22.10.26

பொன்னான கூண்டு செய்து பழம் பால் தந்து யார் உன்னை பூட்டி வைத்தார் கிளியே அங்கு

முன்குறிப்பு  :  பயப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம்.  வொய்ஜா போர்ட் கதைகளின் இறுதிப் பகுதி இன்று.  அடுத்த வாரம் தொடராது என்று உறுதி அளிக்கிறேன்! 

ஆவிகள் வரும்.  நம்பிக்கை வையுங்கள்..  -  சித்தர் பீடம் , தமிழ் 

இறந்தவா்களிடம் தொடா்பு கொண்டு அவா்களிடம் பேச உதவும் ஊடகங்களில் மிக பிரபலமானது இந்த ஓஜா போர்டு (Ouija Board).

ஓஜா போர்டானது ஒரு பலகை/மரபலகையில் ஆங்கில எழுத்துகள் A முதல் Z வரையும், எண்கள் 0 முதல் 1 வரையும் எழுத பட்டிருக்கும் மற்றும் சூரியன் ,சந்திரன் ஆகியவற்றின் படங்களுடம் Yes, No, Goodbye போன்ற வாா்த்தைகளும் எழுதபட்டிருக்கும்.

இது கி.பி 1100 காலகட்டங்களில் முதன்முதலில் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் விளையாட்டாக எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் முயற்சித்தால் மட்டுமே உங்களால் ஆத்மாக்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

ஓஜா போர்டு (Ouija Board) பயன்படுத்தும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியவை..

ஓஜா போர்டு (Ouija Board) பயன்படுத்தும் போது முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியவை..

- மொட்டை மாடியிலோ அல்லது திறந்த நிலப்பரப்பு உள்ள இடங்களிலோ கண்டிப்பாக இதை பயன்படுத்தகூடாது.

- முதலில் நீங்கள் எந்த அறையில் பயன்படுத்த போகிறீர்களோ அந்த அறையை சுத்தமாக வைக்கவும். துடைப்பம் , செருப்பு ஆகியவை அந்த அறையில் இருக்க கூடாது. சாமி சிலைகளோ, படங்களோ இருந்தால் அவற்றையும் நீக்கவும்.

அதேபோல் கண்ணாடிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை துணியால் மூடிவிடவும்.. கண்ணாடிகள் ஆவி உலகிற்கும் நம் உலகிற்கும் பாலமாக நம்பப்படுகிறது எனவே கண்ணாடிகளை கண்டிப்பாக மூடி வைக்கவும்.

- நீங்கள் தனியாகவே இதை பயன்படுத்தலாம்.. இருந்தாலும் ஒரு நண்பருடன் நீங்கள் இதை பயன்படுத்துவது நல்லது .

- இரவு நேரமே இதை பயன்படுத்த உகந்த நேரம். உங்கள் அறையில் இருக்கும் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவா்த்தி வெளிச்சதை மட்டும் பயன்படுத்தவும் , அறையில் வேறு எந்த சத்தமும் இல்லாமல் பார்த்துகொள்வது.

தரையில் அமர்ந்து உபயோகிப்பதே சிறந்தது. முதலில் ஒரு நாணயத்தை போர்டின் மீது வைத்து அதன் மீது உங்கள் ஆள்காட்டி விரலை வைக்கவும் . இதை உபயோகிக்கும் பொழுது அருகில் உங்கள் நண்பா்கள் இருந்தால் அவர்களும் அந்த நாணயத்தின் மீது விரலை வைக்க வேண்டும். முதலில் மூன்று முறை நாணயத்தை சுற்றவும்.. சுற்றியபின் " இங்கே யாரவது இருகிறீர்களா? " என்று கேட்கவும் .

இதுதான் முதல் அடி நீங்கள் அவற்றுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்து விட்டீர்கள் .

- சில நேரம் நாணயம் நகராது. ஒரு வேலை அந்த அறையில் ஆத்மாக்கள் இல்லாமல் இருக்கலாம், இல்லையென்றால் இருந்தும் உங்களுடன் தொடர்பு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம் . "Yes ", "S" என்ற எழுத்தை நோக்கி நாணயம் நகர்ந்தால் ஆத்மா அந்த அறையில் இருக்கிறது என்றும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள தயார் என்றும் அர்த்தம் ..

- உங்கள் முதல் கேள்வி "நீங்க MOONல் இருந்து வரீங்களா? இல்லை SUNல் இருந்து வரீங்களா? ", என்று கேட்கவும். நாணயமானது மூன் படம் பக்கமோ அல்லது மூன் என்ற எழுத்துக்களையோ நெருங்கினால் அந்த ஆத்மா பொய்களை அதிகமாக கூறக்கூடியது, தீய ஆத்மா என்று அர்த்தம் .. சன் என்றால் அது உண்மையை பேசும் நல்ல ஆத்மாவாகும்.

- அவற்றிடம் வழக்கமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் . முக்கியமாக அவற்றிடம் பேசும் பொழுது சிரிக்கவோ, இல்லை பயமோ கூடாது. உங்களது சில்லறை தனமான கேள்விகள் அவற்றை எரிச்சல் அடைய செய்யலாம்.

அது சரி.. அவைகளிடம் என்ன கேள்விகளை கேட்கலாம்..!

* உங்கள் பெயர் ?

* எந்த வயதில் இறந்தீர்கள் ? எந்த ஆண்டு இறந்தீர்கள் ?

* இந்த அறையில் வேறு ஏதேனும் ஆத்மா உள்ளதா ?

இது போன்ற கேள்விகளை நீங்கள் அவற்றிடம் கேட்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு நாணயம் ஒவ்வொரு எழுத்தாக நகர்ந்து பதில் சொல்லும் . அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தால் சுலபமாக புரிந்துகொள்ளலாம் .

- நாணயம் Z-A அல்லது 9-0 என்று வரிசையாக நகர்ந்தால் அவை தொடர்பை முடித்துக்கொள்ள முயல்கிறது என்று அர்த்தம், அந்த நிலையில் நீங்கள் "Goodbye" என்று சொல்லி முடித்துக்கொள்ளவும்.

நாணயம் Goodbye நகர்ந்தபிறகே நீங்கள் நாணயத்தில் இருந்து விரலை எடுக்கவேண்டும். அதற்கு முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்கள் விரலை நாணயத்தில் இருந்து எடுக்க கூடாது.

நீங்க உண்மையாகவே ஓஜா போர்டை பயன்படுத்த போகிறீர்கள் என்றால் ஓஜா போர்டின் மூலம் உங்களை துன்புறுத்தும் துஷ்ட சக்தியான "ZOZO" பற்றி கண்டிப்பாக தொிந்திருக்க வேண்டும். "ZOZO"வைப் பற்றி அறியாமல் நீங்கள் ஓஜா போா்டினை பயன்படுத்தினால் பொிய ஆபத்தை சந்திக்க நோிடும்.

யாா் இந்த "ZOZO"? அது என்ன செய்யும் என்பதை கீழே பாா்ப்போம்.

"ZOZO" என்பது அமானுஷ்ய ஆத்மாவாகும் (துா் ஆத்மா).

நீங்கள் ஓஜா போர்டின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்ததும் ஆவியின் பெயரை முதலில் கேட்பீர்கள். அது Z இல் இருந்து O என்று மாறி மாறி குறித்தால் அது அந்த அமானுஷ்ய ஆத்மா "ZOZO" தான். மேலும் அதனிடம் கேள்விகள் கேட்காமல் உடனே Goodbye சொல்லி இணைப்பை துண்டித்துவிடுங்கள்.

இந்த செய்தியை படிக்கும் நண்பர்கள் ஒரு சில நேரத்தில் இணைப்பின் பொழுது Z-O தானாகவே தம்மை அறியாமல் நகர்த்தியதும் உண்டு . அது நம் ஆழ்மனத்தின் விளையாட்டு .

சில நேரங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள நினைக்கும் பொழுதும், அதாவது நம் நண்பா்அல்லது உறவினா் ஒருவாின் ஆத்மாவுடன் தொடா்பு கொள்ள நினைக்கும் பொழுது இந்த "ZOZO" அரக்கன் நாம் யாரிடம் பேச நினைக்கிறோமோ அவர்களை போல் அழகாக நடித்து நம்மை ஏமாற்றி விடும். ஒரு சில நேரத்தில் நாணயம் இடது வலதாக வேகமாக நகர்த்தும்.

விளையாட்டுத்தனமாக இருப்பவர்களே இந்த ஆத்மாவின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர் .

பொதுவாக "ZOZO"விற்கு பெண்கள் மீதே அதீத நாட்டம் உள்ளதாக தெரிகிறது. பலர் தங்களது "ZOZO" அனுபவத்தை பகிரும் பொழுது, அந்த துா்ஆத்மா தங்களிடம் தொடர்பு கொள்ளும் பெண்களை கவா்ந்து அவர்களை நரகத்திற்கு அழைத்து போவதாக குறிப்பிட்டு கூறுகின்றனர் . மேலும் தொடர்பின் பொழுது இந்த "ZOZO" அதிகமாக பெண்களையே தாக்குகிறது என சிலா் ஆராய்ந்து கூறியுள்ளனா் .

இந்த ZOZO மிக சுலபமாக நம்மை ஆட்கொள்ள கூடியது . நமக்கு நெருக்கமானவர்களை தாக்கவும் செய்கிறது, ஒரு சில நேரத்தில் அவர்களது இயல்பு குணத்தையே மாற்றகூடியது. நம் வீட்டை கூட அமானுஷ்ய நிலைக்கு மாற்ற கூடியது இந்த ZOZO.

எனவே முடித்த அளவு ஆவி உலகத்தை தகுந்த அனுபவசாலியின் உதவியுடன் தொடர்புகொள்வதே நல்லது . விளையாட்டிற்காக இதை எக்காரணத்தை கொண்டும் உபயோகப்படுத்தாதீா்கள், விளையாட நமக்கு எவ்வளவோ விளையாட்டுகள் இருக்கிறது. இந்த ஓஜா போர்டைப் பற்றி முழுமையாக அறியாமல் பயன்படுத்தாதீா்கள்


இந்த போர்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 19 ஆம் நூற்றாண்டில். 1848 இல் நியூ யார்க் நகரத்தை சேர்ந்த “ஃபாக்ஸ் சிஸ்டர்ஸ் (fox sisters)"  என்று அழைக்கப்பட்ட Leah  Margret மற்றும் kate தங்களால் ஆவிகளுடன் பேச முடியும் என்றும் ஆவிகள் இவர்களிடம் சுவற்றில் அடித்து பதில் கூறும் என்றும் கூறியிருக்கின்றனர். இதற்கு பிறகுதான் இறந்தவர்களிடம் பேசப்படும் "seances " அமெரிக்கா முழுவதும் வலம்வர ஆரம்பித்தது. 1862 இல் ஆபிரகாம் லிங்கன் மனைவி  தனது இறந்துபோன 11  வயது மகனுடன்  seances  நடத்தியிருக்கின்றனர். இருந்தாலும் இப்படி ஆமை வேகத்தில் பதில் வருவதை கேட்க பொறுமையில்லாமல்  மக்கள் எளிய வழியை தேடும் போதுதான் ஆன்மீகவாதிகள் பேசும் பலகையை கண்டுபிடித்துள்ளனர்.

வித்தை காட்ட வித்தைக்காரன் தான் தேவை என்பதை இந்த போர்டு முறியடித்தது. ஆன்மீகவாதிகள் மட்டுமே நடத்த முடிந்த "seances " பிறகு யார்வேண்டுமானாலும் நடத்த முடியும் என்றானது. 

Planchette  என்ற கருவியின் மேல் விரல்களை வைத்துக்கொண்டு கேள்விகளை கேட்க, அது அந்த பலகையின் மேலுள்ள எழுத்துக்களுக்கு நகர்ந்து பதிலை சுட்டிக்காட்டும். இந்த போர்டு-ஐ தான் பால்டிமோர் ஐ சேர்ந்த சார்லஸ் கென்னர்ட் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து “ஓயிஜா போர்டு"  என்ற பெயரில் தயாரித்து விற்றனர். இதற்குக் காப்புரிமையும் பெறப்பட்டது. இதன் பேருக்கு பின்னாலும் ஒரு பெரிய கதை இருக்கிறது. இதற்கு பெயர் வைத்தது ஓர் ஆவி. இந்த போர்டு-ஐ சோதித்து பார்க்க நினைத்தவர்கள், அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அந்த போர்டிடம் வினவிய போது "OUIJA " என்று காட்டியிருக்கிறது.  “ஓயிஜா” என்றால் என்ன என்று கேட்ட போது “குட் லக் " என்று காட்டிவிட்டு , உடனே குட் பைக்கு  Planchette நகர்ந்திருக்கிறது. அதனால் வந்த ஆவி “ouida" என்ற எழுத்தாளர் உடையது என்றும் அதனை மாற்றி உச்சரித்து OUIJA என்றானதும் பெயரின் கதையாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ராபர்ட் பார்ச் என்பவர் ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்.

ஓயிஜா போர்டை கண்டறிய பல நாட்கள் ஆகியிருந்தாலும் ஓயிஜா போர்டு-ஆல் கண்டறியப்பட்டவை ஏராளம். உதாரணமாக 1978 ஆம் வருடம்  இத்தாலியின்  38 வது பிரதம மந்திரியான "ஆல்டோ மோரோ" தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது போலோக்னா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் இந்த போர்டை பயன்படுத்தி அவர் கடத்தப்பட்ட பகுதியை கண்டறிந்துள்ளனர். இதை வைத்து பேய் வந்ததை விட படங்கள் வந்தது தான் அதிகம். தி எக்ஸார்சிட் போன்ற பல படங்கள் வெளியாகி இருக்கின்றன

கடவுளுக்கு மட்டும் தெரிந்த பிறப்பு, இறப்பு ஆகிய பல விஷயங்களை  ஓயிஜா கணித்தது. கடவுளுக்கே அறிவியல் விளக்கம் அளித்த இவ்வுலகம் இந்த அமானுஷ்யம் நிறைந்த போர்டுக்கும் அளித்திருக்கிறது. அதாவது இந்த planchette  கருவி தானாக இயங்குவதற்கு காரணம் ideomotor effect என்ற கொள்கை தான் என போட்டுடைத்தனர்.அதாவது நம்மை அறியாமலே நாம் unconcious mind எனப்படும் அடிமனதில் நமது உடலில் அசைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த போர்டின் பெயர் கூட ஹெலன் பீட்டர்ஸ் மனதில் ஆழமாக இருந்த பிரபல எழுத்தாளருடைய பெயர் "ouida"  என்றும் அவரின் அடிமனதில் இருந்த அந்தப் பெயரை எழுதி "OUIJA "  என்று தவறாக படித்ததாக சொல்லப்படுகிறது.

ஓயிஜா போர்டு பொய் என்று  நிரூபிக்க பல ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தாலும் மக்கள் அதை நம்புவதும், அனுபவித்ததாக கூறப்படும் கதைகளும் செவிப்பறையில் விழுவதை தடுக்க முடியவில்லை. நிச்சயம் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் இந்த உலகில் இருக்க முடியாது. 



- "அவ்ளோதான்..." -

===================================================================================


மனசாட்சியம் - 21
KGY Raman

நாவில் சரஸ்வதி

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சாதுரியமாக மறுமொழி சொல்லுவது ஒரு கலை. அது எல்லாருக்கும் கை வருகிற கலை அல்ல. அது கைவரப் பெற்றால் இன்றைய நிலவரத்திற்கு மிகவும் லாபகரமாகக் கூட இருக்கக் கூடும். சிரிப்பைத் தூண்டுகிற ஒரு துணுக்கு தினமலருக்கு அப்படியே அனுப்பினால் லாபம் பார்க்க முடியும். அதே துணுக்கை ஒரு கதையாகச் செய்து குமுதத்திற்கு ஒரு பக்கக் கதையாக அனுப்பலாம். இன்னும் சொல்லப்போனால் பல துணுக்குகளைத் தோரணமாகக் கட்டி, டிவி சீரியல், சினிமாவில் காமெடிக் காட்சிகள் என்று அமைத்துப் பிழைப்பை நடத்தலாம். துணுக்குகளை எட்டுத் திக்கிலும் சென்று பார்த்துப் படித்து காப்பிக்கடை பரப்பியே பிழைப்பை நடத்துகிற சாமர்த்தியசாலிகளையும் நாம் அறிவோம் அல்லவா ?

யாமறிந்த மொழிகளிலே இங்கிலீஷ் போல் நகைச்சுவை வளங்கள் எங்கும் காணோம் என்று பாடுகிற அளவுக்கு ஆங்கில பத்திரிகைகளில் வரும் ஜோக்குகள் மிகவும் பிரசித்தம். Punch, MAD magazine என்று நகைச்சுவைக்காகவே பத்திரிகைகள் பல ஆண்டுகள் வெற்றிகரமாக வெளியாகி இருக்கின்றன. தமிழிலும் அப்படி முயன்று தோற்றார்கள் என்று ஞாபகம். விபரங்கள் நினைவில்லை.

சில துணுக்குகள் அந்தந்த மொழியில் தான் ரசிக்கும்படியாக இருக்கும். அதை மொழிமாற்றம் செய்வது மிக கடினம். உதாரணத்திற்கு சில.

ஒரு ஜொள்ளு ஆசாமி ஒரு பெண்மணிக்கு கடலை போடுகிறார். சுற்றி வளைத்து என்னோடு மெரீனா வருகிறாயா என்று கேட்கிறார்.

கதையின் தொடர்ச்சி.

அவள் பதில்:

"Your current approach operates on a theoretical frequency that remains entirely unobserved within my emotional spectrum."

" I don't get it "

" Exactly !"

இதோ சற்று சுருக்கமாக இருக்கிற இரண்டாவது:

Jester: I can pun on any subject !

Minister: His Majesty the King !

Jester: Of course the King is not a subject.

வேலைக்காக இன்டர்வ்யூவுக்கு வருகிற இளைஞன் கால்தடுக்கி நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுகிறான். எழுந்து சுதாரித்துக் கொண்டு சொல்கிறான்:

" I am sorry, but I am sure I feel into good company."

இவற்றை மொழிமாற்றம் செய்வது எளிதல்ல .

சாதுரியமாகப் பேசுவதற்கு எளிய உதாரணம் ஔவை யாரோ அடி என்று பேசப்போக எட்டே கால் லட்சணமே என்று தொடங்கிக் கொடுத்த மறக்க முடியாத பதிலடி.

நகைச் சீட்டுப் பிடித்த ராமராவும் கிருஷ்ணராவும் ராவோடு ராவாக .. என்கிற ரீதியில் குமுதம் பழைய ஜோக் இன்று சிக்கலை உண்டாக்கக் கூடும்.

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் " அப்பர் பெர்த் இல்லை என்றால் சுந்தரர் பெர்த் இருக்கிறதா " என்று கேட்டாராம்.

" எங்களுக்குள் ஆயிரம் இருக்கும். அதைப்பற்றி ஏன் நீங்கள் கேட்கிறீர்கள் ?" என்று யாரோ ஒருவர் சொல்லப் போக, ஐயங்கார் " ஆயிரம் இருந்தால் ஆளுக்கு 500 என்று பிரித்துக் கொள்ளுங்கள் . ஏன் வீணாக விவாதம் செய்கிறீர்கள் ? " என்று கேட்டாராம்.

நாம் ஜோக்குகள் ஆயிரக்கணக்கில் படித்திருக்கிறோம். ஆனால் நல்ல ஜோக்குகள் சொல்லுங்கள் என்றால் நம்மால் இரண்டு, மூன்றுக்கு மேல் சொல்ல முடிவதில்லை. அதேபோலவே சாமர்த்தியமாக பதில் சொல்லுவதும் நம்மால் எப்போதும் முடிவதில்லை. உண்மையை சொல்லப்போனால் எப்போதாவது சாதூர்யமாக பேசி இருக்கிறோமா என்பதே சந்தேகத்துக்குரிய விஷயமாக தானே இருக்கிறது !

===================================================================================================

ரிக்ஷா மாமா. சத்யராஜ் குஷ்பூ, கௌதமி நடித்து 92 ல் வந்த படம்.  பி வாசு இயக்கத்தில் இளையராஜா இசை.  அருமையான பாடல்கள் கொண்ட படம்.  மிலன் படத்திலும், அதன் தமிழ் பிராப்தம் படத்திலும் வரும் சாவன் கா மஹீனா - சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து பாடலைப்போல, 

ஆனந்த ராகம் படத்தில் வரும் மேகம் கருக்குது மழை வரப்பார்க்குது காட்சியமைப்பைப் போல காட்சி அமைப்பு கொண்ட பாடல்.  அதாவது கல்லூரிப்பெண்ணுக்கு எளிய மனிதன் ஒருவன் பாடல் சொல்லிக் கொடுத்து கல்லூரிப் பாட்டுப் போட்டியில் ஜெயிக்க வைக்கும் காட்சி.

"வைகை நதியோரம் பொன்மாலை நேரம்..."  ஒரு மகா மகா இனிமையான பாடல்.    இளையராஜா, SPB  - நம்மை மகிழ்விக்க தேவன் அனுப்பிய தூதுவர்கள்.  சரணத்தில் SPB பாடும்போதே எனக்கு இப்போதும் சிலிர்த்தது.


=======================================================================================


அழும்போது 
பதைத்துப் போகிறேன்;
சிரிக்கும்போதோ 
சிலிர்த்துப் போகிறேன் 
என்னென்ன மாயம் 
செய்கிறாயடி..



ஏன் 
இவ்வளவு சீக்கிரம் 
தூங்கி விடுகிறாய்? 
கைகளுக்குள் பொதிந்து 
மார்போடு அணைத்துக்கொண்ட 
மலர்ப்பந்தை 
உடனே இறக்கி விடவும் 
மனம் வருவதில்லை.
கொஞ்ச நேரம் கழித்துதான் 
தூங்கேன் 

====================================================================================

OTT யில் பார்த்த படம் 


Ohh My Dog  - NetFlix - ஹிந்தியில் கிடைக்கிறது.  மொழி பிரச்னையில்லை.
நாட்டுக்கு சேவை செய்து உயிரை அர்ப்பணித்த  வீர(த்தா)நாயின் இரண்டு குட்டிகளை தான் அலட்சியமாக விட்டு  விட்டதாக அதன் ட்ரெயினர் கண்ணீர் வடிக்கிறார்.  அந்தப் பெண் நாய் அதை ஒரு புகாராகக் கூட எடுத்துக் கொள்ளாமல் இவரிடம் அன்பு காட்டியது என்று உணர்ச்சிவசப்படுகிறார்.

இந்த இரண்டு குட்டிகளும் எங்கே என்று கேள்வி வருகையில் அந்த இரண்டு நாய்களும் ஒன்று அஸ்ஸாமில் மோமோ என்கிற பெயருடன் அபு என்கிற ஒரு சிறுவன் கவனிப்பில் வளர்கிறது. இன்னொன்று ஆஸ்கார் என்கிற பெயருடன் கூலி வேலை செய்யும் பிரின்ஸ் என்கிற டீனேஜ் பையனிடம் வளர்கிறது.



ஒருநாள் மோமோ காணாமல்போக, அதைப் பற்றி போலீஸில் புகார் செய்தால் அதை அறுத்து சாப்பிட்டிருப்பார்கள் என்ற அலட்சிய பதில் வருகிறது.  அபு பெரிய மனிதன் போல லாப்டாப்புடன் துப்பறிய ஆரம்பிக்கிறான்.  அவனுடைய டியூஷன் டீச்சரும் அவனுடன் இணைகிறார்.

அங்கு பிரின்ஸ் காணாமல் போகிறான்.  அவனைப்பற்றி அவன் நண்பர்கள் கவலைப்பட, ஆஸ்கார் ஒவ்வொருவரிடமும் போய்நின்று இவர்கள் தேடிக்கொடுப்பார்கள் என்று பார்க்கிறது.  யாரும் உதவாமல் போகவே தானே அவன் துணியை முகர்ந்து மோப்பம் பிடித்து துப்பறிய ஆரம்பிக்கிறது.

இரண்டு குற்ற சம்பவம் விஷயத்திலும் போலீஸ் குற்றவாளிகளுக்கு உடந்தை.

படத்தில் ஆஸ்கார் ராஜ்ஜியம்தான். கிட்னியைத் திருட கடத்தப்பட்டிருக்கும் பிரின்ஸை கடைசி நிமிடத்தில் ஒரு ஹீரோ போல வந்து காப்பாற்றும் ஆஸ்கார்..  அந்தக் காட்சி நிச்சயம் தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளி இருக்கும். அந்தக் காட்சியை நான் பின்னால் ஓட்டி ஓட்டி  இன்னும் இரண்டு முறை பார்த்தேன்.   எப்படி பழக்கினார்களோ... போலீஸ்காரர்களும் அந்த கடத்தல்காரனுக்கும் ஆஸ்கார் ஆட்டம் காட்டும் இடங்கள் சுவாரஸ்யம்.



Saibal Chatterjee writing for NDTV gave a rating of 3/5, and added, “Watch the film if you love dogs and especially if you don't.”[10] Sana Farzeen, writing for India Today gave it 3/5 stars and added “For animal lovers, especially dog people, there are enough moments to leave you teary-eyed one minute and smiling the next.”[11] Renuka Vyavahare writing for The Times of India rated it at 3/5 and remarked, “You don't need to be a dog parent or even a pet lover to empathise with animals. Compassion and kindness are universal. That's what makes Ohh My Dog a film made for everyone, even if it doesn't fully realise the potential of its heartfelt premise.”[12]

Rahul Desai of The Hollywood Reporter India writes that “It is Cute in parts, but almost a ruff day”.[13] Nandini Ramnath of Scroll.in said that “Ohh My Dog spells out every move that proves how a kid can make instant sense of a complex kidnapping operation and how a dog can sniff out the truth about its owner entirely by itself.”[14] Bollywood Hungama gave it 3 stars out of 5 and said that “OHH MY DOG is an endearing and unusual entertainer that scores with its adorable canine hero, engaging performances and several thrilling, clapworthy moments.”[15]

படத் தலைப்புக்கு ஏன் இரண்டு 'H' என்றால், இதே பெயரில் ஒரு 'H' உடன் தமிழில் ஒரு நாய் படம் வந்திருக்கிறது.  அது அமேசான் பிரைமில் நேரடி OTT ரிலீஸ்.  அதையும் பார்க்க வேண்டும்.

=========================================================================================
சித்ரா லக்ஷ்மணனிடம் பேசுவது யார் என்று தெரியவில்லை.  சிவாஜி குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று தெரிகிறது "அபிவாதயே" என்று ஒன்று சொல்வோம் என்னும்போது புன்னகை வந்தது.  அதே சமயம் சிவாஜி அதை அறிந்திருந்தார் என்பதை நம்ப முடியவில்லை.  ஏனென்றால் ஒவ்வொரு கோத்ரத்துக்கும் ஒவ்வொரு ரிஷி வரிசை அபிவாதயே..  எனினும் சுவாரஸ்யமாய் கேட்க முடிந்தது.


===========================================================================================

இனி சேர்ந்து நடிக்கவே வேண்டாம் என்று கமலும் ரஜினியும் முடிவெடுத்த பிறகு அவர்கள் தனித்தனியாக நடித்து வெளிவந்த படங்கள் கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபது வரை,

அதைப்பற்றி திரு பஞ்சு அருணாச்சலம் தான் எழுதிய புத்தகத்தில் சொல்கிறார்.

‘இருவருக்கும் தனி ஸ்டைல் உண்டு. ரசிகர்களும் இருக்கிறார்கள். இப்ப தனித்தனியா நடிச்சாதான், நாம வளர முடியும். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சா, அது உங்க படமும் இல்லாம என் படமும் இல்லாம ரெண்டுங் கெட்டானாப் போய், ரசிகர்கள் குழம்ப வாய்ப்பு இருக்கு' எனச் சொல்லியிருக்கிறார் கமல். ‘இனி நாம் சேர்ந்து நடிக்க வேண்டாம்' என இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.

அந்தச் சமயத்தில் அவர்கள் ஒன்றாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஒரே கம்பெனி என்னுடையது தான். அவர்கள் நடிக்கும் படத்தின் கதையை முடிவு செய்து, ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருந்தேன். 'பஞ்சு அண்ணன் என்ன நினைப்பாரோ!’ என இருவருமே என்னிடம் பேசத்தயங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்குள் ஏதோ பிரச்னை என நான் நினைத்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.

எஸ்பி.முத்துராமனை அழைத்து, 'நீங்க பஞ்சு அண்ணன்கிட்ட எங்களைவெச்சு தனித்தனியா படம் பண்ணச் சொல்லுங்க, பண்றோம்' எனச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். முத்துராமன் வந்து விஷயத்தைச் சொன்னபோது நான் வருத்தப்படவில்லை. 'ரெண்டு பேருமே கெட்டிக்காரங்க. ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுத்தான் எனக்கு கதை எழுதத் தெரியுமா... தனித் தனியா நடிக்கணும்னாலும் கதை எழுதத் தெரியும்' என்றேன்.

இரண்டு படங்களையும் எஸ் பி முத்துராமன் ஒரே நேரத்தில் இயக்க முடியாது என்பதால் அவரையே என்ன செய்வது என்று கேட்டேன்.

“என் உதவி இயக்குநர்கள் முத்து அல்லது ஜி.என்.ரெங்கராஜன் ரெண்டு பேர்ல யாருக் காவது ஒருத்தருக்கு ஒரு படத்தை இயக்க சான்ஸ் கொடுங்க. இன்னொரு படத்தை நானே பண்றேன்” என்றார். ‘களத்தூர் கண்ணம்மா' தொடங்கி கமலுக்கு ரெங்கராஜன் நெருக்கம் என்பதால், அவரைத் தேர்வுசெய்தேன். நான் தயார் செய்திருந்த அந்த ஸ்கிரிப்ட்டை ஓரமாக வைத்துவிட்டு, இருவருக்கும் தனித்தனியாக கதை பண்ணலாம் என யோசித்தேன். அப்போது கமலுக்கு ஏ கிளாஸ் ரசிகர்கள் அதிகம். அவர் படம் ரிலீஸ் ஆனால், மோட்டார் சைக்கிள், கார்களில் வருபவர்கள்தான் அதிகம். 2 ரூபாய் 25 பைசா டிக்கெட் கிடைக்காது. படம் அட்வான்ஸ் புக்கிங்கில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், முதல் நாள் முதல் காட்சிக்கே 60 பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும்.

ரஜினி அப்படியே நேர் எதிர். 60 பைசா டிக்கெட் பிளாக்கில் கிடைக்கும். 2 ரூபாய் 25 பைசா டிக்கெட் எளிதாகக் கிடைக்கும். காரணம், அப்போது அவர் படங்களுக்கு குடும்பங்களும் பெண் ரசிகைகளும் வருவது குறைவு. ஆயிரம் பேர் வந்தால், அதில் 50 பெண்கள் வருவதே அபூர்வம்.

‘கையைச் சுத்துறது, சிகரெட்டைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறது... இதெல்லாம் பத்து பதினைஞ்சு படங்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும். அப்புறம் அவ்வளவுதான்ப்பா' என ரஜினி படங்களைப் பற்றி பேசுவார்கள். ஆனால், அவருக்குள் மிகச் சிறந்த ஒரு நடிகன் இருக்கிறான் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். சண்டையோ, இரட்டை அர்த்த வசனங்களோ, பிரமாண்டமான அரங்குகளோ, எந்தவித ஸ்டைலும் இல்லாமல், குடும்பப்பாங்கான ஒரு கதையை எழுதினேன். 

இன்னும் சொல்லப்போனால், என் வாழ்க்கையில் நான் அனுபவித்த சில எழுதியிருந்தேன். விஷயங்களையும் சேர்த்து அந்தக் கதையை 60 பைசா டிக்கெட்டுக்கு ரசிகர்கள் முட்டிமோதக்கூடிய அளவுக்கு, கமலுக்கு செம லோக்கலான ஒரு கமர்ஷியல் படம்... ரஜினிக்கு பெண் ரசிகைகள் குடும்பம் குடும்பமாக வருவதுபோல ஒரு குடும்பப் படம். இந்த கான்செப்ட்டை மனதில் வைத்து ஒரு வாரத்துக்குள் இருவருக்கும் தனித் தனியாகக் கதைகளைத் தயார்செய்தேன். அந்த இரு கதைகளுமே ஏற்கெனவே ஐடியாவாக இருந்தவை. எப்போதும் 10, 20 கதைகள் வெறும் ஐடியாவாக இருக்கும். தேவைப்படும்போது அதை டெவலப் செய்தால், ஸ்கிரிப்ட்டாகிவிடும்.

ரஜினி படத்துக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன்; கமல் படத்தை இயக்குவது அவரின் உதவி இயக்குநர் ரெங்கராஜன். ‘பஞ்சு அண்ணன், சீனியர் எஸ்பி.முத்துராமனை ரஜினி படம் பண்ண அனுப்புறார். நமக்கு புது ஆளை அனுப்புறாரே. சரியா வருமா?' என கமல் ஒரு நிமிஷம்கூட யோசிக்கவில்லை. சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.எளிமையான ஆர்ட்டிஸ்ட், சிம்பிள் புரொடக்ஷன் என ஒரு பக்கம் ரஜினி படம், டபுள் ஆக்ஷன் ஹீரோ, ஸ்ரீதேவி, செந்தாமரை, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், விஸ்.எஸ்.ராகவன் என பெரிய ஆர்ட்டிஸ்ட் பட்டாளத்துடன் இன்னொரு பக்கம் கமல் படம் என பரபரப்பாக ஷூட்டிங் முடித்து வெளியிட்டோம். இரண்டுமே சில்வர் ஜூப்ளி ஹிட்ஸ். அந்த கமல் படம் 'கல்யாணராமன்', ரஜினி படம், ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. 

அந்த இரு படங்களுக்கும் இசை, இசைஞானி இளையராஜா. இந்த இரண்டு படங்களின் வெற்றி விழாக்களையும் தலைமையேற்று நடத்தியவர் கவிஞர் கண்ணதாசன்.

‘கதை படிப்பதே காவாலித்தனம்' என நினைத்த குடும்பத்தில் இருந்து வந்த நான், பின்நாட்களில் என் சித்தப்பாவும் பிரபல கவிஞருமான கண்ணதாசனிடமே உதவியாளராகச் சேர்வேன் என்றோ, கதாசிரியன் ஆவேன் என்றோ, இந்திய சினிமாவே வியக்கும் கமல், ரஜினியுடன் அதிகப் படங்கள் பணியாற்றுவேன் என்றோ, ஆயிரம் படங்களைக் கடந்துள்ள இசைஞானி இளையராஜாவை அன்று 'அன்னக்கிளி'யில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றோ நினைத்துகூடப் பார்த்தது இல்லை.

- திரைத்தொண்டர் - பஞ்சு அருணாச்சலம் - 

========================================================================================

1950 களில் தமிழ்த் திரையுலகம்....


கார் விலை அப்போது 







==========================================================================================


ரிக்ஷா மாமா படத்திலிருந்து இன்னொரு இனிமையான பாடலைக் கேட்கிறீர்களா?  இல்லை எஸ்கேப் என்று  ஓடி விடுவீர்களா?!!

இதுவும் வாலி எழுதிய பாடல்தான்.  பேபி பிரசன்னாவுடன் SPB பாடும் உருக்கமான பாடல். மனதில் இடம்பிடிக்கும் சோகம், பரவசம்.

பேத்தி அழும்போது அவளை சமாதானப்படுத்த அர்த்தமில்லாத வார்த்தைகள் சொல்வோமில்லையா, அவ்வப்போது பாட்டும் பாடுவோம்..  அப்படி நேற்று சொன்னபோது இந்த 'ஜிமுக்கு ஜிக்கா'  வார்த்தை வாயில் வந்து விட்டது.  உடனே முடிவு செய்து விட்டேன் இந்த வார பாடல்களை!

அன்னக்கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம் 

=====================================================================================






7 கருத்துகள்:

  1. அனைவரின் நலத்துக்கும் பிரார்த்தனைகள். ஔஜா போர்ட் விவரங்கள் சுவாராஸ்யம். 1961 இல் திண்டுக்கலில் இது ஒரு ரௌண்ட் வந்தது. என் விரல் வைத்தபோது நகரவில்லை:) ஃபாசினேட்டிங்!!!!! அடுத்த வீட்டு மாமிக்கு நகர்ந்தது. யெஸ் ஆர் நோ தான்.

    பதிலளிநீக்கு
  2. விகடன் நகைச்சுவையை விட அந்தப் படங்கள் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. முதல் தடவை பேத்தி வந்திருக்கிறாள் இந்தப் பக்கத்துக்கு. அன்பு ஜிமுக்கு ஜிக்கா வுக்கு ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  4. ஓ!!! அஞ்சலி தேவிதான் சொப்பன சுந்தரியா:)) அவர் காரை யார் வாங்கினார்கள்.??????

    பதிலளிநீக்கு
  5. ''பாரிஜாதம்'' படம் யாராவது பார்த்திருக்கிறார்களோ? ராஜம்மா அழகாக இருக்கிறார்.பாமாவாக இருக்கும்பெண்மணியும் ஸ்மார்ட்!!!

    பதிலளிநீக்கு
  6. வாக்ஸால் என் மாமனார் வாங்கிய முதல் வண்டி1956.

    பதிலளிநீக்கு
  7. திரு பஞ்சு அருணாச்சலத்தின் எண்ணங்கள் அருமையாகப் பதிந்திருக்கிறார். ஆறிலிருந்து அறுபது வரை பிரமாதமான படம். ஃபடாஃபட் ஜயலக்‌ஷ்மி ,ரஜினிக்குப் பொருந்திய நடிகை.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!