11.11.22

வெள்ளி வீடியோ : கூடுவிட்டு போன பிள்ளை குடியிருக்கும் இடந்தேடி ஓடிவந்த தாய்ப்பறவை ஊமையாகி நின்றதைய்யா

 சென்ற வாரம் நான் சொன்ன தனிப்பாடல்கள் திரட்டில் இரண்டாவது பாடல் இன்று...

இது டி எம் சௌந்தரராஜன் பாடிய பாடல்.  ஒரு சிறு ட்ரிங்குடன் டி எம் எஸ் குரல் ஒலிக்கத்தொடங்கும்..."கோடி மாதவங்கள் செய்து"

தமிழ்நம்பி பாடலாய் இருக்கலாம்.  இசை யாரென்று தெரியவில்லை.  அந்தக் காலத்திலேயே ரேடியோவில் பாடல்கள் போடும்போது நேயர் விருப்பம், உங்கள் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பும்போது  எழுதியவர் யார், பாடுவது யார், என்ன படம் என்றெல்லாம் சொல்லி விடுவார்கள்.  அப்போதே கூட பக்தி பாடல்கள் நிகழ்ச்சியில் யார் பாடலை எழுதியது, யார் இசை என்று சொல்வதில்லை!

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம் 
வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு 
தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை 
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.

கொன்றை சூடிய பெருமானே  கூத்தாண்டவரே மன்னரே 
ராமேஸ்வரத்தில் ராமலிங்கமே  ஆண்டருள்  அம்மையப்பா...
கொன்றை சூடிய பெருமானே

அன்றொரு திருநாள் சீதையின் கையால் 
அன்றொரு திருநாள் சீதையின் கையால் 
தென்கடல் மணலால் திரட்டிய வடிவே    (கொன்றை சூடிய) 

வென்றிடும் ராமரும் கொன்றது பழியே 
வினைகெட அவர் துயர் தீர்த்தும் நீயே
வென்றிடும் ராமரும் கொன்றது பழியே 
வினைகெட அவர் துயர் தீர்த்தும் நீயே  
அன்றவர் பணிந்தது ராமலிங்கமே
அன்றவர் பணிந்தது ராமலிங்கமே அருகினில் 
திகழ்வது அனும லிங்கமே  (கொன்றை சூடிய)

அஞ்சிடும் கண்ணில் ஆறுதல் வடிவே 
அன்பெனும் உன்துணை துன்பத்தின்  முடிவே 
அஞ்சிடும் கண்ணில் ஆறுதல் வடிவே 
அன்பெனும் உன்துணை துன்பத்தின்  முடிவே 
நஞ்சினை உண்டு நலமளித்தாயே 
நஞ்சினை உண்டு நலமளித்தாயே 
நம்பிடும் அடியார் அடைக்கலம் நீயே   (கொன்றை சூடிய )



1961ல் வெளியான படம் 'தாயில்லாப்பிள்ளை'.  டி எஸ் பாலையா, கல்யாண்குமார், மனோகர், எம் வி ராஜம்மா, எல் விஜயலக்ஷ்மி நடித்திருந்த இந்தப் படத்திற்கு வசனம் மு கருணாநிதி,  அவர் வசனம் எழுத்துவதற்கேற்ற கதைக்களம். தயாரித்து இயக்கி இருப்பவர் எல் வி பிரசாத்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் அனாதையாக்கப்படும் ஒரு மகனை ஸம்ப்ரதாய காரணங்களுக்காக சீராட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தாய், பாதிக்கப்படும் மகனின் கதை.  பதஞ்சலி சாஸ்திரியாக டி எஸ் பாலையா.  மகனாக கல்யாண் குமார்.  அம்மாவாக எம் வி ராஜம்மா.

மாட்டுக்கொட்டிலில் (!) வளரும் மகனை (அவனுக்கு அவர் தன் தாய் என்று தெரியாது) தூங்க வைக்கும் தாயின் தாலாட்டாக பாடல்.

கண்ணதாசன் பாடல்.  திரையிசைத்திலகம் கே வி மகாதேவன் அவர்களின் இசை.  சூலமங்கலம் ராஜலக்ஷ்மி அவர்களின் குரல்.

இந்தப் பாடல் வேறு இரண்டு பாடல்களை நினைவூட்டும்.  அவை அடுத்தடுத்த வாரம்...!

சின்னச்சின்ன ஊரணியாம் தேன்மணக்கும் சோலைகளாம் 
சின்னச்சின்ன ஊரணியாம் தேன்மணக்கும் சோலைகளாம் 
ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம் 
ஊரணியின் கரையில் ஓங்கி நிற்கும் மாமரமாம்
 
மாமரத்துக் கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம் 
கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம் 
மாமரத்துக் கிளைகளிலே மாடப்புறா கூடுகளாம் 
கூடுகளில் குடியிருக்கும் குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்   (சின்னச்சின்ன ஊரணியாம்)

சிறகு முளைக்கும் முன்னே திசையறிந்து நடக்கும்முன்னே 
  சிறகு முளைக்கும் முன்னே திசையறிந்து நடக்கும்முன்னே
பறவையின் குஞ்சு ஒன்று பறந்ததையா கூடுவிட்டு   
  பறவையின் குஞ்சு ஒன்று பறந்ததையா கூடுவிட்டு
கூடுவிட்டு போன பிள்ளை குடியிருக்கும் இடந்தேடி   
  கூடுவிட்டு போன பிள்ளை குடியிருக்கும் இடந்தேடி   
ஓடிவந்த தாய்ப்பறவை ஊமையாகி நின்றதைய்யா 
  ஓடிவந்த தாய்ப்பறவை ஊமையாகி நின்றதைய்யா

தன் பிள்ளையென்று சொல்ல தாயாலும் முடியவில்லை
தாயென்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை -தன் 
   பிள்ளையென்று சொல்ல தாயாலும் முடியவில்லை
தாயென்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை
உள்ளத்தில் இருக்குதய்யா உண்மை சொல்ல மயங்குதய்யா 
உள்ளத்தில் இருக்குதய்யா உண்மை சொல்ல மயங்குதய்யா 
பொல்லாத தடையை எண்ணி புலம்புதைய்யா கலங்குதய்யா 
பொல்லாத தடையை எண்ணி புலம்புதைய்யா கலங்குதய்யா   (சின்னச்சின்ன ஊரணியாம்)

59 கருத்துகள்:

துரை செல்வராஜூ சொன்னது…

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

தமிழ் வாழ்க..

துரை செல்வராஜூ சொன்னது…

நலமே வாழ்க.. நாயகன் அருளால்...

அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

துரை செல்வராஜூ சொன்னது…

நான் அடிக்கடி சிந்தித்திருக்கும் தேவாரப் பாடல் இது..

கோடி மா தவங்கள் செய்தும் குன்றிப் போன அசுரர்கள் என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

அசுரப் படைகளை சக்கரத்தால் அழித்தார் பெருமான் என்று கூறுகின்றார்..

இது சிந்தனைக்கு உரியது..

துரை செல்வராஜூ சொன்னது…

அம்புகளால் துளைக்கப் பட்டான் என்பது தான் திருக் குறிப்பு..

ஆனால், நாவுக்கரசருக்கு சக்ராயுதமாகத் தோன்றுகின்றது..

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க....

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க....  வாழ்க....

வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியா...  பன்னிருதிருமுறை என்று பார்த்தேன்.

ஸ்ரீராம். சொன்னது…

அப்படியா.. இப்படி ஒரு சர்ச்சை இருக்கிறதா?

துரை செல்வராஜூ சொன்னது…

// இப்படி ஒரு சர்ச்சை இருக்கிறதா?..//

தினமலர் எழுதுகிற மாதிரி இருக்கின்றது..

இதில் சர்ச்சை ஏதும் இல்லை..

தேவாரத்தில் நிறைய இடங்களில் ராமகாதை பேசப்படுகின்றது..

ஸ்ரீராம். சொன்னது…

ஓ...  இல்லையா?  (சப்பென்று ஆகிவிட்டதே..!)

ஸ்ரீராம். சொன்னது…

இரண்டாவது பாடல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....  இன்னும் கேட்கவில்லையா..  (இன்னும் முதல் பாடல் பற்றியே சொல்லவில்லை என்கிறீர்களா, அதுவும் சரிதான்!)

துரை செல்வராஜூ சொன்னது…

இந்தப் பாடல் தொகுப்பைப் பற்றித் தான் போன வாரமே சொல்லி விட்டேனே...

தேவாரப் பாடல் ஒன்றை வைத்துக் கொண்டு நம்மவர்கள் பின்னியிருப்பார்கள்.. அருமை.. அருமை..

துரை செல்வராஜூ சொன்னது…

முருகப் பெருமானை வேலொடு தான் தரிசித்திருக்கின்றோம்..

இங்கே திரு ஐயாற்றில் அம்பும் வில்லும் கொண்டு நிற்கின்றார்..

கும்பகோணத்துக்கு அந்தப் பக்கம் அரிசிற்கரை புத்தூர் எனும் தலத்தில் சங்கும் சக்கரமும் தாங்கியிருக்கின்றார்..

இதில் நமக்கொன்றும் பிரச்னை இல்லை.. ஆனால் திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டுப் பழக்கப் பட்ட சிலதுகளுக்கு அதிர்ச்சி.. சர்ச்சை எல்லாம்!..

துரை செல்வராஜூ சொன்னது…

பக்கத்தில் திருப்பந்துறை கோயிலிலும் ஒரு தூணில் வில்லேந்திய வேலவன்.. தஞ்சை கோயிலிலும் ஓரிடத்தில் வில்லேந்திய வேலவன்.. இன்னும் சங்கு சக்ரதாரி, நரசிம்மர்..

இதையெல்லாம் அதிர்ச்சியுடன் சொன்னால் யூட்டியூப்பில் காசு பார்க்கலாம்...

துரை செல்வராஜூ சொன்னது…

// இந்தப் பாடல் வேறு இரண்டு பாடல்களை நினைவூட்டும். அவை அடுத்தடுத்த வாரம்...!//

முரடன் முத்து படத்தில் கூட இது மாதிரியான பாடல் இருக்கின்றது.. அதுவும் சூலமங்கலம் அவர்களது குரலில்...

ஜீவி சொன்னது…

// டி.எஸ்.பாலையா சாஸ்திரிகள்..
கருணாநிதி வசனம் எழுதுவதற்கேற்ற கதைக் கள்ம்.//

;))
?? எனக்கு கேள்விக்குறியாய் இருந்தால் நீங்கள் அனுபவித்து அலசுகிறீர்களே?

ஸ்ரீராம். சொன்னது…

எனக்கு அவ்வளவு விவரம் எல்லாம் தெரியாது சாமீ...

ஸ்ரீராம். சொன்னது…

//இந்தப் பாடல் தொகுப்பைப் பற்றித் தான் போன வாரமே சொல்லி விட்டேனே...//

grrrrrrr.... அது வேற பாட்டு.. இது வேற பாட்டு...

துரை செல்வராஜூ சொன்னது…

இன்னொரு பாடல் அதுவும் முரடன் முத்து படத்தில்..

கோட்டையிலே ஒரு ஆலமரம்!..

அதுவா.. அதுவா!..

ஸ்ரீராம். சொன்னது…

ஹா..  ஹா..  ஹா...   செய்வார்கள்.. செய்வார்கள்..   தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இருக்காது.

ஸ்ரீராம். சொன்னது…

செவ்வந்தி பூ செண்டு போல பாடலைச் சொல்கிறீர்களா?  நான் சொல்வது வேறு..

ஸ்ரீராம். சொன்னது…

அவரவர் அரசியல் நிலைப்பாடு, பிழைக்கும் வழி எல்லாம் படித்திருக்கிறோம் இலையா..  அதுதான்!

ஸ்ரீராம். சொன்னது…

இல்லை..  இல்லை..  பொறுங்கள் அடுத்தடுத்த வாரம் புதிர் விலகும்!  அப்போது இது அது மாதிரி இல்லை அது இது மாதிரி இல்லை என்றெல்லாம் வேறுபடுத்திக் காட்டலாம், விவாதிக்கலாம்!

துரை செல்வராஜூ சொன்னது…


திருப்பந்துறை கோயில் அல்ல..

திருப்பூந்துருத்தி கோயில் என்று கொள்ளவும்..

முந்திரிக் கொட்டையாய் தட்டச்சுக் குறுக்கீடு...

ஸ்ரீராம். சொன்னது…

சரி.. சரி... நீங்கள் சொல்லாவிட்டால் நானும் கவனித்திருக்க மாட்டேன்!

துரை செல்வராஜூ சொன்னது…

//அது வேற பாட்டு.. இது வேற பாட்டு..//

அப்படியா..

ஒரு ஒரு தேவாரத்துடன் ஒரு தனிப்பாட்டு எனக்கு நினைவு இருக்கின்றதே!..

துரை செல்வராஜூ சொன்னது…

இங்கே விடியற்காலை 3:30 ல் இருந்து மின்னாமல் முழங்காமல் அடைத்துக் கொண்டு மழை பெய்கின்றது.. (அடைமழை!..)

ஸ்ரீராம். சொன்னது…

மூன்று பாடல்கள் என் நினைவில்..  மற்றவை?

ஸ்ரீராம். சொன்னது…

அதே... அதே... நாங்கள் வேறு, ஒரு முக்கிய ஜோலியாக கபாலீஸ்வரர் கோவில் வரை சென்று வரவேண்டும்...

துரை செல்வராஜூ சொன்னது…

கவனமாக சென்று வாருங்கள்..

துரை செல்வராஜூ சொன்னது…

கொஞ்ச நேரம் கழித்து சொல்கின்றேன்..

துரை செல்வராஜூ சொன்னது…

வரிசையாகத் தெரிய வில்லை..

ஆனாலும் நினைவில் உள்ளவை..

1) திருவாசக வரிகளுடன் தஞ்சாவூர்..

2) துறவி நெஞ்சினராகிய - கும்பகோணம்..

3) உருவமும் உயிரும் - திருவண்ணாமலை..

4) மட்டிட்ட புன்னையங் - திருமயிலை..

5) பதத்தெழு மந்திரம் - திருக்கடவூர்..

6) கோடி மாதவங்கள் - ராமேஸ்வரம்..

7) மந்திரமாவது - மதுரை..

KILLERGEE Devakottai சொன்னது…

இரண்டும் கேட்டு ரசித்த பாடல்களே ஜி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்த பாடல்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்த பாடல்கள்...

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

இன்றைய பாடல் பகிர்வு. இரண்டும் அருமையாக உள்ளது. முதல் தனிப் பாடலும் சரி, இரண்டாவதும் இதுவரை கேட்டதில்லை..இப்போது கேட்டு ரசித்தேன். இரண்டாவதாக வரும் இந்தப்பட பாடல் இடம் பெறும் படத்தின் டைட்டிலில் வேறு ஒரு படம் பிறகு திரும்பவும் வந்ததோ? அந்தளவும் எனக்கு சரியாகவும் நினைவில்லை. (தங்களைப்போல எல்லா திரைப்பட பாடல்கள், படங்களை சரியாக நினைவு வைத்துக்கொள்ளுவதில் நான் ஒன்றும் புலி கிடையாதே..! :))))) ஆனால் கேட்டதாக ஒரு நினைவு.

இரண்டாவது பாடல் "கோழி ஒரு கூட்டிலே .. சேவல் ஒரு கூட்டிலே"என்ற குழந்தையும் தெய்வமும் படப்பாடலை நினைவு படுத்துகிறதோ ? (சிரித்துக் கொள்ளாதீர்கள். சும்மா கேட்டு வைத்தேன்.))) ) இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

thangam சொன்னது…

Please upload the song Paalkadal alaimele from the old.tamil film Raja desingu. It is a dasaavathaara song sung by MLV and dance by Naattiya peroli Padmini. Very beautiful video song available.in YouTube.

Geetha Sambasivam சொன்னது…

முதல் பாடல் கேட்டதே இல்லை. இரண்டாவது படமும் பார்த்த நினைவு. அரைகுறையாய். ஆனால் எம்.வி.ராஜம்மா என்பதால் இந்தப் பாடலும் காட்சியும் நினைவில் இருக்கு.

Geetha Sambasivam சொன்னது…

தேவாரப் பாடல்கள் குறித்த ஆய்வு நன்றாகவே இருக்கிறது.. இதெல்லாம் பதிவுக்கு இன்னமும் செறிவூட்டுகிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

கொல்லையும் கிணறும் தோட்டமும் தொழுவும் இரவும் நிலவும், பாட்டும் இனிமையும்..

ஆகா!..

ஸ்ரீராம். சொன்னது…

லிஸ்ட் எடுத்து வைத்துக் கொள்கிறேன். சில பாடல் ஆரம்பங்கள் தெரியவில்லை.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி ஜி.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி DD.

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி DD.

ஸ்ரீராம். சொன்னது…

சிரிக்க என்ன இருக்கிறது?  நீங்கள் உங்கள் யூகத்தைச் சொல்கிறீர்கள்.  ஆனாலும் அவை இல்லை அக்கா.  இரண்டு பாடல்களுமே நீங்கள் கேட்டதில்லை என்பது ஆச்சர்யமே!

ஸ்ரீராம். சொன்னது…

I will try to upload your wish ASAP Friend.

ஸ்ரீராம். சொன்னது…

இரண்டாவது படமும் என்று வருமா?  முதல் பாடல் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம் கீதா அக்கா.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம். துரை செல்வராஜூ அண்ணாவுக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

ஆம். நன்றி.

துரை செல்வராஜூ சொன்னது…

மகிழ்ச்சி..
நன்றியக்கா..
நன்றி ஸ்ரீராம்..

கோமதி அரசு சொன்னது…

இரண்டு பாடல்களும் கேட்டு பல வருடம் ஆகி விட்டது.
முதல் பாடலில் இராமேஷ்வரம் தரிசனம் செய்தேன், நன்றி.
அடுத்த பாடல் எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் துளிர்க்கும்.
இந்த படத்தில் எல்லா பாடலும் நன்றாக இருக்கும்.

//இந்தப் பாடல் வேறு இரண்டு பாடல்களை நினைவூட்டும். அவை அடுத்தடுத்த வாரம்...!//

அதுவும் எம்.வி. ராஜம்மா நடித்த படமா? கோழிகுஞ்சு பாடலா?"முரடன் முத்து" படத்தில் இடம் பெற்ற பாடல்.

Paul Jeyaseelan சொன்னது…

//இந்தப் பாடல் வேறு இரண்டு பாடல்களை நினைவூட்டும். அவை அடுத்தடுத்த வாரம்...!//

எனக்கு, 'கதை ஒன்று நான் சொல்லவா (மகளே உன் சமர்த்து)' நினைவுக்கு வந்தது.

ஸ்ரீராம். சொன்னது…

வாங்க கோமதி அக்கா.. ரசித்ததற்கு நன்றி. நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் இல்லை என்று மேலே சொல்லி இருக்கிறேன்!

ஸ்ரீராம். சொன்னது…

எத்தனை பாடல்களைக் கொண்டு வருகிறது ஒரு சிறு க்ளூ? நன்றி திரு ஜெயசீலன். ஆனால் எந்த வகையில் இன்றைய பாடலோடு ஒத்துப்போகிறது நீங்கள் சொல்லும் பாடல்?

Geetha Sambasivam சொன்னது…

இரண்டாவது பாடலில் படமும் சேர்த்துப் பார்த்த நினைவு.

சுரதாவில் அடிச்சுக்குக் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது வார்த்தைகள் விடுபட்டிருப்பதைக் கவனிக்கலை. :( அது வேறே கணினியில் தகராறு. சில சமயங்கள் என்ன முயன்றால்லும் காப்பி, பேஸ்ட்டே ஆகிறதில்லை. கணினியைத் திரும்ப ரீ ஸ்டார்ட் பண்ண வேண்டி இருக்கு. கணினி மருத்துவரை ஒரு வாரமாய் கூப்பிட்டும் இன்னமும் வரலை! :(

Geetha Sambasivam சொன்னது…

அடிச்சதைக் காப்பி, பேஸ்ட்

கோமதி அரசு சொன்னது…

நான் சொன்ன முரடன் முத்து படத்தில் "செவந்திப்பூ செண்டு போல கோழி குஞ்சு பாடல்"

கோமதி அரசு சொன்னது…

சூலமங்கலம் ராஜலெட்சுமி பாடியது

www.kaavannan-perl.blogspot.com சொன்னது…

செய்திகள் அருமை ...