10.11.25

திங்கக்கிழமை  : JKC ரெஸிப்பி  - மரவள்ளி அடை/தோசை

 

 மரவள்ளி அடை/தோசை

JKC 

இந்த அடை பற்றிய சமையல் குறிப்பு முன்பே எ பி யில் வந்திருக்கலாம். அப்படியானால் இதை மீள்பதிவு ஆகக் கொள்ளலாம்.

பச்சரிசி ஊறவைத்து அரைத்து மாவை புளிக்க வைக்காமல் வார்க்கும் தோசைகள் மூன்று. நீர்த்தோசை, அரிசி சிறுதானியம் தோசை, மற்றும் அரிசி பருப்பு கலந்து அரைத்த அடை தோசை ஆகியன.  இவ்வரிசையில் அரிசி, மரவள்ளிக்கிழங்கு சேர்த்தரைத்து சுடப்படும் தோசையே மரவள்ளி தோசை. ஒரு வித்தியாசமான காலை உணவு.

சாதாரண அடைக்கு பருப்பு தேவை. பருப்பை நீக்கி மரவள்ளி கிழங்கை சேர்த்து அரைத்து தோசைக்கல்லில் வார்த்தெடுப்பது தான் மரவள்ளி அடை.  

வேண்டிய பொருட்கள்.

ஊறவைத்த பச்சரிசி. (மூன்று மணி நேரம் ஊறினால் போதும்)

மரவள்ளிக்கிழங்கு ஒரு துண்டு.

வற்றல் மிளகாய் 5 (தேவையான காரத்திற்கு ஏற்ப)

வெங்காயம் பொடியாக அரிந்தது.

பெருங்காயப்பொடி

உப்பு.

அரிசி கிழங்கு விகிதம் தரப்படாததை கவனித்திருக்கலாம். அரிசி கூடுதல் ஆனால் மொறு மொறுப்பு கூடுதல் ஆகும். கிழங்கு கூடுதல் ஆனால் மொழுக் மொழுக் கூடுதல் கிடைக்கும். வேண்டிய திட்டம் அவரவர் தீர்மானிப்பதுவே.

அரிசி, கிழங்கு துண்டங்கள், மிளகாய், உப்பு  இவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். பெருங்காயப்பொடி சேர்க்கவும்.

தோசைக்கல்லில் வார்த்து இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

தொட்டுக்கொள்ள சட்னி அரைக்கவில்லை. நாட்டு சர்க்கரை தான்.

தேங்காய் துருவல் அடையில் தூவி நாட்டு சர்க்கரையுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!