செவ்வாய், 29 நவம்பர், 2022

மொழிபெயர்ப்பு சிறுகதை - நாலேக்காட்டு பிள்ளைமார் - மொழியாக்கம் ஜெயகுமார் சந்திரசேகர்

 

கொட்டாரத்தில் சங்குண்ணி மலையாளத்தில் எழுதிய ஐதீக மாலையில் இருந்து ஒரு கதை.

 

மொழியாக்கம் ஜெயகுமார் 

 

நாலேக்காட்டு பிள்ளைமார்

 

நாலேக்காட்டு பிள்ளைமார் சுத்த சைவ பிள்ளைமார் ஆவர். இவர்களுடைய பூர்விகம் பாண்டி  நாட்டில் நாங்குநேரிக்கு  சமீபம் உள்ள  விஜய நாராயணபுரம்”’  என்ற ஊர். ஆனால் தற்போது அவர்களுடைய இருப்பிடம் திருவிதாங்கூரில் திருவல்லா க்கு பக்கம் உள்ளகுட்டம் பேரூர்என்ற தேசம் ஆகும். அவர்கள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்களாயும், படிப்பில் வல்லவராயும, காரியங்களை முடிப்பதில் கெட்டிக்காரராயும், கணக்கில் விற்பன்னராயும் இருந்தனர். அக்குடும்பத்தினர் நீண்ட நாட்களாக திருவிதாங்கூர் மகாராஜாவின் பிரத்யேக கருணைக்கு பாத்திரமானவர்களாக இருந்தார்கள். இந்த  சிறந்த குடும்பத்தில் இருந்து மூன்று மகான்களைப் பற்றி இங்கு எழுதுகிறேன். 


1.     யோகீஸ்வரன். 


யோகீஸ்வரன் பிறந்தது கொல்லம் 719 ஆம் ஆண்டு விஜய நாராயணபுரத்தில் தான். அவர் கல்வியுடன் யோகக் கலையையும் நன்கு படித்து ஒரு யோகி ஆனார். இரண்டு விவாகம் புரிந்து நல்ல பிள்ளைகளையும் பெற்றார்.

யோகி ஒருதடவை திருவனந்தபுரம் வந்து மஹாராஜாவைக் கண்டார். மஹாராஜா அவரை சிறப்பாகத்  தனி இடம் தந்து தங்க வைத்தார். அவரிடம்தங்களுக்கு வேண்டிய ஆகாரம் எப்படிஎன்ன?” என்று வினவினார். அதற்கு யோகிபாலும் பழமும் மாத்திரமே வழக்கம்.” என்று பதில் அளித்தார். அப்பிரகாரம் அவருக்கு மூன்று இடங்கழி பாலும் முப்பது வாழைப் பழமும் சேவகர்கள் அவர்  தங்கிய இடத்தில் கொண்டு வந்து கொடுத்தனர்.

ஒரு ஆளுக்கு இது கூடுதல். ஆனாலும் போதாமல் ஆகி விட்டாலோ என்று கருதி வேலையாள் இவ்வாறு கொண்டு வந்து வைத்தான். யோகிபால் எவ்வளவு?’” என்று கேட்டார். “மூன்று இடங்கழிஎன்று வேலையாள் சொன்னான். “”மூன்று இடங்கழி பால் என்னுடைய ஆசனத்திற்கு போலும் திகையாது” (பால் நான் இருக்கும் ஆசனத்திற்கு மதிப்புடையதில்லை) என்று சிலேடையாகச் சொன்னார். வேலையாள் ஒன்றும் பதில் கூறவில்லை. 

யோகி வேலையாளிடம் கூறிய வாக்கியம் மகாராஜாவின் காதுகளை எட்டியது. அடுத்த நாள் யோகி அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்று அழைப்பு இருந்ததால் யோகி அவ்வாறு சென்று மஹாராஜாவைக் கண்டார். மஹாராஜாவின் ஆணைப்படி ஒரு பெரிய உருளியில் 30 பறை (மரக்கால்) பாலும், அதற்குப் பக்கத்தில் 3000 பழமும் யோகியின் முன் வைத்தார்கள். யோகி பால் உருளியில் அமர்ந்தார். யோகியுடைய சிஷ்யர்கள் பழங்களை உரித்து அவருக்குக் கொடுத்துக்  கொண்டே இருந்தனர். பழங்களை விழுங்கினார். பழங்களும் தீர்ந்தன. பாலும் உருளியில் இருந்து மாயமாகி விட்டது. இதைக்கண்ட மஹாராஜாஇவர் சாதாரண யோகி அல்ல, யோகீஸ்வரன் தான்என்று கூறி தொழுதார், அன்று முதல் அவருக்கு யோகீஸ்வரன் என்ற பெயரும் நிலைத்தது. 

யோகீஸ்வரன்  திருவனந்தபுரத்தில் வசிக்கும் காலத்தில் காலையில் கரமனை ஆற்றில் போய் காலைக்கடன்களை முடித்து, குளித்து, பின்னர் ஆற்றில்  தண்ணீரின் மீது நடப்பது வழக்கம் என்றும் கூறுவர். யோகீஸ்வரன் சுசீந்திரத்திலும் மருத்துவா மலையிலும் நீண்ட காலம் வசித்தார். இவ்வாறு பூலோகத்தில் திருப்தியான வாழ்க்கையை அனுபவித்த அவர் இப்பூலோக வாழ்வைத் துறந்து மேலோகம் செல்ல தீர்மானித்தார். நல்ல யோகீஸ்வரர்களுக்கு அவர்கள் விரும்பும் காலம் வரை வாழ முடியும் என்பது தெரியும் அல்லவா?? 

கேரளம் பரசுராமர் என்ற பிராமணர் பிராமணர்களுக்கு தானம் செய்ததாகும். ஆகவே அங்கு பரலோக பிராப்தி அடைவது உசிதமல்ல என்று தீர்மானித்து அவர் பாண்டி நாட்டில் கருங்குளம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு  கொல்லம் ஆண்டு 936 துலாம் மாதம் (ஐப்பசி) அன்று அவரது  217 ஆம் வயசில் வழக்கம் போல் சிவ பூஜை செய்து முடித்து  சமாதியில் இருந்து பரமபதம் அடைந்தார். 

யோகீஸ்வரர் சமாதி இருந்த இடத்தில் அவருடைய சந்ததிகள் ஒரு கோயில் கட்டி அவருடைய ஒரு  சிலை பிரதிஷ்டை செய்து, விளக்கேற்றுதல், நித்ய பூஜை முதலிய  காரியங்கள் நடத்த கட்டளைகளும்  ஏற்படுத்தினர். நாலேக்காட்டு  குடும்ப உறுப்பினர்கள் தற்போதும் அச் சமாதியில் பூஜை முதலியன செய்து வருகிறார்கள். 

(குறிப்பு: தற்போதும் யோகீஸ்வரர் கோயில்களை திருவனந்தபுரத்திலும, நாஞ்சில் நாட்டிலும் காணலாம்) 


2.     யோகீஸ்வரன் ராமன் பிள்ளை. 


யோகீஸ்வரரின் முதல் மனைவியின் மூத்த புத்திரன்யோகீஸ்வரன் ராமன் பிள்ளை”. சிலர் அவரைபரமயோகிஎன்றும் குறிப்பிடுவர். அவருடைய பிறப்பிடமும் விஜய நாராயணபுரம் தான். பிறந்தது கொல்லம் 900ஆம் ஆண்டில். 

யோகீஸ்வரன் ராமன் பிள்ளை ஒரு தமிழ் பண்டிதனும் கவிஞரும் ஆவார். தமிழில் நிறைய எழுதியிருக்கிறார். இவை எல்லாம் ஓலைச்சுவடிகளில் நாலேக்காட்டு வீட்டில் இருக்கின்றன. 

யோகீஸ்வரன் ராமன் பிள்ளை தனது சிறு பிராயத்திலேயே கேரளம் வந்து தந்தையுடன் வசித்தார். சில அரசு உத்தியோகஸ்தர்களுடைய நட்பும், மகாராஜாவின் தயவும் அவருக்குக்  கிடைத்ததால் அவருக்கு அரசுப்பணி சுலபமாகக் கிடைத்தது. முதலில் அவருக்கு மாவேலிக்கரை, திருவல்லா ஆகிய தேசங்களில்தேவஸ்வம்கணக்கு எழுதும் பணி கிடைத்தது. பின்னர் படிப்படியாக உயர்வு பெற்று கடைசியில் வலிய மேலெழுத்து (COLLECTOR ?) ஆனார். யோகீஸ்வரன் ராமன் பிள்ளை இப்படி வலிய மேலெழுத்து பிள்ளை ஆக இருந்தபோது குட்டன்பேரூர் நாலேக்காட்டு நாயர் தன்னுடைய சொத்துக்கள் யாவையும் இவருக்கு தானமாகக் கொடுத்தார். அந்த நாயருடைய வீடிருந்த பறம்பில் புதியதாய் ஒரு பவனம் கட்டினார். சொந்த ஊரான விஜயநாராயணபுரத்தில் இருந்து உமையாள் பார்வதி  என்ற சொந்த ஜாதி பெண்ணை விவாகம் செய்து அவ்வீட்டில் குடும்பம் தொடங்கினார்.

விவாகம் செய்து பல வருடங்கள் ஆயினும் பிள்ளைக்கு சந்தான பாக்கியம் கிடைக்கவில்லை. மனைவி அவ்வப்போது கருத்தரித்தாலும் எல்லாம் அலசிப் போயின. சிகிச்சைகள் பல செய்தும் ஒன்றும் பயன் இல்லை. யோகீஸ்வரன் ராமன் பிள்ளை பாழூர் படிப்புரை சென்று ப்ரச்னம் வைத்துப் பார்த்தார். ஒரு கந்தர்வன் உமையாள் பார்வதியை பிடித்திருப்பதாகவும் அவனுடைய உபத்திரவத்தால் தான் கர்ப்பம் அலசிப் போகிறது என்றும், அந்த கந்தர்வனை அகற்றாமல் பெண்ணிற்குப் பிள்ளை உண்டாகாது என்றும்  ப்ரச்னம் கிடைத்தது. 

ஆகவே யோகீஸ்வரன் ராமன் பிள்ளை பல மந்திரவாதிகளை வருத்தி மந்திரவாதம் செய்தார். எத்தனை மந்திரவாதம் செய்தும் கந்தர்வனை விரட்ட முடியவில்லை. அக்காலத்தில் செங்கனூர் தேவலசேரித் தான் என்றொரு பெரிய மந்திரவாதி இருந்தார். ராமன் பிள்ளை அவரைக் கூட்டிவர ஆள் அனுப்பினார். இரண்டு நாட்களில் வருகிறேன் என்று  தேவலசேரித் தான் பதில் சொல்லி அனுப்பினார். 

சொன்ன நாள் அன்று காலை தேவலசேரித் தான் செங்கன்னூரில் இருந்து புறப்பட்டு குட்டம்பேரூர் அடுத்து வந்த போது அடுத்த நாள் விடியத் தொடங்கி விட்டது. காலைக்கடன்கள் தீர்த்து, குளியல், மற்றும் ஜபம்  செய்ய எண்ணி அடுத்து கண்ட ஒரு கோவில் குளத்தில் குளித்தார். தோளில் கிடந்த துண்டை அரையில் கட்டி முண்டையும் கௌபீனத்தையும் அலசிக் காயப்  போட்டார். கரையில் படிகளில் அமர்ந்து ஜபம் செய்யத் தொடங்கினார். 

அங்கு நிறைய குரங்குகள் இருந்தன. மந்திரவாதி கண்மூடி, மூக்கடைத்து ஜபம் செய்யும்போது ஒரு குரங்கு முண்டையும் கௌபீனத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டது. ஜபம் முடிந்து கண் விழித்துப்  பார்த்தபோது வேஷ்டியும், கோவணமும் காணவில்லை. மரத்தில் உள்ள ஒரு குரங்கு அவற்றை வைத்திருப்பதைக் கண்டார். “எடா துரோகி, நீ என்னிடமே வேலை காட்டுகிறாயா? உனக்கும் மற்ற குரங்குகளுக்கும் ஒரு பாடம் புகட்டாமல் சும்மா விட மாட்டேன்”. என்று கூறி ஒரு மந்திரம் ஜெபித்தார். 

அந்த மந்திரம்வானர ஆகர்ஷண மந்திரம்”. வானரங்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டன. தேவலசேரித் தான் வேஷ்டியை உடுத்திக்கொண்டு புறப்பட்டார். கட்டுப்பட்ட வானரங்களும் ஒரு படை போல் அவர் பின் சென்றன. ஒரு வானரம் கொடி போல் கோவணத்தையும் கொண்டு நடந்தது. இப்படி வானர அகம்படியுடன் தேவலசேரித் தான் நாலேக்காட்டு இல்லத்தில் வந்து சேர்ந்தார். 

யோகீஸ்வரன் ராமன் பிள்ளை அவரைக் கண்டு வணங்கி வரவேற்று அமரச் செய்து குசலம் விசாரித்தார். அப்போது குரங்குப் பட்டாளத்தைக் கண்டுஇது என்ன விந்தை? எதற்காகக் குரங்குகளைக் கூடி கூட்டி வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். 

இந்தத் திருடர்கள் என் கோவணத்தைத் திருடினர். ஆகவே அவர்களை அடக்கிக் கொண்டு வந்தேன். நான் மாத்திரம் சிரமப்பட  வேண்டுமா? இவைகளும் கொஞ்சம் சிரமப்படட்டும்.” என்றார். 

மேலெழுத்துப் பிள்ளை,இதுகள் பாவம். விட்டு விடுங்கள்என்று சொன்னார். தேவலசேரித் தான் ஒரு மந்திரம் ஜெபிச்சுஅந்தக் கோவணத்தை அங்கே வைத்துவிட்டுச் செல்லுங்கள்என்று ஆணையிட அவ்வாறே செய்து குரங்குகள் திரும்பிப் போயின. 

இதைக் கண்ட யோகீஸ்வரன் ராமன் பிள்ளைக்கு வியப்பு உண்டாகியது. தேவலசேரித் தான் ஒரு சாதாரண மந்திரவாதி அல்ல, பெரிய திறமைசாலி என்று புரிந்தது. ஆனாலும் அவரைக் கொஞ்சம் கூடுதல் பரிசோதிக்க எண்ணிஉங்களை இங்கு வரவழைத்ததன் காரணம் விளங்கியிருக்கும் என்று கருதுகிறேன். அநேகம் மந்திரவாதிகளையும், வைத்தியர்களையும் தருவித்து பல சிகிச்சைகள் செய்தும் பலன் இல்லை. செலவானது பணம் மட்டுமே. இனி தங்களைக் கொண்டும் செய்ய முடிந்ததை செய்து பார்க்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன். இந்த முயற்சியும் பலன் தரவில்லை என்றால் வேறு எந்த முயற்சியும் செய்யப் போவதில்லை. எனக்கும் வயது 60  அடுத்து விட்டது. இனியும் புத்திர பாக்கியம் கிடைக்கா விட்டால் அதனைக் குறித்து ஏங்க வேண்டியதில்லை. இந்த வம்சம் என்னுடைய மறைவிற்குப் பின் இல்லாமல் போய் விடும். “அபுத்ரஸ்ய குதோ முக்தி” (மகன் இல்லாதவனுக்கு முக்தி உண்டோ?) என்றல்லவா மொழி. வம்சம் தழைக்க ஒரு மகனாவது வேண்டும். இறப்பிற்குப் பின் ஈமக்கிரியைகள் செய்ய ஒரு மகன் வேண்டும்.” 

இத்தனையும் சொல்லும்போது அவரது நா தழுதழுத்தது. கண்களில் நீர் குளம் கட்டின, கண்களைத் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார். “என்னுடைய இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டியதை  எல்லாம் தாங்கள் செய்யவேண்டும். உமையாளை பிடித்திருக்கும் கந்தர்வன் நீங்கினால் சந்தான பாக்கியம் உண்டாகும் என்று ப்ரஸ்ன பலன் தெரிந்தது. இதை நீங்கள் முக்கியமாகக் கருத வேண்டும். எனக்கு, என் அனுபவத்தில் மந்திரவாதிகள் பேரில் விசுவாசம் குறைவே. ஆனால் உங்களைக் கண்டபோது எனக்கு ஒரு நம்பிக்கை தோன்றுகிறது. என்றாலும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்த முதலில் ஒரு சின்ன காரியம் செய்து காண்பிக்க வேண்டும்.” 

இதோ இங்கு தொழுவத்தில் படர்ந்து இருக்கும் பூசணிக் கொடியை மந்திரத்தால் கீழே இறக்க வேண்டும். பின்னர் மந்திரத்தால் அதை பழைய நிலையில் படரச் செய்ய வேண்டும்.” 

மேலும் நம்முடைய முக்கிய காரியத்திற்கு வேண்டிய பொருட்கள் என்ன என்று கூறினால் அவற்றை சேகரித்து தயார் செய்யலாம்என்று கூறினார். 

அதைக்கேட்ட தேவலசேரித் தான்குரு கடாட்சம், பரதேவதைகளின் காருண்யம் இவற்றால் இக்கந்தர்வனின் உபத்திரவத்தை நீக்கலாம் என்பதே என்னுடைய நம்பிக்கை. தங்களுடைய குடும்பம் நற்செயல்கள் பல செய்தவர்கள் உட்பட்டது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அக்காரணத்தாலும் தங்களுடைய பாக்கியம் கொண்டும் தங்களுக்கு சந்ததி உண்டாகும் என்பது உறுதி. என்மேல்  நம்பிக்கை உண்டாக வேண்டி நீங்கள் விரும்பியதை தற்போது செய்து காட்டுகிறேன். கந்தர்வனை விரட்ட பிரத்யேக வஸ்துக்கள் சேகரிக்க வேண்டும் என்று இல்லை. சூரியன் அஸ்தமித்து ஏழரை நாழிகைகள் பொருத்திருக்க வேண்டும். வேண்டியவற்றை அப்போது கூறுகிறேன்.” 

மந்திரவாதி மந்திரம் ஜபித்து காயும், பூவும்  நிறைந்து தொழுவத்தில் மேல் படர்ந்து இருந்த பூசணிக் கொடியை கீழே இறக்கினார். 

அதைக்கண்ட யோகீஸ்வரன் ராமன் பிள்ளைஇப்பிரகாரம் செய்யும்படி கேட்டுக் கொண்டது உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லாததால் அல்ல. இது போன்ற அற்புதங்கள் காண வேண்டியும், இம்மாதிரி அபூர்வங்கள் செய்யக் கூடிய மந்திரவாதிகள் இல்லை என்பதாலும் தான். தாங்கள் மாற்று மந்திரம் ஜபித்து இக்கொடிகளை பழையநிலையில் படரச் செய்யவேண்டும்.” என்றார். 

மந்திரவாதி அதே போல் மாற்று மந்திரம் ஜபிக்க, கொடிகள் எல்லாம் தன்னைத்தானே எழுந்து தொழுவத்தில் படர்ந்து பழைய நிலையை  அடைந்தன.  ராமன் பிள்ளை திருப்தி ஆனார்.. 

அன்று இரவு ஏழரை நாழிகை சென்றபின் தேவலசேரித் தான் மந்திரவாதம் ஆரம்பித்தார். அவர் ஒரு சக்ரம் வரைந்தார். அதில் உமையாள் பார்வதியை உட்கார வைத்தார்.


மந்திரம் ஓதி அவள் மேல் பஸ்மம் வீசினார். “இவ்வுடம்பில் யார் குடி வந்திருப்பது? எதற்கு வேண்டி இவள் மேல் அவர் வந்திருக்கிறார். இவளை பிடிக்கக் காரணம் என்ன? பதில் சொல்என்று கட்டளை  இட்டார். உமையாள் பாரவ்தியைப் பிடித்திருந்த கந்தர்வன் 

நான் யார் என்பதை நீங்கள் முன்னரே ப்ரச்னம் மூலம் அறிந்து கொண்டீர்கள் அல்லவா? நான் இந்த ஸ்திரீயின் அழகில் மயங்கி இவளை பிடித்திருக்கிறேன். இவளை உபவத்திரவிக்க நான் சிறிதும் விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்த்ரீ இவள் கணவனுடன் கூடுதலை ஒருக்காலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் அதனை எதிர்க்கிறேன்.  ஆகவே அவளுடைய கணவன் மூலம் புத்திரன் உண்டாவதை என்னால் ஏற்க முடியவில்லை. வேறு எந்த உபத்திரவமும் நான் செய்ததில்லை, செய்ய மாட்டேன். இந்த ஸ்திரீயை விட்டுப் போக எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே அந்தக் காரியம் செய்ய மாத்திரம் நிர்பந்திக்காதீர்.”

தேவலசேரித் தான்இல்லை அப்படி இல்லை. இந்த ஸ்திரீயின் தேகத்திற்கு ஒரு உபத்திரவமும் உண்டாகக் கூடாது. சந்ததியும் உண்டாக வேண்டும்இது அவசியம். இது மாத்திரமே வேண்டுகோள்

கந்தர்வன்: “நான் இந்த தேகத்தில் உள்ளது வரை சந்ததி உண்டாவது அசாத்தியம்.” 

தேவலசேரித் தான் :  அப்படியானால் நீ இந்த தேகத்தை விட்டுப் போய்த்தான் ஆக வேண்டும். 

கந்தர்வன்: “அது சங்கடம்

தேவலசேரித் தான் : “போகாமல் இருப்பது எங்களுக்கு சங்கடம் 

கந்தர்வன் : “என்ன செய்வது. அப்படியானால் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும். என்ன ஆனாலும் சரி நான் இவளை விட்டுப் போக மாட்டேன் 

தேவலசேரித் தான் : “போகமுடியாது என்றால் நான் விரட்டி அடிப்பேன். தானே ஓடிப்போவது தான் நல்லது 

கந்தர்வன்: “என்னை விரட்ட முடியுமா? அது சாத்தியம் இல்லை. நீங்கள் இங்கிருந்து ஒடிப் போவதே நல்லது. அப்படி செய்தால் உங்கள் மானம் காப்பாற்றப் படும். இதுவரை என்னை விரட்ட வந்த ஆட்களைப் போன்றவர் அல்ல நீங்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் தான் சொல்கிறேன்….

இதற்கு முன் வந்தவர்களால் என் வாயைக் கூடத் திறப்பிக்க முடியாமல் தோற்றார்கள். நீங்கள் கொஞ்சம் கூடுதல் படித்த அறிஞன். என்னை உபத்திரவிக்கத் தொடங்கினால் நான் உங்களை அவமானித்து அனுப்புவேன் 

இவ்வாறு கூறி அந்த ஸ்த்ரீ எழுந்து வர எத்தனித்தாள். ஆனால் தேவலசேரித் தான், முன்பே ஜபித்து தயாராக்கி வைத்திருந்த ஒரு நூல் கயிற்றை மந்திரம் ஜபித்து ஒரு முடிச்சுக்  கட்டு போட்டார். ஸ்திரீஅய்யோஎன்று அலறி கட்டை அவிழ்க்க சிரமப்படுவது போல் கைகளை பிசைந்து கொண்டு அங்கேயே உட்கார்ந்தாள். 

ஸ்திரீ எழுந்தது மந்திரவாதியின் கன்னத்தில் அறைய வேண்டித்தான். அதை உணர்ந்த மந்திரவாதி மந்திரம் ஜபித்து கைகளைக் கட்டியதால்தான் திரும்பவும் அவள் உட்கார்ந்தாள். இவ்வாறு பந்தனம் ஆனதும் அவளால் கை கால்களை அசைக்கக்  கூட  முடியவில்லை. 

கந்தர்வன்: “தாங்கள் சாதாரணமாணவர் அல்ல என்று சம்மதிக்கிறேன். உங்களோடு  போராட வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னை மரியாதை செய்து அனுப்பக் கோருகிறேன். தக்க மரியாதை செய்தால் நான் சந்தோசமாக நீங்குகிறேன் 

தேவலசேரித் தான் : “மரியாதை செய்து அனுப்ப சம்மதம். எவ்விதமான மரியாதைகள் செய்ய வேண்டும்?” 

கந்தர்வன்: “அதை நான் சொல்ல வேண்டுமா? உங்களுக்குத் தெரியும். எப்போதும் செய்வது போல் செய்தால் போதும். அதிகம் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை." 

தேவலசேரித் தான்: “திடீர் என்றாலும் இன்று முடியாது. ஒரு நாள் குறித்து சொல்லவும்”. 

கந்தர்வன்: “போகத் தீர்மானித்தவுடன் அதிக நாள் இங்கு இருக்க விரும்பவில்லை. நாளை என்னை முறைப்படி வழி அனுப்ப வேண்டும்.” 

தேவலசேரித் தான் : “அப்படியே ஆகட்டும் 

கந்தர்வன்: அப்படியானால் தற்போதைக்கு நான் விலகி நிற்கிறேன் 

இத்தனையும் நடந்த பின்பு ஸ்திரீ களைத்து அங்கேயே படுத்து விட்டாள். சிறிது நேரம் சென்றபின் எழுந்து நீர் அருந்தி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.  

அடுத்த நாள் மாலைக்கு முன்பே வீடு முற்றம் எல்லாம் பெருக்கி, கழுகி, அலங்கரித்து, ஒரு பெரிய பூஜைக்கு வேண்டிய எல்லாம் தயார் செய்தனர். கற்பூரம், சாம்பிராணி, அஷ்ட கந்தம், சந்தனம், கஸ்தூரி முதலான வாசனை திரவியங்களும், பூமாலைகள், பன்னீர், எல்லாம் சேகரித்து வைத்தனர். 

இரவு ஏழரை நாழிகை ஆன போது  தேவலசேரித் தான்  குளித்து, சுத்தமாக வந்தார். அவர் பத்மாசனத்தில் இருந்து விளக்கேற்றி கந்தர்வனுக்கு ஒரு பூஜை செய்தார். பால் பாயசம், அப்பம், அடை, அவல், பொரி, பழம், இளநீர், முதலான நைவேத்தியங்களை சமர்ப்பித்தார். பூஜை முடிந்தவுடன் முதல் நாள் செய்தது போல் பஸ்மம் கொண்டு சக்ரம் வரைந்து அதில் உமையாள் பார்வதியை அமர்த்தினார். விபூதி ஜபித்து இடுதல் போன்றவை செய்யவில்லை. அவர் சிறிது சந்தனமும், பூவும் கையில் எடுத்து கந்தர்வனை ஆஹ்வானம் செய்து ஸ்திரீயின் தலையில் அர்ச்சித்தார். 

அவ்வாறு செய்தவுடன் ஸ்திரீ சாமியாடத் தொடங்கினாள். சாமியாட்டம் என்றால் ஓடுவதோ, குதிப்பதோ தாண்டுவதோ கிடையாது.  தேகம் சற்று முறுக்கேறியது. ஒரு ஆணைப் போல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஆண் குரலில் பேசத் தொடங்கினாள். இவ்வாறு ஆடத்  தொடங்கியவுடன் தேவலசேரித் தான்  பூ மாலைகள், சந்தனம் எல்லாம் எடுத்து ஸ்திரீயின் அடுத்து வைத்தார். 

உடனே அந்த ஸ்திரீநீங்கள் நேற்று கட்டிய கட்டை இதுவரை அவிழ்க்கவில்லையே. அப்படியானால் இந்த உபசரிப்பை நான் எவ்வாறு ஏற்க முடியும்?” என்று கேட்டாள். 

அப்போது தேவலசேரித் தான்  நான் அந்தக் காரியம் மறந்து விட்டேன். தவறை மன்னிக்கவும்.” என்று கூறி மந்திரம் ஓதி கட்டவிழ்த்தார். ஸ்திரீ சந்தனம் எடுத்து தேகமாக பூசி, மாலைகளை எடுத்து அணிந்து கொண்டாள். தேவலசேரித் தான் கற்பூரம் கொளுத்தி ஆரத்தி காட்டி அஷ்ட கந்தம் முதலியவற்றைத் தூவினார். 

ஸ்திரீ பேசத்தொடங்கினாள். “சந்தோசம். நான் இப்போதே செல்கிறேன். இனி ஒருக்காலும் இந்த ஸ்திரீ என்று மட்டுமல்ல, இந்த குடும்பத்தினர் யாரையும் நான் பாதிக்க மாட்டேன். இது சத்தியம். ஆனால் இத்தனையும் காலம் இந்த ஸ்திரீயில் குடியிருந்து அவளையும் குடும்பத்தையும் ஆட்டிப் படைத்ததிற்கு பிராயசித்தம் என்று ஒரு சகாயம் போலும் செய்யாமல் செல்வது சரியில்லை. அதனால் நான் மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன். அடுத்த ஆண்டு இதே மாதத்தில் இதே தேதியில் இந்த ஸ்திரீ ஒரு ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அந்த மகனும் யோக்கியமானவனும் பிரசித்தமானவனும் ஆக இருப்பான். இவ்வாறு கூறி கந்தர்வன் உமையாள் பார்வதியை விட்டு நீங்கினான். உமையாள் பார்வதியும் சுகம் அடைந்து கந்தர்வன் கூறியது போல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். 

இப்பிரகாரம் யோகீஸ்வரன் ராமன் பிள்ளைக்கு பிறந்த ஏக புத்திரன்பாலராமன் பிள்ளை சம்பிரதிப் பிள்ளைஎன்று அறியப்படுபவர். பாலராமன் பிள்ளை ஜனித்தது கொல்லம் 960 ஆம் வருடம் குட்டம்பேரூர் இல்லத்தில் தான். 

குழந்தை பிறந்தவுடன் யோகீஸ்வரன் ராமன் பிள்ளை மஹாராஜாவிற்கு செய்தி அனுப்பினார். அன்று ராஜாவாக இருந்தது 973 இல் நாடு நீங்கிய ராமவர்மா திருமனசு. அவருக்கு ராமன் பிள்ளையின் மீது கொஞ்சம் கனிவு உண்டு. 

மகாராஜாவின் அரசு காரியங்களை நிர்வகித்தவர்கள்  திவான் கேசவதாச பிள்ளை, மற்றும் வலிய மேலெழுத்து ராமன் பிள்ளை ஆவர். வலிய மேலெழுத்து ராமன் பிள்ளைக்கு புத்திரன் பிறந்தது மஹாராஜாவிற்கு மிக்க சந்தோசத்தைத் தந்தது. அக்குழந்தையைக் காண விரும்பி மஹாராஜா தனிப்பட்ட (D O ) கடிதம் எழுதி குழந்தையை திருவனந்தபுரம் கொண்டு வந்து மஹாராஜாவிடம் காண்பிக்க வேண்டும் என்று கோரினார். 

குழந்தை பிறந்ததன் பின் உள்ள சிசுரட்சைகள் முடிந்தவுடன் வலிய மேலெழுத்து ராமன் பிள்ளை குடும்ப சமேதம் தோணியில் திருவனந்தபுரம் வந்து மஹாராஜாவைக் கண்டார். 

நாமும் நம்முடைய வலிய மேலெழுத்துப் பிள்ளையும் ராமன் என்ற பெயர் உள்ளவர் அல்லவா. அதே போல் வலிய மேலெழுத்து பிள்ளையின் மகனுக்கு நம்முடைய மருமகன் பெயர் ஆகட்டும். (மருமகன் இளவரசன்). இக்குழந்தைக்குபாலராமன்என்ற பெயர் இருக்கட்டும்.” என்று ஆசிர்வதித்தார்.  

986ஆம் ஆண்டு பாலராம வர்மா நாடு நீங்கியபின் (இறந்த பின்) யோகீஸ்வரன் ராமன் பிள்ளை மூப்படைந்த காரணத்தால் குட்டம் பேரூரில் சொந்த வீட்டில் வசிக்கலானார். வலிய மேலெழுத்து பதவியை அவர் விடவில்லை. மரிக்கும் வரை பதவியில் இருந்து சம்பளமும் பெற்றார். 

பாலராம வர்மா மகாராஜாவின் காலத்திற்குப் பின் திருவாங்கூர் ராஜ்ஜியத்தை ஆண்ட லக்ஷ்மி பாய் தம்புராட்டியும் பார்வதி பாய் தம்புராட்டியும் ராமன் பிள்ளை மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆதலால் வலிய மேலெழுந்து பிள்ளையின் அரச காரியங்களில் உதவி செய்யசாங்கையில் சங்கரநாராயண பிள்ளைஎன்பவரை உதவியாளராக நியமித்தனர். ராமன் பிள்ளைக்கு சம்பளமும் தந்தனர்.  

ராமன் பிள்ளை கொல்ல வருடம் 996 இல் சிங்கம் (ஆவணி) மாதத்தில் 96 ஆவது வயசில் மேலுலகம் சென்றார். 


3.     பாலராமன் பிள்ளை. 


இவர் ஒரு பெரிய சமஸ்கிருத பண்டிதரும், கவியும் ஆவார். ஜோஸ்யம், மந்திரவாதம், வைத்தியம், முதலிய சாஸ்திரங்களிலும் விதக்தர். ராயசம், சாம்பிரதி, முதலான சர்க்கார் உத்யோகங்கள்  வகித்தவர். இவரைப் பற்றி அறிந்தவர்கள் தாராளம் பேர் தற்போதும் உள்ளனர். ஆகவே கூடுதல் ஒன்றும் சொல்லவில்லை. 

பாலராமன் பிள்ளை அவருடைய 90ஆம் வயதில் கொல்லம் 1050 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். தற்போது நாலேக்காட்டு குடும்பத்திற்கு உட்பட்ட  சங்கர நாராயண பிள்ளை அவர்கள் மேலே சொன்ன  பரம்பரையில் பிறந்தவர் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.

= = = = = =

சு நா மீ கதை எழுதுபவர் - இரண்டு வாரங்கள் லீவு போட்டுவிட்டு முக்கிய வேலையாக திருவாரூர் பக்கம் சென்றிருப்பதால், சு நா மீ கதை டிசம்பர் 13 அன்று தொடரும் என்று எதிரபார்க்கிறோம்! 

= = = = = =

33 கருத்துகள்:

  1. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் வண்ணம் செயல்..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு வண்ணங்களில் ஒரு வண்ணத்தை நீக்கி வாசிக்கலாம்.

      நீக்கு
    2. அது கூகிள் செய்த கோளாறு..

      கதைப் பகுதியைப் பார்த்த மன உளைச்சலில் நானும் கவனிக்க வில்லை..

      பொறுத்தருள்க
      தமிழ் நெஞ்சங்களே!..

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
  3. சு நா மீ நாயகன் சேகர் தான் திருவாரூருக்கு போனால் கதையாசிரியரும் மீதிக்கதைக்கு வேண்டி அவர் பின்னால் சென்றுள்ளாரே? 

    ஆசிரியர் நாயகனைத் துரத்திச் சென்று டைரிக் குறிப்பாக கதையை எழுதுகிறார் போலும்!

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. சு.நா.மீ ஆசிரியர் கதாநாயகன்சேகரைத் தேடிப் போயிருக்காரோ? இஃகி,இஃகி,இஃகி, கதாசிரியர் யாருனு புரிஞ்சு போச்சே!

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கதைப்பதிவு ரொம்பப் பெரிதாக இருக்கே? இரு பாகங்களாக வெளியிட்டிருக்கலாம். இப்போப் படிக்க உட்கார்ந்தால் நாழி ஆயிடும். மத்தியானமா வரேன்.

    பதிலளிநீக்கு
  6. இன்றைய வரலாற்றுக் கதை நன்றாக இருந்தது. நாட்டார் வழக்காற்றியலாக இருந்தாலும், வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐதீக கதைகள் வினோதமாக இருக்கும்.கறுப்பா வாந்தி எடுத்தான் என்பது காக்கா  காக்கா யாக வாந்தி எடுத்தான் என்றாகிவிடும். 30 மரக்கால் பாலை யார் குடிக்க முடியும்? என்றாலும் வித்தியாசம் என்ற முறையில் படிக்கலாம். கருத்துரைக்கு நன்றி. 

      Jayakumar

      நீக்கு
    2. நாட்டார் வழக்காற்றியல் என்பதே, கொஞ்சம் exaggerationஉடன் கூடிய கதைகள், அதில் வரலாறும் சேர்ந்திருக்கும். அதுவும்தவிர, இத்தகைய கதைகளை நாம் இப்போதிருக்கும் சூழலை வைத்து எடை போடுவதும் சரியாக வராது.

      நீக்கு
  7. இந்த மாதிரி கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமே அலாதி தான். ஜெஸி ஸார் நமக்குக் கிடைத்தாரோ, இக்கதைகளை வாசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்ததோ!
    அவர் மூலமாக பிரபல மலையாள கதாசிரியர்களின் கதைகள் தமிழில் மொழி மாற்றம் செய்து எபியில் வெளிவருமேயானால்
    நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கின்றது.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜெஸி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமகால மலையாள இலக்கிய படைப்புகள் பலவும் காப்புரிமை உள்ளவை. இணையத்தில் போலும் தமிழ் இலக்கியம் போன்று இலவசமாகக் கிடைப்பதில்லை. 

      நீலபத்மநாபன், ஜெயமோகன், நகுலன் போன்றோர் மலையாளத்திலும் எழுதியுள்ளனர். மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளனர். 

      முடியுமானால் இணையத்தில் தேடி ஒன்று இரண்டு சமகால கதைகளை மொழி பெயர்க்கப் பார்க்கிறேன். 

      தற்போது நம்முடைய ராஜேஷ்குமார் போன்று கோட்டயம் புஷ்பநாத் பிரபலம். இவ்ருடைய படைப்புகள்  தமிழில் இணையத்தில் கிடைக்கிறது. வேண்டுமானால் தரவிறக்கி படிக்கலாம். ஆனால் அவை எ பி யில் பிரசுரிக்கத் தக்கது அல்ல. அது போன்றே கமலாதாஸ் படைப்புகளும்.

      கருத்துரைக்கு நன்றி. 

      நீக்கு
    2. கோட்டயம் புஷ்பநாத் மற்றும் பலரின் கதைகளை ஏன் எபியில் பிரசுரிக்க முடியாது? அமானுஷ்யக் கதைகள் என்ற அளவில் அவை நன்றாகவே இருக்கும். காப்பிரைட் மாத்திரம்தான் பிரச்சனையாக இருக்கலாம்.

      நீக்கு
    3. இந்த லிங்கில் ஒரு சாம்பிள் நாவல் புஷ்பநாத்.

      https://drive.google.com/file/d/1g5FORBJ18Pc1y7zdsQFXS_70BY5y1bPF/view?usp=sharing

      Jayakumar

      நீக்கு
    4. படித்திருக்கிறேன். என்னிடமும் இருக்கிறது.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. மூன்று மகான் கதை நன்றாக இருக்கிறது.

    மந்திர, தந்திர கதைகள் படிக்க, பார்க்க திக் திக் என்று இருந்தாலும்
    ஆவல் இருக்கும் தான்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    ஐதீக மாலை தொகுப்பிலிருந்து வெளியிட்ட மூன்று மகான்கள் கதை நன்றாக உள்ளது. படிக்க சுவாரஸ்யமாகவும் இருந்தது. சக்ரம் வரைந்த அந்தப் படத்தை பார்க்கும் போது சந்திரமுகி திரைப்படம் நினைவுக்கு வந்தது. மாய மந்திர கதைகள் என்றால் படிப்பதற்கு சுவாரஸ்யம் தரும். இந்த மாதிரி கதைகளை பொறுமையுடன் அதன் சுவாரஸ்யம் ஒரு துளியேனும் குறையாது நன்கு புரிகிற மாதிரி மொழியாக்கம் செய்து நமக்குத் தரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.

    எப்போதாவது வீட்டில் தனியாக இருக்க நேரிட்டாலோ, அல்லது ஒரு இருட்டான இடத்திற்குச் செல்லும் போதோ அவைகள் (மாய மந்திரங்கள்) நினைவுக்கு வந்தால், சஷ்டி கவசம் நானிருக்கிறேன் என நம் மனதோடு வந்து விடும். கவலையில்லை. :))) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. மந்திர, தந்திரக்கதைனு ஆவலுடன் படிக்க வந்தேன். அவ்வளவு பயமாகவெல்லாம் இல்லை. இதைவிடவும் பயங்கரமான பல மலையாளக் கதைகள் உண்டு. அநேகமாக யட்சன், யக்ஷி எல்லோரும் அவற்றில் இருப்பார்கள். பல முறை நினைத்துக்கொள்வேன். அது ஏன் மலையாளக் கதைகளில் மட்டும் யட்சன், யக்ஷி என வராங்கஎன்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  12. சக்கரம் படம் வரைந்ததா? அல்லது கூகிளாரின் தயவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் வரையப்பட்டதல்ல. புகைப்படம். கூகிள் உபயம். 
      Jayakumar

      நீக்கு
  13. நான் சொல்வது வேறு.மாதிரி. இந்த மாந்திரீகம், துப்பறியும் எல்லாம் தாண்டி வாருங்கள்.

    தகழி, எஸ்.கே.பொற்றேகாட், உரூப், அரவிந்தாட்சன் போன்றோர். இதை மாதிரி ஒரு பெரிய லிஸ்ட்டே என்னிடம் உண்டு. என் இளம் வய்ச்தில் நிறைய மலையாள எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தேடித் தேடி படித்திருக்கிறேன். அந்த அழியாத நினைவுகளின் தொடர்ச்சியில் சொன்னேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!