20.10.26

எ போ கதை (பொக்கிஷம்) : அதிருஷ்டம் அடித்தது - M V வெங்கட்ராம்

 

அதிர்ஷ்டம் அடித்தது!

எம்.வி.வெங்கட்ராம்

மூன்று கான்கு மாதங்களாகப் பரசுராமன் கடத்தி வந்த காடகம் அன்று உச்ச ஸ்தாயியை எட்டி விட்டது. அதற்கான சூழ்நிலையை அவன் மிகவும் அழகாகச் சிருஷ்டித்து விட்டான்.

அன்று மாலை ஆபிசிலிருந்து திரும்பி வந்து, வீட்டு வாசலைத் தாண்டும்போதே அவன் முகத்தில் விசனம் பள்ளமிட்டது. லோக பாரம் பூராவையும் சுமப்பவன் போல அவன் தள்ளாடிக்கொண்டே வந்தான். அழுக்குச் சட்டையைக் கழற்றி லக்ஷ்மியிடம் விசிறி எறிந்துவிட்டு, கட்டை ஒன்றைத் தலையணையாக வைத்துக் கொண்டு தரையில் சாய்ந்தான்.

அவன் முகத்தைப் பார்த்த லக்ஷ்மி ஒரு வார்த்தையும் பேசத் தைரியம் வராமல் சட்டையை மாட்டியிட்டு, காப்பியைக் கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்து விட்டுப் பேசாமல் நின்றாள்.

நாய்போல் உழைத்தாலும் நல்ல பெயர் இல்லை; என்ன பிழைப்பு!" என்றான் பரசுராமன் கூரை முகட்டைப் பார்த்தபடி.

"பணம் சேருகிற இடத்தில்தான் மேலும் மேலும் சேருகிறது; தரித்திரம் மகா தரித்திரம் ஆகிறது" என்றான் மறுபடியும் சுவரை கோக்கியவாது.

"இந்த வேயை செய்வதற்குப் பதிலாக எங்காவது கொள்ளை அடிக்கப் போக லாம்" என்றான் தூண் ஒன்றைப்பார்த்து,

லக்ஷ்மி ஒன்றுக்கும் பதில் சொல்லாதிருக்கவே அவன் சற்றுச் குடாகவே சொன்னான்: "நான் இந்த வேலைக்கு ஒரு முழுக்குப் போட்டு விடப் போகிறேன்."

அவள் திகிலுடன் வாய் திறந்தாள் "என்ன நடந்தது! எதற்காக வேலைக்கு முழுக்குப் போடப் போகிறீர்கள்"

" என்ன நடந்ததா! குறையும் விலையில் கொள்முதல் செய்வதற்கு என் யோசனை முதலாளி ஐயாவுக்குத் தேவையாயிருக் கிறது. சரக்கு கிராக்கி ஆகும்போது விலை கூட்டி விற்க என் ஒத்தாசை அவனுக்கு வேண்டியிருக்கிறது. மிளகு மூட்டைகளில் மாத்திரம் அவனுக்கு இந்த மாசம் ஆயிரம் ரூபாய் முழுசாய் லாபம்.  லாபத்தை மூட்டை கட்டும்போது மட்டும் வாயெல்லாம் பல்லாகிறது......"

"அவர் முதல் போட்டுத் தொழில் செய்து லாபம் கட்டுகிறார்; அதனால் என்ன? பொறாமைப்பட்டு என்ன பிரயோஜனம்!"

"அவன் முதல் என்றால் என் மூளையில்லாமல் அவனுக்கு எங்கிருந்து லாபம் கிடைத்துவிடும்! உனக்கென்ன, வீட்டில் ஆக்திக்கொண்டு வேதாந்தம் பேசுவாய் வெய்யில் மழை பாராமல் காடும் மேடும் சுற்றும் எனக்கல்லவா அந்த வயிற்றெரிச்சல் தெரியும்!"

"அதற்காக வேலையை விட்டால், இப்போது கிடைக்கிற அரைவயிற்றுச் சோற்றிலும் மண்தான் விழும்."

''நான் மானியாக இருக்க வேண்டுமானால் இனி இந்த வேலையில் இருக்கக் கூடாது",

"வர வர உங்களுக்குப் பைத்தியம் தான் முதிர்கிறது,ஆமாம்...."

பரசுராமன் கோபமாய் எழுந்து உட்கார்ந்தான். "எவன் எதைப் பேசினாலும் நான் தலைவணங்கிக் கேட்டுவரவேண்டும். பதில் பேசினால் நான் பைத்தியக்காரன் அப்படித்தானே!"

"உங்களை யார் என்ன சொல்லி விட் டார்களாம்?  தலையும் காலும் இல்லாமல் இப்படிப் பேரினால் என்ன புரிகிறது!"

"வீட்டு வாடகை மூன்றுமாதமாய்ப் பாக்கி தெரியும் அல்லவா!"

"தெரியும்."

"வீட்டுக்காரன் பாக்கி கேட்டால் என்ன சொல்வது!"

லக்ஷ்மி மௌனமாயிருந்தாள்.

சனிக்கிழமைக்குள் ரேஷன் அச்சி வாங்கவேண்டும், காப்பி பவுடர், அது. இது என்று உன் விஸ்ட் ஒன்று இருக் கிறது, ஜயராமனின் பள்ளிக்கூடச் சம்பளமும் கட்டவேண்டும். இவ்வளவுக்கும் பணம் வேண்டுமா வேண்டாமா"

லக்ஷ்மி குனிந்த தலை நிமிரவில்லை.

"முதலானியிடம் இதை எல்லாம் சொல்லிப் பணம் கேட்டால், அவன் கணக்குப் புஸ்தகத்தைத் தூக்கி மூஞ்சி யில் அடிக்கிறான்"

"மூஞ்சியில் அடித்தாரா!"

''அப்படித் தூக்கி எறிந்தான். 'முதலிலேயே இருநூறு ரூபாய்க்குமேல் அதிகப் பற்று இருக்க, மேலே கடன் கொடுப்பது எப்படி' என்றான். 'சாப்பிடாமல் வேலை செய்வது எப்படி' என்று கேட்டேன்.   அது அவனுக்குத் தெரியாதாம்! யாருக்குதான் கோபம் வராது!  . 'உனக்கு மாத்திரம் பசி என்றால் ஒரு நிமிஷம் தாங்க முடியவில்ல.  நாளுக்குப் பத்து முறை தீனி தின்கிறாயே. அது போலத்தானே எனக்கும்!' என்று கேட்டேன். அதற்கு அந்த நன்றிகெட்டவன் என்ன சொல்கிறான் தெரியுமா?   'இஷ்டம் இருந்தால் வேலை பார், இல்லாவிட்டால் கடையை விட்டுக் கீழே இறங்கு என்கிறன். இவ்வளவு தூரம் ஆனபின் அவன் கடையில் கால் வைப்பது எப்படி!"

"அவரிடம் நீங்கள் இன்னும் கொஞ்சம் நயமாய்ப் பேசியிருக்க வேண்டும்."

"நயமாய்ப் பேசாமல் 'வள்வள்' என்றா விழுந்தேன் ! நான் பேசுவதற்கு இனிமேல் உன்னிடம்தான் பாடம் கற்க வேண்டும்."

"கொஞ்ச நாளாய் நீங்கள் ஒருமாதிரியாய்த்தான் இருக்கிறீர்கள்.....""

"ஒருமாதிரி என்ன, பல மாதிரியாய் இருக்கிறேன். நீதான் ஒரே மாதிரியாய் இருக்கிறய்!"

"சரி, நான் ஒன்றும் பேசவில்லை. காப்பி ஆறுகிறது, சாப்பிடுங்கள்."

ஜில்லிட்டுப்போன காப்பியைக் கையில் எடுத்த பரசுராமன் அதைத் தூக்கித் தூர எறிந்தான்  "சை, இந்த வீட்டில் ஒன்றுமே உருப்படாது. இதற்குப் பதிலாக, ஒரு டம்ளர் பானை ஐலம் கொண்டுவா போ ! காப்பியாம் காப்பி!"

கீழே கொட்டிய காபியைப் பார்த்ததும் லக்ஷ்மிக்கு அழுகை வந்தது. காப்பியானாலும் பால் அல்லவா? பால் சிந்துவதால் குடும்பத்துக்குக் கேடு அல்லவா!

"அழுகைக்கு ஆரம்பித்து விட்டாயா! ஒருகுறைச்சலும் இல்லை" கணவன் -மனைவி போராட்டம் மேலும் படருவதற்குள் வெளியிலிருந்து ஒரு குரல் கூப்பிட்டது.

"பரசுராம், பரசுராம்!"

2
    `
அது வீட்டுக்காரர் குரல்; வாடகை வசூலிக்க வந்திருத்தது.அதைக்கேட்டதும்  லக்ஷ்மி எழுந்து உள்ளே சென்றாள்.  பரசுராமன்இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். வீட்டுக்காரர் உள்ளே வந்ததைக் கவனித்ததாய்க் கூட அவன் காட்டிக் கொள்ள்வில்லை.   அவர் நுழைந்த போதுதான் மடியில் கட்டி வைத்திருந்த சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.

எப்போதும் மரியாதையாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளும் பரசுராமன் இப்படித் தன்னை அலட்சியம் செய்வது வீட்டுக்காரருக்கு ஆச்சரியமாயிருந்தது.

"பரசுராம், நான் வந்திருப்பது கூட உனக்குத் தெரியவில்லையா?"

"நீர் வந்திருப்பது நன்றாய்த் தெரிகிறது. அதற்காக நான் என்ன செய்யவேண்டும்!"

வீட்டுக்காரருக்குத் தூக்கி வசதிப் போட்டது. 'நீங்கள்' என்பது ' நீர்' ஆக மாறியதுடன் அந்த 'நீரு'க்குப்பின் " 'போடா' தொளியும் கேட்டது அவருக்கு

"என்ள செய்யவேண்டும் என்றே உனக்குத் தெரியவில்லையா? வாடகைப் பாக்கியைக் கொடுத்தால் போகிறது......"

"தூக்கி எறிந்து விடவேண்டும் என்று தான் என் எண்ணமும்; முடியவில்லயே கல்லைத்தான் எறிய முடியும்"

"ஏது. பேச்சு ரொம்ப ஜோராய்த் தெரிகிறதே...!"

"ஆமாம்,  உழைத்து உழைத்து உழைத்து நீர் எனக்கு போடுகிறீர்கள் அல்லவா? அதுதான் எஜாக்கு ஜோராய் இருக்கிறது"


"பரசுராம்! நீ பேசுவது  கொஞ்சமும் ஒழுங்காயில்லை"

"நீர் ரொம்ப ஒழுங்காய்ப் பேசி விட்டீர்களாக்கும்! ! மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்."

"உன்னை நான் என்ன அவமரியாதையாய் பேசிவிட்டேன்?  சரி! வீண்பேச்சு எதற்கு?  மூன்று மாசமாய் வாடகை பாக்கி நிற்கிறது.  அதைக் கொடுத்து விட்டால் உன்னிடம் நான் எதற்காக பேசப்போகிறேன்?"



"நாளைச் சோற்றுக்கு நான் தாளம் போடுகிறேன்.வாடகை, வாடகை என்று என்று நீர் குதித்தாள்பணம் ஆகாசத்திலிருந்து குதித்து விடுமா!"

வீட்டுக்காரர் பொறுமை பூராவும் இழந்து விட்டார்.

பாக்கி கொடுக்க வக்கில்லை என்றால் வீட்டைக் காலி செய்கிறது!"

"காலி செய்ய முடியாது. உம்மாலானதைப் பார்த்துக் கொள்ளும்!"

"பணத்துக்கு யோக்கியதை......."

"ஓய், யோக்கியதை, கீக்கிதை என்று பேசவேண்டாம். வார்த்தைனை அளந்து உபயோகியும், இல்லாவிட்டால் மரியாதை கெட்டுவிடும்" என்று சொல்லிக்  கொண்டே எழுந்து நின்றான் பரசுராமன்.

வீட்டுக்காரர் பணக்காரர் ;   உடலில் தென்பு இல்லாதவர் துணையும் பாரும் இல்லை,   ஆகையால் நிலைமையைக் கட்டுமீறவிட அவர் துணியவில்லை.  

"சரி சரி உன்னைப் பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக் கொள்ளுகிறேன்" என்று சொல்லிக்கொண்டு , வேகமாக வெளியே சென்றார் அவர். 

கும்பிக்குக் கொட்ட கஞ்சியைக் காணோம் கேட்க வந்துட்டானாம் வாடகைப் பாக்கி! கடன் பட்டு விட்டால், என்ள வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்து விடுகிறார்கள்!  அயோக்கியர்கள்!" என்றான் பரசுராமன், உள்ளேயிருந்து லக்ஷ்மியின் காதுகளில் விழம்படியாக.

3

லக்ஷ்மி மறுபடியும் வெளியில் வந்தாள்,    வீட்டுக்காரருடன் அவன் பேசியதை எல்லாம் கேட்டு அவளுடைய கிலேசம் மிகுந்துவிட்டது. அவனால் குடும்பத்துக்குப் பெருங்கேடு வந்று விடுமோ என்று பயந்தாள்.  மிகவும் பொறுமையுள்ள அவளுக்கும் கோபம் கீறிக் கொண்டுவந்தது.

"வீட்டுக்காரரிடம் இப்படித் தானு பேசுவது? வாடகை பாக்கி நின்றால் கேட்காமல் விட்டு விடுவார்களா? ! அவரிடம் கொஞ்சம் நல்லபடியாகப் பேசி இருந்தால்தான் என்ன?"

"புறத்யாரின் கஷ்டத்தைத் தெரிந்து கொள்ளாதவன் மனிதனா!"

"என்ன இருந்தாலும் நாம் இருக்கிற நிலைமைக்கு நாவை  அடக்கமாய் வைத்துக் கொள்ளவேண்டும். நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை.   ரேஷன் அரிசி வாங்கப் பணம் இல்லை வாடகை தர பணம் இல்லை என்று சொல்கியிட்டுச் சிகரேட்பிடிக்கமாத்திரம் எங்கிருந்து காக கிடைக்கிறதோ தெரியவில்லை! இன்னும் சம்பளம் வாங்கினதும் ஹோட்டல் சினிமா என்றெல்லாம் கும்மாளம் அடிக்கிறீர்கள்""

"இந்த வீட்டில் கிடைக்கிற சுகத்துக்கு வேற என்ன செய்கிறது?"

"வீட்டில் இருக்கிறவர்கள் எக்கேடு கெடட்டும்  நீங்கள் மட்டும் ஹாயாக சுற்றலாம் என்கிறீர்களா"

"வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன குறை வந்து விட்டது!"

"ஒன்றும் குறையில்வே! சம்பளப் பணத்தை..."

''சம்பளம் ஆயிரம் ரூபாய் வருகிறது. அது இல்லாமல் சுகம் தவறிப் போகிறது. ஐம்பது ரூபாய் பிச்சைக் காசில் ஒரு இரண்டு நாள் நிம்மதியாய் இருக்க ஆசைப் படக் கூடாது என்கிறாய் !  நான் நிம்மதியாய் இருப்பது உனக்குப் பிடிக்கவில்லே!”

"எங்கள் எல்லோரையும் எங்கேயாவது அனுப்பி வீட்டு நீங்கள் ஒரு பாடாய் நிம்மதியாய் இருங்கள்!"

அவள் கண்களில் மறுபடியும் நீர் பெருவாரியாய்ச் சுரந்தது.

"இந்த நீலிக்கண்ணீர் என்றைக்கு நிற்கிறதோ அன்றைக்குதான் நமக்கு விடிவு காலம்!  

"அப்பா, அப்பா...   ராஜா ஜானகியின் தலை கண்ணுல தலைல எல்லாம் மண்ணைப்  போட்டு விட்டான்"  என்று புகார் செய்து கொண்டே உள்ளே வந்தான் மூத்த பையன் ஜயராமன் குழந்தை ஜானகி அவன் பின்னால் விசித்துக் கொண்டு வந்தது; கடைசியாக ராஜாராமன் பயந்து பயந்து  உள்ளே வந்தான்.  பரசு ராமன் தன் அஸ்திர பலத்தை அவர்கள் மீது திருப்பிப் பொசுக்கத் தோடங்கினான்.

பள்ளிக்கூடத்திலிருந்து வந்தததும் உங்களுக்குத் தெருவிலே என்னடா வேலை?"! என்று கர்ஜித்தான் அவன். மூத்தவன் தயில் ஒரு குட்டு விழுந்தது. அவன் அறிகொண்டே தெருவில் ஓடினான்.  இளையவன் முதுகில் பளபள வென்று அறைகள் கொட்டின அவன் கதறிக்கொண்டே தாயிடம் ஓடினான். குழந்தை ஜானகியைக் கூடப் பாசுராமன் பதம் பார்த்திருப்பான்; ஆனால் அது  முன்னயேயே தாயின் இடுப்பில் ஏறிக் கொண்டு விட்டது.

"குழந்தைகளால்  கோட்டான்கள்! எனக்கென்று எங்கிருந்து வந்தனவோ?"

லட்சுமி சீறினாள் "தென்னை மரத்தில் தேள் கொட்டப் பனை மரத்தில் நெறி கட்டிய கதையாய் யார் கோபத்தை யாரிடம் காட்டுகிறீர்கள்?  குடும்பத்தைக் காப்பாற்றவா வக்கில்லா விட்டால் குழந்தைகளை போட்டா கொல்லவேண்டும்..."
 
அவள் மேலே பேச வாய் திறப்பதற்குள் விண் ணென்று ஓர் அறை அவள் வாயை மூடியது  “நாயே நாயே..!  இடம்கொடுத் தால் மடியா கடிக்கிறாய்?  மூடு வாயை!- இரண்டாவது முறை அறைய ஓங்கிய அவன் கை தானாய் கீழே இறங்கி  விட்டது. இருந்தாலும் விட்டுக்கொடுக்க விரும்பாதவனாக, "எக்கேடும் கெட்டுத்தொலை!”  என்று சொல்லிக் கொண்டே வெளியில் பாய்ந்து சென்றான் அவன்.

எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து விட்டன. . கலியாணம் செய்துகொண்ட நாள்முதல் இன்றுவரை அவன் அவளை அடித்ததே இல்லை.   இன்றைய புது அனுபவம் அவளை பிரமிக்கச் செய்து விட்டது. அங்கேய, அப்படியே உட்கார்ந்து அழத் தொடங்கினாள் அவள்.

4


அவள் ஆறு குழந்தைகளை பெற்றவள்.  உடம்பில் ரத்த பலம் இல்லாதவள்.  அவளுடைய மிருதுவான கன்னத்தில் பரசுராமன்  ஓர் அறை அறைந்து விட்டதும் இரண்டாவது அறை விடுவதற்கும் அவன் கை வலித்தது. வெளியில் வந்து விட்டான். அவனுக்குப் பச்சத்தாபம் உண்டாகியது. 'பாவம், அவள் அழுது  கொண்டிருப்பாள்'' என்று வருத்தமும் பட்டான்.  ஆயினும் அந்த அறை காரணமாக அவனுக்கும் அவளுக்கும் சரி, பிற்காலததி ல் மிகவும் நிம்மதி உண்டாகலாம் என்பதை நினைத்தபோது அவனுக்குள் சந்தோஷம் தனழத்தது.

அவன் பிறவிக் குமாஸ்தா அல்ல எப்போதம் எனிய வாழ்க்கையில் வாழ்ந்து வந்தவனும் அல்ல.

அவனுடைய தகப்பனர் பெரிய மளிகைக்கடை  ஒன்று சொந்தத்தில் வைத்து, அந்தஸ்தாய் வியாபரம் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அவனை மிகவும்  செல்லமாய் வளர்த்து "ஸ்கூல்  பைனல்" வரை படிக்கவும் வைத்தார்.  அவர் அவனிடம் அளவுக்கு மீறி அபிமானம் வைக்கக் காரணம் அவருக்குப் பிறந்த எட்டுக் குழந்தைகளில் மிஞ்சி நின்றவன் அவன் ஒருத்தன்தான்.  மற்ற எல்லோரும் துளிர்க்கு முன் பட்டார்கள்; அல்லது பிஞ்சிலேயே உதிர்ந்து விட்டார்கள். ஆகையாழ் அவர் அவன் மீது உயிரையே வைத்திருந்தார் என்று சொல்லலாம்.  ஆனால் தரதிர்ஷ்டவசமாக, அவன் "ஸ்கூல் பைனல்" படித்து முடித்த சமயத்தில் அவருடைய வியாபாரம் நொடித்தது.  அவரும் மனம் நொடித்து மரணம் அடைந்தார்.

பரசுராமன் சாமர்த்தியமாகவே குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தினான்.  தந்தை பட்ட கடன்களை எல்லாம் அடைத்தான். .  அவனிடம் மிச்சப்பட்டது, நான்காவது வகுப்பில் படிக்கும்போறு கலியானம் செய்துகொண்ட மனைவி மட்டும்தான். அவன் உள்ளுரிலேயே ஒரு மளிகைக் கடையில் குமாஸ்தா வேலையில் அமர்ந்து, தன் புத்திக் கூர்மையாலும், நேர்மையாலும் முதலாளியின் அன்புக்குப் பாத்திரம் ஆகி ஐம்பது ரூபாய் சம்பளம் என்ற பெரிய கோட்டையையும் பிடித்து விட்டான்.   அதே சமயத்தில் அவனுடைய முப்பதாவது வயதுக்குள் ஓன்று ஒன்றாக ஆறு குழந்தைகளுக்கு தகப்பனும் ஆகிவிட்டான். ஆறில் மிச்சம் மூன்று.  மூன்று அக்காலத்தில் காலம் ஆயின.

நிதானமான பழக்க வழக்கங்களில் தயாரான அவன், தன் குறைவான சம்பளத்தில், கௌரவம் குன்றாமல் கடனும் படாமல் குடும்பத்தை நிர்வகித்து வந்தான், அவலுடைய இந்த அமைதி யான வாழிக்கையில் ஓர் அதிர்ஷ்டம் புகுந்து குடையவும் ஆரம்பித்தது.

அவனுக்குத் தாய் மாமன் ஒருவர்; பணக்காரர்; இருபது இருபத்தைந்து ஆயிரத்தக்குச் சொத்திருக்கும். வீடு வாசல் சொத்த சுதந்திரம் எல்லாம் இருந்த அவருக்கும் ஒரு குறை இருந்தது  புராணப் பிரசித்தமான பிள்ளையில்லாக் குறைதான் அது.  க்ஷேத்ராடனம், கமைதாங்கிஸ்தாபனம், அரச மரம் சுற்றல் சுற்றம் முதலிய பல உபாயங்கள் மூலம் முயன்றும் குறை தீரவில்லை. கடைசியில்  வயது நாற்பத்தைந்தைத் தாண்டி, உடம்பில் தென்பும் குறைந்து விடவே குழந்தை பிறக்கும் என்ற கம்பக்கை யும் குறைந்துவிட்டது.  இனி யாருடைய குழந்தையையாவது தத்து எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவர் நிச்சயித்தபோது அவருடைய பார்வை மருமான் பரசுராமனின் இரண்டாவது மகன் ராஜா மீது விழுந்தது.

அவர் அவனுக்குத் தாய் மாமன் ஆனாலும் இரு குடும்பங்களுக்கும் இடையில்  பந்தம் குறைந்து வெகு காலம் ஆகி விட்டது. பரசுவின் தந்தை உயிருடன் இருந்த காலத்தியேயே  விரோதம் புகைந்து கொண்டிருந்தது. அவர் தம் மைத்துனரிடம் கடனும் கொஞ்சம் வாங்கியிருந்தார். ஊராருடன் சேர்ந்து அவரும் பரசுராமனின் தகப்பனார் மீது வியாஜ்யம் போட்டு, வட்டிப் பணத்திலும் தம்பிடி தள்ளுபடி செய்யாமல் பாக்கி பூராவும் வசூல் செய்துகொண்டார். இதனாலும் இரு குடும்பங்களுக்குள் பேச்சு வார்த்தையும் நின்றுவிட்டது.

பரசுராமன் தலைதூக்கிய பிறகு இந்த விரோதம் ஓரளவு மறைந்துவிட்ட தென்றே சொல்லலாம்.  சுபாவத்திலேயே பரசுராமன் மிகவும் சாது; யாரிடமும் விரோதம் பாராட்ட மாட்டான். ஆகவே எப்போதாவது மாமாவைக் கண்டால் ஷேமலாபங்களை விசாரிப்பதும், ஏதாவது விசேஷ காலத்தில் அவர் வீட்டுக்குச் சென்று வருவதுமாய் அவருடன் சகஜமாய்ப் பழகி வந்தான்.

ஆகவே, அவர் அவனுடைய மகனை ஆயிரம் ரூபாய் கொடுத்து ஸ்விகாரம் செய்துகொள்வதாய்க் கூறி அவன் சம் மதத்தைக் கேட்டபோது அவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டான். அப்படிச் செய்வதன் மூலம் அவர் தங்களுக்கு இழைத்த அநியாயம் நிவர்த்தி ஆவதுடன், அவ னுடைய கஷ்டங்களுக்கும் விமோசனம் ஏற்படும் என்று நம்பினான். . அந்த அதிர்ஷ்டத்தை தன் ஏன் உதறவேண்டும்! 

கொஞ்சமும் தயங்காமல் தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டான்.

ஆனால் வீட்டில் லக்ஷ்மி அவனுடைய எண்ணத்தை ஆதரிக்காதது மட்டுமல்ல, உக்கிரமாக எதிர்க்கவும் தொடங்கினாள்.  அவள் மொக்காயிருந்தபோதே குடும்ப பாரத்தை ஏற்றவள். மாமனார் வாழ்ந்த வாழ்வைக் கண்ணால் கண்டவள்;  அவளுக்கு தன் மாமனாரிடம் மிகுந்த பக்தியும் இருந்தது. அவர் அவமானத்தால் குன்றக் குன்றி, தெருவில் தலையை நீட்டுவதற்கும் பயந்து, வீட்டிலேய ஓடுங்கி உயிர் விட்டதற்குக் காரணம் அதே தாய் மாமன் தான் என்று உறுதி யாக நம்பினாள். . ஆகவே தன் மகனை அவருக்கு தத்து கொடுக்க அவள் சிறிதும் இஷ்டப்படவில்லை.

அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. பரசுராமன் பரம்பரை ஒற்றைப்பிள்ளைப் பரம்பரை. அவனுடைய தகப்பனாருக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்து எஞ்சியவன் அவன் ஒருவன்தான்.  , அவனுடைய பாட்டனார் பதின்மூன்று குழந்தைகளைப் பெற்றும் இறுதியில் பிழைத்தவர் பரசுராமன் தந்தை மட்டுமே. அவருடைய தந்தையைப் பற்றியும் இப்படிதான் சொல்கிறார்கள்.  பரசுவுக்கும் பிறந்தது ஆறில் மூன்று தொலைந்து விட்டன.  இப்படித்தான் கல்லுர்கம் உடம் தொங்ந்து விட்டன் விற்யை யாரால் அறிய முடியும்!

பரசுராமன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.  அவளுடைய நம்பிக்கை மூடத்தனமானது என்று.  சுவீகாரம் கொடுப்பதால் தங்கள் குடும்பமும் நல்ல நிலைக்குத் திரும்பும்   பையனும் நல்லபடி வாழ்வான் என்பதை விளக்கினான்.  என்ன நேர்ந்தாலும் அந்த யோசனைக்கு இணங்க முடியாது என்று அவள் கூறிவிட்டாள்.  அவன் மிகவும் நிர்ப்பந்தம் செய்தபோது அவள் கிணறு,குளம்,ஆறு,.ஏரி ஏதாவது ஒன்றில் ஐக்கியம் ஆகி விடுவதாகச் சொல்லவே அவன் அவளை மேலும் வற்புறுத்தாமலிருந்து விட்டான்.

அவனுக்கு மாமா வீட்டுப் பக்கம் போகவும் வெட்கமாயிருந்தது. ஆறுமாதமாய் அவர் கண்ணிலும் படலில்லை. அவரிடம் வாக்குக்கொடுத்து விட்டு அதன்படி செய்யவில்லை  என்கிற வெட்கம் ஒரு காரணம்; நல்லதோர் அதிர்ஷ்டத்தை வீணாக்குகிறோம் என்கிற வருத்தம் இன்னொரு காரணம்.
.
இரண்டவது காரணம், அவலுக்கு தீவிரமாக வேலை செய்தது. . இதுவரை திருப்தி அளித்துவந்த குமாஸ்தா வேலையில் அனுப்பு தோன்ற விட்டது.  கை கட்டிச் செய்யும் சேவகம்தானே   சுதந்திரமாய் என்ன செய்ய முடியும்! ஒரு வேளை சினிமாவுக்கு போனால் கால் வயிற்று  சோற்றைக் குறைக்க வேண்டும்.   கொஞ்சம் ருசியான பொருளை இச்சித்தால், நாக்கு ருசிப்பதற்கே ஒன்றும் கிடைக்காது.  வெள்ளை வேஷ்டி ஒன்றுக்கு இரண் டாக ஆசைப்பட்டால் வீட்டுக்காரரிடம் பல்லை இளிக்க வேண்டும்.  ஆகையால் ஆசா பாசம் இல்லாத ஞானி போல ஒரு நிர்ப்பந்த வாழ்க்கையை அவன் நடத்தவேண்டி விருந்தது. 

இவ்வளவுக்கும் அவானுக்கு உள்ள தொழில் திறமை அபாரமானது.  மளிகைச்
சாமான்களை எந்த எந்தப் பருவ்ப்ங்களில் எந்த எந்த  இடங்களில் சல்லிசாய்க் கொள்முதல் செய்யலாம் என்பதை அவனைப்போல் அறிந்தவர்கள் மிகவும் சொற்பம்;  எந்தச் சரக்குடன் எந்தப் பொருளக் கலவை செய்யலாம் என்பதைப்பற்றி அவன் பெரிய ஆராய்ச்சியே செய்திருந்தான்.  எந்த காலத்தில் எந்தச் சாமானைப் பதுக்கி வைத்தால் லாபகரமாயிருக்கும் என்பது அவனுக்குத் தலைக்கீழாய்ப் பாடம்.  எல்லாவற்றுக்கும்மேலாக வருமானவரி ஆபீஸரின் கண்களில் மண்ணைப் போட்டு, லாபத்தைக் குறைத்துக் காட்டும் கணக்குத் தயாரிப்பதில் அவன் ஒரு புலி.    அவனுடைய இந்தத் திறமை முழுவதும் யாரோ ஒருவருக்காக பயன்படுகிறது.  அதைத் தன் சொந்த நலத்துக்காக உபயோகபப்டுத்தி கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.  அதை அவன் மனைவி அழிக்க முயன்றாள்.
.
சொந்தக்கடை சுகவாழ்வு என்ற கனவுஅவன் மனதைத் தட்டிக் கொடுத்தது.  மனைவியின் விருப்பத்துக்கு விரோதமாக அவன் குமாரனை ஸ்வீகாரம் கொடுக்கத்துணியவில்லை.  . கடைசியில் கடுமையான யோசங்களின் விளைவாக அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

அதற்கிணங்க ஐம்பது ரூபாய்ச் சம்பளத்தில் நூறு ரூபாய் வாழ்க்கை நடத்தாத தொடங்கினான்.  சம்பளம் வாங்கிய உடன்  ஹோட்டல், சினிமா, காடகம் என்று கும்மாளமாய்ச் செலவழித்தான்.   கடனே வாங்காத அவன் முதலாளியிடம் முடை கடன் வாங்கி அது இருநூறுக்கு மேல் சென்றது.   வீட்டிலும் எதிலும் சிரத்தை ஏற்கவில்லை.  சிரமங்களைக் குவியலாய்ப் போட்டுக் காண்பித் தால்தான் மனவி வழிக்கு வருவாள் என்பதுதான் அவன் திட்டம்:  திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அவன் பெரியதொரு நாடகமே  ஆடவேண்டியிருந்தது; சிலசமயம் அவன் மனம் முரண்டது.  இருந்தாலும் அவன் விட்டுக் கொடுக்கவில்லை.  

கணவனுடைய செலவுகள் குடும்பத்தை அதோகதிக்கு இழுத்துச் செல்வதைக் கண்டு திகில் கொண்டாள் லக்ஷ்மி.  அவனிடம் இதைப்பற்றி ஏதாவது கேட்டால்,  அவன் வழக்கமில்லாத வழக்கமாக சிடுசிடுவென்று எரிந்து விழவே ஆரம்பித்தான்.

இந்த விபரீத நாடகம்தான் அன்று ஓர் உச்சத்தைத் தொட்டு, லக்ஷ்மியின் கன்னத்தில் அறையாகவும் விழுந்தது.

5

Usசுராமன் அதிக நேரம் வெளியில் தங்கவில்லே, மனைவியை என்றுமே அடித்திராத அவனுடைய உள்ளுணர்வு அந்த நாடசத்தின் முடிவைத் துரிதப்படுத்தத் துரத்தியது அவன் திரும்பிய சமயம் விட்டில் அமைதி நிலவியது. ஐயராமன். ராஜாராமன் இருவரும் புஸ்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு படிப்பது போலப் பாசங்கு செய்து கொண்டிருந்தனர். குழந்தை ஜானகி பக்கத்தில் லக்ஷ்மி சமையலறையில் படுத்திருந்தாள். அயனிடம் அழுகை இப்போது தான் விடை பெற்றது என்பது அவள் முகத் திலிருந்து நன்றாகத் தெரிந்தது.

பரசுராமன் அவள் தலைமாட்டில் உட் கார்ந்து கொண்டான். கொஞ்ச நேரம் அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.  அவள் பேசுவாள் என்றும் தோன்றவில்லை.  ஆகையால் அவனே முதலில் பேச ஆரம்பித்தான்.

"லக்ஷ்மி, அறை பலமாய் விழந்து விட்டதா!"- அவள் அசையவில்லை.

"அறைய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. நாசமாய்ப் போகிற கோபத்தில் ஒன்றும் புரியாமல் செய்து விட்டேன்."

அவனை ஏறிட்டுப் பார்த்து வீட்டு அவள் ஒருக்களித்துப் படுத்தாள், அவளுடைய பார்வயில் இருந்த அனுதாபம் அவனும்குத் தன் வெற்றியில் நம்பிக்கை அளித்தது.

"லக்ஷ்மி, உனக்கு என் மேல் கோபமாயிருக்கும். நமக்குக் கலியாணம் ஆகி இவ்வளவு காலமாய் உன்னை நான் அடித்ததுண்டா! எழுந்திரு."

அவன் அவளைத் தூக்கி உட்கார வைத்தான்.  அவனுடைய இந்தப் பருவினால் அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.  . 

"பார்த்தாயா பார்த்தாயா, இன்னும் அழகிறாயே!" என்று அவன் மிகவும் கொஞ்சினான். 

"நீங்கள் ஏன் இப்படி மாறி விட் டீர்கள்" என்றாள் அவள் தேம்பிக்கொண்டே.

இல்லை, லக்ஷ்மி, இனிமேல் நான் சிக ட்டைத் தொடப்போவதில்லை.  சினிமா, ஹோட்டல் பக்கம் போக மாட்டேன் இனிமேல் பாரேன்!"

அவன் சொன்ன விதம் முதலியேயே குழைந்து விட்ட அவள் மனத்தை மேலும் இளக்கி விட்டது. சினம் மறைய இரக்கம் தலை தூக்கியது.

அவன்தான் என்ன செய்வான்? விவஸ்றை தெரிந்த காலம் முதல் அவனுக்கு இந்தப் பாடுதானே! அவளிடம் அவன் எவத்த அன்பினும் ஆதரவிலும் மாசு காண முடியுமா?  இடைவிடாத  அவனுக்கும் அலுப்பு ஏற்பட்டு விட்டால் அதில் தவறு ஒன்றும் இல்லை  என்று நினைத்தாள் அவள்.

"லக்ஷ்மி  நீ சொன்னது ரொம்ப உண்மை. எனக்கு என்னவோ பைத்தியம்தான் பிடித்து விட்டது. நான் முதலாளியிடம் அப்படி யெல்லாம் பேசியிருக்கக் தா.  எந்த மளிகைக் கடை முதலாளியாவது குமாஸ்தாவுக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் தருகிறானா?  அதை எண்ணாமல்  அவரிடம்  தாறுமாறாகப் பேசி விட்டேன்....."

"அவருக்கு எவ்வளவு பாக்கி!"

இருநூற்றுச் சில்லறை இருக்கும். எவளவாவது இருக்கட்டும். காலைலயில் அவர் வீட்டுக்குச் சென்று, காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்புக் கேட்கிறேன். இந்த வேலை போய் விட்டால் நம் கதி அதோ கதி ஆகிவிடும்."

எதையோ யோசித்துக் கொண்டிருந்த லக்ஷ்மி சொன்னாள் ; "இல்லை!  இனிமேல் நீங்கள் அவரிடம் போவது தப்பு!"

"தப்போ சரியோ வேற வழி!  வீட்டுக்காரரிடம் வேற நாய் போல விழுந்து விட்டேன். அவரையும் சமாதானம் செய்ய வேணும்."

"எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது" என்றாள் அவள்  தீர்மானமாய்.

"என்ன  அது!" என்றான் அவன் ஆவலாய்.

"நீங்கள் இப்படிக் கஷ்டப்படுவதை என்னால் சகிக்க முடியில்லை. சுமக்க முடியாத அளவுக்கு சுமந்தால் இடுப்பு ஒடிந்து விடும்.   நீங்கள் சொன்னதுபோல ராஜாவை உங்கள் மாமாவிடம் தத்து கொடுத்து விடுவோம்.   கையில் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கடனை அடைத்து விட்டுச் சின்னக்கடை ஒன்று வைத்துக் கொள்ளலாம்  அப்புறம், நம் அதிர்ஷ்டப் படி நடக்கட்டும்."

அப்பாடா! பரசுராமனின் நாடகம் அற்புதமான வெற்றிபெற்றது. ஆனாலும் அவன் திடுக்கிட்டவன்போல் சொன்னான் "அது சரி, லக்ஷ்மி உனக்கு மனம் இல்லாத காரியத்தைச் செய்ய எனக்கு இஷ்டம் இல்லை"

"மனம் ஒப்பித்தான் சொல்லுகிறேன், மாமா என்றல் எனக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. இருந்தாலும் எவ்வளவு காலம்தான் இப்படி இருப்பது அவர் நம் பணத்தையும் கௌரவத்தையும் பறித்ததற்குப் பதிலாக ராஜா அவர் சொத்தை ஆளட்டும்!.."

"இது என்ள மக்ஷ்மி, திடீரேன்று? ' எனக்கு ஒன்று பிடிக்கவில்லை.  முதலில் அவர் சொன்னபோது எனக்கும் கொஞ்சம் ஆசை தட்டியது. அப்புறம் நீ சொன்னது சரியென்று பட்டு அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டேன்."

"நீங்கள் இப்போது மறுக்க ஆரம்பித்து விடவேண்டாம்.  நல்ல காலத்தை அதிக் காலம் ஒத்திப் போடக்கூடாது" 

"உம்...ம்..." என்று அவன் தயங்கினான்.

ஒன்றும் யோசிக்காதீர்கள், ஒவ்வொருத்தர் பட்டினிக்குப் பயந்து ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் குழந்தையை விற்கிறார்களாம். நம் குழந்தை நம் கண்முன்னால் நல்லபடியாய் இருக்கும். நம் குடும்பமும் சௌகர்யம் அடையும்  நாம் பட்டது போதம்." 

நான் இனிமேல் என்ன சொல்வதற்கு இருக்கிறது?  உன் இஷ்டம்!  டேய் ராஜா, அந்தப் பாப்னின் ஷர்ட்டைப் போட்டுக் கொண்டு புறப்படு."

அழகாகவும், சுறுசுறுப்பாயும் வந்த ராஜாவை அழைத்துக் கொண்டு மாமா வீட்டுக்குப் புறப்பட்டான் பரசுராமன்.

6

"ராஜா!  இனி நீ ராஜா தான்" என்று நினைத்தான் பரசுராமன்.

"ராஜா, மாவா வீட்டுக்குப் போனதும் என்ன செய்யவேண்டும், தெரியுமா! மாமி மிடம் ஓடிப்போய், 'அம்மா" என்று கட் டிக் கொள்ள வேண்டும், என்ன?"

"வெட்கமாயிருக்குமே அப்பா!"

"என்னடா வெட்கம்! இனிமேல் மாமி உனக்கு அம்மா மாமான் அப்பா,"

சிறுவனுக்குச் சரியாய்ப் புரியவில்லை.

"நீயும் அம்மாவும்..."

"நாங்களும் இருப்போம். மாமா, புது அப்பா; மாமி புது அம்மா.  மாமியை அம்மா என்று கட்டிக் கொள்கிறாயா?"

ராஜா தயக்கத்துடன் ஒப்புக் கொண்டான். இருவரும் மாமா வீட்டை அடைந்தபோது, இரவு எட்டரை மணி இருக்கும்.  ஜகஜ்ஜோதியாய் மின்சார விளக்கில் பிரகாசிக்கும் அந்தப் பெரிய வீடு ஒரு காலத்தில் தன் ஆட்சியின் கீழ் வரும் என்று நினைத்தபோது அவனுக்கு பெருமிதம் உண்டாகியது.  மாமா பெட்டியுடன் தரையில் உட்கார்ந்து கையிருப்புப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். 

"அட! பரசுராமனா? வா அப்பா வா...  ஊரில்தான் இருக்கிராயா?  ஆறு மாசமாப் ஆள் இந்தப் பக்கம் தலை காட்டவில்லை.  எங்கேடா போயிருந்தாய்!"

"ராஜா, உள்ளே மாமிபிடம், போ" என்று அவனை அனுப்பி விட்டு, தூணுடன்  ஒண்டிக் கைகட்டி நின்று கொண்டு பரசுராமன் சொன்னான்.  "ஊரில்தான் இருக்கிறேன் மாமா கடையியே வேலைத் தொந்தரவு ஜாஸ்தி, ஓய்வே இல்லை"

"ஆளைக் காணவே காணோமே என்று நாளைக்கு உனக்கும் லஷ்மிக்கும் சொல்லி அனுப்பலாம் என்றிருந்தேன்: நல்லவேளை நீயே வந்துவிட்டாய்"

பரசுராமனின் ஆனந்தம் கரையை உடைத்துக் கொண்டது. அன்று மாலையி விருந்து அவனுடைய அதிர்ஷ்டம் ஆரம்பித்த விட்டது.

"பரசு, லக்ஷ்மியிடம் சொல்லு , அவள் ரொம்பவும் பிடிவாதக்காரி.  போனதை எல்லாம் மறந்து நாம் ஒரு குடும்பம் போல் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். எனக்கும் வேறு இருக்கிறர்கள்?"

பரசுராமனின் ஹிருதயம் சந்தோஷத்தால் துள்ளி வெளியில் குதித்து விடும் போல் இருந்தது!  "இல்லை மாமா லக்ஷ்மி முன்னைப்போல் இல்லை" என்று அவன் வாயிலிருந்து வந்த சொற்கள் திணறின.

இன்னும் ஐந்து நாள்தானே இருக்கிறது..  நீங்கள் எல்லோரும் நாளையிலிருந்து இங்கே வந்துவிட வேண்டும்"

"என்ன விசேஷம் மாமா!" என்றான் பரசுராமன், ஒன்று தெரியாதவன் போல - அவர் வாயிலிருந்து விஷயம் வெளியாகட்டுமே என்று அவன் நினைப்பு. 

"என்ன விசேயுமா! உனக்குத் தெரியாதா?  நீ இந்தப் பக்கம் வந்தால்தானே! உங்கள் மாமிக்கு வருகிற வியாழக்கிழமை வளைப்பு " என்றார் மாமா. 

- கல்கி தீபாவளி மலர் 1950 

பின்குறிப்பு  :  என்னை ஒரு  நாள் முழுவதும் எடிட்டிங் மோடிலேயே வைத்திருந்த..

உபயோகம் இல்லாத கூகுள் லென்ஸ் டவுன் டவுன்...   

தன்னை அதிபுத்திசாலி என்று நினைத்துக் கொள்ளும், திறமையில்லாத  ஜெமினை டவுன்..  டவுன்..

=========================================================================================

மனசாட்சியம் - 19
KGY Raman 

கண்காணும் கடவுள் 

இரண்டு நாட்களுக்கு முன்னால் இறை அனுபவங்கள் ஒன்று இரண்டு நம் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தன.  ' தெய்வம் மனுஷ்ய ரூபேண " என்று சமஸ்கிருதத்தில் சொல்லி இறைவன்தான் மனித உருவில் வந்து நமக்கு உதவி செய்கிறார் என்று சொல்வார்கள்.  எதிர்பாராமல் யாரோ ஒருவரிடமிருந்து மிகவும் தேவையான சமயத்தில் உதவி கிடைப்பது என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே நேர்ந்திருக்கும்.  பின்னர் அதை நினைத்துப் பார்க்கும்போது சாட்சாத் பெருமாள் தான் அப்படி வந்திருக்கிறார் என்றோ அல்லது முருகப் பெருமான் தான் அந்த உருவத்தில் வந்து உதவி செய்திருக்கிறார் என்றோ அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்த மாதிரி நினைத்துக் கொள்வோம்.  முந்தைய யுகங்களில் கடவுள் மனிதர்களுக்கு முன் பிரத்யட்சமாவது இயல்பாக இருந்ததாம்.  கலியுகத்தில் கடவுள் யாரோ ஒரு மனிதரை கருவியாகப் பயன்படுத்தி நமக்குத் தகுதி இருந்தால் உதவிகள் செய்கிறார் என்று சொல்கிறார்கள்.

எனக்கும் அந்த மாதிரி சம்பவம் நடந்திருக்கிறது.‌ அந்த சமயத்தில் நான் பக்தி உணர்வு இல்லாமல் இருந்த நாட்கள். அதனால் அந்த சமயத்தில் எனக்கு உதவி கிடைத்தது கடவுளின் அருள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போது , அது  கடவுள் கிருபையாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி நினைப்பதில் ஒரு அலாதி  திருப்தியும் பெருமிதமும்  தோன்றுவதும் உண்மைதான். நல்ல மனப் பக்குவம்  அடைந்த ஞானிகள் என்ன நடந்தாலும் அது ஈஸ்வர சங்கல்பம் என்று எடுத்துக் கொள்வார்களாம். என்ன கிடைத்தாலும் அது ஈஸ்வரப் பிரசாதம் என்று கருதுவார்களாம். அது பற்றற்ற உத்தமர்களின் நிலை.  அந்த அளவு  பரிபக்குவம் அடையாதவர்கள்  ஏதோ ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளையாவது ஆண்டவன் செயல் என்று எடுத்துக் கொள்வது நல்லது தானே.

என் தாயார் அத்தை போன்ற பெரியவர்கள் " நம்பினவருக்கு நடராஜா " என்று அடிக்கடி சொல்வார்கள். நமக்குக் கிடைத்தது இறைவன் தரிசனமா என்பது நம் நம்பிக்கையின் பாற்பட்டது.

இவ்வளவு சொன்ன பிறகு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லாமல் விட்டால் சரியாக இராது. 

நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். அயர்ந்து தூங்கினேன். திருச்சி வந்து கோயம்புத்தூருக்கு எக்ஸ்பிரஸ் பஸ் டிக்கெட் வாங்க எண்ணி பையைப் பார்த்தால் பர்சைக் காணவில்லை. தூக்கம் வருகிறது என்று சட்டைப் பையில் பணம் ஏதும் வைத்துக் கொள்ளாமல் என் மணிபர்சை நான் கொண்டு வந்த பையைப் பிரித்து மேலோட்டமாகப் போட்டிருந்தேன். பர்சைக் காணவில்லை. துணிமணி எல்லாம் வெளியே எடுத்து வைத்து பார்த்தாலும் பர்ஸ் கிடைக்கவில்லை. எனக்கு வாய் உலர்ந்து தலை சுற்றுவது போல் இருந்தது. என்ன செய்வது என்று அறியாமல் அங்கிருந்து பெஞ்சில் அமர்ந்தேன். திருச்சி அறிமுகம் இல்லாத புதிய ஊர். மணி இரவு 9. 

அந்த சமயத்தில் தான் ஒரு மனிதர் என்னை சற்று உற்றுப் பார்த்து விட்டு என் அருகில் வந்தார். 

 " ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் ? என்ன பிரச்சனை ? " என்று கருணையோடு வினவினார். 

 நான் என் நிலையை விளக்கியதும், " இவ்வளவு தானே விஷயம் ? இதற்குப் போய் கவலைப்படுகிறீர்களே ! இந்தாருங்கள் உங்களுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன் " என்று சொல்லித் தன் பையிலிருந்து 20 ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.  நான் வாங்கிய பணத்திற்கு அடமானமாக என் கை கடிகாரத்தை தர முற்பட்டபோது அது வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 

பிறகு நடந்தது தான் ஆச்சரியம்.  " பணம் காணாமல் போய்விட்டது என்று சொல்கிறீர்கள். நல்லவர்களுக்கு அப்படியெல்லாம் நடக்காது. சரியாகப் பார்த்தீர்களா " என்று கேட்டுவிட்டு என் பையை அவர் ஒரு தடவை காலி செய்து நான் செய்யாத ஒன்றைச் செய்தார். பையை தலைகீழாக கவிழ்த்து பலமாக உதறினார். பையின் அடிப் பக்கத்தில் இருந்த பிளைவுட் பலகைக்குக் கீழே ஒளிந்திருந்த என் பர்ஸ் பட்டென்று கீழே விழுந்தது. 

" பாத்தீங்களா நான் சொல்லல.‌ நல்லவங்களுக்கு இப்படி எல்லாம் நடக்காது  "  என்று அவர் சொன்ன போது எனக்கு வெட்கம் மேலிட்டது.

" நான் உங்களை ஏமாற்றிப் பணம் பறிக்கப் பார்த்தேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது . எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது " என்று  நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

" ஒருவர் முகத்தைப் பார்த்தாலே அவர் தப்பு செய்கிறாரா இல்லையா என்பது தெரிந்து விடும். உங்களைப் பார்த்த உடனேயே எனக்கு உங்கள் பேரில் ஒரு நம்பிக்கை அனுதாபம் வந்துவிட்டது" என்றார் அந்தக் கண்கண்ட கடவுள்.‌


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!