பயங்கரவாதிகளின் சதியை முறியடித்த ஐபிஎஸ் அதிகாரி: குவிகிறது பாராட்டு
புதுடில்லி: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தை துவக்கிய விசாரணை தான், வெடிமருந்து பறிமுதல் செய்து பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த விசாரணைக்கு முக்கிய காரணமாக இருந்த சந்தீப் சக்கரவர்த்தி என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கு மிரட்டல் விடுத்து பயங்கரவாதிகள் போஸ்டர் ஒட்டுவது வழக்கமானதாக இருந்தது. இருப்பினும், இந்த முறை இந்த விவகாரத்தை 2014ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் சக்கரவர்த்தி சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொன்ற ஆப்பரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்கு தலைமை ஏற்ற இவர், போஸ்டர் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். இதில் போஸ்டரை ஒட்டிய 3 பேர் சிக்க அவர்கள் அளித்த வாக்குமூலம் தான் பயங்கரவாத நெட்வொர்க்கின் பின்னணியை அம்பலப்படுத்தியது. விசாரணை டில்லி, ஹரியானா, உ.பி., வரை நீண்டு 2900 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் பின்னணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய வைத்தது. யார் இவர்? சந்தீப் சக்கரவர்த்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ராம கோபால் ராவ் ஆந்திர அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரங்கம்மாவும் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சந்தீப் சக்கரவர்த்தி கர்னூல் மாவட்டத்தில் உள்ள மான்டசரி பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்தார். பிறகு 2010 ல் கர்னூல் மருத்துவ கல்லூரியில் டாக்டர் பெற்றார். 2010 - 2011 வரை பயிற்சி மருத்துவராக இருந்தார். பிறகு 2014 ல் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். காஷ்மீரில் பணி: காஷ்மீரில் சந்தீப் சக்கரவர்த்தி கேந்திர முக்கியம் வாய்ந்த இடங்களிலும், முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றி உள்ளார். உரி மற்றும் சோபோரில் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த இடங்களில் பணியாற்றியுள்ளார். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பாரமுல்லாவில் நடவடிக்கை குழு எஸ்பி ஆகவும் பாதுகாப்பு சவால்கள் நிறைந்த ஸ்ரீநகர் தெற்கு, ஹன்ட்வாரா, குப்வாரா, குல்காம், ஆனந்த்நாக் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியாற்றி உள்ள இவர், கடந்த ஏப்.,21 முதல் ஸ்ரீநகர் மூத்த எஸ்பி(SSP) ஆகவும் பணியாற்றி வருகிறார். ஆனந்த்நாக், குப்வாரா, குல்காமில் பதவி வகித்த போது பல முக்கிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளித்ததுடன், பயங்கரவாத நடவடிக்கைகளையும் முறியடித்தார். போலீஸ் மற்றும் அப்பாவி மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றார். ' ஆப்பரேஷன் ஸ்பெஷலிஸ்ட்' என்ற பெயர் சந்தீப் சக்கரவர்த்திக்கு உண்டு. திட்டமிடுதல், உடனடியாக, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது இவரது பாணி. இதற்கு உதாரணம் தான் போஸ்டர் விவகாரம் என்கின்றனர் போலீசார். சிறிய அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட இந்த விவகாரம் விசாரணைக்கு பிறகு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் சதி, வெடிமருந்து பறிமுதல் வரை சென்றுள்ளது. விருதுகள் : பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்காக வீரதீர செயல்களுக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கத்தை ஆறு முறையும், ஜம்மு காஷ்மீரில் போலீசின் பதக்கம் நான்கு முறையும் இந்திய ராணுவத்தின் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
சென்னை: சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சித்தார்த், மிகக்குறைந்த நேரத்தில், 'கியூப்' சுழற்றி, மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சென்னை அண்ணா நகர் பப்ளிக் ஸ்கூலில், 10ம் வகுப்பு படிக்கும் சித்தார்த், அகில இந்திய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாட்டு கழக கியூபிங் பயிற்சியாளர் ஆனந்த் ராஜேந்திரனிடம், கடந்த மூன்றாண்டுகளாக பயிற்சி பெறுகிறார். இவர் கடந்த 2023ல், கண்களைக் கட்டியபடி, மரத்தால் ஆன 4 - 4 ஸ்னேக் கியூபை, 8.59 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டார். இந்த சாதனையை, இன்ஜினியஸ் சார்ம் வேல்டு ரெக்காட்ஸ், ஆசிய புக் ஆப்ரெக்கார்ட்ஸ், இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில், உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதற்காக, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றார். கடந்தாண்டு நடந்த சாதனை நிகழ்வில், 3 - 3 எனும் அனகோண்டா கியூபை, 8.5 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டு, அடுத்த உலக சாதனையை படைத்தார். இந்தாண்டு, பல்வேறு உலக சாதனை நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்ட கியூபிக் போட்டியில் பங்கேற்றார். அப்போது, 13 திருக்குறள்களை சொல்லியபடி, வலது கையால் பட்டாம்பூச்சி சீப்பை சுழற்றியபடியே, இடது கையால் ஐந்து 2 - 2 கியூப்களை, 1 நிமிடம் 14 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டு, புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், மூ ன்று உலக சாதனைகளை படைத்துள்ள சித்தார்த்தை, பல்வேறு விளையாட்டு அமைப்புகள் பாராட்டியுள்ளன. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தமிழக கவர்னர் ரவி உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.
உடல் - மனநலத்தை ஒருங்கிணைத்து உயிர் காப்பாற்றும் தொழில்நுட்பம்; கண்டுபிடித்தார் ராஜபாளையம் மாணவர் தயா விஷ்ணு குமரன்
கிராமப்புறங்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களின் மருத்துவமனை துாரம், இணைய இணைப்பு பற்றாக்குறை, போக்குவரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பல உயிர்கள் இழக்கப்படுகின்றன. இதே நேரம், மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டிற்கும் ஒரே தீர்வாக 'ஸ்மார்ட் சிஸ்டம் பார் அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர்' எனும் புதுமையான சுகாதார அமைப்பை உருவாக்கினேன். இது ஒரு ஹார்டுவேர். இது செயல்பட, மக்கள் எளிதில் பயன்படுத்தசெயலியும் தேவை. இதன் நோக்கம் நேரடி உடல்நிலை கண்காணிப்பு, அவசரநிலை உதவி, மனநல பராமரிப்பு. இதனோடு உருவாக்கப்பட்ட செயலி தான் 'Varrummun Kaappom' என்ற செயலி. இதயத் துடிப்பு சென்சார் மூலம் இதயத்துடிப்பு சரியான வரம்பில் உள்ளதா என கண்காணிக்கிறது. டி.எச்.டி., 11 வெப்பநிலை சென்சார் மூலம் உடல் வெப்பநிலையை அளந்து, காய்ச்சல் அல்லது வெப்ப அழுத்தத்தை கண்டறிகிறது.ஏ.டி.எக்ஸ்.எல்.,
இதை பள்ளியில் மத்திய அரசின் நிடி அயோக் திட்டத்தின் கீழ் செயல்படும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் உதவியோடு உருவாக்கினேன். பெற்றோர், முதல்வர் கல்யாணி, ஆலோசகர் டாக்டர் கு.கணேசன், வழிகாட்டு அலுவலர் பிரசன்னா உறுதுணையாக இருந்தனர்.தற்போது பிரான்ஸ்சின் டெசால்ட் நிறுவனம் எனக்கு இன்டெர்ன்ஷிப் வழங்கியுள்ளது,என்றார்.
நான் வாசித்த கதை - மீட்டாத வீணை - சாரதா ஸ்ரீநிவாசன்
என் பார்வை - கீதா ஆர்
நவம்பர் மாத 'லேடீஸ் ஸ்பெஷல்' இதழில் வெளிவந்திருக்கும் 'மீட்டாத வீணை' எனும் சிறுகதையை எழுதியிருக்கும் கதாசிரியர் சாரதா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகளும்.
சென்ற வருடம் திரு ராய செல்லப்பா சார் நடத்திய ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்ற அவரது கதை 'சிங்கிள் பேரன்ட்' அழகான உளவியல் ரீதியான கருவைக் கொண்ட கதை. நன்றாக எழுதியிருந்தார். எங்கள் தளத்தில் அதைப் பற்றிச் சொல்லியும் இருந்தேன். ஒரு சிறு பரிந்துரையும் கொடுத்திருந்தேன்.
ஆசிரியரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், சாரதா ஸ்ரீநிவாசன் அவர்கள் (62. சென்ற வருடம் 61 என்று இருந்ததால் இந்த வருடம் நானாகவே ஒரு வருடம் கூட்டிக் கொண்டுவிட்டேன்!!) பிறந்தது திருநெல்வேலியில். சாரா டக்கர் கல்லூரியில் படிப்பு. கல்லூரி நாட்களில் கையெழுத்துப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அந்த எழுத்தார்வத்தில், வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கதைகள் எழுதத் தொடங்கி இது வரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
1. "மனதில் ஒரு மத்தாப்பு", 2. "என் கண்ணின் ஒளி நீங்கள் அன்றோ", 3. "ஒரு சத்தியவான் இரு சாவித்திரி" (தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதல்லவா!!! வாசிக்கும் ஆர்வமும் எழுகிறது) மற்றும் 4. "அன்னியோன்யம் அதுதான் தாம்பத்தியம்"
இவரது முதல் புத்தகம் 'பேக்கி டெர்ம்' பதிப்பகம் மூலமாகவும், மற்றவை புஸ்தகா மூலமாகவும் வெளியாகியுள்ளன.
------ மேற்கண்ட ஆசிரியர் குறிப்பு - சென்ற வருடம் போட்டியில் வென்ற கதைகளை திரு இராயசெல்லப்பா சார் வெளியிட்ட புத்தகத்தில் இருந்து.
கதைச் சுருக்கம்
சுமா வீணை விதுஷி. வயதில் சிறியவள் ஆனால் மிகவும் பிரபலமானவள். அவள் கணவன் ரங்கனின் மரணத்தில் தொடங்குகிறது கதை. ரங்கன் ஏன் 'டக்'கென்று மரணம் அடைகிறான்? கதை சொல்ல வருவது என்ன? அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் கதையை வாசிக்க வேண்டும்.
கதையை வாசித்த பின் என் பார்வையை வாசிக்கலாம் இல்லை, என் பார்வையை வாசித்த பிறகு கதையை வாசிக்கலாம். உங்கள் விருப்பம்!
கதை என்
பார்வையில்
"மீட்டாத
வீணை" என்ற தலைப்பே பெண் சார்ந்த கதை என்று சொல்கிறது. அக்காலம் தொட்டே
வீணையை பெண்ணிற்கு ஒப்பிடுவதால் இருக்கலாம்.
'மீட்டாத
வீணை' சற்று பெரிய சிறுகதைக்கான அழகான, ஆழமான, அற்புதமான கரு. அந்த ஆழத்திற்குள் அதிகம்
செல்லாமல் உணர்வுகள் சார்ந்த சிறுகதையாக அமைத்திருக்கிறார், கதாசிரியர்.
ரங்கன், தன் காதலை தெய்வீகக் காதல், புனிதமான காதல் என்று நினைப்பது, குணா
படத்தில் வரும் கமலின் கதாபாத்திரத்தையும், வசனம், 'இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது'
என்பதையும் நினைவூட்டியது.
//திருமணமான
ஒரு வாரத்திலிருந்தே தனிமை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவன் அவளை வீணை வாசிக்கச்
சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தான். திருமணத்திற்குப் பின் அவன் அவளையும் அவளது வீணை
வாசிப்பபையும் பலமடங்கு காதலிக்க தொடங்கி இருந்தான். //
//
அவன் ஒருமுறை நேயர் விருப்பத்தில் தமிழிசைப் பாடல்கள் கேட்க அவள் அந்த வகையில் மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கி அவைகளையும் தனது நிரவல்களில் சேர்த்துக் கொண்டாள்.//
தமிழிசைப்
பாடல்களை அவளிடம் நேயர் விருப்பமாகக் கேட்கத் தெரிந்தவனுக்கு, "வீணையடி நீ எனக்கு"
என்று காதலித்தவனுக்கு "மேவும் விரல் நானுனக்கு" என்று அவளை மீட்டாமல், அவள் மேன்மேலும்
தன் திறமையை மெருகேற்ற மட்டுமே காரணமாக இருக்கிறான்.
அவளுக்கு,
அவன் தன்னை மீட்டவில்லையே என்ற குறை இருந்து கொண்டிருக்க, மூன்றாவது வருடத்தில்தான்
அவள் ஒரு ஸ்டேஜில் மனம் திறந்து சொல்கிறாள்.
கதையை
இக்காலகட்டத்திற்கு - அதாவது சமீப காலங்களுக்குப் பொருத்திப் பார்த்தால், அவள் அதற்கு
முன் ஏன் கேட்கவில்லை, எவ்வளவுதான் கச்சேரிகளில் பிசியாக இருந்திருந்தாலும் தனிமையில்
அவன் அவளிடம் வாசிக்கக் கேட்கும் போதும் கூட ஏன் அவள் கேட்கவில்லை, ஒரு வருடத்திலேயே
அவளுக்கு மனம் திறந்து சொல்ல ஏன் தோன்றாமல் போனது அவனை ஏன் தெரிந்து கொள்ள முடியாமல்
போனது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அவள்
மூன்றாவது வருடத்தில் கேட்கும் போது அதற்கு அவன், அவளை சரஸ்வதி தேவியாகவே பார்ப்பதாகவும், தன் காதல் புனிதமானது தெய்வீகக் காதல்,
தான் அதை முன்னரே சொல்லாமல் போனது தவறு என்று "நீங்கள்" என்று மரியாதையுடன் சொல்லும் போது அவளுக்கு அதிர்ச்சியாக
இருக்கிறது.
அதற்கு
முன்னும் அவன் அவளை 'நீங்கள்' என்று மரியாதையுடன் பேசியிருந்தால் (பொதுவாக நம் சமூகத்தில்
இல்லாத ஒன்றாயிற்றே அதனால்!) ஏன் சுமாவுக்கு
அப்போது தோன்றாமல் போனது என்பதும் கேள்வியாக மனதில் எழுகிறது. ஆனால், அதற்கு முன்னும் அவன் அப்படித்தான்
பேசுவானா என்பதற்கான உரையாடல்கள், சம்பவங்கள் கதையில் இல்லாததால் யோசிக்க வைக்கிறது.
ரங்கன்
கதாபாத்திரம் பற்றி விவரங்கள் இன்னும் சற்று கூடுதலாக ஆசிரியர் சொல்லியிருக்கலாமோ?
Flash Back பகுதியின் முதலில் உரையாடல்கள் சம்பவங்கள் என்று சொல்லியிருக்கலாமோ என்றும் இன்னும்
அந்தக் கதாபாத்திரம் அழுத்தம் பெற்றிருக்கும் என்ற எண்ணமும் எழுந்தது. கூடவே சுமாவின் கதாபாத்திரமும் இன்னும் அழுத்தம் பெற்றிருக்கும்.
முடிவும்
கொஞ்சம் ட்ரமாட்டிக்காக இருப்பது போல் தோன்றுகிறது..
அக்காலகட்டத்துப்
பெண்கள்தான் பயப்படுவார்கள், தயங்குவார்கள் தங்களுக்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டு
மருகுவார்கள்.
இப்போதைய
காலகட்டத்திற்குப் பொருத்திப் பார்த்தால் கண்டிப்பாக முதல் 3 மாதங்களுக்குள்ளாகவே பிரிதலுக்குச்
சென்றிருக்கக் கூடும் அல்லது அட்லீஸ்ட் ஃபேமிலி கவுன்சலிங்க் என்று வந்திருக்கக் கூடும் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. (குழந்தை பெற்றுக் கொள்ளுதல் பற்றிய சிந்தனைக்கும்
அப்பாற்பட்டு)
ஆசிரியர்
கதையை ஒரு specific, complex narrative ஆகக் கொண்டு சென்றிருக்கிறாரோ என்று பட்டது. Platonic காதல்? அது அவனுக்கு. ஆனால், சுமாவிற்கு
அவன் கணவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே க்ளைமாக்ஸிற்கு முன் வரை.
ரங்கனின் பதிலை ஏற்க முடியாமல் தன் சோகத்திலிருந்து
வெளிவர தன் அறைக்குச் சென்று வீணை வாசிக்க முற்படும் போது அவள், அவனது பதிலை யோசிக்கையில்,
ரங்கன் எனும் பக்தனால்தான், தன் திறமை இன்னும் மெருகேறி தனக்கு நிகர் யாருமில்லை
என்ற இடத்திற்கு வந்திருக்கிறோம் என்பது அளுக்குப் புரிகிறது. ஆனாலும், அவளால் அவன்
பதிலை ஏற்க முடியாமல் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா"
என்று அவள் வாசிக்க வாசிக்க, அந்த இசை அவனை எங்கேயோ கொண்டு செல்கிறது. என்னவோ செய்கிறது.
"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில்
எறிவதுண்டோ" என்ற பாரதியின் பாடலில்" "சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ?" என்ற வரி நினைவுக்கு வந்தது.
தன்னால் சுமாவுக்கு
அவள் எதிர்பார்ப்பதைக் கொடுக்கமுடியாமல் ஓர் சுமையாக ஆகிவிட்டோமோ என்ற எண்ணம் ரங்கனுக்குள் வந்திருக்குமோ? "அப்படிச் செயல்படக் கூடிய மனம் கேட்கிறேன். அதற்கு உயிரும்
உடலும் வேண்டும்" என்றும் அவன் மனம் இரைஞ்சியிருக்குமோ? அதனால்தான் அவளின் வாசிப்பு
அவனை என்னவோ செய்து, மூச்சை வெளியே தள்ளுகிறதோ? - இது என் யூகங்கள். தான் சுமாவிடம் இப்பொழுதேனும் அவள்
எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று 'யாழெடுத்து மீட்க' முனைகையில் கடைசி மூச்சாகிவிடுகிறது.
முடிவில் அவன் சுமாவிடம் வாங்கும் சத்தியத்தை அவள் காப்பாற்றுவது போலேனும் முடித்திருக்கலாமோ என்று மனம் விரும்புவதை தவிர்க்க முடியவில்லை.
ஒரு சில லாஜிக்கல் கேள்விகள், கொஞ்சம் ட்ரமாட்டிக்கான
முடிவு இவற்றைத் தவிர்த்து, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் முழுவதுமாக,
அக்காலகட்டத்துக்கான கதையை வாசித்த உணர்வைத் தந்தது.
(இக்கதையில் சங்கீதம் பற்றி வருவதால், பானுக்காவும், நானும் சேர்ந்து, யார் எழுதுகிறார்கள் என்று சொல்லாமல், சஸ்பென்சாக எழுதிய கதை எபியில் தொடர்கதையாக வந்தது நினைவுக்கு வந்தது)
https://engalblog.blogspot.com/2019/03/blog-post_28.html




சந்தீப் சக்ரவர்த்தி போன்ற அதிகாராகள், இராணுவ வீர்ர்கள், நன்கு செயல்படும் போலிஸ் படை போன்றவை இல்லையென்றால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தலை யார் சமாளிக்க முடியும்? அவர்களின் உழைப்பால்தான் சமூகம் ஓரளவாவது நிம்மதியாக இருக்கமுடிகிறது.
பதிலளிநீக்குவெறும்ன சட்டம், நீதி, வழிமுறைகள், சிறை போன்றவற்றை இத்தகைய பயங்கரவாதகளிடம் செலுத்துவதற்குப் பதில் அவர்களது வீடுகளைத் தரைமட்டமாக்குவது, சொத்துப் பறிமுதல், நெருங்கிய உறவினர்களை வளையத்துக்குள் கொண்டுவரும் யோகிஜியின் பாணிதான் சரிப்படும்.
சந்தீப் போன்றவர்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள்.
கீதா ஆர் - யார்? கதையை சாவகாசமாகப் படித்துவிட்டு எழுதுகிறேன்.
பதிலளிநீக்குபொறுப்பு தலைமை ஆசிரியரின் செயலைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும். அரசாங்கம் செய்யாது. காரணம் ஐம்பது சதப் பள்ளிகளுக்கு மேல் இதுதான் நிலைமை. முக்கியஸ்தர்களுடன் தொடர்பு இருந்து அவர்களுக்கும் ஏதேனும் செய்து பெயர் வாங்கவேண்டும் எனத் தோன்றினால் (மா.சு போல) அவர்கள் சொந்தச் செலவில் நடக்குமே தவிர அரசாங்கச் செலவில் அல்ல.
பதிலளிநீக்குதன் சொந்தப் பணத்தைக் கொடுக்க எத்தகைய மனம் அந்த ஆசிரியைக்கு இருக்க வேண்டும். இதற்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கணும்.