தஞ்சை பெருவுடையார் கோயில்
சென்ற வாரத்தில் நான் மனிதர்களுக்கு இருக்கும் மூன்று குறைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவை ஒன்றும் இல்லாதவர் கூரத்தாழ்வார் என்று திருவரங்கத்து அமுதனார் தான் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியில் குறிப்பிடுகிறார் (பாட்டுடைத் தலைமகன் இராமானுசர் என்பதை நினைவில் வைக்கவேண்டும்).
காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் என்ற ஊரில் ஸ்ரீவத்ஸாங்கர் என்ற பெயருடன் பிறந்த பெரிய தனவான் இவர். மிகவும் படித்தவர். தந்தை தன் மகன்களுக்கு சிறிது பணம் தந்து வாழ்வில் முன்னேற வழிகாட்டியபோது, இவர் அந்தப் பணத்தைக் கொண்டு அன்னதானம் செய்தவர். இவர் மிகவும் படித்தவர். இவருக்கு ஏற்ற மனைவியாக ஆண்டாள் என்பவர் அமைந்தார். இங்கு இவருடைய வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கவில்லை. காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியிடம் அர்ச்சாவதாரத்தில் இருக்கும் பெருமாளும் தாயாரும் உரையாடுவர்.
அப்படி ஒரு சமயத்தில் கூரத்தில் இருக்கும் ஸ்ரீவத்ஸாங்கரின் செல்வச் செழிப்பு, அன்னதானம் போன்றவற்றை பெருமைபட தாயார் சொல்லியதை திருக்கச்சி நம்பி மூலமாகக் கேட்டு, தனக்கு செல்வச் செருக்கு வந்துவிடக் கூடாது என்று பயந்து தன் செல்வம் அனைத்தையும் துறந்து இராமானுசரிடம் சீடனாக ஆவதற்காக மனைவி ஆண்டாளை அழைத்துக்கொண்டு திருவரங்கம் நோக்கிச் செல்கிறார். அப்படிச் சென்றுகொண்டிருக்கும்போது, வழியில் திருடர் பயம் உண்டு என்று தன் மனைவி சஞ்சலப்படுவதை அறிந்து எதனால் அப்படி பயப்படுகிறாய்? நாம்தான் எல்லாச் செல்வத்தையும் துறந்துவிட்டோமே என்று சொல்ல, இல்லை, நீங்கள் சாப்பிடுவதற்கான தங்க வட்டிலை மாத்திரம் என்னிடம் வைத்துள்ளேன் என்று கூற, அதை அங்கேயே வாங்கி விட்டெறிந்துவிடுகிறார் ஸ்ரீவத்ஸாங்கர். பிறகு இராமானுசரிடம் சீடனாக ஆகிறார். (பிறகு இவர் கூரத்தாழ்வான் என்றே அறியப்படுகிறார். இராமானுசர் இவரை ஆழ்வான் என்றே விளிப்பார்)
இவரின் கல்வி அறிவு பிரசித்தம். எப்படி என்றால், இராமானுசர், ஸ்ரீபாஷ்யம் என்ற நூலை இயற்றும்போது அதனை ஓலையில் இவர்தான் எழுதுகிறார். அப்போது இராமானுசர், தன் சீடன் என்றாலும் தான் சொல்வதில் தவறு ஏற்பட்டால் உடனே சுட்டிக்காட்டவேண்டும் என்று இவரிடம் சொல்கிறார். அப்படிப்பட்ட ஞானம் நிரம்பப் பெற்றவர் கூரத்தாழ்வான். இராமானுசருக்காக தன் கண்களை இழக்கிறார் சாளுக்கிய சோழ அரசவையில். பிறகு கண் இல்லாமல் 12 ஆண்டுகள் திருமாலிருஞ்சோலை என்ற தலத்தில் வசித்தார் (அப்போது இராமானுசர் கர்நாடக தேசத்துக்குச் சென்றுவிடுகிறார்-ஹொய்சள தேசம்). வைணவ சமயம் இவருடைய குமாரன் மற்றும் அவரைத் தொடர்ந்து வரும் ஆச்சார்யர்களால் மிகவும் வளர்ந்தது. இந்த குருபரம்பரை வரலாற்றை வாய்ப்பு கிடைக்கும்போது எழுத நினைக்கிறேன். வைணவ வரலாற்றில் மூன்று பெரும் குற்றங்களும் இல்லாத ஒருவராக கூரத்தாழ்வார் கொண்டாடப்படுகிறார். இவருக்கும் சோழ வரலாறுக்கும் தொடர்பு உண்டு, ஆனால் இப்போது அதனைச் சொல்ல நான் முயலவில்லை.
இங்கு எழுத நினைத்தது பூர்வ ஜென்மத்தைப் பற்றி. வரலாற்றிலும் புராணங்களிலும் இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு என்று சொல்லியிருந்தேன். அதில் ஒன்று கோச்செங்கட் சோழன் வரலாறு.
புஷ்ப நந்தன், மால்யவான் இருவரும் சிவகணங்கள். ஒரு சாபத்தின் காரணமாக இருவரும் ஒரே இட த்தில் பிறந்தனர். ஒருவர் யானையாகவும் இன்னொருவர் சிலந்தியாகவும். அவர்கள் இருந்த இட த்தில் வெண்மையான நாவல் மரம் ஒன்றின் அடியில் சிவலிங்கம் ஒன்று இருந்த து. முன் ஜென்ம நினைவினால், யானை அருகில் இருந்த சந்திரை தீர்த்த த்திலிருந்து நீரெடுத்துவந்து லிங்கத்திற்கு தினமும் அபிஷேகம் செய்த து. மரத்தில் இருந்த சிலந்தியோ, சிவலிங்கத் திருமேனியில் காய்ந்த இலை சருகுகள் விழாமல் லிங்கத்தைக் காக்க அதன் மீது வலை பின்னிவைத்த து. யானைக்கோ இந்தச் சிலந்தி வலை சிவலிங்கத்தின் மீது இருப்பது பிடிக்கவில்லை. சிலந்தியின் எச்சில் லிங்கத்தின்மீது படலாமா என்று நினைத்து வலையைக் கிழித்த து. இதைப் பார்த்த சிலந்தி கோபத்தின் உச்சிக்குச் சென்று, யானையின் தும்பிக்கையில் புகுந்து கடித்துக் குதற, வலி தாங்காமல் யானை தும்பிக்கையை தரையில் அடிக்க, இருவரும் மரணமடைந்தனர். யானைக்கு மோட்சம் தந்த சிவன், சிவ கணங்களுக்கு அதனைத் தலைவன் ஆக்கினார். சிலந்தியை மீண்டும் மனிதப் பிறப்பு எடுத்து பிறகு தன்னை அடையுமாறு செய்தார். சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் சுபதேவர் பிள்ளை வரம் வேண்ட, அவர் மனைவிக்கு சிவனின் அருளால் சிலந்தியே ஆண் மகவாகப் பிறந்தது (நல்ல நேரத்தில் குழந்தை பிறந்தால் அவனை உலகமே கொண்டாடும் என்று ஜோசியர்கள் சொல்ல, அரசியார் அதுவரை தன்னை தலைகீழாக க் கட்டித் தொங்கவிட ஆணையிட்டார். அதனால் பிறந்த குழந்தை சிவந்த கண்களுடன் பிறந்தது). செங்கண்ணன் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, பட்டம் ஏறும்போது கோச்செங்கட்சோழன் என்ற பெயர் கொண்டது.
பூர்வ ஜென்ம நினைவுகளால் உந்தப்பட்ட கோட்செங்கச்சோழன், யானை மீதிருந்த கோபம் மறையாமல், யானை நுழைய முடியாத அமைப்புடைய 70 கோயில்களைக் கட்டினான். இந்த ஆலயங்கள் ஆனைபுகா மாடக்கோயில்கள் என்று அழைக்கப்பட்டன.
தற்போது ஐம்பது சிவன் கோயில்களும், மூன்று வைணவக் கோயில்களும் இந்த வகையைச் சேர்ந்தவை என்று சொல்கின்றனர். கோட்செங்கச்சோழன் கட்டிய முதல் கோயில் திருவானைக்கா கோயில். வைணவக் கோயிலான திருநறையூர் (நாச்சியார் கோயில்) கோயிலும் அவன் கட்டியதே. அனேகமாக எல்லாக் கோயில்களுமே பாடல் பெற்ற தலங்கள். திருமங்கையாழ்வார் திருநறையூர் கோயிலைப் பற்றிப் பாடும்போது (பெரிய திருமொழி, நாலாயிர திவ்யப்பிரபந்தம்)
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
என்று பத்து பாசுரங்களிலும் கோச்செங்கணான் பெயரைச் சொல்லிச் சிறப்பிக்கிறார்.
கோச்செங்கணான் கட்டிய யானை புகா மணிமாடக் கோயில்களில், பசுபதிகோயில், குடவாயில், திருவீழிமிழலை, சீர்காழி, தலச்சங்காடு, சிக்கல், நாகப்பட்டினம் சட்டநாதர், நடுவுநாதர் போன்ற கோயில்களும் உண்டு.
இப்போது இன்னொரு முன் ஜென்மத் தொடர்பைப் பார்ப்போம்.
இதில் நான் சொல்பவர், பதினெட்டு வயதானபோதுதான் சுதந்திரமான யோகியாக மாறி இருந்தார். அது வரை அவரது ஆசானுடனேயே இமயமலையின் நீள அகலம் முழுவதுமாகச் சுற்றித் திரிந்தார். இந்த இளம் யோகி சமாதி என்ற ஆழ்நிலை தியானத்தில் அசையாமல் இருந்தபோது, அந்தப் பகுதியில் எதிர்பார்க்கமுடிந்திராத ஒரு முதிய மனிதர் மலையின் சரிவுகளிலிருந்து தன் கைகளினால் தன் உடலை இழுத்துப்பிடித்து மேலேறி வந்திருந்தார். இளம்யோகி தியானத்தில் இருந்த குகை முன்னால் வந்துவிட்டார். அழுக்கு நிறைந்த தலைப்பாகை, கிழிந்திருந்த ஆடைகள், மருதாணியினால் நிறம் மாறி இருந்த தாடி, கழுத்தில் இருந்த ஜபமாலை, அவரை ஒரு முஸ்லீம் பக்கிரி என்பதை உணர்த்திற்று. கடுமையான மலைச்சரிவுகள் மற்றும் பாறைகளில் ஏறி வந்திருந்ததால் உடலின் பல பாகங்கள் வெட்டுப்பட்டு காயங்கள் நிறைந்து ஆங்காங்கே ரத்தம் சொட்டிக்கொண்டு இருந்தது. பசியாலும் குளிராலும் தவித்துக்கொண்டிருந்த அவர் குகையில் தியானத்தில் அமர்ந்திருந்த யோகியைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, தன் வலியையும் துயரங்களையும் மறந்து யோகியின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். பிறகு அந்த யோகியை அணைத்துக்கொண்டார்.
முதியவரின் செயலால் முறையற்ற வித த்தில் தியானம் கலையப்பெற்ற யோகி, கண்ணைத் திறந்து முதியவரைப் பார்த்து உலுக்கி தன்னைவிட்டு விலக்கினார். ‘எவ்வளவு தைரியம் உனக்கு’ என்று கோபப்பட்டு, என்னிடமிருந்து விலகு என்று கத்தினார்.
பக்கிரியோ, ‘தயவு செய்யுங்கள் ஐயா’ என்று மன்றாடி தன் கதையைக் கூற விழைந்தார். யோகியோ தன் கோபத்தை விடாமல், உன்னைப் போன்ற மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிக்கு இங்கே இடம் இல்லை, நான் அலக்நந்தாவில் ஒரு முழுக்குப் போட்டு, பிறகு தியானத்தைத் தொடரவேண்டும் என்றார்.
பக்கிரியோ, அதனைக் கேட்காமல், ‘தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். நான் ஒரு சூஃபி. என் ஆசான் உயிர் விடுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் என்னிடம், ‘நண்பனே என்னால் முடிந்த அளவு உன்னை ஆன்மீக உயர் நிலைக்கு அழைத்துப்போய்விட்டேன். நான் இந்த உடலை விட்டுப் போகப்போகிறேன். இதற்கு மேல் நிலைக்கு நீ போக வேண்டுமானால் இமயமலையில் பத்ரிக்கு அருகில் ஒரு இளம் யோகி வசித்து வருகிறார், அவரைக் கண்டுபிடித்து அவருடைய உதவியைக் கேள்’ என்று சொன்னர். அவர் குறிப்பிட்ட து உங்களைத்தான். இந்த இட த்திற்கு வர மிக க் கடுமையாக முயன்று வந்துவிட்டேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டாலே போதுமானது. என் ஆத்மா மிக்க அமைதியுடன் சென்றுவிடும். உங்களிடம் பிச்சை கேட்கிறேன் என்று கெஞ்சினார்.
‘உனது ஆசானைப் பற்றியோ இல்லை நீ குறிப்பிடும் சூஃபிக்கள் பற்றியோ எனக்கு ஒன்று தெரியாது. நான் சீடர்களை ஏற்றுக்கொள்வதே இல்லை என்று கோபமாகக் கூறிவிட்டு, என் பாதையை விட்டு விலகு, நீ வலுக்கட்டாயமாக தடை செய்த என் தியானத்தை, நான் குளித்துவிட்டு த் தொடரவேண்டும். இங்கிருந்து நீ தொலைந்து போ’ என்று கோபமாக அந்த இளம் யோகி கூறினார்.
இதுதான் உங்கள் இறுதியான வார்த்தைகள் என்றால் நான் இந்தப் பூமியில் இனியும் வாழ விரும்பவில்லை. இந்த நதியில் குதித்து என் உயிரை விட்டுவிடுகிறேன். பிரபஞ்சத்தின் தலைவன் எனக்கு வழி காட்டட்டும் என்று அந்தப் பக்கிரி கூறினார்.
இளம் யோகியோ, ‘நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். உன் அதிர்ஷ்டத்தால் நான் கோபத்தில் உனக்கு சாபம் கொடுக்கவில்லை. உன் பாதையில் நீ செல்’ என்றார்.
பக்கிரி யோகியின் கால்களில் மீண்டும் விழுந்து நமஸ்கரித்துவிட்டு கண்ணீர் மல்க, பிரார்த்தனையோடு சுழலும் நதியில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இளம் யோகி, தான் செய்த து சரிதான் என்ற எண்ணத்துடன், குளித்துவிட்டு மெதுவாக குகைக்குச் செல்லும் பாதையில் ஏறும்போது, அவரது குரு (பாபாஜி) தன்னை மிருதுவான குரலில் அழைப்பதை உணர்ந்தார். பாபாஜியின் நடை அருள் நிறைந்த தாக பெருந்தன்மை மிக க் கொண்டு இருந்த து. அவரது உடலில் தூய வெண்ணிறத் துணி ஒன்றை அணிந்திருந்தார். அவரது ஆழ்ந்த கண்கள் தன் சீடனை நோக்கி,
‘மகனே எத்தனை கொடுமையான காரியத்தைச் செய்துவிட்டாய். எப்போது பேசினாலும் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்று தெரிந்து பேச வேண்டாமா? வெளித் தோற்றத்தை மாத்திரம் பார்க்கலாமா? கடவுளின் ஒரு அற்புத பக்தனை புண்படுத்தித் துயரம் கொடுத்துவிட்டாயே. பல வருடங்கள் கடுமையாக உழைத்ததின் பலன்களை எல்லாம் மின்னல் வேகத்தில் அழித்துவிட்டாயே. ஒரு நிமிட கருணை, நூறு ஆண்டுகள் தீவிரமாக தவம் செய்வதற்கு ஒப்பானது. இந்த நஷ்ட த்தை நீ ஈடு செய்யவேண்டும்’
‘குருவே..நீங்கள் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’
அந்த பக்கிரிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். அகம்பாவத்தால் உன் ஆன்மீக வளர்ச்சியை நீ நிறுத்திவிட்டாய். அதற்கு பிராயச்சித்தமாக நான் சொல்லிக்கொடுத்த கிரியாவைச் செய்து உன் ஆத்மாவை விட்டுவிடு. அதனை அந்த ஏழைப் பக்கிரி வாழ்ந்த சூழ்நிலையில் அதே வலிகளை அனுபவிக்கக் கூடிய இடத்தில் பிறக்கச் செய்கிறோம்’ என்று இளம்யோகியின் ஆசான் கூறுகிறார்.
அப்படித்தான் அந்த இளம் யோகி, அடுத்த ஜென்மத்தில் திருவனந்தபுரத்தில், ஒரு சூஃபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து மும்தாஜ் என்ற பெயர் பெற்று, பிறகு இந்த வாழ்க்கையில் தன் குருவைச் சந்தித்து…. ஸ்ரீ எம் என்ற பெயருடன் யோகியாக வாழ்கிறார். (தன்னுடைய வரலாறை ஒரு யோகியின் சுயசரிதை என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்)
சனாதன தர்மத்தில்தான் பூர்வ ஜென்மம், முன் வினைப் பயன், கர்மாக்கள் என்ற கருத்துகள் இருக்கின்றன. அதற்கேற்றபடி அடுத்த பிறவியில் ஒருவன் நல்லது தீயது பெறுவது நடக்கிறது. இதைத்தான் ‘பதவீ பூர்வ புண்யானாம்’ என்ற சமஸ்கிருத சொலவடை சொல்கிறது. (ஜீவி சார் இந்தப் பகுதிக்குக் கருத்து எழுதினால், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதைச் சுட்டிக்காண்பிப்பார்)
நான் என் இடக்காலை, கண்டெய்னர் மீது வைத்திருக்கவில்லை. நன்றாகப் பார். தொல்லியல் துறைதான் இவைகளை மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. மண்டபத்தின் மேடைக்குச் செல்வதற்கு இரு பக்கங்களில் இருந்தும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபம் பதினாறு தூண்களுடன் உள்ளது, அதில் ஆறு தூண்களில் யாளி வேலைப்பாடு உள்ளது. மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள ஓவியம் மராத்தியர் காலத்தது.
இந்த அம்மன் கோயில் (உலகமுடைய நாச்சியார் அல்லது ப்ருஹன்நாயகி அம்மன்) 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பெற்றது. இங்கு அதற்கு முன்னால் பரிவராலயத்து உமா பட்டராகி என்ற பெயரில் ஒரு சிறிய அம்மன் ஆலயம் இருந்திருக்கவேண்டும். இதில் கர்பக்ரஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் இருந்திருக்கின்றன. முகமண்டபத்தின் பகுதியை நாயக்கர்கள் எழுப்பினர். இந்த முகமண்டபத்தின் கூரையில் மராத்தியர் கால ஓவியங்கள் உள்ளன. இந்திய குறிப்பாக தமிழக மன்னர்கள், ஒரு பிரதேசத்தை வெற்றி கொண்டபோதும், புதிய கோயில்களோ இல்லை இருக்கும் கோயில்களுக்கு பொருட்களையோ, நிலங்களையோ அளித்திருக்கிறார்களே தவிர, எந்தக் கோயில்களையும் சேதப்படுத்தியதில்லை, கோயில் சொத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு சென்றதில்லை. இதுதான் இந்த மண்ணின் தர்மம்.
உலகமுழுதுடையாள் அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில்
அம்மன் கோயிலுக்கான பாண்டியர்கள் அமைத்த நந்தி
சோழ வரலாறு மற்றும் இராஜராஜேச்வரம் கோயில் வரலாறு போன்றவைகளுக்காக எந்த எந்தப் புத்தகங்களையோ படிக்கும்போது சில புதுத் தகவல்கள் தெரியவருகின்றன. இராஜராஜ சோழன் காலத்தில் ந ந்தியும் பலிபீடமும் இராஜராஜன் நுழைவாயிலுக்கு வெளியே (கேரளாந்தகன் வாயிலுக்கு அப்புறம் இருந்ததாம். இந்தக் கோயில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது (அவன் கண்டியூர் அருகே தண்டு இறங்கினான்) பெரும் அழிவைச் சந்தித்தது. அப்போது நந்தி சிறிது பழுதுபட்டிருக்கலாம். பிறகு நாயக்கர் காலத்தில் ஒற்றைக்கல்லால் ஆன இந்தப் புதிய ந ந்தி வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. இது ஒரு பெரிய சாதனைதான். அதற்குப் பிற்பாடு மண்டபம் எழுப்பப்பட்டது (நந்தியின் மீது). இந்த மண்டபத்தையும் கோயிலின் நுழைவு மண்டபத்தையும் (பாம்பின் வாயில் யானை, அந்தப் பாம்பை காலால் மிதித்துக்கொண்டிருக்கும் வாயில்காப்போன்) இணைத்து ஒரு மண்டபம் கட்டத் திட்டமிட்டு, ஒரு தூணும் வைக்கப்பட்டதாம் (அதுதான் மேலே உள்ளது). நீங்கள் நந்தி மண்டபத்தின் அருகில் இந்தத் தூணைக் காணலாம். ஆனால் அந்த மண்டபம் எந்தக் காரணத்தாலோ நிறுவப்படவில்லை. மாலிக்காபூர் படையெடுப்பின்போதுதான் தஞ்சைக் கோயிலின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்.
மராத்தியர்கள் வைத்த ஒற்றைக் கல்லினால் ஆன நந்தி. ராஜராஜ சோழன் காலத்தில் இருந்த நந்தியை ஏற்கனவே இங்கு பகிர்ந்திருக்கிறேன். வெளிப்பிராகார மண்டபத்தில் இருக்கிறது.
இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் சிற்பங்கள் எல்லாவற்றையும் (ஓரளவு) கொடுத்துவிட்டு, கோயிலின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை புகைப்படமாகக் கொடுக்காவிட்டால் எப்படி? நம் கோயில்கள் சாதாரணர்களை புகைப்படம் எடுக்கவிடாது, ஆனால் தகுதியுள்ள சிலர் கருவறையில் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று வைத்திருக்கிறதே. அதனால் இணையத்திலிருந்து சில படங்களை இங்கு பகிர்கிறேன்.
ஒன்று தெரியுமா? இந்தக் கோயில் கல்வெட்டில் சுமார் 400 ஆடல் அழகிகளின் பெயர் (விலாசம்), கோயில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 பேரின் பெயர்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆடல் அழகிகளின் பெயர்களில் சில, எடுத்தபாதம், மதுரவாசகி, சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மாதேவடிகள், இரவிகுல மாணிக்கம், மாதேவி, சீருடையாள், ஆராவமுது, காமகோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி.. இப்போது இத்தகைய பெயர்களையே காணோமே..
சனகாதி முனிவர்கள் என்கிறார்கள் (இதையே இராஜராஜ சோழன் மற்றும் கருவூர்த்தேவர் என்று பல வருடங்கள் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இல்லை என்று எப்படிச் சொல்வது?)
மிகப்பழமையான தஞ்சை பிரகதீஸ்வரர் புகைப்படம். தொல்லியல்துறை நல்லாவே பராமரிக்கறாங்க என்பதை, இப்போது உள்ள புகைப்படங்களை வைத்து நாம் நன்றாகவே புரிந்துகொள்ளமுடியும்.
எவ்வளவு பெரிய அகழி இருந்திருக்கிறது என்று பாருங்கள். ஒவ்வொரு முக்கியமான இடத்தையும் பாதுகாக்க அகழி எவ்வளவு உபயோகப்பட்டிருக்கிறது. சப்தம் இல்லாமல் ஒரு கூட்டம் அதனைத் தாண்டி வருவது கடினம். பாதுகாப்புக்கு முதலைகளை விட்டிருந்திருக்கலாம். பெரும் படை, அகழியைத் தாண்டி வருவது கொஞ்சம் கடினம், காரணம் மதிளின் மறைவிலிருந்து தாக்குவது சுலபம். இருந்தாலும் ஒரே நேரத்தில் கோட்டையின் இரு புறங்களைத் தாக்கினால்?
இறைவன் திருவுரு மிகப் பெரியது. ஒப்பீட்டுக்காக பூசாரி இருக்கும் படத்துடன் கொடுத்திருக்கிறேன். (இணையம்)
எப்படிக் கட்டினாங்க என்றெல்லாம் நான் விளக்கவேண்டிய தேவை இல்லை. முதலில் லிங்கத்தை ஸ்தாபித்துவிட்டு, பிறகு அதைச் சுற்றி கற்றளி எடுப்பித்திருக்காங்க. இந்த இடையில் காற்றுள்ள பகுதியை வைத்துவிட்டு கோயில் கூடுபோல எழுப்பப்பட்டிருப்பதால் பெரிய சாந்துப்பூச்செல்லாம் இல்லாமல், 80 டன் எடையுள்ல கற்களின் தொகுதியைத் தாங்கும் வண்ணம் கோயில் இருக்கிறது என்கிறார்கள்.
இராஜராஜன் லோகமாதேவி சிலையை குஜராத் மியூசியத்திலிருந்து மீட்டிருக்கிறார்கள். ராஜராஜ சோழன் இந்தக் கோயிலுக்கு 60க்கும் மேற்பட்ட உலோகப் பிரதிமைகள் (சிலைகள்) கொடுத்திருக்கிறான். அவையெல்லாம் எங்கே, கண்டுபிடிக்க முயன்றார்களா என்பது கேள்விக்குரியது. இது சம்பந்தமான ஏகப்பட்ட செய்தித்தொகுப்புகளை நீங்கள் படித்திருப்பீர்கள்.
நான் ஒரு முறை தஞ்சைக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அப்போதுதான் குஜராத்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்திருந்த இராஜராஜன் உலோகமாதேவி சிலைகளை அர்த்த மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைத்திருந்தார்கள். படங்கள் எடுத்தேனா என்பது நினைவில் இல்லை.
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் சிவன், யோகியாக காட்சியளிக்கிறார் இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர். இந்தத் திருத்தலத்தில்தான் நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்தாராம். அதாவது மரணபயம் நீக்கும் திருத்தலம் திருவிசநல்லூர்.
அதுக்கும் இராஜராஜ சோழனுக்கும் என்ன சம்பந்தம்? இங்கு கிடைத்த கல்வெட்டில், கிபி 1014ல் இராஜராஜ சோழன் இங்கு துலாபாரம் கொடுக்கிறான். அதே நேரத்தில் அவனது மனைவி லோகமாதேவி, ஹிரண்ய கர்ப தானம் செய்கிறார் (எனக்குப் புரிந்தபடி, தங்கத்தினால் ஒரு கர்பவாசஸ்தலம் போன்று சென்று அதில் நுழைந்து வருதல். பிறகு அந்த கர்பவாசஸ்தலத்தை தானம் கொடுத்துவிடுவது. அதன்படிச் செய்து அந்த தங்கத்தினாலான கர்பவாசஸ்தலத்தை இந்தக் கோயிலுக்கு லோகமாதேவி கொடுத்திருப்பார்). அதனால் இராஜராஜன் தன் கடைசி காலத்தில் இந்தக் கோயிலில் மரணபயம் நீங்கவோ இல்லை பாவம் அகலவோ செய்திருக்கிறான். பிறகு அவனுடைய கல்வெட்டுகள் இல்லாததாலும் இராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் இருப்பதாலும், கிபி 1014ல் இராஜராஜன் மறைந்திருப்பான் என்று சொல்கின்றனர். இந்தத் தலம் கும்பகோணத்தின் அருகில் இருக்கிறது. (9கிமீ தூரத்தில். இந்தத் தலத்தின் அருகிலேயே திருவிடைமருதூர் இருக்கிறது) இராஜராஜன் கடைசியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் உடையாளூரிலிருந்து திருவியநல்லூர் 20 கிமீ தூரத்தில்தான் இருக்கிறது. இராஜராஜன் பள்ளிப்படை உடையாளூர் அருகில்தான் இருக்கிறது.
இன்றைக்கும் வரலாறும் படங்களும் ரொம்பவே அதிகமாக ஆகிவிட்டனவோ? நான் 15 படங்கள், இரண்டு பக்க வரலாறு என்று எழுத ஆரம்பித்தால் ஒரே கோயிலே பல மாதங்களுக்கு மேல் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் முடிந்த அளவு அதிகமான படங்கள், வரலாற்றுத் தகவல்கள் என்று கொடுப்பதால் ஒவ்வொரு பதிவும் கொஞ்சம் நீண்டுவிடுகிறது. படிப்பவர்களுக்கு அயர்ச்சியாக இருக்குமோ என்னவோ. அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குதகவல்களும் படங்களும் வெகு சிறப்பு. ஆலயம் குறித்த தங்களது சிந்தனைகள் நன்று. பாராட்டுகள் நெல்லைத்தமிழன். சற்றே இடைவெளிக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்து விட்டேன்.....
வாங்க தில்லி வெங்கட் நாகராஜ். நலமா?
நீக்குஅம்மாவின் மறைவுக்கு அப்புறம் நீங்க பதிவே எழுதலை. ஆபீஸ் வேலைகள் மிக அதிகம் என நினைத்தேன்.
மிக்க நன்றி உங்கள் வருகைக்கு
வெங்கட் தில்லியிலிருந்து திருவரங்கம் வந்து விட்டாரே.. தெரியாதா?
நீக்குதெரியாது பா.வெ. மேடம். இடமாறுதல் வாங்கிக்கொண்டுவிட்டாரா?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி
நீக்குவியந்து பாராட்ட வைக்கும் உழைப்பு. பிரமிக்க வைக்கும் விளக்கங்களும் படங்களும்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம். மிக்க நன்றி.
நீக்குதகவல்கள் அதிகம்தான். இந்த ஒரு பதிவில் மட்டும், கூரத்தாழ்வார், சூஃபி யோகி,கோசெங்கட்ச்சோழன், என்று ஏகப்பட்ட தகவல்கள். அதைத்தவிர ராஜராஜ சோழனின் இறுதிக் காலம், தஞ்சை பெருவுடைக் கோவிலின் நாயக்கர் கால நந்தி, திருவிசை நல்லூர் பற்றிய தகவல்கள்... எல்லாவற்றையும் படித்து முடித்ததும் கூரத்தாழ்வாரைப் பற்றி எதற்காக சொன்னார்? என்ற கேள்வி எழும்பியது. மீண்டும் பதிவின் ஆரம்பத்திற்குச் சென்று படித்தேன்.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்
நீக்குசோழர் வரலாறு என்று வரும்போது அதில் அதிசயமாக சைவம் தவிர சிவபெருமான் தவிர வேறு யாரும் இல்லை என்று தீவிரமாக எண்ணி பிற மதத்தினரை குறிப்பாக வைணவ ஆச்சார்யர்களுக்குத் துன்பம் விளைவித்த சோழ அரசன் மிக வித்தியாசமானவன். அவனைப் பற்றி எண்ணியபோது அவனால் கண்களை இழந்த கூரத்தாழ்வான் நினைவுக்கு வந்தார்
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா
நீக்குதுரை செல்வராஜு சார். நேற்று காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலைத் தரிசித்தேன். வியந்துபோனேன். இராஜராஜனுக்கு இந்தக் கோயில்தான் இன்ஸ்பிரேஷன் என்பதில் சந்தேகம் இல்லை. பல்லவ அரசர்களின் விஷன் வியக்க வைத்தது
நீக்குபடங்கள் அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குதிருவிசநல்லூர் என்றால் ஸ்ரீதர ஐயாவாள்தான் நினைவுக்கு வருகிறார். அங்கிருக்கும் அவர் வீட்டில் கார்த்திகை மாத அமாவாசை அன்று கங்கை பெருகி வருவதாக நம்பிக்கை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
திருவிசநல்லூருக்கு parallal ஆக இருப்பதுதான் கோவிந்தபுரம். கோவிந்தபுரத்தில் போதேந்திரரின் ஜீவ சமாதி. எத்தனை மஹான்கள் இந்த பூமியில்! __/\__ __/\__
இந்த இரண்டு இடங்கள் பற்றியும் அறிந்திருக்கிறேன். தரிசிக்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய ஞாயிறு தஞ்சை பெரிய கோவில் பதிவு அருமை. கோவில் பற்றிய பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். முன்ஜென்ம வினைப்பயன் பற்றி நீங்கள் சொல்லிய யானை சிலந்தி கதை அறிந்ததுதான். அதை மிக கோர்வையாக அழகாக சொல்லியுள்ளீர்கள். கோச்செங்கணான் வரலாறும், அவர் கட்டிய கோவில்களின் பெயர்கள்ம் தெரிந்து கொண்டேன். முற்பிறவி பற்றி எத்தனை நினைவாற்றலை அவருக்கு இறைவன் தந்துள்ளார் என வியக்க வைக்கிறது. (அவர் படைகளில் யானைப்படையே இருந்திருக்காதோ.? அவர் அந்தளவுக்கு யானைகளை வெறுத்தாரா ? இல்லை இறைவனை வழிபட மட்டும் யானை மறுபிறவியிலும் ஒரு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று நினைத்திருப்பாரோ ? என சந்தேகங்கள் வருகின்றன. வரலாற்றில் தேடி நீங்கள்தான் விளக்க வேண்டும்.
இங்கு யோகியின் சுயசரிதை புத்தகம் மகன்கள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாக படிக்கின்றனர். எனக்குத்தான் இன்னமும் அதைப்படிக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. நீங்கள் குறிப்பிட்ட பகுதியை படித்ததும் படிக்க அவா வருகிறது. படிக்க வேண்டும்.
கல்வியோ , செலவமோ , புகழோ, ஆன்மிக பற்றோ பெறுவது முன்ஜென்ம வினைப்பயன்கள எனச் சொல்வது இதைத்தானே.! மனிதர்கள் ஒவ்வொருவரும் வினைப்பயன்கள் மூலமாக ஒன்று சேர்கிறோம். அவ்வாறு சேர்ந்த பொழுதில் பிறந்த குழந்தைகளில், ஒவ்வொருவரும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்று, மற்றொன்றில் தேய்ந்து நிற்பதை கண்டு மனம் வருந்தி, வாடுவதும் முன்ஜென்ம வினைகள்தாமே..! ஏதாவது ஒரு பிறவியில், இறைவனின் பாதங்களை சென்று சேரும் வரை இது ஒன்றும் செய்ய முடியாத வினைப்பயன்கள்தாம். . பிறவி பெருங்கடல் அல்லவா?
படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நந்தி தேவரின் விளக்கம் அருமை. இறைவனை தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். எப்போதும் நகைச்சுவை உணர்வு உங்களுடன் கூடப் பிறந்தது.
நீக்குபோரில் யானைகள்தாம் விழுப்புண்கள் பெறும், இறக்கும், அதன் மீதுதானே சவாரி செய்கிறோம் என நினைத்திருப்பாரோ
இதை எழுதும்போது உறவினர்கள் பலருடனும் சேர்ந்து சத்தியாகாலத்தில் துலா காவிரி ஸ்நானத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். இப்போது பேசியது ஒரு பெண்ணின் குழந்தை பிறந்ததிலிருந்து கஷ்டப்பட்டதையும் உடல் கோளாறுகளால் துன்பப்பட்டதையும் பற்றி. அதனால் அவளின் கணவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லையாம். உறவினர்கள் எல்லோரும் அந்தப் பெண்ணின் பாவம்தான் குழந்தை இப்படிப் பிறந்திருக்கு என கரிப்பார்களாம். ஒரு, வயதான ஆஞ்சநேய உபாசகரை கணவனுடன் காணச் சென்றபோது விவரம் எதையும் கேட்காமல் அவர்கள் இருவரிடமும் பெற்றோரின் கர்மா, மூதாதையர்களின் கர்மா மற்றும் குழந்தையின் கர்மாதான் பிறப்பாற்கும் கஷ்டங்களுக்கும் காரணம் என்றாராம். கணவனைப் பார்த்து, இதைப் புரிந்து கொள்ளாததால்தான் நீ கடவுள் மீது கோபம் கொண்டிருக்கிறாய். குழந்தைக்கு இந்தக் கஷ்டங்கள் ஏழு வருடங்கள் கழித்துத் தீரும் என்றாராம். முன்வினைப்பயன் என்பது அப்படிப்பட்டது
முருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சரணம்
நீக்குஇதையே இராஜராஜ சோழன் மற்றும் கருவூர்த்தேவர் என்று பல வருடங்கள் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். இல்லை என்று எப்படிச் சொல்வது?.. //
பதிலளிநீக்குஓட்டிக்கொண்டிருந்தார்கள் என்பது கடுமை..
அலுவலகர்கள் ஆய்வாளர்கள் என்ற நிலைகளுக்கு முன்னால் ஆன்மீக உணர்வாளர்களால் உணரப்பட்ட ஓவியம் அது...
ராஜராஜ சோழன் கருவூர் தேவராகவே இருப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்?...
கல் என்றும் சொல்லலாம்
கடவுள் என்றும் கொள்ளலாம்...
உங்கள் கருத்து சரியானதுதான் துரை செல்வராஜு சார். பல ஆய்வாளர்கள் குறிப்பிட்ட கருத்தை நான் எடுத்தாண்டேன். வரலாற்றை அறுதியிட யாரால் முடியும்?
நீக்குநம் உள்ளுணர்வு சொல்வது சரியாக இருக்கும்
மற்றபடி
பதிலளிநீக்குபதிவு சிறப்பு..
மிக்க நன்றி துரை செல்வராஜு சார்
நீக்குகோச்செங்கட்சோழ நாயனாரை தேவாரம் புகழ்கின்றது
பதிலளிநீக்குஒருவருடைய ஒரு குணத்தை செயலை மாத்திரம் வைத்துக்கொண்டு அவரைப்பற்றி எழுதிவிட முடியாது. கோட்செங்கட்சோழன் பல கோயில்களைச் சமைத்தவர். தேவாரம் புகழ்வதில் ஆச்சர்யமில்லை. ஒரு கோயில் கட்டுவதே சாதனை என்றிருக்க எத்தனை பெரிய கோயில்களை கோட்செங்கட் சோழன் உருவாக்கியிருக்கிறார்
நீக்குபல ஆய்வாளர்கள் குறிப்பிட்ட கருத்தை நான் எடுத்தாண்டேன்.
பதிலளிநீக்குநதியின் பிழையன்று நறும் புனல் இன்மை என்றார் கம்பர்
ஆற்றில் தண்ணீர் இல்லையெனில் நதியின் குற்றமில்லை
ஆன்மீகமும் வரலாறும் எப்போதும் எதிர் எதிர் தான்...
உண்மை துரை செல்வராஜு சார். பல நேரங்களில் வரலாறும் உணர்வு பூர்வமாக வழி வழியாக நாம் நம்புவதும் மாறுபடும். இராமானுசர் காலம், எந்தச் சோழ அரசன் அவரைக் கொல்ல முயன்றான் போன்றவற்றில் குழப்பங்கள் உள்ளன. இதுபோல பல நிகழ்வுகளில்
நீக்குசரித்திரத்தின் ராஜராஜ சோழனையும் கண்டதில்லை.. கருவூராரையும் யாரும் கண்டதில்லை..
பதிலளிநீக்குவேத காலத்தின் சனகாதியர் என்பதற்கு மட்டும் என்ன நீதி??...
எந்த ஒன்றிற்கும் மறுப்பு சொல்லாத ஒரு இனம் உள்ளங்கை நெல்லியை இல்லை என்றதாம்...
!?...
சார்.. உங்கள் ஆதங்கம் சரிதான். ஆனால் குடவாயில் பாலசுப்ரமணியம் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் அப்படி அபிப்ராயப்படுகிறார்கள். அவர்கள் ஒருதலைப்பட்சமாக எழுதுவார்களா?
நீக்குஅருமையாக எழுதிக் கொண்டு போகிறீர்கள், நெல்லை! நனவு ஓடை என்று சொல்வது போல (stream of consciousness) மனதில் வந்து மோதும் பல தகவல்களை அடுத்தடுத்து அளித்து இருக்கிறீர்கள். இதுவும் நன்றாய் தான் இருக்கிறது! That said, சனகாதி என்பது சனகன் etc அல்லது சனகன் et al என்று சொல்வதைப் போல, பிரம்மனின் நான்கு குமாரர்களை குறிப்பிடுவது. இந்த ஓவியத்தில் இருவர் மட்டுமே இருக்கிறார்கள்? இன்னொன்று: இந்த நான்கு குமாரர்களும் ஒரே வயது உடையவர்கள்.மேலும், என்றும் இளமையாகவே இருக்கக்கூடிய ரிஷிகள், இதில் நரை தாடிக்கு வேலை கிடையாது. My two cents. :-)
பதிலளிநீக்குவாங்க திருவாழ்மார்பன் சார். நீங்கள் எழுதியுள்ளது சரி. என்னுடைய பார்வையில் ராஜராஜன் மற்றும் கருவூரார் என்றே பதிந்திருந்தது. வரலாற்றாசிரியர்கள் அபிப்ராயம் வேறு. இந்த கருவூரார் ராஜேந்திரன் காலம் முழுவதுவும் இருந்தவர். இவர் திருமுறைகள் பாடியவர் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்
நீக்குஇந்த வாரம் வரலாறு வைணவ உபன்யாசம் ஆக மாறி யோகியின் சுயசரிதை பகர்ப்பில் முடிவடைகிறது. வித்தியாசமான முயற்சி.
பதிலளிநீக்குஎனக்கு தெரிந்து திருவனந்தபுரத்தில் சுஃபி துறவிகளுக்கு தர்காஹ் ஒன்றும் இல்லை. பீமா தாய் என்று ஒரு தர்கா பீமா என்ற நாகூர் ஆண்டவர் போன்று சக்தி படைத்த ஒரு அம்மையாரின் சமாதி. இந்துக்களும் வழிபடும் தளம். சுற்றிலும் அங்கிருக்கும் கடைகள் சென்னை பர்மா பஜார் போன்று "வெளி நாட்டு" பொருட்கள் விற்பனை செய்பவை.
மற்றபடி நீங்கள் குறிப்பிடும் யோகியின் சுயசரிதை யோகியை பற்றி திருவனந்தபுரத்தில் ஒரு பிரபலமும் இல்லை.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார். நான் புத்தன் தெருவில் சில காலம் வாழ்ந்திருக்கிறேன். என் அக்கா கோயில் மதிள்சுற்றின் அருகே உள்ள சொந்த இடத்தில் வாழ்ந்தார் அது ஒரு பெரிய கதை.
நீக்குபுத்தக வாயிலாக சித்தர்கள் திருவனந்தபுரம் தொடர்பை அறிவேன். இதுபற்றி எழுதுகிறேன்
பெரிய கோவில் நீண்ட வரலாற்றுடன் தந்துள்ளீர்கள். படிக்க தொய்வு இன்றி பல வரலாற்று தகவல்களும் அறிந்து கொண்டோம்
பதிலளிநீக்குபடங்களும் துணை நின்று கட்டுரைக்கு சிறப்புத் தருகின்றன. மிக்க நன்றி உங்கள் உழைப்புக்கு பாராட்டுகள்.
ஆடல் அழகிகள் 400 பேரில் என் பெயரும் அடங்கி இருக்கிறதே தஞ்சை பெரிய கோவில் கல் வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளேன் :)) யாருக்குக் கிடைக்கும். :)))
யோகியின் சுய சரிதையையும் எடுத்துக் காட்டி உள்ளீர்கள். தஞ்சை பழைய படம் காண கிடைத்தது.
விரிவான தகவல்களை தொகுத்து தருவதற்கு நன்றி.
வாங்க மாதேவி அவர்கள். பாராட்டிற்கு நன்றி
நீக்குஉங்கள் பெயர் பிரபலமானது. தஞ்சை பெரிய கோயிலில் உங்கள் பெயர் இருப்பது பெருமைதான்
நெல்லை பதிவில் நிறைய தகவல்கள். கூரத்தாழ்வார் பற்றிய விவரங்கள் வாசித்திருக்கிறேன். அது போல அந்த யானை, சிலந்தி விஷயமும்.
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன் க்கா. நலமா? ஏசிடி வந்தால் நிறைய ஓய்வு கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் வேலை அதிகமாகிறதே
நீக்குஅதெல்லாம் இல்லை நெல்லை. வேலைகள் கூடுதலாக இருக்கு...இதோ இப்போதும்....இன்னும் கருத்துகள் கொடுக்க நினைத்தேன் ஆனால் இப்ப முடியாது போல
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அரசு மேடம். வாழ்க வளமுடன்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குபதிவு மிக அருமை. வரலாற்று தகவல்கள் நிறைய தேடி நிறைய விவரங்கள் கொடுத்து பதிவை மிக அழகாய் கொடுத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகூர்த்தழ்வார், கோச்செங்கணான் வரலாறும் பாசுரமும் பழைய காலத்து படமும் அமிக அருமை.
முன்ஜென்ம நினைவுகள் பற்றிய் கதைகளும் அருமை.
மிக்க நன்றி கோமதி அரசு மேடம். இவற்றை எப்போதோ எழுதி அனுப்பிவிட்டேன் இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது
நீக்குநான் என் இடக்காலை, கண்டெய்னர் மீது வைத்திருக்கவில்லை. .//
பதிலளிநீக்குதுவாரபாலகர் பேசினால் பல வரலாற்று கதைகள் தெரியும் என்று .போன பதிவில் சொன்னீர்கள் இந்த பதிவில் ஒரு உண்மையை சொல்லி விட்டார் உங்களிடம். (கண்டெய்னரை யார் காலில் வைத்தார் என்ற உண்மையை)
அந்தப் படத்தைக் கோர்க்கும்போது கன்டெயினர் சரியா கால்பகுதியில் இருப்பதைக் கண்டேன்
நீக்குமிகப்பழமையான தஞ்சை பிரகதீஸ்வரர் புகைப்படங்கள் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநான் அகழியோடு பார்த்து இருக்கிறோம் பச்சை கலரில் தண்னீர் பாசம் பிடித்து இருக்கும் இப்போது அகழியை தூர்த்து விட்டார்கள் என்றார்கள். இறைவன் திருவுரு ஓப்பீடு படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
இராஜராஜன் லோகமாதேவி சிலையை குஜராத் மியூசியத்திலிருந்து மீட்ட படங்கள் நன்றாக இருக்கிறது.
திருவிசநல்லூர் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன்.
வரலாறு படிக்க பிடிக்கும் நிறைய தகவல்கள் தேடி கொடுத்து படிக்க வைத்தமைக்கு நன்றி நெல்லை. தொடர்கிறேன்.
யோகி கதை அடடா இந்த யோகி ஏன் இப்படிச் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டே வந்தப்ப அவர் குரு சொல்லுவது தெரிந்துவிட்டது. பின்ன அவர் பண்ணியது எவ்வளவு பெரிய அக்ரமம்.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு முறை பிரார்த்தித்துவிட்டுப் பின்னர் நான்கு முறை கோபமும், வார்த்தைகளும் வாயில் வரும் போது we are accountable for that என்று. அங்கு நாம் செய்யும் நல்லவை nullify ஆகிவிடும்.... என்று கணக்கு. ஆனால் முன் பின் என்பதைப் பற்றி நான் யோசிப்பதில்லை.
திருவனந்தபுரம் அந்த சுஃபி பற்றி நான் கேட்டதில்லையே
கீதா
இந்த ஸ்ரீ எம் பற்று நீங்க முன்பு ஹிமாலயன் யோகிகள் பத்தி சொன்னப்ப குறிப்பிட்ட நினைவு இருக்கு.
பதிலளிநீக்குகீதா
இணையத்தில் ஸ்ரீ எம் என்று போட்டால் அவரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன நெல்லை. பார்த்தேன்.
நீக்குகீதா
அட என் தோழர் சனி !!!!! படம் சூப்பர்! சனிதானே!!!!
பதிலளிநீக்குநீலக்கலர் குப்பைத் தொட்டியின் மீது கால் லைட்டாதான் படுவது போல் இருக்கு க்ளோசப்பில் பார்த்தால். நல்லா எடுத்திருக்கீங்க ஆனா. எனக்கு இப்படி எடுப்பது மிகவும் பிடிக்கும்
கீதா