25.6.26

இவ்வளவு சிசுரூஷைக்கு பழகக் கூடாதே...!

 

எக்ஸ் ரே அறை வாசலில் நின்றபோது - இல்லை படுத்திருந்தபோது அந்தப் பெண் மறுபடி புன்னகையுடன் தோன்றினார்.  அருகே வந்தார்.  தலையை வருடி"நல்லா இருக்கீங்களா?" என்றார்.  யாரென்று தெரியாமலேயே "உம் " என்றேன்.  கையை அமுக்கி விட்டு சென்று விட்டார்.  

கவுனுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கிறேன்.  என்ன நல்லா இருக்கீங்களா வேண்டி கிடக்கிறது?

அவர் சென்றதும் பாஸ் அருகில் வந்தார்.  "யாருங்க அது?"

"யாருக்குத் தெரியும்?  லிஃப்டிலிருந்தே சிரிக்கறாங்க"

"அதானே..  யாராயிருந்தா உங்களுக்கென்ன..  தலையை தடவிட்டாங்க இல்லே?"  பாஸ் விரோதத்துடன் நகர்ந்து நின்று கொண்டது என்னை பாதிக்கவில்லை.  என் கவலை அறைக்குள் சென்றதும் எழுந்து நிற்பதில் இருந்தது.

உள்ளே சென்றதும் நல்லவேளை இருட்டு.   எழுந்து எப்படி சொல்கிறாரோ அப்படி போஸ் கொடுத்து எடுத்து முடித்துக் கொண்டு மறுபடி  வெளியே வந்து வராண்டாவில் பயணித்தபோது அந்தப்பெண் மறுபடி எதிர்ப்பட - இந்த முறை மஃப்டியில் இருந்தார்..  டியூட்டி முடிந்து விட்டது போலும் -  எதிர்ப்பட்டு புன்னகை+தலையசைப்புடன் கடந்து போனார்.  

"யார்மா நீ?"  யோசனையுடன் பயணத்தில் அறைக்குள் கொண்டு வரப்பட்டேன்.  உடனடியாக என் வழக்கமான ட்ரெஸ்ஸுக்கு மாறி விட்டேன்.

வந்து பார்த்த நர்ஸும் "சரி விடுங்க..  டெஸ்ட் கிஸ்ட்டுன்னு போகும்போது பார்த்துக்கலாம்" என்று சொல்லிப் போனார்.  என்னுடைய இந்த ஒத்துழையாமை இயக்கம் இரவுப்பணி நர்ஸுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.  ஆனால் அவர் அன்பாக அனுசரணையாக இருந்தார்.

சாப்பாடு வேண்டுமென்றால் அங்கேயே ஐந்தாவது மாடியில் ஒரு பிராஞ்சும், கேழே கேஷுவாலிட்டி எதிரே பெரிய உணவகமுமாக இலை கேட்டரிங் காரர்கள் கடை வைத்திருக்கரியார்கள்.  காஃபி ருசி பழுதில்லாமல் இருந்தது.

இதைத்தவிர ஒரு அலைபேசி எண் கொடுத்தார்கள்.  அதில் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து விட்டால் நமக்கான உணவு நம் அறைக்கு வந்து விடுகிறது.  கடைசியில் பில் செட்டில் செய்யும்போது கொடுத்துக் கொள்ளலாம்.

நான் போட்டிருந்தது பத்து லட்சத்துக்கான பாலிஸி என்பதால் தங்கும் அறை பெரிதாகவும் வசதியுடனும் இருந்தது.  ஒருவர்தான் கூட இருக்கலாம் என்றாலும், வாசலில் உள்ளே நுழையும் இடத்தில் ஏமாற்றிவிட்டு வந்து விட்டால் அறைக்குள் வந்து கேள்வி கேட்பார் யாருமில்லை.

மாத்திரை பற்றி சொன்னேன் இல்லையா?

இரவு மாத்திரைகளை அங்கிருந்து கொண்டுவந்து என் அறையில் வைத்து, ஒவ்வொன்றாக எடுத்து பேப்பரைப் பார்த்து சோதித்து கொண்டு வந்து கைகளில் தந்து  டம்ளரில் நீரையும் நீட்டினார்.

மாத்திரைகளை வாங்கி கொண்டு டம்ளர் நீரைப் புறக்கணித்தேன்.

நர்ஸ் சிறியதாக சலனம் அடைந்தார்.  மறுபடியும் ஏதோ வம்பு பண்ணப்போகிறேனோ என்பது போல என்னை குறுகுறுவென பார்க்க, 

பாஸிடம் "அந்த மில்டனைக் கொடு" என்றேன். 

"ஏன்?" என்றார் நர்ஸ்.  

"அட..  நான் 2020 ஏப்ரல் மாசத்துலேருந்து பச்சை தண்ணியே குடிக்கறதில்லம்மா..  வெந்நீர்தான்" என்றதும் "ஓகே ஓகே நானே தர்றேன்" என்று பாஸிடமிருந்து மில்டனை வாங்கி அதிலிருந்து வெந்நீரை டம்ளரில் சரித்து என்னிடம் நீட்டினார்!  

இதுவும் ஒரு மாதிரி நன்றாகத்தான் இருக்கு!  ஆனால் பழகிட்டா பாஸ் இப்படி எல்லாம் எடுத்துக் கொடுக்க மாட்டாரே...!  இவ்வளவு சிசுரூஷைக்கு பழகக் கூடாதே...!

ஆனால் மறுநாள் காலைமுதல் அவர்கள் செய்தது மிக அநியாயம்.  காலை பணிக்கு வந்த நர்ஸ் உள்ளே வந்து மாத்திரைகள் பெட்டியை எடுத்தார்.  மாத்திரைகளை டேபிளில் கொட்டி ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி எண்ணி வைத்து, பேப்பரில் சரிபார்த்து டிக் செய்தார். "நான் இன்னும் சாப்பிடவில்லை" என்றேன் மாத்திரை கொடுக்கப் போகிறாரோ என்று நினைத்து.

தலையாட்டி விட்டு தன் பணியைத் தொடர்ந்தார்.  அப்போதுதான் புரிந்தது  முதல் நாள் வைத்த மாத்திரைகள் அதே அளவில் குறையாமல் இருக்கிறதா என்று சோதிக்கிறார் என்று.  அவர்களுக்குத் தெரியாமல் நான் எடுத்து சாப்பிட்டு விடக் கூடாதாம்!

"சிஸ்டர்..  இது ரொம்ப ஓவரா இல்ல?  அப்படி நான் தப்பா சாப்பிடுவேனா?  என் உடம்பு மேல எனக்கு அக்கறை இருக்காதா?"

"ஸாரி ஸார்..   ரூல்ஸ்"

"என்ன ரூல்ஸோ.." எரிச்சலுடன் திரும்பிக் கொள்வதைத்தவிர வேறு வழி...


==========================================================================================

வெங்கட் தளத்தில் சமீபத்தில் எழுதிய வசனகவிதை ஒன்று..

படிப்பாரின்றி பரிதாபமாகக் 
காத்திருக்கின்றன 
நூலகத்தில் நூல்கள்.
தேற்றுவாரின்றி விசும்புகின்றன 
யாரும் பார்க்காதபோது!


- வாட்சாப் என்பார் ரீல்ஸ் என்பார் - அந்நாளின் 
புத்தகங்களின் சுவை அறியார்.

- எதையெதை எப்படியெப்படி உபயோகிக்க வேண்டுமோ - அதையதை
 அப்படியப்படி மட்டுமே உபயோகித்தல் நலம்.

============================================================================================

பவித்ரன், சரத்குமார் இணையில் வசந்தகால பறவை, சூரியன் ஆகிய இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு மறுபடி அவர்களையே போட்டு இன்னொரு படம் எடுக்க KT குஞ்சுமோன் விரும்பினாலும், அவர்கள் வெவ்வேறு படங்களுக்கு ஒப்பந்தமாகி, டேட் கிடைக்காமலிருக்க, ஸ்டில்ஸ் ரவியின் யோசனையின் பேரில் இதே படங்களில் துணை இயக்குனராக இருந்த ஷங்கரை இயக்குனராக வைக்கலாம் என்கிற யோசனையை குஞ்சுமோன் ஏற்க, இப்படியாகத்தானே ஷங்கருக்கு திரையுலகில் முதல் படம் கிடைத்தது!  

ஷங்கர் இந்தப் படத்தில் கமலை நடிக்க வைக்க விரும்ப, அவர் தான் ஏற்கனவே இதுபோல ஒரு படம் பண்ணியிருப்பதாகச் சொல்லி வாய்ப்பை மறுக்க, ஏற்கனவே தோல்விப்படங்களால் துவண்டு, சேவகன் என்கிற ஒரு படத்தை அவரே டைரக்ட் செய்து வெற்றி அடைந்திருந்த அர்ஜுனை அணுகி சம்மதம் பெற்றார் ஷங்கர்.  

ஜென்டில்மேன் உருவானது.  இதற்கு இசை அமைத்திருந்த ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்தில் மூன்று பாடல்களை தர்மவதி ராகத்தில் போட்டிருந்தார்.   ஒரே படத்தில் ஒரே ராகத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பாடல்கள்!  இன்று நான் பகிரும் பாடல்கொஞ்சம் நீலாம்பரி வாசனை அடிக்கும்!

என் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் என்
வீட்டு தென்னங்கீற்றை இப்போதே
கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே

 வாய்பாட்டு பாடும்
பெண்ணே மெளனங்கள்
கூடாது வாய் பூட்டு சத்தம்
எல்லாம் பெண்ணுக்கு ஆகாது

 வண்டெல்லாம்
சத்தம் போட்டால்
பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம்
போட்டால் வண்டுகே
கேட்காது

 ஆடிக்கு பின்னாலே
காவேரி தாங்காது
 
ஆளான பின்னாலே
அல்லி பூ மூடாது ஆசை துடிக்கின்றதோ

 

சொல்லுக்கும்
தெரியாமல் சொல்லத்தான்
வந்தேனே சொல்லுக்குள்
அர்த்தம் போல சொல்லாமல்
நின்றேனே: சொல்லுக்கும்
அர்த்ததுக்கும் தூரங்கள்
கிடையாது சொல்லாத
காதல் எல்லாம் சொர்க்கத்தில்
சேராது

 எண்ணிக்கை
தீர்ந்தாலும் முத்தங்கள்
தீராது எண்ணிக்கை
பார்த்தாலே முத்தங்கள்
ஆகாது ம்ம் அனுபவமோ

என் வீட்டு
தோட்டத்தில் பூவெல்லாம்
கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல்
கம்பி எல்லாமே கேட்டுபார் என்
வீட்டு தென்னங்கீற்றை இப்போதே
கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே

 

 


====================================================================================

ஒரு முன்னுரை!  புத்தகப்பித்தன்.

இளமை வந்தது


கணையாழியின் கடைசிப் பக்கங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட எண்ணி அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.

ஆரம்ப இதழிலிருந்து எல்லாவற்றையும் ஒழுங்காகத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று ஒரு பேராசை. பல நண்பர்கள் எனக்கு எல்லாம் கொடுத்து உதவுவதாக வாக்களித்தார்கள். கிட்ட நெருங்கும்போது ஏதேதோ காரணங்களைச் சொல்லிக் கொடுக்கவில்லை, என் கைவச மிருந்த கட்டுரைகளைக் கிடைத்த வரை வரிசைப்படுத்தி அதை வெளியிட்டேன்.

அதன் பிறகு இந்த அருமையான பத்திரிகையை நடத்தி வந்த திரு. கஸ்தூரிரங்கன் அவர்கள் டில்லியி லிருந்து சென்னைக்கே வந்துவிட்ட விவரம் அறிந்தேன். எப்படியும் அவரைச் சந்தித்துவிடுவது என்ற ஆவலில் ஒரு நாள் சுஜாதாவுடன் பெல்ஸ் சாலையில் உள்ள கணையாழி அலுவலகம் சென்றோம்.

பழைய சுட்டிடம், உள்ளே ஒரு அச்சுயந்திரம் ஓடும் ஓசை. ஒரு அறையில் நாலைந்து நாற்காலிகள். ஒரு மேஜை எதிரில் சுழலும் நாற்காலியில் சிரித்த முகத்துடன் துள்ளும் இளமை மிடுக்குடன் வீற்றிருக்கும் கஸ்தூரிரங்க னிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். எனக்கு அவரைச் சந்தித்ததில் கொள்ளை இன்பம். மணிக்கொடிக்குப்பிறகு இலக்கியமறு மலர்ச்சிக்குப் புதிய படைப்பாளிகளை உருவாக்கிவரும் ஒரு லட்சியவாதியை எப்படி வர்ணிப்பேன். நான் பதிப்பாளன் மட்டுமல்ல. எழுத்தாளனும்கூட. மாக்ஸிம்கார்க்கி முதன் முதலில் லெனினைச் சந்தித்த போதுஅவரை வர்ணிக்கத் துவங்குகிறார். 'ஸாக்ரட்டிஸினுடையது போன்ற தம் நெற்றியைத் துடைத்துக் கொண்டே அடித்தொண்டையில் அழுத்தமாக உச்சரித்துக் கொண்டே பேசினார் லெனின்' என்கிறார். நான் கஸ்தூரிரங்கனை உதயசங்கரைப்போல் நாட்டிய உடல் அமைப்பு கொண்ட வடிவழகர் என்று வர்ணிக்கிறேன். கலை எழில் ததும்பும் முகத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருடைய புத்திக்கூர்மை பளிச்சிடுகிறது. "இவ்வளவு புதுக்கவிதைகளை உங்கள் பத்திரிகையில் போடுகிறீர்களே அதற்கு வரவேற்பு எப்படி?' என்று கேட்கிறேன் . கையில் அச்சாகிக் கொண்டிருந்த கணை யாழியின் இதழ்களைப் புரட்டி ஒரு புதுக் கவிதையைப் படிக்கிறார் ஆஹாஹா! என்ன அழகு என்ன கருத்து! அவர் படிக்கும் விதத்திலே நம் இதயத்தை ஈர்க்கும் இன்பம் சொல்லித் தெரியாது! அந்தக் காலத்தில்கம்பன் கவிதைக்கு விளக்கம் சொல்லி சபையோரை மகிழ்வித்த ரசிகமணி டி. கே. சியின் நினைவு எனக்கு வருகிறது.  அன்று மரபுக் கவிதைக்கு டி.கே.சி சி. இன்று புதுக்கவிதைக்கு க.க. ரங்கன்.

கோப்பையில் டீ வருகிறது. நாங்கள் எல்லாம் (இன்னும்இரண்டு இளம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்) ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறோம். கணையாழியின் ஆரம்ப இதழ்களைக் கேட்கிறேன். பைண்டுவால்யூம்' களை அள்ளித்தந்தார். தூக்கிக்கொண்டு வெளியே வருகிறேன் சேப்பாக் ஸ்டேடியத்திலிருந்து மெல்லிய காற்று வந்து என்னைத் தழுவுகிறது. நான் புது மனிதனாக மாறும் உணர்வு பெறுகிறேன். நிலாகாயுது நேரம் நல்ல நேரம் என்று என் உதடு முணுமுணுக்கிறது. இரத்த ஓட்டத்தி ஒரு தனி வேகம். நான் என்ன திடீரென்று இருபத்திஐந்து  வயது குறைந்த இளையராஜாவாகி விட்டதை உணர் கிறேன். என்னைத் தொட்டுப் பார்க்கிறேன். உடல் வழுவழுப்பு குறையவில்லை. இளமை துள்ளாட்டம் போடுகிறது. இந்தக் கஸ்தூரிரங்கன் பலே பேர்வழி! சுஜாதாவிடம் 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி? என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு எனக்குக் கொடுத்த டீயில் அந்த ரசாயன சேர்க்கையை அளவோடு சேர்த்து விட்டார். மீண்டும் வாலிபம் வந்து விட்டது. முதுமையே போ போ இளமையே வா வா என்று இதயம் பாடுகிறது. புதுப்புது திட்டங்களைத் தீட்டுகிறது என் மனசு. இதோ உங்களுக்கு பாரதி முதல் சுஜாதா வரை' என்ற புதுக் கவிதைகளை விரைவில் தரப் போகிறேன்.இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாங்கள் செய்யப் போகும் செயல் திட்டங்களைக் கண்டு உலகமே பிரமிக்கப் போகிறது. க. க. ரங்கன் தினமணிக்கதிர் பொறுப்பாசிரியராகி சுஜாதாவின் பஞ்ச பூதக் கதைகளை வெளியிட்டுப் பல லட்சக்கணக்கான வாசகர்களைபடிக்கச் செய்துள்ளார். வெறும் சோற்றுக்கே போராடி வாழும் தமிழர் நெஞ்சில் வீரவாஞ்சியின் வரலாற்றை வெளியிட்டு தேசபக்தக் கனலை நெஞ்சில் கொழுந்துவிட்டு எரியச் செய்துவிட்டார். இன்னும் திட்டம் பலஉண்டு. இப்போது இது போதும்.

ஏதோ வாசகர்கள் டிசம்பர் மாத மழைக்கால குளிரில் நான் உளறுவதாக எண்ண வேண்டாம். சுஜாதாவின் "கம்ப்யூட்டரே கதை சொல்லு' என்ற புத்தகத்தில் 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?' என்ற கதையை நீங்கள் படித்தால் நான் எழுதியதின் உண்மை விளங்கும்.

-புத்தகப்பித்தன் - 1983

==========================================================================================

2014 ல் இதை நான் படித்த நாள் இன்று வரை முதல் எங்காகில் வீட்டில் இரவு வு சமையல் முடித்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் இருந்ததில்லை.
உபயோகமாக இருக்குமே என்று மறுபடியும் பகிர்கிறேன்.

***************************************

'காஸ் சிலிண்டர்' எப்போது வெடிக்கும்!

ஒரு காஸ் சிலிண்டர் எப்போது வெடிக்கும்;

காஸ் கசிவு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என, கூறும் அனைந்திந்திய பாரத் காஸ் வினியோகஸ்தர்கள் சங்க துணை தலைவர், சாமிவேலு:
''காஸ் சிலிண்டர்' எனும் சமையல் எரிவாயு உருளைக்குள் அடைக்கப்பட்டிருக்கும், 'புரோப்பேன், பூட்டேன்' ஆகியவை, திரவ வடிவில் தான் இருக்கும்.
ஆனால், அது அடுப்புக்கு, வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து, 'காஸ் லீக்' ஆகும் போது, அதை எளிதில் உணர, 'எத்தில் மெர்கேப்டன்' என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டு இருக்கும். இந்த ரசாயனம் தான், 'காஸ் லீக்' ஆவதை, வாசனை மூலம் எச்சரிக்கை செய்யும்.
எனவே, இவ்வாசனையை உணர்ந்ததும், உடனடியாக உஷாராகி செயல்பட வேண்டும். இல்லையென்றால், சிலிண்டரில் இருந்து வெளிவரும் திரவம், காற்றை விட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும்.அப்படி கீழே தங்கியிருக்கும் காஸ் மீது, சிறிய தீப்பொறி பட்டாலும், பெரிய அளவில் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும்.
இப்படி, சிலிண்டரை சுற்றி தீ தொடர்ந்து எரிவதால், சிலிண்டரின் உட்புறம் உள்ள திரவநிலை எரிவாயு, அதிக அழுத்தம் அடைந்து, சிலிண்டரின், 'டெஸ்ட் பிரஷர்' எனும், அதிக பட்ச அழுத்தத்தை அடைந்து வெடிக்கிறது.காஸ் கசிவு ஏற்பட்டவுடன், தீ விபத்தை தடுக்க, சிலிண்டரின் மீதுள்ள, 'ரெகுலேட்டரை' கழற்றி விட்டு, சிலிண்டரின் மேல் பகுதியில் சிறு கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் வெள்ளை நிற பிளாஸ்டிக் மூடியை, சிலிண்டரின் வால்வின் மீது பொருத்தி, விபத்தை தடுக்கலாம்.
பெரும்பாலான வீடுகளில் இரவு சமையல் முடித்து ரெகுலேட்டரை, 'ஆப்' செய்யாமல் துாங்கி விடுவதால் தான், 70 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. நைந்த, 'ரப்பர் டியூப்' பயன்படுத்துவதும் மற்றொரு காரணம்.
எனவே, தரம் குறைந்த பச்சை நிற ரப்பர் டியூப் பொருத்தியிருந்தால், ஆரஞ்சு நிற ரப்பர் டியூபை, வினியோகிப்பாளரிடம் பெற்று, அவர்களின் மெக்கானிக்கால் சரியானபடி பொருத்தித் தரச் சொல்லுங்கள்.ஒன்றுக்கு மேற்பட்ட அடுப்புகளை உபயோகிக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகளை எரிவாயு வினியோகிப்பாளரிடம் சரியாகக் கேட்டு செயல்படலாம்.
மேலும், 'காஸ் சேவர் மேக்னட்' போன்ற, அங்கீகாரம் இல்லாத எந்த உபகரணத்தையும், சிலிண்டரில் மாட்டி வைக்க கூடாது. காஸ் அடுப்பை தினமும் சுத்தம் செய்யாமல், எப்போதாவது கழற்றி, ஊற வைத்து சுத்தம் செய்வது நல்லதல்ல; தினமும் வேலை முடிந்ததும், அடுப்பை துடைப்பது தான் நல்லது.

- தினமலர் சொல்கிறார்கள்' 2014

===============================================================================
இது மாதிரி வசதி நம்மூரில் எப்போதாவது வருமோ... வந்தால் நம்மூரில் சிலர் இந்த வண்டியையே தூக்கிக் கொண்டு ஓடினாலும் ஓடிவிடுவார்கள்!

==========================================================================================

ஒரு பழைய சினிமா விமர்சனம்..  அப்போது வந்ததுதான்...!

பட்டணத்தில் பூதம்
காதலரைப் பிரிப்பதும். கடைசியில் அவர்களை ஒன்று சேர்ப்பதும் மூவாயிரம் வருடங்கள் ஒரு ஜாடியில் அடைபட்டுக் கிடந்த பூதத்தின் முக்கிய வேலை.அதுவே நமக்கு முழுநேரப் பொழுது போக்கு.

ஆகா! எத்தனை விதமான தந்திரக் காட்சிகள்! எத்தனை அழகான வண்ணக் காட்சிகள். பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! 

பத்திரிகை விளம்பரத்திலிருக்கும் சிவாஜியும் எம். ஜி. ஆரும் பாடுகிறார்களே!

படத்தில் இருக்கும் கார் ஒன்று உயிர் பெற்று, பெரிதாகி, போர்டிகோவில் வந்து நிற்கிறது. ஹெலிகாப்டர், படகைத் துரத்துகிறது. அந்த ஹெலிகாப்டரை எதிர்த்து கார் ஒன்று வானத்தில் பறந்து செல்கிறது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்! துப்பாக்கிச் சண்டை ஆவி சுக்கும் பயங்கர டார்ச், மின்சாரக் கதவு... இங்கிலீஷ் சினிமா கெட்டுது போங்கள்!
நாகேஷ் அந்த ஜாடியைக் கையில் வைத்துக் கொண்டு. விருந்து சாப்பிட முடியாமல் இண்டாடும்போது வயிறு வலிக்கச் சிரிக்கிறோம். முதலில் காதல் மன்னனாக இருக்கும் ஜெய்சங்கர், பின்னால் புரட்சி நடிகராக மாறுகிறார்.

நீச்சல் உடையில் இருக்கும் கே. ஆர். விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படி யிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! வில்லன் பாலாஜி தோள்பட்டையை குலுக்கும் 'ஸ்டை'லுக்கு, கை குலுக்கி, "சபாஷ்' சொல்ல வேண்டும்.
முன்பு ஆங்கிலத்தில் பேசிய பூதத்தை இப்போது தமிழில் பேச வைத்திருப்பவர் ஜாவர் சீதாராமன். பூதமாக வரும் அவருடைய நடிப்பு அற்பூதம்! பூநத்தின் சாதனை, ஒளிப்பதிவாளரின் வெற்றி! ஜெய் ரவீகாந்த்நிகாய்ச்!

======================================================================================

ஏற்கனவே எப்படியும் பார்த்திருப்பீர்கள்தான்...  இருந்தாலும்..












137 கருத்துகள்:

  1. கொத்துச்சாவி நகைச்சுவைதான் சட் எனப் படிக்க முடிந்தது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..   அதற்கு கீழே இருக்கும் ஜோக்ஸை படிக்க முடிந்ததா?

      நீக்கு
    2. எதுவுமே படிக்க முடியலை. பிற்பாடு பார்க்கணும். ஆனால் யூகித்துக் கொண்டேன். இது ஞாயிற்றுக்கிழமை பற்றிய ஜோக், இது கொத்துச்சாவி ஜோக், இது கண் மருத்துவ ஜோக், , முதுகு வலி ஜோக், சறுக்கு மர ஜோக் எல்லாமுமே புரிஞ்சது. படிக்கிறதெல்லாம் முடியலை. :(

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா... ஆமாம்.. ஒன்று இரண்டு படிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

      நீக்கு
  2. ஆஸ்பத்திரி அனுபவம் ரசனையா எழுதியிருக்கீங்கன்னு சொல்லக்கூடாதோ?

    எனக்கும் தோன்றும், ஆஸ்பத்திரி, ஹோட்டல் ரிசப்ஷன், விமான நிலையம் இவற்றில் பணிபுரிய அழகு முக்கியத் தேவையோ என. இந்த நினைப்பை உடைத்தது பழைய ஏர் இந்தியா என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனை என்று தாராளமாகச் சொல்லலாம்.  நான் என் அனுபவங்களை சுவாரஸ்யமாக படிக்கத்தான் கொடுக்கிறேன்.  என் கஷ்டங்களை சொல்ல அல்ல!  நகைச்சுவையாக சொல்ல முயன்று கொண்டிருக்கிறேன்!

      இங்கிருந்த செவிலியர்களும் அப்படி ஒன்றும் அழகில்லை!

      நீக்கு
    2. செவிலியர் அழகெல்லாம் இப்போப் பார்க்க முடியாது. பலரும் சுமாராகத் தான் இருக்காங்க. வேலையிலே சரியா இருக்கணும் என்பது தானே முக்கியம்.

      நீக்கு
    3. அது முக்கியம் தான். ஆனாலும்............ கொஞ்சம் பார்ப்பதற்கு சுமாராக இருக்கலாமே என்று ஒரு அல்ப ஆசை.

      நீக்கு
    4. //பலரும் சுமாராகத் தான் இருக்காங்க.// ஏதோ... பெண்கள், இன்னொரு பெண்ணை அழகுன்னு ஒத்துக்கிடுவாங்க மாதிரி... பெண்கள் அழகா என்று சொல்ல, ஆண்களுக்குத்தான் தகுதி உண்டு. என்ன சொல்றீங்க கீதா சாம்பசிவம் மேடம்? (வாயைக் கொடுத்து... எதுக்கு இந்த வம்பு உனக்கு என்று மனம் கேட்குது)

      நீக்கு
    5. @Nellai! நம்ம மு.மு. கொள்ளை அழகுனு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதே போல் பின்னர் வந்த நதியாவும் தேவயானியும். அமைதியான ஆர்ப்பாட்டமே இல்லாத அழகு. முக்கியமாய் அந்த க்ரேஸ்!

      நீக்கு
    6. ஹலோக்கா ..  அனுஷ் விட்டுட்டீங்களே...

      நீக்கு
  3. மனைவியிடம் நான் சொல்வது, நான் வழக்கமாகச் செய்யும் வேலைகளை நீ எடுத்துக்கொள்ளாதே. அதற்கு நான் பழகிவிட்டால் அது உன் வேலையாகிவிடும் என்று. என் உடைகளைத்்தோய்ப்பது, காயப்போட்டு எடுத்து வைப்பது என் இடங்களை சுத்தப்படுத்துவது , போன்ற பல வேலைகளை யார் செய்யவும் விட மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படிதான். முடிந்தவரை!

      நீக்கு
    2. காய்கறி கட் பண்ணித் தரலாம், அடுத்தநாள் உணவு என்ன என்பது முன்பே தெரிந்துவிடும் எனச் சொன்னால் அன்னன்னைக்குத்தான் கட் பண்ணணும் எனச் சொல்கிறாள். எனக்கு பதினோரு மணி வரை நேரம் கிடையாது, பேசவும் மாட்டேன்.

      நீக்கு
    3. அன்றன்றைக்கு கட் செய்வதே சிறந்தது.  இன்னும் சொல்லப்போனால் நான் சமைக்கும்போது முன்னதாக நறுக்க மாட்டேன்.  அடுப்பில் வைக்கும் நேரம்தான் நறுக்குவேன். 

      ஆனால், 

      சில காரணங்களால் நான்கைந்து நாட்களுக்குமுன் வாங்கி வைத்திருந்த காய்கறிகளை எல்லாம் நறுக்கி காற்று புகா டப்பாவில் டப்பர்வேரில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து விட்டேன்!

      நீக்கு
    4. நம் வீட்டிலும் முன்னரே நறுக்கி வைக்கும் பழக்கம் இல்லை. அடுப்பு ஏற்றும் போது ஃப்ரெஷ்ஷாக நறுக்கி அபப்டியே போட்டுச் செய்வது வழக்கம்...

      கீதா

      நீக்கு
    5. என் மாமியாருக்கும் முன்னரே நறுக்கி வைச்சால் கோபம் வந்துடும். ஆனாலும் நான் வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரைக்காய், பீன்ஸ் போன்றவற்றை நறுக்கி வைச்சுப்பேன். காலை அவசரத்தில் நறுக்க நேஎரம் இருக்காது என்பதால். கீரை மட்டும் காலைவேளையில் வருவதால் அதை வாங்கிய உடனே நறுக்குவேன்.

      நீக்கு
    6. சில பேர் வெங்காயத்தையே முதல் நாள் நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறார்கள்! அது விஷம் ஆகிவிடும் என்று படித்திருக்கிறேன். ஆனாலும் முதல் நாளே நறுக்கி வைத்துக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் தான். எனக்கும் அவ்வப்போது நறுக்கி கொண்டால் தான் பிடிக்கும். என்ன செய்வது! சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது.

      நீக்கு
    7. வெங்காயத்தை எல்லாம் நறுக்கி வைப்பது வயிற்றுக்குக் கேடு.

      நீக்கு
    8. // வெங்காயத்தை எல்லாம் நறுக்கி வைப்பது வயிற்றுக்குக் கேடு.//

      Yessu...

      நீக்கு
  4. ஆஸ்பத்திரி விஷயமெல்லாம் மறங்க. அது மற்றவர்களுக்கு உற்சாகப்படுத்தாத விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்.. நான் என் சிரமங்களை சொல்லி உங்களை எல்லாம் மூட் அவுட் செய்ய வரவில்லை. சும்மா நகைச்சுவை. அவ்வளவுதான். கொஞ்சூண்டு விழிப்புணர்வு!

      நீக்கு
    2. எதையுமே தெரிஞ்சுக்கறதிலே தப்பில்லை. ஆஸ்பத்திரி அனுபவங்கள் எனக்கு நிறையவே இருக்கு. 81 ஆம் ஆண்டில் அம்மாவுக்கு ஆரம்பிச்சது இசபெல்லா மருத்துவமனையில். பின் தொடர்ந்து அப்பா, நாத்தனார் 2, 3 முறை, மறுபடி அம்மா, நாத்தனார், அம்மாவின் கடைசி நாட்கள், எனப் போய்ப் பின்னர் மாமியார் இரு முறை, இதுக்கு நடுவில் மாமனாரும் பல் பிடுங்கல், காது காண்பித்தல், பின்னர் 91இல் மருத்துவமனை வாசம், பின்னர் மாமியார் மறுபடி இரு முறை என நீண்டு கொண்டே போகும்.

      நீக்கு
    3. இதுக்கு நடுவே நானே பைல்ஸ் ஆபரேஷனுக்காக 81 மே மாதம் ஆஸ்பத்திரி வாசம். வீட்டுக்குப் பின்னால் இருந்த ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனையில் தான் பதினைந்து நாட்கள் இருந்தேன்.

      நீக்கு
    4. எனக்கு ஆஸ்பத்திரிய அனுபவங்கள் கம்மி. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்..... பெரும்பாலும் வீட்டிலேயே வைத்தியம். பெரிய அளவில் பார்த்துக் கொள்ள என்று கடவுள் புண்ணியத்தில் எதுவும் இல்லாமல் இருந்தது.

      நீக்கு
  5. பட்டணத்தில் பூதம் இப்போதும் பார்க்கக்கூடிய நல்ல படம். அப்போ தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் சந்தேகம் வந்திருக்கும் போலிருக்கு. கே ஆர் விஜயாவை நீச்சலுடையில் காட்டி மகிழ்ந்தனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே ஆர் விஜயா நீச்சலுடைப் பாட்டில் ஒரு வரியைச் சொல்லி அப்பாதுரை முன்னர் ஒரு கமெண்ட் போட்டிருந்தார்! 

      பட்டணத்தில் பூதம் என்று ஒரு மலையாள படமும் இருக்கிறது.  பூதமாக மம்மூட்டி!

      நீக்கு
    2. பலமுறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம் பட்டணத்தில் பூதம். மாயாபஜாரும் அப்படித் தான்.

      நீக்கு
    3. ஆமாம். கூடவே மிஸ்ஸியம்மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  6. இங்கும் இரவில் கெயில் கேஸ் ஸவிட்சை ஆஃப் செய்துவிட்டுத்தான் படுப்போம், ஆபத்தில்லை என்றபோதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் பழகி விடுகின்றன.  பாஸ் படுத்துவார்.  எல்லோரையும் ஒருமுறை gas மூடி இருக்கிறதா, வாசல் கதவு தாழிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கச்சொல்லி பதிலை வாங்குவார்.

      நீக்கு
    2. அவன் பார்த்திருப்பான் என நினைத்து ஒவ்வொருவரும் பார்த்துவிட்டேன் எல்லாம் மூடியிருக்கிறது என்று சொன்னால்?

      நீக்கு
    3. என் பெரியவன் அப்படிச் செய்ய மாட்டான்.  ரொம்ப ஸ்ட்ரிக்ட்.  சின்னவன் செய்யக்கூடும்.  எனக்கு ஒரு பயம் வரும்,.  என்னைக்கு கொஞ்சம் அஜாக்கிரதையாக இருக்கோமோ அன்னிக்கிதான் ஆபத்து வரும்னு..  எனவே நானும் உண்மையா பார்த்திடுவேன்!

      நீக்கு
  7. லைப்ரரி படத்தைப் பார்த்ததும் எனக்கு நினைவில் வந்தது மதுரை காமராஜ் யூனிவர்சிடி லைப்ரரியில் எங்களுக்குத் தேவையான புத்தகத்தை சம்பந்தமில்லாத வரிசையில் பின் பகுதியில் பதுக்குவது. உதாரணமா க்வான்டம் பிசிக்ஸ் புத்தகத்தை, தமிழ் நாவல்கள் வரிசையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பப்; பழைய உத்தி.  நாம் மட்டும் செய்வதாக நினைத்து நாம் எல்லோரும் செய்வது.  சம்பந்தமில்லா வரிசையில் இருப்பதை அவ்வப்போது நூலகர்கள் கண்டுபிடித்து அதன் இடத்துக்கு கொண்டு போவார்கள்.  அங்கு அதைப் பார்க்கும் வாசகர்களும் அதைச் செய்வார்கள்! 

      லைப்ரேரியிலிருந்து புத்தகம் அடித்திருக்கிறீர்களோ?

      நீக்கு
    2. 1985 எனக்கு இயல்பாகவே, அடுத்தவன் பொருளை நாம் வாங்கினால், இந்த ஜென்மாவோ இல்லை அடுத்த ஜென்மாவிலோ கொடுக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் உண்டு. அதனால் இல்லை.

      நீக்கு
    3. எனக்கும் அந்த எண்ணம் உண்டு என்றாலும் நான் பாரீஸுக்கு போ புத்தகத்தை நகர்த்தினேன்! ஒரு த்ரில்லுக்காக!

      நீக்கு
    4. //நான் பாரீஸுக்கு போ புத்தகத்தை நகர்த்தினேன்! ஒரு த்ரில்லுக்காக!// இப்படியெல்லாம் செய்கிறவர்களை தடுக்க "இந்தப் புத்தகம் பானுமதியின் வீட்டிலிருந்து திருடப்பட்டது' என்றும், '
      'கொடிது கொடிது இரவல் கொடிது
      அதனினும் கொடிது புத்தக இரவல்
      அதனினும் கொடிது அதனை மறத்தலே'
      என்றெல்லாம் எழுதி வைத்தேன்.
      படித்த புத்தகங்களை தாராளமாக மற்றவர்களுக்கு மனமுவந்து அளிக்கும் ஒரு தோழியைப் பார்த்து, புத்தகங்களை தானம் செய்ய கற்றுக் கொண்டேன்.

      நீக்கு
    5. என் அப்பா "புத்தகங்கள் என் சுவாசம். என் மூச்சை நிறுத்தி விடாதீர்கள்" என்று எழுதி வைத்திருந்தார். யார் மதிக்கிறார்கள்! கேட்டால் கொடுப்பதில்லை என்றால், கேட்காமல் நகர்த்தி விட வேண்டியதுதான் என்று எடுத்துக் கொண்டு போனார்கள்.

      நீக்கு
  8. என்னை கைடிலெடுத்தால்
    முன்பக்கம் பின்பக்கமென்று
    புரட்டிப் புரட்டி.. வைத்த கண்
    எடுக்காமல் உற்றுப் பார்க்கையில்
    வாய் எச்சில் தொட்டு வேறே சிலர்
    என்னத்தை சொல்ல?..
    சிலர் மடியில் வைத்தும்
    இதே காரியத்தை கர்ம சிரத்தையாய்
    அதுவும் ஒருத்தன் மாற்றி ஒருத்தன்
    இதே வேலையாய் சலிக்காமல்
    பிறர் ஸ்பரிசம் படும் பொழுதெல்லாம்
    லஜ்ஜையாக இருக்குமென்று
    தெரியாத ஜென்மங்கள்..
    எவன் கையிலும் சிக்காமல்
    மின்விசிறிக் காற்றில் சுக நித்திரை..
    பரிதாபமாய் காத்திருக்கிறோமாம்!..
    கூசாமல் சொல்ல...
    நூலகம் என்ன காமப்புரமா?
    தெரியாமல் தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று.  நானும் ஒன்று..

      பின்னாலேயே துரத்தி, 
      காத்திருந்து, 
      ஒருவழியாய் என் 
      கைக்கு கிடைத்த 
      புத்தகத்துடன் 
      ஓரம் அமர்ந்து 
      பிரிக்கும்போது 
      அருகிலேயே ஒருவன் 
      வந்தமர்ந்து 
      தோளை 
      உரசுகிறான்.

      "நீங்க படிச்சுட்டு 
      என்கிட்ட கொடுங்க"

      நீக்கு
  9. மருத்துவமனை அனுபவங்கள் ரசனை...
    எல்லாம் விதிப்படி என்றாலும்
    மருத்துவ வேதனைகள் வேண்டாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் கையிலா இருக்கிறது! உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது சென்ற வருடம் அக்டோபரில் நடந்தது!

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. ஆஸ்பத்திரி அனுபவங்கள் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.



    //கவுனுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கிறேன். என்ன நல்லா இருக்கீங்களா வேண்டி கிடக்கிறது?//


    போனமுறை கவுன் போட்டுக்க மறுத்த போது உங்களுடன் அதை கண்டிப்பாய் போட சொல்லி போராடிய செவிலியர்களில் ஒருவராக இருந்து இருப்பார் நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இப்போது கவுன் போட்டதை பார்த்து விட்டு தலையை தடவி நலம் விசாரித்து சென்று இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அட!!!!! நல்ல நினைவுடன்..அவதானிப்பு இப்படியும் இருக்கலாம்!!!

      ஸ்ரீராம் வந்து என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

      கீதா

      நீக்கு
    2. இல்லை கோமதி அக்கா. அது அவர் இல்லை. மேலும் நர்சுகள் பணி நேரம் வேறு. இவர் யாரோ நான் பார்க்காத முகம்.

      நீக்கு
  12. ஆஸ்பத்திரி அனுபவங்கள் உங்களுக்கு கடுப்பாக இருந்தாலும், எங்களுக்கு படிக்க சுவாரஸ்யம்! அப்புறம்..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றுதான் முயற்சித்து எழுதுகிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது என்று சொல்ல கேட்பது சந்தோஷம்.

      நீக்கு
  13. வசனகவிதை நன்றாக இருக்கிறது.
    பாடல் பகிர்வு, மற்றும்

    புத்தகப்பித்தன் பகிர்வு, நகைச்சுவைகள் நன்றாக இருக்கிறது.
    மருத்துவர் வாங்கிய வைர அட்டிகை அனைவருக்கும் கண் உறுத்தலை கொடுத்து இருக்கு என்றால்
    நம்பலாம்,
    மனைவி வாங்கிய வைர அட்டிகை விலையை கேட்டு மருத்துவருக்கும் அதிர்ச்சியால் நெஞ்சுவலி வராமல் அவருக்கும் கண் உறுத்தல் வந்து இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவர் என்பதால் சமாளித்துக் கொண்டு விட்டார் போலும் !!குறைந்தபட்ச பாதிப்பு!

      நீக்கு
  14. ஜெண்டில்மேன் வந்த சமயத்தில் மஸ்கட்டில் நிறைய பேர்கள் செராமிக் பூக்கள் செய்ய கற்றுக் கொண்டார்கள். அப்போது நான் முயற்சி செய்த ஒரு பாடல்
    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் செராமிக்
    என் வீட்டு ஜன்னலுக்கோ எப்போதும் முக்காடு
    என் வீட்டு தென்னங்கீற்று என்நாளும் பிளாஸ்டிக்
    என் நெஞ்சை அறியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நலலருக்கு பானுக்கா....நம்ம வீட்டிலும் இப்படி இட்டுக்கட்டுதல் உண்டு!! முன்ன

      கீதா

      நீக்கு
    2. உங்கள் சொந்தக் கவிதை ரசனை. வாங்க பானு அக்கா.

      நீக்கு
  15. //2014 ல் இதை நான் படித்த நாள் இன்று வரை முதல்// வாக்கிய அமைப்பு தவறாக உள்ளதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். பின்னர் கணினிக்கு வரும்போது சரி செய்கிறேன்.

      நீக்கு
  16. பட்டணத்தில் பூதம் ஆல் டைம் ஃபேவரிட். ஜெய்சங்கர் ரொம்ப ஸ்டைலிஷ்டாக, அழகாக இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாலியான படம். இங்க ஒரு விஷயம்...... எனக்கு கே ஆர் விஜயாவை பிடிக்காது. யார் கேட்டார்கள் என்கிறீர்களா!!

      நீக்கு
  17. நகைச்சுவை துணுக்குகளை நாளை படித்து விட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே .. நன்றி பானு அக்கா.

      நீக்கு
    2. ஜோக்குகள் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மீண்டும் படித்தேன், ரசித்தேன்.

      நீக்கு
  18. கவுனுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கிறேன். என்ன நல்லா இருக்கீங்களா வேண்டி கிடக்கிறது?//

    சிரிச்சு முடிலப்பா சாமி!

    ஓரு வேளை அவர் நினைச்சிருப்பார், ஓ அப்பரேஷன் முடிஞ்சு அதுக்கப்புறம் எடுக்கற எக்ஸ்ரேக்கு காத்திருக்கார் போலன்னு!!!

    இல்லைனா மருத்துவமனையில் இது ஒரு mandatory பயிற்சியாக இருக்கும் யாரைப் பார்த்தாலும் நோயாளிவே நினைச்சு நல்லாருக்கீங்களான்னு!!

    இல்லை மேற்கத்திய டைப்! அவங்க யாரைப் பார்த்தாலும் புன்சிரிப்போடு ஹாய் how do you do! என்பார்கள்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா.... அப்படி பார்த்தால் அவர் மற்றவர்களையும் கண்டு கொண்டிருக்க வேண்டுமே.... ஏன் என்னை மட்டும் கேட்டார்??!!

      நீக்கு
  19. அவர் சென்றதும் பாஸ் அருகில் வந்தார். "யாருங்க அது?"

    "யாருக்குத் தெரியும்? லிஃப்டிலிருந்தே சிரிக்கறாங்க"

    ஹையோ தாங்கலைடா சாமி!

    "யாருங்க அது?"// பாஸ் நினைச்சிருப்பாங்க....தலையைட் தடவி.....இப்படிக் கையை அழுத்திட்டுப் போற அளவு யாரது!!!!

    //"அதானே.. யாராயிருந்தா உங்களுக்கென்ன.. தலையை தடவிட்டாங்க இல்லே?" பாஸ் விரோதத்துடன் நகர்ந்து நின்று கொண்டது //

    ஹாஹாஹா

    நல்லா சுவாரசியமா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதியவனுக்கு அந்த எழுத்துக்குரிய மதிப்பு அதற்கான பரிசு இந்த மாதிரி ரசனை தான். இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறது.

      நீக்கு
  20. ​யாம் பெற்ற இன்பம்
    எல்லோரும் பெறுக என்றே
    எழுதி வைத்தார் ஏட்டினிலே
    ஏட்டில் எழுதியவை பொக்கிஷம் என்றே
    பூட்டிவைத்தார் ஏட்டைச் சேகரித்தவர.
    அச்சு புத்தகம் என்றும் நிற்கும் என்றே
    அவற்றை பதிப்பித்தார் தமிழ் தாத்தா.
    ஒரு புத்தகம் ஒருவர் கையில் முடங்குவதை விட
    சுற்றி வந்தாலே பயன் கூடுதல் என்றே
    நூலகங்கள் சேகரித்தன புத்தகங்களை.
    அந்தோ நூலகங்களை
    எட்டிப் பார்க்க நேரமில்லை
    நிற்காத வாழ்க்கை ஓட்டத்தில்
    ஓடிக் கொண்டிருக்கும் மனிதருக்கு
    பயன் தராதபோது புத்தகங்கள்
    வீண் அடைசல் ஆயின.
    விடவும் மனதில்லை
    இடமும் நெருக்கடி
    தீர்வு டிஜிட்டைசேஷன்
    கணினியில் சேகரித்து
    பாதுகாப்பாக இருக்கும் என்று.
    இடையில் முளைத்து எழுந்தது
    ஏ ஐ என்றொர் பெரும்பூதம்.
    'என்னிடம் வாருங்கள்
    என்ன வேண்டுமோ கேளுங்கள்
    சேமித்து வைத்ததில் இருந்து
    சேகரித்துத் தருகிறேன்
    நீங்களும் அறிஞர் ஆகலாம்.'
    மனிதனின் தலைமைச் செயலகம்
    பயன் இல்லாமல்
    முடங்கிக் கிடக்கி\றது.
    ​தீய எண்ணங்களுக்கு
    இடம் ஒதுக்குகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா சூப்பர் போங்க அடி பொளி!!!!!! கலக்கிட்டீங்க! முழு பதிவுக்குமான கமென்டாக!!! ரசித்தேன்!

      இன்றைய பதிவின் டாப் கமென்ட்!!!

      கீதா

      நீக்கு
    2. பலமுறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம் பட்டணத்தில் பூதம். மாயாபஜாரும் அப்படித் தான்.

      நீக்கு
    3. இந்த ஏஐயிடம் நான் தான் போகிறதில்லைனு நினைக்கிறேன். அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கிறதில்லை. அதே போல் தான் ஜெமினினு ஒண்ணும். தினமும் லாப்டாப்பைத் திறந்ததுமே வந்து என்னைக் கேள்னு சொல்லிட்டு இருக்கும். இன்னிக்கும் வந்திருக்கு. ஆனால் நான் எதுவும் கேட்பதில்லை.

      நீக்கு
    4. பாராட்டுக்கு நன்றி

      நீக்கு
    5. நல்லா தொகுத்து, யோசித்து, அனுபவித்து எழுதி இருக்கீங்க ஜே கே சி சார்.

      நீக்கு
    6. AI மற்றும் ஜெமினி எல்லாம் முயற்சிக்கலாம் கீதா அக்கா. ஒன்றும் செய்யாது. சுவாரஸ்யமான அனுபவங்கள் கிட்டும்.

      நீக்கு
  21. வாசலில் உள்ளே நுழையும் இடத்தில் ஏமாற்றிவிட்டு வந்து விட்டால் அறைக்குள் வந்து கேள்வி கேட்பார் யாருமில்லை.//

    இது இன்னும் சில மருத்துவமனைகளில் இருக்கிறது என்று தெரிகிறது. என் அனுபவமும் இப்படி உண்டு என்பதால். ஒரு வேளை கண்டுக்கமாட்டாங்க போல!

    ஆனால் புற்றுநோய் மருத்துவமனைகளில் செல்லுபடியாகாது காரணம், புற்றுக்குத் தொற்று வந்துவிடக் கூடாதே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க போன மருத்துவமனைகளில் எல்லாம் கட்டுப்பாடு இருந்ததில்லை. ஆனால் அப்போலோவில் கட்டுப்பாடு உண்டு என வெங்கட் சொல்லி இருக்கார். காவேரி மருத்துவமனையில் நாங்களே பார்த்தோம். பயங்கரக் கட்டுப்பாடு.

      நீக்கு
    2. நிறைய தனியார் மருத்துவமனைகளை பயங்கர கட்டுப்பாடுகள் உண்டு. ஏன் அரசு மருத்துவமனைகளிலேயே கட்டுப்பாடுகள் உண்டு.

      நீக்கு
  22. "ஓகே ஓகே நானே தர்றேன்" என்று பாஸிடமிருந்து மில்டனை வாங்கி அதிலிருந்து வெந்நீரை டம்ளரில் சரித்து என்னிடம் நீட்டினார்! //

    ஓ நர்ஸின் கடமையோ!!!

    இதுவும் ஒரு மாதிரி நன்றாகத்தான் இருக்கு! ஆனால் பழகிட்டா பாஸ் இப்படி எல்லாம் எடுத்துக் கொடுக்க மாட்டாரே...! இவ்வளவு சிசுரூஷைக்கு பழகக் கூடாதே...!//

    ஹாஹாஹா.....தலைப்பு சரியாகிவிட்டது!

    அவர்களுக்குத் தெரியாமல் நான் எடுத்து சாப்பிட்டு விடக் கூடாதாம்!//

    ஹாஹாஹா இதென்னது....சின்ன பாப்பாவா? இல்லை ஒன்னும் தெரியாதவரா? ஒரு வேளை கொஞ்சம் இதைப் பற்றிய அறிவு இலலத நோயாளிகள் தெரியாம சாப்பிட்டுடுவாங்களோ?!! கொஞ்சம் ஏதோ மாதிரி இருக்கிறது.

    நான் நினைச்சது, டைப்பியது அடுத்த வரிகளில் உங்கள் வரியாக வந்துவிட்டதால் நான் எழுதியதை அழித்துவிட்டேன்!

    ஓ இதெல்லாம் ரூல்ஸா! அப்ப அது ஏதோ நோயாளிகள் அனுபவம் ம்போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அநேகமாகத் தினமும் அவங்க வந்து மாத்திரையை எடுத்துக் கொடுக்க நேரம் ஆவதால் நானே கொடுத்துட்டு வீட்டிலிருந்து கொண்டு போகும் காலை உணவையும் கொடுத்துடுவேன். நர்செல்லாம் வந்து கோவிப்பாங்க. கண்டுக்க மாட்டேன். எனக்கும் தெரிய வேண்டாமா என்ன மருந்து சாப்பிடறார் என்பது? என்று சொல்லுவேன்.

      நீக்கு
    2. நான் மற்ற விஷயங்களில் அவர்களை எதிர்த்துக் கொண்டே இருந்ததால் இந்த விஷயத்தில் சொல்பேச்சு கேட்டு விட்டேன் கீதா அக்கா. மற்றபடி நமக்கு தெரியாதா என்ன! எப்படி சாப்பிட வேண்டும் என்று! என்னவோ ரூல்ஸ்...

      நீக்கு
    3. அந்த இடத்தின் வரிகளை ரசித்ததற்கு நன்றி கீதா

      நீக்கு
  23. கவிதை அங்கும் வாசித்தேன்...ரசித்தேன் இங்கும்....

    தேற்றுவாரின்றி விசும்புகின்றன
    யாரும் பார்க்காதபோது!//

    தேம்பாதே!
    வாசிக்கும் போது
    தூக்கம் வருகிறதே!
    என்ன செய்ய?
    அதற்கும்
    ஒரு பதில் சொல்லிவிடேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. தொடரும் திருக்குறள் டைப் வசனக்கவிதைகளையும் ரசித்தேன், ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  25. அர்ஜுன், ஷங்கரின் இயக்கத்தில் வந்தது பற்றி அவரும் சொல்லியிருந்தார் கேட்டிருக்கிறேன். ஷங்கருக்கு நல்ல ஹிட். இப்பக் கூட இந்த ஆட்சியை ஒப்பிட்டுஅந்தப் படத்தை நினைவு கூர்ந்து பேசியதும் நினைவுக்கு வருகிறது. விஜயின் கோட் சூட் உட்பட...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. என் வீட்டுத் தோட்டத்தில் செஞ்சுருட்டி ராகம் இல்லையோ? நீலாம்பரி சாயல் தெரிவதன் காரணம் செஞ்சுருட்டியும் நீலாம்பரியும் சங்கராபரணத்தின் குட்டிகள்!

    நாதபிந்து கலாதிநமோ நம பாடலின் டிட்டோ எனலாம் இப்பாடலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் செஞ்சுருட்டி ராகம் என்று எனக்கே தெரியும். முன்னாடியே சொல்லி இருக்கிறேன். என்னவோ விக்கி என்னை மிஸ்லீட் செய்து விட்டது!!

      நீக்கு
    2. செஞ்சுருட்டி என்றுதானே நினைத்தோம், ஸ்ரீராம் வேறு ஏதோ சொல்கிறாரே..? சரி நம்முடைய சங்கீத அறிவு சொல்பம்தான் என்று நினைத்தேன். தெளிவு படுத்திய கீதாவுக்கு நன்றி.

      நீக்கு
    3. ஆமாம் பானு அக்கா..  என்னுடைய சங்கீத அறிவு மிகச் சொற்பம்.  கேள்வி ஞானம்தான்.  .ரசிக்கத்தெரியும்.  ராகம் தெரியாது.

      நீக்கு
  27. என் வீட்டுத் தோட்டத்தில் பாடல் எப்பவும் பிடிக்கும் ரொம்ப நல்லாருக்கும் இசையும்....இடையில் வரும் இசை அதுவும்...பாடலை இப்பவும் ரசித்தேன் ஸ்ரீராம்

    3 பாடல்கள் தர்மவதி?.....ஒட்டகத்தை - மதுவந்தி தூக்கல் காரணம் தர்மவதிக்கு ஹிந்துஸ்தானி மதுவந்தி நெருக்கம். ஓகே....அடுத்தாப்ல வேறு என்ன பாடல்கள்? ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் எதுனு தெரியாதுனாலும் பாடல்கள் அடிக்கடி கேட்டிருக்கேன். ஒட்டகத்தைக் கட்டிக்கோ இந்தப் படம் தானா?

      நீக்கு
    2. ஆமாம் கீதாக்கா...இந்தப் படம் தான்

      கீதா

      நீக்கு
    3. இந்தப் பாடலில் தலைவர் பாடும் இடங்கள் மிக நன்றாக இருக்கும். தர்மவதி ராகம் என்று விக்கி சொல்லி இருப்பது நீங்கள் ஜென்டில்மேன் என்று விக்கிபீடியா பக்கம் போய் பாருங்கள் தெரியும். இப்போது நீங்கள் சொல்வதை பார்த்தால் அதுவும் சரியாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!!

      நீக்கு
  28. புத்தகப்பித்தன் - யார் ஸ்ரீராம்? உண்மைப்பெயர்? ரொம்ப பிரமாதமாக எழுதியிருக்கிறார் எழுத்து நடையும் கடைசியில் சொல்வதும்...ரசித்து வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகப் பித்தன் பதிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர். . சுஜாதாவின் புத்தகங்களை வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தவர். இப்போது கூட ஒரு சுஜாதாவின் புத்தகத்தில் அவர் எழுதியிருப்பது தான் இது

      நீக்கு
  29. தினமலரில் வெளிவ்ந்த சிலிண்டர் பற்றிய எச்சரிக்கைகள் ரொம்பவே பயனுள்ளவை. இப்பலாம் காஸ் கம்பெனிக்காரங்களே இந்த ஆரஞ்சு ட்யூப் கொடுத்துவிடுகிறார்கள். முன்ன பச்சைக்குப் பாதுகாப்பாக, கம்பெனியிலிருந்தே வந்து அதைச் சுற்றி ஒரு உறை போடும் வழக்கமும் இருந்தது அதன் பின் ஆரஞ்சு என்று நினைவு.

    பயன்படுத்தாத போது மூடி வைப்பது நல்லதே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் சொல்கிறார்கள் தான் ஆனால் அவர்கள் மெக்கானிக்கரை வருவதே இல்லை ஒரு மெக்கானிக்கை வைத்துக்கொண்டு ஊருக்கே அவர் ரிப்பேர் செய்கிறார்

      நீக்கு
  30. ரோபோ சூப்பர்!!!!

    நம்மூர்ல கொண்டு வரலாம் ஆனால் ரோபோ பாவம்ங்க......நம்ம மக்கள் சிக்னலையே பார்க்காமதானே வண்டி ஓட்டுவாங்க...சிக்னல் இலலத பகுதினா கேக்கணுமஆ? உட்புறச் சாலைகள்ல......முன்னாடி வர மனுஷனையே அடிச்சுத் தள்ளீட்டுப் போறவங்க இதையும் அடிச்சு தள்ளிடுவாங்களே! நம்மூருக்குச் சரிப்பட்டு வருமா தெரியலை

    இயந்திரங்கள் ஒரு போதும் மனிதனை வெல்லாது ஓகேதான்...ஆனால் இந்தரோபோவைப் பொருத்தவரை அது சிக்னல் பார்த்துப் போவது...அதை வடிவமைத்தவர் செய்த ப்ரோக்ராம்படிதானே அது செல்லும். ஸோ இப்ப இதையும் கவனத்தில் கொண்டு அடுத்த ரோபோ இன்னும் அட்வாஸ்டா வரும்...பாருங்க வந்திடும்....ட்ரோன் மாதிரி பறந்து கொண்டு கொடுக்கவும் வந்திரும்.

    ஏற்கனவே நம்ம ஊர் போஸ்ட் ஆபீஸ் மலைப்பகுதிகளில் ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்யறாங்களே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆக மொத்தம் நம்ம ஊருக்கு அது ஒத்து வராது என்று தான் தோன்றுகிறது சரிதானே

      நீக்கு
  31. ஜொமாட்டோ, ஸ்விக்கி கண்ணுல பட்டிருக்குமே! அது போல சூப்பர் மார்க்கெட் டெலிவரி செய்வாங்களே சாமான் எல்லாம் பிக்பாஸ்கெட் எல்லாம் இது தெரிஞ்சுருக்காம இருப்பாங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க பொழப்புல மண்ணு விழுந்திடும்ன்னு கண்டுக்காம இருக்காங்களோ என்னவோ

      நீக்கு
  32. ப பூ வின் விமர்சனத்தைச் சின்ன எழுத்திலேயே வாசித்துவிட்டேன்! கண்ணு டெஸ்ட் (கண்ணாடியோடுதான்!) 30 cm ஸ்கேலைவிட சற்று தூரத்திலேயே!!! கண்ணாடி வழியாவும் வாசிக்க முடியலைனா கண்டிப்பா வரணும்னு டாக்டர் சொல்லிருந்தாரே!!!!

    //நீச்சல் உடையில் இருக்கும் கே. ஆர். விஜயா மழையில் நன்றாக நனைகிறார். அப்படி யிருந்தும் ஜலதோஷம் பிடிக்கவேயில்லை! //

    ஹாஹாஹா..

    இந்தப் படம் பார்த்திருக்கிறேனோ என்று தோன்றியது. மற்றொன்று கமல் நடித்திருப்பாரே ஒரு படம்...அது?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன எழுத்திலேயே என்பதை கவனக் குறைவாக சின்ன வயசிலேயே என்று போட்டிருக்கிறீர்களோ எனப் படித்துவிட்டேன். அக்கா கூட இல்லையா என்ற சந்தேகம் உடனே வந்தது

      நீக்கு
    2. ஹாஹாஹா.....அண்ணே ரொம்பத்தான்!!! இப்பவும் சின்ன வயசுதாங்க...அதென்ன சின்ன வயசுல யாருமே கண்ணாடி போடமாட்டாங்கன்ற மாதிரி சொல்றீங்க!!!ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. அந்தப் படத்தை இனைக்கும் போது உங்களை நினைத்துக் கொண்டே தான் இணைத்தேன் நான். அதிலேயே வாசித்து விட்டேன் என்று சொல்வீர்கள் என்று நினைத்துக் கொண்டு அதை பெரிதாக தராமல் சின்னதாக தந்தேன். அப்படியும்...

      நீக்கு
    4. ஓ நன்றி நன்றி ஸ்ரீரம. பாருங்க நான் டெஸ்ட் பாஸ்னு சொல்லிருக்கேனே!!! அங்குதான் வாசித்தேன் என்று...இல்லைனா மருத்துவரிடம் போயிருக்கணும்...ஹப்பா இப்போதைக்கு ஒரு செலவு கம்மி டச் வுட்!

      கீதா

      நீக்கு
  33. வயலின் ஏற்கனவே வாசித்துப் பார்த்ததுதான்!

    ஞாயிற்றுக் கிழமை - ஹாஹாஹா இந்த ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பா வீட்டை சுத்தம் செய்தே ஆகணும்! வேலை நிறைய இருக்கே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே இந்த வார இறுதி சுத்தம் வேலை இருக்கு...ரெண்டு வாரம் செய்ய முடியலையே...

      கீதா

      நீக்கு
  34. கோட் - முதுகுவலி ....ஏற்கனவே பழக்கப்பட்ட கோட்தான் டாக்டர்! ஹிஹிஹி

    கொத்துச் சாவிக்கு முன்னாடியும் ஐஸ் வைச்சும் கிடைக்கலை! ஹிஹிஹி...

    வைரநெக்லஸ் முன்னரும் உறுத்தியதே! இப்பவும் உறுத்துகிறதுதான்!

    பரவால்ல ஸ்ரீராம் ஏற்கனவே வந்திருந்தாலும் பாருங்க, இப்ப இதுக்கான கமென்ட்ஸ் வேறயா இருக்க்கும். ஒரே விஷயத்தை வெவ்வெறு சமயங்களில் பார்க்கும் போது, வாசிக்கும் போது, கேட்கும் போது நம் எண்ணங்களும் மாறியபடி இருக்கும் என்பதை கூர்ந்து கவனிக்க நல்ல பயிற்சிதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனவே நீங்கள் மறைமுகமாக சொல்வது எல்லா நகைச்சுவைகளும் ஏற்கனவே வந்ததுதான் என்கிறீர்கள்

      நீக்கு
    2. ஹாஹாஹா...ஏற்கனவே வந்ததுதான் ஸ்ரீராம் ஆனா அப்ப என் கமென்ட்ஸ் வேற !!!

      கீதா

      நீக்கு
  35. ஆனால் இன்று ஜோக்ஸ் குறைத்திருக்கலாம்....முதல் பகுதியில் பாதியே சிரிக்கும்படி எழுதியிருக்கீங்க அதுக்குச் சிரித்துவிட்டேன் இந்த ஜோக்ஸை விட!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  36. //யாருங்க அது?"// பாஸ் நினைச்சிருப்பா ங்க....தலையைட் தடவி.....இப்படிக் கையை அழுத்திட்டுப் போற அளவு யாரது!!!!

    //"அதானே.. யாராயிருந்தா உங்களுக்கென்ன.. தலையை தடவிட்டாங்க இல்லே?" பாஸ் விரோதத்துடன் நகர்ந்து நின்று கொண்டது....ஹா....ஹா....ரசனையாக சொல்லி உள்ளீர்கள

    ஜோக்ஸ் பிடில், ஞாயிற்றுக் கிழமை , கோட்,கொத்துசாவி, ::) பதினையாயிரம் ஹா...ஹா..சிரித்து முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கமாதேவி படித்து ரசித்து சிரித்ததற்கு நன்றி

      நீக்கு
  37. எபி வழியாக நம்ம தளத்துக்கு வரவங்களுக்காக இங்க சொல்றேன்...இதுவும் ஸ்ரீராமின் ஐடியாதான்...இங்கு சைட் பாரில் எங்கள் தளம் உடனே அப்டேட் ஆவதில்லை ரொம்பவே தாமதமாகத்தான் ஆகிறது என்பதால் கொடுக்கிறேன். எங்கள் தளத்தில் நாமக்கோழி பற்றிய பதிவு. விருப்பமிருப்பவர்கள் பார்க்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் கீதா சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள். சரி.... லிங்க் எங்கே?

      நீக்கு
    2. ஓஹ்! லிங்க் கொடுத்திருக்கணும் இல்லையா? ஆனா இனி யாரு வரப் போறாங்க நம்ம பதிவுக்குன்னு ஆயிடுச்சு.

      https://thillaiakathuchronicles.blogspot.com/2026/06/common-coot-eurasian-coot-1.html

      கீதா

      நீக்கு
    3. காலைல முதல் கருத்துல லிங்க் கொடுக்கணும். நடு ராத்திரி கொடுத்தா, அதுக்கு அப்புறம் அந்த நாள் பதிவுக்கு யார் வந்து பார்ப்பா அக்கா?

      நீக்கு
    4. உங்கள் பதிவை பார்த்தேன் சகோதரி. நேற்றும், இன்றும்என் நேரங்கள் பறந்து விட்டதால்,.உடன் வர இயலவில்லை. மன்னிக்கவும். கண்டிப்பாக வருகிறேன். இன்று தாமதத்துடன் எ. பிக்கே வருகை தருகிறேன்.அதற்கும் மன்னிக்கவும்.

      இப்போது நம் பதிவுகள் உடனே எல்லோர் சைட் பதிவிலும் ஏனோ உடனடியாக தெரிவதில்லை. என் "நண்பர்கள் புதிய பதிவு" என்ற இடத்திலும் இதே குறைபாடுதான். அதனால் உடனே கவனிக்க இயலாமல் போய் விடுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமையாக உள்ளது.

    ஆஸ்பத்திரி பதிவை மிகவும் நகைச்சுவையாக ரசித்து எழுதி உள்ளீர்கள். நானும் ரசித்துப்படித்தேன்.

    /அருகே வந்தார். தலையை வருடி"நல்லா இருக்கீங்களா?" என்றார். யாரென்று தெரியாமலேயே "உம் " என்றேன். கையை அமுக்கி விட்டு சென்று விட்டார்.

    கவுனுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்கிறேன். என்ன நல்லா இருக்கீங்களா வேண்டி கிடக்கிறது?
    அவர் சென்றதும் பாஸ் அருகில் வந்தார். "யாருங்க அது?"

    "யாருக்குத் தெரியும்? லிஃப்டிலிருந்தே சிரிக்கறாங்க"

    "அதானே.. யாராயிருந்தா உங்களுக்கென்ன.. தலையை தடவிட்டாங்க இல்லே?" பாஸ் விரோதத்துடன் நகர்ந்து நின்று கொண்டது என்னை பாதிக்கவில்லை. என் கவலை அறைக்குள் சென்றதும் எழுந்து நிற்பதில் இருந்தது./

    ஹா ஹா ஹா.. யாருங்க அது.? பாஸ் உங்கள் அருகே இருக்கும் போதே என்ன தைரியம் அந்தப் பெண்ணுக்கு....! அந்த சமயத்தில் உங்கள் கவலையும் புரிகிறது.

    நாங்களும் தினசரி இரவு கேஸ் சிலிண்டரை மூடி விட்டுதான் படுக்கிறோம். அப்படியே பழக்கமாகி விட்டது.

    அந்த ரோபோவின் செயல் நன்றாக உள்ளது. கூடவே அதன் ஒழுங்கு முறையும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருமே பதிவின் அந்த வரிகளை ரசித்திருப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது கமலாக்கா.   இனி மேலும் மேலும் இப்படி பிளேடு போடா அவசியம் முயற்சிக்கிறேன்!

      நீக்கு
  39. வணக்கம் சகோதரரே

    ஆஸ்பத்திரி ரூல்ஸ் கொஞ்சம் ஓவராகத்தான் உள்ளது. என்னால் இன்னமும் அதிலிருந்து மீள இயலவில்லை.

    பட்டணத்தில் பூதம் படம் மிக நன்றாக இருக்கும். தொ. காட்சியில் பார்த்துள்ளேன்.

    ஜெண்டில்மேன் படமும் அதில்தான் பார்த்துள்ளேன்.பாடல்கள் நன்றாக இருக்கும். நீங்கள் பகிர்ந்த பாடலும் அருமை. அந்த அப்பள சீன் எல்லாம் எங்கள் புகுந்த ஊரான கல்லிடையில், அப்பளக்கடையில் எடுத்ததுதான் என என் அங்கு வசித்த எங்கள் உறவுகள்( நாத்தனார் வீட்டில் ) கூறி கேட்டுள்ளேன்.

    நகைச்சுவை பகுதிகள் முன்பே வாசித்ததுதான். இருப்பினும் சிலது நகைக்கு வைத்தன.

    இன்று என் வருகை தாமதந்தான். என் கடைசி பெஞ்சு கருத்தை நீங்கள் பார்ப்பீர்களா எனத் தெரியவில்லை. ஆனாலும் அத்தனைக்கும் நான் ஆஜராகி விட்டேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ  கல்லிடை உங்கள் புகுந்த ஊரா?  தாமதமான வருகையாயிருந்தாலும் அட்டெண்டன்ஸில் மார்க் ஆகி விட்டதே..  எனவே பெட்டர் லேட் தான் நெவர்!

      நீக்கு
    2. @கமலா, கல்லிடைக்குறிச்சி தொந்தி விளாகம் தெருவிலே தான் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பரான அம்பியின் வீடு இருக்கு. அம்பி அட்லான்டாவில் இருக்கார். அவர் தம்பி தக்குடு என்ற ஸ்ரீநிவாசன் கல்லிடைக்குறிச்சிப் பிள்ளையார் கோயிலைப் பார்த்துண்டு இருந்தார். சிருங்கேரி மடத்தில் அத்யயனம். இப்போ தோஹாவில் மெட்ரோவில் வேலை. வீட்டுக்குக் குடும்பத்தோடு வந்துட்டுப் போனார்.

      எங்க அபார்ட்மென்டின் வாசியான திரு கோபாலகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி கமலா இருவரும் கல்லிடைக்குறிச்சி வாசிகள் தான். கமலா திருநெல்வேலியில் காதி பண்டாரில் உத்யோகம் பார்த்தவர். இப்போவும் ஊருக்கு அடிக்கடி போவதும் வருவதுமாகத் தான் இருப்பாங்க. ஆனால் அந்தத்க் திருநெல்வேலிப் பேச்சை மட்டும் மாத்திக்கொண்டு விட்டார்கள். :)))) நானே கேட்டேன்? ஏன் பேச்சு ஸ்டைலை மாத்தினீங்கனு? மாமாவுக்குக் கொஞ்சமானும் இருக்கு. மாமி சுத்தமாய்ப் பேச்சு ஸ்டைலை மாத்திட்டாங்க. :))))

      நீக்கு
    3. கல்லிடைக்குறிச்சி அப்பளம் மாமியாத்துக்குப் போய் அப்பளம் வாங்கி இருக்கோம். மனோகரம், மாலாடு, புழுங்கலரிசி முறுக்கு எல்லாமும் வாங்க்னோம். எனக்குமே புழ்ங்கலரிசி முறுக்குச் சுத்த வரும்னாலும் திருநெல்வேலி கைபாகம் பார்க்கணும்னு வாங்கினோம்.

      நீக்கு
  40. ​//"அதானே.. யாராயிருந்தா உங்களுக்கென்ன.. தலையை தடவிட்டாங்க இல்லே?"
    கிட்னி பத்திரமா இருக்குல்லே?
    தலையை தடவி மூளையை உறிஞ்சிட்டான் என்பது சொலவடை

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   சேச்சே..  அந்த அளவுல்லாம் ராமச்சந்திராவில் செய்ய மாட்டாங்க...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!