், அல்லது அழியாஓவியம், நினைவில் நின்றவள் என்று தலைப்புக்கள் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. 

    பதிலளிநீக்கு
  16. //மீட்கப்பட்ட காதர்மைதீன் - நான் படிச்ச கதை // என்பதில் ஒரு punctuation தவறு புது அர்த்தத்தை உண்டாக்குகிறது.
    மீட்கப்பட்ட காதர்மைதீன் , நான் படிச்ச கதை என்று இருந்தால் காதர்மைதீன் என்பது கதை ஆகிவிடாமல் இருக்கும்.

    3 சாதனை பின்னர் காதர்மைதீன் வேதனை என்று இவ்வார பாசிட்டிவ் செய்திகள். மைதீன் செய்தி பாசிட்டிவ் ஆக நான் கருதவில்லை. ஒரு செய்தி அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன் ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்..   இப்போது பாருங்கள்.

      மைதீன் செய்தது பாசிட்டிவ் அல்ல.  எனக்கென்ன என்று எ மா மே ம ஆக இருக்காமல் தூதரகம் விரைந்து செயல்பட்டதுதான் பாசிட்டிவ்.

      நீக்கு
    2. ஹா ஹா அரசு அலுவலகமும் விரைந்து செயல்படுவது பாசிட்டிவ்!

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம். வணக்கம் வெச்சுட்டு செல்கிறேன், பின்னர் வந்து கருத்து சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  18. பகிர்ந்து கொண்ட செய்திகள் அனைத்தும் சிறப்பு. கதை அறிமுகமும் நன்று.

    பதிலளிநீக்கு
  19. மாடித் தோட்டம் ராஜி செஸ் சாம்பியன் தமிழில் ஆர்வம் கொண்ட சீன பெண்மணி,மைதீன் தப்பினார் அனைவருக்கும் வாழ்த்துகள்.



    பதிலளிநீக்கு
  20. பிரக்ஞானந்தா// செய்தி வாசித்தேன் வாசிக்கும் போது இது எபியில் இடம் பெறும் என்றும் நினைத்துக் கொண்டேன்.

    பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா. முதலில் இளைஞனையும் பெயரையும் செய்தியில் பார்த்த போது டக்கென்று சின்ன வயசிலேயே ஏதோ சாமியார் போல என்று நினைத்தேன் ஹிஹிஹி.

    ஆனால் செய்தி என்னை வியப்பின் எல்லைக் கொண்டு சென்றது! மனமார வாழ்த்துவோம். முகமும் என்ன ஒரு களை அந்தக் கண்களில் ஏதோ ஒன்று வித்தியாசமாகத் தெரிகிறது. முகமே சொல்கிறது மிகவும் அமைதியான பையன் அதிகம் பேசமாட்டார் என்று.

    பல வெற்றிகளைத் தொட வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எல்லாரும் பாராட்டுகிறார்கள் அந்த இளைஞனை. தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி அடையப் பிரார்த்திப்போம். இதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.

      நீக்கு
    2. ஆமாம் அக்கா...கடவுள் நல்ல பெற்றோரையும் கொடுத்திருக்கிறார். அம்மா சிறுவயதில் குழந்தைகளை டைவேர்ட் செய்யப் போக....பாதை நல்ல வழியில் திரும்பியிருக்கிறது. வெற்றிகள் அக்குழந்தையை நிதானமாகச் செயல்படவும் வைக்க வேண்டும்

      கீதா

      நீக்கு
  21. ராஜி!! வாவ் சூப்பர். தோட்டத்தின் செடிகளின் மீதான நேசம் தெரிகிறது. இதில் விளைவனவற்றை யார் எடுத்துக் கொள்வார்கள்? அங்கு பணி புரியும் ஊழியர்களேவோ?

    பிற செய்திகளும் சிறப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது தான் அவங்களே சொல்லி இருக்காங்களே! ஊழியர்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்வோம் எனவும் இவங்க பங்கைத் தெரிந்த பெண்களுக்கு அளிப்பதாகவும். எனக்கும் மாடித்தோட்டம் மேல் ரொம்ப ஆசை. ஆனால் எங்க வீட்டில்(அம்பத்தூர்) அது நடக்கவே இல்லை. ரங்க்ஸுக்கு பயம். கூரை வலுவாகப் போடலைனால் வீட்டுக்குள் எல்லாம் நீராகக் கொட்டும் என்றும் மணல், தேங்காய் நாரெல்லாமும் கூரை வழியாக வீட்டுக்குள் விழுந்துடுமோ என்றும் யோசித்துப் பயந்தார். :( அதுக்காகவே தொட்டிகளைக் கூட மாடியில் வைச்சதில்லை. கீழேயே வைச்சிருந்தோம்.

      நீக்கு
    2. ஓ கீதாக்கா ஆமாம் இப்பத்தான் அதை மீண்டும் வாசித்து நிதானமாக வாசித்து - சில சமயம் மனம் இங்கு யாரேனும் ஏதேனும் சொல்லும் போது மனம் ஒரு பக்கம் வாசிப்பு இங்கு என்று போகிற போது விடுபட்டுவிடுகிறது....ஆமாம் பார்த்துவிட்ட்டேன். அதை கோட் செய்து இங்கு போட வரப்ப உங்க கருத்தும் கண்ணில் பட்டது...

      //விளைந்த காய்கறி கீரைகளை இங்குள்ள எங்கள் அலுவலர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடுவோம் இதனால் எல்லோரும் சந்தோஷமாக இங்கு வந்து செடிகொடிகளை பார்த்து தங்களாலான உதவிகளை வழங்குவர் எனக்கான பங்கை இதுவரை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்றது இல்லை வழியில் எதிர்படும் ஏழை பெண்களிடம் கொடுத்துவிடுவேன் அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷப்படுவர், மறுநாள் பார்க்கும் போது காய் அவ்வளவு ருசிம்மா என பாராட்டவும் செய்வர்.//

      பார்த்துவிட்டேன். தெரிந்துகொண்டேன்

      கீதா

      நீக்கு
  22. இன்று செய்திகளும், நான் படிச்ச கதை யும் கொஞ்சம் பிரித்துப் போட்டது கரீக்டு.

    முன்னரே ஏதேனும் செய்தியின் தலைப்பு போட்டு ஹைஃபன் போட்டு நான் படித்த கதை என்று போட்டப்ப ஒரு கன்ஃப்யூஷன் வந்தது...அட இப்படியும் ஒரு கதையா யார் எழுதியது என்று? இன்று பிரித்துப் போட்டது நல்லதா போச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. சீனத்தமிழ்ப்பெண் பற்றி நிறைய யூ ட்யூப் வந்து விட்டன. காதர் மைதீன் செய்தியும் படிச்சேன். வெளியுறவுத்துறையின் சேவைக்கு வாழ்த்துகள். ஆனால் நாம் தான் நிலைமை புரியாமல் இப்போ உக்ரேனில் இருந்து இந்தியா தன் மக்களை மீட்கவில்லை என்கிறோம். உண்மையில் உக்ரேன் அவசரம் அவசரமாக வான்வெளியை மூடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே போன விமானம் திரும்பி வர நேர்ந்தது. இப்போது உக்ரேனில் எல்லை நாடுகளின் உதவியோடு மாணவர்கள்/மற்ற இந்தியர்கள் அவரவர் தங்கி இருந்த இடத்திலிருந்து அருகே இருக்கும் எல்லைகளுக்கு வந்து சேரவும் அங்கே ஒரு வெளியுறவுத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்களை எல்லாம் அந்த எல்லை நாடுகளின் உதவியோடு இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் எவ்வளவு சிரமமான காரியம் என்பதையும் ஒவ்வொரு எல்லை நாட்டோடும் பேச்சு வார்த்தைகள் நடத்தித் தான் தங்கள் மக்களை இந்தியா கொண்டு சேர்க்க முடியும் என்பதையும் சுலபமாக எல்லோரும் மறந்து விட்டு இஷ்டத்துக்குப் பேசுகின்றனர். போலந்து நாடு அவங்க நாட்டு எல்லைக்கு வரும் இந்தியர்களை வரவேற்று அவர்கள் நாட்டு விமான சேவை மூலம் திரும்ப அனுப்புவதாக ஒத்துக் கொண்டிருக்கிறது. அது போல் மற்றவர்களும் விரைவில் வந்து சேர்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல செய்தி கீதாமா.
      எனக்கு இவ்வளவு விவரங்கள் தெரியாது.
      பேரனிடம் சொல்கிறேன்.

      நீக்கு
  24. கதையைக் காட்டிலும் ஜீ வி அண்ணாவின் கதையைப் பற்றிய அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. கதையின் மையப் பொருளும் கதையும் புரிந்தது. கதையின் தலைப்புதான் கொஞ்சம் கேள்வியாகிறது. ஒரு வேளை முழுக்கதையும் வாசித்தால் புரியும் போல. நெட்டில் தேடினேன் தேடினேன்....அழியாச்சுடர்களில் கூட அழியாச்சுடர் கிடைக்கவில்லை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. https://tinyurl.com/va6b93jx இந்தச் சுட்டியில் கதையை முழுவதும் படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  26. மா நகராட்க்ஜி திருமதி.ராஜி அவர்களின்
    செடிபாசம் மிக மிக அதிசயமும் மகிழ்ச்சியும்.

    ஆயிரத்தில் ஒருவருக்கு இந்த மாதிரி குணமும் வாய்ப்பும் அமையும்.

    பதிலளிநீக்கு
  27. நாளைய தென்னம்பாறை காட்சிகள் இன்னிக்கே என்னோட டாஷ்போர்டில் வந்துருக்கேனு பார்த்தால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போன வாரத்துப் பதிவு மறுபடி முன்னாடி வந்திருக்கு. :)))))

    பதிலளிநீக்கு
  28. அனைவருக்கும் மாலை வணக்கம்.
    இந்தக் கதைப் பகுதியை வாசித்ததோடு போய் விடாமல் கதையை நான் சொன்ன விதத்திற்கு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. பராமரித்துவரும் மாநகராட்சி ஊழியர் எஸ்.ராஜிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    பிரக்ஞானந்தாவின் வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

    சீன பெண் நிறைமதிக்கு வாழ்த்துகள்

    திரு. மைதீன் குடும்பத்துடன் மகிழ்வாய் இருக்க வாழ்த்துகள்.


    பதிலளிநீக்கு
  30. அழியாசுடர் படித்து இருக்கிறேன் மறந்து விட்டது மீண்டும் படிக்க வேண்டும்.

    ஜீவி சாரின் கதை அறிமுகம் நன்றாக இருக்கிறது.

    மெளனி அவர்களை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  31. இதில் நான் சொன்ன விதம் என்பது முக்கியமானது. அது என்ன சொன்ன விதம்?.

    சொல்கிறேன்.

    முதலில் நடப்பது ஒரு கதையை வாசித்து அதை நான் உணர்ந்த விதத்தில் உள்வாங்கிக் கொள்வது.
    நானும் ஒரு எழுத்தாளன் என்பதினால் வாசகர் பார்வை அல்லாமல் ஒரு விஷயத்தை எழுதுபவரின் சாமர்த்தியங்களை ரசிக்கிற கோணத்தில் வாசிக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
    பெரும்பாலும் தற்கால வாசகர்கள்
    பெரிதளவு அறிந்திராத சிறு பத்திரிகைகளில் எழுதிய எழுத்தாளர்களை இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே இந்த வேலை துவங்குகிறது.

    பதிலளிநீக்கு
  32. இவர்களின் எழுத்தை ஏற்கனவே என் எழுத்துத் துறைக்கு களப்பயிற்சி போல நான் வாசித்திருப்பதால் அது இதை இந்த பகுதிக்கு எழுதலாம் என்ற தேர்வுக்கு பெரிதும் உதவுகிறது. எந்தக் காலத்திலோ வாசித்த பலதை இப்பொழுது மீள் வாசிப்புக்கு உட்படுத்தும் பொழுது நானும் இந்தத் துறையில் வளர்ந்த விதத்தில் அந்த அனுபவ ஞானத்தில் புதுப்புதுப் பார்வைகளும் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  33. இப்பொழுது நான் வாசித்து உள்வாங்கிக் கொண்டதை உங்களிடம் பகிர வேண்டிய முக்கியமான கட்டம்.

    இந்தப் பகிர்தலுக்கு முற்றுலும் என் எழுத்து நடையைக் கைக்கொள்கிறேன். படித்த விஷயத்தை சுவையாக எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். முற்றுலும் என் போக்கில் நான் எழுதியதாக அமைந்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வில்
    எழுத எடுத்து கொண்ட கதையில் நான் ரசித்த வரிகளை,வார்த்தைகளை அப்படியே உபயோகித்துக் கொள்கிறேன்.

    அதனால் எந்த விதத்திலும் நான் எழுதுவதற்கு விமர்சனம் என்ற பெயரைக் கொடுத்து விடக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

    எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை நான் ரசித்த விதத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. இந்த வார பாஸிடிவ் செய்திகள் எல்லாமே சிறப்பு.
    அரசு அலுவலகத்தில் மாடித்தோட்டம். பராமரிக்கும் ஊழியர் ராஜியை பாராட்ட வேண்டும்.
    சீக்கிரம் அதிகம் சம்பாதித்து விடலாம் என்று சரியான கல்வி இல்லாமல் அரபு நாடுகளுக்குச் சென்று அவஸ்தை படுபவர்கள் அதிகம் பேர் உண்டு.
    பிரஞானந்தா மேலும் வளர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. ஒன்றை வாசித்து ரசிப்பது என்பது ஆளாளாக்கு மாறுபடும் என்பதினால்
    இது என் வாசிப்பு விவரிப்பு எனபதினால் ஒரிஜனல் கதைக்கு சுட்டி கொடுப்பதிலோ, அந்தக் கதையை இங்கு எடுத்த்ப் போடுவதிலோ எனக்கு ஆர்வமில்லை. அதையெல்லாம் செய்வதாய் இருந்தால் நான் என் சொந்த முயற்சியில் அதையே இங்கு எழுத வேண்டிய அவசியமில்லை என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் ஆர்வமுள்ளவர்கள் தேடிப் படித்துக் கொள்ளட்டும் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

    அதனால் ஒன்றை வாசித்ததின் அருமையை உங்களிடம் என் மொழியில் பகிர்ந்து கொள்கிறேன் என்றே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    மிக்க அன்புடன்,
    ஜீவி

    பதிலளிநீக்கு
  36. மௌனி அவர்களின் கதையை ஜீ.வி.சார் அறிமுகப் படுத்தியுள்ள விதம் அருமை. முழு கதையையும் படிக்க வேண்டும்.
    ஜெயகாந்தன் ஒரு முறை தான் கதை எழுதுவதற்கு முன் மௌனியின் சிறுகதை ஒன்றை படித்து விடுவதாக கூறியிருந்தார்.

    பதிலளிநீக்கு
  37. ஆமாம், பா வெ. உங்களுக்கு நல்ல நினைவாற்றல்.

    மெளனியின் 'மாறுதல்' கதையை ஒரு தடவை வாசித்து விட்டு நான் கதையெழுத உட்கார்ந்த காலம் உண்டு என்று ஜே.கே. சொன்னதுண்டு. ஒரு உந்து சக்தி மாதிரி இது.

    ஜெயகாந்தனின் போர்வை, சாளரம் கதைகள் அந்த மாதிரி எனக்கு உந்து சக்தியாக இருந்த காலத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.

    மயிலுக்கு போர்வை போர்த்திய பேகனை பைத்தியக்காரனாக நினைக்கும் காலமிது.

    அதுவே மனுஷிக்கு?.. தன் இளம் வயதிலேயே
    ஜெயகாந்தன் பெற்றிருந்த எழுத்தாற்றலை நினைத்தால் இப்பொழுதும் பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!