சனி, 25 பிப்ரவரி, 2023

அரசுப் பள்ளிக்கு ஐயிரண்டு லட்சம் மற்றும் நான் படிச்ச கதை

 



=========================================================================================================




==============================================================================================================


==============================================================================================



====================================================================================================



======================================================================================================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

கிறுக்கல் – லா ச ரா


முன்னுரை.

எந்த ஒரு படைப்பும் நம்முடைய கவனத்தை ஈர்க்குமாயின் அது மனதில் ஆழப் பதிந்து ஒரு ஓரத்தில் அழியாத கோலமாய் நிற்கும். சிறந்த சிறுகதைகளும் அப்படியே. படித்தபின் அக்கதை விருப்போ, வெறுப்போ, மகிழ்ச்சியோ, துக்கமோ, கோபமோ, அனுதாபமோ, என்று ஏதோ ஒரு உணர்ச்சியைத் உள்ளத்தில் தூண்டும்.

அப்படி மனதில் நின்ற மாசானம், இணைப்பறவை, பைத்தியக்கார பிள்ளை, காட்டில் ஒரு மான், வெயிலோடு போய், இடலாக்குடி ராசா, தக்கையின் மீது நான்கு கண்கள், ஆயிஷா, மரி என்னும் ஆட்டுக்குட்டி, என்று சில கதைகளை இப்பகுதியில் கண்டோம். அவ்வரிசையில் தற்போது கிறுக்கல். 

கொடிது கொடிது முதுமை கொடிது. அதனினும் கொடிது முதுமையில் தனிமை (இணையை இழப்பது), அதனினும் கொடிது தனிமையில் மகன் அல்லது மகள் ஆதரவில் வாழ்வது. சூடாமணியின் தாத்தா (இணைப்பறவை)  நீல பத்மனாபனின் மாரியம்மை (சண்டையும் சமாதானமும்) போன்றோர் அத்தகைய மறக்க முடியாத முதியவர்கள். 

சூடாமணியின்இணைப்பறவையில்  பாட்டி இறந்த பின் தாத்தாவின் மன நிலையை விவரிக்கும் விதமாக கதை ஆரம்பிக்கும்.. இந்தக் கதையும் அவ்வாறே. 

கிராமத்தில் வசிக்கும் தாத்தாவின் இணை விஜி என்கிற விஜயாம்பிகை பாட்டி இறந்து 15 நாட்கள் ஆகி விட்டன. மகன் அவரை பட்டணத்திற்குக் கூட்டிச் செல்கிறான். சம்பளம் இல்லா வீட்டுக் காவல்காரன், பேரனைக் கவனித்துக்கொள்ளும் குழந்தைப் பாதுகாவலர், என்று பல முகமூடிகளையும் அணிந்து பழகாத ஊரின், நகரத்து வீட்டின், வேலைக்கு போகும் மருமகளின், என்று பிடிக்காத பல விஷயங்களைச் சகித்துக்கொண்டு எப்படியோ வாழ்கிறார். இடையில் பேரனின் களங்கமற்ற அன்பு/நெருக்கம் மட்டுமே ஆறுதல். அவன் முகம் பாட்டியின் சாயலில் இருப்பதுவும் ஒரு காரணம். பேரனுக்கு படிப்பு சுணங்குகிறது. அதற்கு காரணம் அவர் தான் என்று குற்றம் சாற்றுகிறார்கள். 

ஒரு நாள் மகனும், மருமகளும் சேர்ந்து பேரனை அடிக்கும்போது குறுக்கே போய் தடுக்கிறார். அவர் மேலும் அடி விழுகிறது அதன் விளைவு? எதிர் பாராதது. 

கதை வெளியான வருடம் 1991. வாசகர்கள் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கால வித்தியாசம் கதையின் ஊடே வருகிறது. கதை சுருக்கம் தரப்பட்டுள்ளது. அதுவே கொஞ்சம் நீளம். முடிவு எதிர்பாராதது. அதுவே தலைப்பு. 

கிறுக்கல்

கதையாசிரியர்: லா..ராமாமிர்தம்

பாட்டி இறந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன.

அப்போ நாளை ராத்ரி புறப்படறோம். ரிசர்வ் பண்ணியாச்சு.”

அவன் சொன்னதை வாங்கிக் கொண்டதாக அவர் விழிகளில் தெரியவில்லை.

உங்களுக்கும் சேர்த்துத்தான்.”

நானா? நான் ஏன்?”

ஆம்ப்பா.”

நான் ஏன்?”

ஆமாம்பா.” இப்போ குறுக் கிட்டது அவள். “உங்களுக்கு இனிமேல் இங்கே என்ன இருக்கு?”

என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே!” நெஞ்சில் கோபம் பிராண்டிற்று. “இங்கே என்ன இல்லை? ஒருத்தியில்லேன்னா உலகம் அஸ்தமிச்சுப் போயிடுமா?” ஆனால். குரல் தழுதழுத்து விட்டது. 

மருமகள்அப்பா. கோவப்படாதீங்கோ.” சட்டென மண்டியிட்டு அவர் வலது கையைத் தன் இரு கைகளிடையே பொத்திக்கொண்டாள். கூசிற்று. விடுவித்துக் கொள்ள முயன்றார். அவள் விடவில்லை. இப்போதெல்லாம் இதுதான் சகஜம் போலும்! 

நீங்கள் ரெண்டு பேருமே எப்போதோ எங்களிடம் வந்திருக்க வேண்டும். நாங்கள் கட்டாயப்படுத்தாமல் இருந்துட்டு, ஏமாந்தும் போயிட்டோம். இப்ப வேணும், எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கப்பா. இனிமேல் நீங்கள் ஒண்டியா இருக்க வேணாம்.”

பரவாயில்லை. அப்பா உலகம் முழுக்க அஸ்தமிச்சுப் போயிடல்லே.

உன் பேர் என்ன?” சமாதானத்தில் முறுவலித்தார்.

எழுந்து நின்றாள்.

என் பெயர் விஜி.”

தூக்கி வாரிப் போட்டது.

நீயும் விஜியா?” நான் விஜயஸ்ரீ.”

…..

இரவு தூக்கம் மறுத்தது. புரண்டார். எழுந்தார். உட்கார்ந்தார்.

சரி! எது எப்படியானும் போகட்டும். நாளை ராத்ரி இங்கே படுக்கையில்லை. இந்த நேரத்துக்குப் பட்டணத்தை நோக்கி ரயில் போயிண்டிருக்கும். திரும்பி வரேனோ இல்லேயோ,

***

கார்த்திக், Shake hands with Grand dad, say Good morning!”

பையன் லஜ்ஜையுடன் வந்து அவர் கையுள் தன் கையை வைத்தான். அவ்வளவுதான். எப்படியென்று தெரியவில்லை. அவருக்கு உள்ளே மார்பு அகன்று விரித்த மாதிரிஇழுத்து அணைத்து, கன்னத்தோடு கன்னம் இருத்திக் கொண்டார். உடனே அவர் கழுத்தை அவன் கைகள் வளைத்துக் கொண்டன. அவருக்கு மூர்ச்சை போட்ட மாதிரி ஆகிவிட்டது. மெத்து மெத்து 

வா வா கார்த்திக், நேரமாச்சி. இன்னிக்கு அந்தத் தாத்தா வீட்டுக்குப் போ வேணாம். நேரே இங்கே வந்திடு. இந்தத் தாத்தாவுக்குக் கம்பெனி கொடுக்கணுமில்லே! டாட்டா!”

அவரிடம் வந்தாள்.

அப்பா, உங்கள் சாப்பாட்டை மேஜையிலே மூடி வெச்சிருக்கேன்.

டி.வி. பக்கத்துலே பாலுக்குப் பாத்திரம் வெச்சிருக்கேன். மத்தியானம் சைக்கிள்லே வருவான். மணியடிப்பான். தூங்கிடாதீங்க. போயிடுவான். வாசல் கதவை மூடியே வையுங்க.

சரி, வரேன். வீடு பத்ரம் பத்ரம்!”

பேசிக்கொண்டே இறங்கிப் போய் விட்டாள். கட்டிலில் ப்ரமை பிடித்தாற் போல உட்கார்ந்திருந்தார். தும்பை நீளமாக்கி மேய விட்ட மாடு போல், வீட்டுள் தன் சிறை நிலை முழுக்க உணரச் சற்று நேரமாயிற்று.

சாப்பிட்டபின்சாப்பாடா அது? குழம்பா ரஸமா அதுவே தெரியவில்லை. ஆறிப்போய் விறைத்த சோறு; யாருடைய எச்சில் தட்டோ? ‘பட்டணத்தில் இலை கிடைக்காது. கிடைத்தாலும் கட்டுப்படி ஆகாது.’  வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வந்தார்.

ஆமாம். இந்த மூணு பேருக்கு அதில் ஒண்ணு அரை டிக்கெட். இவ்வளவு பெரிய வீடு தேவைதானா? ஆனால், நான் கேக்க முடியுமா? “நான் சம்பாதிக்கறேன், நான் கடன் படறேன்இந்த நாள் சித்தாந்தமே இப்படித்தானேயிருக்கு?

கிருஹப்ரவேசத்துக்கு நா போக முடியல்லே. வயல்லே நாத்துப் பிடுங்கற சமயம். அவள் போய் வந்தாள். வீட்டைப் புகழ்ந்து அவளுக்கும் மாளல்லே. ஆனால், அடுத்த நாளே வந்துட்டாள். ஏன் ஒரு வாரம் இருந்துட்டு வரதுதானேன்னு கேட்டதுக்குப் பிடி கொடுத்துப் பதில் சொல்லல்லே. 

திடீரென்று தாங்க முடியாத ஆயாசம் அழுத்திற்று. நின்ற இடத்திலேயே உட்கார்ந்து விட்டார். இங்கே என்னால் தள்ள முடியுமோ? ஆனது ஆகட்டும். இன்னி ராத்திரியே ஊருக்குக் கிளம்பிடுவோமா? கையில் பணமில்லை. விஜி. என்னை வேடிக்கை பார்த்துட்டியேடி! 

அவனோ நிலத்தை விக்க முஸ்தீபா நிக்கறான். “ஆத்துலே தண்ணியில்லே பம்பு ஸெட்டுலே காத்து ஊதறது. நாளுக்கு நாள் குத்தகைக்காரன் வெச்சது சட்டமாயிருக்கு. அவன் படி அளந்தால் உண்டு. இல்லாட்டா மண். வித்து உதறிட்டு வரதை விட்டுட்டுன்னு மொறு மொறுக்கறான். பெரியவாள் வெச்சுட்டுப் போன மண் ஹும்… “நீங்க எப்படியானும் போங்கோ, என் பாகத்தைப் பிரிச்சுடுங்கோன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா, என்னால் தாங்க முடியுமா? அப்புறம் அப்பன் புள்ளை என்ன இருக்கு?

வகையா மாட்டிண்டுட்டேன்.

யோசனையிலேயே அரைத் தூக்க மயக்கம். கதவுத் தட்டலில் கலைந்து எழுந்து திறந்தார்.

டீ செய்துட்டீங்களா தாத்தா?”

உதட்டைப் பிதுக்கினார்.

இன்னுமா செய்யல்லே, வாங்க செய்யலாம்.”

மறுபடியும் உதட்டைப் பிதுக்கினார்.

நான் செய்யறேன். மம்மி செய்யறதைப் பார்த்திருக்கேன்.”

சமையலறைக்குப் போனதும்ஒரு ஸஸ்பன்ஸ்என்றான்.

சிரித்துக் கொண்டே புத்தகப் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தான். மஸால் வடையின்கம்அறையைத் தூக்கிற்று. குட்டி குட்டியா, பத்துப் பைஸா அகலத்தில். பசி வயிற்றைக் கிள்ளுவதும் அப்போத்தான் தெரிந்தது.

ஆவலுடன் பையன், வாயில் திணித்துக் கொண்டே. “இங்கே தான் சந்துலே வீட்டிலேயே சூடா செய்யறாங்க. இப்ப நம்ம செய்யலாமா?”

ஏன், அவள்தான் வரட்டுமே!”

மம்மி வர ரொம்ப லேட் ஆவும். காலையிலிருந்து நீங்களும் ஒண்ணும் சாப்பிடல்லே. பசிக் கல்லியா? நிங்களுக்கு டீ வேணாமா? எனக்கு வேணுமே?” 

இருவரும், இரவில், கட்டிலில், பக்கத்தில் பக்கத்தில், முன் ரேழியில்.

இல்லை பையா, உன் முகம் அப்படியே உன் பாட்டி முக மாட்டம் இருக்கு.”

பையன் எழுந்து உட்கார்ந்தான்நொம்ப நாளிக்குமுன் இங்கே function நடந்திச்சே அப்போ வந்தாங்களே. அவங்களா?”

ஆமாம்.”

குரலில் ஜாக்ரதையுடன், “தாத்தா மம்மி என்கிட்ட இப்போ சொல்லி அனுப்பிச்சி. நா. பாட்டி பத்தி நிங்களிடம் பேசக் கூடாதுன்னு.”

ஏனாம்?”

நிங்களுக்கு மனஸு கஸ்டமாயிடுமாம்.”.

பேரன் முதுகைத் தடவினார். “நீ பேசலாம். பேசு.”

என்ன தாத்தா நான் பேச முடியும்? அவங்களைப் பத்தி எனக்கு என்ன தெரியும்? அடுத்த நாளே கிளம்பிட்டாங்க. என்ன சொல்லிச்சும் கேக்கில்லே. நீங்க ஊர்வே தனியா கஸ்டப்படுவிங்கன்னு

சொல்லிப் போயிட்டாங்க.”

அவன் கை அவர் கையுள் புகுந்து கொண்டது.

தாத்தா நீங்க பேசுங்களேன். பாட்டியைப் பத்தி.”

வண்டு ஒன்று ஜன்னல் வழி உள்ளே நுழைந்து அறையைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அதன் ஒரே மூச்சுக் கூவல் விதவிதக் கோடுகளை இருளில் ஒறுக்கிற்று. அதெப்படி இந்த வேளை? திசை தப்பிப் போச்சா?

இல்லை நீதானா?

ஏறக்குறைய உன் வயசில், கார்த்திக், உன வயசென்ன?”

ஆறு.”

சரி, அவளுக்கு எட்டு இருக்கும். இந்த வீட்டுக்கு வந்தாள்.”

இந்த வீடா. என்ன தாத்தா. இது கட்டியே வருஷம் ஆவஸ்லே.”

இந்த வீடுன்னா இந்தக் குடும்பம்.”

"Family?”

ஆமாம். இந்தக் குடும்பத்துள் வந்தாள்.”

அப்படின்னா?”

அப்படின்னா எனக்கு அவளுக்கும் கல்யாணம்.”

கலியாணமா, அவ்வளவு சுருக்காகவா?” பையனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “நீங்க little boy. little girl

ஆமாம் கார்த்திக். எங்கள் நாள் கலியாணங்கள் அப்படித்தான்.”

அப்படி இப்படி இங்கேயும் அங்கேயுமா மூணு வருஷம் ஆச்சு. பிறந்த வீட்டுக்கு அழைச்சுண்டு போயிட்டா. அஞ்சு வருஷம் கழிச்சுத் திரும்பி வந்தாள்.”

பையன் காத்திருந்தான். கிழவர் வேறு நினைவில் ஆழ்ந்து விட்டார். இப்போது பாவாடை தாவணியில் திடீரென பெரும் வித்யாசமாயிட்டா. அவள்தான்; ஆனால் அவளுமில்லை. விஜயாம்பிகே -

அவரிடமிருந்து புரண்ட கேவலில் அவரே மிரண்டு போனார்.

பையன் உஷாரானான். சமர்த்து. பாட்டி கதை மிச்சம் இனி இப்போ இல்லை. சமயம் பார்த்து அப்புறம் 

ஒருவருக்கொருவர் ஆதரவில் இருவரும் ஒருவருக்கொருவர் அவசியமாகி விட்டனர். அவர்களிடையே தனி ரஹஸ்யங்கள், விழிப் பேச்சு. ஸங்கேதங்கள், குறும்புகள். பீறிடும் சிரிப்புகள், கும்மாளங்கள் கிளம்பின. கண்ணெதிரே தொங்கிப் போன செடி ஜலம் கண்டு. மீண்டும் பச்சைப் பிடித்து நிமிர்வது போல, இவருக்கும் முகம் தெளிந்தது. 

முகம் தெளிந்ததே அன்றி பையன் உடல் பூஞ்சையாகத் தானிருந்தான். கேட்டால் கிழவர் வந்ததுக்குப் பின் அவன் இன்னும் இளைப்பாய்த்தான் காட்டினான். கொடுக்கும் ஊட்டமும், தனிச் சத்துக்களும் எங்கேதான் போயினவோ? அவ்வப்போது தொண்டையைக் கனைத்துக் கொண்டான். மார்பில் சலங்கை குலுங்கிற்று.

ஏண்டா கார்த்திக். தொண்டையை அப்படி செய்துக்கறே?”

செய்யணும் போல இருக்கு தாத்தா. செய்யறேன்.”

துளசி, ஆடாதோடை, சித்தரத் தைக் கஷாயம் என்று மருமகளிடம் பிரஸ்தாபித்ததும்

இவன் அப்படியும் இப்படியிருக்கான்னா, நாங்கள் என்ன செய்வோம்? நாளடைவில் சரியாப் போயிடுமின்னு விட்டுட வேண்டியதுதான்0

அப்புறம் அப்பா, பையனுக்கு உடம்புக்கு வரதைச் சமாளிக்க light இருக்கணும். அவனுக்குச் சரியா பெரியவங்களும் சேர்ந்துக்கிட்டுப் பெரிசு பண்ணக் கூடாது. கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாத்தான் இருக்கணும். நீங்கள் செல்லம் கொடுத்து அவனுக்கு discipline குறைஞ்சு போச்சு.”

கிழவர் திடுக்கிட்டார்: “என்ன பேசறே? என்ன செல்லம் கொடுத்தேன்? குழந்தைக்குச் செல்லம் கொடுக்காமல் அவனோடு மல்லா கொடுப்பா?”

இல்லேப்பா, நீங்கள் வந்தப்புறம், அவனுக்குப் பாடங்கள்லே கவனம் குறைஞ்சு போச்சு. இறங்கிட்டான். உங்களிடம் எனக்குச் சொல்லவும் முடியல்லே. உங்களுக்குச் சொன்னாலும் புரியாது. 

ஒரு சமயம் அவன் கார்த்திக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். மிரட்டலும் அடியும்தான் இருந்தன. பாடம் இல்லை. பையன் மிரண்டு மிரண்டு விழிப்பதைக் காணச் சகிக்கவில்லை.

என்னடா, குருவி தலையிலே பனங்கா போல அவன் மேல் எவ்வளவு பாடம் ஏத்துவே?”

இது உங்களுக்குப் புரியாது.”

மூர்க்கன். என்றுமே மட்டு மரியாதை கிடையாது. ஓரளவு ஒற்றுமையாக வாழவேணுமானால் தூரத்துப் பச்சையாயிருந்தால் பிழைச்சோம். அதுவும் போச்சு எனக்கு.

விஜிஎன்னைக் கொடுமை பண்ணிட்டேடி! உனக்கு நான் என்ன செஞ்சேன்!

வருவது அரைப் பரிட்சையா. வகுப்பு மாறும் பரிட்சையா? எப்போ வரது?

அப்பனும் ஆயியும் மாறி மாறி பையனைப் பிழிந்தெடுத்தார்கள். அம்மா இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தாள். அப்பா கணக்கு.

பையன் அடிவாங்கியது அம்மாவிடம்தான். ஆனால், அப்பா பார்த்த பார்வை அடியினும் கொடுமையாயிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு கறுப்பு விழி நடுநடுங்க குழந்தை கருகித் தீய்ந்து விடுவான் போலஉண்மையே அதுதானோ? நாளுக்கு ஒரு இம்மியாக இளைத்துப் போய்க் கொண்டு-

அன்றொரு நாள் இரவு. அவருக்குக் கண்கள் சொருகிய சமயம். பையன் நேரே வந்து அவர் மார்பின் மேல் துவண்டு விழுந்ததும் திடுக்கென்ற முழு விழிப்பில் பதறிப் போனார்.

என்னடா கண்ணா? இது மாதிரி செல்லச் சொல் அவருக்கு வந்ததில்லை (பாட்டன் சொத்து இதுவரை உள்ளேயே புதைந்திருக்கும் போலும்!).

பதிலுக்குலொக்கு லொக்குமார்பு மட்டும் கொதித்து முகம் வேர்த்துக் கொட்டியது.

பாவிகள் குழந்தையைப் பிழிஞ்சு எடுத்திருக்கா.

அவனோடு பேச்சுக் கொடுக்க வாய்க்கவில்லை. இருமல் குமுறிக் குமுங்கி, அமுங்கி ஒருவழியாக மூச்சு சீர்பட்டதும் தூக்கத்தில் ஆழ்ந்து போனான். மார்பில் மூச்சின் மிதப்பைக் கவனித்தபடி. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நாளாவே பையனை அவரிடம் படுக்க விடுவதில்லை. பரீக்ஷை நெருங்கிப் போச்சாம். “மலை மாதிரிப் பாடம் கிடக்குது. பையன் கவனிக்க மாட்டேன்கறான். முன்னெல்லாம் இப்படி இருந்ததில்லை.”

தொட்டார். கன்னம் பூப்போல. அசல் சொக்காய்ப் பாவாடை விஜி. முதல் முதலாய் வீட்டுள் அடியெடுத்து வெச்ச விஜி.

விஜி கனவில் வரவேயில்லை. பேரன்தான் கண்கூடா இருக்கானே என்கிற எண்ணமோ என்னவோ?

கார்த்திக்!”

அவரை எழுப்பி விட்டதே அந்தக் கணீர்தான். கண்ணைத் திறந்தால், கிங்கரி நிக்கறா. பின்னாலேயே வந்து அவள் பின்னால் அவன். 

பையன் எழவில்லை. அசதியில் அரைக்கண். இருவரும் பக்கத்தில் வந்து. பார்த்துவிட்டு ஏதோ கிசு முசுத்து விட்டு அவன்: “Alright இன்னிக்கு ஸ்கூல் வேணாம். ஆனால் எழுந்து படிக்கச் சொல்லுங்க. சாயந்திரம் வந்ததும் நான் ஹோம் ஒர்க் பார்ப்பேன் வா. ஹனி. நேரமாவிடிச்சு.” 

அவர்கள் போன சற்று நேரத்துக் கெல்லாம் பையன் எழுத்து உட்கார்ந்து விட்டான். ஜுரம் இருந்தது. ஆனால், தணிவு. இன்னிக்குப் பள்ளிக்குப் போக வேண்டாம் என்றதே சஞ்சீவி மருந்து. சேதி கேட்டதுமே துடியாகி விட்டான். அவிழ்த்து விட்ட கன்றுக்குட்டி. அவனுடைய துள்ளலைக் கண்டு சிரிப்புக் கூட வந்தது. பாவம், இப்படியா பாடம் கட்டிப் போடும்? இரண்டு முறை துள்ளினான். மறுபடியும் ஓடிவந்து தாத்தா கழுத்தைக் கட்டிக் கொண்டான். உள்ளே பாறைகள் உருகின.

ஏலே. கொஞ்சம் ரஸம் சாதம் சாப்பிடு, கரைச்சுத் தரேன்.”

ஒண்ணும் வேணாம் தாத்தா, பசியில்லை. வேணும்னா bread இருக்குது ஃப்ரிஜ்லே.இப்போ நீங்க எனக்குக் கதை சொல்லணும். கதை சொல்லி ரொம்ப நாளாச்சி.”

கதை சொல்லி ஒரு விளையாட்டு. திரும்பி அவன் வகுப்பில் பாடம் கேட்ட கதை கேட்டு-அது ஒரு விளையாட்டு.

பிறகு இருவரும் தூங்கிப் போயினர்.

அவருக்கு விழிப்பு வந்தபோது. பையன் பக்கத்தில் இல்லே. உடனேயே பால் மணி அடித்தது. பால் வாங்கப் போனார்.

டீ போட்டார். பையனை கூப்பிட்டார்.

யோசனையாக மாடியிலிருந்து இறங்கி வந்தான். சொரத்தா யில்லை. ஆனால், அவரும் வேணு மென்றே கண்டு கொள்ளவில்லை. இந்தப் பூஞ்சை உடம்புக்கு இதுவரை உற்சாகமே அசதிதான். தவிர, பாடம் தான் மோடம் போடுகிறதே! அவர்கள் வருவதற்குள் வீட்டுக் கணக்கு செய்தாகணுமே!

ஆனால், கணக்குப் போடுவதாகப் பாசாங்குதான் பண்ணினான். அப்புறம் ஏதோ ஏடுகளைப் புரட்டி சரியில்லை னான். ஊஹும். அவர்களை எதிர்பார்த்து அவருக்கே பயமாயிருந்தது.

ஏண்டா ஒரு மாதிரியா…?”

ஒண்ணுமில்லே தாத்தா.”

அவர்கள் வந்தபோதுசேர்ந்து வந்தார்கள்சேர்ந்துதான் மாடிக்குப் போனார்கள். பையன் மாடியடி வளைவில் ஒரு புத்தகத்துடன் உட்கார்த்திருந்தான். சுற்றி, புத்தகங்கள் சிதறித் கிடந்தன. படிப்பதாகத் தோன்றவில்லை. எதையோ எதிர் பார்த்து ஒளிந்து கொண்டிருந்தான் என்று தோன்றியது.

அதுவும் உடனேயே வந்து விட்டது.

கார்த்திக்!”

நிமிஷமாக வதங்கித் தள்ளாடித் தள்ளாடி மேலே போனான். கால்கள் இழுத்துச் சென்றன. கிழவர் மாடியடியில் காத்திருந்தார். உடனேயே அடி-படபட-உடனேயே அலறல்.

இனிமே மாட்டேன் டாடி-இல்லே மம்மி -இல்லே டாடி.”

ஒரு பாடத்துக்கா குழந்தையைக் கொலை பண்ணுகிறார்கள் பாவிகள்! சீற்றம் பொங்கிற்று. திடுதிடுமென மேலே ஓடினார். மாறிமாறி இருவரும் மொத்த பையன் இடையில் மாட்டிக் கொண்டிருந்தான். ஓடி அவனைப் பொத்திக் கொண்டார். அவர் மேல் ஒரு அடி விழுந்தது. வேணுமென்றல்ல. அடி. வேகம்.

Stop it! அவர் குரல்,’க்றீச்சிட்டது. அப்பத்தான் அடங்கினார்கள். அவனுக்கு மூச்சு இரைத்தது.

சீறினார். “மிருகங்களா!”

“Look at thatகோபம் வந்தால் ஐயா இங்கிலீஷில்தான் கொப்புளிப்பார்.

அவன் விரல் சுட்டிய வழி. சுவரில் பென்சிலில், ஒரு கிறுக்கல், வட்டமாய், முறுக்கு தினுசில், கலியாணசைஸில்

அவருக்குச் சிரிக்க நேரமில்லே. பையன்மடேரென்று கீழே விழுந்து விட்டான்.

இந்தப் புத்தி இவனுக்கு வந்ததே உங்களால்தான்.”சீறினான், “நீங்க வந்திங்க, பையன் ரொம்ப Spoil ஆயிட்டான். ஹனி, இனி இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்க்காதே. அப்புறம் நான் ரொம்பக் கெட்டவனாயிடுவேன்.”

தரதரவென்று பையனையிழுத்துக் கொண்டு கீழே போய் விட்டாள். அவன் பின் தொடர்ந்தான்.

அவர்கள் மீண்டும் மேலே வந்த போது கிழவர் நின்றவிடத்திலேயே நின்று கொண்டிருந்தார். மாறி மாறி நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டு, தலையைத் தடவிக் கொண்டிருந்தார். அந்த சேட்டை அவர் பிள்ளைக்குச் சிரிப்புக் கூட வந்துவிட்டது.

பாரேன் ஹனி இதை! எப்படி முழிக்கிறார் பாரேன்!”

மறுநாள், பையனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டனர். காரத்திக் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பயம்?

அவர்கள் வீடு திரும்பும் போது நேரமாகி விட்டது.

என்ன அக்ரமம்! கதவைத் தாளிட்டுக்கக் கூடயில்லே!”

உள்ளே சென்றால் அவர். அவர் இடத்தில் இல்லை. சாப்பாட்டுக் காரியர், தண்ணீர்ச் சொம்பு, ஃப்ளாஸ்க் எல்லாம் வைத்த இடம் கலையாமல் இருந்தன. சாப்பிடல்லியா?

அப்பா!”

மாடியேறிப் போனார்கள்.

எல்லா விளக்குகளையும் போட்டு மாடி ஹால் பகலாய் எரிந்தது. மாடியேறினதுமே எதிர்ச் சுவரிலிருந்து பென்சிலில் ஒரு பெரிய பையன் முகம்அல்ல முகம் மாதிரி ஒரு பாவனை கலைந்த தலையுடன் அவர்களைப் பார்த்து சிரித்தது! பலகை பலகையாய்ப் பற்கள். காதுக்குக் காது முகத்தையே அடைத்த சிரிப்பு. ஒட்டிப் போன கன்னங்கள்.

கிழவர் தோரணையாகக் கையை மற்ற சுவர்களுக்கும் வீசினார்.

பெரிய பெரிய முறுக்குகள் கலியாண சைஸ், கோடுகள், முட்கள், கிறுக்கல்கள், அனேகமாய்க் கிறுக்கல் தான், பென்சிலில், கலர்ப் பென்சிலில், கார்த்திக்கின் கலர்ப் பென்சில் பெட்டி காலி. கீழே பென்சில் சீவல்களும் ப்ளேடும் கிடந்தன. ஒரு இடத்தில் கறுப்பு மசியைக் கூடிலிருந்து அப்படியே வீசியிருந்தது.

இருவரும் முகத்தைப் பொத்திக் கொண்டனர்.

கிழவர் இன்னமும் கோடுகள் கிறுக்கிக் கொண்டிருந்தார்.

- ஆகஸ்ட் 1991

பின்னுரை

பேரன் முகத்தில் தன்னுடைய பிரிய விஜியை கண்ட தாத்தா அவன் அடி வாங்கிய போது விஜியே அடி வாங்குவது போல் தோன்ற அவருக்கு அது பொறுக்க முடியவில்லை. கிறுக்குப்  பிடித்த கிறுக்கன் ஆக்கிவிட்டார் ஆசிரியர். இது போன்ற முடிவு எதிர்பார்க்க முடியாதது. வேறு விதமாக முடித்திருக்கலாம்.

கதையின் சுட்டி : கிறுக்கல்

கிறுக்கல் லா..ராமாமிர்தம்  

ஆசிரியர் பற்றிய குறிப்பு.

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (1916-2007) சுருக்கமாக லா ரா.


பாற்கடல் என்ற நீண்ட சிறுகதை இவரது படைப்பில் சிறந்ததாக கருதப்படுகிறது. படைப்புகள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. படைப்புகள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன

1989இல் சாஹித்திய அகாடமி விருது பெற்றார்.

"நெருப்புன்னு எழுதினா பொசுங்கற வாசனை வரவழைக்கத் துப்பில்லன்னா எழுதாதே" லா..ரா எழுத்தாளர் பா.ராகவனுக்கு கொடுத்த அட்வைஸ்!

கதைகளைச் சொல்வதைவிடவும், கதைகளை முன்வைத்து வாழ்க்கையின் மாயத் தருணங்களைக் கண்டுணர்ந்து வியப்பதும் வியக்கவைப்பதும்தான் ராமாமிர்தத்தின் எழுத்து.’ அரவிந்தன் இந்து தமிழ்.

ஜீவி சார் இவரைப்பற்றி : பூவனம்-சேகரிப்பு-ஜீவி-லா ச ரா

கட்டாயம் சென்று வாசியுங்கள் பின்னூட்டங்கள் உட்பட.

44 கருத்துகள்:

  1. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளும் இனிய நாளாக இருக்க பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. ஒரு பொய்யும் ஒரு மெய்யும்...

    உலகம் உருப்பட வேண்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனிதர்களாலும், நல்ல சிந்தனையாலும் உலகம் நிரம்ப வேண்டும்.

      நீக்கு
  4. சந்தோஷமாக வாழ்வோம்...
    பிற உயிரும் சந்தோஷமாக இருக்கச் செய்வோம்..

    சொல்லால் செயலால் மனதால்

    இன்னும் ஒருபடி மேலே

    எழுத்தால்...

    எல்லார் மனமும் மகிழும்படிக்குச் செய்வோம்...

    என்ற உறுதியை எல்லாரும் மேற்கொண்டால்
    பொய்யும் மெய்யாகி விடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறரைப் புண்படுத்துவதால் என்ன ஆதாயம்னு கேட்கறீங்க. அறச்சீற்றம் கொள்ளுவதாலும் ஆதாயம் இல்லை. இவையெல்லாம் மன அழுத்தத்தைப் போக்கும் வழி. புண்படுத்துவதால் பாவம் கூடுகிறது. மற்றவர்களைக் குறை சொல்லாத அறச்சீற்றத்தால் பாவம் ஏற்படுவதில்லை.

      அது தவிர ஒவ்வொரு மனித உயிரும் கருமவினைகளால் கட்டப்பட்டு இருப்பதால் அதற்கேற்ற குணாதிசயங்களோடு பிறக்கிறார்கள். கூட இருப்பவர்களுக்கும் கர்மவினைகள் உண்டு என்பதால் அவற்றை அனுபவிக்கின்றனர். பொதுவாக விருச்சிக ராசிக்கார்ர்கள் தேள் மாதிரி பிறரைக் கொட்டிக்கொண்டிருப்பதையும், இப்படி ஒவ்வொரு ராசிக்கார்ர்கள் தனிக் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதையும் காணலாம்.

      நீக்கு
    2. உண்மை.. உண்மை..
      நல்ல கருத்து..

      கோயில் மண்டபத்தில் உபந்யாசம் கேட்டதைப் போன்ற உணர்வு..

      நெல்லை அவர்களது இம்மாதிரியான கருத்துகளுக்காக ஒருநாளை ஒதுக்கித் தரலாம்..

      ஒரு புதிய பகுதியாக மலர்ந்தாலும் நல்லதே!..

      நீக்கு
    3. //அது தவிர ஒவ்வொரு மனித உயிரும் கருமவினைகளால் கட்டப்பட்டு இருப்பதால் அதற்கேற்ற குணாதிசயங்களோடு பிறக்கிறார்கள். கூட இருப்பவர்களுக்கும் கர்மவினைகள் உண்டு என்பதால் அவற்றை அனுபவிக்கின்றனர். பொதுவாக விருச்சிக ராசிக்கார்ர்கள் தேள் மாதிரி பிறரைக் கொட்டிக்கொண்டிருப்பதையும், இப்படி ஒவ்வொரு ராசிக்கார்ர்கள் தனிக் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதையும் காணலாம்.//

      சனிக்கிழமைகளில் நெல்லை நல்ல கருத்துக்களை உபன்யாசமாக எழுதலாமே. நான் ஒதுங்கிக் கொள்கிறேன். 
      Jayakumar

      நீக்கு
    4. பொதுவாக விருச்சிக ராசிக்கார்ர்கள் தேள் மாதிரி பிறரைக் கொட்டிக்கொண்டிருப்பதையும்,//

      விருச்சிகராசிக்காரங்க ஓடிவாங்க!!!! ஹையோ வரமாட்டாங்களே!! /ளோ?

      கீதா

      நீக்கு
    5. //நல்ல கருத்துக்களை உபன்யாசமாக எழுதலாமே. நான் ஒதுங்கிக் கொள்கிறேன். // ஹா ஹா ஹா. சில நேரங்களில் ஒரு சில தலைப்புகளில் எழுத எனக்கு எண்ணம் வரும்போது, ஒரு வியாழன் பதிவையே முழுமையாக எழுதிவிடலாமா என்று தோன்றும். அதுக்குத்தான் அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வரும், அதைக் கெடுப்பானேன் என்ற நல்லெண்ணம்தான் அதனைச் செய்யாமல் தவிர்க்கச் செய்கிறது.

      துரை செல்வராஜு சார் எழுதிய கருத்தைப் படித்த உடன் எனக்கு எழுதத் தோன்றியது. மற்றபடி காலையில் பதிவை முழுமையாகப் படித்தேன்.

      நீக்கு
    6. //பொதுவாக விருச்சிக ராசிக்கார்ர்கள் தேள் மாதிரி பிறரைக் கொட்டிக்கொண்டிருப்பதையும்// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ? எல்லோருக்கும் வலியப் போய் உதவிட்டு எல்லோர் கிட்டேயும் வாங்கிக் கட்டிக்கும் ஒரே ராசி அல்லவா விருச்சிக ராசி? இப்படியா அநியாயமாப் பழி சுமத்துவது?

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மனதில் விளையும் உணர்வுகளை அச்சு அசலாக அப்படியே தன் மொழியில் வெளிப்படுத்தும் வரம் பெற்ற பெரியவர் லா.ச.ரா. அவர்களின் நினைவுகள் இன்று என்னில் மீட்டப்பட்ட பெறும் பேறு பெற்றேன்.
    அன்பர் ஜெஸி ஸாருக்கு இந்த காலை வேளையில் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம், உங்களின் லாசரா சிறுகதைத் தொகுப்பு நூல் என் வசமே பல வருஷங்களாக உள்ளது.
    அதை வேறு எங்கும் தேட வேண்டாம். அடுத்த தடவை நாம் சந்திக்கும் பொழுது திருப்பித் தருகிறேன். லாசராவை வாசிக்க நினைக்கும் தருணங்களில் எல்லாம் அந்தப் புத்தகமே எனக்குத் துணையாக இருந்தது. அந்த பேருதவிக்கு நன்றி, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பகுதியில் என் தளத்தில் லாசரா பற்றி நான் எழுதிய பதிவின் சுட்டி கொடுத்திருப்பதை
    பார்த்தேன். அதைத் தொட்டு எத்தனை எத்தனை மலரும் நினைவுகள்?.. ஜெஸி ஸாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உதவும் கரங்களை வாழ்த்துவோம்.

    சுத்தமான காற்றை தரும் பாக்ஸ் இளம் கண்டு பிடிப்பாளரை வாழ்த்துவோம்.

    லா ச ர கதைகள் மனதை தொடும் இதுவும் அப்படியே .
    பேரனுக்கும் தாத்தாவுக்குமான உறவு . பெற்றோர் எதிர்பார்க்கும் பையனின் முன்னேற்றம், இளம் தலைமுறையினரின் பொறுமையில்லாத அவசர நெருக்குவாரம் ,தாத்தாவின் பொறுமை என கதை தலைமுறை மனநிலையை காட்டி அழகாக செல்கிறது.
    முடிவு நெஞ்சை பிழிந்து தொடுகிறது.

    பதிலளிநீக்கு
  10. ராணுவ வீரர்கள் நாட்டைக் காப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கும் சேவை செய்வது உயரிய விஷயம்.

    மாசற்ற காற்று - குட்டிப் பெண்ணை வாழ்த்துவோம்.

    மற்ற செய்திகளும் நல்ல விஷயங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நரிக்குறவர் விஷயம் ஆஹா போட வைத்தது, அருமை....மிக நல்ல விஷயம், அவர்களுக்கும் இதன் மூலம் வருமானம் கிடைத்தால் நல்லது. அடையார் பெசன்ட் நகரில் சாலைகளில் கடை விரித்திருப்பாங்க இப்ப எப்படின்னு தெரியவில்லை. பாசிகள் விலை மிகவும் மலிவாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. லா ச ர மிகவும் பிடித்தமான எழுத்தாளர். வரிகள் சுருக்கமாக ஆனால் அதில் ஆழமான மறைமுகமான விஷயங்கள் இருக்கும். சில மீண்டும் வாசிக்க வேண்டும் புரிந்து கொள்ள.

    இக்கதை அருமை தாத்தா பேரனிடம் தன் மனைவியைப் பார்க்கிறார். அதனால் ஏற்படும் பந்தம்....அன்பு, நெருக்கம்....அக்குழந்தையைப் பெற்றோர் பாடாய்படுத்தும் போது தாத்தாவிற்கு மன அழுத்தமாக மாறிவிடுகிறது...

    முடிவு முற்றிலும் எதிர்பாரா முடிவு. தாத்தாவைக் காணாமல் அவர்கள் தேடும் போது தாத்தா வெளியில் போய்விடுகிறார் என்றே நினைத்தேன்...ஆனால் அடுத்து சட்டென்று இப்படியான முடிவு...

    மனதை வேதனைப்படுத்திய முடிவு தான் ஆனால் கதை என்று பார்க்கிறப்ப முடிவு பிடித்திருக்கு. இது கதையை அழுத்தமான கதையாக்குகிறது என்று எனக்குத் தோன்றியது, ஜெ கே அண்ணா. வேறு முடிவாக இருந்தால் கதைக்கு அழுத்தம் கூடியிருக்குமா தெரியாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. "நெருப்புன்னு எழுதினா பொசுங்கற வாசனை வரவழைக்கத் துப்பில்லன்னா எழுதாதே" //

    ஆ!! அதான் ...அதுதானே வரமாட்டேங்குது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஜீ வி அண்ணா ரொம்ப அழகாகே எழுதியிருக்கிறார். ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடு.

    அங்கு கீதாக்கா ல ச ரா வை சந்திக்க முடியாமல் போனதையும் சொல்லியிருக்காங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பையன் படிக்காமல் இருந்தால் பெற்றோர்களுக்கு அதீத கோபம் வராது. பெற்றோர்களுக்கு வேறு மன அழுத்தங்கள் இருந்தால் அது சேர்ந்துகொண்டு ரௌத்திர ரூபம் எடுக்க வைக்கிறது. ஆபீஸில் எதிர்பாராத போனஸ் அல்லது பிரமோஷனுடன் வரும் அப்பா, தன் பையன் படிக்காமல் கம்ப்யூட்டர் கேம் விளையாடிக்கொண்டிருந்தால் ரௌத்திர தாண்டவம் ஆடமாட்டார். காரணம் அவர் மனம் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆபீஸில் பாஸிடம் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்த உடனேயே, பையன், அப்பா எனக்கு ஐஸ்க்ரீம் வேணும் என்று சொன்னால், நீ கெட்ட கேட்டுக்கு ஐஸ்க்ரீம் ஒண்ணுதான் குறைச்சல், எதுலயும் 40 மார்க்குக்கு மேல் வாங்கத் துப்பில்லை என்று எரிந்து விழுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவும் இல்லாமலேயே குழந்தைகளிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கும் அப்பாக்கள் உண்டு. :( படிக்கும் குழந்தைகளிடமும் கோபத்தைக் காட்டும் அப்பாக்களும் உண்டு.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. நல்ல மனத்தோடு கர்ப்பிணிக்கு உதவிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள். நரிகுறவர்களுக்கு உபயோகமாக நல்ல வாழ்க்கை முறைகளை செய்து தந்த விஷயமும் நல்லது. அனைவரையும் பாராட்டி வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் அருமை. இந்தக் கதையை இதுவரை படித்ததில்லை. தாத்தா, பேரனின் புதிய உறவின் பாசம் மனதை நெகிழச் செய்தது. முதுமையும், தனிமையும் பொதுவாகவே மனதை அலைக்கழிக்க வைப்பதுதான். அதன் விளைவால் தினசரி நடந்து கொண்டிருக்கும் வாழ்வில் இனம் புரியாமல் எழுந்த பயங்கள் மனதை பாதிக்க வைக்கும் அளவுக்கு சென்றது சோகமான முடிவுதான். கதையை இங்கு பகிர்ந்தளித்த சகோதரர ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    சகோதரர் ஜீவி அவர்களின் பக்கமும் சென்று வாசித்தேன். கதையின் எழுத்தாளரைப் பற்றிய அலசலை நன்றாக எழுதியுள்ளார். ஒரு சிறந்த எழுத்தை, அது குறித்து எழும் அவரின் மனோபாவங்களைப் பற்றி ஒரு சிறந்த எழுத்தாளரால்தான் விமர்சிக்க இயலும் என்பதற்கு சகோதரர் ஜீவி அவர்களின் எழுத்து ஒரு சான்று. அவருக்கும் என் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அதை வாசித்ததும்
      வாசித்ததை ஒரே சுருட்டலாக சுருட்டி அந்தக் கதை என்ன கருத்து சொல்கிறது
      என்று தான் புரிந்து கொண்டதைச் சொல்வோரே அதிகம்.
      லாசராவின் எழுத்தில் இந்த வேலை எடுபடாது. தமிழ் எழுத்தாளர்களிலேயே அவர் வித்தியாசமானவர்.
      அபூர்வமானவர்.
      அவர் அந்தந்த நேரங்களில் உணர்கிற உணர்வை அவர் எழுதுகின்ற ஒவ்வொரு எழுத்தும் வெளிப்டுத்தும். அம்பாள் உபாசகர்.
      கேட்க வேண்டுமா?
      எழுதுவதே ஒரு படபடப்பு கலந்த வெளிப்பாடாய் இருக்கும்.

      நீங்களும் ஆழ்ந்து உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் வாசித்திருக்கிறீர்கள் சகோதரி. அதனால் தான் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி தீர்க்கமாகக் கணித்து
      உங்களால் சொல்ல முடிகிறது. உங்கள் வாசிப்பு நேர்த்திக்கு
      என் மனம் ஒன்றிய நன்றி, சகோதரி.

      நீக்கு
    2. தங்களது அன்பான பதில் கருத்துக்கு என் பணிவான நன்றி ஜீவி சகோதரரே.

      நீக்கு
  18. லா.ச.ரா.வின் இந்தக் கதை படித்த நினைவு இல்லை. பெரும்பாலானவை படிச்சிருக்கேன். அம்பத்தூரிலேயே அவர் இருந்தும், பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியலை. அவர் அங்கே இருந்த வீட்டில் இருந்து காலி பண்ணிக் கொண்டு அம்பத்தூர் பேருந்து நிலையம் பக்கம் போனப்புறமாக் கூட வீடு ஓர் அடையாளமாக இருந்தது. பின்னாட்களில் வீடும் இடிக்கப்பட்டுக் காலி மனையாகவே பல ஆண்டுகள் கிடந்தது. பின்னர் என்ன ஆச்சோ தெரியலை. கதையின் முடிவு வேதனையை ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  19. தமிழகத்திற்கு இந்திய ராணுவத்தின் சேவைகள் இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்துள்ளது. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி. ஏர் ப்யூரிஃபையர் எங்க பெண் வீட்டில் வைச்சிருக்காங்க. கணவன், மனைவி இருவருக்குமே வீசிங் பிரச்னை இருப்பதால்.

    பதிலளிநீக்கு
  20. கதையை படித்துக் கருத்து கூறியவர்களுக்கும் ஜீவி சார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

     ஜீவி சார் லா சா ர பற்றி சொன்னது சரியே. அதனால் தான் கதையைச் சுருக்க கொஞ்சம் சிரமப் பட்டேன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  21. திருமதி . நாகரத்தினம் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துகள்.
    மற்றும் அனைத்தும் நல்ல செய்திகள் அவர்களை வாழ்த்தி வணங்குவோம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. லா.ச.ரா.வின் கதை பகிர்வுக்கு நன்றி.
    முதிய வயதில் எப்படி இருந்தால் நல்லது என்று பாடம் கற்றுக் கொள்ள உதவும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திட்டும் போது தலையீடாமல் இருப்பது, தங்களிடம் அயிப்பிராயம் கேட்கும் போது மட்டும் நம் பதில் சொல்வது, அதுவும் அவர்கள் எதிர்பார்க்கும் பதிலை சொல்ல தெரிந்து இருக்க வேண்டும்.

    கதை படித்த நினைவு இல்லை, அவர் சில நேரம் தனக்குள் ஆழ்ந்து போய் விடுவார் . அவர் எழுத்தை புரிந்து கொள்ளும் மன நிலை நமக்கு வேண்டும்.

    //தும்பை நீளமாக்கி மேய விட்ட மாடு போல், வீட்டுள் தன் சிறை நிலை முழுக்க உணரச் சற்று நேரமாயிற்று.//

    இதுதான் முதியவர்களுக்கு கொடுமை.
    என் உறவிலே ஒருவர் மனைவியை இழந்தவர் அவர் தன் மகன், மருமகள், பேத்தியுடன் இருக்கிறார். அவர் வாழும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    காலையில் தன் மருகளுக்கு கூட மாட உதவியாக இருப்பார், மாலை குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வருவார், மாலை வரை பொறுப்பாக வீட்டை பார்த்து கொள்வார். மகன் மருமகள் வீட்டுக்கு வந்தவுடன் அவர் கிளம்பி தன் நண்பர்களை பார்க்க போய் விடுவார்.
    இரவு உணவுக்கு தான் வீட்டுக்கு வருவார். மகன் , மருமகள் விடுமுறை நாளில் சினிமா, உறவினர் வீடுகளுக்கு போய் வாங்க என்பார், தான் போக வேண்டியது இருந்தால் கூட போவார்.

    உறவில் நம்முடைய பங்கு எவ்வளவு என்பதின் அளவு முறை தெரிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.





    எல்லா விழாக்களுக்கும் தன் மகன் குடும்பத்தோடு வருவார்.
    மகள் மாமியாருடன் கூட்டு குடும்பமாக இருபதால் அங்கு போய் இருக்க முடியாது. ஆனாலும் பண்டிகை நாளில் மகளை பார்த்து மாமியாரிடம் சொல்லி அழைத்து வருவார்.







    பதிலளிநீக்கு
  23. ஜீவி சாரின் பதிவை படித்தேன், மிகவும் அருமையாக லா.ச.ரா.வின் கதைகளை பற்றி சொல்லி இருக்கிறார்.


    "வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால் எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது. நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில் தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அழகான எண்ணங்கள் நமக்கு இருக்கின்றன. நாம் தான் அந்த எண்ணங்களை உருவாக மாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் மனது தான் காரணம். அவ்வளவு தான் எனக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்தது எல்லாம்.." என்று வாழ்க்கைப் பயணத்தின் சகபயணிகளை நேசிக்கக் கற்றுக் கொடுத்த கலைஞன் அவர்.''

    ஆமாம், உண்மை.
    வாழ்க்கை பயணத்தில் சகபயணிகளை நேசிக்க கற்றுக் கொண்டாலே போதும் .


    என் பின்னூட்டம் காணவில்லை, நிறை எழுத்தாளர்களை பற்றி படித்து இருக்கிறேன் அவர் தளத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, சகோதரி. எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நாட்களில் என் பதிவுகளுக்கு நீங்களும் உங்கள் பதிவுகளுக்கு நானும் தவறாது வாசித்துப் பின்னூட்டங்கள் இடுவோம். எப்படி இதில் அதுவும் உங்கள் தொடர் வாசிப்பில் இருந்த லா.ச.ரா. பற்றிய என் பதிவில் உங்கள் கருத்தோட்டம் காணாது போயிற்று என்று எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

      லா.ச.ரா சொல்லும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் ரகசியம் இனிமேலாவது அப்படி வாழ வேண்டாமா என்ற நப்பாசையை என்னுள்ளும் ஏற்படுத்தியிருக்கிறது. லா.ச.ரா.வைப் பற்றி இந்த நேரத்தில் நம்மையெல்லாம் நினைக்க வைக்க ஜெஸி ஸாருக்குத் தான் நன்றியைச் சொல்ல வேண்டும்.

      எபியில் பதிவுகளுக்கு ஏற்ற மாதிரியான சின்னச் சின்ன கதைகளாகவே வரும் போக்கை மடைமாற்றி பத்திரிகைகளில் வருவது போன்ற வாசித்து நினைவுகளில் அசை போடுகிற கதைகளை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கு.
      முயற்சி செய்கிறேன்.
      அந்த நாட்கள் போல தாங்களும் தவறாது வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் சகோதரி. அது எபிக்கு ஏற்ற மாதிரியான படைப்புகளை படைக்க உந்து சக்தியாக நிச்சயம் இருக்கும். நன்றி.

      நீக்கு
    2. நினைவுகளில் அசை போடுகிற கதைகளை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கு.
      முயற்சி செய்கிறேன்.//

      நல்லது சார் எழுதுங்கள், வாசிக்க காத்து இருக்கிறோம்.

      நீக்கு
  24. //விருச்சிக ராசிக்கார்ர்கள் தேள் மாதிரி பிறரைக் கொட்டிக்கொண்டிருப்பதையும், இப்படி ஒவ்வொரு ராசிக்கார்ர்கள் தனிக் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதையும் காணலாம்.//
    ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணாதிசயம் உண்டுதான்.

    நான் விருச்சிக ராசி ஆனால் யாரையும் கொட்டியதுஇல்லை.
    உறவுகளுடன், நட்புகளிடம் பயந்து பயந்து தான் பேசுகிறேன், என் மனதில் உள்ளதை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக சொல்ல பார்க்கிறேன். முடியவில்லை என்றால் மெளனம் காக்கிறேன், அதுதான் என்கோபத்தை காட்டும் வழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதில் பட்டதைச் சொல்லி விடுவேன்/சொல்லியும் இருக்கேன். ஆனால் பின்னாட்களில் அதெல்லாம் விட்டுட்டேன். கோமதி சொல்வது போல யோசனையுடனேயே பயந்து பயந்து தான் பேசிக் கொண்டிருக்கேன். இல்லைனால் பேசுவதே இல்லை. :(

      நீக்கு
  25. என் கணவர் சொல்லும் ஒரு வார்த்தை "அவர் அவர்களுக்கு தெரிந்த முறையில் வாழ்கிறார்கள், நீ சொல்லி என்ன ஆக போகிறது, அப்புறம் அவர்கள் இதை சொன்னார்கள், அதை சொன்னார்கள் என்று புலம்புவாய். உன் குரு சொன்னது போல் வாழ்த்தி கொண்டு இரு"

    அதுதான் செய்து கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. /// அவர் அவர்களுக்கு தெரிந்த முறையில் வாழ்கிறார்கள், நீ சொல்லி என்ன ஆக போகிறது... ///

    அட்சர லட்சம் பெறும்...

    அமுத வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!